Posted On July 20,2012,By Muthukumar
தசைகளெல்லாம்
தொடர்ச்சியாகச் சுருங்கி விரிவடைவதால், உடலுக்குத் தேவையான உணவுப்
பொருட்களின் தேவையையும், ஆக்சிஜன் தேவையையும் கூட்டுகிறது. திசு அளவில்
இன்சுலின் எதிர்ப்புத் தன்மையைப் போக்கி, குளூக்கோஸ் சர்க்கரை அளவுகளை,
சீரான நிலைக்கு வைத்து கொள்கிறது.
இப்போதுள்ள
மக்கள், எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதைப் பற்றி கவலைப் படுவதில்லை
என்பதை, என்னால் நிச்சயமாகக் கூற முடியும். அவர்கள் தங்கள் வாழ்க்கைத்
தரம், அந்த ஆண்டுகளில் எவ்வாறு உள்ளது என்பதையே முக்கியமாகக்
கருதுகின்றனர்.
உடல் நலம் பேணுதல் பற்றிய கருத்தை மதிப்பீடு செய்யும் வரை, எத்தனை ஆண்டுகள் உயிர் வாழ்கிறோம் என்பது முக்கியமானதல்ல. அல்சீமர் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர், தன் நெருங்கிய உறவினர்களைக் கூட, அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு, மறதியுடன் வாழ விரும்புவாரா? கேடு விளைவிக்கும் வாத நோயால் பாதிக்கப்பட்டு, இடுப்பு வலி அல்லது மூட்டு வலியால் அவதிப்பட, யார் விரும்புவர்?
பலர், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், புற்று நோய் மற்றும் இதய நோய்களால், எதிர்பாராத அளவில் பாதிக்கப்படுகின்றனர். யாரும் வயது முதிர்ந்த காரணத்தால் மரணமடைவதில்லை. உடல் நலத்தைக் கவனிக்காமல் சம்பாதிப்பது, பின் சம்பாதித்ததை உடல் நலத்தைச் சரி செய்யச் செலவிடுவது... இது சரிதானா?
உங்களிடம் ஒரு உண்மை நிகழ்வை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சென்னையில் இதயநோய் நிபுணர் கீழ், அவருடன் உதவியாளராக பணிபுரிந்து கொண்டிருந்த போது, 56 வயதுடைய நோயாளி, 28 வயதுடைய மகனுடன், நிபுணரை சந்திக்க வந்திருந்தார்.
அந்த தந்தை நிபுணரிடம் அதிக ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய்க்கு, கடந்த இரண்டு ஆண்டுகளாக சிகிச்சை எடுத்துக் கொண்டு, இதய நோயிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொண்டுள்ளார். தன் மகனுக்கு பரிசோதனை செய்த போது, அவருக்கும் அதிக ரத்த அழுத்தமும், சர்க்கரை நோயும் இருந்ததை அறிந்து, தந்தை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். தந்தை, 28 ஆண்டு உழைத்து சம்பாதித்த பணத்தை, தன் மகன் நான்கு ஆண்டுகளில் சம்பாதித்து, சாதனைப் படைத்தார்.
ஆனால், "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்பதை அறியாத மகன், தந்தைக்கு, 54 வயதில் வந்த நோய்களை, 28 வயதில் சம்பாதித்துக் கொண்டார். இதிலிருந்து நீங்கள் அறிந்து இருக்க வேண்டியது, உடற்பயிற்சியினால் நாம் அடையும் அளவில்லா பயன்களை!

உடற்பயிற்சி என்றால் என்ன?
* சுறு சுறுப்பாகவும், வேகமாகவும் நடத்தல்
* மிதிவண்டி ஓட்டுதல்
* உயரே ஏறிச் செல்லுதல், படிக்கட்டுகளில் ஏறுதல்
* நடனமாடுதல்
* நீந்துதல்

உடற்பயிற்சியின் பலன்கள்
* உடல் பருமனாவதைக் குறைத்து உடல் நலத்தைக் கூட்டுகிறது.
* ஊளைச் சதையைக் குறைத்து உடல் எடையைக் குறைக்கிறது.
* போதிய ரத்த ஓட்டம் இல்லாத பகுதிகளில், ரத்த ஓட்டத்தைப் பெருக்கி, பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கிறது.
* மனநிறைவும், மன அமைதியும் ஏற்படுத்துகிறது.
* இதயத்தை திடப்படுத்தி ரத்த நாளங்களை வளப்படுத்தி, ரத்த ஓட்டத்தை சீரான நிலையில் வைத்து கொள்ள உதவுகிறது.
* திசு அளவில் இன்சுலின் ஹார்மோன் செயல்பாட்டைப் பெருக்குவதற்கு, உடற்பயிற்சி பெரிதும் உதவுகிறது.
* சர்க்கரை நோயால் இதயத்திற்குப் பாதிப்புகளை ஏற்படுத்தும் நிலைமைகளை மாற்றி அமைத்து, பாதுகாவலாக இருக்கவும் உதவுகிறது.
* தசைகளெல்லாம் தொடர்ச்சியாகச் சுருங்கி விரிவடைவதால், உடலுக்குத் தேவையான உணவுப் பொருட்களின் தேவையையும், ஆக்சிஜன் தேவையையும் கூட்டுகிறது.
* உடற்பயிற்சியின் போது, நிறைவாகக் கிடைக்கும் ஆக்சிஜனால், உடலிலுள்ள மாவு, புரதம், கொழுப்பு ஆகிய உணவுப் பொருட்களெல்லாம், வளர்சிதை மாற்றங்கள் அடைந்து, பயன்பாட்டிற்கு வந்து விடுகின்றன.

Aerobic எனப்படும் ஒரு வகையான உடற்பயிற்சியால் ஏற்படக்கூடிய பலன்கள் பல. அவை:
* இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்துவதோடு, ரத்த அழுத்தத்தையும் சீர் நிலைக்குக் கொண்டு வருகிறது.
* திசு அளவில் இன்சுலின் எதிர்ப்புத் தன்மையைப் போக்கி, குளூக்கோஸ் சர்க்கரை அளவுகளை, சீரான நிலைக்குத் வைத்து கொள்கிறது.
* மூச்சுப் பயிற்சியின் மூலம், நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
* உடலுக்குப் பாதுகாப்பான அடர்த்தி நிறைந்த கொழுப்புப் பொருட்களைக் கூட்டுதல்.
* உடலுக்குப் பாதுகாவலற்ற அடர்த்தி குறைந்த கொழுப்புப் பொருட்களைக் குறைத்து, உடலின் கொழுப்பு கட்டுகளை குறைத்து உடல் எடையைக் குறைத்து, ரத்த நாளங்களில் கொழுப்புப் கட்டிகள் படிவதை குறைக்கிறது.
கை, கால்களை நீட்டி மடக்கியும், உடலை வளைத்து, நிமிர்த்தியும், வயிற்றுப் பகுதியை இறுக்கியும், தளர்த்தியும் மேற்கொள்ளக் கூடிய உடற்பயிற்சிகள், உடற்பயிற்சிக் கூடங்களில் மேற்கொள்ளக் கூடிய உடற்பயிற்சிகள் போன்றவையும் பயன்படும். இவை குறிப்பாக இளைஞர்களுக்குப் பெரிதும் பயன்தரக் கூடிய உடற்பயிற்சிகள்.

No comments:
Post a Comment