Showing posts with label ஆறாத புண். Show all posts
Showing posts with label ஆறாத புண். Show all posts

Friday, 15 August 2014

நீரிழிவினால் ஆறாத புண்களை ஆற்றும் சிகிச்சை முறைகள்…!


ஒவ்வொரு 20 நொடிகளுக்கு ஒருவர் தன் காலில் ஒன்றை நீரிழிவி ன்பாதிப்பினால் இழக்கிறார் என்பது புள்ளி விவரங்கள் தெரிவிக்கிற கசப் பான உண்மை.
இந்தியாவில் மட்டும் 2030 -ம் ஆண்டி ற்குள் 10 கோடி பேர் நீரிழிவினால் பாதி க்கப்படுகிறார்கள் என்பதும் அதில் 15% பேர்களுக்கு கால்களில் பிரச்சினை ஏற் படலாம் என்பதும் அதிலும் ஒன்று முத ல் இரண்டு சதவிகிதம் பேர் கால்களை இழக்கலாம் என்பதும் எதிர்பார்க்கப்படு ம் விளைவுகளாகும் நம் பாதங்கள் 29 மூட்டுக்களும், 26 எலும்புக ளும் 42 தசைகளும் கொண்டு
இயங்கும் சிறப்பான பொறியியல் படைப் பாகும்.
நீரிழிவினால் பாதங் களுக்கு ஏற்படும் மு தல் பாதிப்பு நியூரோ பதி என்ற நரம்புகளின் செயற்பாட்டுக் குறை. இதனால் பாதத்தில் உணர்வு குறைந்து பாதத்திற்கு ஏற்படும் காயமோ, வலியோ நோயாளிகளுக்கு தெரியாமல் போகிறது. கிருமி தொற்றினால் புண் பெரி தாகி, புரையோடி பாதத்தின் தசைகளில் செல்கள் இறந்து விடுகின் றன.
இந்நிலையில் நன்றாக இருக்கும் பகுதிகளை காப்பாற்ற பாதிக்கப் பட்ட பகுதியை துண்டிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் விரல் அளவிலோ, முழு பாதம் அளவிலோ அல்லது கெண்டைக்கால் வரையிலோகூட அறுவை சிகிச்சையில் அகற்றவேண்டிய நிலை ஏற்படலாம். ஆனால் இவ்விளைவுகளை முறையான பாது காப்பு மருத்துவ முறைகள் மூலம் தடுக்கலாம்.
கால்களில் உணர்வு குறைதல்:
கால்களில் உள்ள நரம்புகள் மற்றும் ரத்தக் குழாய்களில் செயற் குறைபாடு ஏற்படும்போ து கால்களில் உணர்வு குறைகிறது. இது நீரி ழிவு நோயாளிகளுக்கு தான் பெரும்பாலும் ஏற்படுகிறது.
சரியான செருப்பு அணியாமல் இருந்தாலோ அல்லது வேறு சில காரணங்களாலோ காய ம் ஏற்படும்போது உணர்வு இல்லாமையால் அவர்களுக்கு உடனடியாக அது தெரிவதில்லை. தெரிந்த பின்பும்ரத்த சர்க்கரை அளவு, கிருமி தொற்று போன்றவற்றினாலும் புண் ஆறாமல் இருந்து விடுகிறது.
ஹைகேர் மையத்தின் சிறப்பு என்ன வென்றால் ஆறாத புண்களை நவீன தொழில்நுட்ப கருவிகள் மூலம் குண ப்படுத்துவதும், உணர்வற்ற கால்க ளுக்கு மீண்டும் உணர்வை கொண்டு வருவதும் என்பது குறிப்பிடத்தக்கது. கால்களில் உணர்வு குறைந்துவிட் டால் அதை சரிசெய்ய முடியாது என் ற நிலையை முழுவதுமாய் மாற்றிய மைக் கும் சிறப்பான சிகிச்சை இங்கு அளிக்கப்படுகிறது.
கால்களில் இரத்த ஓட்டத்தை துல் லியமாக அளப்பதற்கு ‘‘வேஸ்குலா ர் டாப்லர் ரெக்கார்டர்’ என்ற கருவி யும், நரம்புகளின் செயல்பாட் டை அறிந்து கொள்ள ‘பைப்ரோதர்ம்’ எ ன்ற கருவியும் உபயோகப்படுத்தப்ப டுகிறது. மேலும் ஆறாத புண் உள்ள செல்களில் ஆக்சிஜன் அளவு குறை ந்திருந்தாலும் புண் ஆறாமல் இருக் கும் என்பதால் புண் உள்ள இடத்தில் தோலின் ஆக்சிஜன் அளவை அளக் க கருவி உபயோகப்படுத்தப்படுகிற து.
இப்பரிசோதனைகளுக்குப்பின் அதற்கேற்ற முறையான சிகிச்சைஅளிக்கப்படுகிறது. கால்களில் வலி போன்றவற்றை குணப்படுத்த அனோடைன் தெரபியும், கால் புண் உள்ள தோல்களுக்கு ஆக்சிஜன் அள வை கூட்ட ‘ஹைப்பர் பேரிக் ஆக்சி ஜன் தெரபி (ஹெச்.பி.ஓ.டி.) என்ற சிகிச்சை முறையும் அளிக்கப்படுகி றது.
ஹெச்பிஓடி என்ற இம்முறையில் நோயாளி பிரத்யேகமான ஒரு சேம்பரில் வசதியாய் படுத்துக்கொ ண்டு சுத்தமான ஆக்சிஜனை சுவாசிக்கிறார். இதனால் உடலின் எல் லா செல்களுக்கும் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் மூலம் மட்டுமின்றி ரத்தத்தின் பெரும் பகுதியான பிளாஸ்மா மூலமு ம் செறிவான அளவில் ஆக்சி ஜன் செல்களை சென்றடைகி றது.
இதனால் செல்களின் செயல் பாட்டுக்கு புத்துணர்ச்சி கிடை ப்பதுடன், புண்களில் வளர்ந்து தொற்று ஏற்படுத்தும் பாக்டீரியாக்க ளை அழிக்கவும் உதவுகிறது. நியூரோபதி உள்ள நோயாளிகள் நடைப்பயிற்சி செய்வதில் கவன மாக இருக்க வேண்டும். எப் பொழுது நடக்கலாம், எவ்வள வு நடக்கலாம், எப்பொழுது நட க்கக்கூடாது என்பதை இங்குள் ள மருத்துவர்கள் முறையாக பரிந்துரைக்கிறார்கள்.
நடைப்பயிற்சி நல்லது என்றாலும் சில நேரங்களில் நடப்பதே கால் களுக்கு மட்டுமின்றி உயிருக்கே கூட ஆபத்து ஏற்படலாம் என்பதைபுரிந்து கொள்ள வேண்டும்.
* ஆறாத புண்கள் குறிப்பாக நீரி ழிவு நோயாளிகளுக்கு ஏற்படு வதை சரி செய்வது
* திசுக்கள் காயங்களினால் கூழாகி விடும் நிலையை சரி செய்வது
* கிருமி தொற்றுகளினால் பாதிக்கப்பட்ட விட்ட திசுக்கள் மற்றும்தசைகள் ஆறுவதற்கு உதவுவது.
*காயங்களில் தொற்று உண்டாக்கும் சிலவகை பாக்டீரியா வெளிப்படுத்து ம் நச்சு பொருட்கள், திசுக்கள் மற்று ம் சிறுநீரகத்தை பாதிப்பதை தடுப்பது
* உணர்வற்ற பாதங்கள் மற்றும்கால் களுக்கு உணர்வு நிலையை திரும்ப கிடைக்க செய்வது நியூரோபதி நரம் பு சிகிச்சை
- பாதங்களில் ஏற்படும் எலும்புகளி ன் சேதங்களை சரி செய்வது என சிறப்பான சேவைகளை மருத்துவர் கள் செய்து வருகின்றனர்.

Tuesday, 17 April 2012

ஆறாத புண்ணை ஆற்றிடும் - ரஸகற்பூர லேபம் -Rasakarpoora lepam

Posted On April 17,2012,By Muthukumar
தேவையானமருந்துகளும் செய்முறையும்:


1.            ரஸகற்பூரம் (பூரம்) – ரஸகற்பூர          10 கிராம்
2.            வங்க ஸிந்தூரம் – கிரிஸிந்தூர           20           “
3.            மிருதார் சிங்கி – ம்ருத்தார ஸ்ருங்க     20           “

இவைகளைத்தனித்தனியே கல்வத்திலிட்டுப் பொடித்து ஒன்று சேர்த்தரைத்து அதை

1.            தேங்காய் எண்ணெய் – நாரிகேள தைல     400 கிராம்
2.            தேன் மெழுகு – மதுச்சிஷ்ட                100         “

இவைகளைக் கொண்டுமுறைப்படி தயாரித்து ஆறிய களிம்புடன் கலந்து பத்திரப்படுத்தவும்.

பயன்படுத்தும்முறை:      

 மேற்பூச்சாக (அப்யங்க) வெளிஉபயோகத்திற்கு மட்டும். நல்லெண்ணெய்யுடன் கலந்து பூசலாம்.

தீரும் நோய்கள்:  

பரங்கிப்புண் (உபதம்ஷஜவ்ரண, பிரங்கஜவ்ரண), ஆறாத புண்கள் (துஷ்டவ்ரண), காயங்கள், படை (விஸர்ச்சிகா), நமைச்சல் (கண்டு), பாதிக்கப்பட்ட பகுதியை நன்கு சுத்தம்செய்துவிட்டு இதனைப் போடவும்.

தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. ஆறாத புண்ணை ஆற்றிடும்
  2. நாள்பட்ட காயங்களுக்கு இந்த மருந்தை பயன்படுத்தலாம்