Posted On April 17,2012,By Muthukumar
தோல் நோய்க்கு எளிய பற்று -துவரக லேபம்-Thuvarak Lepam
(ref-அஷ்டாங்க ஹ்ருதயம் - உத்தரஸ்தானம்)
தேவையானமருந்தும் செய்முறையும்:
ஓடு
நீக்கிய நீரடிமுத்துப் பருப்பை (துவரக பீஜ)சிறிது தேங்காய் எண்ணெய்யுடன்
(நாரிகேள தைல) கலந்து நன்கு அறைத்துக் களிம்பு போல்ஆனவுடன்
பத்திரப்படுத்தவும். இது நடைமுறையில் உள்ள முறை. ஆனால் மூல
நூலில்நீரடிமுத்து பருப்பை மட்டும் அப்படியே அரைத்துக் களிம்பாக்கி
பயன்படுத்தும்படிகூறப்பட்டுள் ளது.
பயன்படுத்தும்முறை:
மேற்பூச்சாக (அப்யங்க) வெளிஉபயோகத்திற்கு மட்டும்.
தீரும் நோய்கள்:
அரிப்பு (கண்டூ), சொறி (கட்ச்சு), சிரங்கு (பாமா), தோல் வெடிப்பு (விபாடிகா), சிலர் இதனை கார்போக அரிசியை (பாகுசீ) அரைத்தவிழுதுடன் கலந்து வெண்குட்டத்தில் (ஸ்வித்ர) பூசுவதுண்டு.
தெரிந்து கொள்ள வேண்டியவை
- ஒரே மூலிகை விதை -இந்த மருந்தில் எல்லா விதமானதோல் நோய்க்கும் சிறந்த தீர்வாக விளங்குகிறது
- அரிப்பு ,கரப்பான் -அலர்ஜி தோல் நோய்க்கும் இந்த மருந்தை பயன்படுத்தலாம்
- வெண் புள்ளிகளுக்கு -கார்போகி அரிசி அல்லது அவல் குஜாதி லேப சூரணத்துடன் பற்றிட நல்ல பலன் தரும்
No comments:
Post a Comment