Friday, 20 July 2012

முதலிரவு என்றதும் பயமா ? ?

மனித வாழ்க்கையில் பாலுறவு அல்லது தாம்பத்திய உறவு என்பது அவசியமானது. அது ஒரு கலை இதை கலைநயத்துடன் அணுக வேண்டும். எனவே தான் திரு வள்ளுவர் ‘மலரினும் மெல்லி யது காமம்’ என்று கூறியுள்ளார். வரட்டுத் தனமாகவோ, கடமைக் காக அல்லது பாலுணர்வை வெறித் தனத்தோடு தணித்து கொள்வதற்காக ஈடுபடும் போது தான் அங்கே சிக்கல்கள் தொட ங்குகின்றன.
இன்று பெரும்பாலான முறையான திருமண உறவுகள் முதல் காதல் திருமணங்கள் வரை மண முறிவுகளை நோக்கி செல்லுகிறது இவ ற்றிற்கு அடிப்படை காரணம் தாம்பத்ய உறவில் உண்டாகும் பிழைகளும் குற்றங்களும் தா ன். இன்றைக்கு பாலுணர்வு தவ றாக புரிந்து கொள்ளப்படுவதா லேயே பல்வேறு குழப்பங்களும் சண்டைகளும் ஏற்பட காரண மாகிறது என்கிறது ஒரு புள்ளி விபரம்.
பதற்றம் வேண்டாம்
தாம்பத்ய உறவை பொறுத்தவரை நம்முன்னோர்கள் தெளிவான வழி காட்டலை கூறியுள்ளனர். மலரைப்போல மென்மையாக காம த்தைக் கையாளவேண்டும் என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். இந்த உளவிய ல் காரணங்களை நாம் முறையாக கடைபிடிக்கா மையால் பெரிதும் பாலுறவில் சிக்கல் தோன்றுகி றது. கணவனும் மனைவியும் உளப்பூர்வமான ஒத் துழைப்போடு ஈடுபடும்போது எங்கும் சிக்கல் தோன்றுவதில்லை. ஆனால் எங்கோ பிழை நேரும் போது உறவில் சிக்கல் தோன்றுகிற து .மேலும் மேலும் தாம்பத்ய உறவை சிக்கலாக்காமல் இருவரும் முழுமையாக ஈடுபட முதலி ல் எல்லாவற்றையும் பேசித் தீர்க்க வேண்டும் என்கின்ற னர் நிபுணர்கள். தேவையில் லாத பதற்றமும் அச்சமும் தாம்பத்ய உறவில் சிக்கலை உண்டாக்கலாம் என்றும் அவ ர்கள் கூறுகின்றனர்.
தாழ்வு மனப்பான்மை
திருமணமான நாளில் முதன் முதலாக தாம்பத்ய உறவு கொள்ளும் போது உணர்வு கொந்தளிப்பினால் அவர்களினால் முழுமையாக ஈடுபடாமல்போக வாய்ப்பு உண்டா கிறது. இதனால் முழுமையான இன்பத்தை பெறமுடியாமல் தம் பதிகளிடையே ஒருவித புரிந்து கொள்ளாமை உண்டாகிறது . திரு மணத்திற்கு முன்பு நண்பர்களின் தவறான அறிவுரை, சுய இன்ப பழக்கத்தினால் சக்தி முழுமையும் இழந்து விட்டதாக உளவியல் ரீதி யில் எண்ணுகிறார்கள். இதனால் பின்னாளில் பாலுறவில் சிக்கல் உண்டாகிறது. அதேபோல் தவறான பெண்களிடம் பாலுறவு கொள் ளும்போது அவர்களின் தவறான வார் த்தை நடவடிக்கை களினால் பதற்றம் அடைவதனால் அங்கும் தாழ்வு மனப்பான்மை உண்டாகி இது வே பின்னாளில் பாலுறவில் சிக்கலை உண்டாக்குகிறது .
திருமணத்திற்குமுன் பெண்கள் கொ ண்ட உறவு திருமணமான பின் கணவ னுக்கு தெரிந்து விடுமோ என்ற அச்சத் திலும் தாம்பத்ய உறவில் சிக்கலை உண்டாக்கு கிறது . வாழ்வில் யாருமே முதலிரவில் முழுமையான இன்பத் தை பெறவில்லை என்கிறது ஒரு புள் ளி விவரம். முதல்நாளில் அச்சமும், தயக்கமும், நடுக்கமும் இயல்பானதே இதை எதிர்கொண்டு இனி மையான வாழ்கையை துவக்குவதே சிறந்த வாழ்க்கை என்று அவர் கள் அறிவுறுத்தியுள்ளனர்.

டாக்டர் சொல்வதைக் கேட்டால், உங்களுக்கு லாபம்; டாக்டருக்கு நஷ்டம்!

Posted On July 20,2012,By Muthukumar
தசைகளெல்லாம் தொடர்ச்சியாகச் சுருங்கி விரிவடைவதால், உடலுக்குத் தேவையான உணவுப் பொருட்களின் தேவையையும், ஆக்சிஜன் தேவையையும் கூட்டுகிறது. திசு அளவில் இன்சுலின் எதிர்ப்புத் தன்மையைப் போக்கி, குளூக்கோஸ் சர்க்கரை அளவுகளை, சீரான நிலைக்கு வைத்து கொள்கிறது.
இப்போதுள்ள மக்கள், எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதைப் பற்றி கவலைப் படுவதில்லை என்பதை, என்னால் நிச்சயமாகக் கூற முடியும். அவர்கள் தங்கள் வாழ்க்கைத் தரம், அந்த ஆண்டுகளில் எவ்வாறு உள்ளது என்பதையே முக்கியமாகக் கருதுகின்றனர்.
உடல் நலம் பேணுதல் பற்றிய கருத்தை மதிப்பீடு செய்யும் வரை, எத்தனை ஆண்டுகள் உயிர் வாழ்கிறோம் என்பது முக்கியமானதல்ல. அல்சீமர் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர், தன் நெருங்கிய உறவினர்களைக் கூட, அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு, மறதியுடன் வாழ விரும்புவாரா? கேடு விளைவிக்கும் வாத நோயால் பாதிக்கப்பட்டு, இடுப்பு வலி அல்லது மூட்டு வலியால் அவதிப்பட, யார் விரும்புவர்?
பலர், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், புற்று நோய் மற்றும் இதய நோய்களால், எதிர்பாராத அளவில் பாதிக்கப்படுகின்றனர். யாரும் வயது முதிர்ந்த காரணத்தால் மரணமடைவதில்லை. உடல் நலத்தைக் கவனிக்காமல் சம்பாதிப்பது, பின் சம்பாதித்ததை உடல் நலத்தைச் சரி செய்யச் செலவிடுவது... இது சரிதானா?
உங்களிடம் ஒரு உண்மை நிகழ்வை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சென்னையில் இதயநோய் நிபுணர் கீழ், அவருடன் உதவியாளராக பணிபுரிந்து கொண்டிருந்த போது, 56 வயதுடைய நோயாளி, 28 வயதுடைய மகனுடன், நிபுணரை சந்திக்க வந்திருந்தார்.
அந்த தந்தை நிபுணரிடம் அதிக ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய்க்கு, கடந்த இரண்டு ஆண்டுகளாக சிகிச்சை எடுத்துக் கொண்டு, இதய நோயிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொண்டுள்ளார். தன் மகனுக்கு பரிசோதனை செய்த போது, அவருக்கும் அதிக ரத்த அழுத்தமும், சர்க்கரை நோயும் இருந்ததை அறிந்து, தந்தை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். தந்தை, 28 ஆண்டு உழைத்து சம்பாதித்த பணத்தை, தன் மகன் நான்கு ஆண்டுகளில் சம்பாதித்து, சாதனைப் படைத்தார்.
ஆனால், "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்பதை அறியாத மகன், தந்தைக்கு, 54 வயதில் வந்த நோய்களை, 28 வயதில் சம்பாதித்துக் கொண்டார். இதிலிருந்து நீங்கள் அறிந்து இருக்க வேண்டியது, உடற்பயிற்சியினால் நாம் அடையும் அளவில்லா பயன்களை!
உடற்பயிற்சி என்றால் என்ன?
* சுறு சுறுப்பாகவும், வேகமாகவும் நடத்தல்
* மிதிவண்டி ஓட்டுதல்
* உயரே ஏறிச் செல்லுதல், படிக்கட்டுகளில் ஏறுதல்
* நடனமாடுதல்
* நீந்துதல்
உடற்பயிற்சியின் பலன்கள்
* உடல் பருமனாவதைக் குறைத்து உடல் நலத்தைக் கூட்டுகிறது.
* ஊளைச் சதையைக் குறைத்து உடல் எடையைக் குறைக்கிறது.
* போதிய ரத்த ஓட்டம் இல்லாத பகுதிகளில், ரத்த ஓட்டத்தைப் பெருக்கி, பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கிறது.
* மனநிறைவும், மன அமைதியும் ஏற்படுத்துகிறது.
* இதயத்தை திடப்படுத்தி ரத்த நாளங்களை வளப்படுத்தி, ரத்த ஓட்டத்தை சீரான நிலையில் வைத்து கொள்ள உதவுகிறது.
* திசு அளவில் இன்சுலின் ஹார்மோன் செயல்பாட்டைப் பெருக்குவதற்கு, உடற்பயிற்சி பெரிதும் உதவுகிறது.
* சர்க்கரை நோயால் இதயத்திற்குப் பாதிப்புகளை ஏற்படுத்தும் நிலைமைகளை மாற்றி அமைத்து, பாதுகாவலாக இருக்கவும் உதவுகிறது.
* தசைகளெல்லாம் தொடர்ச்சியாகச் சுருங்கி விரிவடைவதால், உடலுக்குத் தேவையான உணவுப் பொருட்களின் தேவையையும், ஆக்சிஜன் தேவையையும் கூட்டுகிறது.
* உடற்பயிற்சியின் போது, நிறைவாகக் கிடைக்கும் ஆக்சிஜனால், உடலிலுள்ள மாவு, புரதம், கொழுப்பு ஆகிய உணவுப் பொருட்களெல்லாம், வளர்சிதை மாற்றங்கள் அடைந்து, பயன்பாட்டிற்கு வந்து விடுகின்றன.
Aerobic எனப்படும் ஒரு வகையான உடற்பயிற்சியால் ஏற்படக்கூடிய பலன்கள் பல. அவை:
* இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்துவதோடு, ரத்த அழுத்தத்தையும் சீர் நிலைக்குக் கொண்டு வருகிறது.
* திசு அளவில் இன்சுலின் எதிர்ப்புத் தன்மையைப் போக்கி, குளூக்கோஸ் சர்க்கரை அளவுகளை, சீரான நிலைக்குத் வைத்து கொள்கிறது.
* மூச்சுப் பயிற்சியின் மூலம், நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
* உடலுக்குப் பாதுகாப்பான அடர்த்தி நிறைந்த கொழுப்புப் பொருட்களைக் கூட்டுதல்.
* உடலுக்குப் பாதுகாவலற்ற அடர்த்தி குறைந்த கொழுப்புப் பொருட்களைக் குறைத்து, உடலின் கொழுப்பு கட்டுகளை குறைத்து உடல் எடையைக் குறைத்து, ரத்த நாளங்களில் கொழுப்புப் கட்டிகள் படிவதை குறைக்கிறது.
கை, கால்களை நீட்டி மடக்கியும், உடலை வளைத்து, நிமிர்த்தியும், வயிற்றுப் பகுதியை இறுக்கியும், தளர்த்தியும் மேற்கொள்ளக் கூடிய உடற்பயிற்சிகள், உடற்பயிற்சிக் கூடங்களில் மேற்கொள்ளக் கூடிய உடற்பயிற்சிகள் போன்றவையும் பயன்படும். இவை குறிப்பாக இளைஞர்களுக்குப் பெரிதும் பயன்தரக் கூடிய உடற்பயிற்சிகள்.

பெண்களுக்கு அதி அவசியமான யோகா!

ஆண்களுக்கும் ஆசனம் அவசி யம் என்றால், பெண்களுக்கு அவை அதி அவசியம் ஆகும். எனினும், அடிப்படை உடற் பா ங்கு வேறு பாட்டுக்கு ஏற்ப இரு பாலரும் ஆசனத்திலும் சில மாறு பாடுகளை மேற்கொள்ள வேண்டும். பின்னால், குழந்தை ப்பேறு காலத்தில், உடலை, தரையில் முழுமையாக நீட்டி ட முடியாததைக்கருதி, பெண் கள் சிறு வயதிலிருந்தே குறு கிய வணங்கு முறையை பின்பற்றுகின்றனர்.
 
இது போலவே பருவமடையும் வரை பெண்களுக்கும் எல்லா ஆசன ங்களையும் பழக்கினாலும், பூப்படைந்த பிறகு, மாதவிலக்குக் கால த்தில் சில நாட்களும், கருவுற்ற காலம் மற்றும் பிள்ளை பெற்ற பின்பு சில மாதங் களும் உடல்நிலைக்கேற்ப ஓரளவோ, முழுமையா கவோ ஆசனங்கள் செய்வ தைத் தவிர்க்க வேண்டும்.
 
மருத்துவ அறிவும் உடைய ஆசனப் பயிற் றுவிப்பாளரிடம், எந்தெந்த ஆசனங்க ளை, எவ்வளவு நேரம் பழகிடலாம் என்று தெரிந்து கொண்டு செய்வது நல்லது. பெண்ணின் உடலும் பேணப்படும். எதிர் காலப் பிள்ளையின் நிலையும் பேணப்ப டும். பெண்களை அதிகம் தாக்கும், முது கு வலி, சோகை, ஆர்த்தரைடீஸ், தலை வலி, உயர் ரத்த அழுத்தம், உடற்பருமன், போன்றவற்றுக்கு ஆசனங்க ள் பயனளி க்கின்றன.
 
மாதவிடாய் சமயத்தில் சில ஆசனங்களை தவிர்க்க வேண்டும். இந்த சமயத்தில் சில பெண்களுக்கு அடி வயிற்றில் வலி, கோபம், எரிச்சல், பலவீனம் தோன்றும். இதற்கு யோ காசனங்கள் சிறந்தவை. யோகா டென்ஷ னை குறைக்கிறது. இதனால் வேலைக்கு போகும் பெண்கள் அவசியம் யோகா கற்க வேண்டும். பருமனான பெண்கள் யோகாவா ல் எடையை குறைக்க முடியும். ஆனால் நிறு த்தி விட்டால் மறுபடியும் எடை கூடலாம்.


Wednesday, 18 July 2012

ஓரினச்சேர்க்கையாளர்களால் அதிகமாக பரவும் பால்வினை நோய்கள்..!!

ஓரினச் சேர்க்கையால், எய்ட்ஸ் மற்றும் பால்வினை தாக்கியவர்க ளின் சதவீதம், சாதாரண ஆண் மற்றும் பெண் இடையேயான செக்ஸ் உறவில் ஈடுபடுபவர்க ளை விட 50 சதவிகிதம் அதிக மாக இருப்பது கண்டறியப்பட்டு ள்ளது. ‘எய்ட்ஸ் மற்றும் பால் வினை’ நோய்களால் பாதிக்கப் பட்டவர்களில் 53% பேர் 35 வய துக்கும் குறைவான வயது பிரிவினர் என்ற அதிர்ச்சியளிக் கும் உண்மையும் தெரிய வந்து ள்ளது.
‘ஓரினச்சேர்க்கை’யால் எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்கள் மேற் கத்திய நாடுகளில் கடுமையாக பரவுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் குறிப்பாக, எச்.ஐ.வி. எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள ‘ஓரினசேர்க் கையில் ஈடுபடுவோரிடையே, இதே நோய்களில் பாதிக்கப்பட்டுள்ள சாதாரணமான ‘ஆண்-பெண்’ உடலுறவை மேற்கொள்ளும் மக்க ளைவிட பல மடங்கு அதிகமாக பாதிப்புள்ளது. இந்த புதிய ‘சிக்மா எயிட்ஸ் ஆய்வு குழுமத்தின்’ ஆய்வில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில், மட்டும் கடந்த பத்தா ண்டுகளில் கிட்டத்தட்ட ஐந்து லட்சத்து ஐம்பத்து ஐயாயிரம் ஓரின சேர்க்கை யாளர்கள் எச்.ஐ.வி. / எய்ட்ஸ் நோய் தொற்றுக்கு ஆளாகி வருவதாக கண்ட றியப்பட்டுள் ளது. இவர்களில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ‘ஓரின சேர்க்கையாளர்கள்’ எய்ட்ஸ் நோய் தோ ற்றால் இறந்து போனதாக கணக் கெடுப் பில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள மொத்த எய்ட்ஸ் நோயாளிகளில் 48% சத வீதம் பேர் ‘ஓரினச்சேர்க்கை’ பழக்கத்தால் இந்த நோய்க்கு இலக்கா கியுள்ளதாக தெரிகிறது. இதே போன்று இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில், ‘ஓரினச்சேர்க்கையாளர்களால், எய்ட்ஸ் மற்றும் பால்வி னை தாக்கியவர்களின் சதவீதம், சாதாரண ஆண் மற்றும் பெண் இடையேயான செக்ஸ் உறவில் இடுபடுபவர்களை விட பல மடங்கு அதிகமாக இருந்தது கண்டறிய ப்பட்டுள்ளது.
இதுபோன்ற உலகெங்கும் பல நாடுகளில் ஒரே நேரத்தில் மே ற்கொ ள்ளப்பட்ட இந்த ஆய்வு ‘ஓரினச்சேர்க்கையால்’ எய்ட் ஸ் பரவும் அபாயத்தை உறுதி செய்துள்ளது. குறிப்பாக ‘ஓரின ச்சேர்க்கையாளர்கள்’ குறிப்பி டத்தக்க அளவில் பெருகி வரும் லத்தின் அமெரிக்காவி ல், எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் தோற் றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களி டையே நடத்தப்பட்ட ஆய்வில் எய்ட் ஸ் நோய் தோற்று குறித்த இது வரை வெளிவராத அதிர்ச்சிகரமான பல புதிய உண்மைகள் வெளி வந்துள்ளன.
லத்தீன் அமெரிக்காவில் எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் பரவலுக்கு முக் கிய காரணமாக ‘ஓரினச்சேர்க் கை’ விளங்குவது கண்டுபிடிக் கப்பட்டுள்ளது. லத்தின் அமெரி க்க நாடுகளில் ‘எய்ட்ஸ் நோ யால்’ தாக்கப் பட்டவர்களில் 40% பேர் ‘ஓரினச்சேர்க்கை’ மூலமே நேரடியாக எய்ட்ஸ் நோய் தாக்குதலுக்கு ஆளாகியு ள்ளனர்.
பிரேசில் மற்றும் கொலம்பியா நாடுகளில் ‘ஓரினச்சேர்க்கையாளர்களிடையே’ பரவும் எய்ட்ஸ் நோ ய் தாக்கம் மிக கடுமையாக இருப் பது தெரியவந்துள்ளது. இந்த நாடு களில் ஓரினச்சேர்க்கையாலர்களால் மறைமுகமாக, எய்ட்ஸ் நோ ய் தொற்றிற்கு ஆளாவோரின் எண்ணிக்கை சுமார் 10% முதல் 25% சதவீதமாக உள்ளது என்பதே யாகும். ‘ஓரினச்சேர்க்கையாளர்களை‘ திருமணம் செய்து கொண்டதால், எய்ட்ஸ் நோய்க்கு ஆளாகியுள்ள னர் என இந்த ‘சிக்மா எய்ட்ஸ் ஆய்வு குழுமத்தின்’ ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

Sunday, 15 July 2012

கர்பமான மனைவியை கவனமாக கையாள்வது எப்ப‍டி?

கர்ப்பகாலத்தில் செக்ஸ் வைத்துக்கொள்ளலாமா வேண்டாமா என் பதுதான் மகப்பேறு மருத்துவர்களிடம் கர்பிணிப் பெண்கள் தயங்கி தயங்கி கேட் கும் கேள்வி. ஏனெனில் அந்த நேரத்தில் கர்ப்பிணிகளின் மனது கணவனின் அரு காமைக்காக ஏங்கும் எனவேதான் அந்த கேள்வியை பெரும்பாலான பெண்கள் மருத்துவர்களிடம் கேட்கின்றனர்.
பெண்ணின் உடலில் ஏற்படும் ஹார்மோ ன் மாற்றங்கள். கருவில் ஏற்படும் குழந் தையின் படிப்படியான வளர்ச்சி போன்ற வை பெண்ணுக்குள் ஒருவித கிளர்ச்சி யை ஏற்படுத்தும். அதேபோல் பெண்மை யின் பூரிப்போடு திகழும் மனைவியின் அழகு கணவனுக்கு ஒருவித ஆசையை ஏற்படுத்தும் எனவே அந்த நேரத்தில் தாம்பத்ய உறவில் ஈடுபட வே ண்டும் என்ற எண்ணம் தம்பதியருக்குள் ஏற்படுவது இயல்புதான். எனினும் கர்ப்பகாலத்தில் குழந்தையின் நலனில்தான் அதிக அக்க றை எடுத்துக் கொள்ள வேண்டும். குழந்தைக்குத்தான் முதலில் முக் கியத்துவம் கொடுக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.
தம்பதியர் இருவரும் இணைந்து ஒன்றாக கலந்து பேசி உடல் ரீதி யாகவும் மனரீதியாகவும் தயாராக வேண்டும். வயிற்றி ல் குழந்தை இருப்பதால் குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் உற வில் ஈடுபடுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.
கர்ப்பகாலத்தில் மூன்று பருவ நிலைகளில் முதல், இறுதி நிலைகளில் உறவில் ஈடுபடுவது சரியானதல்ல என்கின்றனர் நிபுணர்கள். முதல் மூன்று மாதங்களில் கருவின் வளர்ச்சி குறைவா ன அளவே இருக்கும். வாந்தி, தலைச் சுற்றல் போன்றவைகளினால் பெண்கள் அதிக சோர்வோடு காணப்படுவார்கள். எனவே அப்பொழுது உறவில் ஈடுபடுவ து பாதுகாப்பற்றது என்கின்றனர் மருத் துவர்கள்.
அதேபோல் மூன்றாவது பருவத்தில் பிரவசத்தை எதிர்நோக்கிக் கொண்டிரு க்கும் பெண்களுக்கு முதுகுவலி, கால்வலி போன்றவை ஏற்படும் அந்த சமயத்தில் உறவில் ஈடுபடுவதும் குழந்தைக்குப் பாதுகாப்பான தல்ல என்கின்றனர். நான்கு முதல் 7 மாதம் வரையில் பாதுகாப்பா ன முறையில் உறவில் ஈடுபடலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
கர்ப்பகாலத்தில் சிரமமான பொஸிசன்களை தவிர்க்கவும். எளிதான வலி ஏற்படாத பொஸிசன்க ளை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும் என்கின்றனர் நிபு ணர்கள். அன்பான அரவ ணைப்பும், முத்தங்களும் கூட சில சமயங்களில் கர்ப்பி ணிப்பெண்ணுக்குப் போது மானதாக இருக்கும் என்கின் றனர். எனவே சிரமம் தராத தொடுகையையும், கணவரி ன் அருகாமையையும் மட்டுமே எதிர்பார்க்கும் பெண்கள் இருக்கத் தான் செய்கின்றனர். அதுமாதிரி நேரங்களில் மனைவியை கவனமா ய் கையாளவேண்டும்.
கர்ப்பிணிகளுக்கு சில சமயங்களில் அசதியும் சோர்வும் அதிகமாக இருக்கும். அப்பொழுது ஓய்வு நிலையில் இருக்கவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறு த்தியிருப்பார்கள். அதுபோன்ற நேரங்களில் கர்ப்பிணி மனை வியை தொந்தரவு செய்யாமல் இருப்பதுதான் நல் லது என்பது மருத்துவர்களின் அறிவுரை யாகும்.