‘திரு’
என்பது தெய்வத்தன்மை எனவும், ‘மணம்’ என்பது இணைதல் எனவும் பொருள்பட்டு,
‘திருமணம்’ என்பது மேம்மையான தெய்வீகம் வாய்ந்த இணைதல் எனப்படுகின்றது.
அதாவது இரு இதயங்கள் இணைவது எனவும் கூறலாம்.
தமிழர்களின் இந்துத் திருமணம் ஆகம மரபுச் சடங்குகளுடன் சில சிறப்பு அம்சங்களையும் தழுவி நடைபெறுகின்றன. இச்சடங்கு களை
சமய குருக்கள் சமய முறைப்படி நெருப்பு முன்னினையில் இறைவன் ஆசி யுடன்
நடத்தி வைக்கிறார். திருமண நிகழ் வில் முக்கியமான நிகழ்ச்சி நல்வேளையில்
தாலி கட்டுதலாகும். இதனை “மாங்கல்ய தாரணம்” எனக் கூறுவர். தாலி கட்டியதும்
அப்பெண் “சுமங்கலி” அதாவது திருமணமா னவள் என்ற தகுதி பெறு கின்றாள்.
இரு
வீட்டாரும் முதலில் சாதகப் பொருத்தத்தை ஆராய்வார்கள். தமிழ்நாட்டில்
பெண்பார்க்கும் படல்போன்று இலங்கையிலும் பெண்ணைப் பொதுவிடங்களில் பார்ப்பது
வழக்கமாகவுள்ளது. பின்
நிச்சயதார்த்தத்தை உறுதிசெய்யப் பெண்வீட்டார் தாம்பூலம், பலகாரம், பழங்க
ளோடும் உறவினரோடும் மணமகன் வீட்டிற்கு நல்ல நாள் பார்த்துச் செல்வர். இதன்
பின் இரு வீட்டாரும் திருமண நாளைச் சோதிடரி டம் கேட்டு நிச்சயிப்பர். அத்
தோடு பொன்னு ருக்கலிற்கும் ஒரு நாளை நிச்சயிப்பர்.
பொன்னுருக்கல்
பொன்னுருக்கலில் நடுவில் தங்க நாணயமும் உமியின் மே ல் சிரட்டைக் கரி இருக்கின்றது
திருமண
நாளுக்கு முன்பு ஒரு சுப நாளில் மணமகன் இல்லத் தில் அல்லது ஆசாரி வீட்டில்
பொன்னுருக்கல் நடைபெறும். இதில் மணப்பெண்ணைத் தவி ர பெண்ணின் உறவினர்கள்
மற்றும் நண்பர்கள் கலந்து கொள்வர். பெண்வீட்டார் ஓர் இனிப்புப் பண்டம்
(கொழுக்கட்டை) கொண்டு செல்லுதல் சம்பிரதாயம்.
மணமகன் வீட்டு வாசலில் முறைப்படி நிறைகுடம், குத்துவிளக்கு, பன்னீர்தட்டு, குங்குமம், சந்தனம் வைத்து பொன்னுருக்கும் இடத் தில்
ஒரு நிறைகுடம் குத்துவிளக்குகள் தேங்காய், மாவிலைகள், வெற்றிலை, பா க்கு,
வாழைப்பழம், மஞ்சள்கட்டை (துண் டு), தேசி க்காய், அறுகம்புல், பூக்கள், ஒரு
சட்டியில் தண்ணீர், தேங்காய் உடைக்கக் கத்தி, விபூதி, குங்குமம், சந்தனம்,
மஞ்ச ளில் பிள்ளை யார், சாம்பிராணியும் தட்டு ம், கற்பூரம் முதலிய
முக்கியமாகத் தேவைப்படும் பொருட்களா கும்.
திருமாங்கல்யத்திற்குரிய தங்கநாணயத்தை (பவுணை) ஆலயத் தில்
(இறைவனிடத்தில்) வைத்து பூசை செய்து ஒரு தட்டில் வெற் றிலை, பாக்கு,
மஞ்சள், குங்கு மம், பூ, பழத்துடன் நாணயத் தையும் வைத்துக் கொண்டு வந்து
பூஜையறையில் வைக்க வேண் டும். பொன்னுருக்கும் நாளன்று அதை மணமகனி ன்
பெற்றோர் அல்லது பெரியோர் எடுத்து மண மகனிடம் கொடுக்க அவர் அதை
ஆச்சாரியாரிடம் கொடுத்து உருக்கவேண்டும். ஆச்சாரியார் கும்பம் வைத்து விளக்
கேற்றி தூபதீபம் காட்டி வெற்றிலை, பாக்கு வாழைப்பழம் முதலி யவை வைத்து
தேங்காய் உடைத்துப் பூசை செய்து பொன்னை உருக்குவார்.
உருக்கிய பின் தாய்மாமன் தேங்காய் உடைத்துப் பூசை செய்து அந்த இளநீரை
உருக்கிய தணலில் ஊற்றி தீயை தணிப்பார். பின் ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு,
பழம், பூ, மஞ்சள், குங்கு மம், தேசிக்காய் வைத்து வெற்றிலை மேல் உருக் கிய
தங்க த்தையும் வைத்து மணமகனிடம் ஆசாரியார் கொடுப் பார். அதை மணமகன்
வந்துள்ள சபையோ ருக்குக் காண்பித்து, அதன் பின் ஆசாரியாரிற்கு அரிசி
காய்கறி யுடன் தட்சணை அளி த்து உருக்கிய தங்கத்தைத் திருமாங்கல்யம் செய்ய
ஒப்படைக்க வேண்டும்.
பின்னர்
விருந்துபசாரத்தில் அனைவரும் கலந்து கொள்வர். மண மகன் வீட்டில் இருந்து
தோழி விருந்தில் ஒரு பகுதி யை மண மகளின் வீட்டிற்குச் சென்று மணமகளிடம்
கொடு ப்பர். இதே நாளில் இரு வீடுக ளிலும் திருமணத்திற்குரிய பலகாரங்கள்
செய்யத்தொடங் குவார்கள். முதன் முதலாக இனிப்புப் பலகாரங்கள் செய்யவேண் டும்
என்பதால் சீனி அரியதரம் செய்யலாம். அதற்குரிய மாவைக் குழைத்து வைத்தால்
கன்னிக்கால் ஊற்றியபின் பல காரம் சுட லாம். (இந்த நாளில் இருந்து திருமண
நாள்வரை மணமக்கள் ஒரு வரை ஒருவர் பார்க்கக் கூடாதென்பது பழையகால
சம்பிரதாயம்.)
கன்னிக்கால் ஊன்றல்
இதே நாள் பெண் வீட்டிலும் மணமகன் வீட்டிலும் தனித்தனியே அவர்கள்
வளவில் ஈசான (வட கிழக்கு) மூலையில் முகூர்த் தக் கால் அல்லது கன்னிக்கால்
ஊன்றவேண்டும். அதற்கு இப் போது கலியாண முள்முருங் கை மரத்தில் ஒரு தடியை
வெட்டி அதன் மேல் நுனியில் 5 மாவிலைகளை மஞ்சள் பூசிய கயிறால் கட்டி,
இடையில் ஒரு மஞ்சள் பூசிய வெள்ளைத் துணி யில் ஒரு செப்பு க்காசு முடிந்து
கட்டிவிட வேண்டும். பெரியவர் ஒருவர் அத்தடியை நில த்தில் ஊன்றியதும் அதற்கு
தேங்காய் உடைத்து சாம்பிராணி கற் பூரம் காட்டவேண்டும். அதனடியில்
நவதானியத்தொடு பவளம் அல்லது நவமணிகள் இட்டு நீர் பால் ஊற்றி (3 சுமங்கலிப்
பெண் கள்) மரத்திற்குத் திருநீறு, சந்தனம், குங்குமம் சார் த்தவேண்டும். இது நன்கு வளரவேண்டும் என்று நி னைத்து கும்பத்தண்ணீ ரை ஊற்றலாம்.
மஞ்சளில்
பிள்ளையார் பிடித்து வைத்து வெற்றி லை பாக்கு பழம் வைத்து தேங்காய்
உடைத்துத் தீபம் காட்டி பந்தல்கால் ஊன்று வார்கள். பந்தல் காலைத் தொடர்ந்து
பந்தல் அமைக்கும் வேலை தொடரும். மணமகள் வீட்டில் ஊன்றிய பின் மணமகன்
வீட்டிற்கும் செய்ய வேண்டும்.
முகூர்த்தக்கால்
ஊன்றிய பின் இரு வீட்டாரும் திருமணச் சடங்கு கள் முற்றாக முடிவடையும் வரை
எந்தவிதமான துக்க நிகழ்ச்சிக ளிலும் பங்குபெறுதல் கூடாது. (பந்தக்கால்
ஊன்றுபவருக்குத் தட்சணை கொடுக்கவேண்டும்.)
முளைப்பாலிகை போடல்
பெண்
வீட்டில் மூன்று அல் லது ஐந்து மண்சட்டிகளில் மண்பரப்பி நீர் ஊற்றவும். பா
லில் ஊறவைத்த நவதானிய ங்களை 3 அல்லது 5 சுமங்கலி ப் பெண்கள் அச்சட்டிகளில்
தூவி நீரும் பாலும் தெளிக்க வேண்டும். (3 முறை). இவ ற்றைச் சாமி அறைக்குள்
வைத்து திருமணத்தன்று மணவறைக்குக் கொண்டு போக வேண்டும். அநேக மாக பொன்னு
ருக்கலன்று செய்வார்கள் (இதை 3 நாட்களுக்கு முன் னாவது செய் தால் நவதானியம்
வளர்ந்து இருக்கும்.
முளைப்பாலிகை
இடுவதன் நோக்கம் திருமணம் செய்து மண மக்களும் அவர்கள் குடும்பமும்
முளைவிட்டு பல்கிப் பெருகி வாழ வேண்டும் என்பதே. “விரித்த பாலிகை
முளைக்கும் நிரையும்” என்கின்றது சிலப்பதிகாரம். இந்தப் பாலிகையானது
திருமணத்தி ற்குப் பின் நதியிலே சேர்த்து விடலாம்.
நவதானியம் ஆவன நெல், கோதுமை, பயறு, துவரை, மொச்சை, எள், கொள்ளு, உளுந்து, கடலை என்ப னவாம்.
பந்தல் அமைத்தல்
பந்தல்
முகடுடைய பந்தல் அமைக்கும் பழக்கம்
அக்காலத்தில் நடை முறையில் இருந்து வந்துள்ளது. பந்தலின்
உள்பகுதியில்மேலுக் கு துணிகளைக் கட்டுவார்கள். அழகுக்காகவும் திருமணச்
சடங்குக ள்
நடக்கும் பொழுது பந்தலின் மேலிருந்து தூசி அழுக்குப் பொருட்கள், பல்லி
போன் றன விழுந்துவிடாமல் இருப்பதற்காகவும் இந்த ஏற்பாடுகள்
செய்யப்படுகின்றன. பந் தலை கமுகு, வாழை, தென்னை ஓலை களால் அலங்கரிப்பர்.
வாழைமரம்
ஒருமுறைதான் குலைபோ டும் அதுபோல் எமது வாழ் விலும் திருமணம் ஒருமுறைதான்
என் பதை உணர்த்துகிறது. பாக்கு கொத்துக் கொத்தாகக் காய்ப்பதால் இது
தம்பதிகள் ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதை வலியுறு த்துகின்றது. வாழையும்
தென்னையும் கற்பகதரு இவை அழியாப் பயிர்கள் ஆகும். தென்னை நூற்றாண்டு
வாழக்கூடியது. “வாழை யடி வாழையாக” வளர்வது
தேங்காயும் வாழைப்பழமும் இறை வழிபாட்டில் முக்கியமாகின்றது. தம்பதிகள்
நிலைத்து நின்று அனைவருக்கும் பயன்படக்கூடிய தாக வாழவேண்டும் என்ற
தத்துவத்தை யே உணர்த் துகிறது.
திருமணம்
வசதிக்கேற்ப பெண் வீட்டி லோ, கோயிலிலோ அல்லது வேறுமண்ட பத்திலோ வைக்கலாம்.
அப்படி வேறு மண்டபத்தில் வைப்பதானால் இருவரது வீட்டு வாசல்களிலும் மண்டப
வாயிலி ல் மாவிலை, தோரணம், வாழை மரங் களால் அலங்கரிக்கப்பட வேண்டும்.
வாழைமரம்
கட்டுவதன் நோக்கம் வாழையடி வாழையாக வாழை மரம் தழைத்து வருவது போல, நமது
சந்ததியும் பெருக வேண்டும் என்பதாகும். மாவிலை தோரணங்கள் மங்கள முறையாகக்
கட்ட வேண்டும். வாசலில் நிறைகுடம் வைக்கவேண்டும். வசதிக் கேற்ப வீடுகளையும்
மண்டபத்தையும் அலங்கரிக்கலாம். மண்டப த்தில் நன்கு அலங்கரிக்கப்பட்டே
மணவறை கிழக்கு நோக்கி அமைக்கப் பட வேண்டும். மணவறையின் முன்பு சுவாமி
அம்பாள் கும்பங்கள், சந்திரகும்பம், விநாயக பூஜை, பஞ்சகௌவ்விய பூசைகென ஒரு
கும்பம், அக்கினி கிரியைக்குரிய பாத்திரம், அம்மி, மஞ்சள் நீர் ஆகியவை
வைக்கப்படும்.
1 விநாயகர்
2 ஓமகுண்டம்
3 அரசாணி
8 சந்திர கும்பம்
9 அம்மி
10 7 ஈசானமூலை – சுவாமி அம்பாள்
11 மஞ்சள் பாத்திரம் – மோதிரம் போட்டெ டுத்தல்
அரசாணியைச்
சுற்றி 4 விளக்குகள், 4 நிறைகுடங்கள், வைக்கப் படும் (4, 5, 6, 7) சந்திர
கும்பத்திற்கு முன்பாக முளைப் பாலிகை சட்டிகள் வைக்கப்படும்.
குருக்கள்
தன் முன்பாக புண்ணியதானத்திற்குரியவற்றை வைத்து அதன் பக்கத்தில் மஞ்சள்
பிள்ளையாரும், ஒரு கிண்ணத்தில் பஞ்ச கவ்வியமும் வைத்திருப்பார். அரசாணி
மரமும் அலங்கரிக்கப்பட் டிருக்கும். அதற்கு ஒரு பக்கம் பாலிகைச் சட்டியும்,
நடுவில் அம்மி யும், அதன் பின் சிவன், பார்வதி கும்பங்களும் மறுபக்கம்
நவக்கிரக கும்பங்களும் ஆக முன்பாக அரசாணிப்பானையும் நான்கு கும்பங் களும்
வைத்து கல்யாண மண்டபம் மேல் கூறியபடி நிறுவப்பட் டிருக்கும்.
மணமகன் அழைப்பு
திருமணத்தன்று
மணமகனை கிழக்கு முகமாக ஓர் பலகையில் இருத்தி அவ ரின் கைகளில் வெற்றிலையைச்
சுருட்டி அதற்குள் சில்லைக் காசுகள் வைத்துக் கொடுக்கவேண்டும். அவருக்கு
முன்னா ல் நிறைகுடம், குத்துவிளக்கு, தாம்பூலம் வைக்கவேண்டும். 3, 5, 7
என்ற எண்ணி க்கையில் ஆண்களும் பெண்களும் அறு கும் காசும் பாலும் கொ ண்ட
கலவையை மணமகனின் தலையி ல் 3 முறை வைக்கவேண்டும். மணமகனி ன் தலையில் ஓர்
வெள்ளைத் துண்டை விரித்து வைத்து அதன்மேல் பாலையி டலாம். முதல் பால்
வைக்கும் போது வடக்கு முகமாயிருந்து தாய் மாமன் தேங்காய் உடைக்கவேண்டும்.
பால் வைத்ததும் மணமகன் போய் குளித்துவிட்டு வரவேண்டும். பெண்வீட்டாரும்
இதில் கலந்து கொள்வார்கள். மணமகன் சாமி அறையில் சாமி கும்பிட்டு கற்பூரம்
காட்டித் தாய் தந்தையரை விழுந்து வணங்க வேண்டும். பெண்வீட்டார் மணமகன்
வீட்டிற்கு வரும்போது ஒரு தட்டில் வாழைப்பழம், ஒரு தட்டில் பலகாரம்,
இன்னொரு தட்டில் பூ எல்லா மாக 3 தட்டுகளுடன் வரவேண்டும். எல்லோருக்கும்
விருந் தோம்பல் நடைபெறும்.
கடுக்கண் பூணல்
முன்னாளில்
கடுக்கண் பூணல் என்ற சடங்கும் நடைபெற்றது இப்போது அது அருகிவிட்டது.
மணமகனை கிழக்கு முக மாக அலங்கரிக்கப்பட்ட இடத்தில் இருத்தி விநாயகர்
வழிபாடு செய்து தேங்காய் உடை த்து மணமகனுக்கு கடுக்கண் பூட்டு வைபவம்
செய்யலாம்.
தலைப்பாகை வைத்தல்
மணமகன்
கிழக்கு நோக்கி நிற்க ஒரு பெரியவரைக் கொண்டு தலை பாகை வைக்கவேண்டும்.
உத்தரியம் அணியவேண்டும். உத்தரி யம் இடும்போது இடந் தோளின் மேலாக வந்து
வலப்பாக இடுப்பளவில் கட்டவேண்டும் (அந்தணர் பூணூல் அணிவது போல). அங்கு
அவருக்குப் பூமாலை அணிவிப்பர். தோழனுக்கும் இதே போல் உடை உடுத்தி
தலைப்பாகையும் உத்தரியமும் இட்டு மணமகனோடு அழைத்து வருவர். தோழன் மணமகனின்
இடப் பக்கமாக நிற்பார்.
மணமகன் புறப்படுதல்
வீட்டைவிட்டுப்
புறப்படும் முன் வாச லில் இரு சுமங்கலிப் பெண் கள் ஆரத்தி எடுப்பார்கள்.
மாப்பிள்ளையோடு தோழி (மாப்பிள்ளை யின் திருமணமான பெண் தோழியானவள் திருமணச்
சடங் கில் முக்கிய பங்கு வகிப்பதால் நடை முறைகளை நன்கு தெரிந்த சுங்கலிப்
பெண்ணையே அமர்த்தவேண்டும்). தோ ழன் (பெண்ணின் சசோதரன் அல்லது உறவு முறையில்
உள்ள ஒரு ஆண் அநேகமாகத் திருமணமாகாதவராக இருக்கவேண்டும்). அவருடன் உற்றார்
உறவினர்கள் திருமண மண்டபத்திற் குச் செல்வர். செல்லும்போது தோழி
கூறைத்தட்டும் வேறு இரு பெண்கள் 3 தேங்காய் வைத்த தட்டமும் 3 அல்லது 5
பலகாரங்கள் கொண்ட ஒரு தட்டமும் எல்லாமாக 3 அல்லது 5 தட்டங்கள் கொண்டு போக
வேண்டும். அலங்கரிக்கப்பட் ட வாகனத்தில் செல்வர்.
பலகாரத் தட்டம்
அரியதரம், அச்சுப்பலகாரம், பயற்றம் உருண்டை, வெள் ரொட்டி, சிற்றுண்டி போன்ற வை.
தேங்காய்த் தட்டம்
3 முடியுள்ள தேங்காய்களுக்கு ச் சீவி மஞ்சள் பூசி வைக்க வே ண்டும்.
கூறைத்தட்டம்
ஒரு
பெரிய தட்டில் நெல் அல்லது பச்சையரிசி பரப்பி அதன் மேல் கூறைச்சேலை, சட்டை,
வெற்றிலை 5 முழுப்பாக்கு, 3 கஸ்தூரி மஞ்சள், 1 குங்குமம் (டப்பி), 1
தேசிக்காய், 1 வாழைப்பழச் சீப்பு, 1 கொண்டைமாலை, அலங்காரப் பொருட்கள்
முதலிய சாதனங்கள் சீப்பு, கண்ணாடி, ப்வுடர், வாசனைத்திரவியம், சவர்க்காரம்
(சோப்) முதலியன. தாலிக்கொடியோடு மெட்டி1 சோடி ஆகியன வைக்க வேண்டும்.
பெண் புறப்படுதல்
பெண் வீட்டில் பெண்ணிற்கு அதே போல் அறுகு, காசு, பால் தலை யில்
வைத்து நீராட்டி (ருது சாந்தி செய்யாத பெண்ணாகில் அன்று அல்லது முந்தைய
நாளில் ருது சாந்தி செய்யவேண்டும்), மணப் பெண் போல் அலங்கரித்து மண்டப
த்திற்கு அழைத்துச் செல்ல வேண் டும். மணப்பெண்ணோடு ஒரு தட் டில் கோயிலில்
அர்ச்சனை செய்யத் தேவையான பொருட்களை அடுக்கி எடுத்துச் செல்ல வேண்டும்.
மண்ட பத்தில் பெண் அவருக்கென்று கொ டுக்கப்பட்ட அறையில் இருக்கவே ண்டும்.
அர்ச்சனைக்குரிய பொருட்கள்: வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழங்கள், பூக்கள்
மாப்பிள்ளை அழைப்பு
மாப்பிள்ளை
மண்டபத்திற் கு வந்தவுடன் அவரை பெண் வீட்டார் மேளதாளத்தோடு வரவேற்பர்.
அங்கு தோழன் மாப்பிள்ளையின் காலைக் கழுவிவிடுவார். அதற்கு உப காரமாக
மாப்பிள்ளைத் தோ ழனுக்கு மோதிரம் ஒன்றை அணிவிப்பார். பின் பெண் ணின்
தகப்பன், மாப்பிள்ளை க்கு மாலை சூடி வரவேற்பார். இரு சுமங்கலிப் பெண்கள்
ஆரத்தி எடுப்பர். பின் தோழன், மாப்பிள்ளையின் கைகோர்த்து அவரை வலமாக
மணவறைக்கு அழைத்துச் செல்வார் (கும்பத்திற்கு வலது பக்கம்).
மணமகன் மணவறைக்கு வந்தவு டன் தொடங்கும் திருமணச் சட ங்கு புரோகிதரின் தலைமையில் நடை பெறும்.
கிழக்கு
நோக்கியிருக்கும் மணவறை யில் தோழன் மணமகனுக்கு இட ப்பக்கத்தில் அமருவார்.
மணவறை யில் நெல் பரவி அதன் மேல் கம் பளம் விரித்து மணமகனை இருத்து வதுதான்
மரபு. கிரி யை செய்யும் குருக்கள் மணவறையின் வலது பக்கத்தில் வடக்கு
நோக்கியிருப்பார். மணமகனுக்கு திருநீறு கொடுத்து பவித்திரம் கொடுத்து
வலக்கை மோதிரவிரலில் விநாயகர் பூஜை பஞ்ச கௌவிய பூஜை ஆகிய வற்றை மந்திர
உச்சாடனத்துடன் செய்வர்.
பவித்திரம் வலது கை மோதிர விரலில் அணியவேண்டும். இந்தச் சடங்கு முடியும் வரை ஒரு குற்றமும் வராமலிருக்கவும் மனம், வாக்கு,
காயங்களினால் வர த்தக்க பாவங்களினின்று காக்கவும் பவித்திரம் அணி
யப்படுகின்றது. பஞ்சகௌவி யத்தை அவ்விடத்தில் சுற்றி த் தெளிந்து அதனைப் பரு
கும்படி மணமகனின் அக மும் புறமும் சுத்தியடையும் என்பதாலும் இவை செய்ய
ப்படுகின்றன. இதனை புண் ணியாகவாசனம் என்பர்.
அரசாணிக்கல்
முற்காலத்தில் திருமண வைபவங்களுக்கு அரசனுக்கும் அழைப் பிதழ் அனுப்புவார்கள். அரசனுக்கும் எல்லாத் திருமணங்களுக்கும் செல்ல
முடியாத நிலை இருக்கும். எனவே அவர் தனது ஆணை க்கோலை அனுப்பி வைப்பார்.
அரசு ஆணைக்கோல் மருவி அரசாணைக்கால் ஆகிவிட்டது. இன்று பதிவுத் திருமணம்
போல் அன்று ஆணைக்கோல் வந்துவிட்டால் அரசனால் அங்கீகரிக்கப் பட்டது. ஆகவே
அத்திருமணம் அங்கீகாரம் பெற்றுவிடுகிறது. இதுவே இன்று திருமணப் பந்தலில்
கலியாண முருங்கை மரக் கிளை ஒன்றை வைத்து அதற்கு பட்டுச்சாத்தி அலங்கரித்து
வைப் பர்.
அங்குரார்ப்பணம்
வித்திடுதல் என்று அர்த்தம். அதாவது முளைக்கும் விதைகளை பாலிகையிடல் என்பது. சந்திர கும்பத்தை பூசித்து அதற்கு முன் பாக
இருக்கும் மண் சட்டி யில் 3 அல்லது 5 சும ங்கலிப் பெண்களை கொண்டு
நவதானியம் இட்டு தண்ணீர் தெளித்து புஷ்பம் சாத்தி பூசைகள் செய்வது. இதன்
அர்த்தம் நவதானியம் செழித்து வளர் வது போல இத் தம்பதிகளின் வாழ்வும்
செழுப்புடையதாக அமைய வேண்டும் என்பதற்காக இப்பூஜை செய்யப்படுகின்றது.
அப்பெண் களுக்கு வெற்றிலையில் பழம், பூ வைத்து உபசாரம் செய்தனுப்
புவார்கள். அதன்பின் கற்பூரம் காட்டப்படும். (முன்பே பாலிகை போட்டிருந்தால்
தண்ணீர் மட்டும் தெளித்தால் போதுமானது)
இரட்சாபந்தனம் (காப்புக்கட்டல்)
காப்புக்கட்டல் தொடங்கிய கருமம் நிறைபெறும் வரை எந்தவித தீட்டுக்களோ
இடையூறுகளோ துக்கங்க ளோ மணமக்களைச் சாரா திருக்க வேண் டிய பாதுகாப்புக்
கருதி செய்யப்படுவது. (கால மிருத்து அவமிருத்து போன்ற அபாயங்களில் இருந்து
காப்பாற்ற வும்). சர்வரோகம் அணுகாமலும், பீடை, பிணி அணுகாமலும்
இருக்கவேண்டி விவாகச் சடங்குகள் இனிதே நடைபெறவும் கட்டப் படுவது நூல்
காப்புக் கட்டுதல் ஆகும்.
இதற்கு
ஒரு தாம்பாளத்தில் அரிசி பரப்பி தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம் காப்பு
நூல் முதலியவற்றை வைத்து பூசித்து மாப்பிள் ளையின் வலது மணிக்கூட்டில்
காப்புக் கட்டுவார்கள் காப்புக் கட்டும்போது மாப்பிள்ளை வீட்டார் ஒரு
தேங்காய் உடைப்பார்கள். பின்னர் குருக்கள் சிவன், பார்வதி பூசை முதலியவற்றை
மந்திர உச்சாடனத்துடன் செய்வர் (பின்னர் அக்கினி மூட்டப்பட்டு அதற்குரிய
பூசை வழிபாடுகள் நடைபெறும்) முகூர்த்தோஷம், லக்கினதோஷம்
போன்ற் தோஷங்கள் நீக்கும் பொருட்டும் இத் திருமணத்தின் போது நல்ல ருள்
புரியவேண்டுமென நவக்கிரக தேவர்களு க்காக அமைக்கப்பட்டுள்ள கும்பங்களிற்கும்
பூஜை செய்வார்கள். அதன்பின் அரசாணி மரத் திற்கும் அதன் நாலு பக்கங்களி
லும் உள்ள கும்பங்களிற்கும் பூஜை செய் வர்.
மணமகளை அழைத்தல்
மணமகளை
(பட்டாடை அணிந்து, அணி கலன் கள் பூண்டு முகத் தை மெல்லிய திரை யால் மறைத்த
வண்ணம்) தோழிகள், மண மகளின் பெற்றோர் மற்றும் உறவினர் புடைசூழ மணமேடைக்கு
அழைத்து வருவர். மண மக னுக்கு வலப்பக்கத்தில் பெண்ணை அமரச்செய்வர். மண மகனி
ற்குச் செய்யப்பட்ட அத்தனை பூசைக ளும் இவருக்கும் செய்யப் படும்.
பவித்திரம் இடது கைமோதிர விரலில் அணிவித்து ரட்சா
பந்தனம் இடக்கை மணிக் கட்டில் கட்ட ப்படும். பெண் வீட்டார் ஒருவர்
தேங்காய் உடைப்பார். பின் னர் இரு வரின் பெற்றோர் களை அழைத்து மணமகளின்
பெற் றோர்கள் பெண்ணின் வலப் பக்கத்திலும் மண மகனின் பெற்றோர் மண மகனின்
வலப்பக்கத்திலும் கிழக்கு நோக்கி அமர்வர். இவர்களும் குருக்கள்,
பவித்திரம், விபூதி கொடு த்து சங்கல்பம் செய்வித்து இரு வழியிலும்
பிதுர்தோஷம் நீங்க வும் இரண்டு (நாந்தி தானம்) கொடுத்து பிதிரரின் ஆசியைப்
பெறச்செய்வர். பின் கன்னிகா தானக் கிரியைகளை ஆரம்பிப்பார்.
கன்னிகாதானம்
மணமகளை அவரின் பெற்றோர் தாரைவார்த்துக் கொடுப்பதை கன்னிகாதானம்
என்பர். மண மக்களின் பெற்றோர் இரு பகுதியின ரும் சங்கற்பம் செய்து
பெண்ணின் பெற் றோர் மணமகனின் பெற் றோர்க்கும் மணமகனின் பெற் றோர் பெண்ணின்
பெ ற்றோருக்கும் திலகமிட்டு பன்னீர் தெளித்து மரியாதை செய்வர். பின்
பெண்ணின் வலக்கரத்தில் வெற்றிலை, பாக்கு, பழம், எலுமிச்சம்பழம், தங்கக்
காசு அல்லது நடைமுறை நாணயம் ஒன்றை கையில் கொடுத்து பெண்ணின் தந்தை இடது கை
கீழாகவும் வலது கை மேலாகவும் சேர்த்துப்
பிடித்து குருக்கள் மணமகளின் மூன்று தலை முறைப் பெயர்களையும் மணமக்களின்
பெயர்களையு ம் உரிய மந்திரத்துடன் 3 முறைகள் சொல்லி இரு வம்சம் தழைக்கவும்,
அறம், பொருள், இன்பம் வீடு ஆகிய 4 பயன்களையும் பெற வே ண்டியும்
கன்னிகாதானம் செய்து தருகின்றேன். எல்லாவித செல்வமும் பெற்று எனது மக ளைக்
காப்பாற்ற வேண்டும் என்று வேண்டிக் கொள்வார். மணமக னின் சம்மதம் பெற்றவுடன்
மணமகளின் தாயார் நீர் விட்டு தாரை வார்க்க தந்தையார் மணமகளின் கரங்களில்
ஒப்படைப்பார். அப் போது மங்கள் வாத்தியம் முழங்க, பெண்வீட்டார் ஒருவர் தேங்
காய், உடைக்க, மணமகன் பெண்ணை தானம் எடுப்பார். தொடர்ந் து மணமகன்
கொண்டுவந்த தாலியோடுகூடிய கூறைத் தட்டத்தை விதிப்படி பூசித்து,
ஆசீர்வதித்து அக்கினியாற் சுத்தி செய்த பின் அச்சபையிலுள்ள பெரியோர்களிடம்
காட்டி நல்லாசி பெறப்ப டும். பின் மணமகன் மணமகளிடம் கூறையைக் கொடுப்பார்.
மண மகளும் தோழியுடன் சென்று கூறை உடுத்தி மீண்டும் மணவறை க்கு அழைத்து
வரப்படுவார். இதற்கிடையில் குருக்கள் மாங்கல்ய த்தை எடுத்து சுத்தி செய்து
மந்திரம் சொல்லி, சந்தனம், குங்குமம் சாத்தி தீபம் காட்டி சம்பாதஹோமம்
செய்து பூசை செய்வார். (சம்பாதஹோமம் – சிருவத்தில் நெய் எடுத்து ஆகுதி
செய்து மிகுதி நெய்யைத் தாலியில் விடுதல்) மண வறையைச் சுற்றி
நிற்பவர்களுக்கு அட்சதை மலர்கள் கொடுக்கப் படும்.
தாலி கட்டுதல்
கூறை உடுத்தி வந்த மணமகள்
மீண்டும் மணமகனின் வலப் புறத் தில் கிழக்கு நோக்கி அமர்வார். குறித்த
சுபமுகூர்த்ததில் மண மகன் எழுந்து மணமகளின் வல ப்புறம் சென்று வடக்கு
நோக்கி நின்று இறைவனைத் தியானித்து குருக்கள் ஆசிர்வதிதுக் கொடுக் கும்
மாங்கல்யத்தை இரு கரங்க ளால் பற்றி கெட்டிமேளம் முழ ங்க, வேதியர் வேதம் ஓத,
மாப்பிள்ளை வீட்டார் ஒருவர் தேங்காய் உடைக்க, பெரியோர் அட்சதை மலர்கள்
தூவ, ஒரு பெண் பின்னால் தீபம் பிடிக்க மணமகன் மேற்கு திசை நோக்கி
திரும்பிப் பெண் ணின் கழுத்தில் திருமாங்கல்யம் பூட்டுவார். அப்போது
சொல்லப் படும் மந்திரம்
“மாங்கல்யம் தந்துநாநேந மம ஜீவனஹேதுநா கண்டே பத்தாமி ஸூபகே ஸஞ்ஜிவச ரதசதம்”
‘ஓம்!
பாக்கியவதியே’ யான் சீர ஞ்சீவியாக இருப்பதற்கு காரண மாக மாங்கல்யத்தை உன்
கழு த்தில் கட்டுகிறேன். நீயும் நூறாண்டு வாழ்வாயாக என்று குருக்கள் கூறும்
மந்திரத்தை மனதில் கொண் டு தாலி முடிச்சில் திருநீறு இட்டு தனது இடத்தில்
இருக்க வேண் டும். மணமகளின் உச்சந் தலையில் குங்குமத்தில் திலகமிட வே
ண்டும்.
தாலி
– தாலியில் சிவலிங்கம், விநாயகர் அல்லது லட்சுமியின் திருவுருவம் அமைத்தல்
நல்லது. கொடியும், தாலியும் அதன ருகில் கோத்திருக்கும் இரு தங்க நாணயங்கள்
சேர்த்து (9, 11, ….) என்ற ஒற்றை எண் வரக்கூடிய அளவு பவுணில்
செய்யவேண்டும். தாலிக்கொடியில் சேர்க்கப்படும் தங்கநாணயம் ஆங்கில நாண யமாக
இருக்கவேண்டும் என்ற நியதியில்லை. அந்த நாணயத்தில் கடவுளின் உருவங்களுக்கு
விருப்பத்திற்கேற்ப அமைக்கலாம்.
மாலை மாற்றுதல்
மணமகள்
எழுந்து வடக்கு நோ க்கி இறைவனை தியானித்து மண மகள் கழுத்தில் மாலை சூட்
டுவாள். மணமகள் மண மகளை த் தன் இடப்பக்கத்தில் அமரச் செய்து மாலை
சூட்டுவாள். மாலை மாற்று தலின் பொருள் இருமனம் கலந்து ஒரு மனமாகி இல்வாழ்க்
கையை ஆரம்பித்தல். மூன்று முறை மாலை மாற்ற வேண்டும்.
தொடர்ந்து
கொண்டு வந்த மங்கலப் பொருட்களாகிய மஞ்சள், குங்குமம், பூ, வாசனைப்
பொருட்கள், சீப்பு, கண்ணாடி முதலிய வற்றை மணமகன் மணமகளிடம் கொடுப்பார்.
கணவன் மனைவி யாக ஆனபின் தம் மங்கலக் கோலத்தை இருவரும் கண்ணாடியில் பார்த்து
மகிழ்வார்கள்.
பால்பழம் கொடுத்தல்
பால்,
வாழைப்பழம் கலந்து மணமகள் முதலில் மண மகனுக்கு மூன்று முறை கொடுப்பார்.
பின் மணமகன் மணமகளுக்கு மூன்று முறை கொடுப்பார். நாயகன் நாயகி உணவு கொள்ளல்
மறை வில் செய்யவேண்டும் என்ப தால் திரை ஒன்று முன்னால் பிடிக்கப்படும்.
முதன் முத லில் தம்பதிகளுக்குக் கொடுக்கும் இனிப்புப் பதார்த்த மாகையால்
வாழ்க்கை இனிமையாக இருக்கவேண்டும் என்று உணர்த்தவே இச் சடங்கு.
கோதரிசனம்
இல்லறவாழ்வு
தொடங்கும் தம்பதியர் வாழ்விற்கு வேண்டிய அட்ட ஐஸ்வரியங்களையும் வேண்டி
பசுவை இலட்சுமிதேவியாக வணங்குவர். பசுவைக் கிழக்கு முகமாக நிறுத்திச்
சந்தனம், குங்குமம், புஷ்பம் சாத்தித் தீபாராதனை செய்து வணங்குவர் பசுவின்
உடலெங்கும் உறைகின்ற சகல தேவர்கள், முனிவர்கள், தெய்வங்கள் ஆசிர்வாதமும்
இதன் மூலம் கிடைக்கும். அரிசி, காய்கறி, தட்சிணை வைத்துத் தானமும்
வழங்கவேண்டும்.
பாணிக்கரம் (கைப்பிடித்தல்)
தருமம்
செய்வதற்காகவும் சந்ததி விருத்திக்காகவும் திருமணம் செய்யப் படுகின்றது.
பாணிக்கிரகணம் என்றால் மணமகளின் கையை மணமகன் பிடி ப்பது என்று பொருள்.
‘நீயும் நானும் முதுமையடைந்து விட்டாலும் கூட ஒருவரை ஒருவர் பிரியா
திருப்போம் என்று கையைப் பிடிக்கிறேன்’ என்று கூறி மண மகளின் கையைப்
பிடிக்கவேண்டும். ஆணின் வலக்கை பெண் ணின் வலக்கையைப் பிடித்தல் வேண்டும்.
பின்னர் ஏழடி எடுத்து வைத்து அம்மி மிதித்து அக்கினியை வலம் வருவார்கள்.
வலம் வரும்போது தோழனும் தோழியும் சேர்ந்து வருவார்கள். பஞ்ச பூதங்களின்
சாட்சியாக கையைப்
பிடிப்பதாக ஒருகருத்து. மண ப்பெண்ணால் ஐம்புலன் களால் செய்ய ப்படும்
செயல்கள் கணவனுக்கு மட்டு மே உரியவை. கன்னியின் கையை வரன் கிரகிப்பது என்று
பொருள்.
ஏழடி நடத்தல்
பெண்ணின்
வல காலை மணமகள் கை களாற் பிடித்து ஏழடி எடுத்து வைக்கும் படி
செய்யவேண்டும். ஒவ்வொரு அடி க்கும் ஒவ்வொரு மந்திரம் சொல்ல ப்படும்.
உனக்கும் வாழ்க்கையில் உணவு குறை வில் அளிப்பதற்கு இறைவன் உன்னைப் பின் தொடர்ந்து வரட்டும்.
உடல் வலிமை கிடைக்க இறைவன் பின் தொடரட்டும்
விரத்தை அனுஷ்டிக்கும் பொருட்டு உன்னை இறைவன் பின் தொடர்ந்து வரட்டும்.
சுகமும் மனச்சாந்தியும் கிடை க்க இறைவன் உன்னைப் பின் தொடரட்டும்
பசுக்கள் தூயலான பிராணிகள் பின் தொடர்ந்து வரட்டும்.
சகல சௌபாக்கியங்களும் கிடைக்க பின் தொடர்ந்து வரட்டும்.
உடன்
வாழ்வில் இடம்பெறும் சுபகாரியங்கள், ஹோமங்கள் குறை வின்றி நிறைவேற்ற
இறைவன் உன்னை பின் தொடர்ந்து வரட் டும். ஏழடிகள் நடந்த நாமிருவர்கள்
சினேகிதரானோம். இருவரும் சேர்ந்து அனுபவிப்போம். என்னுடன் கூடவா என்னும்
பொருளில் இந்நிகழ்ச்சி அமையும். இதற்கு “ஸ்பத பதி” என்று பெயர்.
அம்மி மிதித்தல்
பெண்ணின் வலதுகாலை (அதாவது எட்டாவது அடி) மணமகன் கையால்
தூக்கி அம்மியில் வைத்து பெருவிரலுக்கு அடுத் துள்ள விரலில் மெட்டி வைத்து
அணிவிப்பார். இந்தக் கல் லைப் போல் நிலையாக நின்று உன் எதிரிகளைச்
சகித்துக் கொள். இது பெண் ணிற்கு கற் பையும் ஆணுக்கு ஒழுக்கத்தை யும்
புகட்டுகின்றது. கல் எப்படி எதையும் தாங்குமோ அது போல் வாழ்கையிலும் இன்ப
துன்பங்களைக் கண்டு கலங்காமல் உறுதியான கொள்கைகளைக் கடைப்பிடித்து
நடக்கவேண்டும் என்று உணர்த்துகிறது.
தொடர்ந்து
அக்கினியை வலம் வந்து ஓம குண்டத்தில் நெற் பொரியும் ஓமப்பொருட்களையும்
இடுவார்கள். திரும்பவும் இரண் டாம் முறை அக்கினியை வலம் வரும்போது இடக்காலை
அம்மி யில் வைத்து மெட்டி அனுவிக்கப்படும். திருமணமான பெண் அவ ளைப்
பார்க்கும் இன்னொரு ஆடவன் அவள் திருமணமா னவள் என்பதை உணர்த்த மெட்டி
அணிவிக்கப்படுகின்றது.
கணையாழி எடுத்தல்
மூன்றாம்
முறை அக்கினியை வலம் வரும்போது கிழக்குப் பக்கத் தில் வைத்திருக்கும்
மஞ்சள் நீர் நிறைந்த பாத்திரத்தில் இருக்கும் தேடி எடுக்கவேண்டும். இது
மூன்று முறைகள் நடைபெறும். இருவரும் ஒருவருக்குகொருவர் விட்டுக் கொடுத்து
எடுத்தல் வேண்டும். இது தம் வாழ்க்கையிலும் விட்டுக்கொடுத்து வாழ வேண்டும் என்பதை எடுத்துக் காட்டுகிறது.
அருந்ததி பார்த்தல்
மூன்றாம்
சுற்றில் அருந்ததி பார்த்தல் நடைபெறும். இரு வரையும் கூட்டிக் கொ ண்டு
மண்டபத்தின் வடக்கு வாசலக்கு வந்து வானத்தில் இருக்கும் நடத்திரங்களுக்குப்
பூஜை செய்து அருந்ததியைக் காண்பிப்பார்.
“நிரந்தரக்
கற்பு நடசத்திரமாக மின்னுவேன்” என்று ஆணையிடுவ தாகும். சப்தரிசிகள்
கிருத்திகை எனப்பெயர் கொண்ட தங்கள் மனைவிக்குள்ளே முதலானவளான அருந்தியை
எப்படி நிலைத் திருக்கச் செய்ய செய்தார்களோ அப்படி மற்ற ஆறு கிருத்திகைக
ளும் அருந்ததியைப் போலிருக்கச் செய்கின்றன ர். இந்த அருந்ததியை தரிசனம்
செய்தால் என்னு டைய மனைவி எட்டாளவாக வளர்ச்சி பெறட்டும் என்பதேயாகும். இந்த
நட்சத்திரத்தைக் காட்டுவ து நல் வாழ்க்கையும் வழத்தையும் பெறுவதற்கே
யாகும்.
அருந்ததி வசிட்டரின் மனைவி. சிறந்த பதிவிரதை. வானத்தில் துருவ மண்டலத்திற்கு அருகில் ஏழு நட்சத்திரங்களிற்கிடையில் வசிட்ட நட்சத்திரமும் அதன் அருகில் அருந்ததி இருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன.
அருந்ததியோடு
சேர்த்து துருவ நடத்திரத்தையும் காட்டுவாள். துருவ நட்சத்திரம் விண்ணில்
ஒரு நிலையான இருப்பிடத்தை உடையவராகவும் மற்ற விண்மீன்கள்
நிலைத்திருப்பதற்குக் காரண மாகவும் கட்டுத்தறியாகவும் இருப்பதால் எங்களை
எதிரிகளிடமி ருந்து காப்பற்றுவீராக என்று தரிசிப்பதாகும். இவர்கள்
எம்வாழ்க் கையில் ஒரு வழிகாட்டியாக அமைகிறார்கள். துணைவனைப்போ ல்
மணமகனுக்கு ஸ்திரத்தன்மையும் அருந்ததியைப் போல் மண மகளுக்குப்
பதிவிரதத்தன்மையும் இருத்தல் வேண் டும்.
பொரியிடல்
அக்கினியை
மூன்று முறை வலம் வர வேண்டும். ஒவ்வொரு முறையும் வலம் வந்து மணமக்கள்
கிழக்கு நொக்கி நிற்கத் தோழன் நெற்பொரியை குருக்களிடம் இருந்து பெற்று மண
மகனின் கையில் கொடுக்க மணமகன் மணமகளின் கையி ல் கொடுத்து மணமகனின் கைகளை
தன் கைகளால் தாங்கி ஓம் குண்டத்தில் இடு வார்கள். “அக்கினி பகவானே சகல்
செல் வங்க ளையும் எமக்குத் தந்தருள வேண் டும்.”. என வேண்டிக் கொண்டு
பொரியிடு தல் வேண்டும். நெல் பொரியாக மலர் வது போல் நம் வாழ்வு மலரவேண்டும்
என்பதே தத்துவம்.
மூன்றாம்
முறை சுற்றி வந்தவுடன் பூர்ணாகுதிற்குரிய பொருட் களை தட்டத்தில் வைத்து
குருக்கள் மணமக்களுக்குக் கொடுக்க இருவரும் சேர்ந்து குண்டத்தில் சொரித்தல்
வேண்டும்.
அக்கினி பகவானிடம் செர்க்கும் சகல் திரவியங்களும் அக்கினி பகவான் அந்ஹ்ட அந்தக் தெய்வங்களிடம் ஒப்படைத்து விடு வார்கள்
என்பதை வேதங்கள் கூறுகின்றன. ஆகவே அக்கினி யில் ஆவாகனம் செய்யப்பட்ட
மூர்திகளுக்கு செய்யும் சடங்கு குறை வின்றி செய்து அவர் களுக்குப் பரிபூரண
பலன் வே ண்டி அனுப்ப வேண்டும் என்று பிராத்தித்து செய்வதே ஓமம்.
அதன்
பின் தீபாரத்னை செய்து ஓமத்தில் இருந்து விடுவிக்கப் பட்ட ரட்சயை
(கரிப்பட்டு) மணமக்களுக்கு திலகமிட்டு விபூதி சந்தனம் கொடுத்து ஆசி
வழங்குவார் குருக்கள்.
ஆசிர்வாதம்
மணமக்களை
கிழக்கு முகமாக நிற்க வைத்தக் குருக்கள் பிராத் தனன செய்து மந்திரத்துடன்
ஆசீர்வாதம் சொல்லி மண மக்களு க்கு ஆசிர்வாதம்வாதம் சொல்லி மணமக்களுக்கு
சிரசில் அட்சதை யிட்டு ஆசீர்வதிப்பர். தொடர்ந்து மணமகளின் பெற்றோர் சபையி ல் ஆசிர்வதிப்பர்.
அட்சதை
முனை
முறியாத பச்சையரிசி, அறுகம்புல், மஞ்சள்மா கலந்த கலவையே அறுகரிசி என்று சொ
ல்வார்கள். பெரியோர் இரண்டு கைகளாலும் அறுகரிசி எடுத்து “ஆல்போல் தழைத்து
அறுகு போல் வேரூன்றி மூங்கில்போ ல் சுற்றம் முழுமை யாய்ச் சூழ ப்பதினாறு
பேறு பெற்றுப் பெரு வாழ்வு வாழ்க” என வாழ்த்தி உச்சியில் 3 முறை இடவேண்
டும்
நிறைவு
மணமக்களின்
கைகளில் கட்ட ப்பட்ட காப்புக்களை அவிழ்த்து பவித்திரங்களை கழற்றி
அவற்றுடன் பெற்றோரின் பவித்திரங்க ளையும் வெற்றிலையில் வைத்து குருக்களின்
தட்சணையும் சேர்த்து குருக்களிடம் கொடுக்கவேண்டும்.
ஆரத்தி
இரு
தரப்பிலும் இருந்து ஒரு பெண்ணாக இரு சுமங்கலிப் பெண்கள் ஆரத்தி எடுப்பார்க
ள். தம்பதிகளுக்கு தீய சக்தியி னால் தீமை ஏற்படாமலும் கண் திருஷ்டி
நீங்கும் பொரு ட்டும் இவை செய்யப்படுகின் றன.
விருந்துபசாரமும்
நடைபெறும். மணமக்கள் இருவரும் அர்ச னைத் தட்டோடு ஆலயம் சென்று வணங்கி
அர்ச்சனை செய்து மண மகன் இல்லம் செல்வர். அங்கு வாசலில் ஆரத்தி எடுத்து
வல்து காலை முதலில் வைத்து வீட்டுக்குள் செல்வர். முதலில் பூசை அறைக்குள்
சென்று வணங்கிப் பின் பால் அருந்தக் கொடுப் பார்கள்.
பூதாக்கலம்
மணமக்கள் ஒரே இலையில் மணமகள் உணவு பரிமாறி மண மகனுக்கு முதலில் தன்கையா ல் உணவூட்டிய பின் மணமகன் மண மகளுக்கு உணவூட்ட வேண்டும்.
பின்
மணமகன் மணமகளைத் தன் வீட்டுக்கு அழைத்து செல்வார். அங்கும் ஆரத்தி எடுத்து
உள்செல்வார். வலது கால் எடுத்து உட் சென்று பூசை அறை சென்று வணங்கி
பெற்றோர் காலி லும் விழுந்து வணங்குவர்.
சில தத்துவங்கள்
தாலி கட்டிய பின் மணமகள் மணமகளின் உசந்தலையில் குங்கும த்தால் திலகமிடுவார். இது அவள் தன் கணவனுக்கே உரியவள் என் பதை எடுத்துக்காட்டவே. அத்தோடு அவ்விடத்தில் தான் மகா லட்சுமி வாசம் செய்கின்றாள்.
மாங்கல்யம்
சூட்டும்போது கெட்டி மேளம் கொட்டுவது சபையில் உள் ளோர் யாராவது தும்முதல்,
அபச குன வார்த்தைகள் பேசுதல் போன்ற வை மணமக்களிற்குக் கேட்கக் கூடாது
என்பதற்காகவே.
மஞ்சள் கயிற்றில் தாலி கட்டும் போது மூன்று முடிச்சுப் போடுவார் கள். இதற்கு ஒரு விளக்கம்.
முதலாவது முடிச்சு – கணவனுக்குக் கட்டுப்பட்டவள் அல்லது பிறந்த வீட்டிற்கு
இரண்டாவது முடிச்சு – தாய் தந்தைய ருக்குக் கட்டுப்பட்டவள் அல்லது புகுந்த வீட்டிற்கு.
மூன்றாம் முடிச்சு – தெய்வத்திற்குப் பயந்தவள்
தாலி
கட்டும்போது தூவப்படும் அட்ச தை மணமக்கள் தீய சக்தி களிடம் இரு ந்து
காப்பதற்கும் வளமான வாழ்க்கை அமைவதற்கும் ஆசீர்வதிப்பதாகும். தாலி
கட்டும்போது கைவிள க்கு ஏந்தி நிற்பது ஏனென்றால் தாலி கட்டியதற்கு விளக்கு
ஏந்திய வர் ஒரு சான்றா வார். இன்னொரு விளக்கம் சகுனத் தடைகள்
ஏற்படாமலிருக்க.
திருமணத்தின் போது மணப்பெண் முகத்திரை அணிவது ஏன்?
முக்காலத்தில்
மணமகள் தாலி கழுத்தில் ஏறும் வரை மண மக னைப் பார்ப்பதில்லை. ஆகவே
முகத்திரை அணிந்து மணவறை க்கு அழைத்து வந்தார்கள். அத்தோடு கண் திருஷ்
டிக்கும் விமர்சனங்களில் இருந்து விடுவிப்பது ம் ஒரு காரணமாகும். தாலி
ஏறியதும் முகத்திரையை அகற்றி நான் இப்போது “இவரின் மனைவியாகி விட்டேன்”
என்று சபை யோரிற்கு தன் முகத்தைக் காட்டுகி றாள்.
அட்சதை
அட்சதை
என்றால் குத்துப் படாததும், பழுதற்றதும் என் று பொருள்படும். பழுதுபடாத
பச்சைஅரிசியைப் போல் வா ழ்க்கையும் பழுது படாமல் இருக்கவேண்டும் என்பதற்
காகவே ஆசி வழங்கும்போ து பெரியவர்கள் அதைத் தெளிக்கிறார்கள். (நுனி முறி
யாத முழு அரிசியாக இருக் கவேண்டும்).
நெல்லில்
இருந்து பிரித்தெடுக்கப்பட்ட முளையுள்ள அரிசியுடன் மஞ்சள்மா, பன்னீர்,
மலர் இதழ்கள் ஆகியவை கலந்து அட்சதை தூவுவதே முறையாகும்.
ஆரத்தி
ஒரு தட்டில் 3 வாழைப்பழத் துண்டுகள் வைத்து அதன் நடுவே திரி யைச் செருகவேண்டும். இலகுமுறை ஒரு நெருப் புக் குச்சியில் பச்சைசுற்றி நெய்யில் தோய்த்த வாழைபழத்தின் நடுவே குத்து வதாகும்.
ஆரத்தி
எடுக்கும் போது யாருக்கு திருஷ்டி கழிக் கின்றோமோ அவரை நிற்க வைத்து
(கிழக்கு முக மாக அல்லது வடக்கு பார்க்க நிற்கவேண்டும்). அவரை இறை வனாக
நினைத்து இறைவனுக்கு எப்படிக் கற்பூரம் காட்டுகிறோ மோ அதேபோல் ஆரத்தித்
தட்டைச் சுற்றவேண்டும் (வலம் சுழி யாக).
மணமக்களுக்கு
எடுக்கும்போது மண மகன் பக்கத்தில் மேலெழும் பி மணமகளின் பக்கத்தில்
கீழிறங்க வேண்டும். கீழே 3 முறை செய்ய வேண்டும். கீழே 3 தரம் ஆட்டி பின்
மேலெழும்பிச் சுற்ற வேண்டும்.
திருமணத்தில் அறுகரிசி இடும் முறை
இந்துசமய
விளக்கப்படி அறுகரிசி யை (அட்சதை) பெரியோர்கள் இரு கைகளாலும் எடுத்து மண
மக்களின் சிரசில் தூவிப்பின் இரு தோழ்களிலும் இடுப்பு, முழந் தாள் என்று
மேலிருந்து கீழே வர வாழ்த்த வேண்டும். (3 முறை அல் லது சிரசில் மட்டும் 3
முறை 3 தூவி ஆசிர்வதிக்கலாம்).
நாங்கள்
மணமக்களைத் தெய்வமாகக் கருதுவதால் தெய்வத்திற்குப் பாதத்திலி ருந்து
சிரசிற்குச் செல்ல வே ண்டும். என்று சொல்வார்க ள். மணமக்களை மானிடரா கக்
கருதினால் சிரசில் இருந் து பாதத்திற்கு வர வேண்டு ம் என்று சொல்வார்கள்.
இவ் விரண்டு விதமான வருண ணைகளையும் இலக்கியங்களிற் காணலாம். பதாதி கேசமா?
கேசா தி பாதமா? இவை வர்ணணைகளே அன்றி அட்சதை தூவுவதற் கல்ல. தெய்வத்திற்கு
நாம் செய்வது பாத பூஜை பூச் சொரிவது அல்ல. அத்தோடு மணமக்களை பெரியோர்களே
அட்சதை தூவி ஆசிர்வதிப்பார்கள். ஆகவே சிரசில் இருந்து தான் வர வேண்டும்.
மீனாட்சி சுந்தரேசர் கல்யாணத்தில் தேவர்கள் வானிலி ருந்து மலர் தூவி
ஆசிர்வதித்து வாழ்த்தியதாகப் புராணம் சொல் கின்றது. ஆக வே அரிசி மேலிருந்து
கீழே வருவதுதான் சாலப் பொருத்தம்.