Saturday, 14 January 2012

சிரிக்கவும், சிந்திக்கவும் சில படங்கள் உங்களுக்காக…,



சிரிக்கவும், சிந்திக்கவும் சில படங்கள் உங்களுக்காக...,


தன்னம்பிக்கைக்கு 7

Posted On Jan 14,2012,By Muthukumar

உங்களுக்கு தன்னம்பிக்கையும், தைரியமும் ஏற்பட இதோ ஏழு எளிய வழிகள்...!

1 நீங்கள் உங்களை எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக நேசிக்க ஆரம்பிக்கிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு உங்களுக்குள் தன்னம்பிக்கை வேரூன்றும். விரைவாகவே அதன் பயனை நீங்கள் உணர ஆரம்பிப்பீர்கள். எந்திரம்போல் எப்போதும் வேலை வேலை என்று அலையாமல் உடலுக்கும் உள்ளத்திற்கும் சற்று ஓய்வு கொடுத்து உங்களை நேசிக்கத்தொடங்கினால் மனதில் உற்சாகம் தோன்றி அமைதியும் தன்னம்பிக்கையும் ஏற்படும்.
2 உங்கள் மேனியழகு, உங்கள் உள்ளத்தில் தன்னம்பிக்கையை முழுமையாக மலரச் செய்யும். அதற்காக தினந்தோறும் உடற்பயிற்சி செய்யுங் கள். நிறைய தண்ணீர் பருகுங்கள். இனிப்பு பலகாரங்கள், கொழுப்புச்சத்துள்ள எண்ணெய் பலகாரங்களை தவிர்த்து புரோட்டீன் சத்து மிதமாக உள்ள உணவுவகைகளைத்தேர்ந்தெடுத்து உண்ணுங்கள். இரவில் நன்றாக தூங்குங்கள்.
3 உங்கள் முகத்திற்கும் மேனிக்கும் பொருத்தமான அழகுசாதன பொருட்களை மிதமாக பயன்படுத்துங்கள். அழகு உங்களை மகிழ்ச்சி நிறைந்த வராக மாற்றும்.
4 உங்களிடம் உள்ள சின்னஞ்சிறு குறைகளை பிறர்சுட்டிக்காட்டும் முன்பு நீங்களே அறிந்து, அவைகளை அகற்றும் வழிகளை ஆராய்ந்து வெற்றிகாணுங்கள். உங்கள்தோல்விகளை ஒப்புக்கொள்ள வெட்கப்படாதீர்கள். இப்படிச் செய்தால் தடைக் கற்கள் வெற்றி யின் படிக்கட்டுகளாக மாறுவதை உணர்வீர்கள்.
5 உங்கள் சொந்தவாழ்க்கை, தொழில், வியாபாரம், பணத் தேவை போன்ற அனைத்தையும் பற்றி முதலிலே ஒரு செயல்திட்டம் வகுத்துவிடுங்கள். அதற்கு தக்கபடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். இதன் மூலம் எதிர்காலம் வளமாக அமையும். வளமான வாழ்க்கை தன்னம்பிக்கையை வளர்க்கும்.
6 வாழ்க்கை எப்போதும் அமைதியாக ஓடவேண்டும் என்று நினைக்காதீர்கள். சில செயல்களில் டென்ஷன் ஆனாலும் பரவாயில்லை.கொஞ்சம் `ரிஸ்க்' எடுங்கள்.ரிஸ்க்கான விஷயங்களை தைரியமாக எதிர்கொண்டு வெற்றிவாகை சூடும்போது உங்களிடம் தைரியம் பிறக்கும்.
7 உங்களை நீங்கள் நம்புங்கள்...! உங்கள் மீது நீங்கள் ஒருபோதும் அவநம்பிக்கை கொள்ளாமல் எப்போதும் நம்பிக்கை கொள்ளுங்கள். உங்கள் திறமையை நீங்களே நம்பாவிட்டால் வேறு யார் நம்புவார்கள். நம்பிக்கையே உங்களின் திறமைக்கும், செயல்திறனுக்கும் சரியான அஸ்திவாரம்...!

ஐந்து நிமிடத்தில் அலங்காரம்..

Posted On Jan 14,2012,By Muthukumar


நீங்கள் வேலைக்குப் போகும் பெண்ணா? ஐந்தே நிமிடத்தில் உங்களை அலங்காரம் செய்துகொண்டு, அலுவலகத்திற்கு பளிச்சென சென்று பெயர் வாங்கலாம்..!
முதலில் உங்கள் மேக்-அப் பொருட்கள் இருக்கும், `மேக்- அப் கிட்`டில் உங்களுக்கு தேவையான அழகு சாதன பொருட்களில் நவீனமானவைகளை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். தேவைக்கு உடனே எடுத்து பயன்படுத்தும் விதத்தில் அவை இருக்கவேண்டும்.
முகத்தை கழுவி துடைக்க வேண்டும். பின்பு சிறிதளவு மோய்சரைசர் பூசுங்கள். சன்ஸ்கிரீன் இருக்கும் மோய்சரைசரை பார்த்து வாங்க வேண்டும். இருசக்கர வாகனத்தில் பயணிப்பவ ராக இருந்தால் சன்புரட்டெக்ஷன் மோய்சரைசர், வெயில் படும் கை, கால்களில் பூசிக்கொள்வது நல்லது.
அடுத்து கன்சீலர் பயன்படுத்த வேண்டும். மோய்சரைசர், பவுண்ட்டேஷன், காம்பாக்ட் பவுடர் போன்றவை அடங்கிய புதிய `3 இன் 1' கன்சீலர் இப்போது கடைகளில் கிடைக்கும். சருமத்தில் பள்ளமும், படைகளும் இருக்கும் இடத்தில் சற்று அதிகமாகவும், மற்ற இடங்களில் லேசாகவும் கன்சீலர் பயன்படுத்த வேண்டும்.
பின்பு ஐ லைனர் பயன்படுத்துங்கள். வாட்டர் புரூப் ஐ லைனர் சிறந்தது. கண் இமைக்கு கீழே காஜல் பென்சிலால் வரையுங்கள். பிரவுன், நீல நிறங்களில் உடைக்கு பொருத்தமானவைகளை பயன்படுத்தவேண்டும்.
அடுத்து பயன்படுத்த வேண்டியது லிப் குளோஸ். உதடுகளில் ஸ்கின் கலர் லிப் லைனர் மூலம் மெல்லிய அவுட் லைன் கொடுக்கவேண்டும். பின்பு உள்ளே லிப் குளோஸ் பூசுங்கள். முகத்தில் செய்ய வேண்டிய அலங்காரம் இவ்வளவுதான். அடுத்து கூந்தல் அலங்காரம்.
ஸ்டிரைட் செய்த கூந்தல் என்றால் சிறிதளவு மட்டும் முடியை எடுத்து பின்னால், அதில் ஒரு சிறிய பட்டர்பிளை கிளிப் போட வேண்டும். முக அழகுக்கு பொருத்தமாக `ஹேர் கட்' ஏதாவது செய்திருந்தால், நன்றாக சீவிவிட்டால் போதும். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை `ஹேர் ஸ்பா' செய்தால், கூந்தல் ஜொலிப்பாகும்.
இவ்வளவுதான் அலங்காரம். ஐந்தே நிமிடத்தில் இதை செய்து முடித்து, நீங்கள் அழகாக அலுவலகத்திற்கு கிளம்பிவிடலாம்.
கை, கால் அழகும் கவனிக்கத்தகுந்தது. மாதத்தில் ஒரு நாள் பெடிக்யூர், மானிக்யூர் செய்து கை, கால்களை அழகுபடுத்த வேண்டும். வேக்ஸ் செய்து தேவையற்ற ரோமங்களை நீக்கவேண்டும். தினமும் இரவில் தூங்கச் செல்வதற்கு முன்னால் கை, கால்களை சுத்தம் செய்துவிட்டு சிறிதளவு மோய்சரைசர் பூசிக்கொள்ள வேண்டும்.

பேச்சு…! அதுலதான் எத்தனை வகை


பேச்சக் குறைங்கடா…
அவன் பேச்சைக் கொண்டுபோய் குப்பைல போடு…
பேச்சு பேச்சாதான் இருக்கணும்…
இப்படியே பேசிக்கிட்டேப் போனா எப் படி?…
பேசியேக் கொல்லாதடா…
பேச்சு…அதுலதான் எத்தனை வகை. எத்தனை விதமாகப் பேசுகி றோம்.
வாழ்க்கை முழுவதும் பேசுகிறோம். பேச்சு மட்டும் இல்லை யென்றால் உலகத்தில் பாதிப் பிரச்சினை இல் லை.இருந்தாலும் “பேச்சு அது  உயிர் மூச்சு(பெண்களுக்கு)”.
‘அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் 
கடுத்தது காட்டும் முகம்’                          -  குறள்.
அடுத்தவர்களின் குறிப்பறிந்து பேசினால் அது நலம்.
ஒருவர் போனில் பேசிக்கொண்டிருக்கும் போது அவரது நண்பர் பார்க்க வந்தார்.ரொம்ப நேரமாகப் பேசினார். கடைசியாக அவரது நண்பர் கேட்டார். உங்கள் மனைவியிடமா இவ்வளவு நேரம் பேசி னீர்கள். ஆமாம் எப்படி கண்டுபிடித்தீர்கள். இது என்ன பெரிய விசயமா? ஒருமணி நேரமா பேசியிரு க்கீங்க. ஆனா நீங்க ஒரு வார்த்தை கூட பேசவே இல்லையே!.
நம்மில் பலபேர் இப்படித்தான்.இப்போதெல்லாம் தனியாகவே பேசிக் கொண்டு இருக்கிறோம். வேறெங்கு? போனில்தான். சில பேர் போனே இல்லாமலும் தனியாகப் பேசுவார்கள். அது ஒரு மன நோய். மனசுக்குள்ளே அடக்கி வச்சிருக்கிற  எரிச்சல், கோபம், வெறுப்பு, பிரச்சினைகள் அளவுக்கு மீறிப் போச்சுனா அது மன நோயில கொண்டு போய் விடும். அதுதான் Depressive  disorder. மனசுல உள்ள பிரச்சினைகளுக்கு ஒரு வடி கால் தனியாகப் பேசு வது. சிலபேர் கண் ணாடியப் பார்த்தாகூட பேச ஆள் கிடச்சி ருச்சுனு பேச ஆரம்பிச்சிடுவாங்க.
சிலபேர் பேசும்போது ரசித்து கேட்கலாம். காமெடியாகவும் இருக் கும். சிலபேரின் பேச்சு காம நெடியாகவும் இருக்கும்.
ஒரு பெண் கேட்டாள். உன் புடவை மட்டும் எப்படி இவ்வளவு பளிச் சுனு இருக்கு?
வெள்ளை வெளேர் சல வைக்கு நான் எப்பவும் நம்புறது ‘சந்திரனை’த் தான். 
அது என்ன சோப்பா?
இல்லை என் கணவர் பேர் சந்திரன்.
சிறு குழந்தைகள் கூட இப்போது  நயமாகப் பேசுகிறார்கள்.
ஒரு குழந்தையிடம் ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம். அவர் தற்கொலை செய்து கொண்டாராம் என்று கதையை ஆரம்பித்த உடனேயே ஒரு ஊர்ல ஒரு ராஜா மட்டும் இருந்தா அவருக்குப் பயமா இருக்காதா?அதுதான் அவரு தற்கொலை பண்ணிக் கிட்டாரு எனக்கேட்டு நம் மைத் திணறடிக்கும்.
சில பேரின் மேடைப்பேச்சு ரசிக்கவைக்கும்.பேச்சின் பொருள் புரிந்தவன் சிரிப் பான். பொருள் புரியாதவன் முறைப்பான். சில பேர் தன் னையே கேலிப்பொருளாக்கி மகிழ்வூட்டுவார்கள்.
நிறைய அறிஞர்கள் இருக்கிறார்கள். நம்மை அசைய விடாமல் பேசி ரசிக்க வைப்பார்கள்.சிலபேர் சொன்னதையே திரும்பச் சொல்லி போரடித்து விடுவார்கள். வடிவேலு காமெடில வர்ற மாதிரி ‘ திரும்ப திரும்பப் பேசுற நீ…
திரும்ப திரும்பப் பேசுற நீ…’ என்ற கதை ஆகி விடும்.
பெரும்பாலும் நிறையப் பேச்சாளர் களுக்கு முதல் பேச்சு அனுப வம் அவ்வளவு சிறப்பாக அமைந்தி ருக்காது.அறிஞர்கள் சிலர் அவர்கள் வட்டார மொழியில் பேசுவார்கள். சிலர் இலக்கிய நடை யிலும், சிலர் மக்கள் நடையிலும் பேசுவார்கள்.
பேச்சாளனுக்கு வாசிப்பது என்பது ஒரு சுவாசம் போல இருக்க வேண்டும். அவையறிந்தும் பேச வேண்டும்.மங்கலமான இடத்தில் அமங்கலமாகப் பேசக்கூடாது. 
“சொல்லுக சொல்லிற் பயனுடைய; சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்”   – குறள்.
பயனற்ற சொற்களைப் பேசினால் அது வீண்.
முல்லாவைப் பற்றி ஒரு கதை சொல்லுவார்கள்.அவரை மேடை யில் பேசக் கூப்பிட்டு நிறையக் கேள்விகள் கேட்டுத் திணறடிக்க திட்ட மிட்டனர். இதையறிந்த முல் லா முதல்நாள் பேசும்போது ‘இன்று நான் பேசப் போவது என்ன தெரியுமா?” எனக் கேட்டார்.
கூட்டத்தினர் தெரியாது என்றனர். தெரியாத உங்களுக்குப் பேசி பயனில்லை எனகூறி கிளம்பி விட் டார். மறுநாள் ‘இன்று நான் பேசப் போவது என்ன தெரியுமா?” எனக் கேட்டார்.கூட்டத்தினர் அனைவரும் தெரியும் என்றனர். எல்லாம் தெரிந்த உங்களுக்குப் பேசி பயனில்லை எனகூறி கிளம்பி விட்டார். 
அடுத்த நாளும் வந்து ‘இன்று நான் பேசப் போவது என்ன தெரியு மா?” எனக் கேட்டார்.கூட்டத்தில் பாதிப் பேர் தெரியும் எனவும் பாதிப்பேர் தெரியாது எனவும்  கூறினார். உடனே முல்லா ஒன் றும் பிரச்சினை இல்லை தெரிந்தவர்கள்  தெரியாதவர்களுக்கு கற்று கொடுங்கள் எனக்கூறி கிளம்பிவிட்டார்.  
காதலர்களின் பேச்சு நிறைய இடத்தில் மௌனமாகவே இருக்கும்.
மீராவின் கவிதை ஒன்றில்…
‘உன்னிடம் எவ்வளவோ பேச வேண்டும்
என்று நினைக்கிறேன்.
அரங்கம் ஏறுமுன்
ஒத்திகை பார்க்கும்
ஒரு நல்ல நடிகனைப்போல்
நீ வருமுன் உன்னிடம்
என்னென்ன பேசவேண்டும் என்று
தைரிமாய்த் தீர்மானிக்கிறேன்.
நீ எதிரில் 
தென்பட்ட நிமிடத்தில்
ஆசிரியரின் திடீரென்ற கேள்விக்குப்
பதில் சொல்ல முடியாத
ஒரு பள்ளி சிறுவனைப்போல்
பாவமாய் விழிக்கிறேன்’.
வக்கீலின் பேச்சு வாதமாய் இருக்கும். அவரின் வாழ்க்கைக்கும் அதுதான் தேவை.முதியோர்களின் பேச்சு அர்த்தம் நிறைந்ததாய் இருக்கும்.

Advertisement

Friday, 13 January 2012

ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை

Posted On Jan 13,2012,By Muthukumar
வாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர், சாலைகளில் இடம் பெற்றவை குறித்து அறிந்திருப்பதில்லை.
* பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம்.
* சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு. அபாயகரமான அல்லது
வாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும்போதோ எரியவிட வேண்டும்.
* சிக்னல்கள் அல்லது ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இருக்கும்போது, அனைத்து விளக்குகளையும் எரியவிடக் கூடாது.
* ரோட்டின் நடுவில் கோடுகளை குறிப்பிட்ட இடைவெளியில் விட்டுவிட்டு போட்டிருந்தால், ஒரு வாகனத்தை நாம் இந்த இடத்தில் முந்திச் செல்லலாம் என்று பொருள். அதேசமயம் தொடர்ச்சியான நீண்ட கோடுகளாக போட்டிருந்தால் முந்தக் கூடாது என்று பொருள்.
* ரோட்டின் நடுவில் தொடர்ச்சியாக இரட்டைக் கோடுகள் போட்டிருந்தால், அதை ஒரு தடுப்புச் சுவராக கருத
வேண்டும்.
* ஓட்டுனருக்கு 20.5 மீ (67 அடி) தொலைவில் இருந்து வரும் வாகனத்தின் பதிவு எண்ணை படிக்க முடிந்தால், கண்கள் நல்ல பார்வையுடன் உள்ளது என பொருள். எனவே, ஆண்டுக்கு ஒருமுறை ரத்தஅழுத்தம், சர்க்கரை, கண் பரிசோதனை செய்வது நல்லது.
* கனகர வாகனங்களின் பின்புறம் சிவப்பு நிற முக்கோண வடிவச் சின்னம் உள்ளது. இது முற்றிலும் தவறு. மோட்டார் வாகன சட்டப்படி, அது ஒரு எச்சரிக்கை சின்னம். ரோட்டில் ஒரு வாகனம் பழுதாகி நின்றாலோ, அவசர நிலையிலோ அதை வாகனத்தின் பின்புறம் 15 அடி தள்ளிதான் வைக்க வேண்டும்.
* நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனத்திற்கு வசதியாக முகப்பு விளக்குகளை 250 மீ.,க்கு முன்பே "டிம்' செய்ய வேண்டும்.
* வளைவுகளில் அதிவேகமாக ஓட்டிச் சென்றால் விபத்து நடக்கும். அதற்கு "இன் ஸ்லோ-அவுட் பாஸ்ட்' என்ற முறையில் செல்ல வேண்டும். அதாவது, மைய ஈர்ப்பு விசை, விலக்கு விசைகளின் அடிப்படையில், வளைவுகளில் நுழையும்போது மெதுவாகவும், பின் ஆக்ஸிலேட்டரை லேசாக அழுத்தியும் செல்ல வேண்டும். ஆனால் பலர் வேகமாகவே நுழைந்து பிரேக் அடித்து திரும்புகின்றனர். இதனால் வாகனம் கவிழ்ந்துவிடும்.
* கார்களில் செல்வோர் "சீட் பெல்ட்' அணியும்போது
சட்டைப் பையில் போன், பேனா, சில்லரை காசுகள் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். பெண்கள் அதிக நகை அணிந்திருக்கக் கூடாது. அசம்பாவிதம் நேரிட்டால் அந்த பொருட்களே பயணிக்கு எமனாக மாறிவிடும்.
* நான்கு வழிச் சாலையின் நடுவே மீடியனில் அரளி செடிகளையே வைத்துள்ளனர். காரணம் எதிரே வரும் வாகனத்தின் முகப்பு விளக்கு ஒளியில் இருந்து கண்களை பாதுகாக்கும். வறட்சியையும் தாங்கும் இச்செடிகளின் வேர்கள் அதிகம் வெளி
வராது. இது வாகனங்களின் கார்பன் டை ஆக்சைடை அதிகம் "அப்சர்வ்'
செய்கிறது. விலங்குகளும் இவற்றை உண்பதில்லை.
* நமக்கு அவசர அழைப்பு எண் 108 என்பது தெரியும். மற்றுமொரு எண் 112 என்பது பலருக்கு தெரியாது. மொபைல் போன் "சிக்னல்' இல்லாத இடங்களிலும், மொபைலின் "கீ லாக்' செய்யப்பட்ட நிலையிலும், ஏன் "சிம்கார்டு' இல்லாத நிலையிலும்கூட இந்த எண்ணை அவசர உதவிக்கு பயன்படுத்தலாம்.
மொத்தத்தில் விவேகமான வேகமே விபத்துக்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்.

உலகப் புகழ் பெற்றவர்களும், அவர்கள் பிறந்த நாடுகளும்


அரிஸ்டாட்டில் — கிரீஸ்
ஜூலியஸ் சீஸர் — இத்தாலி
வால்டோ — ஃபிரான்ஸ்
சன்யாட் சென் — சீனா
உட்ரோ வில்சன் — அமெரிக்கா
பிஸ்மார்க் — ஜெர்மனி
மார்க்கோனி — இத்தாலி
காந்திஜி — இந்தியா
கிளியோபாட்ரா — எகிப்து
மேரி கியூரி — போலந்து
ஜார்ஜ் வாஷிங்டன் — அமெரிக்கா
ஆப்ரஹாம் லிங்கன் — அமெரிக்கா
ஜான் எஃப் கென்னடி — அமெரிக்கா
ஜவஹர்லால் நேரு — இந்தியா
கன்ஃபூஷியஸ் — சீனா
பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் — இங்கிலாந்து
ஜோன் ஆஃப் ஆர்க் — ஃபிரான்ஸ்
மெகஸ்தனீஸ் — கிரீஸ்
பிதாகரஸ் — கிரீஸ்
பெனிட்டோ முசோலினி — இத்தாலி
அடால்ப் ஹிட்லர் — ஆஸ்திரியா
ஜோசப் ஸ்ராலின் — சோவியத் யூனியன்
மார்டின் லூதர் கிங் — அமெரிக்கா
வால்ட் டிஸ்னி — அமெரிக்கா
நிகிடா குருஷேவ் — சோவியத் யூனியன்
சாக்ரடீஸ் — கிரீஸ்
லியோ டால்ஸ்டாய் — சோவியத் யூனியன்
ஜார்ஜ் பெர்னாட்ஷா — பிரிட்டன்
அன்னை தெரசா — யூகோஸ்லாவியா
அலெக்ஸ்ஸாண்டர் — கிரீஸ்
நெப்போலியன் –இத்தாலி
டயானா — பிரிட்டன்
லெனின் — சோவியத் யூனியன்
கார்ல் மார்க்ஸ் — ஜேர்மனி
ஆர்க்கிமிடீஸ் — கிரீஸ்
லூயி பாஸ்டர் — ஃபிரான்ஸ்
அசோகர் — இந்தியா
போரிஸ் பெக்கர் — ஜெர்மனி
பிளாட்டோ — கிரீஸ்
மா சே துங் — சீனா
மர்லின் மன்றோ — அமெரிக்கா
ஆல்ஃபிரட் நோபெல் — சுவீடன்
வீரமா முனிவர் — இத்தாலி
ரோல்ஸ் ராய்ஸ் — இங்கிலாந்து
ஹென்றி டுனாண்ட் — சுவிட்சர்லாந்து
ஹென்றி ஃபோர்டு — அமெரிக்கா
மைக்கேல் ஏஞ்சலோ — இத்தாலி
நிகோலஸ் கோபர்நிகஸ் — போலந்து
ரூஸோ — ஃபிரான்ஸ்
லாரல் — இங்கிலாந்து
ஹார்டி — அமெரிக்கா
டொனால்ட் பிரட்மன் — ஆஸ்திரேலியா
ஆன்ட்ரூ ஜான்சன் — அமெரிக்கா
விவேகானந்தர் — இந்தியா
அலெக்சாண்டர் ஃபிளமிங் — ஸ்காட்லாந்து
கமால் அப்துல் நாசர் — எகிப்து
வாலண்டினா தெரஸ்கோவா — சோவியத் யூனியன்
வில்லி பிராண்ட் — ஜெர்மனி
வின்ஸ்டன் சர்ச்சில் — இங்கிலாந்து
பாப்லோ பிக்காஸோ — ஸ்பெயின்
அலெக்சாண்டர் வோல்டா — இத்தாலி
ஜாக்குலின் கென்னடி — அமெரிக்கா
ஸ்டெஃபிகிராஃப் — ஜெர்மனி
பதினான்காம் லூயி — ஃபிரான்ஸ்
டாக்டர் அம்பேத்கார் — இந்தியா
எமர்சன் — அமெரிக்கா
சித்தூர் ராணி பத்மினி — இந்தியா
எலிசபெத் பிளாக்வெல் — அமெரிக்கா
ரவீந்திரநாத் தாகூர் — இந்தியா
முகமது அலி ஜின்னா — பாக்கிஸ்தான்
பேநாசீர் புட்டோ — பாக்கிஸ்தான்
கரிபால்டி — இத்தாலி
கலிலியோ — இத்தாலி
ஹெலன் கெல்லர் — அமெரிக்கா
தியோடர் ரூஷ்வெல்ட் — அமெரிக்கா
நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் — இந்தியா
ஜேம்ஸ் வாட் — ஸ்காட்லாந்து
சார்லி சாப்ளின் — இங்கிலாந்து
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் — ஜெர்மனி
மைக்கேல் ஃபாரடே — இங்கிலாந்து
ஜோசபைன் நெப்போலியன் — ஃபிரான்ஸ்
வில்லியம் ஹார்வி — இங்கிலாந்து
இந்திரா காந்தி — இந்தியா
மார்கரெட் தாட்சர் — இங்கிலாந்து
ஹிப்போக்ரட்டீஸ் — கிரீஸ்
ஜிம் கூரியர் — அமெரிக்கா
சோஃபியா லாரன் — இத்தாலி
அலெக்சாண்டர் கிரஹாம்பெல் — இங்கிலாந்து
ராணி மங்கம்மா — இந்தியா
செங்கிஸ்கான் — மங்கோலியா
பெஞ்சமின் ஃபிராங்க்ளின் — அமெரிக்கா
ஆல்ஃபிரட் ஹிட்சாக் — இங்கிலாந்து
மார்டினா நவரத்திலோவா — அமெரிக்கா
எட்வர்ட் ஜென்னல் — இங்கிலாந்து
எர்ன்ஸ்ட் ரூதர்ஃபோர்ட் — நியூசிலாந்து
எலிசபெத் டெய்லர் — இங்கிலாந்து
சார்லஸ் டார்வின் — இங்கிலாந்து
மாஜினி — இத்தாலி
ரைட் சகோதரர்கள் — அமெரிக்கா
வில்லியம் ஷேக்ஸ்பியர் — இங்கிலாந்து
மோனிகா செலஸ் — யூகோஸ்லாவியா
தாமஸ் அல்வா எடிசன் — அமெரிக்கா
ஐசக் நியூட்டன் — அமெரிக்கா
நெல்சன் — இங்கிலாந்து
பீட் சாம்ப்ராஸ் — அமெரிக்கா
லியணார்-டோ-டாவின்சி — இத்தாலி
சதாம் ஹுஸைன் — இராக்
கோஃபி அன்னன் — கானா
நீல் ஆர்ம்ஸ்ராங் — அமெரிக்கா
ராகேஷ் சர்மா — இந்தியா
சுஷ்மிதா சென் — இந்தியா
ஐஸ்வ்ர்யா ராய் — இந்தியா
கல்பனா சாவ்லா — இந்தியா
விஸ்வநாதன் ஆனந்த் — இந்தியா
பில் கிளிண்டன் — அமெரிக்கா
ஆலன் ஆக்டேபியன் ஹியூம் — இங்கிலாந்து
அமர்த்தியா சென் — இந்தியா
ராஜிவ் காந்தி — இந்தியா
சோனியா காந்தி — இத்தாலி
ஹிலாரி ரோத்தம் கிளிண்டன் — அமெரிக்கா
நெல்சன் மண்டேலா — ஆப்பிரிக்கா
சி.வி. ராமன் — இந்தியா
புத்தர் — நேபாளம்
திருவள்ளுவர் — இந்தியா
அமுட்சென் — நார்வே
அலெக்சாண்டர் மோஸ் — ஃபிரான்ஸ்
அருந்ததிராய் — இந்தியா

Thursday, 12 January 2012

சர்வதேச கார்கள் 2012


ஹோண்டாவின் உலகத்தரமா ன கார். நீங்கள் அக்கார்டு கார் வைத்திருக்கிறீர்கள் என்றால், உலகின் எந்த மூலைக் குச் சென்றாலும் உங்களுக்கான மதிப்பு தனிதான்! 2012-ம் ஆண் டுக்கான ஹோண்டா அக்கார் டில், பல்வேறு சிறப்பம்சங்களைச் சேர்த்திருக்கிறது ஹோண்டா.
 
2354 சிசி, V6 இன்ஜின் கொண்ட அக்கார்டு  கார், அதிகபட்சமாக 190 bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. பர்ஃபாமென்ஸில் மட்டும் அல்லாமல், நான்கு அல்லது ஐந்து பேர் வசதியாக உட்கார்ந்து பயணிக்கக் கூடிய கார் என்பதால், ஹோண்டா அக்கார்டு ‘டாப் டென்’ பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது!
 
ரியல் ஸ்போர்ட்ஸ் கார்! கேமென் காரை பேபி போர்ஷே என்றும் சொல்வார்கள். 6 சிலிண்டர், 3.4 லிட்டர் கொள்ளளவு, 330 bhp சக்தி, 7-ஸ்பீடு கியர் பாக்ஸ் என த்ரில் விரும்பிகளுக்கான பர்ஃ பெக்ட் கார் போர்ஷே கேமென். 0-100 கி.மீ வேகத்தை 4.9 விநாடி களில் கடக்கிறது போர்ஷே கேமென். ஸ்போர்ட்ஸ் கார் என்பதால், காருக்குள் இருவர் மட்டுமே உட்கார முடியும். அதே போல், டிக்கியில் பொருட்கள், பைகள் வைக்க எல்லாம் இடம் கிடையாது!
 
3000 சிசி, 310 bhp சக்தி என பவர்ஃபுல் புள்ளி விவரங்களால் மிர ட்டும் ஆடியின் அழகான கார், ஆடி எஸ்-7. V6 இன்ஜின், 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ், 6 காற்றுப் பைகள், 4 வகையான சீட் அட்ஜெஸ்ட், டிராக்ஷன் கன்ட்ரோல், காருக்குள் அதிவேக கம்ப்யூ ட்டர் இன்டர்நெட் வசதி, 7 இன்ச் டிரைவர் இன்ஃபர்மேஷன் சிஸ் டம், ஃபிரேம் இல்லாத பக்கவாட்டுக் கண்ணாடிகள் என காருக்குள் இருப்பது எல்லாமே ஹை-டெக் வசதிகள்தான்!  
தன்னுடைய எல்லைகளைத் தாண்டி வெற்றி பெறும் கார் என்பது தான் ஃபோர்டு ஃபோகஸின் சிறப்பு. ஹேட்ச்பேக் கார்தான் என் றாலும், இந்த காரின் பர்ஃபாமென்ஸ் மிரள வைக்கும். 2000 சிசி திறன் கொண்ட இந்த காரின் பவர் 160 bhp. 5-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் என இரண்டு வகையான கியர் பாக்ஸ் ஆப்ஷன்களும் உண்டு. ஆனால், ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸைவிட மேனுவல் கியர் பாக்ஸில் ஓட்டுவதில்தான் இந்த காரை ஓட்டுவதற்கான த்ரில்லே இருக்கிறது என்கிறார்கள் ஃபோகஸ் ரசிகர்கள்!
Advertisement

அதிகநேரம் உடலுறவு கொள்ள


Posted On Jan 12,2012,By Muthukumar

கடல்பாசி -150 கிராம்
தண்ணீர்விட்டான்கிழங்கு-50  கிராம்
அமுகிறான்கிழங்கு -30 கிராம்
முந்திரி -20 கிராம்
கிராம்பு -10 கிராம்
ஜாதிக்காய்-20 கிராம்

இவைகளை நன்கு இளவறுப்பாக வறுத்து நன்கு பொடித்து 2 மடங்கு சர்க்கரை சேர்த்து கலந்து எடுத்து கொள்ளவும் .ஒரு ஸ்பூன் (அ)2 ஸ்பூன்  3 வேளை உணவுக்கு பின் பசும்பாலில் அருந்தி வர  விந்தணுக்கள் அதிகரித்து விரைபுதன்மையும் ,அதிக நேர உடலுறவும் ஏற்படும்.

உலக அதிசயம் - GRAND CANYON - பள்ளத்தாக்குகளின் மேல் - SKY WALK - அழகான புகைப்படங்கள்

Posted On Jan 12,2012,By Muthukumar
பூமி என்பது , சூரியனிடம் இருந்து தெறித்து விழுந்த ஒரு வெப்பத்துளி.  அது சிறிது சிறிதாக குளிர்ந்து - மலைகளும், பாறைகளும், நதிகளும், கடல்களும் - பின்பு உயிரினங்களும் கோடிக்கணக்கான வருடங்களுக்கு முன்பே தோன்றி இருக்கின்றன, என்கிறது அறிவியல். அப்படிப்பட்ட இயற்கையின் விசித்திர சிருஷ்டியான ஒரு பள்ளத்தாக்கு பற்றி , இன்று நாம் காண விருக்கிறோம்.

நேற்று இந்திரா சௌந்தர்ராஜன் எழுதிய " சிவம்" நாவலை மீண்டும் ஒருமுறை படிக்க உட்கார்ந்தபோது - ஒரு தகவல் மனதில் பதிந்து விட்டது. அது எவ்வளவு தூரம் உண்மையோ, பொய்யோ தெரியாது..  அமெரிக்காவின் கிராண்ட் கன்யான் பள்ளத்தாக்குகளில் - நமது மும்மூர்த்திகளான " சிவா , விஷ்ணு , பிரம்மா " வின் படிமங்கள் - பாறைகளில் படிந்து இருப்பதாக எழுதி இருந்தார். இவ்வளவு பெரிய பள்ளத்தாக்குகளில் - சந்தேகமே இல்லாமல் , ஏராளமான ரூபங்கள் - நம் கண்ணுக்கு தெரியக்கூடும்.     

பொதுவாக இந்திராஜி எழுதிய நாவல்களை , நாம் முதன்முறை படிக்கும்போது - கதையின் விறுவிறுப்பில் , நாம் நிறைய விஷயங்களை மனதில் பதிய வைக்க முடியாது. திரும்ப நீங்கள் படிக்கும்போது , உங்களுக்கு நிறைய விஷயங்கள் புதிதாக புலப்படும். விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத , அதே சமயம் ஆன்மீக பொக்கிஷங்கள் நிறைய அடங்கியவை அவர் நாவல்கள் .  

உண்மைலேயே , இயற்கையின் ஒரு அதி  அற்புதமான சிருஷ்டி - இந்த பள்ளத்தாக்கு. நம் இந்தியாவிலும், ஏராளமான இடங்கள் இதைப் போல் உள்ளன. வானில் , நம் கண்ணுக்கு புலப்படும் ரூபங்கள் , பூமியில் இருந்தால் எப்படி இருக்குமோ , அதைப்போல - அழகின் உச்சமான இந்த பள்ளத்தாக்குகளை , நம் வாசகர்களும் தெரிந்து கொள்வதற்காக இங்கு பகிர்கிறேன்.


நமது வாசகர்களில், யாராவது நேரடியாக சென்று வந்து இருந்தால் - உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளலாம்.

கிராண்ட் கன்யான் :



இது NGC வெளியிட்டுள்ள கிராண்ட் கன்யான் - sky வாக் - வீடியோ தொகுப்பு. க்ளிக் செய்து பாருங்கள் . பரவசமூட்டும் அனுபவம். சுமார் 4000 அடி உயரத்தில் , கண்ணாடி தரையில் கீழே பார்க்க முடியுமாம்.

http://video.nationalgeographic.com/video/player/news/culture-places-news/grand-canyon-skywalk-vin.html

மேலும் அதிக விவரங்களுக்கு கிராண்ட் கன்யான் official website
: http://www.nps.gov/grca/index.htm











































இந்தியாவின் பண்டைய ரூபாய் நோட்டுக்களும், நாணயங்களும்


இந்தியாவின் பண்டைய ரூபாய் நோட்டுக்களும், நாணயங்களும்
See More


சுதந்திரத்துக்கு முன் இந்தியாவின் நாணயங்கள்
பெயர்
உலோகம்
முன் பக்கம்
பின் பக்கம்
ஒரு ரூபாய்
நிக்கல்
அரை ரூபாய்
நிக்கல்
கால் ரூபாய்
நிக்கல்
இரண்டு அணா
Cupro-நிக்கல்
ஒரு அணா
Cupro-நிக்கல்
அரை அணா
Cupro-நிக்கல்
ஒரு பைசா
வெண்கலம்
 நயா பைசா வரிசை 1957-1964

பெயர்
உலோகம்
எடை
உருவம்
அளவு
நாணயம்
ஒரு ரூபாய்
நிக்கல்
10 கிராம்
Circular
28 மிமீ
ஐம்பது நயா பைசா
நிக்கல்
5 கிராம்
Circular
24 மிமீ
இருபத்தி ஐந்து நயா பைசா
நிக்கல்
2.5 கிராம்
Circular
19 மிமீ
பத்து நயா பைசா
Cupro-நிக்கல்
5 கிராம்
Eight Scalloped
23 மிமீ
ஐந்து நயா பைசா
Cupro-நிக்கல்
4 கிராம்
Square
22 மிமீ
இரண்டு நயா பைசா
Cupro-நிக்கல்
3 கிராம்
Eight Scalloped
18 மிமீ
ஒரு நயா பைசா
வெண்கலம்
1.5 கிராம்
Circular
16 மிமீ
 அலுமினியம் வரிசை 1964 முதல்
பெயர்
உலோகம்
எடை
உருவம்
அளவு
நாணயம்
ஒரு பைசா
அலுமினியம், மக்னீசியம்
0.75 கிராம்
சதுரம்
17 மிமீ
இரண்டு பைசா
அலுமினியம், மக்னீசியம்
1 கிராம்
Scalloped
20 மிமீ
மூன்று பைசா
அலுமினியம், மக்னீசியம்
1.25 கிராம்
அறுகோணம்
21 மிமீ
ஐந்து பைசா
அலுமினியம், மக்னீசியம்
1.5 கிராம்
சதுரம்
22 மிமீ
பத்து பைசா
அலுமினியம், மக்னீசியம்
2.3 கிராம்
Scalloped
26 மிமீ
இருபது பைசா
அலுமினியம், மக்னீசியம்
2.2 கிராம்
அறுகோணம்
26 மிமீ
தற்கால நாணயங்கள்
பெயர்
உலோகம்
எடை
விட்டம்
உருவம்
Cupro-நிக்கல்
9.00 கிராம்
23 மிமீ
Circular
Cupro-நிக்கல்
6,00 கிராம்
26 மிமீ
பதினோரு பக்கம்
துருப்பிடிக்காத எஃகு
4,85 கிராம்
25 மிமீ
Circular
துருப்பிடிக்காத எஃகு
3.79 கிராம்
22 மிமீ
Circular
துருப்பிடிக்காத எஃகு
2.83 கிராம்
19 மிமீ
Circular
துருப்பிடிக்காத எஃகு
2.00 கிராம்
16 மிமீ
Circular