Thursday, 9 August 2012

17 குணங்கள் கொண்ட‌ வெற்றிலை

1. இருமல்-சளி நீங்க
இருமல், சளி தொல்லை உள்ளவர்களுக்கு வெற்றிலை சிறந்த மரு ந்து. 2 வெற்றிலை, நடுநரம்பு நீக்கிய 5 ஆடாதொடா இலையுடன் 10 மிளகு, ஒரு பிடி துளசி இலைகளை சேர்த்து ஒன்றிரண்டாக இடித்துக் கொள்ள வேண்டு ம். அதனுடன் 300 மில்லி நீர்விட்டு மூடிய பாத்திரத் தில் நன்றாக கொதிக்க வைத்து 75 மில்லி ஆனவுட ன் வடிகட்டி குடிக்க வேண்டும். இதேபோல் தினமும் 2 அல்லது 3 வேளை சளி, இருமல் இருக்கும்வரை குடிக்கலாம். இப்படி செய்தால் உடனடி நிவார ணம் கிடைக்கும்.
2. ஆஸ்துமா, மூச்சுக்குழல் அலர்ஜி
சித்த மருந்துகடைகளில் கிடைக்கும் சுவாசகுடோரி மாத்திரை இர ண்டுடன் 2 மிளகும் சேர்த்து, அதை ஒரு வெற்றிலையில் வைத்து வாயில்போட்டு நன்கு மெல்லவேண்டும். தினம் 2 வேளை இவ்வாறு மென் றால் ஆஸ்துமா, மூச்சுக்குழல் அலர்ஜி படிப்படியாக குணமாகு ம்.
3. காணாக்கடிக்கு
எந்த பூச்சி கடித்தது என்று தெரியாமல் ஏற்படும் பாதிப்பான காணாக் கடிக்கு நடுநரம்பு நீக்கிய வெற்றிலை 5, மிளகு 10 ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து இடித்து, 200 மில்லி நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். அது 50 மில்லியாக ஆனவுடன் தினமும் 2 வேளை சாப்பிட்டு வர காணாக்கடி விரைவில் குணமாகும்.
4. உற்சாக உணர்விற்கு
வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு மெல்லும் போது உமிழ்நீர் சுரப்பு தூண்டப்படுகிறது. அத்துடன், ஒருவித உற்சாக உணர்வும் கிடைக்கி றது.
5. வாத நோய் நீங்க
வாத நோய்களை குணமாக்கும் “வாத நாராயணா” எண் ணெய் தயாரிப்பில் வெற்றிலை சாறும் ஒரு முக்கிய மூலப் பொருளாகும்.
6. தீப்புண் குணமாக
தீப்புண் குணமாக வெற்றிலையில் நெய் தடவி லேசாக வதக்கி புண்ணின்மீது பற்றாக போடவேண்டும். விரை வில் அந்த புண் குண மாகும்.
7. நுரையீரல் பலப்பட
வெற்றிலைச்சாறு 5 மி.லி. யுடன் இஞ்சிச் சாறு 5 மி.லி. கலந்து தினமும் காலை வேளையில் வெறும் வயிற் றில் அருந்தி வந்தால் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய் கள் அணுகாது. இவ்வாறு தொடர்ந் து ஒரு மண்டலம் அருந்தி வருவது நல்லது.
8. வயிற்றுவலி நீங்க
2 தேக்கரண்டி சீரகத்தை மூன்று தேக்கரண்டி வெண்ணெய் விட்டு நன்கு மைபோல் அரை த்து, 5 வெற்றிலை எடுத்து காம்பு, நுனி, நடு நரம்பு நீக்கி வெற்றிலையின் பின்புறத்தில் அந்த கலவையைத் தடவி சட்டியிலிட்டு வதக் கி பின்பு 100 மிலி நீர்விட்டு நன்றாக கொதிக்க வைத்து ஆறியபின்பு வடிகட்டி கசாயத்தை அருந்தி வந்தால் வயிற்றுவலி நீங்கும். மந்தம் குறையும்.
9. சர்க்கரையின் அளவு கட்டுப்பட
வெற்றிலை–4, வேப்பிலை – ஒரு கைப்பிடி , அருகம் புல் – ஒரு கை ப்பிடி. சிறிது சிறிதாக நறுக்கி 500 மி.லி. தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து 150 மி.லி.யாக வற்றவை த்து ஆறியவுடன் வடிகட்டி தினமும் மூன்று வேளை உணவுக்கு முன் 50 மி.லி. குடித்து வந்தால் சர்க்கரையின் அளவு சீராகும்.
10. விஷக்கடி குணமாக
உடலில் உள்ள விஷத்தன்மையை மாற்ற வெற்றிலை சிறந்த மருந்தாகும். சாதாரணமா ன வண்டுக்கடி, பூச்சிக்கடி இருந்தால் வெற்றி லையில் நல்ல மிளகு வைத்துமென்று சாறு இறக்கினால் விஷம் எளிதில் இறங்கும்.
11. இருமல் குறைய
வெற்றிலைச் சாறுடன் கோரோசனை சேர்த்து சாப்பி ட்டு வந்தால் தொண்டையில் சளிக்கட்டு, இருமல்,  மூச்சுத்  திணறல் குணமாகும்.
12. அஜீரணக் கோளாறு அகல
வெற்றிலை 2 அல்லது மூன்று எடுத்து அத னுடன் 5 நல்ல மிளகுசேர்த்து நீர்விட்டு காய் ச்சி குழந்தைகளுக்கு கொடுத்து வந் தால் சிறுவர்களுக்கு உண்டாகும் செரியா மை நீங்கும். வெற்றிலை இரண்டு எடுத்து நன்றாக கழுவி அதில் சிறிது சீரகத்தையும், உப்பையும் சேர்த்து நன்கு மென்று விழு ங்கி வந்தால் அஜீரணக் கோளா றுகள் நீங்கும்.
13. தோல் வியாதிக்கு
100 மி.லி. தேங்காய் எண்ணெயில் 5 வெற்றி லையை போட்டு சூடாக்கி வெற்றிலை சிவந்த வுடன் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு சொறி, சிரங்கு படை இவைகளுக்கு தடவி வந்தால், எளிதில் குணமாகும்.
14. தலைவலி நீங்க
வெற்றிலைக்கு மயக்கத்தைப்போக்கும் குண முண்டு. மூன்று வெற்றிலைகளை எடு த்து அதைக் கசக்கி சாறு எடுத்து கிடைக்கும் சாறில் கொஞ்சம் கற்பூரத்தைப் போட்டு நன் றாக குழைத்து, நெற்றிப்பகுதியில் பற்று போ ட்டால் தலைவலி பறந்துபோகும்.
15. தீப்புண் ஆற
தீப்புண்ணின் மீது வெற்றிலையை வைத்து கட்டலாம்.
16. அல்சர்
அல்சர் உள்ளவர்கள் இரண்டு வெற்றிலை யுடன் அத்தி இலை 1 கைப் பிடி வேப்பிலை 5 ஆகியவற்றை மேலே உள்ள முறைப்படி கசாயம் தயாரித்து மூன்று வேளை அருந்தி வரவும். முற்றின வெற்றிலையை ச் சாறு பிழிந்து அதில் இரண்டு அவுன்ஸ் சாற்றுடன் 3 மிளகு அதே அளவு சுக்கு ஆகியவற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் கொடுத்தால் இரைப்பு மூச்சுத் திணறல் குணமாகும்.
17. தேள் விஷம்
இரண்டு வெற்றிலையை எடுத்து அதில் ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென் று விழுங்கி தேங்காய்துண்டுகள் சிலவற்றினை யும் மென்று தின்றால் தேள் விஷம் உடனே முறி யும்.

சைனஸ் பிரச்சனையை போக்க…

பருவ காலநிலை அடிக்கடி மாறுபடுவதால், உடலில் ஜலதோஷம் திடீரென்று ஏற்படும், அவ்வாறு ஜலதோஷம் வந்தால், அது இரண்டு, மூன்று நாட்களில் போய் விடு ம். ஆனால் அது சிலருக்கு நீ ண்ட நாட்கள் இருந்து, எந்த வேலையையும் சரியாக செய் ய முடியாத அளவு இருக்கும். இதனால் அந்த சளியானது மூக்கில் நீண்ட நாட்கள் இருப் பதால், அது சைனஸாக மாறி விடுகிறது. அதுமட்டு மல்லா மல், தலைக்கு குளித்தப் பின் னர், தலையில் இருக்கும் ஈரத்தை காய வை க்காமல் இருப்பர். இத னால் தலையில் நீர் கோர்த்து, அடிக்கடி வலி ஏற்படும். பின் மூச்சு விடும்போது ஒரு துர்நாற்றம், திடீரென்று மூக்கில் எரிச்சல் போன்ற வை ஏற்படும். அத்தகைய பிரச்சனைகளை போக்க ஈஸி யான வீட்டு மருந்து இருக்கிறது.
சைனஸ் பிரச்சனையை போக்க…
* ஒரு வாணலியில் நல்லெண் ணெயை ஊற்றி, அதில் தும்பை பூக்களை போட்டு, காய்ச்சி வடி கட்டிக் கொள்ளவும். பின் அந்த எண் ணெயை வாரத்திற்கு ஒரு முறை தேய்த்து, வெதுவெதுப்பான தண்ணீரில் குளித்து வரவேண்டு ம். இதனால் அடிக்கடி வரும் தலை வலி மற்றும் நீர்க்கோர்வையால் ஏற்படும் தலைபாரம் போன்றவை யும் குணமாகிவிடும்.
* தாய்ப்பாலில் சிறிது கிராம்பை அரைத்து போட்டு, பேஸ்ட் போல் செய்து அதனை தலைக்கு பற்று போட்டால், சைனஸால் ஏற்படும் தலைவலி நீங்கும்.
* தலைக்கு குளித்தப் பின், சாம்பிராணி புகையை போ ட்டு, தலையை காயவைத் துக் கொள்வது போல், ஓமம், சிறிது மஞ்சள் போட்டு, அத னால் வரும் புகையை நுக ர்ந்து கொண்டால், ஜலதோ ஷம், நீர்க் கோர்வை போன் றவை சரியாகும்.
* குப்பைமேனி, கீழாநெல்லி போன்ற செடிகளின் இலை யை சாறு பிழிந்து, அந்த சாற்றின் அளவிற்கு நல்லெ ண்ணெயை கலந்து, சூடேற் றி வைத்துக் கொள்ள வேண் டும். பின் அந்த எண்ணெய் ஆறியதும், அதனை மூக்கினு ள் விட்டால், நாள்பட்ட தலைவலி மற்றும் மூக்கி னுள் ஏற்படும் குடைச்சல் போய்விடும்.
* கடுகு சிறிது, கஸ்தூரி மஞ்சள், சிறிது சாம்பிராணி ஆகியவற்றை பொடி செய்து, தண்ணீரில் கலந்து, படுக்கும்முன் நெற்றிக்குத் தடவி , காலையில் கழுவ வேண்டு ம். இல்லையென்றால் கிராம் பு, சுக்கு ஆகிய இரண்டையும் அரைத்து, நீரில் பேஸ்ட்போ ல் கலந்து, மூக்கு மற்றும் நெற்றியில் தடவவேண்டும். இதனால் நீர்க்கோர்வை, தலை பாரம், ஜலதோஷம் போன்றவை விரைவில் குண மாகும்.
எனவே மேற்கூறியவற்றையெல்லாம் செய்து, சைனஸ்-ஆல் வரும் பிரச்சனையை ஈஸியான முறையில் வீட்டிலேயே சரிசெய்யலாம்.

Wednesday, 8 August 2012

பெண்களின் கண்களில்தான் எத்தனை எத்தனை சமாச்சாரங்கள்

அழகிய, பெரிய, வட்ட‍ வடிவ‌ கண்களுடன் கூடிய பெண்களைத்தான் ஆண்களுக்கு ரொம்பப் பிடிக்கிறதாம். இப்படிப்பட்ட பெரிய கண்க ளுடன் கூடிய பெண்களால், ஆண்களை எளிதாக‌ கவர‌ செய் து விட முடியுமாம்.
ஈர்ப்புக்கு ஒவ்வொருவரிடமும் ஒரு ஆயுதம் இருக்கும். குறிப் பாக பெண்களிடம் ஏகப்பட்ட ஈர் ப்பு விஷயங்கள் இருக்கும். அதி ல் முக்கியமானது இந்த கண்க ள். வெறும் கண்ணை வைத்தே ஒரு ஆணை எளிதாக வீழ்த்தி விட முடியுமாம். கண்களில் அத்தனை சமாச்சாரங்கள் இருக்கி றதாம்.
குறிப்பாக நன்கு பெரிதான, உருண்டையான, கண்களைக் கொண்ட பெண்களுக்கு ஒரு ஆணை வீழ்த்துவது என்பது ரொம்ப எளிதான தாம். இவர்க ள் தங்களது உடல் கவர்ச்சியை விட கண்களை வைத்தே யாரையும் காலிசெய்துவிட முடியுமாம். அவ்வளவு ஈர்ப்பு சக்தி இருக்கி றதாம் இந்த முட்டைக் கண் பெண்களுக்கு.
இப்படிப்பட்ட கண்களைக் கொண்ட பெண்கள் மன தைரியம் மிக்கவ ர்களாக, ஆளுமைத் திறன் படைத்தவர்களாக, எதையும் தைரியமா க நேருக் கு நேர் சந்திக்கக் கூடியவர்க ளாக இருப்பார்களாம். இவர்களை நேருக்கு நேர் கண்ணைப் பார்த்துப் பேச வே மற்றவர்களுக்கு தயக்கமாக இருக்கு மாம்.  அப்படி ஒரு பார்வையாம் இவர்க ளுக்கு.
அதேபோல பெரிய, உருண்டையான கண்களைக் கொண்டுள்ள பெண்களு க்கு மாத விலக்கு நெருங்க நெருங்க செக்ஸ் உணர்வுகள் அதிகம் பொங்கிப் பெருகுமாம். இதை கண்கள் மூலம் அதிகம் வெளிப்படுத்துகிறார்களாம். மேலும் இப்படி உருண்டையான கண்களைக் கொண்ட பெண்களுக் கு  காம உணர்வும் கூட மற்ற பெண்களைவிட அதிகமாக இருக்கு மாம்.
இதனால்தான் உருண்டையான கண்களைக் கொண்ட பெண்களை ஆண்கள் அதிகம் விரும்புகிறார்களாம். காரணம், இத்தகைய பெண் களிடம் எக்கச்சக்க இன்பம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பே. அதே சமயம், உருண்டையான கண்களைக் கொண்ட பெண்களை திருப்தி செய்வது என்பதும் சற்று சிக்கலான காரியம் தானாம். அவர்களுக் கேற்ற ஆண்கள் கிடைப் பதும் முக்கியமானது என்பதை மனதில் கொ ள்க.
உருண்டையான கண்களைக் கொண்ட பெண் களுக்கு பெரும்பாலும் நல்ல உடல்வாகு இருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். குறிப்பா க நல்ல உயரமும், சற்று குண்டான உடலுட னும் கூடியவர்களாக இவர்கள் இருப்பார்களாம். சுருங்கச் சொன்னா ல் ஓங்கு தாங்காக இருப்பார்களாம்.
குழந்தைப் பிறப்பிலும் கூட உருண்டையான கண்களைக் கொண்ட பெண்கள் மற்றவர்களை விட சற்று முன்னணியில் இருப்பார் களாம். அதாவது இவர்களிடம் மலட்டுத்தன பிரச்சினை என்ப து மிக மிக குறைவாகவே இரு க்கிறது என்பதும் ஆய்வாளர்க ளின் கருத்தாகும்.
சரி உங்க கண்ணு எப்படி, நீங்க எப்படி…!

தாம்பத்ய உறவில் சிக்கலை ஏற்படுத்தும் மன அழுத்தம்

மனஅழுத்தம் என்ற வார்த்தையை உச்சரிக்காதவர்கள் இல்லை. அந்த அளவிற்கு பெரும்பா லோனோரை ஆட்டிப்படைக் கிறது மன அழுத்தம். மனிதர் களின் உடல் ஆரோக்கியத் தை பாதிக்கும் இந்த மன அழுத்தம் தாம்பாத்ய வாழ்க் கையிலும் சரியாக ஈடுபட முடியாமல் செய்கிறதாம். மன அழுத்தம் காரணமாக 70 சதவிகிதம் பேர் தாம்பத்ய விளையாட்டில் வெற்றி பெறமுடியாமல் வெளியேறி விடுகின்றனர் என்று கூறியுள்ளனர் ஆய்வாளர்கள். கவலை, நம்பிக்கையின்மை, வேலைப்பளுவினால் ஏற்படும் சிக்கல் போன்றவையும் மன அழுத்தத்திற்கு காரணமாக அமைகிறது. எனவே மன அழு த்தம் எதனால் ஏற்படுகிறது என் பதை உணர்ந்து அதை நீக்குவத ற்கான முயற்சியில் ஈடுபடவே ண்டும் என்பது நிபுணர்களின் அறிவுரையா கும்.
மனஅழுத்தம் காரணமாக படுக் கை அறையில் சரியாக இயங்க முடியாமல் போய்விட்டால் அது உங்களின் துணையை பாதிக்கும். அது இல்லற வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கிவிடும் என்று கூறும் நிபுணர்கள் உங்களுக்கு உள்ள உளவியல்ரீதியான சிக்க லை வாழ்க்கைத்துணையிடம் பேசி புரியவைக்கலாம் என்கின்ற னர். செக்ஸ் வாழ்க்கைக்கு வேட்டு வைக்கும் மனஅழுத்தம் பின்னர் குடும்ப வாழ்க்கையை குழிதோண் டி புதைத்துவிடும் என்கின்றனர்.
மனஅழுத்தம் கொண்டவர்கள் செக்ஸ் வாழ்க்கையில் பாதிப்பிற் குள்ளாவது ஒருபுறம் இருக்க பாது காப்பற்ற உறவில் ஈடுபட்ட நபர் கள் மனஅழுத்தத்திற்குள்ளாவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆஸ்திரேலியா வில் நடைபெற்ற ஆய்வில் நடை பெற்ற ஆய் வில் கவனக்குறைவாக செக்ஸ் உறவில் ஈடு பட்டவர்கள். காண்டம் உபயோகிக்காமல் உட லுறவு கொண்டவர்கள் பலரும் மன அழுத்தப் பிரச்சினையில் சிக்கிக் கொண்டிருக்கின்ற னர் என்ற கண்டறியப்பட்டது.
நீடித்த இன்பம் வேண்டும் என்பதற்காகவும், எழுச்சி நிலைக்காகவும் உட்கொள்ளும் மருந் து மாத்திரைகளை செக்ஸ் உறவை பாதிக் கும் காரணிகளாகின்றன. இதனால் சரியான உச்சநிலை ஏற்படுவதில்லை என்கின்றனர் நிபுணர்கள்.
மன அழுத்தம் காரணமாக தாம்பத்ய உறவில் ஏற்படும் சிக்கலை மரு ந்து மாத்திரைகளினால் மட்டுமே நீக்க முடியாது. எதையும் எதிர் கொள்ளும் தைரியமும், அபரிமதமான தன்னம் பிக்கையும் இருந்தா ல் மனஅழுத்தம் நீங்கி மகிழ்ச்சியான தாம்பத்ய வாழ்க்கையில் ஈடு படலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

இரத்தம்

ரத்தம் பற்றி டாக்டக் எம்.எஸ். திவ்யா அளித்த விளக்கம் வருமாறு:- ரத்தத்தின் நிறம் ஏன் சிவப்பாக உள்ளது?
ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் உள்ளே `ஹீமோகுளோபின்’ என்ற வேதிப் பொருள் உள்ளது. இந்த வேதிப்பொருள் தான் ரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின் தான் உடலில் உள்ள அனைத்துச் செல்களுக்கு ம் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்த த்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால் ரத்த சோகை நோய் ஏற்படும். ரத்த சோகை, ரத்த இழப்பு ஏற்படும் போது ரத்த சிவப்பு அணுக்களைக் செலுத்துவார் கள்.
ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை எவ்வளவு?.
ஒரு சொட்டு ரத்தத்தில் 55 லட்சம் சிவப்பு அணுக்கள் இருக்கும்.
ரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகும் இடம் எது?
எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். இந்த வெற்றிடத்தை ச் சுற்றி எலும்பு மஜ்ஜை இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், பிளேட்லட்டுகள் உற்பத்தியாகி ன்றன.
ரத்த சிவப்பு அணுக்களின் ஆயுள் எவ்வளவு?
ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் நான்கு மாதங்கள் ரத்தச் சிவப்பு அணுக்களின் முக்கிய வேதிப்பொ ருளான ஹீமோகுளோபின் உற்ப த்திக்கு இரும்புச் சத்து தேவை. கீரைகள், முட்டைக்கோஸ், முட்டை, இறைச்சி ஆகியவற்றில் இரு ம்புச் சத்து அதிகம். இவற்றை உணவில் தினமும் சேர்த்துக் கொண் டால் ரத்த சோகை வராது.
ரத்த வெள்ளை அணுக்களின் வேலை என்ன?
ரத்த வெள்ளை அணுக்களை படை வீரர்கள் என்று அழைக்க லாம். ஏனெனில் உடலுக்குள் நு ழையும் நோய்க் கிருமிகளை முதலில் எதிர்த்துப் போராடுப வை ரத்த வெள்ளை அணுக் களே. இவை நோய் எதிர்ப்புச் சக்தியின் முக்கிய ஆதாரம்.
ரத்தத்தில் உள்ள `பிளேட்லட்’ அணுக்களின் வேலை என்ன?
உடலில் காயம் ஏற்பட்டவுடன் ரத்தம் வெளியேறுவதை இயற்கையா கவே தடுக்கும் சக்தி `பிளேட்லட்’ அணுக்களுக்கு உண்டு. ரத்தம் வெளியேறும் இடத்தைச் சுற்றி “கார்க்” போல அடைப் பை ஏற்படுத்தி மேலும் ரத்தக் கசிவை இவை தடுத்துவிடும். டெங்கு, கடும் மலே ரியா காய் ச்சலால் பாதிக்கப்படும் நோ யாளிகளுக்கு இந்த பிளேட் லட் அணுக்களை செலுத்து வார்கள்.
பிளாஸ்மா என்றால் என்ன?
ரத்தத்தில் உள்ள திரவப் பொருள்தான் பிளாஸ்மா. 100 மில்லி லிட் டர் ரத்தத்தில் சுமார் 50 சதவீத அளவுக்கு பிளாஸ்மாவும் 40 சதவீத அளவுக்கு ரத்த சிவப்பு அணுக்களும் இருக்கும். மற்ற அணுக்கள் 10 சதவீதம் இருக்கும். பிளா ஸ்மாவில் தண்ணீர், வைட்டமின்கள், தாது ப்பொருள்கள், ரத்தத்தை உறைய வைக்கக்கூடிய காரணிகள், புரதப் பொரு ள்கள் இருக்கும். தீக்காயங்களால் பாதிக் கப்படும் நோயாளிகளுக்கு பிளாஸ்மா வை மட்டும் செலுத்துவார்கள்.
ரத்தத்தில் உள்ள பொருள்கள் யாவை?
ரத்த சிவப்பு அணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்லட்டுகள் என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. இவை தவிர திரவ நிலையில் “பிளாஸ்மா ” என்ற பொருளும் உள்ளது.
ரத்த அழுத்தம் என்றால் என்ன?:-
உடலின் எல்லா உறுப்புகளுக் கும் ரத்தத்தை இதயம் `பம்ப்’ செய்யும் போது ஏற்படும் அழு த்தமே ரத்த அழுத்தம். இதயத் திலிருந்து ஒரு நிமிஷத்துக்கு ஐந்து லிட்டர் ரத்தம் எல்லா உறுப்புகளுக்கும் செல்கி றது. இப்பணியைச் செய்யும் இதய த் தசைகளுக்கு மட்டும் ஒரு நிமிஷத்துக்கு 250 மில்லி லிட்டர் ரத்தம் தேவை. உடலி ல் ரத்த பயனம் செய்யும் தூரம் எவ்வளவு தெரியுமா? ஒரு சுழற்சியில் ரத்தம் பயணம் செய்யும் தூரம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிலோ மீட்டர் ரத்தக் குழாய் களுக்குள் செலுத்தும் போது, அதன் வேகம் மணிக்கு 65 கிலோ மீட்டர் மோட்டார் சைக்கிளின் சராசரி வேகத்தை விட அதிகம்.
மாத்திரை சாப்பிட்டவுடன் தலைவலி அல்லது கால் வலியிலிருந்து நிவாரணம் கிடைப்பது எப்படி?
மாத்திரை சாப்பிட்டவுடன், அதில் உள்ள மருந்துப் பொருள் ரத்தம் மூலம் வலி உள்ள இடத்துக்குப் பயணம் செய்கிறது. வலியிலிரு ந்து நிவாரணம் கிடைக்கிறது. உடலில் இடத்துக்குப் பயணம் செய்யும் போது எடுத்துச் செல் வது என்னப எல்லாத திசுக்களு க்கும் ஆற்றலை எடுத்துச் செல் லும் முக்கியப் பணியை ரத்தம் செய்கிறது. கொழுப்புச் சத்து, மாவுச்சத்து, புரதம், தாதுப் பொ ருள்கள் வடிவத்தில் ஆற்றலை அது எடுத்துச் செல்கிறது. திசுக்கள் ஜீவிக்க ஆக்சிஜனை எடுத்துச் செல்வதும் ரத்தம் தான்.
ரத்த ஓட்டத்தின் முக்கியப் பணி என்ன?
நுரையிலில் இருந்து அனைத்துச் திசுக்களுக்கும் ஆக்சிஜனை ரத் தம் எடுத்துச் செல்லும் திரும்புகையில் திசுக்களில் இருந்து கார்பன் -டை ஆக்சைடை நுரையீரலு க்கு எடுத்து வந்து மூக்கு வழி யே வெளியேற்றுவதும் ரத்தம் தான்.
24 மணி நேரத்தில் சிறுநீரகங் கள் வெளியேற்றும் சிறுநீரின் அளவு எவ்வளவு தெரியுமா?
24 மணி நேரத்தில் சுழற்சி முறையில் 1700 லிட்டர் ரத்தத் தை சிறு நீரகங்கள் சுத்திகரிப்பு செய்கின்றன. இதில் ஒன்றரை லிட்டர் சிறு நீரை அவை வெளி யேற்றுகின்றன.
தலசீமியா என்பது தொற்று நோ யா?
இது தொற்று நோய் அல்ல. தந் தைக்கோ அல்லது தாய்க்கோ தலசீமியா நோய் இருந்தால் குழந்தைக்குப் பிறவியிலேயே இந்நோய் ஏற் பட வாய்ப்பு உண்டு. குழந்தை பிறந்த பிறகு இந்நோய் வரவாய்ப்பி ல்லை.
மூளையின் செல்களுக்கு ரத்தம் செல்லாவிட்டால் விளைவு என்ன?
மூளையின் செல்களுக்கு ஆக்சிஜனை எடுத்துச் செல்வது ரத்தம் தான். தொடர்ந்து மூன்று நிமிஷங்களு க்கு ஆக்சிஜன் செல்லாவிட்டால் மூளை யின் செல்கள் உயிரிழந்துவிடும். உடலி ன் இயக்கத் துக்கு ஆணையிடும் மூளை யில் கோளாறு ஏற்பட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும்.
ரத்தம் உறைவதற்கு எது அவசியம்?
ரத்தத்தில் மொத்தம் உள்ள 13 காரணி களில் முதல் காரணியில் பிப்ரினோஜ ன் என்ற வேதிப்பொருள் தான் ரத்தத்தை உறைய வைக்கிற து. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவில் இது இல்லாவிட்டால் ரத்தம் உறையாது. ஒரு லிட்டர் பிளாஸ்மாவுக்கு 25.4. கிராம் என்ற விகித த்தில் பிப்ரினோஜன் உள்ளது.
ரத்தத்தில் எத்தனை குரூப்புகள் உள்ளன?
ரத்தத்தில் நான்கு குரூப்புகள் உள்ளன. `A’, `B’, `AB’, `O’ என நான்கு குரூப்புகள் உள்ளன. இது நான்கைத் தவிர என்ற உப குரூப்புகளும் ரத்தத்தில் உ ண்டு. O பிரிவு ரத்தம் அனை வருக்கும் சேரும் என்பதால் தான் O குரூப் ரத்தம் உள்ள வர்களுக்கு யுனிவர்சல் டோனர் என்று பெயர்.
ரத்தம் எவ்வாறு குரூப் வா ரியாக பிரிக்கப்படுகிறது?
ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களில் ஆன்டிஜன் எனும் ஒருவகைப் புரதம் உள்ளது. அதன் தன்மைக்கு ஏற்ப குரூப் பிரிக்கப்படுகிறது. ரத்த சிவப்பணுக்களில் A ஆன்டிஜன் இருந்தால் A குரூப் ஆகும். B ஆன்டிஜன் இருந்தால் B குரூப்பாகும். என்ற இரண்டு ஆன்டிஜன் இருந்தால் AB குரூப் ஆகும். எந்தவிதமான ஆன்டிஜனும் இல்லை என்றால் O குரூப் ஆகும்.
ஆர்.எச். நெகட்டிவ் ரத்தத்தை, ஆர். எச். பாசிட்டிவ் உள்ள நோயாளிக ளுக்கு செலுத்தலாமா?
செலுத்தலாம். ஆனால் நோயாளி ஆணாக இருக்க வேண்டும் அல் லது குழந்தைப்பேறு இனி அவசியம் இல்லாத பெண்ணாக இருக்க வேண் டும். இளம் பெண்களுக்கு மாறுபட்ட ஆர்.எச். ரத்தத்தை செலுத்தக் கூடா து. ஆர்.எச்.
ரத்தக் காரணிக்கும் பெண்களுக்கும் உள்ள தொடர்பு என்ன?
கர்ப்பம் தரிப்பதற்கு முன்பே கணவன்-மனைவி இருவரும் ரத்தப் பிரிவை சோதனை செய்வது அவசியம். கணவன்-மனைவி இருவரு க்கும் ரத்தக் காரணி (ஆர்.எச்.) பாசிட்டி வ்வாகவோ அல்லது நெகட் டிவ்வாக வோ இருந்தால் கர்ப்பம் தரித்தவுடனே யே மகப்பேறு மருத் துவரிடம் சொல்லி விட வேண்டும்.
கர்ப்பிணிக்கு ஆர்.எச். நெகட்டிவ் ரத்தப் பிரிவு இருந்தால் ஏன் உஷார் தேவைப கணவனுக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி இருந்து மனைவி க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி இருந்தால் குழந்தை பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் குழந்தை பிறக்கும் நிலையில், அது தாயின் நெகட்டிவ் ரத்த க் காரணியுடன் கலந்து, தாயின் உடலில் எதிர் அணுக்கள் உற் பத்தியாக வழிவகுத்து விடும்.
ஆர்.எச். பாசிட்டிவ் ஆர்.எச். நெகட்டிவ் என எதன் அடிப்படையில் ரத்தக் காரணி பிரிக்கப்படுகிறது?
ரீசஸ் எனும் ஒருவகை குரங்கி ன ரத்த சிவப்பணுக்களில் ஆன்டி ஜன் எனும் ஒரு வகைப் புரதம் உள்ளது. மனிதர்களின் ரத்தத் தில் இது போன்ற ஆர்.எச். கார ணி இருந்தால் ஆர்.எச். பாசிட் டிவ் இல்லா விட் டால் ஆர்.எச். நெகட்டிவ் இந்தியாவில் பெரும் பாலானோருக்கு ஆர். எச். பாசிட் டிவ் வகை ரத்தக் காரணி தான்.
தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி, பிறந்த குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி விளைவு என்ன?
தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி இருந்து பிறக்கும் குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி இருந்தால் முதல் பிரசவத்தின் போது பெரும்பாலும் பிரச்சினை வராது. ஆனால் குழந்தை யின் பாசிட்டிவ் ரத்த செல் கள் தாயின் நெகட்டிவ் ரத்த செல்களுடன் கலந்து அடுத்த தடவை உருவாகும் கருவை அழித்துவிடும் அபாயம் உண்டு.