Sunday, 12 February 2012

நீங்கள் வாங்கப்போகும் வீடு, கட்டிய வீடா…? கட்டப்படும் வீடா…?

குருவி போல சிறுகச்சிறுக சேர்த்து வைத்த பணத்தைக் கொண்டு, தலைமுறை தாண் டியும் வசிக்க வேண்டிய வீட் டை வாங்கும் போது, பல் வேறு விஷயங்களை அலசி ஆராய்ந்த பின்பு வாங்கி னால் பிற்காலத்தில் தொந்தரவு இல்லாமல் வசிக்க முடியும். வீடு வாங்குவதற்கு முன்பு என்னென்ன செய்ய வேண்டும் என்பதில் குழப்பமாக உள்ளதா? கவலையை விடுங்கள். உங்களுக்காக இதோ சில குறிப்புகள்.
முதலில் கட்டுமானத்தைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்
முதலில், பல்வேறு இதழ்களில் வெளியாகும் கட்டுமான நிறுவன ங்களின் விளம்பரங்களை பாரு ங்கள். அதில், ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட அல்லது கட்டிக் கொண்டிருக்கும் புதிய அடுக்கு மாடி குடியிருப்புகள், பழைய குடியிருப்புகள் பற்றிய தகவல் கள் இடம் பெற்றிருக் கும். இதில் பட்ஜெட்டைப் பொறுத்து உங்க ளுடைய சாய்ஸ் என்ன என்ப தை முடிவு செய்யுங்கள்.
கட்டி முடிக்கப்பட்ட வீடு:
கட்டப்பட்ட புதிய அடுக்கு மாடிக் குடியிருப்பையே பெரும்பாலான வர்கள் தேர்வு செய்கிறார்கள். இது நல்லது. ஏனெனில், கட்டிக் கொண் டிருக்கும் குடியிருப்பாக இருந்தா ல், காலதாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் கட்டுமானப் பொ ருட்கள் விலை உயர் வை காரணம் காட்டி கூடுதல் தொகை கேட்கவும் வாய்ப்பு உள்ளது. கட்டப்பட்ட வீட் டில் இத்தகைய தொல்லைகள் இல்லை. முதலில் உங்கள் பட்ஜெ ட்டுக்கு ஏற்ற பகுதியை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். உதாரண மாக நகரின் முக்கிய பகுதிகளில் என்றால் விலை அதிகமாகவும், புறநகர் பகுதிக ளாக இருந்தால் சற்று குறை வாக வும் இருக்கும்.
அடுத்தபடியாக, பல்வேறு கட்டுமான நிறுவனங்களின் குடியிருப்பு திட்டங்களி ன் சிறப்பு அம்சங்கள் மற்றும் விலை ஆகியவற்றை ஒப்பிட்டு நிறுவனத்தை தேர்வு செய்யுங்கள். பிறகு எத்தனை சதுர அடி குடியிருப்பு என் பதை முடிவு செய்து அளந்து பாருங்கள். கட்டிடத்துக்கு முறையான அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொ ள்ளுங் கள்.
ஏனெனில், 4 மாடிக்கு மட்டும் அனுமதி பெற்றுவிட்டு 6 மாடி கட்டி விற்று விடுவார் கள். இதனால் பிற்காலத்தில் பிரச்னை ஏற்படும். இது தொ டர்பாக வழக்கறிஞரின் உத வியை நாடுவது நல்லது. வங்கிக் கடன் பெற்று வீடு வாங்குவதாக இருந்தால், இந்த விஷயங் களை வங்கி பார்த்துக் கொள்ளும்.
கட்டிக் கொண்டிருக்கும் வீடு:
கட்டிக் கொண்டிருக்கும் வீடு வாங்குவதால் சில நன்மை உ ண்டு. அதாவது குறிப்பிட்ட அடுக்குமாடி குடியிருப்பு திட்ட த்தை தொடங்கும்போது, கட்டு மான நிறுவனங்கள் சலுகை கள் வழங்கி வருகின்றன. உதா ரணமாக சதுர அடிக்கு ரூ500 வரை மிச்சப்படுத்த முடியும். அதாவது 500 சதுர அடி வீடாக இருந்தால் ரூ2.5 லட்சம் குறை யும். குடியிருப்பான தொகையையும் கொஞ்சம் கொஞ்சமாக படிப் படியாக கொடுக்கலாம்.
இதுகுறித்து, சோழிங்கநல்லூரைச் சேர்ந்த பிரபாகரன் கூறுகை யில், ‘‘நாவலூரில் உருவாகி வரும் ஒரு அடுக்குமாடிக் குடியிருப் பில் 6 மாதங்களுக்கு முன்பு ஒரு வீடு புக் செய்தேன். அப்போது, துவக்க கால சலுகையாக ஒரு சதுர அடி விலை ரூ.2,000 ஆக இருந்தது. படிப்படியாக உயர்ந்து இப்போது ரூ.2,500 ஆகி உள் ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் கட்டு மானப் பணி முடிவடையும். அப்போது விலை ரூ.2,700 ஆக உயரும் என கட்டு மான நிறுவனம் கூறி உள்ளது’’ என்றார்.
அதேநேரம், சில விஷயங்களில் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். வீட்டை கட்டிக் கொடுப்பதில் காலதாமதம் ஏற்படும். எனவே, கட்டுமான நிறுவனத்துடன் முன்தொகையை செலுத்தி ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதில், எவ்வ ளவு காலத்துக்குள் வீடு கட்டிக் கொடுக்கப்படும், நிலத்தின் அளவு (யுடிஎஸ்), கார் பார்க்கிங் வசதி உட்பட அனைத்து விஷயங்களையும் உறுதி செய்து கொள்ளுங்கள். அதுபோல், கட்டு மானப் பொருட்கள் விலை உயர்வை காரணம் காட்டி கூடுதல் தொகை கேட்கக் கூடாது என்பதை ஒப்பந்தத்தில் தெளி வாக குறிப்பிடச் சொல்ல வும்.
கட்டுமானப் பணி நடைபெறும்போது, அவ்வப்போது பணியை மேற்பார்வை செய்ய வேண்டும். குறிப்பாக, உங்களுக்கு ஒதுக்கப் பட்ட அளவு சரியாக உள்ளதா என்ப தை அடித்தளம் போடும் போதே அளந்து சரி பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஒதுக்கப் பட்ட அளவைவிட குறைவான அளவில் கட்டிக் கொடுத்துவிட வாய்ப்பு உள்ளது.
வீடு ஆவணங்கள் அனைத்து சரியாக உள் ள‍தா என்பதை ஆராய வேண்டும்.

ஏற்கனவே கட்டப்பட்டிருக்கும் வீடு வாங்கும்போது அதில் யாருக்கு எல் லாம் உரிமை இருக்கிறது என்பதைக் கவனியுங்கள்.
பழைய வீடு என்றால் பத்திரப் பதிவி போது முழுப் பணத்தையும் கொடு த்து விடாதீர்கள். கொஞ்சம் பணத் தையாவது பிடித்து வைத்துக் கொள் ளுங்கள்.மின்சாரம், தண்ணீர் இணை ப்பை உங்கள் பெயருக்கு மாற்றிய பிறகு அந்தப் பணத்தைக் கொடு ப்பதாகச் சொல்லுங்கள்.
சொத்து கடந்த மூன்றாண்டுக ளுக்கு முன் அடமானம் வைத்து கடன் வாங்கப்பட்டிருந்தால் அந் த விவரம் வில்லங்கச் சான்றி தழில் தெரிய வாய்ப்பில்லை. என்வே மூலப் பத்திரத்தின் அச லை பார்த்த பிறகே முன்பணம் கொடுங்கள். சொத்தை அடமா னம் வைத்துவிட்டு நகலை வை த்து வீட்டை விற்க முயற்சி செய்யக்கூடும்.
அடுக்குமாடி குடியிருப்புகளில்தான் விதிமுறை மீறல்கள் அதிகம் நடைபெறுகிறது. அதனால் அப்ரூவல் பிளா ன்படி விதிமுறைகள் மீறாமல் கட்டப்பட்டிருக் கிறதா என்பதைச் சரி பார்ப்பது அவசியம்.
குடியிருப்பின் சதுர அடி விகிதாசாரத்துக்கு ஏற்ப, பிரிக்கப்படாத மனைப்பரப்பு பத்திரத்தில் (யூ.டி.எஸ்) குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்பதக் கவனியுங்கள். குறைவான யூ.டி.எஸ் கொடுத் து விட்டு, உங்களின் அனுமதி இல்லாமலே பின்னால் கூடுதல் தளம் கட்ட வாய்ப்பு உள்ளது.

பொதுப் பயன்பாட்டு இடம் என்ற காமன் ஏரியா அனைவரும் பயன் படுத்தும்படி இரு க்கிறதா என்பதை உறுதிப் படுத்திக்கொள் ளுங்கள். சில புரமோட்டர்கள், காமன் ஏரி யா என்று ஒரு பகுதியைக் கட்டிவிட்டி, அதில் அறை அல்லது கடை கட்டி விற்று விடுகிறார் கள்.
திறந்தவெளியில் கார் நிறுத்தும் வசதிக்கு பணம் கொடுக்கத் தேவையில்லை.
மேலும் சில தகவல்கள்

வீ‌ட்டை வா‌ங்குவத‌ற்கு மு‌ன்பு அ‌ந் த ‌வீ‌ட்டை ‌மிகவு‌ம் கவன‌த்துட‌ன் கவ‌ னி‌க்க வே‌ண்டு‌ம். அதாவது, உ‌ங்க‌ ள் ‌குடு‌ம்ப உறு‌ப்‌பின‌‌ர்களு‌க்கு ஏ‌ற்ற வகை‌யி‌ல் ‌வீடு இரு‌க்குமா?

உ‌ங்களது போ‌க்குவர‌த்து வச‌தி‌க்கு ‌நீ‌ங்க‌ள் வா‌ங்கு‌ ம் ‌வீடு இரு‌க்கு‌ம் பகு‌தி பொரு‌ந்‌‌தி வருமா? எ‌ன்பதை‌ ப் பா‌ர்‌க்க வே‌ண்டு‌ம்.
‌வீ‌ட்டி‌ல் வயதானவ‌ர்களோ, மு‌தியவ‌ர்களோ இரு‌ப்‌பி‌ன், அரு‌கி‌ல் ந‌ல்ல மரு‌த்துவ மனை இரு‌ப்பதையு‌ம் உறு‌தி செ‌ய்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.
மேலு‌ம், குறிப்பிட்ட பகுதி, அமைதியாக, பிரச்சினைகள் இல்லாததாக இருப்பது ‌மிகவு‌ம் மு‌க்‌கிய‌ம். ந‌ம் ‌வீடு அமை‌ந்த பகு‌தி‌யி‌ல் ‌பிர‌ச்‌சினைக‌ள், எ‌ப் போது‌ம் ச‌ண்டை ச‌ச்சரவு எ‌ன்று இரு‌ந்தா‌ ல் ‌ வீ‌ட்டி‌ற்கு‌ள் ‌ நி‌ம்ம‌தி யாக இரு‌க்க முடி‌யாது.
‌மிகவு‌ம் நெ‌ரிசலான‌ப் பகு‌தி‌யி லோ, போ‌க்குவர‌த்து நெ‌ரிச‌ல் ‌ மிகு‌ந்த பகு‌தி‌யிலோ ‌வீடு வா‌ங்கு வது ‌மிகவு‌ம் தவறான முடிவாகு‌ம். அமை‌‌தியா‌ன‌ப் பகு‌தி‌யி‌ல் ‌வீடு இரு‌ப்பதுதா‌ன் எ‌‌ன்று‌ம் ந‌ல்லது.

No comments:

Post a Comment