Posted on March 29, 2012 by muthukumar
இன்றையமீடியா, குழந்தைகளுக்கான போட்டிநிகழ்ச்சிகள் என்கிற பெயரில்,
நம் குழந்தைகளிடமிருந்து அவர்களின் குழந்தைத் தன் மையைப் பறிக்கிறார்கள்,
காயப்படுத்துகிறார் கள். சொல்லப் போனால், குழந்தைக ளுக்கு எதிரான
குற்றங்களில் அவர்க ளுக்கும் பங்கு உண்டு!”
கோபமும், நியாயமுமாகப் பேசுகி றார், இந்தியக் குழந்தைகள் நல சங்கத் தின் கௌரவ இணைச்செயலாளர் கிரி ஜா குமார்.
பாட்டு,
நடனம் என்று குழந்தைகளு க்காக சேனல்கள் நடத்தும் போட்டி நிகழ்ச்சிகள்
குறித்த விமர்சனங்கள் பெருகி வரும் சூழலில், அது குறித்த விவாதத்தை இங்கு
முன்னெடுத்த கிரிஜா குமார், ”குழந்தைகள்
வளர வளர, அவர்களுக்குள் தங்களைப் பற்றிய ஒரு பா ஸிட்டிவ் சுய பிம்பமும்
சேர் ந்தே வளரும். ‘கேரம் போர்ட் கேமி ல் நான் கில்லி’, ‘எனக்கு மேத்ஸில்
அதிக ஆர்வமுண் டு’, ‘ஓட்டப் பந்தயத்தில் நான் தான் எப்போதும் ஃபர்ஸ்ட்’
என்று தன் மீது ஒரு குழந்தை கொண்டிருக்கும் சுய பிம்பம் வளரும். இதற்கு
அந்த க் குழந்தை தன்னை திறமை மிக்கவனாக உணரக்கூடிய துறை சார்ந்த
போட்டிகளில் பங்கேற்க வேண்டியது அவசியம். உதாரணமாக, ‘நான் நன்றாக ஓவியம்
வரைவேன்’ என்று உணரும் குழந்தை, தொடர்ந்து ஓவியப் போட்டிகளில் பங்கெடுக்கும்போ து, ஓவி யம் குறித்த அதன் திறமையும், தன்னம்பிக்கையும் மெருகேறும்.
போட்டிகள்
என்பது சிறந்த படிக்கட்டுகள். தோல்விகள் என்பது சிற ந்த அனுபவங் கள்.
ஆனால், அந்தத் தோல்வியை சம்பந் தப்பட்ட குழந்தைக்கு உணர்த்தும்விதம்
பக்குவமானதாக இருக்க வேண்டும். அக் குழந்தையின் தோல்வியை மற்றவர்கள் முன்
வெளிச் சமிடாமல், ‘சில மார்க்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றியை நழுவ
விட்டிருக்கிறாய். அடுத்த முறை இன்னும் சிறப்பாக செய்தா ல் பரிசு
உனக்குத்தான்’ என்று அதன்கை பிடித்து, முகம் பார்த்து பெற்றோரோ, ஆசிரியரோ
பேசினால்… அந்தக் குழந்தையை தோல் வி பாதிக்காது.
ஆனால், நம் சேனல்களில் நடப்பது என்ன? தொலைக்காட்சிப் போ ட்டிகளில் ஒரு பாடலைப் பாடுவதிலோ, நடன அசைவுகளி லோ
ஓர் குழந்தை சிறிது பிசகினால், கே மரா முன்பாக அவர்களை நடுவர் கள் கடிந்து
கொள்ளும் கண்டிப்பு… அநியாயம். அப்போது அந்தக் குழந் தையின் கண்கள் கூனிக்
குறுகுவ தை உலகமே பார்க்கிறது. தங்கள் நிகழ்ச்சியை உணர்ச்சிமிக்கதாகக்
காட்ட, அந்தப் பிஞ்சு கண்ணீர் சிந் தும் காட்சிகளை ‘க்ளோஸ்-அப் ஷா ட்’களில்
ஒளி பரப்புவது, வன்மு றை அல்லாமல் வேறென்ன?” என்று கேள்வியை எழுப்பிய கிரி
ஜா, தொடர்ந்தார்…
”பொதுவாக
எந்தக் குழந்தைக்குமே தோல்வி பிடிக்காது. அப்படி இருக்க, ‘நீ தோற்று
விட்டாய்’ என்பதை அத்தனை அழுத்தமாகக் கூறி, அந்தக் குழந்தை அதுவரை தன்னைப்
பற்றி வளர்த்து வந்த சுயபிம்பத்தையும், தன்னம்பிக்கையையும் கேமராவின் காலடி
யில் போட்டு நசுக்குகின்றனர். போட்டியில் டைட்டில்
வெல்லும் குழந்தையை உலகமே கொண்டாடும். ஆனால், முதல் சுற்றிலேயே நெகட்டிவ்
கமென்ட்களு டன் வெளியேற்றப்பட்ட குழந்தையின் மன ரணத்தை ப் பற்றி யாரும்
அக்கறைப்படுவதுஇல்லை.
போட்டியில்
சில இடங்களில் தடுமாறும் குழந்தைகளி டம் திட்டாமல், அவர்கள் அழுவதை
புரொமோவாகக் காட்டாமல், தோல்வியைக்கூட தோள்பிடித்து அன்பா கச் சொல்லி
உற்சாகப்படுத்தும் நிகழ்ச்சிகளும் உள்ள ன. அந்த ஆரோக்கிய அணுகுமுறை எல்லா
சேனல்களு க்கும் வர வேண்டும்” என்று முடித்தார் கிரிஜா குமார்.
”இப்போதெல்லாம் சேனல் போட்டிகளை மனதில் வை த்தே குழந்தைகளை பாட்டு, டான்ஸ் கிளாஸுக்கு அனுப்பும் பெற் றோர் அதிகரித்துவிட்டனர்”
-
நிதர்சனத்துடன் ஆரம்பித்தார் கீழ் மட்ட மக்களின் எழுச்சிக்காக சென் னையில்
செயல்படும் ‘புரோ சிகா அனிமேஷன் சென்டர்’ என ப்படும் தொண்டு நிறுவனத்தின்
இயக்குநர் சண்முகம்.
”பெற்றோர்கள்
தங்களின் கனவுகளு க்காக குழந்தைகளை வளர்க்கக் கூடாது. குழந்தைகளின்
கனவுகளு க்கு ஏற்ப குழந்தைகளை வளர்க்க வேண்டும். வீட்டில் துள்ளி விளை
யாடும் குழந்தையை அழைத்துச் சென்று, சேனல் நிகழ்ச்சிகளுக்காக நீளமாக
நெளிந்து நிற்கும் வரி சையில் நிற்க வைப்பதில் ஆரம்பிக்கிறது பிரச்னை.
போட்டிகள் வேண்டும்தான். ஆனால், ‘ஆடிஷன்ல செலக்ட் ஆயிட ணும்’,
‘ஃபர்ஸ்ட் ரவுண்ட்ல ஜெயிச்சு டணும்’, ‘செமி ஃபைனல்ல ஜெயிச் சே ஆகணும்’,
‘ஃபைனல்ல மிஸ் பண்ணிட்டா எல்லாமே வேஸ்ட்’ என்று ஒரு குழந்தை யின் மென்
மனநிலைக்கும் மீறிய அழுத்தத்தை பெற்றோர்கள் திணிப்பது பெருங் குற்றம்.
‘ஜஸ்ட் ட்ரை பண்ணு. எது னாலும் ஓ.கே’ என்று இந்தப் போட்டி களுக்கு
குழந்தைகளை அனுப்பும் பெற்றோர்கள் குறைவு. காரணம், டி.வி- யில் தோன்றும்
வாய்ப்பு, நடு வர்களாக வரும் பிரபலங்களிடம் அறிமுகமாகும் ஆசை… இவை யெல்லாம்
தன் குழந்தை குறித்த பெற்றோரின் எதிர்பார்ப்பை எகிற வைக்க, அதை அவர்கள்
தங்கள் பிள்ளையிடம் திணிக்கிறார்கள்.
சந்தோஷமாக
விளையாட வேண்டிய அவர்களின் குழ ந்தைப் பருவத்தை, ‘பயிற்சி’, ‘எலிமினேஷன்’,
‘வைல்ட் கார்டு’ போன்ற வார்த்தை கள் பறிக்கின்றன. குழந்தை கள் பாவம்.
அவர்களை ஸ்போர் ட்டிவ்வான, ஜாலி யான மனநிலையுடன் நிகழ்ச் சிகளில்
பங்கேற்கச் செய்வது பெற்றோரின் பொறுப்பு”
- வழிகள் சொல்லி முடித்தார் சண்முகம்.
குழந்தைகளை குழந்தைகளாகவே கொண்டாடுவோம்!
”எங்களுக்கும் இதில் உடன்பாடு இல்லை!”
கலா
மாஸ்டர் (நடன இயக்குநர்-கலைஞர் டி.வி): ”குழந்தைகளிடம் இருக்கும் திறமைகளை
வெளிப்படுத்தும் நோக்கத்தில்தான் இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
குழந்தைகளின் மனதைப் புண் படுத்தும்விதமாக அல்ல. என்னுடைய நிகழ்ச்சிகளை ப்
பொறுத்தவரை எந்த குழந்தையையும் அழ வைக்க மாட்டேன். நடுவர்களும் அப்படியே!
‘பாடினவரை அவ் வளவு அழகா பாடினேடா கண்ணா… இன்னும் கொஞ் சம் ஸ்ருதி
சேர்ந்திருந்தா அவ்வளவு பிரமா தமா வந் திருக்கும்.. அடுத்தமுறை இன்னும்
நல்லா பாடு?” என்று தான் தட்டிக்கொடுப்பார்கள்.
பெற்றோர்தான்
குழந்தைகள் வருத்தப்படுவதற்கு கார ணமாக இருக்கிறார்கள். எப்படியாவது
தங்களுடைய குழந்தைகள் டி.வி-யில் தெரிந்தால் போதும் என்று நினைக்கிறார்
கள். விருப்பம் இல்லாத குழந்தைகளை இதுபோன்ற நிகழ்ச்சிக ளில் திணிப்பது
மிகத்தவறு.”
மாலா
மணியன் (சி.ஓ.ஓ – ராஜ் டி.வி): ”பல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும்
நிகழ்ச்சிகள் எல் லாமே கமர்ஷியல் நோக்கத்தில் நடத்தப்படுகின்றன. அவர்கள்
குழ ந்தைகளை ஹேண்டில் செய்யும் விதம் மிக வும் கொடுமையானது. உனக்கு பாடத்
தெரியலயா… நீ வாழ்றது வேஸ்ட். உனக்கு ஆடத் தகுதியில் லை நீ வாழ்றது வே
ஸ்ட்… இந்த மாதிரியான எண்ணங் களை குழந்தை வயதிலேயே திணி ப்பதைப் போன்ற
கொடுமையான விஷயம், வேறு எதுவும் இருக்க முடியாது.
ஒரு
சேனல் இப்படி செய்வதால், மற்ற சேனல்களும் தங்களுடைய டி.ஆர்.பி. ரேட்டிங்கை
உயர்த்துவதற்காக இப்படிப்பட்ட நிகழ்ச்சி களை ஒளிபரப்புவது மிகமிகத் தவறு.
No comments:
Post a Comment