Tuesday, 31 January 2012

நீங்கள், சந்தோஷமான குடும்ப வாழ்க்கை வாழ விரும்புவரா?


திருமணத்துக்குப் பிறகு, அதற்கு முன்பிருந்த உறவுகளை சொல்லி அதனால் பிரச்சினைகள் உருவாவதை தவிர்த்து விடவேண்டும். முன்பிருந்த காதல், பிரச்சினை, குழப்பங்களுக்கு வழிவகுத்து விடும். ஆகவே அந்த மாதிரியான எண்ணங்களுக்கு முழுக் கு போட்டுவிடுங்கள். திருமணத்துக்கு பிறகும் முந்தைய சில உறவுகளைத் தொடர்ந்தால் அதுவே உங்கள் வாழ்க் கைக்கு எதிராக அமைந்து விடும். இன்றைய கொலை, கற்பழிப்பு போன் ற குற்றங்களுக்கு அடிப்படை காரண மே இந்த மாதிரியான விஷயங் கள்தான்.
திருமணமாகி கணவர் வீட்டுக்கு செல்லும் பெண், அங்குள்ள கண வரின் உறவினர்கள் மற்றும் சுற்றத்தாரையும் ஏற்றுக்கொண்டு அன்பு, மரியாதை செலுத்த வேண்டும்.
வெவ்வேறு இடங்களில் இருந்த ஆணும், பெண்ணும் இணையும் போது பல்வேறு விஷயங்களில் முரண்பாடு கள் ஏற்படவே செய்யும். அதை சரிசெய்து ஒத்துப் போவது நல்லது.
வாழ்க்கை என்றால் நிறை ய நெருக்கடி இருக்கத்தான் செய்யும். ஆனால் அதையெல்லாம் சகஜமாக ஏற்றுக் கொள்ள வே ண்டும். உங்களுடைய துணைவரிடம் நல்ல குணங்கள் இருக்கும் போது அதை கண்டுகொள்ளாமல், குறைபாடுகளை மட்டும் பெரி தாக்கு வதை தவிர்க்க வேண்டும். இருவரது குறைபாடுகளையும் பரஸ்பரம் ஏற்றுக் கொண்டு அதற்கு நல்லதோர் தீர்வுகாணலாம்.
மது, போதை மருந்து, புகையி லை, பான்பராக் போன்ற லா கிரி வஸ்துக்கள் எல்லாமே குடும்ப வாழ்க்கையை சிதை க்கும் தன்மை கொண்டவை. சுகத்தை விட இதில் சோகமே அதிகம்.
அதேபோல், வரவுக்கேற்றபடி செலவுசெய்ய இருவரும் முன் வர வேண்டும். செலவுகளை கட்டுப்படுத்தவும் முயற்சிக்கவும். மாத ந் தோறும் பட்ஜெட் தயார் செய்து தேவையற்ற செலவுகளை கட்டுப் படுத்துவது நல்லது.
பெரும்பாலான குடும்பங்களில் பிரச் சினைகள் உருவாக பெரியவர்களும் முக்கிய காரணம்.
சுதந்திரமாக இருக்கும் இன்றைய தலைமுறையை… பெரியவர்கள் சிலர் தங்களுடைய கட்டுப்பாட்டுக் குள் கட்டுப்படுத்த நினைப்பதை தவி ர்க்க வேண்டும்.
பெற்றோர் மற்றும் உறவினர்கள் குதர்க்கமான பேச்சு மூலம் தம்பதிக ளுக்குள் பிரச்சினைகளை உருவாக் கக் கூடாது.
சந்தேகம், முன் கோபம், மது அருந்துதல் போன்றவை பிரச்சினை என்ற தீயில் மேலும் எண்ணையை ஊற்றுவது போல் ஆகிவிடும். இதற்கு கவுன்சிலிங் சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.
எந்த செயலாக இருந்தாலும் எல் லோரும் ஒன்றாக அமர்ந்து பேசி , அதை செயல்படுத்தினால் பிரச் சினை ஏற்படாது. அதேமாதிரி, எந்தப் பிரச்சினை ஏற்பட்டாலும் அனைவரும் அமர்ந்து பேசினால் பிரச்சினையை சமாளிக்க முடியு ம்.
உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும்போது காட்டும் விசேஷ அக்கறை, தம்பதிகளுக்குள் ஒரு நல்ல இணக்கமான சூழ்நிலையை எற்படுத் தும்.
திருமணம் செய்துவிட்டு வெளிநாட்டுக்கு வே லைக்கு செல்வோர், தங்களுடைய மன நிலையை மேம்படுத்துவது நல்லது. வெளி நாட்டில் இருக்கும் போது தன்னுடைய மனை வியை யாராவது தவறாக சொன்னால் அதை நம்பி, தன்னுடைய வாழ்க்கையை பலி கொடுக்கத் துணிவது நல்ல தல்ல.
இப்போது 65 சதவீதம் பேர் செக்ஸ் விஷயத்தில் முழு மையானவர்களாக இல்லை. இதனால் ஏற்படும் தவறான கருத்துகளும் குடும்ப வாழ்க் கைக்கு உலை வைத்துவிடு ம். எனவே குடும்ப வாழ்க்கை யை தொடங்கும்போது, செக் ஸ் குறித்த முழுமையான அறிவு அவசியம்.
முக்கியமாக… குடும்பத்தில் தம்பதிகளுக்குள் ஏதாவது பிரச்சினை என்றால் அதை இருவருமாகபேசி முடிக்கவேண்டும். அதை விடுத்து மூன்றாவது மனிதரை இந்த விஷயத்துக்குள் நுழைய அனுமதிக்க வேண்டாம். அதே போல், திருமணத்திற்கு பிறகு மனைவியை கவனிக் கும் பொறுப்பை பெற்றோரிட ம் ஒப்படைப்பதும் தவறு. இதனால் பிரச்சினைகள்தா ன் தோன்றும். தம்பதிகளில் யாராவது ஒருவருக்கு பிரச்சி னை என்றால் அதை கனிவான அணுகுமுறை மூலம் முடிவுக்கு கொண்டு வந்து விடலாம். இந்த நேரங்களில் பொறுமையான மன நிலையும் முக்கியம்.

விதிகளை மீறும் வாகனங்களுக்கு ஸ்பாட் ஃபைன் உயர்வு


சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டுனர்களுக்கு உடனடியாக விதிக்க‍ப்படும் ஸ்பாட் ஃபைன் தொகை  உயர்த்த‍ப்படுகிறது.
அதன் விவரம்
குற்ற‍ங்கள் – புதிய அபராத தொகை
ஹெல்மெட் இல்லாமல் ஓட்டுவது - ரூ.100 முதல் ரூ.300
அனுமதியின்றி வாகனங்களுடன் குறுக்கிடுவது  - ரூ.100
இன்சூரன்ஸ் இல்லாத வணிக ஆகனங்கள் – ரூ.1,000 (முதல் தடவை) – ரூ.1,000 (2ஆவது தடவை)
இன்சூரன்ஸ் இல்லாத கார் - ரூ.700 முதல் ரூ.1,000 வரை
இன்சூரன்ஸ் இல்லாத இரு சக்க‍ர வாகனம்  – ரூ.500 முதல் முறை – ரூ.1,000 2ஆவது முறை)
கூடுதல் பாரத்தை குறைக்க‍ மறுத்த‍ல் – ரூ.3,000
அதிகம் பாரம் ஏற்றுதல் – ரூ.2,000
பெர்மிட் விதிகளை மீறுதல் – ரூ.2,500 முதல் ரூ.5,000 வரை
பதிவுக்கு முன்பு வாகனத்தை ஓட்டுதல் – ரூ.2,500 முதல் ரூ5,000
வாகனத்தை மாற்றியமைத்த‍ல் – ரூ.500
அனுமதியின்றி ரேஸ் - ரூ.1000 முதல் ரூ.2000 வரை
உடல், மனதளவில் தகுதியில்லாமல் வாகனம் ஓட்டுவது - ரூ.200 முதல் ரூ.500 வரை
அதிவேகமாக வாகனம் ஓட்ட‍க் காரணமாக இருப்ப‍து – ரூ.300 முதல் ரூ.500 வரை
அதிவேகமாக ஓட்டுவது – ரூ.400 முதல் முறை – ரூ.1000 2ஆவது முறை
ந‌டத்துனர் உரிமம் இல்லாமல் விதிமீறல்கள் - ரூ.100
ஓட்டுநர் உரிமம் இல்லாமல் விதிமீறல்கள் - ரூ.500
சட்ட‍த்திற்கு முரணாக வாகனம் ஓட்டுதல் – ரூ.500
வாகனம் ஓட்ட‍த் தெரியாமல் ஓட்ட‍ அனுமதி – ரூ.500
த‌வறான தகவல் காவல்துறையிடம் கூறுதல் – ரூ.500
கால்துறையிடம் தகவல் தர மறுத்த‍ல் – ரூ.500
ஆளில்லா ரயில்வே பாதையில் செல்லுதல் - ரூ.100 முதல் ரூ.300
லைசென்ஸ், இன்சூரன்ஸ், எஃப்.சி இல்லாமல் ஓட்டுவது - ரூ.100 முதல் ரூ.300
பைக்கில் 3 பேர் செல்லுதல் – ரூ.100 முதல் ரூ.300 வரை
லைசென்ஸ் பெறாமல் ஓட்டுதல் – ரூ.100 முதல் ரூ.300 வரை
ஓட்டுநர் அருகில் அமர வைத்த‍ல் – ரூ.100
வாகனத்தின் மேற்கூரையில் பயணம் – ரூ.100 முதல் ரூ.300 வரை
அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றுதல் – ரூ.100 முதல் ரூ.300 வரை
பொதுமக்க‍ளுக்கு இடையூறாக வாகனத்தை நிறுத்துதல் – ரூ.100 முதல் ரூ.300 வரை
கட்டாய விதிகளை மீறுதல் – ரூ.100
போக்குவரத்து குறியீடுகளை சேதப்படுத்துதல் – ரூ.100 முதல் ரூ.300 வரை
வாகனத்தின் உரிமையாளர் பெயர் மாற்றாமல் இருத்த‍ல் ரூ.100 முதல் ரூ.300 வரை
வெளிமாநில வாகனங்கள் 12 மாதங்களுக்குள் மறு பதிவு செயயாமல் இருத்த‍ல் - ரூ.100 முதல் முறை) ரூ.300 (2ஆவது முறை)
வாகனப் பதிவு புதுப்பிக்காமல் இருத்த‍ல் - ரூ.100 (முதல முறை) ரூ.300 (2ஆவது முறை)

வாழ்வை மாற்றும் `நட்பு’!

Posted On Jan 31,2012,By Muthukumar


`ஒரு நல்ல நண்பன் இருந்தாலும் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்' - ஆங்கிலப் பழமொழி.
`அன்பாக இரு`. அனைத்து மதங்களின் போதனை இது. அன்புடன் இருப்பது என்பது பொறுப்புடன் கூடிய ஒரு முடிவு. இன்றைய நட்புகளை எடை போட்டால் பெருமூச்சுதான் பெரிதாய் வரும். `உல்லாசத்துக்காக ஒன்று சேர்ந்தவையே நட்பாக இருக்கின்றன' என்ற ஒருவரின் விமர்சனம் இன்றைய நட்புலகத்துக்கு வெகுவாகப் பொருந்தும்.
இன்று பெரும்பாலானவர்களின் அன்பு பாரபட்சம் பார்த்தே ஏற்படுகிறது. தேவையானபோது தொடர்பு கொள்வதும், தேவைக்காக பழகுவதும், கூடிப் பொழுதுபோக்குவதுமே நட்பென்று புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நிஜத்தில் அது நட்புமல்ல, அன்புமல்ல, வெறும் சுயநலமே!
"பிறரைப் பார்த்து நீ புன்னகைப்பது கூட ஒரு அறச்செயல்'' என்று நபிகள் நாயகம் சொல்கிறார். ஆனால் வாய்விட்டுச் சிரித்தாலோ, அனைவரிடமும் சிரித்துப் பழகினாலோ சமூக வழக்கில் தப்பாய்ப் பார்க்கும் கண்ணோட்டம் பரவி இருக்கிறது. அப்படி இருக்கும்போது நாமே வலியவந்து எல்லோரிடமும் சிரித்துப் பழகி தொடர்ந்து அன்புறவில் ஈடுபடுவது சாத்தியமற்ற ஒன்றுதான். இருந்தாலும் நாம் எத்தனை பேருடன் நட்புறவுடன் இருக்கிறோமோ, அதுவே நாம் அர்த்தமுள்ள வாழ்வு வாழ்ந்ததற்கான அடையாளம்.
`என்னை நேசிப்பவரை நான் நேசிப்பேன், எனக்கு உதவி செய்தவருக்கு நான் உதவி செய்வேன்' என்பதுவே பலரின் எழுதப்படாத அன்பு இலக்கணம். பழிக்குப் பழி என்பதற்கும், இதற்கும் வித்தியாசமே இல்லை.
"மற்ற எல்லோருமே வெளியே செல்லும்போது உள்ளே வருபவன் தான் உண்மையான நண்பன்'' என்று அறிஞர் டாக்டர் பில் மெக்கிராவ் சொல்வார். ஆமாம், உங்களிடம் எதைஎதையோ எதிர்பார்த்துப் பழகியவர்கள் எல்லாம் உங்களிடம் ஏதுமில்லை என்று அறிந்து விலகிச் செல்லும்போது, உங்களுடன் கரம் கோர்க்க, உங்களின் துயர் போக்க வருபவனே உண்மையான நண்பன் ஆவான். இதைத்தான் "இடுக்கண் களைவதே நட்பு'' என்று வள்ளுவர் இலக்கணப்படுத்துகிறார்.
நீங்கள் நட்பு நிறைந்தவரா? என்பதை சோதிக்க உங்களை நீங்களே கேட்டுக் கொள்ள வேண்டிய சில கேள்விகள்...
என்னிடம் எதுவுமே சரியில்லை என்கிறபோதும் அணுகிப் பேசும் நண்பனை பெற்றிருக்கிறேனா?
ஒத்துப்போகாத விஷயங்களின்போது அவனுக்கு தனித்தன்மை இருப்பதை ஆமோதிக்கிறேனா?
வருத்தத்தில் இருக்கும் நண்பனின் சூழலை சமாளிக்க எனக்குத் தெரிந்திருக்கிறதா?
நண்பனின் சில பழக்கங்கள் பிடிக்காதபோது அதைப்பற்றி அவனிடம் வெளிப்படையாக பேசுகிறேனா?
தேவையென்றால் நண்பனிடம் தயக்கமின்றி உதவி கேட்கிறேனா? உதவிக்கு நன்றி கூறுகிறேனா?
நண்பனின் நம்பிக்கையை சிதைக்கும் வகையில் நடக்கிறேனா?
நண்பன் ஒரு புதிய நண்பனைச் சந்திக்கும்போது, நம் நட்புக்கு இடையூறு வந்துவிட்டது என்று எண்ணுகிறேனா?
கடைசி இரு கேள்விகளைத் தவிர மற்ற கேள்விகளுக்கு `ஆம்' என்ற பதில் வராவிட்டால் நீங்கள் உண்மையான நண்பனை அடையவோ, உண்மையான நண்பனாக மாறவோ இன்னும் நிறைய பயணிக்க வேண்டும்.
உங்கள் நட்புறவை பரிசீலிக்க விரும்பினால் உங்கள் வாழ்வின் முக்கியமான 3 உறவுகளை பட்டியலிடுங்கள். அவர்கள் ஏன் உங்களுக்கு முக்கியமானவர்கள்? அவர்களுக்கு அந்த விசேஷ இடத்தைப் பெற்றுத் தந்த குணங்கள் என்ன? அவர்களின் கஷ்டங்களைப் போக்க நான் என்ன செய்ய தயாராக இருக்கிறேன்? என்று பட்டியலிடுங்கள். அவர்களின் சிறப்பு குணங்கள் உங்களுக்கு ஏற்படவும், அதே குணத்துடன் பிறருடன் நேசமாகப் பழகவும் முயற்சி செய்யுங்கள்.
ஒருவரோடு ஒருவருக்கு உள்ள உறவில் மட்டுமே நாம் முழுமையாக நாமாக இருக்கிறோம். நாமிலிருந்து பிரிந்த `நான்' அழிந்து விடும். அப்படியென்றால் நட்பு எப்படி இருக்க வேண்டும் என்று கேட்கிறீர்களா? முகம் மலர பேசுவதல்ல, அகம் மலர பழகுவதே நட்பு என்கிறார் வள்ளுவர். ஒருவனுக்கு எப்படிப்பட்ட நண்பன் தேவை என்பதை ஆங்கிலக் கவிதை ஒன்று இப்படி வரையறுக்கிறது...
"தன் மனத்தை அப்படியே வெளிப்படுத்த முடிந்தவன்;
எப்போது வாயை மூட வேண்டும் என்று அறிந்தவன்;
அன்புடன் உணவையும், நல்ல நகைச்சுவைகளையும், சூரிய அஸ்தமனத்தையும் பகிர்ந்து கொள்பவன்;
உங்களுடன் பெரியவனாகவோ, சிறியவனாகவோ நடிக்காமல் தோழமையுடன் இருப்பவன்;
நீங்கள் நீங்களாகவே இருக்க அனுமதிப்பவன் எவனோ அப்படிப்பட்ட நண்பனே உங்களுக்குத் தேவை''
நட்பு பேணுங்கள் நல்லவையெல்லாம் கூடும்!

மூளையைக் காக்கும் உணவுக் கட்டுப்பாடு!

Posted On Jan 31,2012,By Muthukumar
குறைவாகச் சாப்பிடுவது, மூளையை இளமையோடு வைத்திருக்கும் என்கிறார்கள், இத்தாலி விஞ்ஞானிகள்.
கட்டுப்பாடான உணவு முறையால் நடைபெறும் ஒரு மூலக்கூறுச் செயல்பாடு, மூளை முதுமை அடைவதில் இருந்து காப்பாற்றுகிறது என்கிறார்கள் இவர்கள்.
இதுதொடர்பாக அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமி இதழில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், எலிகள் மீது செய்யப்பட்ட ஆய்வு ஒன்று விவரிக்கப்பட்டிருக்கிறது.
அதாவது, எலிகள் வழக்கமாகச் சாப்பிடும் உணவு அளவில் 70 சதவீதம் மட்டுமே அவற்றுக்கு வழங்கப்பட்டது. கலோரி குறைந்த அந்த உணவு, சி.ஆர்.ஈ.பி.1 என்ற புரத மூலக்கூறைத் தூண்டுவதும், அதன் மூலம், மூளையின் ஆயுள் நீட்டிப்பு மற்றும் நல்ல செயல்பாட்டுடன் தொடர்புடைய பல்வேறு ஜீன்களை செயல்படச் செய்வதும் விஞ்ஞானிகளால் கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது.
``எங்களின் நோக்கமே, சி.ஆர்.ஈ.பி.1-ஐ செயல்படச் செய்வதற்கான வழியைக் கண்டுபிடிப்பதுதான். உதாரணமாக, ஏதாவது மருந்தின் மூலம் அதைச் சாதிக்கலாம் என்று நினைக்கிறோம். அதன் மூலம், கட்டுப்பாடான உணவுமுறை இன்றியே மூளையை இளமையாக வைத்திருக்கலாம்'' என்கிறார், இந்த ஆய்வில் ஈடுபட்டவர்களில் ஒருவரான ரோமைச் சேர்ந்த விஞ்ஞானி கியாவாம்பட்டிஸ்டா பானி.
கட்டுப்பாடான உணவு முறைக்கு உட்படுத்தப்படும் எலிகளுக்கு நல்ல நினைவுத்திறன், குறைவான ஆக்ரோஷம், அல்சைமர் என்ற ஞாபகமறதி வியாதி ஏற்படுவது தவிர்ப்பு போன்ற அம்சங்கள் காணப்படுவதை ஏற்கனவே விஞ்ஞானிகள் கண்டுபிடித்
திருக்கின்றனர்.
இதற்கிடையில், உணவுமுறை தொடர்பான மற்றொரு கண்டுபிடிப்பையும் விஞ்ஞானிகள் நிகழ்த்தியிருக்கிறார்கள். அதாவது, கணையப் புற்றுநோய் ஏற்படாமல் தவிர்க்க விரும்புவோர், செலினியம், நிக்கல் செறிந்த உணவைச் சாப்பிட வேண்டும் என்கிறார்கள்.
இதுதொடர்பான புதிய ஆய்வில், உடம்பில் செலினியம், நிக்கல் தடயம் அதிகமாகக் காணப்படும்போது அது அபாயகரமான கணையப் புற்றுநோயைத் தடுக்கிறது. அந்த நோய்க்கு எதிராக இவை ஒரு தடுப்புக் கவசம் போலச் செயல்படுகின்றன என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.

நிறம் ஏ(மா)ற்றுதல் அட அதாங்க! “ஹேர் கலரிங்”


சிலர், தங்கள் கூந்தலுக்கு அழகு சேர்ப்ப தற்காகவும், சிலர் தங்களின் நரை முடிகளை மறைப்பதற்காகவும் ஹேர் கலரிங் செய்கின்றனர். ஒருவரின் தோ ற்றத்தை வேகமாக மாற்று வதற்கான சிறந்த வழி ஹேர் கலரிங். தற்போது ஹேர் கலரிங், பலதரப்பட்ட கூந் தல் தன்மைகளுக்கு ஏற்ப, பல்வேறு வண் ணங்கள் மற்றும் தரங்களில் கிடைக்கி ன்றன.
“ஹேர் கலரிங்’ வகைகள்:
ஹேர் கலரிங் செய்வதற்காக பயன்படு த்தப்படும் வண்ணங்கள், திரவம், பவுடர், ஆயில் கிரீம்கள் மற்றும் ஜெல்கள் உட்பட பல வகைகளில் கிடைக்கிறது. நிரந்தர ஹேர் கல ரிங் செய்வதற்காக ஜெல் மற்றும் பிற பொருட்கள் ஆகியவையும், தற்காலிக மற்றும் குறிப்பிட்ட காலம் நிரந்தரமாக இருக்கும் செமி- பெர்மனன்ட் கலரிங் செய்வதற்காக, மஸ்காரா, கிரே யான்ஸ் மற்றும் வண்ண கூந்தல் ஸ்பிரே க்கள் ஆகியவை பயன்படுத்தப்படுகின்ற ன.
கூந்தலின் நீளத்தை பொறுத்து, அதற்கு ஹேர் கலரிங் செய்வதற்கான செலவும் ஏற்படும். குட்டையான மற்றும் நடுத்தர அளவிலான கூந்தல் வகைகளுக்கு, “ஹேர் கலரிங்’ செய்தால், மிக அழகாக தோற்றமளிக்கும்.
“ஹேர் கலரிங்’ செய்பவர்கள், நிரந்தமாக செய்து கொள்ளுவதா அல்லது தற்காலிக மாக செய்து கொள்ளுவதா என்பதை முதலில் தீர்மானித்துக் கொ ள்ள வேண்டும். நரை முடியை மறைப்பதற்காக ஹேர் கலரிங் செய்ய விரும்புபவர்கள், நிரந்தமான ஹேர் கலரிங் முறையை தேர்ந்தெடுத்து க் கொள்ளலாம். மேலும், ஒட்டுமொத்த கூந்தலையும் ஹேர் கலரிங் செய்து கொ ள்ளுவதா அல்லது ஹை லைட் மட்டும் செய்து கொள்ளுவதா என்பதையும் தீர் மானித்துக் கொள்ள வேண்டும்.
ஹேர் கலரிங் முறைகள்:
ஹைலைட்டிங், ஸ்ட்ரீக்கிங், பிராஸ்டிங், பிங்கர் பெயின்டிங் ஆகியவை ஹேர் கல ரிங் செய்யப்படும் பல்வேறு முறைகள். ஆனால், இன்றைய நவீன இளைஞர்கள் பொதுவாக, ஹை லைட்டிங் மற்றும் ஸ்ட்ரீக் கிங் ஆகியவற்றையே விரும்புகின்றனர். கூந்தல் பல பாக ங்களாக பிரிக்கப்பட்டு வண்ணங்கள் பூசப்படுவதற்கு “ஹை லை ட்டிங்’ என்று பெயர். பிரவுன் மற்றும் கோல்டன் நிறங்கள், மாநிற சருமத்தினருக்கும் சிவப்பு நிறம், நல்ல வெண்மையான சருமத்தின ருக்கும் பொருத்தமாக இருக்கும் என, நிபுணர்கள் பரிந்துரைக்கின்ற னர்.
ஹேர் கலரிங் கூந்தலில் நீண்ட நாட் கள் இருக்க வேண்டும் என விரும்பு கிறவர்கள், காப்பர் அல்லது சிவப்பு நிறம் ஏ(மா)ற்றுதல் செய்வதை முடிந்த வரை தவிர்க்கலாம். ஏனெ ன்றால், இவை விரைவில், வெளி றிவிடும் தன்மை கொண்டது. ஹேர் கலரிங் செய்த பின், அதற்கென தகுந்த ஷாம்பு மற்றும் கண்டிஷன களையே பயன்படுத்த வேண்டும். ஹேர் கலரிங் செய்த பின், எவ் வாறு கூந்தலை பராமரிப்பது என்பதற்கு, கூந்தல் சிகிச்சை நிபுணரிடம் ஆலோச னை பெற்று செயல்படலாம். ஹேர் கலரிங் செய் வதற்கு, பயன்படுத்தும் அழகு சாதனப் பொ ருட்கள் நல்ல தரமானதுதானா என்பதை உறுதிப்படு த்திக் கொள்ளுவது நல்லது.
நிரந்தரமான, வளமான தலைமுடி வேண்டு ம் என விரும்புவோர், “ஹேர் கலரிங்’ ஆசை க்கெல்லாம் அடிபணியக் கூடாது.

நாடுகளும் அதன் தலைநகரங்களும்


1.அங்கோலா — லுவாண்டா. (Luvanda)
2.அசர்பைஜான் — பாகூ.
3.அமெரிக்கா — வாஷிங்டன் டி.சி
4.பியூர்டோரிகோ — சான்ஜிவான்
5.குவாம் — அகானா
6.வடக்கு மரியானாத் தீவுகள் — சாய்பான்.
7.சமோவா — பாகோ
8.வெர்ஜின் தீவுகள் — சார்லோட்டா
9.அயர்லாந்து — டப்ளின். (Dublin)
10.அர்மீனியா — ஏரவன். (Yereven)
11.அர்ஜென்டீனா — போனஸ் அயர்ஸ். (Buenos aires)
12.அல்பேனியா — டிரானா. (Tirana)
13.அல்ஜீரியா — அல்ஜீயர்ஸ். (Algiers)
14.அன்டோரா — அண்டோரா லா வெல்லா. (Andorra La velle)
15.ஆப்கானிஸ்தான் — காபூல். (Kabul)
16.ஆண்டிகுவா மற்றும் பார்புடா — செயின்ட் ஜோன்ஸ். (saint Johns)
17.ஆஸ்திரியா — வியன்னா. (Vienne)
18.ஆஸ்திரேலியா — கான்பெர்ரா. (Canberra)
19.இத்தாலி — ரோம். (Rome)
20.இந்தியா — புதுடில்லி. (New Delhi)
21.இந்தோனேசியா — ஜகார்த்தா. (Jakartha)
22.இராக் — பக்தாத். (Baghdad)
23இரான் — டெஹ்ரான். (Teheran)
24.இலங்கை — கொழும்பு. (Colombo)
25.தமிழீழம் — திருகோணமலை. (Tringo)
26.இஸ்ரேல் — ஜெருசலேம். (Jerusalem)
27.ஈக்வாடார் — க்யுடோ. (Quito)
28.ஈக்வடோரியல் கினியா — மலபோ. (Malabo)
29.உக்ரைன் — கீவ். (Kive)
30.உகண்டா — கம்பாலா. (Kampala)
31.உருகுவே — மோண்டேவிடியோ. (Montevodeo)
32.உஸ்பெகிஸ்தான் — தாஷ்கண்ட். (Tashkent)
33.எகிப்து — கெய்ரோ. (Cairo)
34.எத்தியோப்பியா — அடிஸ் அபாபா. (Addis Ababa)
35.எரித்ரியா — அஸ்மாரா. (Asmara)
36.எல்சால்வடார் — சன்சால்வடார். (San Salvador)
37.எஸ்தோனியா — டால்லின். (Tallin)
38.ஐக்கிய அரபுக் குடியரசுகள் — அபுதாபி. (Abudhabi)
39.ஐவரி கோஸ்ட் — யமெளஸ்செளக்ரோ. (Yamoussoukro)
40.ஐஸ்லாந்து — ரெய்க்ஜாவிக். (Reykjqvik)
41.ஓமன் — மஸ்கற். (muscut)
42.கத்தார் — தோஹா. (Doha)
43.கம்போடியா — போனெம்பென்க். (Phnom Penh)
44.கயானா — ஜார்ஜ் ரவுன். (geroge Town)
45.கனடா — ஒட்டாவா. (Ottawa)
46.கஸகஸ்தான் — அல்மாதி. (Almathy)
47.காங்கோ — பிரசஸ்சஸாவில்லே. (Brazzaville)
48.காங்கோ (முன்னாள் ஜயர்) — கின்ஷாஸா. (Kinshasa)
49.காபோன் — லிப்ரவில்லே. (Libreville)
50.காமரூன் –யாவூண்டே. (Yaounde)
51.கமரோஸ் — மொரோனி. (Moroni)
52.காம்பியா — பன்ஜீல் . (Banjul)
53.கானா — அக்ரா. (Accra)
54.கியூபா — ஹவானா. (Havana)
55.கிர்கிஸ்தான் — பிஸ்ஹேக். (Biskek)
56.கிரிபாடி — தராவா. (Tarawa)
57.கிரீஸ் — ஏதென்ஸ். (Athens)
58.கிரெனடா — செயின்ட் ஜார்ஜஸ். (Saint Geroges)
59.கினியா — கோனக்ரி. (Conakry)
60.கினியா_பிஸ்ஸெல் — பிஸ்ஸெல். (Bissau)
61.குரோசியா — சியாக்ரெப். (Zagreb)
62.குவைத் — குவைத். (Kuwait)
63.கென்யா — நைரோபி. (Nairobi)
64.கேப்வெர்ட் — பிரய்யா. (Praia)
65.வடகொரியா — பியோங்யாங். (Pyongyang)
66.தென்கொரியா — சியோல். (Seoul)
67.கொலம்பியா — பொகோடா. ( Bogota)
68.கோஸ்டாரிகா — சான் ஜோஸ். (San Jose)
69.கெளதமாலா — கெளதமாலா நகர். (Gautemala City)
70.மேற்கு சமோவா — அபியா. (Apia)
71.சஹ்ராவி அரபுக் குடியரசு — எல் _ அலயுன். (El_ Alayun)
72.சாத்ட் — இன்ட்ஜாமெனா. (N`Djamena)
73.சாம்பியா — லுசாகா.( lusaka)
74.சாலமன் தீவுகள் — ஹோனியரா. (Honiara)
75.சாடோம் மற்றும் பிரின்சிப் — சாடோம். (Sao Tome)
76.சன்மரினோ — சன்மரினோ. (San Marino)
77.சிங்கப்பூர் — சிங்கப்பூர். (Singapore)
78.ஜிம்பாவ்வே — ஹராரே. (Harera)
79.சிரியா — டமாஸ்கல். (Damascus)
80.சியர்ரா லியோன் — ப்ரீரவுன். (Free Town).
81.சிலி — சாண்டியாகோ. (Santiago)
82.சீனா — பெய்ஜிங். (Beijing)
83.சுவாசிலாந்து — பாபேன். (Mbabne)
84.சுவிட்சர்லாந்து — பெர்ன். (bern)
85.சுவீடன் — ஸ்டாக்ஹோம். (Stockhalm)
86.சுரினாம் — பரமரிபோ. (Paramaribo)
87.சூடான் — கார்டூம். (Khartoum)
88.செக் குடியரசு — பராகுவே. (Prague)
89.செனகல் — .தாகர். (dakar)
90.செயின்ட்கிட்ஸ் — நெவிஸ்_ பெஸ்ஸடர். (Besseterre)
91. செயின்ட் லூசியா — காஸ்ட்ரீஸ். (Castries)
92.செயின்ட்வின்சென்ட் — கிங்ஸ்டவுன். (Kings Town)
93.சேஷெல்ஸ் — விக்டோரியா. (Victoriya)
94.சைப்ரஸ் — நிகோசியா. (Nicosia)
95.சோமாலியா — மொகடிஷூ. (Mogadishu)
96.செளதி அரேபியா — ரியாத். (Riyadh)
97.டிரினிடாப் மற்றும் டொபாகோ — போர்ட் ஆஃப் ஸ்பெயின். (Pot os Spain)
98.டென்மார்க் — கோபன்ஹேகன். (Copenhagen)
99.டொமினிகன் குடியரசு — சான்டோ டொமின்கோ. (Santo Domingo)
100.டொமினிகா — ரோஸியு. (Roseu)
101.டோகோ — லோம் (Lome)
102.டோங்கா — நுகு அலோஃபா (Nuku Alofa)
103.தாய்லாந்து — பாங்காக் (Bangkok)
104.தான்சானியா — டூடுமா (Dodoma)
105.தஜிகிஸ்தான் — துஷான்பே (Dushanbe)
106.துர்க்மேனிஸ்தான் — அஷ்காபாத் (Ashkhabad)
107.துருக்கி — அங்காரா (Ankara)
108.துனிசியா — துனிஸ் (Tunis)
109.துவலு — புனாஃபுதி (Funa Futi)
110.தாய்வான் — தைபே (Taipei)
111.தென் ஆப்பிரிக்கா — கேப்ரவுன் (cape Town)
112.நமீபியா — வின்ட்ஹோக் (Windhoke)
113.நோர்வே — ஒஸ்லோ (Oslo)
114.நிகரகுவா — மனாகுவா (managua)
115.நியூசிலாந்து — வெல்லிங்டன் (Wellington)
116.நெதர்லாந்து — ஆம்ஸ்டர்டாம் (Amsterdam)
117.நேபாளம் — காட்மாண்டு (Kathmandu)
118.நைஜர் — நியாமி (Niyamey)
119.நைஜீரியா — அபுஜா (Abuja)
120.நெளரு — யாரென் (Yaren)
121.பங்களாதேஷ் — டாக்கா (Dhaka)
123.பராகுவே — அகன்சியான் (Aguncian)
124.பல்கேரியா — சோஃபியா (Sofia)
125.பலாவ் — கோரோர் (koror)
126.பனாமா — பனாமா நகர் (Panama City)
127.பஹ்ரைன் — மனாமா (Manama)
128.பஹாமாஸ் — நஸ்ஸாவ் (Nassau)
129.பாகிஸ்தான் — இஸ்லாமாபாத் (Islamabad)
130.பாப்புவா நியூகினியா — போர்ட் மோர்ஸ்பி (Port Moreshby)
131.பார்படோஸ் — பிரிட்ஜ் ரவுன் (Bridge Town)
132.பாலஸ்தீனம் — காஸா (Gaza)
133.ஃபிரான்ஸ் — பாரிஸ் (Paris)
134.பிரிட்டன் — லண்டன் (London)
135.வடக்கு அயர்லாந்து — பெல்ஃபாஸ்ட் (Belfast)
136.ஸ்காட்லாந்து — எடின்பர்க் (Edinburg)
137.ஐஸ் ஆஃப் மேன் — டக்ளஸ்
138.அங்குய்லா — திவாலி
139.பெர்முடா — ஹாமில்டன்
140.மான்ட்செரட் — பிளைமவுத்
141.பிரேசில் — பிரேசிலியா (Brasillia)
142.ஃபிலிப்பைன்ஸ் — மணிலா (manila)
143.ஃபின்லாந்து — ஹெல்சிங்கி (helsinki)
144.ஃபிஜி — சுவா (Suwa)
145.புருண்டி — புஜீம்பரா (Bujumbura)
146.புருனை — பந்தர் செரி பெகாவன் (Bandar seri Begavan)
147.பிர்கினாஃபாஸோ –அவ்கதெளகெள (Ouagadougou)
148.பூட்டான் — திம்பு (Thimpu)
149.பெரு — லிமா (Lima)
150.பெல்ஜியம் — பிரல்ஸல்ஸ் (Brussels]
151.பெலராஸ் — மின்ஸ்க் (Minsk)
152.பெலிஸ் — பெல்மோபான் (Belmopan)
153.பெனின் — போர்டோ (Porto _ Nova)
154.பொலிவியா — லாபாஸ் (Lapaz)
155.போட்ஸ்வானா — காபோரோன் (Gaborne)
156.போர்த்துக்கல் — லிஸ்பன் (Lisbon)
157.போலந்து — வார்ஸா (Warsaw)
158.போஸ்னியா மற்றும் ஹெர்சேகோவினா — சரோஜிவோ (Sarajevo)
159.மங்கோலியா — உலன்பதார் (Ulan Bator)
160.மடகாஸ்கர் — அன்டானானாரிவோ (Antananarivo)
161.மத்திய ஆப்பிரிக்க குடியரசு — பான்குய் (Bangui)
161.மலாவி — லிலாங்வே (Lilongwe)
162.மலேசியா — கோலாலம்பூர் (Kula Lumpore)
163.மார்ஷல் தீவுகள் — மஜீரோ (Majuro)
164.மாரிடானியா — நவாக்சோட் (Nouak Chott)
165.மால்டா — வலேட்டா (Valetta)
166.மால்டோவா — சிசிநவ் (Chisinau)
167.மாலத்தீவுகள் — மஜீரோ (male)
167.மாலி — பமாகோ (Bamako)
168.மாசிடோனியா — ஸ்கோப்ஜே (Skopeje)
169.மியான்மர் — யங்கோன் (Yangon)
170.மெக்சிகோ — மெக்சிகோ நகர் (Mecixo City)
171.மைக்ரோனேஷியா — பாலிகிர் (Palikir)
172.மொரிசியஸ் — போர்ட் லூயிஸ் (Port Louis)
173.மொனாக்கோ — மொனாக்கோ (Monaco)
174.மொசாம்பிக் — மொபுடோ (Maputo)
175.யூகோஸ்லாவியா — பெல்கிரேட் (Belgrade)
176.யேமன் — சனா (Sana)
177.ருமேனியா — புகாரெஸ்ட் (Bucharest)
178.ருவாண்டா — கிகாலி (Kigali)
179.ரஷ்யா — மொஸ்கோ (Moscow)
180.லக்ஸம்பார்க் — லக்ஸம்பார்க் (Luxenberg)
181.லாட்வியா — ரிகா (Riga)
182.லாவோஸ் — வியாணன்டைன் (Vientiane)
183.லிச்டென்ஸ்டெயின் — வடூஸ் (Vaduz)
184.லிதுவேனியா — வில்னியஸ் (Vilnius)
185.லிபியா — திரிபோலி (Tripoli)
186.லெசோதா — மஸெரு (Maseru)
187.லெபனான் — பெய்ரூட் (Beirut)
188.லைபீரியா — மன்ரோவியா (Monorovia)
189.வனுவது — விலா (Vila)
190.வத்திக்கன் — வத்திக்கன் நகர் (Vatican City)
191.வியட்னாம் — ஹனோய் (Hanoi)
192.வெனிசுலா — கராகஸ் (Caracas)
193.ஜப்பான் — டோக்கியோ (Tokyo)
194.ஜமைக்கா — கிங்ஸ்டன் (Kington)
195.ஜார்ஜியா — திபிலிசி (Tbillisi)
196.ஜிபூடி — ஜிபூடி (Djibouti)
197.ஜெர்மனி — பேர்ளின் (Berlin)
198.ஜோர்டான் — அம்மான் (Amman)
199.ஸ்பெயின் — மாட்ரிட் (Madrid)
200.ஸ்லோவாகியா — பிராட்டிஸ்லாவா (Bratislava)
201.ஸ்லோவேனியா — ஜூபில்ஜானா (Ljubljana)
202.ஹங்கேரி — புட்டாபெஸ்ட் (BudaBest)
203.ஹாங்காங் — விக்ரோரியா (Voctoriya)
204.ஹோண்டுராஸ் — டெகுசிகல்பா (Tegueigalpa)
205.ஹைதி — போர்ட் _ அவு _ பிரின்ஸ் (Port _ Au _ Prince)

அடிஸன் நோய்!

Posted On Jan 31,2012,By Muthukumar
அலுவலகத்தில் இருந்து வீடு வரும் அவர் சோர்ந்து காணப்படுகிறார். அலுவலகத்தில் வேலை செய்யும்போது கூடச் சோர்வு ஏற்படுகிறது. ரத்த ஓட்டம் குறைகிறது. சில நேரங்களில் வாந்தியும் ஏற்படுகிறது. தோல் வறண்டு, நிறம் மாறுகிறது. சில நாட்களாகத் தனது உடலில் வலிமை குறைந்த மாதிரி உணர்கிறார்.
இவை எல்லாவற்றுக்கும் என்ன காரணம் என்று கேட்டு மருத்துவரிடம் செல்கிறார். அப்போதுதான், அட்ரினல் சுரப்பி சரியாகச் சுரக்காமல் போனதால்அவருக்குப் பிரச்சினை ஏற்பட்டிருப்பதாக மருத்துவர் கூறுகிறார்.
இந்த நோய்க்கு என்ன காரணம் என்பதை அடிஸன் என்பவர் முதன்முதலில் கண்டறிந்து வெளியிட்டார். அட்ரினலின் சுரப்பியில் பாதிப்பு ஏற்பட்டு, அதன் சுரப்புத் தன்மை குறைவதால் இப்பிரச்சினை ஏற்படுகிறது என்று அவர் தெரிவித்தார். அதனால் `அடிஸன் நோய்' என்று இதற்குப் பெயர் சூட்டப்பட்டது.
அடிஸன் நோய் 20 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஏற்படுகிறது. இது ஆண்களைத்தான் பெரும்பாலும் பாதிக்கும். நோயாளிகளுக்குப் பலவீனம், தோல் வறண்டு போதல், சோர்வு முதலியவை உண்டாகும். பிறகு சிறிது சிறிதாக அது அதிகரித்துக்கொண்டே போகும். உற்சாகம் குறையும். வளர்ச்சி இல்லாமல் மெலிந்துவிடுவார். தசைகள் ஒடுங்கிவிடும். கையில் `ஜில்'லென்று ஆகிவிடும்.
ஆரம்ப நிலையாக இருந்தால், சாதாரணமாக உணவில் உப்பைக் குறைத்துச் சாப்பிட்டாலே போதும். விரைவில் குணம் ஏற்பட்டுவிடும். டாக்டர் நிர்ணயிக்கும் அளவில் கார்ட்டிசோன் மாத்திரைகளை உட்கொண்டாலே போதும்.
ஆனால் சோர்வடையும் அனைவருமே தங்களுக்கு அடிஸன் நோய் ஏற்பட்டிருப்பதாகக் கருதக் கூடாது. இது ஒரு சிலருக்கு மட்டுமே ஏற்படக் கூடியது. எனவே மருத்துவரை நாடாமல் நோயை முடிவு செய்துவிடக் கூடாது.