Monday, 13 February 2012

கித்தார் கற்றுக்கொள்ள‍ விரும்புபவர்களுக்கு உதவும் தளம்

சிறுவனாய் இருந்து இளைஞனாய் உரு வெடுக்கையில், பலருக்கும் ஏதேனும் ஓர் இசைக்கருவியை இசைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என ஆர்வம் வரும். 
இன்றைய பள்ளிக் கல்வி பலத்த போட்டி யின் அடிப்படையில் அமை ந்துள்ளதால், அதற்கு பள்ளி மாணவர் களால் நேரம் ஒதுக்க இயல வில்லை. கல்லூரி மாணவர்களுக்கும் இதே பிரச்னைதான்.
இவர்களுக்கு உதவிடும் வகையில், கிட்டார் கற்றுக் கொடுக்கும் தளம் ஒன்றினை அண்மையில் இணையத்தில் பார்க்க முடிந்து. 
மிகச் சிறந்த கிட்டார் இசைக் கலைஞர் ஒருவரால் உருவாக்கப்பட் டு, பாடங்களும் மிக அழகாகவும் நேர் த்தியாகவும் தரப்பட்டுள்ளன. Video Vault என்ற தலைப்பின் கீழ் கிளிக் செய்தால், இந்த பாடங்க ளுக்கான பைல் கள் கிடைக் கின்றன. 
ஒவ்வொரு பாடமும் ஒரு வீடியோ பைலுடன் காட்டப் படுகிறது. நம் கையில் கிட்டாரினை வைத்துக் கொ ண்டு அதனை மீண்டும் மீண்டும் பார் த்துக் கற்றுக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஒன் றைப் பார்த்தவுடனேயே, இதனை மட் டுமே நீங்கள் அடிக்கடி பயன்படுத்தி, கிட்டார் இசைக்கக் கற்றுக் கொள்ளப் போகி றீர்கள் என முடிவு செய்துவிடுவீர்கள். அல்லது, இதில் தரப்பட்டுள்ள அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் மற்றும் பதில்கள் (FAQ) பிரிவி னை முதலில் படிக்கலாம்.
இந்தப் பிரிவு, இணைய தளத்தின் மேல் வலது பக்கம் உள்ளது. பாடல்கள், இசைக்கும் வழிகள் எனப் பலவகை தலைப்புகளில் இந்த கேள்வி பதில்கள் அமைக் கப் பட்டுள்ளன. 
முதலில் உங்களுக்கான இலவ ச அக்கவுண்ட் ஒன்றை நீங்கள் ஏற்படுத்திக் கொண்டு, இந்த பாடங்களைக் கற்றுக் கொள் ளலாம். நீங்களே ஒரு கிட்டார் இசைக் கலைஞராக இருந்தால் , நீங்களும் சில பாடங்களுக்கான வீடியோ பைலை உருவாக்கி அப்லோட் செய்திட லாம். 
வீடியோ பாட பைல்கள் Instructional, Performance, Embedded, All Selections என்ற பிரிவுகளில் காட்டப்படுகின்றன. இது வும் நமக்கு உதவியாய் உள்ளது. Gear reviews, tips and tricks, and guitar news ஆகிய பிரிவுகளில் கூடுதல் தகவல்களும், கிட்டார் இசைப்பதில் டிப்ஸ்களும் கிடைக்கி ன்றன.
இசைக் கலைஞர்களுக்கு இது ஓர் சிறப்பான வழிகாட்டி. கிட்டார் இசைப்பதில் ஆர்வம் இல்லை என்றாலும், ஆன்லைனில் ஒரு கலையைச் சொல்லிக் கொடுக்கும் வழி முறையை இந்த தளத்தின் வடிவமைப்பி லிருந்துகற்றுக் கொள்ளலாம். எதற்கும் ஒரு முறை இந்த தளத்தைப் பாருங்கள்.

No comments:

Post a Comment