Saturday, 3 September 2011

காம உணர்ச்சியை பன்மடங்கு பெருக்கும் அத்திப்பால்


காம உணர்ச்சியை பன்மடங்கு பெருக்கும் அத்திப்பால்

பாட்டி வைத்தியம் – மாற்றடுக்கில் அமைந்து முழுமையான இலைகளை உடைய பெரு மர வகை. பால் வடிவ ச் சாறு உடையது. பூங்கொ த்து வெளிப்படையாகத் தெ ரியாது. அடி மரத்திலேயே கொத்துக் கொத்தாகக் காய் க்கும். தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கி றது. இலை, பிஞ்சு, காய், பழம், பட்டை ஆகி யவை மருத்துவப் பயனுடையவை.
பட்டை, பிஞ்சு, காய் ஆகியவை சதை, நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும், பழம் மலமிளக்கியாகவும், பிஞ்சு, பழம், பால் ஆகியவை காமம் பெருக் கியாகவும் செய ற்படும்.
* அத்திப்பால் 15 மில்லியுடன் வெண்ணெய், சர்க்கரை கலந்து காலை, மாலை, கொடுத்து வர நீரிழிவு, குருதி கலந்த வயிற்றுப்போ க்கு, பெரும்பாடு, சிறுநீரில் குருதி கலந்து போதல், நரம்புப் பிடிப்பு, பித்தம் ஆகியவை தீரும்.
* அத்திப் பாலை மூட்டுவலிகளுக்குப் பற்றிட விரைவில் வலி தீரும்.
*முருங்கை விதை, பூ னைக்காலி விதை, நலப் பனைக் கிழங்கு, சர்க்க ரைக்வள்ளிக் கிழங்கு சமனளவாக இடித்துச் சலித்த 5 கிராம் பொடி யில் 5 மி.லி. அத்திப் பாலைக் கலந்து காலை, மாலையாக 20 நாள்கள் கொடுக்க அளவு கடந்த தாது வளர்ச்சியைக்கொ டுக்கும்.
* அத்திப் பட்டை, நாவல் பட்டை, கருவேலம்பட்டை, நறு விளம்பட்டை சமனளவு இடித்த பொடியில் 5 கிராம் 50மி.லி. கொதி நீரில் ஊறவைத்து வடி கட்டி நாள்தோறும் மூன்று வே ளை கொடுத்துவர பெரும்பாடு, சீதபேதி, இரத்தப்பேதி ஆகிய வை தீரும்.
* அத்திப்பிஞ்சு, கோவைப்பிஞ்சு, மாம்பட்டை, சிறுசெரு ப்படை சமனளவு எடுத்து வாழைப்பூச் சாற்றில் அரைத்துச் சுண்டைக் காய் அளவு மாத்திரைகளாக உருட்டி வைத்துக் காலை, மாலை வெந்நீரில் கொள்ள ஆச னக் கடுப்பு, மூலவாயு, இரத்த மூலம், மூலக்கிராணி (வயி ற்றுப் போக்கு) தீரும்.
* அத்திப்பழத்தை உலர்த்தி இடித்துப் பொடி செய்து 1 தேக்கரண்டி காலை, மாலை பா லில் உட்கொள்ள இதயம் வலுவாகும். இரத் தம் பெருகும்.
* அத்தி, அசோகு, மா ஆகியவற்றின் பட்டை களைச் சேர் த்துக் காய்ச்சிய குடிநீர் காலை, மாலை குடித்து வர தீராத பெரும்பாடு தீரும்.

எப்பேற்பட்ட விஷத்தையும் முறிக்கும் தன்மைகொண்ட வசம்பு

எப்பேற்பட்ட விஷத்தையும் முறிக்கும் தன்மைகொண்ட வசம்பு

இயற்கையில் கிடைக்கும் ஒவ்வொரு மூலிகையிலும் ஒவ் வொரு மருத்துவ குணம் உள்ளது. அதை முறை யாக பயன் படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். அதற்கு அதில் உள்ள மரு த்துவ குணங்களை முத லில் தெரிந்து கொள்ள வே ண் டும்.
வேப்பிலை, வில்வம், அத் தி, துளசி, குப்பைமேனி, கண்ட ங்கத்தரி, கீழாநெல்லி, வசம்பு என சொல்லிக் கொண் டே போகலாம். இதில் பிள்ளை வளர்ப்பான் என்று அழைக்க கூடிய வசம்பின் மருத்துவ குணத்தைப் பார்க்கலாம். 
அகோரஸ் காலமஸ் (Acorus Calamus) என்ற அறிவியல் பெயர் கொண்ட இது ஆங்கிலத்தில் ஸ்வீட் ஃப்ளாக் (Sweet Flag) என்று அழைக்கப்படுகிறது. பாட்டி வைத்தியம் என்று நம் முதியோர்கள் அடிக்கடி வீட்டு வைத்தியத்தில் சேர்ப்பது இந்த வசம்பைத் தான். கிராமத்தில் உள்ளவர்கள் இன்றள விலும் சரி காய்ந்த வசம்பை சூடுபடுத்தி பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பார்கள். இதனால் குழந்தைகளுக்கு பசியின்மையோ , சின்ன சின்ன தொற்றுநோய்களோ வராமல் தடுக்கப்படு கிறது. இதனாலேயே இது பிள்ளை வளர்ப்பான் என்று கூறப் படுகிறது.
* சுடு தண்ணீர், கருவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்று டன் வசம்பை கலந்து கிருமிநாசினியாக பயன்படுத் தலாம். 
* வசம்பை தூள் செய்து இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தே னில் கலந்து சாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களு ம் நீங்கி விடும். இது எல்லா நாட் டு மருந்து கடை களிலும் கிடைக் கும்.
* இதில் முக்கிய விஷயமாக சொல்ல வேண்டுமென்றால் வசம்பை விஷம் அருந்தியவர்க ளுக்கு உடனேயே இரண்டு, மூன்று டீஸ்பூன் கொடுத்தால் விஷம் வெளியே வந்து விடும்.
* கால்நடைகளுக்கு தொற்று நோய்கள் பரவாமல் இருக்கவும் பயன்படுகிறது.
* பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பசியைக் கொடுக்கவும், சோம்பலை நீக்கவும் வசம்பு பயன் படுகிறது.

அழகு குறிப்பு: கால் வெடிப்பு குணமாக . . .

அழகு குறிப்பு: கால் வெடிப்பு குணமாக . . .

தரையைச் சுத்தம் செய்யப் பயன்படும் சில சோப் ஆயிலில் உள்ள கெமிக்கல், கால்களில் பட்டால் ஒரு சிலருக்கு வெடிப்பு உண்டாகும். கடினமான செருப்பு அணிவதாலும் பாத வெடிப்புகள் வரும். சிலர் பாதங்களை சுத்தமாக வைத்து கொள்வது இல்லை.இதனாலும் பாத வெடிப்புகள் வரும்.அதை போக்க சில எளிய வழிகள்  இதோ:
ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை பழ தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். இது வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தை சுத்தமாக்கும் மேலும் கிருமிகளை ஒழிக்கும்.
கடுகு எண்ணெயை தினமும் கால், கைகளில் தேய்த்து கழுவி வந்தால், சொரசொரப்பு தன்மை நீங்கி, மிருதுவாகும். முதல் நாள் பாத்திரம் தேய்க்கும் நாரில் தயிரை தொட்டு உள்ளங்காலில் தேய்க வேண்டும். மறுநாள்  தண்ணீரில் கல் உப்பைப் போட்டு நாரில் தொட்டு தேயுங்கள்.
தொடர்ந்து இப்படி மாறி மாறி  செய்து வர, பாதம் மெத்தென்று ஆகும். வெந்தயக் கீரையை அரைத்து கை, கால்களில் அப்பி பின் தேய்த்து கழுவி வந்தாலும், முரட்டுத் தன்மை போய் கை, கால்கள் பளிச்சென்று மாறும்.
மருதாணி பவுடருடன் டீத்தூள்,  தேங்காய் எண்ணெய் கலந்து கை, கால்களில் இட்டுக் கொள்வது மிகவும் நல்லது. இது வெடிப்பு மற்றும் சொர சொரப்பை நீக்கி உடலை குளிர்ச்சியாக்கி, பஞ்சு போன்று மென்மையாக்கும்.
உருளைக்கிழங்கை காய வைத்து பவுடராக்கி பின் அதை தண்ணீரில் குழைத்து பூசி வந்தாலும், வெடிப்பினால் ஏற்பட்ட கருமை நீங்கி, பாதம் மிளிரும்.

Friday, 2 September 2011

எறும்புகளை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்

எறும்புகளை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் 

1.அதிகபட்சமாக ராணி எறும்பு 30 வருடம் வரையும், வே லை யாட்களும் காவலாளிகளு ம் 3 வருடம் வரையும், ஆண் எறும்பு சில மாதமும் உயிர் வாழ்கின்றன. (பூச்சி இனங்களி ல் மிகவும் அதிக காலம் உயிர் வாழக்கூடிய இனமாக ராணி எறு ம்பு உள்ளது)
2. ஒரு எறும்பு கூட்டத்தில் (கூட் டில் அல்லது புற்றில்) சில நூறு முதல் பல லட்சம் வரையிலான எறும்புகள் உயிர் வாழ்கின்றன.
3. ஒரு கூட்டத்திற்கு ஒன்றிக்கு மேற்பட்ட ராணிகளும் இருக் கும். அதே வேளையில் ராணி இல்லாது எறும்பு இருப்பது இல்லை.
4. எறும்பு இனமானது மிகசிறியது முதல் 5 சென்டிமீட்டர் (2 அங்குலம்) வரை உள்ளன. 10000 மேலான வகைகளில் உ ள்ள எறும்புகளின் உணவானது தானியம், பங்கஸ், தேன் என பல வகைகளில் அடங்கும்.
5. மிகவும் சிறந்த மோப்ப சக்தி (வாசனை நுகரும் சக்தி), கண் பார்வை உடைய எறும்புகளு க்கு சுவாசப்பைகள் இல்லை.
6. எறும்புகள் தமது உடல் எ டையை விடவும் 50 மடங்கு சுமையினை சுமக்க வல்லன.
7. எறும்பு பற்றிய கற்றல் (ஆராய்ச்சி) MYRMECOLOGY என அழைக்கபடுகிறது.
8. எறும்பின் மூளையில் 250000 கலங்கள் இருப்பதாக கண்ட றியப்பட்டுள்ளது.
9. உலகில் மூன்றில் ஒரு பங்கு எறும்பு கூட் டம் அமேசான் காட்டில் இருப்பதாக ஆராய்சிக ள் தெரிவிக்கின்றன.
10. மிகவும் திடகாத்திர மான சமூக அமைப்பி னையும் பிராந் திய எல்லைகளையும் கொண்டுள்ள எறும்பு இனமானது வெப்பமானதும் ஈரப்பதம் உள்ள பகுதிகளில் பெருமளவில் கூட்டங்களை கொண்டுள்ளது.

11. குடியிருப்பு இடங் களான நிலம், மரம், நிலத்தின் கீழ் என பல சிக்கல் நிறைந்த இயற்கையுடன் கூடி ய வாழ்வியலை கொ ண்டுள்ள எறும்பு இன மானது மிகசிறந்த உயிர் தப்பி வாழும் ( SURVIVAL ) உயிரின ங்களில் முக்கியமானதாகவும் உள்ளது.
12. எறும்புகளின் மிகவும் ஒழுங்கான கட்டமைப்புகள் சமூக வாழ்வு, தமது வாழ்விடத்தை தமக்கு ஏற்றவாறு மாற்றிய மைக்கும் இயல்பு, தம்மைதாமே பாதுகாத்துக்கொள்ளும் திறன் போன்றவையே எறும்புகளின் வெற்றிக்கு காரணங்க ளாக உள்ளன என்கின்றனர் ஆய்வாளர்கள்.

உடலுறவுக்கு வலிமை ஊட்டும் உணவுகள்

உடலுறவுக்கு வலிமை ஊட்டும் உணவுகள்

கஜுராஹோவையும், காம சூத்திரத்தையும் உலகுக்கு அளித்த நம் தேசத்தில் 30 கோடி மக்கள் பாலியல் குறைபாடுகளுடன் வாழ் வதாக தகவல்கள் தெரிவி க்கின்றன. அதனால்தான் நமது புராதன இந்திய சமையல் குறிப்புகளில், காதலை தூண் டும் உணவுப் பொருள்கள் பற்றி எழுதிவைத்துள்ளனர்.
உணவுகள் காதல் செயல்பாடு களை தூண்டுமா என்ற கேள் விக்கு விஞ்ஞானத்தில் பதில் ‘ஆமாம்’! என்றுதான் சொல்லப்பட்டு ள்ளது. அந்தந்த ஊருக்கு ஏற்றபடி காதல் உணவுகள் மாறுகின்றன. அரேபி யருக்கு ஒட்டக திமிழும்,ஸ்பெயின் நாட்டவருக்கு குங்கும ப்பூவும், சீனர்களுக்கு பறவைக்கூடு சூப்பும் பாலுணர்வு தூண்டும் உணவாக குறிப்பிடப் பட்டுள்ளன.
வைட்டமின்களும் தாது உப்புகளும்
ஆண்மை வீரியத்தை அதிகரிக்க துத்த நாகம் இன்றியமையாதது.
எல்லா பழங்களிலும் காய்கறிகளில் இரு க்கும் பொட்டாசியம் ஆண் மை வீரியத்தை அதிகரிக்கும். செலினியம் உள்ள வெண் ணெய், மீன்கள், முழுக்கோதுமை, எள் முதலி யவைகளும் காதல் உண வுகள்
மங்கனீஸ் அடங்கிய கொட்டைகள், விதைகள், முழுத்தானியங்கள் முதலிய வைகளும் பாலியல் ஆற்றலுக்கு உதவும். பாஸ்பரஸ், தாதுப்பொருளும் ‘தாது விருத்திக்கு’ உதவும். வைட்டமின் ‘இ’,‘சி’,‘ஏ’,‘பி’ காம்ப்ளெக்ஸ், ஃபோலிக் அமிலம், விட்டமின் பி 6, பி 12, இருக்கும் உணவுகள்
பிரசித்தி பெற்ற உணவுகள்
பாதாம் பருப்பு – தொன்று தொ ட்டு ஆண்மையையும், மக்க ளைப் பெற சக்தி அளிக்கும் உணவாக கருதப்படு கிறது. கரு மிளகு, தேன், மிளகாய் முதலியன பாலுணர்வை தூண்டும் உணவாக கூறப் படுகின்றன.
ஆயுர்வேதத்தின் படி கோதுமை அரிசி, உளுத்தம் பருப்பு இவை ஆண்மையை ஊக்குவிக்கும், விந்துவின் தரத்தை உயர்த்தும். சோம்பு சமையலிலும் பயன்படுகிறது. மைய லிலும் பயனாகிறது!
வாழைப்பழம்
பொட்டாசியமும் ‘பி’ விட்டமின்களும் செக்ஸ் ஹார்மோனை தயா ரிக்கத் தேவை. எனவே வாழைப்பழம் ஒரு ஆண்மையை பெருக் கும் முக்கியமான பழமாக கருதப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் துளசி ஆண்க ளின் பாலுணர்வு ஆர்வத்தை தூண்டு கிறது. வாழைப்பழத்தில் உள்ள ஒரு வேதிப்பொருள் செக்ஸ் உணர்வை அதிகரிக்கும். பப்பாளி, மாம்பழம், கொய்யா பழம் இவைகளும் சிறந்த இளமை காக்கும் பழங்கள். கொய்யாப்பழம் பெ ண்களின் ஜனனேந்திரிய உறுப்புக்க ளின் தசைகளை வலுப்படுத் தும்.
சாக்லேட்
சாக்லேட் ஒரு ஆன்டி – ஆக்சி டான்ட். இதில் உள்ள தியோப் ரோமைன் வேட்கையை பெருக்கும். பால் அதுவும் எருமைப்பால், தயிர்(பகலில்) மோர், வெண்ணை, நெய் இவை இல்லாமல் இந்திய உணவுகள் இல்லை. இவையெல்லாம் உடலுறவுக்கு வலிமை ஊட் டும் உணவுகள்.
காதல் ஆப்பிள்
வெங்காயம் தொன்றுதொற்று இந்தியாவில், எகிப்தில், அரேபி யாவில் ஆண்மை ஊக்கியாக பயன்படுத்தப்பட்டு வரும் காய் கறி யாகும். அதுவும் வெள்ளை வெங்காயம் சிறந்தது. வெள் ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி உண்ண வேண்டும். “ஆனியன் சூப்” புத்துணர்ச்சி ஊட்டும். இவை தவிர குடமிளகாய், இஞ்சி, செலரி, வெள்ளரி, தனியா இவைகளும் உதவும்.
Quantcast

Wednesday, 31 August 2011

தம்பதியர் எந்த காலங்களில் செக்ஸ் உறவு வைத்திருக்க கூடாது

தம்பதியர் எந்த காலங்களில் செக்ஸ் உறவு வைத்திருக்க கூடாது

கர்ப்பமாக இருக்கும் போதும் முதல் மூன்று மற்றும் கடைசி மூன்று மாதங்களைத் தவிர்த்து இடைப் பட்ட மாதங்களில் மிதமான செக்ஸ் வைத் துக் கொள்ளலாம். கர்ப்பிணி மனைவியை க் கட்டாயப்படுத்தி உறவு வைத்துக் கொண் டால், அவளது உடல் மற்றும் மனம் பாதிக் கப்படுவது மட்டுமின்றி பிறக்கும் குழந்தை யின் மனநிலையும் பாதிக்கப் படக்கூடும்.
* பிரசவத்திற்குப் பிறகு சில தகவல்களைக் கருத்தில் கொ ண்டே தம்பதியர் உறவில் ஈடுபட வேண் டும். அதாவது பிரச வம் சிக்கலின்றி அமைந்ததா, சுகப் பிரசவமா அல்லது சிசே ரியனா என்று பார்க்க வேண்டும்.
* சாதாரணமாக குழந்தைப் பேற்றுக்குப் பிறகு ஒரு பெண் ணின் கருப்பை சுருங்கி இயல்பு நிலையை அடைய ஆறு வாரங் களாகும். இது தோராயக் கணக்குதான். சில பெண் களுக்கு அவரவர் உடல்நிலையைப் பொறுத்து இந்தக் கண க்குக் கூடலாம். எனவே அப்பெண்ணின் உடல்நலம் சீராக இருப்ப தாக மருத்துவர் உத்தரவா தம் கொடுத்த பிறகே உறவு கொள்ள வேண்டும்.
* குழந்தை பிறக்கும் போது பெண்ணின் உடலுறவுப் பா தையில் காயங்கள் ஏற்பட் டிருந்தால் அவை ஆறுகிற வரை உறவைத் தவிர்க்க வேண்டும்.
* கணவனுக்குத் தொற்றும் வகையில் ஏதேனும் நோய் இருந்தால், அது முற்றிலும் குணமாகிற வரை மனைவி அவ னுடன் உறவைத் தவிர்க்க வேண்டும்.
* பிரசவத்திற்குப் பிறகு பெண்ணி ன் உடல்நலம் முற்றிலும் சரி யாகி விட்ட போதிலும், அவளு க்கு உறவில் விருப்பமில்லை எ ன்று தெரிந்தால், அதற்குக் கட்டா யப்படுத்துவது கூ டாது.
* உறவில் ஈடுபடும் போது உடலு றவுப் பாதையில் கடுமை யான எரிச்சலோ, வலியோ இருந்தால், அதை உடனடியாகத் தவிர்ப்பது நல்லது.
* கருச்சிதைவுக்குள்ளானவர்களு ம், குறை மாதப் பிரசவத்துக்கு ஆளானவர்களும் மருத்துவரின் ஆலோசனையின் பேரிலே யே உறவைத் தொடங்க வேண்டும்.
* மாதவிலக்கு நாட்களில் உறவு கொண்டால், கருத்தரிக்கா து என்று பலரும் அந்நாளில் உற வு கொள்ள நினைப்ப துண்டு. ஆ னால் அதை முழுமையாக நம்பு வதற்கில்லை. அந் நாட்களில் உறவு கொள்வதன் மூலம் கண வன் -மனைவி இருவருக்குமே தொற்று நோய்கள் பரவ வாய் ப்புகள் அதிகம்.
* பெண் நோய் வாய்ப்பட்டிருந் தால் அந்நாட்களில் உறவைத் தவிர்ப்பதே நல்லது.
 * கைக் குழந்தையிருக்கும் போ து உறவில் ஈடுபட்டால் தாய் ப்பால் இல்லாமல் போய் வி டும் என்று பல பெண்கள் அதைத் தவிர்ப்பதுண்டு. ஆனால் இது வெறும் மூட நம்பிக்கை யே. குழந்தை பிறந்து, குறுகி ய காலத்திலேயே உறவு கொ ண்டால் கடுமையான வலி இருக்கும் என்ற பயத்திலே யே அதைத் தவிர்க்கச் சொல் கிறார்கள்.
* பிரசவித்த பெண்கள் தாய்ப் பால் கொடுப்பதே கருத்தடை முறை என்று நினைத்துக் கொண்டு, தைரியமாக உறவு கொள்வதுண்டு. ஆனால் அதை நூறு சதவிகிதம் நம்ப வேண் டாம். ஏதாவதொரு கார ணத்தால் பால் வற்றிவிட்டால், அந்தப் பெண் கருத்தரிக்க வாய்ப்புகள் உண்டு.

Monday, 29 August 2011

உருத்திராட்சத்தின் பெருமைகள்

உருத்திராட்சத்தின் பெருமைகள்

உருத்திராட்சத்தை அக்குமணி என்றும் குறிப்பிடுவர். பெண் களுக்கு மாங்கல்யம் போல ச் சிவத்தொண்டர்களுக்கு அணி கலனாகத் திகழ்வது இந்த உருத்திராட்சம் தான். இதைக் கண்டிகை என்றும், தாழ்வடம் என்றும் கூறுவ ர்.
உருத்திராட்சத்தை தாசித் தால் லட்சம் மடங்கு புண் ணியம். தொட்டால் கோடி மடங் கு புண்ணியம். அணிந்தால் நூறு கோடி புண்ணியம். ஜெபித்தால் நூறுகோடி மடங்கு புண் ணியம் அடைவதாகப் புராணங்கள் கூறுகின்றன. நெல்லிக் காய் அளவுள்ள உருத்திராட்சம் உத்தமம்.
இலந்தைப்பழ அளவு மத்திப ம். கடலை அளவு அதமம். பு ழுக்கள் குடைந்ததும், நசுக்கி யதும், நோயுற்றதும் அணிய க்கூடாத உருத் திராட்சங்கள் ஆகும். ஒரே அளவுள்ளதும், உறுதியா னதும், பெரியதும், சம முத்துகள் போன்றுள்ளது மான உருத்திராட்சங் களைப் பட்டுக் கயிற்றில் கோத்து பின் உடலில் அணிய வே ண்டும்.
உருத்திராட்சத்தின் முகம் மற்றும் அதன் அதிதேவதை:::.
*இருமுக உருத்திராட்சம் அர்த்தநாரிஸ்வரர் உருவம் உடையது. இதனை அணிந்தால் எப்போதும் இன்பம் உண்டாகும்.
*மும்முக உருத்திராட்சம் மூன்று அக்னியின் சொரூபம் கொண்டது. இதனை அணிவது அக்னி தேவர்க்கு இன்பமூட்டும்.
*நான்கு முக உருத்திராட்சம் பிரம்மனின் சொரூபம். இதை அணிந்தால் பிரம்ம தேவன் இன்பமடைகிறான்.
*ஐந்து முக உருத்திராட்சம் பிரம்ம சொரூபம் கொண்டது. இதனை அணிவதால் நரஹத்தி அழிகிறது.
*ஆறுமுக உருத்திராட்சம் அதிதேவதை சுப்ரமண்யர். இதை அணிந்தால் அதிக செல்வமும் ஆரோக்கியமும் கிடைப்பதுடன், பக்தியும், அறிவும், செல்வமும், கிடைக்கும்.
*அறுமுக உருத்திராட்சத்திற்கு விநாயகரை அதிதேவதை என்றும் சொல்வார்கள்.
*ஏழு முக உருத்திராட்சத் திற்கு அதிதேவதை சப்த மாதா. இதனை அணிந்தால் ஞானமும், ஆரோக்கியமும், செல்வமும் கிடைக்கும்.
*எட்டு முக உருத்திராட்சம் அணிந்தால் அஷ்ட வசுக்க ளும், கங்கையும் ப்ரிதி அடையும். அதிதேவதை அஷ்டவசு.
*இன்பது முக உருத்திராட்சத்தை அணிந்தால் நவசக்திகளும் இன்ப மடையும். இதன் அதிதேவதை நவசக்தி.
*பத்துமுக உருத்திராட்சத்திற்கு அதிதேவதை எமன். இதனை அணிந்தால் பாவங்களுக்கெல்லாம் பரிகாரம் ஏற்படும்.
*பதினொரு முக உருத்திராட்சத்திற்கு அதிதெய்வம் பதினொரு உருத்திரர். இது சகல செளபாக்கியங்களையும் விருத்தியடையச் செய்கிறது.
*பன்னிரண்டு முக உருத்திராட்சம் மகாவிஷ்ணுவின் சொரூபம். இது பன்னிரு ஆதித்ய சொரூபம் என்று அழைக்கப்படுகிறது.
*பதின்மூன்று உருத்திராட்சம் போக த்தையும், சித்தியையும், சுகத்தையும் கொடுக்கிறது. இதனை அணிந்தால் காமதேவன் மகிழ்ச்சியடைகிறான்.
*உருத்திர நேத்திரத்தில் உண்டாகிய பதினான்கு முக உருத் திராட்சம் சகலவிதமான நோய்க ளையும் நீக்கி என்றும் ஆரோக்கியத் தைக் கொடுக்கிறது.
* 108 உருத்திராட்சம் கொண்ட மா லையை எப்போதும் மார்பில் அணிந் திருப்பவன் அடுத்தடுத்து செய்த அஸ்வமேதயாக பலத்தை அடைகி றான்.
* உருத்திராட்சத்தின் அடி பிரம் மா. நாளம் விஷ்ணு. முகம் உருத் திரர். பிந்து சமஸ்தேவர்கள்.
அர்ச்சனை, ஹோமம் முதலியவற்றின்போது இதனை அணி ந்தால் அஸ்வமேத யாகத்தின் பலனைக் கொடுப்பதோடு, எல்லா பாவங்களிலிருந்தும் விடுதலை கிடைக்கிறது. உருத் திராட்ச மாலையைக்கொண்டு ஜெபித்தால் அதிக பலம், அதிக புண் ணியம்.
தலையில் அணிந்து குளித் தால் கங்கையில் நீராடிய பலன் கிட்டும். குறிப்பாகச் சிவனடியார் களால் போற்ற ப்படும் இரு முகம், ஐந்து முகம், பதினொரு முகம், பதினான்கு முகம் கொண்ட உருத்திராட்சங்களை அன் போடு பூஜித்து அணிகின்ற மானிடர்கள் எல்லாரையும் விட அவரே செல்வம் நிரம்ப உடையவராகிறார்.
தீட்சை பெற்ற பெண்களும் உருத்திராட்சத்தை அணியலாம். உருத்திராட்ச தரிசனம் பாவத்தைப் போக்கும். தொட்டால் சகல வெற்றிகளையும் கொடுக்கும். குவிக்கும். பிறப்பு – இறப்பு தீட்டு க்காலங்களில் உருத்திராட்சம் கண்டிப்பாக அணியக்கூடாது. சிவன் நாமத்தை இடைவிடாமல் உச்சரிப் போரும், புனிதம் மிக்க உருத்திராட்சத்தை அணிந்திருப் போரும் சிவ பக்தர்களில் தலை சிறந்தோர் என்று கூறு கின்றனர்.
‘ஆயமாமணி ஆயிரம் புனைந்திடில் அவரை
மாலயன் நான்முகன் புரந்தரன் வானவர் முதலோர்
பாயுமால் விடைப் பரமெனப் பணிகுவர் என்றால்
தூயமாமணி மிலைந்தவர் மனிதரோ சொல்வீர்’
-என்று உருத்திராட்சத்தின் மேன்மையைப் பிரம்மோத்தர காண்டம் சிறப்பித்துக் கூறுகின்றது.