Tuesday, 17 April 2012

நீரிழிவு நோய் வருமென்ற பயமா? பலனளிக்கிறது பஸ்சிமோத்தாசனம்


Posted On April 17.2012.By Muthukumar


இன்றைய காலகட்டத்தில் நீரிழிவு குறைபாட்டு தாக்கம் பலரையும் பாதித்திருக்கிறது. பலர் இன்னும் இந்த இதற்கு ஆட்படும் அபாயத்தில் இருந்து வருகின்றனர்.
இந்திய இளைய சமுதாயத்தில் 4 சதவீதம் பேர் நீரிழிவு குறைபாட்டு தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக புள்ளி விபரங்கள் சொல்கின்றன. வாழ்க்கை முறை மாற்றம் தான் இதற்கு ஒரு காரணமாக சொல்லப்பட்டாலும் இன்று வரை தீர்மானமாக எந்த முடிவுக்கும் மருத்துவ உலகம் வர இயலவில்லை. நீரிழிவு நோயா அல்லது உடலின் ஒரு குறைபாடா என்றால் அது நோயல்ல, குறைபாடு என்பதே உண்மை.

பிறவி ஊனம் மட்டுமே குணப்படுத்த முடியாதது என்பர். ஆனால் நீரிழிவு என்பதை பொறுத்த மட்டில் பெரும்பாலோருக்கு இடையில் வரும் ஒரு ஊனம். ஆக, இந்த ஊனம் ஏற்படாமல் தடுக்க முயல வேண்டும். அதற்கு மிகப்பெரிய அளவில் கைகொடுப்பது யோகாசனங்கள் தான். அதிலும் குறிப்பாக யோகாசனங்களில் பஸ்சிமோத்தாசனம் நீரிழிவை தடுக்கிறது. மேலும் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் தருகிறது. இந்த ஆசனத்தை செய்வதும் எளிது. உட்கார்ந்த நிலையிலான ஆசனங்களில் நீரிழிவுக்கு மிகவும் பயன்தரக்கூடிய ஒரு ஆசனம் இது என்று கூறலாம்.
செய்யும் விதம்

முதல் நிலை

விரிப்பில் மல்லாந்து படுக்கவும். இரண்டு கால்களையும் சேர்த்தாற் போல் நீட்டி வைத்துக் கொள்ளவும். இரண்டு கைகளை காதுகளை ஒட்டினாற் போல் தலைக்கு மேல் நீட்டி வைத்துக் கொள்ளவும். கைவிரல்கள் சேர்ந்திருக்க வேண்டும்.
இப்போது மூச்சை நன்றாக இழுத்துக் கொள்ளவும். இப்போது கைகள் காதுகளை விட்டு விலகாதபடி மூச்சைப் பிடித்து எழுந்து உட்காரவும். இது தான் முதல்படி நிலை.
இரண்டாவது நிலை
இப்போது மூச்சை விட்டபடியே முன்னுக்கு குனிந்து கால்களின் கட்டை விரல்களை, கைகளின் ஆள்காட்டி விரல், நடுவிரல் இவை இரண்டையும் கொக்கி போல் மடக்கி பிடித்துக் கொள்ளவும். இது இரண்டாவது நிலை.

மூன்றாவது நிலை

இந்த நிலையில் மூச்சை ஒரு தரம் இழுத்து விட்டவாறே இன்னமும் கீழே குனிந்து முழங்கைகள் முட்டிக்கால்களை ஒட்டி தரையை தொட்டவாறு இருக்கும் படியான நிலைக்கு வரவும். அதாவது முகத்தை முழங்கால்களின் சந்து வரை எட்டிக் குனியவும். மடக்கின் முழங்கைகள் தரையில் படவேண்டும். இந்த நிலையில் ஐந்து முதல் பத்து எண்ணும் வரை இருக்கலாம். பின்னர் கைகள் மட்டும் கால்கள் இரண்டின் பெருவிரல்களை மட்டும் பிடித்திருக்கும் படியான நிலைக்கு நிமிர்ந்து வரவும்.
இதற்கடுத்து கைகள் இரண்டையும் முதல்நிலையில் சொன்னது போல் காதுகளை ஒட்டியிருக்கும் படியான நிலையில் வைத்து நிமிர்ந்து உட்காரவும். பின்னர் உடலை சிறிது சிறிதாக பின்னோக்கி சாய்ந்து படுக்கை நிலைக்கு வரலாம். இப்போது மூச்சை இறுக்கிப் பிடிக்காமல் சாதாரண நிலையில் விட்டு வரவும்.
இவ்வாறு செய்து முடிப்பது ஒரு பஸ்சிமோத்தாசனம் ஆகும். இது போல் மூன்று முதல் நான்கு முறை செய்யலாம்.

ஏற்படும் சிரமங்கள்
சிலருக்கு ஆரம்ப நிலையில் படுத்து எழுந்திருப்பதற்கு மிகவும் சிரமமாக இருக்கும். கைகளை தரையில் ஊன்றினால் தான் எழுந்திருக்கவே முடியும் என்ற அளவில் இருப்பார்கள். ஆசனங்களை செய்ய முயற்சிக்கும் தொடக்க காலங்களில் இது போல் அசவுகரியங்கள் எழுந்தால் மனம் தளரக்கூடாது. தரையில் கைகளை ஊன்றித்தான் எழ வேண்டி இருந்தால் சில நாட்கள் அப்படியே செய்யலாம். நாளடைவில் முறையான பயிற்சி வந்து விடும். சிலருக்கோ, கைகளை மேலே காதுகளை ஒட்டினாற் போல் வைத்துக் கொண்டு எழுந்திருக்க முடியாது. கைகளை முன்னுக்கு வீசி பேலன்ஸ் செய்து எழுந்திருந்தால் தான் எழுந்திருக்க முடியும். இதுவும் நாளடைவில் சரியாகி விடும்.
சிலருக்கு கால் விரல்களை கைகளால் தொட முடியாது. பொதுவாகவே முதுகெழும்பு கட்டை பாய்ந்து விட்டிருப்பதால் தான் இப்படி முன்னோக்கி குனிய முடியாத நிலை ஏற்பட்டிருக்கும். ஆனால் பழக பழக கால் விரல்களை கைகளால் பிடித்து விடலாம். சிலருக்கு கால் விரல்களை பிடிக்க முயலும் போது  முழங்கால் தூக்கிக் கொள்ளும். ஆனால் முழங்கால் மடிக்காமலேயே கூடுமான வரை குனிந்து தொட முயற்சிக்க வேண்டும். இப்படி பழகி வரும் போது தொடையில் உள்ள தசைகளும், நரம்புகளிலும் வலி ஏற்படுவதுண்டு. ஆனால் சில நாட்களில் சரியாகி விடும். சிலருக்கு முழங்காலில் முகத்தை கொண்டு வைக்க முடியாது. இதுவும் விடா முயற்சியுடன் பழகும் போது சரியாகி விடும். முடியாது என்பது எதுவுமே இல்லை.
ஆசனத்தின் பலன்கள்

பஸ்சிமோத்தனம் செய்யும் போது, குடல்கள், பித்தப்பை, இரைப்பை முதலியன நன்றாக அமுக்கப்படுகின்றன. உடலின் உயிராற்றலை வலுப்படுத்தும் முதுகெழும்பு, முதுகு நரம்பு வளைத்து இழுக்கப்படுகிறது. இதனால் நீரிழிவு குறைபாடு உண்டாவது தடுக்கப்படுகிறது. மேலும் ஆண்மை அதிகரிக்கிறது. மலட்டுத் தனம் நீங்குகிறது. வயிற்று வலி, தலைவலி, மூலக்கடுப்பு, இடுப்பு வலி, முதுகுவலி, பலவீனம் முதலியவை நீங்குகிறது. பெண்களிடத்தில் நீண்ட நாட்களாக இருக்கும் மாதவிடாய் கோளாறுகள் பூரணமாக குணமாகி விடும். இடுப்பு வலுவடையும். இளம்பெண்கள் திருமணத்திற்கு முன் இந்த ஆசனத்தை செய்து வருவதால் இடுப்பு சார்ந்த இனப்பெருக்க உறுப்புகள் வலுவடைந்து திருமணத்திற்கு பின் எளிதான சுகப்பிரசவம் உண்டாக வழி வகை ஏற்படும்.
எச்சரிக்கை
இந்த ஆசனத்தை வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் செய்ய கூடாது. அறுவை சிகிச்சை நடந்து குறிப்பிட்ட காலங்கள் ஆகி இருந்தால் சிறந்த ஆசன நிபுணர்களுடன் ஆலோசனை பெற்று ஆசனத்தை செய்யலாம். வழக்கமாக ஆசனத்தை செய்து வரும்ட கர்ப்பிணிகள் ஆசனத்தை முழுமையாக செய்யாமல் உட்கார்ந்த நிலையில் காதுகளை ஒட்டி கைகளை நிமிர்த்திய நிலையில் ஆசனத்தை முடித்துக் கொள்ள வேண்டும். முன்பக்கம் குனிந்து முழங்காலை தொடும் நிலைக்கு போகக் கூடாது.
ஆசனங்களை பழக்கமில்லாத புதிய கர்ப்பிணிகள் இந்த ஆசனத்தை எக்காரணம் கொண்டு செய்யக் கூடாது.
மனதை ஒருமுகப்படுத்த இந்த ஆசனம் மிகவும் உதவுகிறது எனபது குறிப்பிடத்தக்கது.

குழந்தை பிறந்தது முதல் போடப்படும் தடுப்பூசிகள்

Posted On April 17,2012,By Muthukumar
    வரும் முன் காப்போம் என்பது ஒரு பக்காவான திட்டமிடல் விஷயம்தான்.! இதனால் உருவானதுதான் இன்று நாம் குழந்தைகளுக்குப் போடும் அத்தனை தடுப்பூசிகளும். ,சொட்டுமருந்துகளும்...
ஏதோ, ஆஸ்பிடலில்  வற்புறுத்துவதால் தடுப்பூசிகளை குழந்தைகளுக்குத் தவறாமல் போட்டுவிடுகிறோம். சில சமயங்களில் அட்டவணைப்படி தடுப்பூசிகளை போடாமல் ,அலட்சியமாகக் கூட இருந்துவிடுவதுண்டு., பின்னால் வரப்போகும் பாதிப்புகளை அறியாமல். எனவேதான்,குழந்தைகளுக்குப் போடப்படும் தடுப்பூசிகள் பற்றி தெளிவாக விளக்கிக் கூறுகிறார்,நியோநேடாலஜிஸ்ட் டாக்டர் சுப்பிரமணி.
குழந்தை பிறந்தவுடனே என்ன தடுப்பூசி போடவேண்டும்?

         குழந்தை பிறந்ததிலிருந்து மூன்று,நான்கு நாட்களுக்குள் bacilus calmette guinine என்கிற தடுப்பூசி போடுவார்கள். ஏன் மூன்று , நான்கு நாட்களில் என்று சொல்கிறேன் என்றால்,இது ஆஸ்பிடலுக்கு ஆஸ்பிடல் வேறுபடும். சில ஆஸ்பிடல்களில் வாரத்தில் திங்கள்,புதன் என்று இரண்டு நாட்களும்..சில ஆஸ்பிடல்களில் வாரத்தில் புதன் சனி என்ற இரண்டு நாட்களும் என்று தடுப்பூசி மொத்த குழந்தைகளுக்கும் போடப்படும் நாட்கள் என்று வைத்திருப்பார்கள்..காரணம்,ஒருமுறை இந்த மருந்து பாட்டிலை பிரித்தால்,அதை பத்து குழந்தைகளுக்குப் போடுவார்கள். எனவே தனித் தனியாகப் பிரித்து என்று ஒவ்வொரு குழந்தைகளுக்கும் போடமுடியாது என்பதால்தான். ஒரு மருத்துவ மனையில் தடுப்பூசி போடப்படும் நாளன்று குழந்தை பிறந்தது என்றால்,உடனேகூட அந்த தடுப்போசியை போட்டுவிடுவார்கள்.,,இதுசரியானதும்கூட.

இந்த தடுப்பூசியை குழந்தைக்கு எந்த இடத்தில் போடவேண்டும்?

      குழந்தையின் இடதுகையில் தோள்பட்டைக்கு அருகில் போடுவார்கள்...இந்த தடுப்பூசியை சுருக்கமாக BCG தடுப்பூசி என்பார்கள். இது டிபி எனப்படும் காசநோய் உண்டாக்கும் கிருமிகளை எதிர்த்து போரிட போடப்படுவது. இந்த தடுப்பூசி அனைத்துக் குழந்தைகளுக்கும் மிக அருமையாக வேலை செய்யும் என்று சொல்ல முடியாது. குழந்தையின் தனிப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியை பொறுத்து  BCG தடுப்பூசி வேலை செய்யும். அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் BCG தடுப்பூசி போடப்படுவதில்லை. அவர்கள் நாட்டு சுழ்நிலைப்படி குழந்தைகளுக்கு இது அவசியம் என்று நினைக்காததே காரணம்..ஆனால் நம்நாட்டில் இந்த தடுப்பூசி அவ்வளவு தேவை என்று சொல்லமுடியாவிட்டாலும், குழந்தைகளுக்கு தொடர்ந்து போட வலியுறுத்தப் படுகிறது.காரணம், நாட்டுக்கு நாடு வியாதிகளின் தன்மை வேறுபடுகிறது.

குழந்தை பிறந்தவுடன் BCG தடுப்பூசி மட்டும் போட்டால் போதுமா?

       குழந்தைக்கு BCG தடுப்பூசி போடும்போதே,போலியோ சொட்டுமருந்தும்,ஹெபடைடிஸ் B இன்ஜெக்ஷனும் போடுவார்கள். இந்த மூன்றையுமே ஒன்றாக ஒரே நேரத்தில் போடுவார்கள். தவிர போலியோ சொட்டுமருந்து ஒன்றரை,இரண்டரை,மூன்றரை மாதங்களிலும் கண்டிப்பாக தருவார்கள். போலியோ சொட்டுமருந்து,ஊசி என்று இரண்டும் இருக்கிறது...நம்நாட்டில் போலியோ சொட்டு மருந்து மட்டுமே வலியுறுத்தப் படுகிறது.
காரணம் என்னவென்று சொல்லமுடியுமா?

       காரணம் குழந்தையின் வயிற்றில் போகும் போலியோ  சொட்டுமருந்து வைரஸ், குழந்தையின் கழிவு மூலம் வெளிவரும்போது வீரியமிக்க வைரஸாக வெளிவந்து காற்றில் பரவி . காற்றின் மூலம் போலியோ சொட்டுமருந்து கொடுக்காத குழந்தைகளுக்கும் கூட போலியோ தடுப்பு மருந்தாக வேலை செய்யும்...இதைத்தான் மந்தை எதிர்ப்புச் சக்தி என்பார்கள்...படிப்பறிவின்மை,அறியாமை காரணமாக நம் ஊரில் அலட்சியமாக யாராவது குழந்தைக்கு போலியோ சொட்டுமருந்து தராமல் விட்டுவிட்டால் கூட இதுவே தடுப்பு மருந்தாக பயன்படட்டும் என்பதுதான் காரணம். இதன்மூலம் கட்டாயம் நூறு குழந்தைகளாவது பாதுகாக்கப் படுவார்கள்..பொதுவாகவே போலியோ வைரஸ் ,வெளியேறிப் பரவி, பல குழந்தைகளுக்கும் நனமி தரவேண்டும் என்பதால் நம் நாட்டில் வாய் மூலம் போலியோ சொட்டுமருந்து தருகிறார்கள்.,வெளிநாட்டில் போலியோ ஊசி போடுகிறார்கள்.
ஹெபடைடிஸ் B தடுப்பூசி எதுக்காக?

      மஞ்சள் காமாலைக்கு எதிர்ப்பு சக்தியாகத்தான் ஹெபடைடிஸ் B தடுப்பூசி போடப்படுகிறது. மஞ்சள் காமாலைக்கு A ,B ,G என்று மூன்று வகை தடுப்பூசி இருக்கிறது..இதில் B தான் ரொம்ப பவர்புல் ! மஞ்சள் காமாலை லிவரை உடனடியாக பாதிக்கும் என்பதால் , பிறந்த உடனேயே ஹெபடைடிஸ் B தடுப்பூசி போடப்படுகிறது. இந்த தடுப்பூசியை பிறந்த ஆறுமாதத்தில் குறைந்தது ஒருமாதம் இடைவெளிவிட்டு  மூன்றுமுறை கட்டாயம் போடவேண்டும்.

முதுமையிலும் இளமையாக தெரியனுமா

Posted On April 17,2012,By Muthukumar
ஆணோ, பெண்ணோ இப்போதெல்லாம் முப்பது வயதிலேயே நரைக்கத் துவங்கிவிடுகிறது நரைமுடி. நரைமுடிதான் முதுமையின் அடையாளத் தோற்றம் என்பதால் அதை மறைக்க பெரும்பாலோனோர் பிரயத்தனப்படுகின்றனர். நரையை மறைக்க டை உபயோகியுங்கள்... கருங்கூந்தலை கண்ணாடியில் பார்க்கும் போது உற்சாகம் பிறக்கும்.
நமக்குத்தான் வயதாகிவிட்டதே என்று எண்ணாமல் உற்சாகத்தோடு இருந்தாலே இழந்த இளமையை மீட்டெடுக்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். ஐம்பது வயதிலும் அழகாய் தெரிய சில ஆலோசனைகளையும் அவர்கள் கூறியுள்ளனர்.
டை பயன்படுத்த உங்களுக்கு விருப்பமில்லை என்றால் பூவரசங்காய் முக்கால் பங்கும், கரிசலாங்கண்ணி கால் பங்கும் எடுத்து பக்குவமாக அரைத்து தலையில் பூசிக்கொள்ளுங்கள் முடி நல்ல பொலிவோடு அழகாக இருக்கும்.
நீர்ச் சத்து குறைபாடு
முதுமையில் நீர்சத்து குறைபாடு என்பது உடலில் ஏற்படும். இதனால் பலருக்கு நா வறட்சி, உதடு கறுத்துப் போதல் போன்ற பிரச்சனைகள் உண்டாகும். நா வறட்சியை தவிர்க்க அடிக்கடி வெந்நீர் குடியுங்கள். குறைந்தது ஒரு நாளைக்கு ஐந்து லிட்டர் தண்ணீராவது குடிக்க பழகுங்கள். முகச் சுருக்கம் போக்க எலுமிச்சை பழத்தைத் தேய்த்து சிறிது நேரம் கழித்து வெந்நீரில் ஆவி பிடியுங்கள்.
கால்வெடிப்பு குணமாக
கால்வெடிப்புகள் உங்கள் முதுமை தோற்றத்தை மேலும் அதிகப்படுத்தும் என்பதால் இதமான சுடுநீரில் பாதத்தை நனைய விட்டு நன்கு கழுவுங்கள் பிறகு வெடிப்பு உள்ள இடத்தில் கற்றாழை கொண்டு வந்து அதனுடைய சாறை கால்வெடிப்புகளில் தடவி சிறிது நேரம் ஊறவிடுங்கள். மஞ்சள் பற்று போட்டாலும் பித்த வெடிப்பு கால் ஆணி ஆகியவை குணமாகிவிடும்.
கழுத்து சுருக்கம் போக்க
வயதானால் கண்கள் சுருக்கம் ஏற்படுவது இயல்பு. முதுமையில் கண்களுக்கு கீழே கருவளையம் வரும் அது உங்கள் வயதைக்கூட்டி முதியவராக தோற்றமளிக்கச் செய்யும். எனவே கண் சுருக்கத்தைப் போக்க கண்களுக்கு அதிக சிரமம் தரும் வேலைகளை தவிர்க்கவேண்டும். அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பது, அதிகம் நேரம் புத்தகம் படிப்பது போன்ற பழக்கங்களை குறைத்துக் கொள்ளுங்கள்.
கண்களின் கருவளையத்தை தவிர்க்க ஆரஞ்சுப்பழச் சாற்றை கண்ணுக்குக் கீழே தேய்த்து சற்று நேரம் கழித்து இதமான வெந்நீரில் கழுவிவிடுங்கள் பிறகு அந்த இடத்தில் வெள்ளரிப் பிஞ்சை தேயுங்கள். மெல்ல மெல்ல கருவளையம் காணாமல் போய்விடும்.
கழுத்து சுருக்கம் என்பதும் உங்களின் வயதை கூட்டும் அதனை அகற்ற சொர சொரப்பாக அரைக்கப்பட்ட அரிசி மாவையும், கடலை மாவையும் கழுத்துப்பகுதியில் தேய்த்து சிறிது நேரம் ஊறவைத்து பிறகு நீரில் கழுவுங்கள். இதனால் கழுத்துச் சுருக்கம் காணாமல் போகும்.
கண்ணக் குழி தவிர்க்க
இளமையில் கன்னங்களில் குழி விழுவது அழகை அதிகரிக்கும். அதுவே முதுமையில் என்றால் வயதான தோற்றத்தை அதிகரிக்கும். எனவே இதனை தவிர்க்க தினந்தோறும் காலையிலும், மாலையிலும் இதமான சூடுள்ள வெந்நீரைக் குடித்து அதை இரண்டு கன்னப்பகுதியிலும் ஒதுக்கி உப்ப வைக்க வேண்டும். சிறிது நிமிடம் இப்படியே வைத்திருந்து பிறகு கொப்பளியுங்கள். பிறகு கன்னங்களின் உட்புறத்தில் விரலால் மசாஜ் செய்யவேண்டும். இப்படி சில வாரங்கள் செய்தாலே போதும் கன்னங்களில் குழி மறைந்து இளமைத் தோற்றம் கிடைக்கும்.
இயற்கையை ரசியுங்கள்
உடல் ஆரோக்கியமாக இருந்தாலே இளமையாக உணர்வுகளும் மனநிலையும் உங்களுக்குள் இருக்கும். உங்கள் மனநிலையில் வயதானவர் என்கிற எண்ணத்தை தூக்கி எறிந்துவிட்டு நாம் இளைஞன். நம்மால் எதையும் செய்ய முடியும் நம் உடல் மிகமிக உற்சாகமாக இயங்குகிறது. நூறு சதவிகிதம் இளமையாக இருக்கிறது. ஆரோக்யமாக இருக்கிறது என்றே எண்ணுங்கள்... கண்டிப்பாக உங்கள் தோற்றத்தில் நீங்கள் இளைஞராக மாறிவிடுவீர்கள். அடுத்து இயற்கை அழகை நேசியுங்கள். புதுப்புது விஷயங்களை ரசியுங்கள் அப்புறம் என்ன ஐம்பது வயதிலும் அழகு ராணி நீங்கள்தான்.

அழகிற்கு அழகு சேர்க்கும் பொட்டு

Posted On April 17,2012,By Muthukumar
பெண்களின் முகத்திற்கு அழகையும் வசீகரத்தையும் தருவதுவது நெற்றி பொட்டுதான். நம் முன்னோர்கள் அனைவரும் நெற்றியில் வைக்கும் குங்குமப்பொட்டின் அழகே தனி என்று தான் சொல்ல வேண்டும். ஒவ்வொருவரும் தங்களின் முகத்திற்கேற்றவாறு பொட்டு வைக்க வேண்டும்.
மருத்துவ ஆராய்ச்சிகளின்படி, நினைவாற்றலும் சிந்தனைத்திறனும் திறனுக்கும் உரிய இடம் நெற்றி. யோகக் கலையில் இதனை ஆக்ஞா சக்கரம் என்கிறது. எலக்ட்ரோ மேக்னடிக் என்ற மின்காந்த அலைகளாக மனித உடல் சக்தியை வெளிப்படுத்தும். அதிலும் முன்நெற்றி மற்றும் நெற்றிப் பொட்டு இரண்டும் மின்காந்த அலைகளை வெளியிடுவதில் முக்கியமானவை. அதனால்தான், நம் மனம் கவலையால் வாடும்போது, தலைவலி அதிகமாவதை நாம் உணர்ந்திருப்போம்.
நாம் வெறும் நெற்றியாக இருக்ககூடாது என்று முன்னோர்கள் அடிக்கடி சொல்வதுண்டு. நெற்றியில் இடும் திலகம், அந்தப் பகுதியைக் குளிர்விக்கிறது. நம் உடலின் சக்தி வெளியேறி விரயமாவதைத் தடுக்கிறது. எனவே வெறும் நெற்றியாக இருக்கக் கூடாது என்கின்றனர் முன்னோர்கள்.
இன்றைக்கு ஸ்டிக்கர் பொட்டுக்களின் வருகைக்குப் பின்னர் மங்கையர்கள் பல வித டிசைன்களில் முகத்தை அழகுபடுத்தி கொள்கின்றனர். நாம் வைக்கும் பொட்டு நம்முகத்திற்கு ஏற்றதாக இருந்தால் அது அழகினை அதிகரித்துக் காட்டும். ஆதலால் முக அமைப்பிற்கு ஏற்ற பொட்டுகளை தேர்வு செய்து முகத்தின் அழகை அதிகரிக்க செய்யுங்கள் என அழகியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

நீல் வடிவ பொட்டு
வட்ட வடிவ முகம் இவர்கள் நீளமான பொட்டுகளை உபயோகிக்கவேண்டும். நீளமான பொட்டு இவர்களது உருண்டை முகத்தை சற்று நீளவாக்காக மாற்றியதுபோல் அழகு தரும். இவர்கள் நெற்றி குறுகலாக இருந்தால், அவர்கள் புருவங்களுக்கு மத்தியில் பொட்டு வைக்கவேண்டும்.

இதய வடிவ முகம்
இதய வடிவ முகம் கொண்டவர்கள் சற்றே வித்தியாசமானவர்கள். இவர்கள் குங்குமத்தினால் பொட்டு இட்டுக்கொள்வது முகத்தை அழகாக்கும். ஸ்டிக்கர் பொட்டுக்களில் சிறிய அளவில் நீளமான பொட்டுகள் முக வசீகரத்தை அதிகரித்துக் காட்டும்.

வட்ட பொட்டு
ஓவல் வடிவ முகம் கொண்டவர்கள் புருவத்திற்கு சற்று மேலே நெற்றியில் வட்டப் பொட்டு வைப்பது அழகை அதிகரிக்கும். நீளமான ஸ்டிக்கர் பொட்டு வைத்தாலும் வசீகரமாக இருக்கும்.
சதுர முகம் உள்ளவர்கள் நீளமாக பொட்டுகளை வைக்கக்கூடாது. அகலம் அதிகமுள்ள பொட்டுகளை வைத்துக்கொள்ளலாம். உருண்டை மற்றும் முட்டை வடிவிலான பொட்டுகள் இவர்களுக்கு பொருத்தமாக இருக்கும். வண்ணத்துப் பூச்சி வடிவ டிசைன் பொட்டுக்கள் எடுப்பாக இருக்கும்.
முக்கோணப் பொட்டுக்கள்
முக்கோண வடிவ முகம் உள்ளவர்களுக்கு அனேகமாக எல்லாவகைப் பொட்டுகளும் பொருந்தும். நெற்றி அகலமாக இருந்தால், நீளமான பொட்டுகளை பயன்படுத்த வேண்டும். முக்கோண வடிவிலான பொட்டுகளும் இவர்களுக்கு நன்றாக இருக்கும். அகலமான நெற்றியாக இருந்தால், புருவத்தில் இருந்து ஒரு சென்டிமீட்டருக்கு மேல் பொட்டுவைக்க வேண்டும்.
முகத்தின் வடிவம் மட்டுமின்றி உடை, சரும நிறம் போன்றவைகளும் பொட்டுடன் சம்பந்தப்பட்டதுதான்.

வேலைதேடுவோருக்கு வேண்டிய தளம் (Valuable Website for Job Seekers)

எவ்வளதுதான் வருமானமிருந்தாலு ம் நம்நாட்டில் அரசு வேலைக்கு இரு க்கும் மதிப்பே தனி. படிக்கும் மாண வர்களில் பெரும்பாலோனோரின் எதிர்கால கனவு அரசு வேலைதான் .
வேலை வாய்ப்பு செய்திகளை வழங் க சில செய்தித்தாள்கள், பத்திரிகை கள் உள்ளன. இங்கே அறிமுகப்படுத் தப்படவிருக்கும் தளம் அரசு வேலைகள் தேடுபவர்களுக்கு மிக்க பயனுள்ளதாக இருக்கும் .
  • S.S.L.C முதல் M.B.B.S வரை படித்துள்ள அனைவருக்கும் அவரவர்களுக்கு தகுந்த வேலை வாய்ப்பு செய்திகள் இடம் பெற்று ள்ளன.
  • மாநிலங்கள் வாரியாக வேலை வாய்ப்புகள் வகைப்படுத் தப்பட்டு ள்ளன .
  • நகரங்கள் வாரியாக வேலை வாய் ப்புகள் வகைப்படுத்தப்பட்டுள்ள ன 
  • துறைகள் வாரியாக வேலை வாய்ப்புகள் வகைப்படுத்தப்பட் டுள்ளன .
  • அனைத்து வேலைகளுக்குரிய பாடத்திட்டங்கள், மாதிரி வினாத் தாட்கள் , தேர்வு முடிவுகளையும் அறியலாம் .
அலுவலக உதவியாளர் முதல் அறிவியல் அறிஞர்கள் வரையிலா ன அனைத்து அரசு வேலைகள் பற்றிய விபரங்கள் அறியவும்  www.jobbersjob.com இத்தளம் பயனுள்ளதாக இருக்கும்.

வருங்கால கணவர் – ஒரு கனவு

Posted On April 17,2012,By Muthukumar
ருங்கால கணவரைப் பற்றிய கனவு எல்லா பெண்களுக்கும் இருக்கவேண்டும். வயதுக்கு வந்த சில வருடங்களில் அந்த கனவு தானாகவே வந்துவிடும்.

இருபது வயதைத் தொட்ட பின்பும் அப்படி ஒரு கனவு வரவில்லை என்றால் அதை மனநிலை, உடல் நிலை கோளாறு என்கிறார்கள் மருத்துவர்கள். அந்தந்த வயதுக்கேற்ற கனவுகள் அவ்வப்போது வரவேண்டும். அந்த கனவுகள் பெண்களை திருமணம் செய்து கொள்ள பக்குவப்படுத்தும்.
ஒரு பெண் வாழும் சூழ்நிலைக்கேற்ப அவள் கனவுகள் வித்தியாசப்படும். ஏழ்மையான சூழ்நிலையில் வாழும் ஒரு பெண் பணக்கார கணவர் வேண் டும் என கனவு காணலாம். கொடுமை யான சூழ்நிலையில் வாழும் பெண் தனக்கு அன்பான, ஆதரவான கண வர் கிடைப்பதுபோல் கனவு காண லாம். இப்படி பெண்கள் காணும் கனவுகள் பலவிதம்.
அந்த கனவுகள் ஒருபோதும் எல்லை மீறியதாக இருந்துவிடக்கூடாது. ஏன் என்றால் எல்லோ ருடைய வாழ்க்கை யிலும், எல்லா கனவுகளும் நிறை வேறும் என்று சொல்வதற்கில்லை.
எவ்வளவு கனவுகள், கற்பனைகள் இருந்தாலும் திருமணம் ஆன பின்பு, உடனடியாக நிஜ உலகத்திற்கு வந்து விடவேண்டும். நிஜம் கண் முன் வரும் போது அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் பெண்களுக்கு கட்டா யம் வேண்டும். நிஜங்களை கனவுக ளோடு ஒப்பிட்டு பார்த்து மனம் பேத லித்து நிற்பது வாழ்க்கைக்கு உதவாது. நிஜங்களை ஏற்றுக்கொண்டு வாழும்போதுதான் பெண்கள் வெற்றிகரமானவர்களாக மாறுகிறார்கள்.

திரை உலகில் கனவு கன்னியாக வலம் வரும் நட்சத்திரத்திற்கு கூட நிஜவாழ்க்கை என்பது கனவுகளுக்கு மாறாகத்தான் அமைகிறது. கனவு வேறு வாழ்க்கை வேறு என்ற உண்மையை அவர்கள் உணர்ந்துகொள்ளும்போது வாழ்க்கை கசக்கிறது. அந்த கசப்பில் இருந்து விடுபட்டு வாழ்க்கையை இனிமையாக்கி கொள்வதில் தான் வாழ்க்கையின் சுவா ரசியம் அடங்கி இருக்கிறது. கனவை நினைத்து நிஜத்தை அழித்து கொள்ள நினைப்பவர் களுக்கு வாழ்க்கையே கனவாகி விடுகிறது.
இன்றைய பெண்களுக்கு அவர்களது வாழ்க்கையை தீர்மானித்துக்கொள்ளும் உரிமை தரப்பட்டிருக்கிறது. அதை அவர்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள அவர்கள் காணும் கனவுகள் ஓரளவுதான் பயன்படும். அவர்களது அறிவும், அனுபவங்களும், பக்குவப்பட்டவர்களின் அறிவுரைகளுமே முழுமையாக பயன்படும்.
இந்த உலகம் மிகப் பெரியது. அதனால் சில பெண்கள் தங்களது கனவு கதாநாயகனை தேடித்தேடி களைத்துப்போகிறார்கள். அப்படியே காலத்தையும் கடத்தி வாழ்க்கையையும் தொலைத்து விடுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் கனவுகளுக்கு கொடுக்கும் முக்கியத் துவத்தை குறைக்கவேண்டும். நிஜவாழ்க்கைக்குள் தங்களை முன்நிறுத்தி, தங்கள் நிஜ கதாநாயகனை தேடத் தொடங்கவேண்டும்.
இன்று தெருவிற்கு தெரு திருமணத்தகவல் மையங்கள் உருவாகிவிட்டன. அங்கெல்லாம் சென்று, பெண்கள் தங்கள் கனவு கதாநாயகனை தேடிக்கொண்டிருக்கிறார்கள். சில திரு மண தகவல் மையங்களோ, பெண்களின் எல்லைமீறிய கனவுகளை தெரிந்துகொண்டு, அதற்கு தக்கபடி பொய் முகம் கொண்ட இளைஞர்களை அறிமுகப்படுத்துகிறார்கள். மிகைப்படுத்தப்பட்ட பொய்களைக்கூறி அவர்களுடைய கனவு கதாநாயகன்போல் `மேக்கப்' போட்டு அந்த பெண்கள் முன்பு நிறுத்துகிறார்கள்.
அந்த பெண்களும் `ஆஹா.. இவர்தான் நம் கனவு நாயகன்' என்று முடிவு செய்து, அவசர கதியில் திருமணத்தை முடித்துக்கொள்கிறார்கள்.
சிறிது காலத்தில் உண்மையை உணரும்போது பெருத்த ஏமாற்றம் அடைகிறார்கள். அந்த ஏமாற்றம் அவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி, விவாகரத்து வரை கொண்டு சென்றுவிடுகிறது.
இன்றைய பல விவாகரத்துகளுக்கு இந்த கனவுகளே காரணமாக இருக்கிறது. நிறை வேறாத ஆசைகள் நெஞ்சின் அடித்தளத்தில் பாரமாக அழுத்தும்போது நிஜங்களின் உயர்வை மனம் ஏற்க மறுக்கிறது. விளைவு கருத்து வேற்றுமை ஆகிறது. இருமனம் ஒரு மனமானால் கருத்துகள் ஒன்றுபடும். ஆனால் அதற்கு இந்த கனவுகள் ஒத்துழைப் பதில்லை!
கனவுகள் தேவைதான். ஆனால் அந்த கனவுகளுக்கு, நிஜங்களை ஏற்றுக்கொள்ள மறுக் கும் அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது. கனவுகளுக்கு கற்பனைகள் மட்டும் போதுமானது. ஆனால் நிஜங்களுக்கு அனுபவ அறிவும், ஆன்ம பலமும் தேவை. நிஜங்கள் நம் கண் முன்னே நிற்கும்போது கனவுகள் எங்கிருந்தோ எட்டிப்பார்த்து நம்மை கேலி செய்யும். இதனால் ஏற்படும் ஏமாற்றம் மனதில் வெறுப்பையும், சோர்வையும் உண்டாக்கும்.

சில பெண்கள் நிழலை நிஜமாக்கி தங்கள் கனவு இலக்கை அடைய முற்படுவார்கள். கல்வியறிவில்லாத கணவனை மகாகவி காளிதாசனாக்கியது அப்படிப்பட்ட ஒரு பெண் ணின் கனவுதான். இது நிஜத்தை அப்படியே இருப்பது போலவே ஏற்றுக்கொண்டு கனவை நிஜமாக்கி வாழ்க்கையை சாதனையாக்கி காட்டும் கனவு. உள்ளங்கை அளவு உண்மையை உலகளாவிய வெற்றியாக மாற்றி காட்டும் உன்னதம் இருவர் கனவிலும் இருந்தால் அவர்கள் வாழ்க்கை பிரகாசமாகிவிடும். இந்த சாதனையை புரிய துணை நின்றதும் கனவு தான். அவரவர் மனநிலையை பொறுத்து ``கனவுகள்'' செயல்படுகிறது. வருங்காலத்தை வளமாக்குவதும் கனவுதான். வாழ்க்கையை கேள்வி குறியாக்குவதும் கனவுதான்.
சிந்தித்து செயல்படவும், வாழ்க்கையை திட்டமிடவும் கனவுகள் கைகொடுக்கின்றன. லட்சியங்களை உருவாக்கும் கனவு நம்முடன் வருபவர்களை வளப்படுத்தி எதிர்காலத்தை ஒளிமயமாக்குகிறது. வருங்கால கணவரை பற்றிய கனவு காண்பது தவறில்லை. அது இருவரின் வருங்காலத்தையும் வளமாக்கும் விதமான கனவாக இருத்தல் வேண்டும். சுயநலமான கனவுகள் பெரும் சுமையாகவும், பகையாகவும் உருவெடுத்து விடும்.

படை ,ஸ்கேபிஸ்,கரப்பான் -தோல் நோய்களுக்கு சிறந்த களிம்பு-ரஸோத்தமாதி லேபம்- Rasotthamadhi lepam

Posted On April 17,2012,By Muthukumar
 (ref-யோகரத்னாகரம் - பாமா சிகித்ஸா)


தேவையானமருந்துகளும் செய்முறையும்:
I.             

 1.பாதரஸம் ரஸ                      50 கிராம்
2.     கந்தகம்  - கந்தக                 50           “
கந்தகத்தைக்கல்வத்திலிட்டுப் பொடித்துப் பின்னர் ரஸத்தைச் சேர்த்து அறைத்து நன்கு கறுத்தகஜ்ஜளி ஆக்கவும்.

II.             

மனோசிலை (மனசில) 50 கிராம் எடுத்துத் தனியே கல்வத்திலிட்டுப்பொடிக்கவும்.


III.         

  1.            சீரகம் ஜீரக                     50 கிராம்
2.            கருஞ்சீரகம் க்ருஷ்ணஜீரக       50           “
3.            மிளகு மரீச்ச                   50           “
4.            மஞ்சள் ஹரித்ரா               50           “
5.            மரமஞ்சள் தாருஹரித்ரா        50           “

இவைகளை நன்குபொடித்துச் சலிக்கவும். பின்னர்

1.            ரஸகந்தக கஜ்ஜளி                         100 கிராம்
2.            பொடித்த மனோசிலை                    50           “
3.            பொடித்துச் சலித்த சரக்குகளின் சூரணம் 250         “
4.            வங்கச்சிந்தூரம்                          50           “
இவைகளை ஒன்றுசேர்த்துக் கல்வத்திலிட்டு அக்கலவை நன்கு கருத்துவரும் வரை அரைத்துபத்திரப்படுத்தவும்.

இம்மருந்து வெளிஉபயோகத்திற்கானதால் ரஸம், கந்தகம், மனோசிலை இவைகளைச் சுத்தி செய்ய வேண்டியதில்லை.

இம்மருந்தைத்தேங்காய் எண்ணெய், நெய், எலுமிச்சம் பழச்சாறு, இவற்றுடன் கலந்தும் பூசலாம்.

                 
மேற்கூறிய மருந்தைக் களிம்பாகச் செய்துபயன்படுத்த வேண்டுமானால் அதற்காக உபயோகிக்க வேண்டிய சரக்குகளின் விகிதம் பின்வருமாறு அமையும்:
1.            ரஸோத்தமாதிலேப சூர்ணம் 10 கிராம்
2.            தேங்காய் எண்ணெய்        300         “
3.            தேன் மெழுகு              75           “
இவைகளை முறைப்படிசேர்த்துக் களிம்பாக்கவும்.

தீரும் நோய்கள்: 




 சொரி (அ) நமைச்சல் (அ) அரிப்பு (கண்டு), சிரங்கு (பாமா), படை (விஸர்ச்சிகா) முதலிய நோய்கள் (சருமரோகங்கள்).

ஆறாத புண்ணை ஆற்றிடும் - ரஸகற்பூர லேபம் -Rasakarpoora lepam

Posted On April 17,2012,By Muthukumar
தேவையானமருந்துகளும் செய்முறையும்:


1.            ரஸகற்பூரம் (பூரம்) ரஸகற்பூர          10 கிராம்
2.            வங்க ஸிந்தூரம் கிரிஸிந்தூர           20          
3.            மிருதார் சிங்கி ம்ருத்தார ஸ்ருங்க     20          

இவைகளைத்தனித்தனியே கல்வத்திலிட்டுப் பொடித்து ஒன்று சேர்த்தரைத்து அதை

1.            தேங்காய் எண்ணெய் நாரிகேள தைல     400 கிராம்
2.            தேன் மெழுகு மதுச்சிஷ்ட                100        

இவைகளைக் கொண்டுமுறைப்படி தயாரித்து ஆறிய களிம்புடன் கலந்து பத்திரப்படுத்தவும்.

பயன்படுத்தும்முறை:      

 மேற்பூச்சாக (அப்யங்க) வெளிஉபயோகத்திற்கு மட்டும். நல்லெண்ணெய்யுடன் கலந்து பூசலாம்.

தீரும் நோய்கள்:  

பரங்கிப்புண் (உபதம்ஷஜவ்ரண, பிரங்கஜவ்ரண), ஆறாத புண்கள் (துஷ்டவ்ரண), காயங்கள், படை (விஸர்ச்சிகா), நமைச்சல் (கண்டு), பாதிக்கப்பட்ட பகுதியை நன்கு சுத்தம்செய்துவிட்டு இதனைப் போடவும்.

தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. ஆறாத புண்ணை ஆற்றிடும்
  2. நாள்பட்ட காயங்களுக்கு இந்த மருந்தை பயன்படுத்தலாம்

பழுக்காத கட்டிகளுக்கும் ,வலிகளுக்கும் மேல் பூச்சு -ஸுரதாரு லேபம்.-Suradaru lepam

Posted On April 17,2012,By Muthukumar
பழுக்காத கட்டிகளுக்கும் ,வலிகளுக்கும் மேல் பூச்சு -ஸுரதாரு லேபம்.-Suradaru lepam
                                                                                              
தேவையானமருந்துகளும் செய்முறையும்:

1.            தேவதாரு தேவதாரு            50 கிராம்
2.            சுக்கு – சுண்டீ                     50           “

இவைகளைப்பொடித்துச் சலித்து அத்துடன் தனியே பொடித்துச் சலித்த நவாச்சாரம் (நவக்ஷார) 50 கிராம் சேர்த்துக் கலந்து பத்திரப்படுத்தவும்.
                இது நீர்க்கும் தன்மை உள்ளதாகையால் காற்றுப்புகாத கொள் கலன்களில் பத்திரப்படுத்த வேண்டும்.

பயன்படுத்தும்முறை:  
மேற்பூச்சாக (அப்யங்க) வெளிஉபயோகத்திற்கு மட்டும்.

                 
எலுமிச்சம் பழச்சாறு, மோர் அல்லது சூடான தண்ணீர் இவற்றுடன் கலந்துமேலே பூசலாம்.

தீரும் நோய்கள்:  

ஆரம்ப நிலையிலும், பழுக்கும் நிலையிலும் உள்ள கட்டிகள் (விஷ்போட(அ) வித்ரதி), வீக்கம் (ஸோத),வலி (ருஜா), யானைக்கால் (ஸ்லீபாத).

தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. வீக்கம் சார்ந்த வலிகளுக்கு இந்த மருந்தை பற்றிடலாம் ..நல்ல குணம்  தெரியும்
  2. பழுக்காத கட்டிகளுக்கு கஞ்சி தண்ணீருடன பற்றிட சீக்கரம் உடையும்
  3. ஊசி குத்துதல் போன்ற வலிகளுக்கு இந்த மருந்தை பற்றிட நல்ல பலன் தெரியும்
     

தோல் நோய்க்கு எளிய பற்று -துவரக லேபம்-Thuvarak Lepam

Posted On April 17,2012,By Muthukumar
தோல் நோய்க்கு எளிய பற்று -துவரக லேபம்-Thuvarak Lepam
(ref-அஷ்டாங்க ஹ்ருதயம் - உத்தரஸ்தானம்)

தேவையானமருந்தும் செய்முறையும்:

                ஓடு நீக்கிய நீரடிமுத்துப் பருப்பை (துவரக பீஜ)சிறிது தேங்காய் எண்ணெய்யுடன் (நாரிகேள தைல) கலந்து நன்கு அறைத்துக் களிம்பு போல்ஆனவுடன் பத்திரப்படுத்தவும். இது நடைமுறையில் உள்ள முறை. ஆனால் மூல நூலில்நீரடிமுத்து பருப்பை மட்டும் அப்படியே அரைத்துக் களிம்பாக்கி பயன்படுத்தும்படிகூறப்பட்டுள்ளது.

பயன்படுத்தும்முறை:  

மேற்பூச்சாக (அப்யங்க) வெளிஉபயோகத்திற்கு மட்டும்.

தீரும் நோய்கள்:  

அரிப்பு (கண்டூ), சொறி (கட்ச்சு), சிரங்கு (பாமா), தோல் வெடிப்பு (விபாடிகா), சிலர் இதனை கார்போக அரிசியை (பாகுசீ) அரைத்தவிழுதுடன் கலந்து வெண்குட்டத்தில் (ஸ்வித்ர) பூசுவதுண்டு.

தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. ஒரே மூலிகை விதை -இந்த மருந்தில்  எல்லா விதமானதோல் நோய்க்கும் சிறந்த தீர்வாக விளங்குகிறது
  2. அரிப்பு ,கரப்பான் -அலர்ஜி தோல் நோய்க்கும் இந்த மருந்தை பயன்படுத்தலாம்
  3. வெண் புள்ளிகளுக்கு -கார்போகி அரிசி அல்லது அவல் குஜாதி லேப சூரணத்துடன் பற்றிட நல்ல பலன் தரும்

நாட்பட்ட வலிகள் அணுகுவது எப்படி?

Posted On April 17,2012,By Muthukumar
வாழ்க்கைத் துணைவரின் அணுகுமுறையால் நாட்பட்ட வலிகளின் பாதிப்பு அதிகமாகலாம்....

வலிகள் என்றாலே வேதனையும் துன்பமும்தான். அதை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களுக்குத்தான் அதன் தீவிரம் புரியும். அதிலும் முக்கியமாக நீண்டகாலமாகத் தொடரும் நாட்பட்ட வலிகள் (Chronic Pain) வேதனை அளிப்பது மிக மிக அதிகம். உடல் ரீதியாக மட்டுமின்றி, உளரீதியாகவும் கூட.

மூட்டு நோய்களோடு வாழ்தல்   பற்றி மேலும் படிக்க இது இணைப்பு.

குடும்பத்தில் ஒருவருக்கு வலி

வலிகளின் தீவிரத்தைப் பற்றி சிந்திப்போமா?

உங்களை ஒரு பெண் என வைத்துக் கொள்வோம்.

உங்களுக்கு சில காலமாகவே இடுப்பு வலி தொடர்ந்து வருகிறது. அதனோடு கூட்டவும், துப்பரவு செய்யவும், சமைக்கவும் சிரமமப்படுகிறீர்கள். சிரமப்பட்டேனும் உங்கள் நாளாந்த வேலைகளைச் செய்து வருவதைத் தவிர்க்கவில்லை.


இருந்தபோதும் நீங்கள் உங்கள் வலியைப் பற்றி எப்பொழுது பிரஸ்தாபித்தாலும்
  • கணவர் அதை அக்கறையோடு செவிமடுப்பதில்லை என வைத்துக் கொள்வோம். 
  • அவர் அலட்சியமாக பனடோலைப் போட வேண்டியதுதானே என்று சொல்லிவிட்டுப் போய்விடுகிறார். 
அக்கணத்தில் உங்கள் மன நிலை எப்படி இருக்கும்.
  • கோபம் வரலாம், 
  • எரிச்சல் ஏற்படலாம், 
  • கவலையும் அழுகையும் கைகோத்து வரலாம்.
  • இவை எதுவும் இல்லையேல் 'இந்த மனிசனுக்குச் சொல்லிப் பிரயோசனம் இல்லை' என்ற வெறுப்பில் அவரோடு மனம்விட்டுப் பேசும் எண்ணமே விட்டுப் போய்விடலாம்.

இது அனுபவத்தில் நாம் நிதம் காண்பதுதானே! ஆனால் அண்மையில் இதனை ஒரு ஆய்வாகச் செய்திருக்கிறார்கள்.

நாட்பட்ட வலியானது தம்பதிகளிடையே
  • தொடர்பாடலை குறைக்கிறது. 
  • கலந்துரையாடுவது விட்டுப் போகிறது. 
  • இதனால் அவர்களிடையே புரிந்துணர்வு குறைந்து போகிறது. 
  • இவற்றின் பலனாக பாதிக்கப்பட்டவரின் வலியைச் சமாளிக்கும் திறன் குறைந்து போகிறது என்பது இந்த ஆய்வில் தெரிந்தது.

முன்னைய ஆய்வுகள்

குடும்ப உறவில் ஒருவர் மற்றவரது உணர்வுளைப் புரிந்து, அதற்கு மதிப்பளித்து, ஆறுதலிப்பதானது நன்மை பயக்கும் என முன்னைய ஆய்வுகள் உறுதி செய்திருந்தன்.
  • இதனால் அவர்களிடையே நெருக்கம் அதிகரிக்கிறது. 
  • நம்பிக்கை இறுக்கமாகிறது. 
  • உணர்வுகள் தம்மை அலைக்களிக்க விடாது அவற்றை அடக்கியாளும் வல்லமையைக் கொடுக்கிறது.

மாறாக துணைவர் மற்றவர்களின் உணர்வுகளைக் கண்டு கொள்ளாமல் அலட்சியப்படுத்தி, உதாசீனப்படுத்தினால் அல்லது சினங்கொண்டு விரோதமாக நோக்கினால்
  • அவர்களின் குடும்ப உணர்வில் விரிசலை ஏற்படுத்திவிடுகிறது. 
  • விட்டுக் கொடுப்புகள் குறைந்து குடும்ப உறவைப் பாதிக்கும். 
  • மன விரக்தியும் ஏற்படலாம் 
என்பதும் முன்னைய ஆய்வுகளில் தெளிவாகியிருந்தது.

இந்த ஆய்வு

நாரி உழைவு, இடுப்பு வலி, தசைப்பிடிப்புகள் பல்வேறு வலிகளால் பாதிக்கப்பட்டவர்களிடையே செய்யப்பட்ட இந்த ஆய்வில் வெளிவந்த விடயம் ஆய்வாளர்களை மட்டுமல்ல உங்களுக்கும் ஆச்சரியமாக இருக்கும். சிறிய ஆய்வுதான் 58 பெண்களையும் 20ஆண்களையும் கொண்டது.


உணர்வு ரீதியாக அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்கள்தான் என்பது பொதுவான நம்பிக்கையாகும். இந்த ஆய்வின் முடிவுகள் எதிர்மாறாக இருக்கிறது.
  • வலியால் துன்பப்படும் ஆண்கள் தங்கள் மனைவிமாரின் எதிர்மறையான உணர்வுப் பிரதிலிப்பால் அதிகமான பாதிப்பிற்கு உள்ளானதாக தெரிந்தது. 
  • வலி இருந்தால் மட்டுமின்றி ஏனைய பொழுதுகளிலும் மனைவியின் பாராமுகம் கணவர்களின் மனத்தை அதிகமாகச் சஞ்சலப்படுத்தியிருந்தது.


பெண்கள் மென்மையானவர்கள். அவர்கள் மனது பூப்போன்றது. அவர்கள் வலி, வேதனை, இடர் ஆகியவற்றால் பாதிக்கப்படுவது அதிகம். எனவே வலிகளை மோசமாக உணர்வர், பாராமுகத்தால் வாடுவர்  என்பன நம்பிக்கை. மாறாக, வலிமையுள்ளவர்கள் என நம்பப்படும் ஆண்கள் தாம் இவ் ஆய்வில் வலிகளால் பாதிப்புற்றது ஏன்?

'பாரம்பரிய எண்ணங்களின் அடிப்படையில்
  • ஆண்கள் தங்கள் குடும்பத்திற்காக உழைப்பவர்கள் என்ற பாத்திரத்தை வகிக்கிறார்கள். 
  • ஆனால் வலியானது அதனைச் சரியான முறையில் ஆற்ற முடியாத நிலையைத் தோற்றுவிக்கிறது 
என ஆண்கள் கருவதால் இந் நிலை ஏற்பட்டிருக்கலாம்' என இந்த ஆய்வைச் செய்த Wayne State University in Detroit and the Norwegian Center for Addiction Research   குழவினர் சார்பில் Laura Leong  கருத்து கூறியுள்ளார்.
உங்களுக்கான செய்தி என்ன?

இந்த ஆய்வு முடிவுகள் உங்களுக்கு எப்படிப் பயன்படும். நீங்களா உங்கள் துணைவரா மற்றவரில் அதிக அக்கறை காட்டுபவர் எனக் கண்டு பிடித்து மகிழவா, அல்லது யார் உதாசீனப்படுத்துகிறார் எனக் கண்டு பிடித்து குற்றம் சாட்டி வாழ்க்கையை மேலும் நரகமாக்கவா?

நிச்சமாக இல்லை.
  • மற்றவரின் வலியை மதித்து அதனால் அவருக்கு ஏற்பட்ட துன்பத்தை அனுதாபத்துடன் நோக்க வேண்டும். 
  • பரிவு காட்ட வேண்டும். 
  • ஆறுதல் சொல்ல வேண்டும். 
  • ஒத்தாசை செய்ய வேண்டும்.


அது மட்டுமல்ல! தொடர்ச்சியாக வலிப் பிரச்சனைக்காக மருத்துவரிடம் போகும் கணவன் மனைவியாக இருவரும் சேர்ந்து செல்லுங்கள்.

இது நோயைக் கணிக்க மட்டுமல்ல வேறு விதத்திலும் மருத்துவருக்கு உதவும். மருந்துகளும் ஆலோசனைகளும் ஒருவருக்கு மட்டும் போதுமானதா அல்லது மற்றவருக்கும் ஏதாவது தேவைப்படுமா எனத் தீர்மானிக்கவும் உதவும்.



உச்சி குளிரட்டும்… வெப்பம் அகலட்டும்…

Posted On April 17,2012,By Muthukumar
கோடை வெயிலின் தாக்குதல் பெண்களின் அழகுக்கு அச்சுறுத்தலாகிக் கொண்டிருக் கிறது. வெயிலில் அதிக நேரம் நடப்பதால் அவர்களது அழகான சருமம் கறுத்து, சுருங்கி, பொலிவை இழக்கிறது. கூந்தலில் வெயில் படுவதால் முடியில் இருக்கும் நீல நிறம் மறைந்து செம்பட்டை தன்மை உருவாகிறது. கவர்ச்சிமிக்க கண்கள் உஷ்ணத்தால் வதங்கிப்போய் பொலிவின்றி காணப்படுகிறது. மே, ஜூன் மாதங்களில் வெப்பம் இன்னும் அதிகரித்து அழகுப் பாதிப்பு அதிகரிக்கும் என்ற எண்ணம், அழகுப் பெண்கள் அனைவரையுமே வாட்டிக்கொண்டிருக்கிறது.
"ரொம்ப கவலைப்பட வேண்டியதில்லை. கவனமும், கொஞ்சம் சிரத்தையும், தேவையான அழகு பராமரிப்பும் மேற்கொண்டால் அழகை குன்றாமல், குறையாமல் பாதுகாக்கலாம்'' என்று கூறும் அழகுக்கலை நிபுணர் வசுந்தரா, கோடையில் உடல் அழகை பேணும் முறை பற்றி விளக்குகிறார்.

சருமம்
"நமது சருமத்திற்கு அத்தியாவசிய மானது கொழுப்பும், தண்ணீர் சத்தும். கோடை காலத்தில் அதிக வியர்வை வெளியேறுவதால், உடலில் தண்ணீர் சத்துக்கு பற்றாக்குறை ஏற்படும். அதிக அளவு தண்ணீர் மற்றும் திர வங்களை பருகி, உள்தேவையை சரிகட்ட வேண்டும். `மாயிசரைசரை' சருமத்தில் பூசி வெளித் தேவையை சமன் செய்யவேண்டும். உள்ளும், புறமும் இப்படி தண்ணீர் சத்து குறை யாமல் பார்த்துக்கொண்டால், கோடை யில் சரும அழகு அதிகம் பாதிக் காது.
கோடையில் அதிக பிரச்சினைக்குரி யது, புறஊதா கதிர்கள். அவை உடலில்படும்போது சருமம் கறுக்கும். தொடர்ச்சியாக வெயில்பட்டால் அந்த பாதிப்பு அதிகமாகும். புற ஊதா கதிர் கள் சருமத்தை பாதிக்காமல் இருக்க, `சன் ஸ்கிரீன் லோஷன்' பாதுகாப்பு தருகிறது. இந்த கிரீமை வாங்கி உட லில் வெயில் எங்கெல்லாம் படுகி றதோ அங்கெல்லாம் பூசிக்கொள்ள வேண்டும். இந்த லோஷன் புட்டிகளில் `எஸ்.பி.எப்' என்ற அளவு (10 முதல் 60 வரை) குறிப்பிடப்பட்டிருக்கும்.
நீங்கள் பத்து என்று குறிப்பிடப்பட்டிருக்கும் கிரீமை வாங்குகிறீர்கள் என்றால் அது (10 * 5) 50 நிமிடங்கள் உங்கள் சருமத்தை வெயிலில் இருந்து பாதுகாக்கும். ஒரு மணி நேரம் நீங்கள் வெயில்படும் அளவிற்கு வெளியே செல்வதாக இருந்தால், இந்த 10 எண் கொண்ட எஸ்.பி.எப். லோஷன் வாங்கி, வெயில்படும் இடங்களில் பூசிக்கொள்ளுங்கள்.
நீங்கள் கோடை சுற்றுலாவுக்காக பஸ்சில் பகல் பொழுதில் தொடர்ச்சியாக அதிக நேரம் பயணம் செய்ய வேண்டியிருந்தாலோ, மலை வாசஸ்தலங்களில் பகலில் அதிக நேரம் சுற்ற வேண்டியதிருந்தாலோ 30 முதல் 40 என்ற எண் கொண்டவைகளை பயன்படுத்துங்கள். பெண்களின் முகம், கைகள், கழுத்தின் மேல் பகுதி- கீழ் பகுதி போன்றவைகளை வெயில் நேரடியாக தாக்கும். அந்தப் பகுதிகளில் இதனை பூச வேண்டும். பூசிக்கொண்டு வெளியே சென்றுவிட்டு, நீங்கள் திரும்பி வந்த பின்பு அதை கழுவி சுத்தப்படுத்தவும் செய்யலாம். கழுவாமல் அப்படியே விட்டுவிடவும் செய்யலாம். ஆனால் காலையில் பூசிக் கொண்டு வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பி- மீண்டும் பிற்பகல் வெயிலில் வெளியே செல்லவேண்டிய நிலை ஏற்பட்டால் முதலில் பூசியதை தண்ணீரால் கழுவி அப்புறப் படுத்திவிட்டு, மீண்டும் தேவைப்படும் நேரத்திற்கு தக்கபடி கிரீமை பூசிக்கொள்ள வேண்டும்.
கோடையில் நிறைய பேர் நீச்சல் பயிற்சிக்கு செல்கிறார்கள். குளோரின் கலந்துள்ள அந்த தண்ணீரும், சூரிய கதிர்களும் உடலில்படும்போது சருமம் கறுத்துப்போகும் தன்மை அதிகரிக் கும். அவர்கள் நீச்சலுக்காக இருக்கும் `சன் ஸ்கிரீன் லோஷனை' வாங்கி பயன்படுத்திக்கொண்டு பயிற்சியை முடித்த பின்பு சுத்தமான தண்ணீரால் தலை முதல் பாதம் வரை குளித்துவிட்டு, அதற்கென்று இருக்கும் லோஷனை வாங்கி பயன்படுத்த வேண்டும். கறுத்துப்போவதை இதன் மூலம் தடுக்கலாம்.
நமது சருமத்தின் கீழே உடலை பாதுகாக்க கொலோஜின் என்ற புரதம் உள்ளது. வெயில்படும்போது இந்த புரதம் சுருங் கும். கண்களுக்கு அடியில் உள்ள சருமத்திலும் கொலோஜின் உள்ளது. வெயில் கண்களில் படுவதாலும், வெயிலில் நாம் கண்களை சுருக்கி, விரித்து பார்ப்பதாலும் கண் பகுதி கொலோஜின் விரைவாக சுருங்கும். அதனை சரிசெய்வதற்காக, கோலோஜின் கலந்த கிரீமை வாங்கி கண்களின் கீழ் பகுதி, வாய்ப்பகுதி போன்றவைகளில் பூசிக்கொள்ளலாம்.
கை, முகம், கண் போன்ற பகுதிகளில் ஏற்கனவே வெயில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், வைட்டமின்-ஈ ஆயிலை வாங்கி, அந்த இடங்களில் பூசுங்கள். 30 நிமிடங்களில் கழுவி விடுங்கள். கழுவாமல் அப்படியே விட்டுவிடவும் செய்யலாம்.
முகத்தில் ஏற்படும் பருக்கள் கோடை காலத்தில் அதிகரிக்கும். பருவே ஏற்படாமல் எப்படி தடுக்கவேண்டும் என்று சொல்கிறேன்.
ஒரு லிட்டர் தண்ணீரை சூடாக்குங்கள். சூடானதும் அடுப்பில் இருந்து இறக்கிவைத்து விட்டு அதில் ஒரு கைப்பிடி துளசியை போட்டு மூடிவைத்துவிடுங்கள். நன்றாக ஆறிய பின்பு அந்த நீரை வடிகட்டி முகம் கழுவ பயன்படுத்துங்கள். தண்ணீரை சூடாக்கி அதில் புதினா, துளசி, வேப்பிலை மூன்றையும் தலா ஒரு கைப்பிடி வீதம் போட்டு ஆறவைத்து வடிகட்டி முகம் கழுவினாலும் முகப்பரு வராது. இதை பிரிஜ்ஜில் வைத்து 3 நாட்கள் வரை பயன்படுத்தலாம். அந்த நீரில் 4 தேக்கரண்டி எடுத்து, அதில் 3 தேக்கரண்டி முல்தாணி மிட்டி கலந்து பரு இருக்கும் இடங்களில் பூசவேண்டும். பத்து நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவிவிட்டால் பரு மறையும்.
சந்தனமும் சரும அழகை மேம்படுத்தும். ஒரு லிட்டர் தண்ணீரை சூடாக்கி, அதில் பிங்க் கலர் ரோஜா இதழ்களை ஒரு கைப்பிடி அளவு போட்டு மூடிவைத்துவிடுங்கள். ஒரு மணி நேரம் கழித்து வடிகட்டி எடுத்து, அந்த நீரை பயன்படுத்தி சந்தன கட்டையை கல்லில் தேய்த்து உரசி, அரைக்கவேண்டும். அதை கறுமையும், வியர்க்குருவும் இருக்கும் இடங்களில் பூச வேண்டும். அரை மணி நேரத்தில் குளிர்ந்த நீரால் கழுவவேண்டும்.
இளநீரையும், தர்பூசணி சாறையும் சம அளவு எடுத்து கலந்து முகத்தில் தேயுங்கள். பத்து நிமிடங்கள் கழித்து மீண்டும் ஒருமுறை பூசுங் கள். படுத்துக்கொண்டு பஞ்சில் முக்கி இதை தேய்ப்பது நல்லது. இல்லாவிட்டால் வழிந்தோடி விடும். பஞ்சில் முக்கிய சாறை கண்களை மூடிக்கொண்டு, கண்களின் மேல் பகுதியிலும் வைக்கவேண்டும். கட்டி வராது. கண்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். முகமும் பொலிவு பெறும்.
சருமத்தில் ஏற்படும் கறுமையை போக்க `டீ`யும் பயன்படுகிறது. தேனீர் தயாரித்த பின்பு மீதம் இருக்கும் டிக்காஷனில் சிறிதளவு கடலைமாவு கலந்து பேஸ்ட் மாதிரி தயாரியுங்கள். அதனை பிரஷ்ஷால் கை, முகம், கழுத்து போன்ற பகுதி களில் பூசி 15 நிமிடம் வைத்திருங்கள். உலர்ந்து இறுக்கமான பின்பு கழுவிவிடுங்கள். பயன்படுத்திய `டீ பேக்கை' கழுவி கண்களின் மேல் 10 நிமிடங்கள் வைத்திருந்தால், உஷ்ணத் தால் ஏற்படும் கண் சோர்வு நீங்கும்.
வெள்ளரியில் சருமத்திற்கு பலத்தையும், பளபளப்பையும் தரும் வைட்டமின், சிலிக்கான் சத்துக்கள் இருக்கின்றன. அதனை வெட்டி, கண்களில் வைப்பதால் பெருமளவு பலன் கிடைப்பதில்லை. வெள்ளரிக்காயை துருவி, அரைத்து பூசிக்கொண்டால் அதிக பலன் கிடைக்கும்.
நுங்கையும் அழகுக்கு உபயோகிக்கலாம். நுங்கை மிக்சியில் அரைத்து அதில் பச்சை பயறு மாவு, அரிசி மாவு கலந்து பேஸ்ட் ஆக்கி உடலில் பூசி `ஸ்கிரப்' போல் பயன்படுத்த வேண்டும். இதனை குளிக்க செல்வதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்னால் பூசி, சோப்பு போடாமல் குளிக்கவேண்டும். இது சருமத்திற்கு அதிக பளபளப்பை தரும். கோடை உஷ்ண பாதிப்பையும் போக்கும்.
கஸ்தூரி மஞ்சள் கிழங்கு ஒன்றை வாங்கி, அதனை நான்கு துண்டுகளாக வெட்டி, 20 லிட்டர் தண்ணீரில், குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு போட்டு வையுங்கள். கிட்டத்தட்ட 30 கிராம் அளவுக்கு அந்த மஞ்சள் இருக்கவேண்டும். அதோடு அரை கப் காய்ச்சாத பாலை கொட்டுங்கள். தண்ணீர் மஞ்சள் நிறம் கலந்ததாக மாறிய பின்பு அதில் மாலை நேர குளியல் போட்டால் உடம்பில் உற்சாகம் பொங்கும். தோல் வியாதிகளும் வராது. இந்த குளியலின்போது தலையில் தண்ணீர் படக்கூடாது.
கோடையில் உடலை உஷ்ணம் அதிகம் தாக்கும். அதனால் உடல் சீதோஷ்ண சமன்பாடு சீரற்று இருமல், எரிச்சல், அரிப்பு போன்ற அவஸ்தைகள் ஏற்படும். உஷ்ணத்தை குறைக்க உச்சி முதல் பாதம் வரை உடல் முழுக்க நல்லெண்ணெய் தேய்க்கவேண்டும். அரை மணி முதல் ஒரு மணி நேரம் ஊறவேண்டும். பின்பு தலைக்கு சீயக்காய் பயன்படுத்தி குளிக்க வேண்டும். உடலுக்கு பச்சை பயறு மாவு பூசி, எண்ணெய் பிசுக்கை போக்கவேண்டும். வாரத்தில் இரண்டு நாட்கள் இவ்வாறு எண்ணெய் குளியல் செய்தால், உச்சி குளிரும். வெப்பம் விலகும்.''
கூந்தல்
"நமது கூந்தல் கறுப்பாக இருந்தாலும் அதனை பகுத்தாய்ந்து பார்த்தால் நீலம், ஊதா, பிரவுன், லைட் பிரவுன், ஆரஞ்சு, சிவப்பு போன்ற நிறக்கலப்பு தெரியும். கோடை வெயில் தொடர்ந்து கூந்தலில்பட்டால் முதலில் நீல நிறம் மறையும். அதனால் கூந்தல் செம்பட்டை யாகத் தெரியும். இவ்வாறு ஆகாமல் இருக்க, கோடைகாலத்தில் `சன் புரட்டெக்ஷன்' கொண்ட எண்ணெய், ஷாம்பு போன்றவைகளை பயன்படுத்தவேண்டும். அவைகளை வாங்கி பயன்படுத்த முடியாதவர்கள் கோடை காலத்தில் உச்சியில் எண்ணெய் வைத்துக் கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்.
உச்சி என்பதை நடு மண்டை என்று பலரும் நினைக்கிறார்கள். தலையின் முன் நெற்றி யில் முடி தொடங்கும் இடத்தில் குறுக்காக நான்கு விரல்களை வைக்கவேண்டும். அதில் நான்காம் விரல் வைக்கப்படும் இடமே உச்சியாகும். குழந்தையாக இருக்கும்போது மிக மென்மையாக துடிக்கும்பகுதி போல் தெரியுமே அதுதான் உச்சி. இந்த உச்சிக்கு ஈர்ப்பு சக்தி அதிகம். அதனால் அந்த இடத்தில் சிறிதளவு எண்ணெய் வைக்கும் பழக்கத்தை உருவாக்கிக்கொள்ளவேண்டும்.
மெராக்கோ நாட்டில் பாதாம் பருப்பு போன்ற ஆர்கன் பருப்பில் இருந்து எண்ணெய் தயாரிக்கிறார்கள். இது கூந்தல் வளர்ச்சிக்கும், அடர்த்திக்கும் ஏற்றது. குளிர்ச்சியும் தரும். இந்த ஆர்கன் ஆயிலை கோடையில் கூந்தலுக்கு பயன்படுத்தலாம்.
கோடைகாலத்தில் பெண்களை பெருவாரியாக பாதிக்கும் பிரச்சினை உடல் துர்நாற்றம். நமது உடலில் அப்போகிரைன், எக்கிரைன் என்று இரண்டு வித சுரப்பிகள் உள்ளன. முதல் வகை உடல் முழுக்க வியர்வையை உருவாக்கும். இரண்டாம் வகை, முடி இருக்கும் மறைப்பு பகுதிகளில் அதிகம் சுரக்கும். அங்கு சுரக்கும் வியர்வை, எண்ணெய் பசை, காற்றுபடாமை போன்றவைகளால் பாக்டீரியா படர்ந்து வளரும். அதனால் துர்நாற்றம் வீசத் தொடங்கும்.
அந்த தொந்தரவு இருப்பவர்கள் குளிக்கும்போது, கடைசியாக குளிக்கும் ஒரு பக்கெட் தண்ணீரில் ஒரு சிறிய வில்லை கற்பூரத்தை போடவேண்டும். சிறிது நேரத்தில் இது கரைந்துவிடும். அந்த தண்ணீரை பயன்படுத்தி குளித்தால் நாற்றம் நீங்கும்.
வெதுவெதுப்பான நீரில் ஒரு கைப்பிடி அளவு வேப்ப இலையை போட்டுவைத்து அரை மணிநேரம் ஆன பின்பு அந்த நீரில் குளித்தாலும் நாற்றம் குறையும். ரசாயனதன்மை இல்லாத டியோடரண்ட்டையும் பயன்படுத்தலாம். குளித்த பின்பு உடலில்படும் அளவுக்கு டியோடரண்டை ஸ்பிரே செய்யவேண்டும். அது நாற்றத்தை போக்கி, மணத்தை பரப்பும்.
கோடை காலத்தில் தரமான கூலிங் கிளாஸ் கண்ணாடி, தொப்பி, குடை போன்றவைகளை பெண்கள் வெட்கப்படாமல் எடுத்துச் சென்று பயன்படுத்தவேண்டும். கறுப்பு நிறம் புற ஊதா கதிர்களை ஈர்க்கும் தன்மைகொண்டது. அதனால் கோடையில் கறுப்பு நிற குடை களை பயன்படுத்தாமல், கலர் குடைகளை பயன்படுத்தவேண்டும்..''-என்கிறார், அழகுக் கலை நிபுணர் வசுந்தரா.

வாசனை திரவியம் (பாடி ஸ்பிரே) பயன்படுத்துபவரா நீங்கள்?

நீண்ட நேர வாசனைக்கு, வாசனைத் திரவியம் உடல் முழுவதும் படி ப்படியாக சேர்க்க வேண்டும். ஒரே விதமான வாசனைத் திர வியத்தை குளிக்கும் நீரிலும் அதன்பின் உடம்பிலும் பயன்படு த்தவும்.
உங்கள் உணவு கூட நீங்கள் பயன்படுத்தும் வாசனைப் பொ ருட்களின் வாசனையை மாற்ற க் கூடும். வாசனைப் பொரு ளைப் பயன்படுத்துபவர் கொழு ப்பு சத்துள்ள உணவு மற்றும் மசாலாக்கள் அதிகம் கலந்த உணவு உண்பவரானால் வாசனை அதிகமாக இருக்கும். உணவுப் பழக்கத் தில் திடீர் மாற்றத்தை ஏற்படுத்தினால், அது வாசனையின் தன்மை மாற்றிக் காட்டக் கூடும்.
தோலின் தன்மை கூட வாசனையை மாற்றிக் காட்டும். எண்ணெய்ப் பசையுள்ள சருமத்தில் வாசனை நீண்ட நேரம் நீடிக்கிறது. உலர்ந்த சருமம் நீண்ட நேரம் வாசனையைப் பாதுகாப்பதில்லை. ஆகவே அது போன்ற தோலின் தன்மை கொண் டவர்கள் அடிக்கடி வாசனைப் பொ ருட்களை பயன்டுத்த நேரிடலாம்.
மூன்றுக்கும் மேற்பட்ட வாசனைக ளை முகராதீர்கள். உங்கள் மூக்கு க்கு அதற்கு மேற்பட்ட வாசனைகளை வித்தியாசப்படுத்திக் காட்ட இயலாது. புதிய வாசனை பொருட்களை போட்டுப் பார்க்கும் போது அவற்றை நேரடியாக உங்கள் தோலில் போட்டு முகர்ந்து பார்க்க வும். பாட்டிலில் இருந்தபடியே முக ர்ந்து பார்த்தால் சரியான வாசனை யை கண்கொள்ள முடியாது. சில துளிகளை உங்கள் கையின் மேல் புறம் தோலில் தெளித்து முகர்ந்து பார்க்கவும். மேலும் சில வாசனை களை ‘டெஸ்ட்’ செய்ய விரும்பி னால் அடுத்த கையின் ‘மேல் தோ லில் தடவி முகரவும். மற்றவற் றை வேறு இடங்களில் தடவி முக ரலாம்.
10 நிமிடங்கள் ஆன பிறகே நீங்கள் எந்த வாசனையைப் பற்றியும் முடிவெடுக்கவும்.
வாசனைப் பொருட்களை நீண்ட காலம் சேமித்து வைப்பதால் அது கெட்டு விடும் அல்லது காற்றில் கரைந்து விடும்.
வாசனைப் பொருட்களை துணிக ள் மேல் நேரடியாக தெளிக்காதீர்க ள். அது கரைகளை ஏற்படுத்தலா ம்.
எந்த வாசனைப் பொருட்களையும் மற்றவர் பயன்படுத்துவதால் தேர்வு செய்யாதீர்கள். வாசனை என்ப து எல்லா மனிதருக்கும் ஒரே மாதிரியா னதாக இருப்பதில்லை. உங்களின் உட ல் வாகைப் பொருத்துதான் எந்த வாச னையின் தன்மையும் அமையும்.
உங்கள் உள்ளங்ககைகளில் வாசனைப் பொருட்களைத் தெளித்து நீண்ட நேரம் அதன் வாசத்தை அனுபவியுங்கள்.
ஒவ்வொருவருக்கும் ஒரு கையின் நீட் டம் வரை ஒரு வாசனை வட்டம் அமை ந்துள்ளது. அப்படியா! என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. இதை நினைவில் வைத்துக் கொண்டு நீங்க ள் வாசனைப் பொருட்களை பயன்படு த்த வேண்டும். இல்லையெனில் மற்ற வர் அதிக வாசனைப் பொறுக்கா மல் முகம் சுளிக்கலாம்.

உங்கள் தலைமுடியை நீங்களே வெட்டிக் கொள்ள . . .

தன் கையே தனக்குதவி என்பது பழமொழிதான் ஆனாலும் அது பய  னுள்ள பழமொழியே. விலைவாசி உயர்ந்து வரும் நிலையில் முடி திரு த்த நிலையங்களும், பியூட்டி பார்லர் களும் கட்டிங், அழகுக் கலை கட் டணங்களை உயர்த்திவிடுவார்கள் என்பது உறுதி. இதனல் ‘ஹேர் கட்’ போன்ற சாதாரண (!) செயல்களை ஏன் நாமே செய்து கொள்ளக்கூடாது?
ஹேர் கட் செய்வதும் ஒரு கலை. இதை கற்க முதல் முயற்சியாக நீங்களே உங்கள் முடியை கட் செய்ய ஆரம்பிக்கலாம். நாமே முடி வெட்டிக் கொள்வதால் பணத்தை மிச்சம் செய்யலாம். நன்றாக செய்ய கற்றுக் கொண்டால் ஒரு பார்லர் ஆரம்பித்து பணமும் சம்பா திக்கலாம்!
தேவைப்படும் பொருட்கள் :-
கண்ணாடிகள் – 2
கத்தரிக்கோல் – 1
சீப்பு – 1
ஆரம்பிக்கலாமா?
முதன்முறையாக முடி வெட்டும் போது, தேவையான அளவை விட ஒன்று அல்ல து இரண்டு அங்குலம் அதிகமாக வைத்து வெட்டவும். தவறு செய்தா லும் திருத்து வதற்கு தேவையான அளவு முடி இருந்தால் பிரச்சனை யே இல்லை.
எந்த அளவு வெட்டுவது?
மொட்டை அடிக்கும் எண்ணம் இல்லை என்றால் தலையில் குறைந்தது 3 அங்கு லம் முடியாவது இருக்க வேண்டும்.
முதல்முறையாக வெட்டும்போது பார்ல ர்களில் செய்வது போல் கூந்தலை ஈரமா க்க வேண்டாம்.
சிக்குகளை நீக்கி விட்டு, காதுகளுக்கு மேலிருந்து ஆரம்பிக்கவும்.
இரண்டு விரல்களுக்கு இடையே வெட்ட ப்போகும் முடியை இழுத்து பிடித்துக் கொ ள்ளவும்.
விரல்களுக்கு அடுத்தப் பக்கத்தில் இருக்கும் முடியின் அளவு தான் வெட்ட வேண்டிய அளவு.
கத்தரிக்கோலால் விரல்களை ஒட்டியதுபோல் முடியை வெட்டவும்.
இதே போல் இந்த காது அருகில் தொடங்கியதை அடுத்த காது வரை சிறிது சிறிதாக முடியை எடுத்து ஒரே அளவில் வெட்டவும்.
ஒவ்வொரு முறை வெட்டிய பிற கும் கண்ணாடியில் பார்க்க மறக்க வேண்டாம்.
துல்லியமாக அளந்து தான் வெட்ட வேண்டும் என்று இல்லை. சீவிய ப்பிறகு கூந்தல் சீராக இருக்க வேண் டும் என்பது தான் முக்கியம்.
`ஸ்டெப் கட்’, `மஷ்ரூம் கட்’ என்று முதல் முறையே வெட்ட முயற் சித்தால் அதன் விளைவு விபரீதமாகலா ம்.
தைரியசாலிகள் முயற்சித்து பார்த்து ஒரு புது ஸ்டைலை உருவாக் கலாம்!
ஆல் தி பெஸ்ட்!
குறிப்பு:
முதல் முயற்சிக்குப் பிறகு உங்கள் கண வர் அல்லது குழந்தைகள் சற்றே மிரள லாம் என்றாலும் அடுத்தடுத்த முயற்சி களில் அசத்தி விட லாம்.

அழகான குளியலறை ரகசியம்!

ஒரு காலத்தில் வீட்டின் பின்புறத்தில் தான் குளியல றை இருந்தது இப்பொழுது படுக்கையறையோ டு சேர்ந்த “அட்டாச்ட் பாத்ரூம்” என்றாகிவிட்டது. குளியலறையு ம் ஒரு அறை தான்! அதையும் அலங்கரிக்க வேண்டும் என்ற மனப்பான்மை தற்பொழுது அனைவரிடையே உள்ளது என் பதற்குச் சான்று. 
குளியலறை அமைப்பு
வீட்டில் வரவேற்பறை, படுக்கையறை, சமையலறை போன்று குளி யலறையின் அமைப்பும் முக்கியமான ஒன்று. ஒவ் வொரு குளியலறையிலு ம் பெரியவர், சிறியவர் ஆகியோர்க்கு ஏற்றமு றையில் அமைப்பது அவ சியமாகிறது. அது மட்டுமி ன்றி வீட்டில் வெவ்வேறு விதமான ரசனை உள்ளவ ர்களை மனதில் கொண்டு குளியலறை அமைப்பது அவசியமாகும். இதில் இடம், பரப்பு, வசதிகள் மற்றும் அழகுபடுத்துதல் ஆகி ய அனை த்தும் இடம் பெறுகின்றன.
குளியலறையில் பாத்டப் திரை, டைல்ஸ், குழாய், ஷவர், கேபினட், கண்ணாடி போன்றவற்றின் தேவை அவசி யமாகிறது. அது மட்டுமின்றி குளியலறை நிறமும் முக்கியமான ஒன்று. கவர்ச்சியான நிறத்தின் மூலம் தான் குளியலறை அழகா கக் காட்சியளிக்க முடியும்.
முன்பே இருக்கும் குளியலறைகளை இடித் து உடைத்து புதிதாகக் கட்டுவதை விட எளி மையான முறையில் சில மாற்றங்களை மட்டும் செய்வதன்மூலம் இவை மேலும் அழகாகக்காட்சியளிக்கக்கூடும்.
திரை, டவல்கள், அலங்காரப் பொருட்கள் ஆகியவற்றை மாற்றுவ தன் மூலம் குளியலறையின் தோற்றத்தை மாற்றலாம். முழுவதும் இருட்டடிக்கிற குளியலறையில் பூந்தொட்டி களில் செடிகளை வைப் பதன் மூலமும், மங்கலான நிறம் கொண்ட குளியலறையில் பளிச்சிடும் நிறத் தை பூசுவதன் மூலமும் குளியல றையை அழகுபடுத்த லாம்.
இதே போன்று குளியலறை மிதி யடி, சுவரில் மாற்றம், புகைப்படம், ஓவியம் ஆகியவற்றைக் கொண் டோ தண்ணீர் ஒட்டாத வண்ண வால் பேப்பர் ஒட்டியோ மாற்றத் தைக் கொண்டு வரலாம்.
குளியலறையில் இடத்தை எப்படி பயன்படுத்துவது ?
சில மாற்றங்கள் செய்தால் கூடுதலான இடம் கிடைக்கும். திறப்பாக உள்ள ஷெல்ஃப்களை நல்ல வர் ணம் கொண்டு பூசுவது நல்லது சுவற்றில் கண்ணாடி பொருத் துவதால் அதிக இடம் இருப்பது போல் தோ ன்றும்.
குளியலறை பற்றி சில அவசியக் குறிப்புகள்!
குளியலறைக்காக அதிகம் செல வழித்து அழகுபடுத்த வேண்டும் என்று அவசியமில்லை. சுவரில் கண்ணாடி ஷெல்ஃப் வைத்து அதில் அழகான பூந்தொட்டிகள் வைக் கலாம். சுவரில் இயற்கைக் காட்சி ஓவியங்களை வைக்கலாம். குளியலறையின் நீலளமான சன்னல் களில் திரைகளைத் தொங்க விடவும்.
ஒரு அழகான குளியலறையி ல் நாள் துவங்கினால் நாள் முழுவதும் மனதில் புத்துணர் ச்சி இருக்கும் என்பதில் சந்தே கமேயில்லை.

Sunday, 15 April 2012

பன்றி காய்ச்சல்

Posted On April 15,2012,By Muthukumar
ஸ்வைன் ப்ளூ: ஸ்ப்ரெடிங் இன்புளூயன்சா: ""ஹீமாக்ளூடினின்"" & ""நியூராமினிடேஸ்"" என்ற போலிஷ் வார்த்தைகள் தாம் இந்த இன்ப்ளூயன்சாவை குறிப்பது. பன்றி காய்ச்சல் என்று அழைக்கப்படும் இன்புளூயன்சா எச் 1 என் 1...தனது ஆ.என்.ஏ. அமைப்பை மாற்றிகொள்ளும் வைரஸ்...ஏ,பி,சி என 3 வகைப்படும்.

1. ஏ டைப்...லேசான காய்ச்சல் தலைவலி, வாந்தி, வயிற்று போக்கு, சளி, இருமல்... சாதாரண காய்ச்சல் தான். தகுந்த மருத்துவ ஆலோசனையுடன், பாரசிட்டமால், லிவோபிளாக்சாசின் போன்ற மருந்துகள் போதும். தகுந்த ஓய்வு முக்கியம்.


2. பி டைப்....மேலே சொன்ன அறிகுறிகள் தவிர, அதிக காய்ச்சல், தொண்டை வலி...டாமிப்ளூ சரியான விகிதத்தில், மருத்துவ ஆலோசனையுடன், தொடர்ந்து கொடுக்க வேண்டும். ஓய்வு அவசியம்.

3. சி டைப்....அனைத்து அறிகுறிகள் தவிர...மூச்சு திணறல், சளியுடன் ரத்தம், லாஸ் ஆப் அபிடைட். உடனே பரிசோதனை, டாமிப்ளூ மற்றும் தகுந்த மருத்துவ ஆலோசனை, ஓய்வு அவசியம்.

வேறு சில மருந்துகள் தகவலுக்காக மட்டும்: ரிலின்சா...10 வயதுக்கு மேல் மட்டும். ரெட்ரோவைரல்ஸ்...ஜனாமிவிர் & ஆசால்டாமிவிர். வாக்சிப்ளூ ஊசிகள்..18 முதல் 60 வயது வரை. நாசஓவாக்...மூக்கு வழியாக...3 வயதுக்கு மேல் மட்டும். அனைத்து மருந்துகளும் தகுந்த மருத்துவ ஆலோசனைப்படியே வழங்கப்பட வேண்டும்.

டாமிப்ளூ மாத்திரைகளையும், தேவையில்லாமல் பயன்படுத்துவது ஆபத்து என்று உலக சுகாதார மையம் எச்சரித்து உள்ளது.


நோய் பரவும் முறைகள்,அறிகுறிகள்,தடுப்பு நடவடிக்கைகள் பின்வருமாறு. 

அ. தும்மல்,  இருமல்....காற்றின் மூலம் இன்ப்ளூயன்சா பரவுகிறது.!

ஆ. மூக்கு சளியை கண்ட இடத்தில் சிந்துவது.! 



பன்றி காய்ச்சல் அறிகுறிகள்: 

நோய் தாக்கியவர்களுக்கு சளி, வறட்டு இருமல், கடுமையான காய்ச்சல், உடல் வலி, மூக்கு, கண்...பாகங்களில் இருந்து தண்ணி கொட்டும்.! 

தவிர்ப்பது:

அ. பாதிக்கப்பட்டவர்களை தனி அறையில் சிகிச்சை, மருத்துவ மனைகளில் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். 

ஆ. பரவாமல் தடுக்க முகமூடி அணியலாம். வெளியில் இருந்து வீட்டுக்கு வந்த உடன் கை, கால்களை சுத்தமாக கழுவுதல்.

இ. நோயாளிகளின் ஆடைகளை தனியாக டெட்டால் போன்ற கிருமி நாசினி கலந்த கொதிக்கும் நீரில் துவைத்தல். 

ஈ. காய்ச்சல், இருமல், தலைவலி இன்னபிற குறியீடுகள் தென்பட்டால் உடனே தகுந்த மருத்துவ சிகிச்சை அவசியம்.

உ.  தற்போதைய வெப்ப சூழ்நிலை இந்தக் காய்ச்சலை பரப்பும் கிருமிகளுக்கு ஏற்றதல்ல.  எனவே தேவையில்லாமல் யாரும் பயப்பட வேண்டாம்.

இந்த பதிவை படித்து உங்களது கருத்துக்களை ‘Commentary Box’ இல் பதிவு செய்யுங்கள். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களும் படிக்க link அனுப்பி பகிர்ந்து கொள்ளுங்கள். மற்ற திரட்டிகளில் இணைத்து விடும்படி கேட்டுக் கொள்கிறேன்.