Posted on April 17, 2012 by muthukumar
நீண்ட நேர வாசனைக்கு, வாசனைத் திரவியம் உடல் முழுவதும் படி ப்படியாக சேர்க்க வேண்டும். ஒரே விதமான வாசனைத் திர வியத்தை குளிக்கும் நீரிலும் அதன்பின் உடம்பிலும் பயன்படு த்தவும்.
உங்கள்
உணவு கூட நீங்கள் பயன்படுத்தும் வாசனைப் பொ ருட்களின் வாசனையை மாற்ற க்
கூடும். வாசனைப் பொரு ளைப் பயன்படுத்துபவர் கொழு ப்பு சத்துள்ள உணவு
மற்றும் மசாலாக்கள் அதிகம் கலந்த உணவு உண்பவரானால் வாசனை அதிகமாக
இருக்கும். உணவுப் பழக்கத் தில் திடீர் மாற்றத்தை ஏற்படுத்தினால், அது வாசனையின் தன்மை மாற்றிக் காட்டக் கூடும்.
தோலின்
தன்மை கூட வாசனையை மாற்றிக் காட்டும். எண்ணெய்ப் பசையுள்ள சருமத்தில்
வாசனை நீண்ட நேரம் நீடிக்கிறது. உலர்ந்த சருமம் நீண்ட நேரம் வாசனையைப்
பாதுகாப்பதில்லை. ஆகவே அது போன்ற தோலின் தன்மை கொண் டவர்கள் அடிக்கடி
வாசனைப் பொ ருட்களை பயன்டுத்த நேரிடலாம்.
மூன்றுக்கும்
மேற்பட்ட வாசனைக ளை முகராதீர்கள். உங்கள் மூக்கு க்கு அதற்கு மேற்பட்ட
வாசனைகளை வித்தியாசப்படுத்திக் காட்ட இயலாது. புதிய வாசனை பொருட்களை
போட்டுப் பார்க்கும் போது அவற்றை நேரடியாக உங்கள் தோலில் போட்டு முகர்ந்து
பார்க்க வும்.
பாட்டிலில் இருந்தபடியே முக ர்ந்து பார்த்தால் சரியான வாசனை யை கண்கொள்ள
முடியாது. சில துளிகளை உங்கள் கையின் மேல் புறம் தோலில் தெளித்து முகர்ந்து
பார்க்கவும். மேலும் சில வாசனை களை ‘டெஸ்ட்’ செய்ய விரும்பி னால் அடுத்த
கையின் ‘மேல் தோ லில் தடவி முகரவும். மற்றவற் றை வேறு இடங்களில் தடவி முக
ரலாம்.
10 நிமிடங்கள் ஆன பிறகே நீங்கள் எந்த வாசனையைப் பற்றியும் முடிவெடுக்கவும்.
வாசனைப் பொருட்களை நீண்ட காலம் சேமித்து வைப்பதால் அது கெட்டு விடும் அல்லது காற்றில் கரைந்து விடும்.
வாசனைப் பொருட்களை துணிக ள் மேல் நேரடியாக தெளிக்காதீர்க ள். அது கரைகளை ஏற்படுத்தலா ம்.
எந்த வாசனைப் பொருட்களையும் மற்றவர் பயன்படுத்துவதால் தேர்வு செய்யாதீர்கள். வாசனை என்ப து எல்லா மனிதருக்கும் ஒரே மாதிரியா னதாக இருப்பதில்லை. உங்களின் உட ல் வாகைப் பொருத்துதான் எந்த வாச னையின் தன்மையும் அமையும்.
உங்கள் உள்ளங்ககைகளில் வாசனைப் பொருட்களைத் தெளித்து நீண்ட நேரம் அதன் வாசத்தை அனுபவியுங்கள்.
ஒவ்வொருவருக்கும்
ஒரு கையின் நீட் டம் வரை ஒரு வாசனை வட்டம் அமை ந்துள்ளது. அப்படியா! என்று
நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. இதை நினைவில் வைத்துக் கொண்டு நீங்க ள்
வாசனைப் பொருட்களை பயன்படு த்த வேண்டும். இல்லையெனில் மற்ற வர் அதிக
வாசனைப் பொறுக்கா மல் முகம் சுளிக்கலாம்.
No comments:
Post a Comment