Posted On April 15,2012,By Muthukumar
ஸ்வைன் ப்ளூ:
ஸ்ப்ரெடிங் இன்புளூயன்சா: ""ஹீமாக்ளூடினின்"" & ""நியூராமினிடேஸ்""
என்ற போலிஷ் வார்த்தைகள் தாம் இந்த இன்ப்ளூயன்சாவை குறிப்பது. பன்றி காய்ச்சல் என்று அழைக்கப்படும் இன்புளூயன்சா எச் 1 என் 1...தனது ஆ.என்.ஏ. அமைப்பை மாற்றிகொள்ளும் வைரஸ்...ஏ,பி,சி என 3 வகைப்படும்.
1. ஏ டைப்...லேசான காய்ச்சல் தலைவலி, வாந்தி, வயிற்று போக்கு, சளி, இருமல்... சாதாரண காய்ச்சல் தான். தகுந்த மருத்துவ ஆலோசனையுடன், பாரசிட்டமால், லிவோபிளாக்சாசின் போன்ற மருந்துகள் போதும். தகுந்த ஓய்வு முக்கியம்.
2. பி டைப்....மேலே சொன்ன அறிகுறிகள் தவிர, அதிக காய்ச்சல், தொண்டை வலி...டாமிப்ளூ சரியான விகிதத்தில், மருத்துவ ஆலோசனையுடன், தொடர்ந்து கொடுக்க வேண்டும். ஓய்வு அவசியம்.
3. சி டைப்....அனைத்து அறிகுறிகள் தவிர...மூச்சு திணறல், சளியுடன் ரத்தம், லாஸ் ஆப் அபிடைட். உடனே பரிசோதனை, டாமிப்ளூ மற்றும் தகுந்த மருத்துவ ஆலோசனை, ஓய்வு அவசியம்.
வேறு
சில மருந்துகள் தகவலுக்காக மட்டும்: ரிலின்சா...10 வயதுக்கு மேல் மட்டும்.
ரெட்ரோவைரல்ஸ்...ஜனாமிவிர் & ஆசால்டாமிவிர். வாக்சிப்ளூ ஊசிகள்..18
முதல் 60 வயது வரை. நாசஓவாக்...மூக்கு வழியாக...3 வயதுக்கு மேல் மட்டும். அனைத்து மருந்துகளும் தகுந்த மருத்துவ ஆலோசனைப்படியே வழங்கப்பட வேண்டும்.
டாமிப்ளூ மாத்திரைகளையும், தேவையில்லாமல் பயன்படுத்துவது ஆபத்து என்று உலக சுகாதார மையம் எச்சரித்து உள்ளது.
நோய் பரவும் முறைகள்,அறிகுறிகள்,தடுப்பு நடவடிக்கைகள் பின்வருமாறு.
அ. தும்மல், இருமல்....காற்றின் மூலம் இன்ப்ளூயன்சா பரவுகிறது.!
ஆ. மூக்கு சளியை கண்ட இடத்தில் சிந்துவது.!
பன்றி காய்ச்சல் அறிகுறிகள்:
நோய் தாக்கியவர்களுக்கு சளி, வறட்டு இருமல், கடுமையான காய்ச்சல், உடல் வலி, மூக்கு, கண்...பாகங்களில் இருந்து தண்ணி கொட்டும்.!
தவிர்ப்பது:
அ. பாதிக்கப்பட்டவர்களை தனி அறையில் சிகிச்சை, மருத்துவ மனைகளில் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
ஆ. பரவாமல் தடுக்க முகமூடி அணியலாம். வெளியில் இருந்து வீட்டுக்கு வந்த உடன் கை, கால்களை சுத்தமாக கழுவுதல்.
இ. நோயாளிகளின் ஆடைகளை தனியாக டெட்டால் போன்ற கிருமி நாசினி கலந்த கொதிக்கும் நீரில் துவைத்தல்.
ஈ. காய்ச்சல், இருமல், தலைவலி இன்னபிற குறியீடுகள் தென்பட்டால் உடனே தகுந்த மருத்துவ சிகிச்சை அவசியம்.
உ. தற்போதைய வெப்ப சூழ்நிலை இந்தக் காய்ச்சலை பரப்பும் கிருமிகளுக்கு ஏற்றதல்ல. எனவே தேவையில்லாமல் யாரும் பயப்பட வேண்டாம்.
இந்த பதிவை படித்து உங்களது கருத்துக்களை ‘Commentary Box’ இல் பதிவு செய்யுங்கள். இந்த
கட்டுரையை உங்கள் நண்பர்களும் படிக்க link அனுப்பி பகிர்ந்து கொள்ளுங்கள்.
மற்ற திரட்டிகளில் இணைத்து விடும்படி கேட்டுக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment