Friday, 2 March 2012

ஒற்றைத் தலைவலி ஏற்பட்டால் . .

ஒற்றைத் தலைவலி ஏற்பட்டால் அதற்கு சரியான சிகிக்சை மேற் கொள்ளவேண்டும் என மருத்துவர் கள் அறிவுறுத்தியுள்ளனர். வீரியமு ள்ள மைக்ரேன் வந்தால், மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு, வய தான போது மறதி நோய் வர வாய்ப்பு அதி கம் என்றும் மருத்துவர்கள் எச்சரித் துள்ளனர்.
தலைவலிகளில் பல விதமான தலைவலிகள் உள்ளன. ஆனால், பெரும்பாலானவை எந்த வித பாதிப் பையும் ஏற்படுத்தாதவை; அதற்கான காரணமும் தெரியாது. ஆனால், ஒற் றைத்தலைவலி என்று சொல்ல ப்படும் மைக்ரேன் வந்து விட்டால் போதும், மாத்திரையும் கையுமாக தான் அலைய வேண்டும். தலை யினுள் சுத்தியால் பிளப்பது போன்ற உணர்வு. ஒருபக்கமாக வலி, மூளையில் ஏற்படும் அதிர்வு போன்றவையே மைக்ரேன் தலைவலி எனப்படுகின்றன.
வேலையை முடக்கும்
இது ஒரு பக்க தலையில் மட்டும் வலிக்கு ம். சில மணி நேரம் , சில நாள் வரை கூட தொடரும். பெரும்பாலான மைக்ரேன் தலைவலிகளில், பாதிக்கப்பட்டவருக்கு ஒரு பக்க தலையில் வலிக்கும். சிலரு க்கு இரு பக்கமும் வலி ஏற்படும். எந்த வேலை யையும் செய்ய முடியாமல் முடக்கிப் போ டும். கண்களை மூடிக்கொண்டு இருந்தா ல் போதும் என்று நினைக்கத்தோன்றும். வாந்தி வருவது போல தோன்றும்.
உலகம் முழுவதும் பல நாடுகளிலும் “மைக்ரேன்’ பாதிப்பு உள்ளது. 80 சதவீத மைக்ரேன் பாதிப்பு சாதாரணமானவை தான். 20 சதவீத மைக்ரேன் பாதிப்பு தான் , சில நோய்களால் ஏற்படுகின்றன. இந்த வீரியமுள்ள மைக்ரேன் வந் தால், மூளை நரம்புகள் பாதிக்கப் பட்டு, வயதான போது மறதி நோய் வர வாய்ப்பு அதிகம்.
மன அழுத்தம் இருந்தால், இந்த தலைவலி வரும். அடிக்கடி வந்தால் மைக்ரேன் தான். அது போல, சிகரெட் பிடிப்போர், அடி க்கடி கருத் தடை மாத்திரை விழுங்குவோர், ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிக்காதவர்களுக்கு கூட இந் த பாதிப்பு வரும்.
நான்கு கட்ட தலைவலி
மலச்சிக்கல், மன அழுத்தம் போன்ற காரணத்தால் அடிக்கடி தலை வலி வந்தால் சந்தேகப்பட வேண்டும். அடிக்கடி சிறுநீர் கழித்தாலும் மைக்ரேன் ஆரம்பம். இதன் பெயர் “ப்ரோ ட்ரோம்’ இரண்டாவது கட்டம் “ஆரா’ என்பது. இந்த கட்டத்தில் தான் விளக்கு வெளிச்சத்தை பார்த்தாலே கண்களை மூடிக்கொள்ள வைக்கும். சில வகை வாசனைகள்கூட தலை வலியை ஏற்படு த்தும். பேசும்போது வார்த்தைகள் தடு மாறும்; நினைவாற்றலும் பாதிக்கும்.
இதில் தலைவலியுடன் மூக்கடைப்பு, தண்ணீர் வற்றிப்போன நிலை, மயக்கம் வரும். மைக்ரேனில் மோசமான தலை வலி நான்கு கட்டமாக வரும். இது போஸ்ட்ரோம் எனப்படுகிறது. நாட்கணக்கில் கூட இது தொடரும். கடைசியில் மன அழுத்தம் ஏற்படும். எந்த வேலையிலும் நாட் டம் வராது.
சரியான தூக்கம்
தனக்கு வந்திருப்பது மைக்ரேன்தா னா என்று பாதிக்கப்பட்டவருக்கு தெரியாது. சில அறிகுறிகள், தொட ர்ந்து வருவது போன்றவற்றால் தான் அதை கண்டுபிடிக்க முடியு ம். சரியான நேரத்தில் சாப்பிடாம ல் இருப்பது, அடிக்கடி விரதம் இரு ப்பது, சரியான நேரத்தில் தூங்கா மல் இருப்பது போன்றவற்றாலும் மைக்ரேன் வரும். தனக்கு எத னால் வருகிறது என்பதை தெரிந்து அதை தவிர்த்துக் கொண்டா லே போதும்; ஒற்றைத்தலைவலி வராமல் நின்று விடும்.
அலர்ஜி ஏற்படுத்தும் உணவுகள்
நாள் பட்ட டின்னில் அடைக்கப்பட்ட பதப் படுத்தப்பட்ட மாமிசம், ரெட் ஒயின் உட்பட சில வகை மதுக்கள், பீன்ஸ், காபி, சாக் லெட், மோர், கிரீம், மிட்டாய்கள், உணவி ல் மணம் அதிகரிக்க சேர்க்கப்படும் சில வகை பொருட்கள், வேர்க்கடலை உட்பட சில வகை கடலைகள், பப்பாளி, ஊறுகாய், சாஸ், இனிப்பு வகைகள் போன்றவையும் மைக்ரேன் தலைவலியை தூண்டும். இந்த உணவுகளில் ஏதாவது ஒன்று அலர்ஜியை ஏற்படுத்தினாலும், சம்பந்தப் பட்டவருக்கு மைக்ரேன் வரும் எனவே இவற்றை தவி ர்க்கவேண்டும் என மருத்துவர்கள் அறிவு றுத்துகின்றனர்.
பரம்பரை நோய்
பரம்பரையாக வரும் பாதிப்புகளில் இதுவும் ஒன்று. அப்பா, அம்மா வில் யாருக்காவது இருந்தாலோ, தாத்தா, பாட்டிக்கு இருந்தாலோ வாரிசுகளில் யாருக்காவது வரும். குழந்தைகளுக்கு வருமா என்று கேட்கலாம்; நிச்சயமாக வரும். ஆனால், சில நிமிடங்களில் போய் விடும். அதனால் தான், சில குழந் தைகளுக்கு வாந்தி வருகிறது; லைட்டை பார்த்தாலே கண் கூசுகி றது. இளைய வயதில் மைக்ரேன் வர வாய்ப்பு உள்ளது. ஆரம்பத்தி லேயே கட்டுப்படுத்த சிகிச்சை பெற வேண்டும்.
திராட்சை பழ பரசம்

பெரும்பாலான மைக்ரேன் தலைவலிகளுக் கு சிகிச்சை தேவையில்லை. உணவு முறை களில் மாற்றம் கொண்டு வந்தாலே போதும். தொடர்ந்து தலைவலி வந்தால், அதை தடுக்க யோகா பயிற்சி செய்வது நல்லது. எதற் கெடுத்தாலும் மாத்திரை களை விழுங்குவ தை தவிர்க்க வேண்டும்.
தலைவலிக்கும் நேரத்தில் நன்கு பழுத்த கறுப்பு திராட்சைகளை மிக்சியில் போட்டு அடித்து சாறு பிழிந்து அதை பருகவேண்டும். இது ஒற்றைத் தலைவலிக்கு நிவா ரணம் தரும்.
வைட்டமின் சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளுவத ன் மூலம் மைக்ரேன் வராமல் தடுக்க முடியும். மீன்கள், பச் சை க் காய்கறிகள், கோதுமை, உலர் பழங்கள், கொட்டைகள் போன்றவை உட்கொள்ளலாம்.
தலைவலிக்கும் போது வெள்ளரிக்காய் ஜூஸ் பருகலாம். காரட் ஜூஸ் ஒற்றைத் தலைவலிக்கு அருமருந்து.

உறக்க‍ம் தரும் உணவுகள்

“இந்த கட்டுரையை படிக்கும்போது இங்க தூங்குபவர்க ளை எழுப் பாதீங்க ப்ளீஸ்! நமக்குத் தான் தூக்க‍ இல்ல• இவங்களாவது நல்லா தூங்கட்டும் என்ன‍ங்க நான் சொல்றது சரிதானே!”
**
நம்மில் சிலர் தலையணையில் தலைவைத்த அடுத்த விநாடியே ‘கொர்’ரென்ற குறட்டையுடனோ அல்லது குறட்டை அல்லாமலோ ஜோராக தூங்கத் தொடங்கி விடு வார்கள். அவர்களை பற்றி பிரச்ச னை இல்லை.ஆனால் குறட்டை ஒரு பிரச்சனைதான்; அதுபற்றி அப்புறம் பார்க்கலாம்.
தற்போதைய பிரச்சனை தூக்கம் வராதவர்களை பற்றியது. புத்த கம் வாசிப்பது, இணைய தளத்தில் மேய்வது, மனதுக்கு பிடித்த இனிமையான பாடல்களை கேட்பது என பலவிதமாக முயற்சித் தும், சிலருக்கு தூக்கம் தொலைவிலேயே இருக்கும்; பக்கத்தில் நெருங்காது.
அப்படியானவர்களுக்காக மருத்துவ மற்றும் உணவு நிபுண ர்கள் தரும் தூக்கம் வரவழைக் கும் உணவு கள் பட்டியல் இதோ:

இறால்:

மீன்களில் பலவகை உண்டென் றாலும் இறால் மீனுக்கு தனி ருசி மட்டுமல்லாது, தூக்கத்தை வர வழைக்கும் திறனும் உண்டு. இதி லுள்ள ஆரோக்கியமான கொழு ப்பு, தூக்கத்தை ஒழுங்கு படுத்தும் ஹார்மோன் சுரப்புகளை அதிக ரிக்கும் திறனுடையதாம்.
பீன்ஸ்:
பீன்ஸ் மற்றும் இந்த வகையை சேர்ந்த அவரை, பட்டாணி போன் ற வற்றில் பி6,பி12 உள்ளிட்ட ‘பி’ வைட்டமின்களும், ஃபோலிக் அமி லமும் மிகுதியாக உள்ளன. இவை மனிதனின் தூக்க சுழற்சி முறை யை ஒழுங்குபடுத்துவதோடு, மன தை ஆசுவாசமாக வைத் திருக்கக் கூடிய செரோட்டோ னினை சுரக்க வைக்கிறது.மேலும் தூக் கமின்மையால் அவதிப்படுபவ ர்களுக்கு ‘பி’ வைட்டமின்கள் மிகவும் உதவுவதாக ஆராய்ச் சிகள் தெரிவிக்கின்றன.
தயிர்:
கொழுப்பு குறைந்த தயிரில் கால்சியம் மற்றும் மெக்னீசி யம் நிறைந்துள்ளது. இந்த இர ண்டுக்குமே தூக்கத்தை வர வழைப்பதில் முக்கிய பங்கு உள்ளது. ஆழ்ந்த தூக்கம் வர உதவும் இந்த தாதுக்கள், வேகமாகவும் தூக்க த்தை வரவழைக்குமாம். இந்த தாதுக்கள் ஒருவருக்கு உரிய அளவு கிடைக்காமல் பற்றாக்குறையாக இருந்தால், அதனால் தூக்கமின் மை ஏற்படுவதோடு, மன அழுத்த ம் மற்றும் தசைவலி போன்ற வையும் ஏற்படலாம் என்று மருத் துவர்கள் எச்சரிக்கிறா ர்கள்.
பசளிக்கீரை:
கரும்பச்சை நிறத்தில் உள்ள இந்த பசளிக்கீரையில் இரும்பு சத்து அதிக அளவில் உள்ளது. தூக்கமின்மையை ஏற்படுத்தக்கூடிய ஒரு
ஆழ்ந்த உறக்க‍த்தில் ஐஸ்வர்யா ராய்
வித படபடப்பு மற்றும் மன அமைதியின்மை போன்ற வை ஏற்படாமல் பாதுகாப் பதில் இந்த பசளிக்கீரை முக் கிய பங்கு வகிப்பதாக கூறு கிறார்கள் நிபு ணர்கள்.
.

அல்சர்-ஐ குணமாக்கும் உணவுகளும் அவற்றை தயாரிக்கும் முறைகளும்

அல்சர் எனப்படும் வயிற்றுப் பிரச்னையில் சிக்கியிருப்போ ருக்கு குணமளிக்கும் உணவு வகைகள் என்னென்ன… அவற் றைத் தயாரி ப்பது எப்படி?
அல்சர் பற்றிய சில விஷயங்க ளை அசைபோட்டபடியே!
எண்சாண் உடம்புக்கு வயிறே பிரதானம்’ என்ற நிலைதான் இன்று உருவாகியிருக்கிறது. வாய்க்கு ருசியாக இருக்கிறது என்று வக்கணையாக வாங்கி சாப் பிடும் உணவுகளில் ஏதேனும் பிரச்னை என்றால், வயிற்றுப் பகுதி தான் முதலில் பாதிப்புக்கு உள்ளாகும். அத்தகைய பிரச்னைகளில் தலையாயது அல்சர்!
வயிற்றுப் புண் எனப்படும் இந்த அல்சர் எப்படி வருகிறது… ஏன் ஏற்படுகிறது?’ என்பது பற்றி சென்னை, அரசு பொது மருத்துவ மனையின் இரைப்பை மற்றும் குடல் சார்ந்த அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் சந்திரமோகன் இங்கே பேசுகிறார்.
எப்பவும் ‘கபகப’னு எரியுது. பசியா இருக்குமோனு நெனச்சு சாப்பிட்டாலும், எரிச்சல் குறைய மாட்டேங்குது. அப்பப் ப, வாந்தி வேற வந்து இம்சை ப்படுத்துது. உடல் எடையும் குறைஞ்சிடுச்சு. எதையுமே ருசியா சாப்பிடமுடியல. வயி த்து வலியால சுருண்டு போயி டறேன்’ இப்படி அலறி துடிப்ப வர்களில் பெரும்பாலானோர் அல்சரால் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.
பெரும்பாலானவர்கள், அந்த நேர வலியிலிருந்து தப்பித்துக்கொ ள்ள கண்ணில் படும் மருந்துக் கடையில் வலி நிவாரணிகளை வாங்கி விழுங்கிவிட்டு வேறு வேலைகளைப் பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள். இதுபோன்ற மாத்திரைகள் அந்த நேரத்துக்கு வலியைக் குறைக்குமே தவிர, நிரந்தரத் தீர்வை ஒருபோதும் தராது. அதுமட்டுமல்ல… பக்க விளைவாக வயிற்றில் புண்கள் அதிகரித்து, முற்றிய அல்சரில் கொண்டுபோய்ச் சேர்ப்பதற்கு அந்த வலி நிவார ணிகளே கூட ஒரு காரணியாகிவிடக்கூடும்.
மற்றொரு காரணம், டென்ஷன், கவலையால் மனம் பாதிக்கப்படு ம்போது, இரைப்பையில் மிக அதிகமாக அமிலம் சுரந்து அல்சரில் கொண்டுவிடும்.
அல்சர் ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணமாகக் கருதப்படுவது, ‘ஹெச் பைலோரை’ (H Pylori) என்ற நுண்கிருமிதான். இது ஒரு வகை யான பாக்டீரியா. உணவுப் பொருட் கள், தண்ணீர் மற்றும் மூச்சுக் காற்று மூலமாகவும் பரவலாம்.
இரைப்பை மற்றும் சிறுகுடலின் ஆரம்பப் பகுதியான ‘டியோடினம் ‘என்ற பகுதியில்தான் அல்சர் உரு வாகும். இந்த வகை வயிற்றுப் புண் ணுக்கு ‘பெப்டிக் அல்சர்’ என்று பெய ர். நாம் உண்ணும் உணவு இரைப் பைக்கு சென்று அமிலங்களால் சூழ ப்பட்டு தாக்குதல் நடத்தும். தொட்டால் விரல் வெந்து விடும் அளவுக்கு வீரியமான அமிலம் என்றாலும், இரைப்பையின் சுவர் கள் வலுவாக இருப்பதால், அமில ங்களால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், இரைப் பையில் சுரக்கக் கூடிய அமிலத்தின் அளவு அதிகமா கும்போது, இரைப்பையின் சுவர்கள் தாக்குப் பிடிக்க முடியாமல் பாதிப் புக்கு உள்ளாகும். இந்த இடத்தில் புண்கள் உருவாகி அல்சரில் கொ ண்டு விடும்.
வந்திருப்பது அல்சர்தானா… புண் எந்த அளவுக்கு பரவியிருக்கிறது… ஹெச் பைலோரை கிருமித்தொற் று இருக்கிறதா?’ என்பதையெல்லாம் எண்டோஸ்கோபி பரிசோத னை மூலம் கண்டு பிடித்துவிடலாம். முன்குடலில் அடைப்பு ஏற்படுதல், குடலில் ஓட்டை விழுதல், ரத்தவாந்தி போன்ற பிரச் னைகளுக்கு மருத்துவ ரீதி யாகவும், எண்டோஸ்கோபி மூலமாகவும் சிகிச்சை அளி க்கலாம். எண்டோஸ் கோபி சிகிச்சை அளித்தும் சரியாக வில்லையெனில், அறுவை சிகிச்சைதான் ஒரே தீர்வு.
வயிற்றில் புண் வந்து ஆறு ம்போது, அது தழும்பாக மா றும். இத னால், முன்குடலில் அடைப்பு ஏற்பட்டுவிடும். சாப்பிட்ட உணவும் இரைப்பையைவிட்டு முன் குடலுக்கு போகாது. எப் போதும் வயிறு ‘திம்’என்று இருக்கும். இதையே சிலர், ‘சாப்பிட்ட உணவு சரியா செரிமானம் ஆகல. வாயுத் தொல்லையா இருக்கு மோ?’ என்று நினைப்பார்கள். இப்படி அடைப்பு ஏற்படும் போதெல்லாம் வாந்தியுடன் கூடிய புளித்த ஏப்பம் வரும். பொதுவாக நாம் உட் கொள்ளும் உணவு இரண்டரை முதல் நான்கு மணி நேரத்துக்குள் சிறு குடலுக்கு போய் விடும். ஆனால், அடைப்பு இருப்பவர்களுக்கு உணவு சிறுகுடலுக்கு போகாமல் இரைப்பையிலேயே தங்கி விடும். இத னால், வயிற்று எரிச்சல் மேலும் அதிகமாகும்.
வயிற்றில் உள்ள புண்ணும் அதிகமாகி, வாந்தி எடுக்கும்போது ரத்தம் கலந்து வரும். சமயங்களில் குடல் புண்ணில் ஓட்டையும் ஏற்படலாம். அல்சர் ஆயுட்கால வியாதி அல்ல. பழக்க வழக்கங்கள் , உணவுக் கட்டு ப்பாடுகளை கடைபிடித்தால் இரண்டே வாரத்தில் முற்றிலும் குணமாக்கிவிட முடியும். அல்சரால் பாதிக்கப்பட்டவ ர்கள், காரம், புளிப்பு, எண்ணெய் போன்ற அதி கமாக அமிலம் சுரக்கும் உணவுகளைத் தவிர்த்தால்… அல்சரை அறவே ஒழித்து விடலாம்” என்றார் டாக்டர் சந்திர மோகன்.
அல்சரைக் குணப்படுத்தும் அற்புதமான உணவு ரெசிபிகளை இங்கே தருகிறார் செஃப் ஜேக்கப்.
கடுகு-தேங்காய் பச்சடி
தேவையானவை: கடுகு – ஒரு டேபிள்ஸ்பூன் (10 கிராம்), தேங்காய் துருவல் – அரை மூடி (100 கிராம்), தயிர் – ஒரு கப் (100 மில்லி), சுக்குப்பொடி – ஒரு சிட்டிகை, சின்ன வெங்காயம் – 2, உப்பு – ஒரு சிட்டிகை.
செய்முறை: வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி லேசாக வதக்கவும். இதனுடன் தேங் காய் துருவல், கடுகு, சுக்குப் பொடி சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இந்த விழுதில், நன்றாக அடித்த தயிரைச் சேர்த்து, தேவையான உப்பு போட்டு கலக்கவும். இதை வெறுமனே சாப் பிடலாம். இட்லி, சப்பாத்தி போன்ற டிபன் அயிட் டங்களுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.
வெஜிடபிள் அவியல் கூட்டு
தேவையானவை: பொடியாக நறுக்கிய கேரட், சௌசௌ, சுரைக் காய், உருளைக்கிழங்கு, வெங்காயம் சேர்ந்தது – ஒரு கப், தயிர் – அரை கப் (50 மில்லி), சர்க்கரை – ஒரு டீஸ்பூன் (5 கிராம்), தேங்காய் – கால் கப் (25 கிராம்), பயத்த ம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, தேங்காய் எண்ணெய் – 5 மில்லி.
செய்முறை: வெங்காயத்தைத் தவிர மற்ற காய்கறிகளை சர்க்க ரை சேர்த்து, தண்ணீர் விட்டு நன்றாக வேக வைக்கவும். தேங்கா யை அரைத்துக் கொள்ளவும்.பயத்தம்பருப்பை வேக வைத்துக் கொள்ளவும் கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். நன்றாக வதங்கியதும், வேக வைத்த காய்கறி கலவையைப் போட்டுக் கொதிக்க விடவும். அரை த்த தேங்காயைச் சேர்த் து, கொதித்ததும் பருப்பு, உப்பு சேர்த்து இறக்க வும். கடைசியில் தயிர் சேர்த்துக் கிளறவும்.
இதை சாதத்துடன் சேர்த் துக்கொள்ளலாம். டிபன் அயிட்டங்களுடனும் சே ர்த்துச் சாப்பிடலாம்.
இந்த ரெசிபிகள் பற்றி ‘டயட்டீஷியன்’கிருஷ்ணமூர்த்தி என்ன சொல்கிறார்?
செஃப் சொல்லியிருக்கும் இரண்டு ரெசிபியிலுமே தயிர் மற்றும் தேங்காய் சேர் க்கப்பட்டிருப்பதால், உடலில் நன்மை செய்யும் பாக் டீரியா வளர்வதற்கு உதவி யாக இருக்கும். வீரியமிக்க புண்க ளையும் ஆற்றக்கூடிய அரு மருந்தான தேங்காய் எண் ணெயும் சேர்க் கப்படுவதால், வயிற்று எரிச்சல் குணமாகும். கடுகு சேர்த்திருப்ப தால், புரதம், கால்ஷியம், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புகளும் கிடைத்துவிடும். உணவு எளிதாக ஜீரணமும் ஆகிவிடும்” என்றார் டயட்டீஷியன்.

“அதில்” சிறந்தவர்கள் ஆண்களா? பெண்களா?

தங்கள் வாழ்வில் நிகழ்ந்த மலரும் நினைவுகளை ஞாபகம் வைத் துக் கொள்வதில் பெண்களைக் காட்டிலும் ஆண்களே சிறந்தவர்கள் என்பது சமீபத்திய ஆய்வொன்றின் முடிவில் தெரிய வந்துள்ளது. கனடா வின் உள்ள பல்கலைக்கழக மாணவ ர்கள் இது தொடர்பான ஆய்வினை சமீபத்தில் மேற்கொண்டனர்.
இவர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் உட்பட 34 பேரிடம் இந்த ஆய்வை நடத்தினர். 
ஆய்வின் முடிவில், வாழ்வில் கடந்து வந்த உணர்ச்சிப்பூர்வமான நிகழ்வுகள், மலரும் நினைவுக ள் உள்ளிட்டவைகளை ஞாபகம் வைத்து பின்னொரு நாளில் வெளிப்படுத்துவதில் பெண்க ளை காட்டிலும் ஆண்களே முன்னணியில் உள்ளனர் என தெரிய வந்துள்ளது. இதன் முடி வுகள் தற்போது இண்டர்நேஷ னல் ஜர்னல் ஆப் சைக் கோபிசியாலஜி என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

ஒற்றைத் தலைவலிக்கு எளிதில் உண்டு தீர்வு!

Posted On March 2,2012,By  Muthukumar
மனிதனை பாடாய்படுத்தும் நோய்களுள் ஒன்று... ஒற்றைத் தலைவலி. பெரும்பாலும் அதிகமான மன அழுத்தம் காரணமாகவே இது வருகிறது.
என்றாலும், குறைவான சர்க்கரை அளவு, ஒவ்வாமை, சில மருந்துகளை அதிகமாக எடுத்துக் கொள்வது, சத்துக் குறைபாடு, அதிகப்படியான வேலை, சரியான தூக்கம் மற்றும் ஓய்வு இல்லாமை, அதிகப்படியான குடிப்பழக்கம், புகைப்பழக்கம் காரணமாகவும் இது வரலாம்.
இடைவிடாத தலைவலி, வாந்தி, உடல் வலி, கண் மங்குதல் மற்றும் வயிறு பிரச்சினைகளை ஒற்றைத் தலைவலி வரும் ஒருவர் சந்திக்க நேரிடுகிறது.
ஒற்றைத் தலைவலி தீர எளிய வழிமுறைகள் உள்ளன. அவை...
* எலுமிச்சை தோலை நன்கு காய வைத்து அரைத்து நெற்றியில் பற்று போடுவது நல்ல பலனை தரும்.
* நன்கு கனிந்த திராட்சைகளை நன்கு அரைத்து தண்ணீர் சேர்க்காமல் அருந்தலாம்.
* முட்டைக்கோஸ் இலைகளை நன்கு நசுக்கி ஒரு சுத்தமான துணியில் கட்டி, அதைக்கொண்டு தலையின் மீது ஒத்தடம் தரலாம். முட்டைக்கோஸ் உலர்ந்து விட்டால் புதிதாக இலைகளை நசுக்கி துணியில் கட்டி பயன்படுத்துங்கள்.
* குளிர்ந்த நீரை துண்டில் நனைத்து தலையிலும் கழுத்திலும் கட்டலாம். பின் கைகளையும் கால்களையும் சுடுநீரில் விடவும்.
* 10 அல்லது 12 பாதாம் பருப்புகளை தலைவலியின் போது சாப்பிடலாம்.
* வாசனை எண்ணெயால் தலைக்கு ஒற்றடம் தரலாம். தேய்த்தும் விடலாம்.
இவை தவிர, முன்னெச்சரிக்கையாக இருந்தும் ஒற்றைத் தலைவலி வருவதை தவிர்க்கலாம்.
புகை மற்றும் மது தலைவலியை தூண்டக் கூடியவை என்பதால் அவற்றை தவிர்த்திடுங்கள்.
மேலும், வெயிலில் அலைவது, காரமான உணவு வகைகளை உட்கொள்வது, வயிறு முட்ட சாப்பிடுவது, தேவையில்லாத மன அழுத்தம் மற்றும் கவலை கொள்வது போன்றவற்றை தவிர்த்து வந்தாலும் ஒற்றைத் தலைவலி நம்மை நெருங்காது.

சர்க்கரையும் சாராயம் போன்றதே!

Posted On March 2,2012,By Muthukumar

சர்க்கரையும் சாராயம் (ஆல்கஹால்) போன்று உடம்புக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியதே. எனவே மதுபானத்தைப் போல சர்க்கரை அளவுக்கும் அரசுகள் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ராபர்ட் லஸ்டிக் தலைமையிலான குழு இவ்வாறு குரல் கொடுக்கிறது.
இவர்கள் கூறுகையில், ``சர்க்கரையானது, அதிகப் பருமன், இதய நோய், புற்றுநோய், ஈரல் பாதிப்புகள் போன்ற பல்வேறு உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. எனவே சர்க்கரை விற்பனையைக் கட்டுப்படுத்தும் வகையில் புகையிலை, மதுபானம் போல இதற்கும் வரி, கட்டுப்பாடு விதிக்க வேண்டும்'' என்கிறார்கள். அதேநேரம், சர்க்கரைக்கான தேவையையும், விநியோகத்தையும் குறைப்பது மலை போலக் கடுமையான விஷயம்தான் என்றும் இவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.
பொதுநலத்தைக் கருத்தில் கொண்டுதான், பொது இடங்களில் புகை பிடிக்கத் தடை, குறிப்பிட்ட வயதுக்குக் கீழே மதுபானம் அருந்தத் தடை, பொது இடங்களில் ஆணுறை வழங்கும் எந்திரம் போன்றவற்றை அரசாங்கங்கள் ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் சர்க்கரை விஷயத்திலும் நடவடிக்கை எடுக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
சர்க்கரையின் பல்வேறு வகைகளான, சுக்ரோஸ், பிரக்டோஸ், ஏன், குளுக்கோஸ் மற்றும் கரும்பிலிருந்து தயாரிக்கும் சர்க்கரையும் கூட புகையிலை, மதுபானம் அளவுக்குத் தீங்கு விளைவிப்பவை என்கிறார்கள்.
அமெரிக்காவில் மட்டும் மக்கள்தொகையில் சரிபாதிப் பேர் உரிய எடையை விட அதிக எடை உடையவர்களாக இருக்கிறார்கள். அவர்களில் பாதிப் பேர், அளவுக்கு மிக அதிகமான எடையால் அவதிப்படுகிறார்கள். இதுபோன்ற பிரச்சினைகளுக்கு சர்க்கரை ஒரு முக்கியக் காரணமாகத் திகழ்வதாக மேற்கண்ட ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆனால் சர்க்கரை, உடம்புக்கு அதிகமான தீங்கை ஏற்படுத்தும் என்பதை சில ஆய்வாளர்கள் ஏற்க மறுத்து வருகிறார்கள்.

நோ அட்வைஸ், நோ ரூல்ஸ்!

Posted On March 2,2012,By Muthukumar
தம்பதியருக்கிடையே புரிதல் இல்லாத காரணத்தினாலே சில ஆண்டுகளுக்குள்ளாகவே பிரிவுகள் ஏற்படுகின்றன. என்னை புரிஞ்சிக்கவே மாட்டேங்கிறா என்று கணவனும், நான் என்ன செய்தாலும் பிடிக்க மாட்டேங்குது என்று மனைவியும் புலம்பத் தொடங்கிவிடுகின்றனர். உணர்வுப் பூர்வமாக கணவரை புரிந்து கொண்டு மகிழ்ச்சிப்படுத்த உளவியல் வல்லுநர்கள் கூறும் சில ஆலோசனைகள்
புரிதல் வேண்டும்
நம்மை நாம் புரிந்து கொள்வது ஒரு புறம் இருக்கையில், திருமணம் செய்து கொண்டுள்ள கணவரைப் பற்றியும், அவருக்கு பிடித்தமானவைகளையும், புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுவது சற்று சிரமமான காரியம்தான். ஆண்கள் என்பவர்கள் வெளியில் சூரப்புலிகளாக செயல்பட்டாலும் வீட்டைப் பொருத்தவரை அம்மாபிள்ளைகளாகவோ, மனைவியின் முந்தானையை பிடித்துக்கொண்டோதான் இருக்க நினைப்பார்கள். எனவே முதலில் கணவரின் மனதை படியுங்கள். அவருக்கு பிடித்தமான விசயங்கள் என்பதை தெரிந்துகொண்டு அதன்படி நடந்து கொள்ளுங்கள். அப்புறம் பிரச்சினை எப்படி வரும்?
மனதை வருடும் பேச்சு
உளப்பூர்வமாகவும், உணர்வுப் பூர்வமாகவும் ஆண்களின் மனதை பெண்களின் அருகாமைக்காக ஏங்கும். எனவே தினசரி சில மணிநேரங்கள் உங்களுக்காக ஒதுக்குங்கள். இருவரும் மனம் விட்டு பேசுங்கள். கணவரின் அருகில் அமர்ந்து பத்திரிக்கையில் படித்த துணுக்கு, புதிதான ரிலீஸ் ஆன திரைப்படம் பற்றிய விமர்ச்சனம், பக்கத்து வீட்டு சமாச்சாரம் எதைப்பற்றி வேண்டுமானலும் இருக்கட்டும். பேசினால் தகவல் பரிமாற்றத்தோடு அன்றைய நிகழ்வுகள் உடனுக்குடன் தெரிகிறது என்ற நினைவு ஆண்களுக்கு ஏற்படும். பேச்சோடு பேச்சாக உறவுகளைப் பற்றியும், குழந்தைகளைப் பற்றியும் பேசலாம். கணவர் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை இந்த சூழ்நிலையில் தெரிந்து கொள்வது எளிது.
திருப்தி அடையச் செய்யுங்கள்
திருமணத்திற்குப் பின்னர் ஆண், பெண் இருவருக்கு இடையேயும் உடல் ரீதியான தேவைகளையும், உள ரீதியான ஆறுதல்களையும் எதிர்பார்ப்பது இயல்பு. எனவே இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்து அவரவர்களின் தேவைகளை நிறைவேற்ற ஒத்துழைக்கும் பட்சத்தில் பிரச்சினை எழ வாய்ப்பில்லை. ஆண்களுக்கு உணர்வு பூர்வமான தேவைகள் அதிகம் இருக்கும். எனவே பெண்கள் அதனை புரிந்து நடந்து கொள்வது ஆண்களை மகிழ்ச்சியுறச்செய்யும் என்கின்றனர் உளவியலாளர்கள்.
மனதில் நினைத்தால் தெரியாது
தம்பதியர் தங்களின் தேவைகளை வெளிப்படையாக தெரிவிக்கவேண்டும். அப்பொழுதுதான் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஏனெனில் மனதில் நினைத்தால் அதை அனைவராலும் புரிந்து கொள்ள முடியாது எனவே தன்னுடைய தேவைகளை மனைவிக்கு தெரிவிக்க வேண்டும் என்றும், கணவரிடம் கேட்டுப் பெறுவதில் மனைவியும் கெட்டிக்காரத்தனத்துடன் நடந்து கொள்ளவேண்டும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
நோ அட்வைஸ், நோ ரூல்ஸ்
தம்பதியருக்கிடையே சட்டதிட்டங்கள் வகுத்து அதற்கேற்ப வாழவேண்டும் என்ற அவசியம் இல்லை. அதேபோல் எதற்கெடுத்தாலும் அட்வைஸ் செய்வது எரிச்சலை ஏற்படுத்தும் என்கின்றனர் உளவியலாளர்கள். கணவரின் செயல்களை எப்போதும் விமர்ச்சிப்பதும் உறவுகளை பாதிக்கும்.
மிகச்சிறந்த நபர்
கணவரின் காயங்களுக்கு ஆறுதல் தரும் மிகச்சிறந்த நபர் என்பதை உணர்த்துவதும், புரியவைப்பதும் மனைவியின் கடமை. அவரின் உணர்வுப் பூர்வமான தேடல்களுக்கு வடிகாலாக இருக்கவேண்டியதும் மனைவிதான். எனவே அதை நினைவில் வைத்துக்கொண்டு கணவரை அணுகவேண்டும். அதைவிடுத்து எடுத்ததற்கெல்லாம் சந்தேகப்படுவதும், தேவையற்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்று உளவியலாளர்கள் கூறுகின்றனர். எனவே கணவரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அதற்கேற்ப நடந்துகொண்டால் இல்லறத்தில் பிரிவு ஏற்பட வழியில்லை என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள்.

ஞாபக சக்தியை அதிகப்படுத்த…

Posted On March 2,2012,By Muthukumar
சும்மா ஒரு ஸ்டைலுக்காக, வேலைப்பளு, மன உளைச்சல் மற்றும் காதல் தோல்வியை மறக்க போன்ற பல்வேறு காரணங்களினால் விளையாட்டாக புகைப்பழக்கம் தொடங்குகிறது. விளையாட்டு வினை ஆனது என்பது போல விளையாட்டாக தொடங்கும் இந்த புகைப்பழக்கம் ஒருவரது புத்திக்கூர்மையை குறைத்துவிடுகிறது, ரத்த அழுத்தத்தினை அதிகரிக்கிறது மற்றும் கண்புரை நோயை ஏற்படுத்துகிறது என்று குண்டைத் தூக்கிப்போடுகின்றன புகைப் பழக்கம் குறித்த ஆய்வுகள்.
புகைப்பழக்கத்தின் பாதிப்புகள் குறித்து இங்கிலாந்தின் நார்த்தம்பிரியா பல்கலைக்கழகத்தில் ஞாபக சக்தி குறித்த ஒரு செயல்முறை தேர்வு நடத்தப்பட்டது. இதில், சராசரியாக 2 1/2 வருடங்களுக்கு முன்பு புகைப்பழக்கத்தை கைவிட்டவர்கள், புகைப்பவர்களைவிட 25 சதவிகிதம் நன்றாகவும், புகைப்பழக்கமே இல்லாதவர்கள் 37 சதவிகிதம் நன்றாகவும் செயல்பட்டது தெரியவந்தது.
புகைப்பழக்கத்தை கைவிடுவது உடல் நலனுக்கு பல நன்மைகளை உண்டாக்கும் என்பது நாமனைவரும் அறிந்த செய்தி. ஆனால், புகைப்பழக்கத்தை கைவிடுவதால் அறிவு சார்ந்த செயல்திறனும் அதிகரிக்கிறது என்பது இந்த புதிய ஆய்வின் மூலம் நிரூபணமாகியுள்ளது என்கிறார் இந்த ஆய்வின் தலைமை ஆய்வாளர், முனைவர் டாம் ஹெபர்னான்!
இதற்கு முந்தைய ஆய்வுகளில் புகைப்பழக்கத்தை கைவிடுவதால் `பின்னோக்கிய ஞாபக சக்தி' (அதாவது, ஒரு விஷயத்தை படித்து பின்னர் தேவைப்படும்போது அதை நினைவுகூரும் திறன்) மேம்படுகிறது என்பது தெரியவந்தது. ஆனால், இந்த புதிய ஆய்வின் நோக்கம் ஆய்வில் கலந்துகொண்டவர்களின் `தொலைநோக்கு ஞாபக சக்தி'யை (அதாவது, ஒரு குறிப்பிட்ட செயலை ஞாபகம் வைத்துக்கொண்டு எதிர்காலத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அதை செயல்படுத்தும் திறன்) கணக்கிடுவதே! உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட மாத்திரையை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எடுத்துக்கொள்ள தொலைநோக்கு ஞாபக சக்தி அவசியம்.
அதெல்லாம் சரிதான், புகைப்பழக்கம் எப்படி ஞாபக சக்தியை பாதிக்கிறது என்பது குறித்து எதுவும் தெரியவந்துள்ளதா?
புகைப்பழக்கம் எப்படி ஞாபக சக்தியை பாதிக்கிறது என்பது குறித்து திட்டவட்டமாக எதுவும் தற்போது தெரியவில்லையென்றாலும், நீண்டகால புகைப்பழக்கத்துக்கும் மூளையின் சில திசுக்கள் சிதைந்துபோவது அல்லது மூளையின் சில பாகங்களில் திசுத்திறன் இழப்பு ஏற்படுவதற்கும் தொடர்பு இருப்பதாக முந்தைய ஆய்வுகளில் கண்டறியப்பட்டது. மேலும், ஆய்வாளர் களின் யூகப்படி, புகைப்பழக்கமானது மூளையின் ப்ரீப்ரான்டல் கார்டெக்ஸ், ஹிப்போகேம்ப்பஸ் அல்லது தலாமஸ் ஆகிய பல பகுதிகளை சேதப்படுத்தக்கூடும் என்று தெரிகிறது. இவை அனைத்தும் `தொலை நோக்கு ஞாபக சக்தி'யுடன் தொடர்புடையவை என்பது குறிப்பிடத்தக்கது!
சிறிய அளவில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு முடிவுகளை, பல்லாயிரக்கணக்கான புகைப்பவர்களை நீண்டகாலம் சோதனை செய்வதன்மூலம் கிடைக்கும் முடிவுகளைக்கொண்டு மீண்டும் ஊர்ஜிதம் செய்ய வேண்டியது அவசியம் என்கிறார் மூத்த ஆய்வாளர் டாம் ஹெபர்னான்.
இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது? புகைப்பதால் கிக்கு மட்டும் ஏறவில்லை, நமக்குத் தெரியாமலேயே நமது தொலைநோக்கு ஞாபக சக்தியும் கொஞ்சம் கொஞ்சமாக குறைகிறது என்று தெரிகிறது. ஆக, இனி பொதுநல நோக்குள்ளவர்கள் `புகைக்காதே புகைக்காதே... உன் தொலைநோக்கு ஞாபக சக்தியை குறைக்காதே குறைக்காதே' என்று கோஷம் போட்டுக்கொண்டு ஊர்வலம் போனால்கூட தப்பில்லை என்றே தோன்றுகிறது!

உறவுகளை மேம்படுத்த உன்னத வழிகள்

Posted On March 2,2012,By Muthukumar
உறவுகளை மேன்மைப்படுத்த தவறியதன் விளைவாக , வாழ்க்கையில் எல்லாமே நமக்கு எதிராக இருப்பதைப்போன்ற எண்ணம் ஏற்படுகிறது. அவசரத்தில் நாம் எடுக்கும் எந்த ஒரு சின்ன விஷயமும் நமக்கு நெருக்கடியை ஏற்படுத்திவிடுகிறது. நிதானமாக யோசித்தால், நாம் பெரிதுபடுத்திய பல விஷயங்கள் அற்ப விஷயங்கள் என்பது புலனாகும். எதையுமே சாதாரணமாக எடுத்துக்கொண்டால் வாழ்க்கை எளிமையாகி விடுகிறது. உறவுகளை மேம்படுத்த உளவியாலாளர்கள் கூறிய ஆலோசனை பின்பற்றுங்கள் வெற்றிப்பாதைகள் தானாகவே திறக்கும்.
தவறான மனோபாவம்
சின்ன விஷயங்களைச் சின்ன விஷயங்களாக நாம் பார்க்க முடியாதபோது இனிய உறவுகளைக்கூட அவை பாதித்து விடுகின்றன. நாம் சிறு விஷயங்களை அலட்சியப்படுத்தத் தொடங்கிவிட்டால், அவை சக்தி இழந்து செயலற்றுப் போய் விடுகின்றன. யோசித்துப் பார்த்தால் எல்லாமே சின்ன விஷயங்கள்தான். ஒரு விஷயத்தை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்தே அதன் தன்மையும் அமையும். எல்லாவற்றுக்கும் நம்முடைய மனம்தான் காரணம். வாழ்க்கையில் ஏற்படுகின்ற பல இடர்ப்பாடுகளுக்கும் நம்முடைய தவறான மனோபாவங்களே காரணமாகின்றன.
முழுமையாக கேளுங்கள்
ஒருவருடன் பேச ஆரம்பிக்கும்போது, அவர் பேசுவதை முழுமையாகக் கேட்பது என்று முடிவு செய்து கொள்ளுங்கள். குறுக்கிட வேண்டும் என்று தோன்றினாலும் குறுக்கிடாதீர்கள். அவர் சொல்வதை நீங்கள் முழுமையாகக் கேட்ட பிறகு, நீங்கள் என்ன சொல்ல வேண்டுமென்பதைத் தீர்மானித்துத் தெளிவாகப் பேசுங்கள். மற்றவர்களை நீங்கள் பேச அனுமதித்து அக்கறையுடன் கவனிக்கின்றபோது, நீங்கள் சொல்வதையும் கவனிக்க வேண்டும் என்கிற ஆர்வம் அவருக்கும் தானாகவே ஏற்பட்டு விடும். இதைக் கடைபிடிக்க ஆரம்பித்தால் கருத்துப் பரிமாற்றம் எளிதாகும். மற்றவர்கள் அன்பும் சுலபமாகக் கிடைக்கும்.
எதிராளியை சந்தோசப்படுத்துங்கள்
ஒவ்வொருவரையும் திருத்திக் கொண்டிருப்பது நம்முடைய வேலை அல்ல. அது சாத்தியமுமில்லை. நம்முடைய நேரம்தான் வீணாகும். நம்முடைய குறைபாடுகளே நிறைய இருக்கும்போது, அவற்றை திருத்திக்கொள்ள முயற்சிக்காமல் மற்றவர்களை விமர்சிப்பது வீண் வேலை.
எதிராளியை மகிழ்ச்சிப்படுத்துங்கள்
நாம் நினைப்பதுதான் சரியாகவே இருக்கும் என நிரூபிப்பது அவசியமில்லை. நம்முடையதும், பிறருடையதும் சரியாக இருக்கும். பல சந்தர்ப்பங்களில் இரண்டும் ஒரே சமயத்தில் நடப்பதில்லை. இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது அவசியம். நம்முடைய அளவுகோல்களை வைத்துக் கொண்டு பிறருடைய அபிப்ராயங்கள் நம்மைப் பாதிக்காதவரை அதை மறுக்க வேண்டிய அவசியமில்லை. அந்த நிலை மற்றவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்குமானால், அதைக் கெடுக்காமல் அதில் நாமும் பங்கு பெறலாம்.
வாழ்க்கை எளிதாகும்
திருப்தி என்பது தொடுவானம் போன்றது. நெருங்க நெருங்க தூர விலகிச் சென்று கொண்டே இருக்கும். எனவே கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடைய வேண்டும். நாம் விரும்பியது கிடைக்காமல் போகும் சந்தர்ப்பங்கள் இருக்கத்தான் செய்யும். அதற்காக அதையே நினைத்துக் கொண்டு வாழ்க்கையை வீணாக்கி விடக்கூடாது. எது கிடைக்கிறதோ, அதை விரும்ப கற்று கொள்ள வேண்டும். விரும்புகின்றபடியே எல்லாம் நடக்காது என்ற யதார்த்தத்தை ஏற்றுக் கொண்டு நமக்கக் கிடைத்ததை விரும்புகின்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் வாழ்க்கை இலகுவாகி விடும்.
எதிர்மறைகளை விலக்குங்கள்
எதிர்மறையான, பலவீனமான எண்ணங்கள் மன அமைதியைத் தகர்த்து சீர்குலையச் செய்யும் சக்தி படைத்தவை. ஒரு எதிர்மறை எண்ணம் இன்னொரு எதிர்மறை எண்ணத்துக்கு உங்களை இட்டுச் சொல்கிறது. இதன் விளைவாக குழப்பம் மிக்க மனநிலைக்கு ஆளாவீர்கள். மேலும் மனமானது கவலை களும் வேதனைகளும் நிரம்பிய குப்பைத் தொட்டியாகி விடுகிறது. எதிர்மறை எண்ணங்கள் அல்லது கவலைகள் மனத்தில் வேகம் பெறுவதற்கு அனுமதிக்காதீர்கள். பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைப்பதற்குப் பதிலாக, பிரச்னைகள் பற்றிய கவலைகளே அதிகமாகி மனத்தில் பாரம் அதிகரித்து விடுகிறது.
நிதானத்தை கடைபிடியுங்கள்
நாம் விரும்புகின்ற விஷயங்களே நம்மைச் சுற்றி நிகழ வேண்டும் எதிர்ப்பார்ப்பது வீண். இருப்பதை அல்லது நடப்பதை அப்படியே ஏற்றுக் கொண்டு விட்டால் பொறுமையினை இழக்க வேண்டிய அவசியமே இருக்காது. பொறுமை இல்லாமல் போனால் வாழ்க்கையே ஏமாற்றம் நிறைந்ததாகி விடும். மற்றவர்களின் செயல்களைக் கண்டு பொறுமை இழக்காதீர்கள். அவர்கள் செய்வது அறியாமையின் விளைவு என்று நீங்கள் நினைத்தால், பொறுமை இழக்க வேண்டிய அவசியம் இருக்காது.
மன அமைதியே மனித ஆற்றலின் ஊற்றுக் கண்ணாகவும் விளங்குகிறது. அமைதி நிலையில்தான் ஆற்றலை முழுமையாக ஒருமுகப்படுத்தவும் முடியும். எனவே, மன அமைதிக்கு முதலிடம் கொடுங்கள், உறவுகள் கூடிவரும், சாதனைகள் தொடரும்.

Thursday, 1 March 2012

வந்துவிட்டது `தங்க நானோ போன்’

Posted On March 1,By Muthukumar

நம் ஊரில், தங்கம் பெரும்பாலும் ஆபரணங்களாகத்தான் இருக்கிறது. ஆனால் ஜெர்மனியில் சமீபத்தில் `நானோ போன்' ஆக மாறியிருக்கிறது.
செல்போன் தெரியும். மைக்ரோ போன் கூட தெரியும். அதென்ன நானோ போன்?
கண்ணுக்கு தெரியாத அளவில் மிகவும் சிறியதாக வடிவமைக்கப்பட்டு இருப்பவை மைக்ரோ போன்கள். ஒரு மைக்ரான் என்பது ஒரு மீட்டரில் 10 லட்சத்தில் ஒரு பகுதி. இப்போது மைக்ரோ போனை விட மிக மிக நுண்ணிய, நானோ அளவிலான ஒரு போனை ஜெர்மனியின் லுட்விக் மேக்சிமில்லியன் பல்கலைக்கழக ஆய்வாளர் அலெக்சாண்டர் ஓலிங்கர் தலைமையிலான ஆய்வாளர்கள் கண்டுபிடித்து அசத்தி இருக்கிறார்கள்.
வெறும் 60 நானோ மீட்டர் அகலமுள்ள இந்த நானோ போன் தங்கத்தால் ஆனது. ஒரு நானோ மீட்டர் என்பது ஒரு மீட்டரில் 100 கோடியில் ஒரு பகுதி. இதுவரை உலகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள போன்களில், ஒலியை மிக மிக துல்லியமாக கவரக் கூடிய விதத்தில் இந்த நானோ போன்களுக்கே முதலிடம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதெல்லாம் சரிதான், இந்த நானோ போனை எப்படி உருவாக்கினார்கள்?
முதலில், வட்ட வடிவமான தங்க நானோ துகள்கள் தண்ணீரில் மிதக்க வைக்கப்பட்டன. அதில் ஒரு துகள் மீது லேசர் ஒளி பாய்ச்சப்படும்போதே, அதற்கு சில மைக்ரோ மீட்டர்கள் தொலைவில் உள்ள மற்ற நானோ துகள்கள் மீது மற்றொரு லேசர் ஒளி சிறு சிறு கற்றைகளாக விட்டு விட்டு பாய்ச்சப்பட்டது. இதனால் வெப்பமடைந்த நானோ துகள்கள் அவற்றை சுற்றியுள்ள தண்ணீரை பாதிக்கவே, அழுத்தம் அல்லது ஒலி அலைகள் உருவானது.
இதற்கிடையில், மற்றொருபுறம் லேசர் ஒளி பாய்ச்சப்பட்டுக் கொண்டிருந்த ஒரு நானோ துகள் பிற நானோ துகள்களால் எழுப்பப்பட்ட ஒலி அலைகளுக்கு ஏற்ப அசைந்தாடுவது போல் முன்னும் பின்னுமாக ஆடத் தொடங்கியது. இந்த ஒரு நானோ துகளின் ஆட்டம் வெப்பத்தால் பாதிக்கப்பட்ட தண்ணீர் மூலக்கூறுகளால் ஏற்பட்டதா என்பதை தீர்மானிக்க பிற நானோ துகள்கள் ஏற்படுத்திய ஒலி அலைகளின் அலைவரிசை எண் மாற்றப்பட்டது.
இவ்வாறு அலைவரிசை எண் மாற்றப்பட்ட ஒவ்வொரு முறையும், லேசர் ஒளிக்கற்றை பாய்ச்சப்பட்ட ஒரு நானோ துகளின் அலைவரிசை எண்ணும், பிற துகள்களின் அலைவரிசை எண்ணும் ஒத்துப்போனது. அதுமட்டுமல்லாமல், தனியாக வைக்கப்பட்ட ஒரு நானோ துகளின் ஆட்டமும் பிற நானோ துகள்கள் ஏற்படுத்திய ஒலி அலைகளின் திசையிலேயே இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆக, தனியாக வைக்கப்பட்ட ஒரு நானோ துகள் ஒன்றாக இருந்த பிற நானோ துகள்களால் ஏற்படுத்தப்பட்ட ஒலி அலைகளுக்கு ஏற்பத்தான் ஆடியது என்பது நிரூபணம் ஆனது.
மனித காதுகளால் உணரப்படும் ஒலியில் இருந்து 60 டெசிபல்கள் (அதாவது, ஒரு மில்லியனில் ஒரு பகுதி) குறைவான ஒலியை இந்த அதி நவீன நானோ போன் கொண்டு உணர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அளவுக்கு குறைவான ஒலியை உணரும் ஒரு ஒலிக் கருவியை இதுவரை யாரும் கண்டுபிடிக்கவில்லை.
ஆமாம், இந்த நானோ போனை வைத்துக்கொண்டு என்ன செய்வது?
இந்த நானோ போன் தொழில்நுட்பத்தைக் கொண்டு, மிக நுண்ணிய உயிர்களான வைரஸ்கள் மற்றும் உடலின் உயிரணுக்கள் ஏற்படுத்தும் ஒலியைக் கூட துல்லியமாக கேட்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்கிறார்கள் இதன் கண்டுபிடிப்பாளர்கள். உண்மைதான் என்று ஆமோதிக்கிறார் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆய்வாளர் சாங்குவே யாங்!
மேலும், உயிரணுக்கள் அதிர்வது மட்டுமே மைக்ராஸ்கோப் மூலம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் அவை ஏற்படுத்தும் ஒலிகளை யாரும் இதுவரை பதிவு செய்யவில்லை. இதனை செயல்படுத்தும் ஒரு தொழில்நுட்பத்தை கண்டுபிடித்திருக்கிறார்கள் என்கிறார் யாங்.
உயிரணுக்கள் மற்றும் நுண்ணிய உயிரிகள் ஏற்படுத்தும் ஒலிகளை நானோ போன் கொண்டு பதிவு செய்வதன் மூலம் அவற்றின் இயங்குதன்மை, குணாதிசயங்கள் மற்றும் நோய்வாய்ப்படுவதால் உயிரணுக்கள் எப்படி மாற்றமடைகின்றன போன்றவற்றை புரிந்துகொள்ள முடியும். ஆக, நானோ போன் வருகை மருத்துவத்துக்கும், ஆய்வுலகத்துக்கும் பேருதவியாக இருக்கும். அது மட்டுமல்லாமல், இனி பாக்டீரியாக்கள், வைரஸ்கள் எல்லாம் என்ன பேசிக்கொள்கின்றன என்றும் இதன் மூலம் ஒட்டுக் கேட்கலாம்.

Monday, 27 February 2012

இந்தியாவிற்குள் பயண திட்டத்தை செயற்படுத்த உதவும் தளம்


 


இந்திய நகரங்களுக்கிடையே விரைவானதும் ,குறைந்த கட்டணத்தில் பயணங்களை மேற்கொள்ளவும் எமக்கு வழிகாட்டியாகவும் ,எமது பயண திட்டங்களை முன்கூட்டியே செயற்படுத்தவும் உதவுகிறது WWW.90DI.COM எனும் தளம் . 

இந்த இணைய உதவியுடன் விமானம் ,புகையிரதம் ,பேரூந்து என அனைத்து வகையிலும் பயண வசதியை தேடல் செய்ய முடியும் . புறப்படும் நேரம் , காலம் ,கட்டணம் என்பவற்றை கொண்டு பயண திட்டத்தை குறைந்த செலவில் திட்டமிட முடியும் .

தள முகவரி http://www.90di.com