Wednesday, 8 August 2012

இரத்தம்

ரத்தம் பற்றி டாக்டக் எம்.எஸ். திவ்யா அளித்த விளக்கம் வருமாறு:- ரத்தத்தின் நிறம் ஏன் சிவப்பாக உள்ளது?
ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் உள்ளே `ஹீமோகுளோபின்’ என்ற வேதிப் பொருள் உள்ளது. இந்த வேதிப்பொருள் தான் ரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின் தான் உடலில் உள்ள அனைத்துச் செல்களுக்கு ம் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்த த்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால் ரத்த சோகை நோய் ஏற்படும். ரத்த சோகை, ரத்த இழப்பு ஏற்படும் போது ரத்த சிவப்பு அணுக்களைக் செலுத்துவார் கள்.
ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை எவ்வளவு?.
ஒரு சொட்டு ரத்தத்தில் 55 லட்சம் சிவப்பு அணுக்கள் இருக்கும்.
ரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகும் இடம் எது?
எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். இந்த வெற்றிடத்தை ச் சுற்றி எலும்பு மஜ்ஜை இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், பிளேட்லட்டுகள் உற்பத்தியாகி ன்றன.
ரத்த சிவப்பு அணுக்களின் ஆயுள் எவ்வளவு?
ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் நான்கு மாதங்கள் ரத்தச் சிவப்பு அணுக்களின் முக்கிய வேதிப்பொ ருளான ஹீமோகுளோபின் உற்ப த்திக்கு இரும்புச் சத்து தேவை. கீரைகள், முட்டைக்கோஸ், முட்டை, இறைச்சி ஆகியவற்றில் இரு ம்புச் சத்து அதிகம். இவற்றை உணவில் தினமும் சேர்த்துக் கொண் டால் ரத்த சோகை வராது.
ரத்த வெள்ளை அணுக்களின் வேலை என்ன?
ரத்த வெள்ளை அணுக்களை படை வீரர்கள் என்று அழைக்க லாம். ஏனெனில் உடலுக்குள் நு ழையும் நோய்க் கிருமிகளை முதலில் எதிர்த்துப் போராடுப வை ரத்த வெள்ளை அணுக் களே. இவை நோய் எதிர்ப்புச் சக்தியின் முக்கிய ஆதாரம்.
ரத்தத்தில் உள்ள `பிளேட்லட்’ அணுக்களின் வேலை என்ன?
உடலில் காயம் ஏற்பட்டவுடன் ரத்தம் வெளியேறுவதை இயற்கையா கவே தடுக்கும் சக்தி `பிளேட்லட்’ அணுக்களுக்கு உண்டு. ரத்தம் வெளியேறும் இடத்தைச் சுற்றி “கார்க்” போல அடைப் பை ஏற்படுத்தி மேலும் ரத்தக் கசிவை இவை தடுத்துவிடும். டெங்கு, கடும் மலே ரியா காய் ச்சலால் பாதிக்கப்படும் நோ யாளிகளுக்கு இந்த பிளேட் லட் அணுக்களை செலுத்து வார்கள்.
பிளாஸ்மா என்றால் என்ன?
ரத்தத்தில் உள்ள திரவப் பொருள்தான் பிளாஸ்மா. 100 மில்லி லிட் டர் ரத்தத்தில் சுமார் 50 சதவீத அளவுக்கு பிளாஸ்மாவும் 40 சதவீத அளவுக்கு ரத்த சிவப்பு அணுக்களும் இருக்கும். மற்ற அணுக்கள் 10 சதவீதம் இருக்கும். பிளா ஸ்மாவில் தண்ணீர், வைட்டமின்கள், தாது ப்பொருள்கள், ரத்தத்தை உறைய வைக்கக்கூடிய காரணிகள், புரதப் பொரு ள்கள் இருக்கும். தீக்காயங்களால் பாதிக் கப்படும் நோயாளிகளுக்கு பிளாஸ்மா வை மட்டும் செலுத்துவார்கள்.
ரத்தத்தில் உள்ள பொருள்கள் யாவை?
ரத்த சிவப்பு அணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்லட்டுகள் என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. இவை தவிர திரவ நிலையில் “பிளாஸ்மா ” என்ற பொருளும் உள்ளது.
ரத்த அழுத்தம் என்றால் என்ன?:-
உடலின் எல்லா உறுப்புகளுக் கும் ரத்தத்தை இதயம் `பம்ப்’ செய்யும் போது ஏற்படும் அழு த்தமே ரத்த அழுத்தம். இதயத் திலிருந்து ஒரு நிமிஷத்துக்கு ஐந்து லிட்டர் ரத்தம் எல்லா உறுப்புகளுக்கும் செல்கி றது. இப்பணியைச் செய்யும் இதய த் தசைகளுக்கு மட்டும் ஒரு நிமிஷத்துக்கு 250 மில்லி லிட்டர் ரத்தம் தேவை. உடலி ல் ரத்த பயனம் செய்யும் தூரம் எவ்வளவு தெரியுமா? ஒரு சுழற்சியில் ரத்தம் பயணம் செய்யும் தூரம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிலோ மீட்டர் ரத்தக் குழாய் களுக்குள் செலுத்தும் போது, அதன் வேகம் மணிக்கு 65 கிலோ மீட்டர் மோட்டார் சைக்கிளின் சராசரி வேகத்தை விட அதிகம்.
மாத்திரை சாப்பிட்டவுடன் தலைவலி அல்லது கால் வலியிலிருந்து நிவாரணம் கிடைப்பது எப்படி?
மாத்திரை சாப்பிட்டவுடன், அதில் உள்ள மருந்துப் பொருள் ரத்தம் மூலம் வலி உள்ள இடத்துக்குப் பயணம் செய்கிறது. வலியிலிரு ந்து நிவாரணம் கிடைக்கிறது. உடலில் இடத்துக்குப் பயணம் செய்யும் போது எடுத்துச் செல் வது என்னப எல்லாத திசுக்களு க்கும் ஆற்றலை எடுத்துச் செல் லும் முக்கியப் பணியை ரத்தம் செய்கிறது. கொழுப்புச் சத்து, மாவுச்சத்து, புரதம், தாதுப் பொ ருள்கள் வடிவத்தில் ஆற்றலை அது எடுத்துச் செல்கிறது. திசுக்கள் ஜீவிக்க ஆக்சிஜனை எடுத்துச் செல்வதும் ரத்தம் தான்.
ரத்த ஓட்டத்தின் முக்கியப் பணி என்ன?
நுரையிலில் இருந்து அனைத்துச் திசுக்களுக்கும் ஆக்சிஜனை ரத் தம் எடுத்துச் செல்லும் திரும்புகையில் திசுக்களில் இருந்து கார்பன் -டை ஆக்சைடை நுரையீரலு க்கு எடுத்து வந்து மூக்கு வழி யே வெளியேற்றுவதும் ரத்தம் தான்.
24 மணி நேரத்தில் சிறுநீரகங் கள் வெளியேற்றும் சிறுநீரின் அளவு எவ்வளவு தெரியுமா?
24 மணி நேரத்தில் சுழற்சி முறையில் 1700 லிட்டர் ரத்தத் தை சிறு நீரகங்கள் சுத்திகரிப்பு செய்கின்றன. இதில் ஒன்றரை லிட்டர் சிறு நீரை அவை வெளி யேற்றுகின்றன.
தலசீமியா என்பது தொற்று நோ யா?
இது தொற்று நோய் அல்ல. தந் தைக்கோ அல்லது தாய்க்கோ தலசீமியா நோய் இருந்தால் குழந்தைக்குப் பிறவியிலேயே இந்நோய் ஏற் பட வாய்ப்பு உண்டு. குழந்தை பிறந்த பிறகு இந்நோய் வரவாய்ப்பி ல்லை.
மூளையின் செல்களுக்கு ரத்தம் செல்லாவிட்டால் விளைவு என்ன?
மூளையின் செல்களுக்கு ஆக்சிஜனை எடுத்துச் செல்வது ரத்தம் தான். தொடர்ந்து மூன்று நிமிஷங்களு க்கு ஆக்சிஜன் செல்லாவிட்டால் மூளை யின் செல்கள் உயிரிழந்துவிடும். உடலி ன் இயக்கத் துக்கு ஆணையிடும் மூளை யில் கோளாறு ஏற்பட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும்.
ரத்தம் உறைவதற்கு எது அவசியம்?
ரத்தத்தில் மொத்தம் உள்ள 13 காரணி களில் முதல் காரணியில் பிப்ரினோஜ ன் என்ற வேதிப்பொருள் தான் ரத்தத்தை உறைய வைக்கிற து. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவில் இது இல்லாவிட்டால் ரத்தம் உறையாது. ஒரு லிட்டர் பிளாஸ்மாவுக்கு 25.4. கிராம் என்ற விகித த்தில் பிப்ரினோஜன் உள்ளது.
ரத்தத்தில் எத்தனை குரூப்புகள் உள்ளன?
ரத்தத்தில் நான்கு குரூப்புகள் உள்ளன. `A’, `B’, `AB’, `O’ என நான்கு குரூப்புகள் உள்ளன. இது நான்கைத் தவிர என்ற உப குரூப்புகளும் ரத்தத்தில் உ ண்டு. O பிரிவு ரத்தம் அனை வருக்கும் சேரும் என்பதால் தான் O குரூப் ரத்தம் உள்ள வர்களுக்கு யுனிவர்சல் டோனர் என்று பெயர்.
ரத்தம் எவ்வாறு குரூப் வா ரியாக பிரிக்கப்படுகிறது?
ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களில் ஆன்டிஜன் எனும் ஒருவகைப் புரதம் உள்ளது. அதன் தன்மைக்கு ஏற்ப குரூப் பிரிக்கப்படுகிறது. ரத்த சிவப்பணுக்களில் A ஆன்டிஜன் இருந்தால் A குரூப் ஆகும். B ஆன்டிஜன் இருந்தால் B குரூப்பாகும். என்ற இரண்டு ஆன்டிஜன் இருந்தால் AB குரூப் ஆகும். எந்தவிதமான ஆன்டிஜனும் இல்லை என்றால் O குரூப் ஆகும்.
ஆர்.எச். நெகட்டிவ் ரத்தத்தை, ஆர். எச். பாசிட்டிவ் உள்ள நோயாளிக ளுக்கு செலுத்தலாமா?
செலுத்தலாம். ஆனால் நோயாளி ஆணாக இருக்க வேண்டும் அல் லது குழந்தைப்பேறு இனி அவசியம் இல்லாத பெண்ணாக இருக்க வேண் டும். இளம் பெண்களுக்கு மாறுபட்ட ஆர்.எச். ரத்தத்தை செலுத்தக் கூடா து. ஆர்.எச்.
ரத்தக் காரணிக்கும் பெண்களுக்கும் உள்ள தொடர்பு என்ன?
கர்ப்பம் தரிப்பதற்கு முன்பே கணவன்-மனைவி இருவரும் ரத்தப் பிரிவை சோதனை செய்வது அவசியம். கணவன்-மனைவி இருவரு க்கும் ரத்தக் காரணி (ஆர்.எச்.) பாசிட்டி வ்வாகவோ அல்லது நெகட் டிவ்வாக வோ இருந்தால் கர்ப்பம் தரித்தவுடனே யே மகப்பேறு மருத் துவரிடம் சொல்லி விட வேண்டும்.
கர்ப்பிணிக்கு ஆர்.எச். நெகட்டிவ் ரத்தப் பிரிவு இருந்தால் ஏன் உஷார் தேவைப கணவனுக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி இருந்து மனைவி க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி இருந்தால் குழந்தை பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் குழந்தை பிறக்கும் நிலையில், அது தாயின் நெகட்டிவ் ரத்த க் காரணியுடன் கலந்து, தாயின் உடலில் எதிர் அணுக்கள் உற் பத்தியாக வழிவகுத்து விடும்.
ஆர்.எச். பாசிட்டிவ் ஆர்.எச். நெகட்டிவ் என எதன் அடிப்படையில் ரத்தக் காரணி பிரிக்கப்படுகிறது?
ரீசஸ் எனும் ஒருவகை குரங்கி ன ரத்த சிவப்பணுக்களில் ஆன்டி ஜன் எனும் ஒரு வகைப் புரதம் உள்ளது. மனிதர்களின் ரத்தத் தில் இது போன்ற ஆர்.எச். கார ணி இருந்தால் ஆர்.எச். பாசிட் டிவ் இல்லா விட் டால் ஆர்.எச். நெகட்டிவ் இந்தியாவில் பெரும் பாலானோருக்கு ஆர். எச். பாசிட் டிவ் வகை ரத்தக் காரணி தான்.
தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி, பிறந்த குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி விளைவு என்ன?
தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி இருந்து பிறக்கும் குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி இருந்தால் முதல் பிரசவத்தின் போது பெரும்பாலும் பிரச்சினை வராது. ஆனால் குழந்தை யின் பாசிட்டிவ் ரத்த செல் கள் தாயின் நெகட்டிவ் ரத்த செல்களுடன் கலந்து அடுத்த தடவை உருவாகும் கருவை அழித்துவிடும் அபாயம் உண்டு. 

No comments:

Post a Comment