Posted On Feb 18,2012,By Muthukumar |
வீட்டின்
செல்வ செழிப்புக்கு உறுதுணையாகும் பெண்கள், வீட்டுப்பராமரிப்பில் மட்டுமே
பெண்கள் கவனம் செலுத்தி வந்த காலங்கள் எல்லாம் பழங்கதையாகிப்போயிற்று.
நாகரீக உலகில் ஆண்களின் சேமிப்புகளை முறையாக முதலீடு செய்வதற்கும் செல்வம்
சேர்க்கும் அவர்களது முயற்சியில் உதவிடவும் இன்றைய பெண்கள் தயாராகி
வருகின்றனர்.
வீட்டின்
சேமிப்பை வளப்படுத்துவதில் ஆண்களின் முதல் சொத்தாக விளங்குவது அவர்களது
இல்லத்தரசிகளே. செல்வ வளம் சேர்ப்பதில் ஆண்களின் நிதி ஆலோசகராக விரும்பும்
பெண்மணி நீங்களானால், இந்த கட்டுரை உங்களுக்காகத்தான். தொடர்ந்து
படியுங்கள். இதோ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில நிதி நிர்வாக
நுட்பங்கள். இதை தெரிந்து கொண்டால் பணம் சேர்ப்பதில் உங்கள் கணவருக்கு
நீங்கள் சிறந்த துணையாக முடியும்.
திட்டமிடுங்கள்
எதற்கும்
திட்டமிடுவது தான் முதல் படி. `திட்டம் சரியாக இருந்தால் பாதி வெற்றி
அடைந்தாயிற்று' என்னும் ஆங்கில பழமொழியை நினைவில் கொள்ளுங்கள்.
உங்கள்
செலவுகளை- அடிப்படை செலவுகள், அதிக அவசியமல்லாத செலவுகள், சொத்துக்கள்
மீதான முதலீட்டு செலவுகள் மற்றும் சேமிப்புக்கள் என
வகைப்படுத்திக்கொள்ளுங்கள்.
மளிகை,
மருந்து, வாடகை, வீட்டுப்பணியாள் சம்பளம், கல்விக்கட்டணம், மின் கட்டணம்,
டெலிபோன் கட்டணம் போன்றவை அடிப்படை செலவுகளாகும். சுற்றுலா, சினிமா, உணவு
விடுதிகளுக்கு செல்லுதல் போன்றவை அதிக அவசியமல்லாத செலவுகளாகும்.
வீட்டுக்கடன், வாகன கடன் மற்றும் தனி நபர் கடன் ஆகியவை சொத்துக்கள்
வாங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட செலவுகளாகும். தங்க ஆபரணங்கள், வங்கி
டெபாசிட்டுகள், பங்கு வர்த்தக முதலீடுகள் போன்றவை சேமிப்புகளாகும்.
மேற்சொன்ன ஒவ்வொரு இனத்திற்கும் அடுத்த மாதம் எவ்வளவு பணம் தேவைப்
படும் என்பதை முன்னதாக திட்டமிட்டு அந்தந்த தொகையை தனித்தனியே எடுத்து வையுங்கள்.
படும் என்பதை முன்னதாக திட்டமிட்டு அந்தந்த தொகையை தனித்தனியே எடுத்து வையுங்கள்.
வரவோ
செலவோ அவற்றை தனித்தனியாக எழுதி வையுங்கள். என்னென்ன வகைக்கு எவ்வளவு
செலவு செய்ய வேண்டும் என்பதை சரியாக எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.
உதாரணமாக
பேப்பர்காரர், காய்கறிக்காரர், பால்காரர், சலவை தொழிலாளி இவர்களுக்கு
கொடுக்க வேண்டிய தொகை, வீட்டுப்பணியாளருக்கு கொடுத்த முன்பணம், வங்கியில்
செலுத்த வேண்டிய பணவிடை, மற்றும் காசோலை பற்றிய தகவல்களை ஞாபகமாக எழுதி
வையுங்கள். அந்தந்த செலவுகள் முடிந்ததும் அதையும் மறக்காமல்
குறிப்பெடுங்கள்.
ஒவ்வொரு
இனத்துக்கும் நீங்கள் திட்டமிட்ட செலவு அதனை மிகாமல்
பார்த்துக்கொள்ளுங்கள். ஒருவேளை ஒரு இனத்தில் நீங்கள் திட்டமிட்டதை விட
அதிகமாக செலவு செய்து விட்டதாக தெரிய வந்தால், வேறு ஏதாவது ஒரு செலவை
நிறுத்தவோ அல்லது குறைக்கவோ முடியுமா என்று பாருங்கள்.
பல
நேரங்களில் உபரி வருமானத்தை எவ்வாறு செலவு செய்வது என்பதில் கணவன்
மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்படுவதுண்டு. உதாரணமாக, போனஸ் பணத்தில்
தனக்கொரு செல்போன் அல்லது லேப்டாப் அல்லது கேமராவை வாங்கலாமென கணவர்
நினைக்கும் போது, தங்க ஆபரணங்கள் வாங்குவதே சரி என மனைவி கருதலாம்.
இதுபோன்ற தருணங்களில் எதற்கு முக்கியத்துவம் தருவது என்பதை இருவரும் கலந்து
பேசி முடிவெடுப்பது நல்லது.
கல்வி,
மருத்துவம் மற்றும் உணவுக்கு முன்னுரிமை தருவது மிகவும் சரியானது.
செலவுகளை கட்டுப்படுத்தி மாதாந்திர வருமானத்தில் கொஞ்சம் கொஞ்சமாக சேமிக்க
கற்றுக்கொண்டால் அவற்றை சிறப்பான அளவில் முதலீடு செய்யலாம்.
அதிக
தேவையற்ற செலவுகள், வாகன மற்றும் தனி நபர் கடன்களை கட்டுப்படுத்தினால்
சேமிப்பதொன்றும் கடினமானதல்ல. சேமிப்புகள் வளரும் போது அவற்றை சொத்துக்களாக
மாற்றிக்கொள்ளலாம்.
சரி. வருவாயை பெருக்குவது எப்படி?
மொத்தமாக
வாங்குங்கள். முடிந்த வரை பேரம் பேசி வாங்குங்கள். தள்ளுபடி விலையில்
பொருட்கள் கிடைக்கும் போது வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் கணவர்
சேமிக்கும் விதங்களை தெரிந்து வைத்திருங்கள். சேமிப்பின் வளர்ச்சியை
கண்காணியுங்கள். சேமிப்பின் வளர்ச்சி எதிர்பார்த்த விதத்தில் இல்லாமல்
போனால் அவற்றை மாற்றி லாபகரமான இனங்களில் மறு முதலீடு செய்யுங்கள். அதே
நேரம் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை கவனத்தில் கொண்டு முதலீடுகளை
மேற்கொள்ளுங்கள்.
நீங்களும் நிதி ஆலோசகர் தான் இல்லத்தரசிகளே!