Posted on March 29, 2012 by muthukumar
கவிதை பேசும் கண்கள் முகத்தின் அழகை அதிகரித்துக் காட்டும். இரவில்
தூக்கம் விழித்து கண்கள் சோர்வுற் றிருந்தால் முகமே பொலிவிழந்து விடும்.
எனவே கண்களை ஒளிபொருந்தியதாய் மாற்றவேண்டியது அவசியம். கண்களுக்கு அழகூட்ட அழகியல் நிபுணர்கள் தரும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.
கவர்ந்திழுக்கும் காந்தக் கண்களுக்கு
ரோஸ் வாட்டரை பிரிஜ்ஜில் வைக்கவும். அவ்வப்போது சிறிதளவு பஞ்சில்
நனைத்து ரோஸ் வாட்டரில் நனைந் தெடுத்து, மூடிய கண்கள் மீது பத்து நிமிடம்
வைத்திருங்கள், கண்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும். இதே மாதிரி
வெள்ளரிக்காய் சாறு, உருளைக் கிழங்குச் சாறு ஆகியவற்றையும்
உபயோகப்படுத்தலாம். கண்கள் ஒளி பொருந்தி யதாய் மாறும்.
சிறிதளவு
ரோஸ் வாட்டரில் இரண்டு துளி விளக்கெண்ணெய் விட வும். கண்களை மூடிக்கொண்டு
கண்களைச் சுற்றி பூசவும். 15 முதல் 20 நிமிடங்கள் வரை அமைதியாக கண்களை மூடி
படுத்திருக்கவு ம். பின்னர் வெது வெதுப்பான நீரில் கழுவ கண்கள்
குளிர்ச்சிய டையும். பளபளப்பாகவும் மாறும்.
ஒரு
ஸ்பூன் நெல்லிக்கனி பவுட லை இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் சிறிதளவு
தண்ணீரில் கரைத்து அதனை கண் களை மூடிய வாறு சுற்றி கழுவவும் கண்கள்
புத்துணர்ச்சி அடையும்.
மாஸ்க் போடவேண்டாம்
முகத்துக்கு ‘மாஸ்க்’ போடும் போது கண்களை சுற்றி எதுவும் போட க்கூடாது, அடர்த்தியான க்ரீம் எதையும் கண்களுக்கு அடியில் பூச க்கூடாது.
மசாஜ் செய்வதும் கூடாது. பாதாம் பருப்பில் பால் விட்டு மையாக அரைத் து அதை
கண்களுக்கடியில் பூசி பத்து நிமிடத்து க்குப் பிறகு ஈர மான பஞ்சினால்
துடைக்கவும்.
வைட்டமின் சத்து
தினசரி உணவில் வைட்டமின் ஏ சத்து சரியான அளவு இருக்க வே ண்டும். முட்டையின் மஞ்சள் மற்றும் பச்சைநிற காய்கறிகள், கேர ட்
ஆகியவற்றில் வைட்டமின் ஏ அதி கம் உள்ளது. இது தவிர, பச்சைக் காய் கறி
மற்றும் பழங்கள் அடங்கிய சாலட் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தினமும்
குறைந்தபட்சம் 5 டம்ளர் குடித்தால்தான் கண்களுக்கு அடியில் பை மாதிரி சதை
தொய்ந்து போகாமல் இருக்கும்.
தூக்கம் கெடவேண்டாம்
இரவு நேரத்தில் அதிக நேரம் விழித்திருந்து தொலைக்காட்சி பார்ப் பதோ,
கணினியில் உட்கார் ந்திருப்பதோ கண்களை சோ ர்வடையச் செய்யும். என வே
நேரத்தோடு படுக்கச் சென்று விடியற் காலையில் எழுந்திருப் பதால் கண்கள்
களைப்பின்றிச் சுறுசுறுப்பாக இருக்கும். கண்களு க்கு அடியில் கருவளையம்
ஏற்படாமல் தடுக்கவும் செய் யலாம்.
மேக்கப் பொருட்களைத் தேர்ந்தெடுக்கும் போது கவனமாக இருங் கள்.
புது மேக்கப் பொருளை உ பயோகிக்கும்போது, கண்களில் எரிச்சல் ஏற்பட்டாலோ
கண்கள் சிவந்து போனாலோ அதை உபயோகிக் காதீர்கள். அப்படி அலர்ஜி யாகிவிட்டால்
சுயசிகிச்சை எதுவும் எடுத்துக் கொள்ளாமல் உடனடியாக கண் மருத்துவரிடம்
செல்லுங்கள்.
வெயில் நேரத்தில் வெளியில் சுற்றுவதை முடிந்தவரை தவிர்க்க லாம். அப்படியே போவதா னாலும் கூலிங்கிளாஸ் அணி வது சிறப்பு. ஆனால் அவை தரமான கண்ணாடியாக இருக்க வேண்டும்.
சில
சமயம் கண்களுக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்காததா லும் கண்கள் களைப்புறும்.
அப்படிப்பட்ட சமயங்களில் மூச்சை நன்றாக இழுத்துவிடுவது நல்ல பலன் தரும்.
அப்புறம் என்ன உங் கள் கண்களும் ஒளி பொருந்தியதாய் மாறுமே
No comments:
Post a Comment