Thursday, 16 February 2012

உங்கள் குழந்தை அடிக்கடி சிறுநீர் கழிக்கிறதா?

Posted On Feb 16,2012,By Muthukumar

சில குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழித்துக்கொண்டிருக்கும். அதனால், பல தாய்மார்கள், அந்தக் குழந்தைகளை கீழாடை அணியாமல் `ப்ரீ'யாக விட்டுவிடுவார்கள்.
அவ்வாறு செய்பவர்கள், ஏன் தங்கள் குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிக்கிறார்கள் என்று யோசித்திருக்க மாட்டார்கள்.
உங்கள் குழந்தையும் அடிக்கடி சிறுநீர் கழிக்கிறதா? அதற்கு காரணம், இதுதான்...
பொதுவாக பாலில் தண்ணீர் அதிகமாகக் கலந்து தருவதால் குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிக்கிறார்கள். அதனால், குழந்தைகளுக்கு தரும் பசும்பால் அல்லது ஆவின் பாலில் தண்ணீர் சேர்ப்பதை தவிர்த்திடுங்கள்.
டின் பவுடர் பாலாக இருந்தால் ஒரு கரண்டி பவுடருக்கு ஒரு அவுன்ஸ் தண்ணீர் சேர்த்தால் போதும். பொதுவாக, 4 கிலோ எடையுள்ள குழந்தையாக இருந்தால் ஒரு வேளைக்கு 4 அவுன்ஸ் பால் கொடுத்தாலே போதும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

No comments:

Post a Comment