Posted on April 2, 2012 by muthukumar
முத்தம்.
இனிமையான விஷயம் மட்டுமல்ல. உணர்வுப்பூர்வமான விஷயமும் கூட. தாய்,
குழந்தையின் கன்னத்தில் கொடுக்கும் முத் தம், தாய்மையின் வெளிப்பாடு.
பெரியவர்கள், சிறியவர்க ளுக்கு நெற்றியில் கொடுக்கும் முத்தம், பாசத்தின்
வெளிப்பாடு. காதலன், காதலிக்கு இதழ்களில் கொடுக்கும் முத்தம், காதலின் வெளிப்பாடு.
வெளிநாடுகளில்,பொது இடங்களில் காதலர்கள் முத்தம் கொடு த்துக் கொள்வது, டீ, காபி சாப்பிடுவது மாதிரி, சர்வ சாதாரணமான விஷயம்.
நம் நாட்டில் இது@வ மிகவும் அரிதான விஷயம்; “அதெல்லாம் திரு
மணத்துக்குபின் பார்த்துக்கொள்ளலாம் …’ என்ற காதலியின் நழுவலான பதில்,
காதலனின் முத்த ஆசைக்கு மொத்த மாக முற்றுப் புள்ளி வைத்து விடும்.
முத்தமிடலுக்கு வாய்ப்பு கிடைக்காத காதலர்களும் உண்டு.
எந்த
ஒரு விஷயத்தையுமே, வித்தியாச மாகவும், புதுமையாகவும் செய்ய வேண் டும் என்ற
அடங்காத ஆர்வத்துடன் செயல்படும் சீனர் கள், முத்தமிடும் விஷயத்தை மட்டும்
விட்டு வைப்பரா? அன் ஹூய் மாகாணத்தில் உள்ள ஹெபி என்ற நகரத்தில், காத
லர்களின் முத்தமிடும் போட்டிக்கு, ஒரு அமைப்பு ஏற்பாடு செய் திருந்தது.
இதழ்களுடன் இதழ்கள் சேர்த்தபடி, நீண்ட நேரம் முத்த மிடும் ஜோடிக்கு பரிசு
தரப்படும் என, அறிவிக்கப்பட்டது.
பொதுமக்கள் அதிகம் கூடும், திறந்த வெளியில், இந்த இளமையா ன
போட்டி நடந்தது. ஹெபி நகரத்தை சேர்ந்த, 50 காதல் ஜோடி கள், இதில்
பங்கேற்றனர். அவர்களின் முகங்களில், ஒரு இனம் புரியாத மகிழ்ச்சியை காண
முடிந்தது. விசில் ஊதப்பட்டதும், ஒவ் வொரு ஜோடியும், தங்களின் இணைக ளின்
உதட்டுடன் உதடு பொருத்தி முத்த மிட்டனர்.
முத்தமிடுவதில், ஒவ்வொரு ஜோடியும், ஒவ்வொரு ஸ்டைலை பின்பற்றினர். ஒருவர், தன் காதலியை மடியில் சாய்த்தபடி முத்த மிட்டார்.
மற்றொருவர், காதலியை இடுப்பில் அமரவைத்தபடி முத்த மிட்டார். இன்னுமொருவர்,
காதலி யை தலைகீழாக தூக்கி வைத்துக் கொண்டு முத்தமிட்டார். ஆனாலும்,
எவ்வளவு நேரம் தான், உதட்டை எடுக்காமல் முத்தமிட்டுக் கொண்டி ருப்பது? அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தானே. இதில் முத்தத்துக்கு மட்டும் விதி விலக்கா என்ன?
சில
நிமிடங்களிலேயே, சில காதலர்களு க் கு உதடு வலிக்க ஆரம்பித்தது. இதனா ல்,
போட்டியில் இருந்து விலகி கொள்வ தாக அறிவித்தனர். மேலும், சிலரது முத்த
போட்டி, அரை மணி நேரம் வரை நீண்டது. மயக்கம் வருவது போல் தெரி ந்ததால்,
“இதற்கு மேல் தாங்காது’ என, அவர்களும் வெளியேறினர். ஒரு சில காதலிகள்,
மயக்கம் போட்டு கீழேயே விழுந்தனர். அவர்களை கைத்தாங்கலா க, ஆம்புலன்சில்
ஏற்றிச் சென்று, அருகில் உள்ள மருத்துவ மனை யில் சேர்த்தது, தனிக் கதை.
கடைசியாக, ஒரே ஒரு காதல் ஜோடி மட்டும் இரண்டு மணி நேரம், 43
நிமிடங்கள், உதட்டுடன் உதடு எடுக்காமல் தொடர்ந்து, “மாரத் தான்
முத்தமிட்டு’ சாதித்துக் காட்டியது. அந்த காதல் ஜோடிக்கு, நான்கு லட்சம்
ரூபாய் மதிப்புள்ள வைர மோதிரம் பரிசளிக்கப் பட்டது. கரும்பு தின்னக் கூலி
கொடுத்த கதையாக இருக்கிற தல்லவா?
No comments:
Post a Comment