Showing posts with label ஸ்பாட் ஃபைன். Show all posts
Showing posts with label ஸ்பாட் ஃபைன். Show all posts

Tuesday, 31 January 2012

விதிகளை மீறும் வாகனங்களுக்கு ஸ்பாட் ஃபைன் உயர்வு


சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டுனர்களுக்கு உடனடியாக விதிக்க‍ப்படும் ஸ்பாட் ஃபைன் தொகை  உயர்த்த‍ப்படுகிறது.
அதன் விவரம்
குற்ற‍ங்கள் – புதிய அபராத தொகை
ஹெல்மெட் இல்லாமல் ஓட்டுவது - ரூ.100 முதல் ரூ.300
அனுமதியின்றி வாகனங்களுடன் குறுக்கிடுவது  - ரூ.100
இன்சூரன்ஸ் இல்லாத வணிக ஆகனங்கள் – ரூ.1,000 (முதல் தடவை) – ரூ.1,000 (2ஆவது தடவை)
இன்சூரன்ஸ் இல்லாத கார் - ரூ.700 முதல் ரூ.1,000 வரை
இன்சூரன்ஸ் இல்லாத இரு சக்க‍ர வாகனம்  – ரூ.500 முதல் முறை – ரூ.1,000 2ஆவது முறை)
கூடுதல் பாரத்தை குறைக்க‍ மறுத்த‍ல் – ரூ.3,000
அதிகம் பாரம் ஏற்றுதல் – ரூ.2,000
பெர்மிட் விதிகளை மீறுதல் – ரூ.2,500 முதல் ரூ.5,000 வரை
பதிவுக்கு முன்பு வாகனத்தை ஓட்டுதல் – ரூ.2,500 முதல் ரூ5,000
வாகனத்தை மாற்றியமைத்த‍ல் – ரூ.500
அனுமதியின்றி ரேஸ் - ரூ.1000 முதல் ரூ.2000 வரை
உடல், மனதளவில் தகுதியில்லாமல் வாகனம் ஓட்டுவது - ரூ.200 முதல் ரூ.500 வரை
அதிவேகமாக வாகனம் ஓட்ட‍க் காரணமாக இருப்ப‍து – ரூ.300 முதல் ரூ.500 வரை
அதிவேகமாக ஓட்டுவது – ரூ.400 முதல் முறை – ரூ.1000 2ஆவது முறை
ந‌டத்துனர் உரிமம் இல்லாமல் விதிமீறல்கள் - ரூ.100
ஓட்டுநர் உரிமம் இல்லாமல் விதிமீறல்கள் - ரூ.500
சட்ட‍த்திற்கு முரணாக வாகனம் ஓட்டுதல் – ரூ.500
வாகனம் ஓட்ட‍த் தெரியாமல் ஓட்ட‍ அனுமதி – ரூ.500
த‌வறான தகவல் காவல்துறையிடம் கூறுதல் – ரூ.500
கால்துறையிடம் தகவல் தர மறுத்த‍ல் – ரூ.500
ஆளில்லா ரயில்வே பாதையில் செல்லுதல் - ரூ.100 முதல் ரூ.300
லைசென்ஸ், இன்சூரன்ஸ், எஃப்.சி இல்லாமல் ஓட்டுவது - ரூ.100 முதல் ரூ.300
பைக்கில் 3 பேர் செல்லுதல் – ரூ.100 முதல் ரூ.300 வரை
லைசென்ஸ் பெறாமல் ஓட்டுதல் – ரூ.100 முதல் ரூ.300 வரை
ஓட்டுநர் அருகில் அமர வைத்த‍ல் – ரூ.100
வாகனத்தின் மேற்கூரையில் பயணம் – ரூ.100 முதல் ரூ.300 வரை
அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றுதல் – ரூ.100 முதல் ரூ.300 வரை
பொதுமக்க‍ளுக்கு இடையூறாக வாகனத்தை நிறுத்துதல் – ரூ.100 முதல் ரூ.300 வரை
கட்டாய விதிகளை மீறுதல் – ரூ.100
போக்குவரத்து குறியீடுகளை சேதப்படுத்துதல் – ரூ.100 முதல் ரூ.300 வரை
வாகனத்தின் உரிமையாளர் பெயர் மாற்றாமல் இருத்த‍ல் ரூ.100 முதல் ரூ.300 வரை
வெளிமாநில வாகனங்கள் 12 மாதங்களுக்குள் மறு பதிவு செயயாமல் இருத்த‍ல் - ரூ.100 முதல் முறை) ரூ.300 (2ஆவது முறை)
வாகனப் பதிவு புதுப்பிக்காமல் இருத்த‍ல் - ரூ.100 (முதல முறை) ரூ.300 (2ஆவது முறை)