Posted on February 12, 2012 by muthukumar
மணமகன் வேஷ்டி (பேன்ட் தவிர் க்கவும்) அனிந்துமுன் நாள் பயன் படுத்திய மாலையை சாற்றி வரவும்
- மணமக்கள் ஒவ்வொரு முறை மணவறையில் நுழையும் பொழு தும் வலதுகாலை முன்வைத்து உள்ளே வரவும் வருகை யாளர்க ளை பார்த்து தலைவணங்கி வண க்கம் செலுத்தவும்.
- திருமண சடங்கு முடியும் வரை சிரித்த முகத்துடன் காட்சியளிக்க வும்
- தோழி, நன்பர்கள் சிலரை தங்கள் அருகில் திருமண சடங்கு முடியு ம் வரை இருக்கசொல்லவும்
யார் அருகில் வந்தாலும் தலை வணங்கி வணக்கம் செலுத்தவும்
- திருக்கோயில் போன்று மிகவும் புனிதமான இடம் மணவறை ஆகும் எனவே அதற்குரிய மரியாதையி னை தரவும்
- கைபேசியை மண மேடையில் பூஜையின் பொழுது பயன்படுத்த வேண்டாம்
- வேண்டுகோள்:மது அருந்துபவராக இருந்தால், முன்நாள் இரவில் யார் வற்புறுத்தினாலும் மது அருந்த வேண்டாம்
- மணமேடையில் ஆடை விலகாம ல் பார்த்துக்கொள்ளவும்
- தாலிகட்டும் பொழுது தங்களின் குலதெய்வத்தை பிரார்த்த னை செய்யவும்
- தி
ருமண சடங்குகள் முடியும் வரை மனதில் இறைவனது நாமங்க ளை உச்சரிக்கவும்
- இறைஉணர்வான ஒரு இந்த நிகழ்ச்சி யின்பொழுது தங்களின் குல வழக்கப் படி நெற்றியில் நாமம் அல்லது விபூதி இடவும். இதில் கூச்சப் பட வேண்டிய அவசியம் இல்லை
- தங்களின் பாரம்பரிய உடை (பஞ்ச கச்சம்) உடுத்தினால் தான்
திரும ணத்திற்கு அழகு, வாழ் நாளில் ஒரு முறை மட்டுமே கிடைக்கும் புனி தமான வாய்ப்பு ஆகும்
- மாதா, பிதா, குரு, தெய்வம் என வே திருமணத்திற்கு உங்களின் ஆரம்ப வகுப்பு ஆசிரியர்களை வரு கைதந்து வாழ்த்த அழையுங்கள், மண மேடைக்கு அவர்களை வர வழைத்து உரிய மரியாதை செலுத் துங்கள்
- வாழ்க்கையில் 100 ஆண்டு சேர்ந்து வாழவேண்டும் என்று
பிரார்த்தனை செய்து முதன்முறையாக மண மகளின் கைப் பற்றி அக்னியை வலம் வரும் பொழுது இடையில் யாரேனும் கை குலுக்க முனைந்தால் கட்டாயம் அன்பாக பேசி தவிர்க்கவும் (இணந்த கைகளை பிரிக் ககூடாது)
- திருமண சடங்கை எடுக்கத்தான் புகைப்பட ம் (புகைப்படத்திற்க்காக நடக்கும் சடங்கு திரைப்படம்)
- பாதஅணியுடன் வரும் நட்பு, உறவுகளுடன் மணமேடயில் புகைப்படம் எடுப்பதை தவிர்க்கவும், திருமண சடங்கு முடிந்
த தும் மண மேடைக்கு முன்னர் தரை யில் புகைப்படம் எடுத்துக்கொள்ள வும்
- தோழி மாப்பிள்ளை பட்டு அல்லது கதர் வேட்டி கட்டிக்கொள்ள சொல்ல வும் அதுதான் அழகு, மரபும்கூட
- பெரியவர்கள் மேடையில் வந்து ஆசி ர்வாதம் செய்யும் பொழுது கூச்சப்ப டாமல் தலைவணங்கி, பாதம் தொட்டு மரியாதை செலுத் தவும்
- திருமணத்தின் பின்னர் இருவீட்டாரி ன் நன்பர்களும், உறவினர்களும் பொதுவானவர்களை என
வே மணமகள் உறவினர், மண மகன் உறவினர் என பாகுபாடு இன்றி வணக்கம் தெரிவிக்கவும்
- மணமக்கள் தங்களின் உறவினர் கள் மேடைக்கு வரும் பொழுது பரஸ்பரம் உறவுமுறை சொல்லி அறிமுகம் செய்ய வும்
- மெட்டி போடும் பொழுது மணமகளின் பாதங்களை இருகை களால் தாங்கி அம்மியின் மீது பதிக்கவும்.
No comments:
Post a Comment