Posted On April 01,2012,By Muthukumar
உடலுறவின்போது கட்டுப்பாட்டை மீறி முன்கூட்டியே விந்தனுக்கள் வெளியாவைத் தடுக்க புதிய மாத்திரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இங்கிலாந்தில். விரைவில் இது சந்தைக்கு வரவுள்ளதாம்.
செக்ஸ் உறவின்போது நமது மூளையில் சுரக்கும் செரட்டோனின் என்ற சீரம்தான் உணர்வுகளை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது. இந்த சீரத்திற்கு இதுமட்டுமல்லாமல் வேறு பல வேலைகளும் உள்ளன. இருப்பினும் உறவின்போது ஏற்படும் உச்சநிலையை கட்டுப்படுத்துவது இந்த சீரத்தின் முக்கிய வேலைகளில் ஒன்றாகும்.
சிலருக்கு இந்தக் கட்டுப்பாடு சரிவர கை கூடாமல் முன்கூட்டியே விந்து வெளியாகி உறவு கசக்கும் நிலை ஏற்பட்டுவிடும். இந்த நிலை ஏற்பட செரட்டோனின்தான் முக்கியக் காரணம். இப்படிப்பட்டவர்கள் இனி கவலைப்படத் தேவையில்லை. காரணம், இதை சரி செய்ய மாத்திரை கண்டுபிடித்து விட்டனர்.
இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த மாத்திரைக்கு பிரிலிஜி (priligy) என்று பெயரிட்டுள்ளனர். 30 மில்லிகிராம் அளவிலான மாத்திரை இது. இதை உறவு கொள்வதற்கு 1 அல்லது மூன்று மணி நேரத்திற்கு முன்பு போட்டுக் கொள்ள வேண்டும். இந்த மாத்திரை செரட்டோனின் சுரப்பைக் கட்டுப்படுத்தி, உறவை இனிக்க வைக்க உதவுமாம்.
இந்த மாத்திரையின் மூலம் வழக்கமான நேரத்தை விட மூன்று மடங்கு கூடுதல் நேரத்திற்கு உறவை நீட்டிக்க முடியுமாம்.
இது தற்போது விலையில் காஸ்ட்லியாக உள்ளது. அதாவது 3 மாத்திரை கொண்ட ஒரு பேக் 76 பவுண்டுகளாகும்.
18 முதல் 64 வயது வரை உள்ளவர்கள் இதைப் பயன்படுத்த முடியும். சில ஐரோப்பிய நாடுகளில் இது ஏற்கனவே சந்தைக்கு வந்துவிட்டதாம். டாக்டர்களின் பரிந்துரையின் கீழ் மட்டுமே இந்த மாத்திரையை வாங்க முடியும். அதுவும் இப்போதைக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விற்க முடிவு செய்துள்ளனர்.
இந்த மருந்தை குடிபோதையில் இருப்போர் பயன்படுத்தக் கூடாதாம். அப்படிச் செய்தால், கடுமையான பக்க விளைவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளதாம்.
இந்த மருந்தினை இங்கிலாந்தில் விற்பனை செய்யும் உரிமையைப் பெற்றுள்ள லாயிட்ஸ் பார்மசி நிறுவனத்தின் ஆண்கள் செக்ஸ் சுகாதாரப் பிரிவின் தலைவர் நிதின் மகாடியா கூறுகையில், இது வயகாராவைப் போன்ற ஆடவருக்கான செக்ஸ் சுகாதார மருந்தாகும்.
இதன் மூலம் உறவுகளை மேம்படுத்த முடியும். இனிமையைக் கூட்ட முடியும். உறவின் நீளத்தை நீட்டிக்க முடியும் என்றார்.
குறிப்பு - வைத்திய ஆலோசனையின் பின்பு மத்திரைகளை பயன்டுத்தவும்.

No comments:
Post a Comment