Thursday, 5 July 2012

ரெடிமேட் இதய உயிரணுக்களை கொடுக்கிறது புதிய ஸ்டெம் செல் ஆய்வு

Posted On July 05,2012,By Muthukumar
ஒவ்வொரு வருடமும் இதய நோய்கள் பல லட்சம் உயிர்களை பறித்துக்கொள்கின்றன. அதேசமயம், இதய நோய்களுக்கான சிகிச்சைகள் மற்றும் மருந்துகளைக் கண்டறியும் ஆய்வு முயற்சிகளுக்காக பல ஆயிரம் கோடிகள் ஒருபுறம் செலவாகிக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனாலும் இதுவரை இதய நோய்களுக்கான முழுமையான தீர்வு ஒன்றை காண முடியவில்லை.
இதயம் துடிப்பதற்கு காரணமான `கார்டியோ மயோசைட்' உயிரணுக்களை இதய நோய்கள் பாதிக்கின்றன. விளைவு, கார்டியோ மயோசைட் உயிரணுக்கள் இறந்து போகின்றன. இதனால் இதயத்தின் வேலையான ரத்த ஓட்டம் தடைபடுகிறது. இறுதியாக மாரடைப்பு ஏற்பட்டு இறப்பு நிகழ்கிறது.
இதனை தடுக்க அல்லது தவிர்க்க இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று, இதய நோய்கள் எப்படி ஏற்படுகின்றன என்பதை பல்வேறு ஆய்வுகள் மூலம் கண்டறிந்து, அதற்கான மருந்துகள் மற்றும் சிகிச்சைகளை உருவாக்குவது. மற்றொன்று, பாதிப்படைந்த அல்லது இறந்துபோன கார்டியோ மயோசைட் உயிரணுக்களுக்கு மாற்றாக புதிய உயிரணுக்களை இதயத்துக்குள் பொருத்தி மீண்டும் அதனை இயங்கச் செய்வது. ஆனால் இந்த இரண்டு வழிகளுக்குமே மாற்று கார்டியோ மயோசைட் உயிரணுக்கள் அவசியம்.
இந்த பிரச்சினைக்கு செயற்கை ஸ்டெம் செல்கள் மூலம் ஒரு தீர்வு கண்டறியப்பட்டது. அதாவது, செயற்கை ஸ்டெம் செல்களில்இருந்து இதய உயிரணுக்களான கார்டியோ மயோசைட்கள் உற்பத்தி செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டன. ஆனால் இந்த முயற்சியில் உள்ள பல்வேறு சிக்கல்கள் காரணமாக முழுமையான வெற்றி கிட்டவில்லை என்பதுதான் துரதிஷ்டம்.
உதாரணமாக, பல்வேறு வகையான வளர் ஊக்கிகள் மற்றும் புரதங்கள் கொண்டு, செயற்கை ஸ்டெம் செல்கள் கார்டியோ மயோசைட்களாக மாற்றப்பட்டாலும், இறுதியில் 30 சதவீதம் கார்டியோ மயோசைட்களே உற்பத்தியாகின்றன. மேலும், இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் கார்டியோ மயோசைட்கள், ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருப்பதும் இதிலுள்ள ஒரு முக்கியமான பிரச்சினை.
இதுபோன்ற சிக்கல்கள் காரணமாக, இதய நோய்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதும், கார்டியோ மயோசைட் மாற்று அறுவை சிகிச்சை செய்வதும் இதுவரை முழுமையாக சாத்தியப்படவில்லை.
ஆனால், `கவலை வேண்டாம், இனியெல்லாம் சுகமே' என்று சொல்லாமல் சொல்கிறார் அமெரிக்காவின் விஸ்கான்சின் மேடிசன் பல்கலைக்கழக பேராசிரியர் ஷான் பாலிசெக்.
அதற்கு காரணம், அவருடைய புதிய கண்டுபிடிப்பான, ஸ்டெம் செல்களில்இருந்து ரெடிமேட் கார்டியோ மயோசைட்களை உற்பத்தி செய்யும் சுலபமான, விலை குறைவான தொழில்நுட்ப உத்திதான்.
ஸ்டெம் செல் ஆய்வு என்பது ஒரு காஸ்ட்லியான சமாச்சாரம் மட்டுமல்லாது, மிக மிக சர்ச்சையானதும் கூட. ஏனென்றால், மனித சிசு ஸ்டெம் செல்களை ஆய்வுகளுக்காக பயன்படுத்துவது பல நாடுகளில் தடை செய்யப்பட்டு உள்ளது. ஆனால் ஒரு நோயாளியின் ஸ்டெம் செல்களைக் கொண்டு அவருடைய நோயை குணப்படுத்துவதற்கான ஆய்வுகள் மற்றும் சிகிச்சைகளை செய்து கொள்ள அனுமதி உண்டு.
இத்தகைய சூழலில், ஒரு நோயாளியின் ஸ்டெம் செல்களை எடுத்து, அவற்றை சோதனைக்கூடத்தில் வைத்து இயற்கையான கார்டியோ மயோசைட்களைப் போன்று செயல்படும் திறனுள்ள இதய உயிரணுக்களாக மாற்றியிருப்பதுதான், இந்த புதிய ஸ்டெம் செல் உத்தியின் விசேஷமே என்கிறார் பேராசிரியர் ஷான் பாலிசெக்.
ஸ்டெம் செல்களிலுள்ள `விண்ட்' எனும் ஒரு குறிப்பிட்ட ரசாயன சமிக்ஞையை, இரு வகையான வேதியியல் பொருட்களைக் கொண்டு குறிப்பிட்ட கால புள்ளிகளில் நிறுத்தி, பின் மீண்டும் இயங்கச் செய்வதன் மூலமே ஸ்டெம் செல்கள் கார்டியோ மயோசைட்களாக உருமாறுகின்றனவாம்.
இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் சுமார் 80 சதவீதம் கார்டியோ மயோசைட்களை சுலபமாகவும், குறைவான செலவிலும் உற்பத்தி செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
சுலபமாக உற்பத்தி செய்யப்படக் கூடிய இந்த கார்டியோ மயோசைட்கள், இதய நோய்களுக்கான எண்ணற்ற புதிய மருந்துகளை பரிசோதிக்கவும், பழுதடைந்த இதயத்திலுள்ள செயலிழந்த கார்டியோ மயோசைட்களுக்கான மாற்று உயிரணுக்களாகவும் பெரிதும் உதவுகின்றன என்கிறார்கள் இதய வல்லுனர்கள்.
இம்மாதிரியான மருத்துவ முன்னேற்றங்களை பார்க்கும் போது எதிர்காலத்தில், `கார்டியோ மயோசைட் வாங்கலையோ, கார்டியோ மயோசைட்டு' என்று தெருவில் கூவிக் கூவி விற்றுக்கொண்டு வரும் அளவுக்கு இதய உயிரணுக்கள் மலிவாக கிடைக் கும் போலிருக்கிறது என்றே நினைக்கத் தோன்று கிறது.

Sunday, 1 July 2012

சுடுநீரினால் விந்தணு உற்பத்தி பாதிக்கும்

படுக்கை அறையில் உறவு கொள்வதை விட பாத்ரூம், கார், கிச்சன் என விதவிதமான வித்தியா சமான இடங்களில் உறவு கொ ள்பவர்கள் அதிகம் இருக்கின்ற னர். பெரும்பாலோனோர் சுடு நீர் பாத் டப்பில் உறவில் ஈடு பட விரும்புகின்றனர் இதற்கு காரணம் அங்கு உறவு கொண் டால் காண்டம் உபயோகிக்க வேண்டியதில்லை என்ற நம்பி க்கைதான். ஆனால் இது தவறான கருத் து என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
 
சுடுநீராக இருந்தாலும், குளிர்ச்சியான நீராக இருந்தாலும் விந்தனு பெண்ணுறுப் பின் வழியாக செல்வதை முறையான கருத்தடை சாதனத்தைத் தவிர வேறு எதுவுமே தடு க்க முடியாது என்கின்றனர் மருத்துவர்க ள். மேலும், ஆணுறுப்பு மற்றும் பெண்ணு றுப்பின் வழி யாக பரவும் நோய்களைத் தடுக்கக் கூடிய தன்மையும் சுடு நீருக்குக் கிடையாது. சுடுநீரில் உறவு கொண்டாலு ம் கட்டாயம் ஆணு றை அணியவேண்டும் என்று கூறும் மருத்துவர்கள் சுடுநீரினால் விந்தணு உற்பத்தி பாதிக்கும் என்று அதி ர்ச்சி தகவலையும் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் பல்வேறு காரணங்களினா ல் ஆண்களின் விந்தணு உற்பத்தி பாதிப் பிற்குள்ளாகிறது. பெண்களுக்கும் கரு முட்டை உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இத னால் பெரும்பாலோனோர் மலடாகும் சூழ்நிலை ஏற்படுகிறது. என வே ஆண்களின் விந்தணுக்களை பாதிக்கும் காரணிகளை மருத்து வர்கள் பட்டிய லிட்டுள்ளனர் தெரிந்துக்கொள்ளுங்கள்.
ஓவர் சூடு ஆகாது
விந்தணு உற்பத்திக்கும், உடல் சூட்டுக்கு ம் தொடர்புள்ளது. உடல் சூடு அதிகரிக்கும் போது விந்தணு உற்பத்தி பாதிக்கப்படும். நமது உடலின் பிற பகுதிகளில் உள்ள வெப்ப நிலையைவிட விந்துப் பையின் வெப்ப நிலை 5 டிகிரி குறைவாகவே இருக்கும். அதற் கேற்றபடி விந்துப் பையானது தனது வெப்ப நிலையை சரிவிகி த நிலையில் வைத்துக் கொள்ளும். அங்கு வெப்பம் அதிகரி க்கும் போது உற்பத்தி நிச்சயம் பாதிக்கும் என்கிறார்கள் டாக்டர்கள் .
மனித உடலுக்கு என்று குறிப்பிட்ட வெப்பநிலை அவசியம். அதற் கேற்ப தான் மனித உடலானது படைக்கப்பட்டிருக்கிறது. ஆண்க ளின் உடலில் அதிக சூடு ஏறினால் விந்தணு உற்பத்தி பாதிக்குமா ம். எனவேதான் சூடு நிறைந்த பாத் டப்பில் அதிக நேரம் குளிப்ப தோ, உறவில் ஈடுபடுவதோ கூடாது என்கின்றனர் மருத்துவர்கள். இது விந்தணு உற்பத்தியை கண்டிப் பாக பாதிக்குமாம். அதேபோல் ஆண்களுக்கு அதிகமாக காய்ச்சல் ஏற்பட்டிருக்கும் நேரத்திலும் உற வில் ஈடுபடக்கூடாதாம்.
இறுக்கமான‌ உடை
ஆண்கள் அணியும் இறுகலான பேண்ட் ஆண்மைக்கு ஆபத்தாகி றதாம். அதேபோல் டைட்டான உள்ளாடை அணிவதும் விந்தணு உற்பத்தியை பாதிக்கிறதாம். அதே போல் லேப் டாப் ஐ மடியில் வைத்து உபயோகித்தால் அதில் உள்ள கதிர்வீச்சு மூலம் விந்தணு உற்பத்தி பாதிக்கிறதாம். அதிக அளவில் செல்போன் உபயோகிப் பவர்களுக்கும்,செல்போனை பெல்ட்டில் அணிபவர்களுக்கு விந்த ணு உற்பத்தியில் குறைபாடு ஏற்படுகிறதாம்.
உடல் பருமன்
உடல் பருமனால் பாதிக்கப்பட்டாலோ விந்தணு உற்பத்தியில் பா திப்பு ஏற்படும். அதேபோ ல் மது, சிகரெட், போதை ப்பழக்கத்திற்கு அடிமை யானவர்களுக்கும் விந்த ணு உற்பத்தியில் குறை பாடு ஏற்படுகிறதாம். ஒரு சிலருக்கு ஹார் மோன் பிரச்சினைகளாலும், மர பணு சிக்கல்களினாலும் விந்தணு குறைபாடு ஏற் பட வாய்ப்புள்ளது என்கி ன்றனர் நிபுணர்கள். மே லும் மன அழுத்தம், மனஇறுக்கம் உள்ளிட்ட காரணங்களினாலும் விந்தணு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும் என்று கூறும் மருத்துவர் கள் சரியான பரிசோதனையின்மூலம் பாதிப்பிற்கான காரணத்தை க் கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.