Tuesday, 18 August 2015

கர்ப்ப காலமும் உடல் எடையும்


Posted By Muthukumar,On Aug 18,2015
WALKING
கர்ப்ப காலத்தில் கண்டிப்பாக ஒவ்வொரு பெண்ணும் உடல் எடையை அதிகரிக்க வேண்டியது அவசியம். ஆனால், குழந்தை பிறந்த பிறகு, பலர் உடம்பைக் குறைக்கமுடியாமல் வேதனைப்படுகிறார்கள். உணவு சாப்பிடாமல் பட்டினி கிடத்தல், அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்தல் போன்றவை குழந்தைக்கும் தாய்க்கும் சிக்கலை உருவாக்கிவிடலம். 10 மாதங்களாக அதிகரித்த எடையை ஒரே மாதத்தில் குறைக்க முடியாது. என்ற உண்மையைப் புரிந்துகொள்ளுங்கள். நிறையத் தண்ணீர் குடித்தல், தினமும் 8 மணி நேரம் தூங்குதல், ஒரு மணி நேரம் நடைப் பயிற்சி, காய்-கனிகள் நிறைந்த சரிவிகித உணவு என்ற மரபை கடைப்பைடித்தால் ஆறே மாதங்களில் நிச்சயம் பழைய நிலையை அடைந்துவிடலாம்.

பாதாம் தரும் நன்மைகள்:
பாதாம் பருப்பு ஊட்டச் சத்து மிகுந்தது. நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்தது. இதயத்துக்கு நல்லது ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்கும். உடம்பு எடையைக் கட்டுப்படுத்தும்.

மெனோபாஸ் வருவதற்கான அறிகுறிகள்!



மெனோபாஸ் 45வயதிற்குமேல் பெண்ணின் சினைப்பையின் செயல்பாடு குறைந்து
மாதவிலக்கு முறையற்றதாகி இறுதியில் நின்றுவிடும் நிலைக்குமெனோபாஸ் என்று பெயர்.
பொதுவாக 45 வயதிற்கு மேல் 52 வயதுக்குள் ஏற்படும் இது, தற்போது 30வயதிற்கும்மேல் உள்ள பெண்களுக்கே அதிகமாக ஏற்படுகிறது. இந்த மெனோபாஸ் வருவ தற்காக சில‌ முக்கிய அறிகுறிகளை இங்கு காண்போம்.
1. உடல் முழுவதும் வெப்பம் பரவுவது போல இருக்கும்
2. திடீரென வியர்த்துக்கொட்டும். பனிக்காலமாக இருந்தாலும்வியர்க்கும்.
3. படபடப்பு, சோகம், எரிச்சல், அசதி, அழுகை என மனநிலை மாறிக் கொண்டே இருக்கும்.
4. ஈஸ்ட்ரஜன் ஹார்மோன் குறைவால் தாம்பத்திய உறவில் சிரமம் ஏற்படும்.