Showing posts with label மருதாணி. Show all posts
Showing posts with label மருதாணி. Show all posts

Sunday, 10 July 2016

மகத்தான மருதாணி

Posted By Muthukumar ,On July 10,2016

ருதாணி வைத்துக்கொள்வது நம் பாரம்பரியப் பழக்கம். இன்று, செயற்கை மருதாணி வந்துவிட்டாலும், இன்னமும் கிராமங்களில் மருதாணிக்கே தனி மவுசு. மருதாணியின் இலை, பூ, பட்டை அனைத்தும் பலன்கள் தரக்கூடியவை. `அழவனம்’, `ஐவனம்’, `சரணம்’ என வெவ்வேறு பெயர்கள் இதற்கு உண்டு.
எலுமிச்சைச் சாறு அல்லது புளித்த காடி நீர்விட்டு, மருதாணி அரைத்துப் பூசினால், மூட்டுவலி, கை கால் வலி, குடைச்சல், உடல் எரிச்சல் சரியாகும்.
உள்ளங்கையில் எரிச்சல் ஏற்பட்டால், இரவு படுக்கும்போது மருதாணி இலையை எடுத்து அரைத்து, தேய்த்துவிட்டுப் படுத்தால், காலையில் எரிச்சல் நீங்கிவிடும்.
நகப்புண், சுளுக்கு, மற்ற புண்களின் மீது இதன் இலையைக் கசக்கிவைத்துக் கட்டுப்போட்டால், புண்கள் குணமாகும்.
மருதாணி இலைச்சாறு அரைக் கரண்டி எடுத்து, 90 மி.லி பாலில் கலந்து குடித்தால், கை, கால், உடல்வலி நீங்கும். அதே அளவு சாற்றைப் பாலுக்குப் பதிலாகத் தண்ணீரில், நாட்டுச்சர்க்கரை சேர்த்துக் கலந்து குடித்தால், தாதுஉற்பத்தி பெருகும்.
ஆறு கிராம் மருதாணி இலையை எடுத்து, ஒரு பூண்டு, ஐந்து மிளகு சேர்த்து அரைத்து, காலை தோறும் ஐந்து நாட்கள்  உப்பு இல்லா பத்தியத்துடன் சாப்பிட்டுவர, மேகத்தழும்புகள் நீங்கும்.
மருதாணி இலையை அரைத்து, கண்ணை மூடி, கண்களுக்கு மேல் துணிவைத்துக் கட்ட, மூன்று நாட்களில் கண் எரிச்சல், சூடு நீங்கிக் குளிர்ச்சி அடையும்.
கடைகளில் நகச்சாயங்கள் வாங்கிப் பயன்படுத்துவதால், வேதிப் பொருட்களால் நகம் பாதிக்கப்படக்கூடும். மருதாணி இலையை அரைத்து, நகங்கள் மீது பூசி, காயவைத்து அகற்றினால், நகத்துக்கு அழகான நிறம் கிடைப்பதோடு, நகத்தில் இருக்கும் அழுக்குகள், பூஞ்சைத் தொற்றுகள் அகன்றுவிடும்.
கூந்தல் வளர்வதற்கான சித்த மருத்துவத் தைலங்களில் மருதாணி இலைச்சாறு பயன்படுத்தப்படுகிறது.

Thursday, 5 April 2012

உடல் சூடு மற்றும் நரை முடிக்கு மருதாணி

Posted On April 05,2012,By Muthukumar




 கோடை வெயில் ஆரம்பித்து விட்டது , உடல் சூடும் மண்டை சூடு எல்லாமே அதிகமாகும், கொப்புளங்கள்,கட்டிகள் ,தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள். கண் எரிச்சல்.போன்றவை வர வாய்ப்பிருக்கு. உடல் சூடும் மண்டை சூடு எல்லாமே அதிகமாகும். அதற்கு தலைக்கு மெகந்தி போட்டுகொள்ளலாம். அல்லது தலைக்கு ஆயில் மசாஜ் செய்து குளிக்கலாம்.

வெயிலினால் ஏற்படும் சூட்டை தணிக்க ஆண்களும், பெண்களும் மருதாணி தலைக்கு தேய்த்து குளிப்பது நல்லது.
மெகந்தி தேய்த்து குளிப்பதனால் நல்ல குளிர்ச்சி ஏற்பட்டு உடல் சூட்டை தணித்து குளு குளுன்னு வைக்கும். சிலருக்கு தலைக்கு மெகந்தி போட்டால் ஒத்துக்காது.தலை வலி ஜலதோஷம் பிடித்து கொள்ளும். அதற்கு கிராம்பை சேர்த்து கொள்ளலாம்.

சிலர்  கொஞ்சம் வெள்ளை முடி தோன்றினாலே சில பேர் பத்து முறை கண்ணடியை பார்ப்பார்கள். அய்யோ நாம் கிழவியா(கிழவனா) விட்டோமே என்று தோனும்.யாரும் கிழவி கிடையாது மனதள‌வில் எல்லோரும் என்றும்ம் பதினாறு தான்.
 சிலருக்கு இளநரையும் வருவதுண்டு. அதற்கு மருதாணி தலைக்கு போட்டு கொள்வது நல்லது.






 மெகந்தி கலவை : மருதாணி பொடி, தயிர், திக்கான டீ டிகாஷன்,
(கருவேப்பிலை, வேப்பிலை சிறிது கரிசலாங்கண்ணி கீரை,பாசி பயிறு) இதேல்லாம் காயவைத்து திரித்து வைத்து கொள்ளுங்கள்.
இதை மேலே குறிப்பிட்டுள்ள மெகந்தி கலவையில் கொஞ்சம் சேர்த்து கொள்ளுங்கள்.இப்போது அனைத்தையும் நல்ல இட்லி மாவு பதத்திற்கு கரைத்து ஒரு இரும்பு வானலியில் வைத்து இரவு முழுவதும் ஊறவிட்டு, காலையில் தலையில் தேய்த்து 20 நிமிடம் (அ) 30 நிமிடம் ஊறவைத்து குளிக்கவும்.
இந்த கலவையை ஆறு மணி நேரம் தலையில் வைத்து ஊறவைத்து தேய்த்தால் நன்கு பலன் கிடைக்கும் என்று கேள்வி பட்டேன்.
உடம்புக்கு ஒத்து கொள்ளாதவர்கள், 1 மணி நேரம் முன் தலையில் தடவி ஊறவைத்து குளிக்கவும்.

பீட்ரூட் சாறு எடுத்தும் தலையில் தேய்த்து ஊற வைத்து குளிக்கலாம்.

நல்லெண்ணை அடிக்கடி தேய்த்து எண்ணை குளியல் போட்டாலும் நரை முடி வருவதை தவிர்க்கலாம்.
உடல் சூட்டையும் தணிக்கும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் ந‌ல்லெண்ணை தேய்த்து மசாஜ் செய்து குளித்தால் கூட‌ இள‌ந‌ரை வ‌ர‌ம‌ல் இருக்கும்.

 செடிக்கு எப்படி தண்ணீர் ஊற்றி வளர்க்கிறோமோ அப்படி தான் முடிக்கும். நல்ல நிறைய எண்ணை தலையில் தேய்த்து மசாஜ் செய்து வாரம் இருமுறை குளித்தால் முடியும் வளரும். நல்ல ஷைனிங்கும் கிடைக்கும்.முடி செம்பட்டையாகமல் இருக்கும்
கருவேப்பிலை உணவில் அதிக அளவில் சேர்த்து வரவும்.

கருவேப்பிலை பொடி , அரைத்து விட்ட கருவேப்பிலை ரச்ம் இது போல் உணவு அதிக அளவில் சேர்த்து கொண்டால் தலை முடி கருகருவென வளரும் நரை முடியும் வருவதையும் தவிர்க்கலாம்.