Saturday, 6 September 2014

இயற்கையான முறையில் பெண்கள் கருத்தரிக்க

 

இயற்கையான முறையில் பெண்கள் கருத்தரிக்க சில எளியundefinedவழிமுறைகள் 
இரண்டு ஆண்டுகள் சச்தோஷமா க இருந்துவிட்டுபின் குழந்தை பெ ற்றுக் கொள்ளலாம் என்று இப் போதுள்ள இளைய தலைமுறை யினர் விரும்புகிறார்கள். ஆனால் குழந்தைப்பேறு என்பது நாம் எ ண்ணிய வண்ணம் நடக்காது.
உடல், மனம், சூழல், ஆரோக்கியம், தாது, கரு, கருமுட்டை, எனப் பல்வேறு காரணிகள் கருத்தரிப்பதற்குத் துணை செய்ய
வேண்டும். மேலும் தற்போதுள்ள ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறையினால், பலர் கருத்தரிக்க முடி யாமல் இருக்கின்றனர்.
ஏனெனில் இதனால் உடலுக்கு வேண் டிய சத்துக்கள், வலிமை குறைந்து, மன அழுத்தம் அதிகரித்து, நல்ல இல்ல ற வாழ்வில் ஈடுபட முடியாதவாறு இரு க்கின்றன. எனவே, குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பினால், கீழே கூறப்பட் டுள்ள ஆலோசனைகளை பின்பற்றி வ ந்தால், விரைவில் கர்ப்பம் அடையலா ம்.
ஆண்களின் விந்தணுக்கள், குளிர்ச்சி யான சூழலில் நன்கு உற்பத்தியாகின்றன. மடியிலேயே கணிப் பொறியை வைத்துக் கொண்டு பணிபுரியும் ஆண்களுக்கு, விந்து க்களின் உற்பத்தி மற்றும் கரு த்தரிக்கும் திறன் குறைவாக இருக்கும். மேலும் ஆண்கள் நீண்ட நேரம், வெந்நீரில் குளிப் பதைத் தவிர்க்க வேண்டும்.
ஏனெனில் வெந்நீரில் குளித்தவ ர்கள், குளிர்ந்த நீரில் குளிக்கத் தொடங்கியதால், ஆண்களின் விந்தணு உற்பத்தி ஐந்து மட ங்காகப் பெருகியதாக ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், உடலை இறுக்கிப் பிடிக்கும், கால் சட்டைகளைத் தவிர் த்து, தொளதொளவென்றிருக்கும், பாக்ஸர் கால் சட்டைகளைஅணிய வேண்டும்.
சூரிய வெளிச்சமானது, வை ட்டமின் டி-யை உற்பத்தி செ ய்யவும், கருத்தரிக்கும் திற னை அதிகரிக்கவும் உதவுகி றது. இது ஆண், பெண் என இருபாலாருக்குமேதான். மே லும் பெண்களுக்கான பாலி ன ஹார்மோன்களான மாத விலக்கை நெறிப்படுத்தும், புரோஜெஸ்டிரோன் மற்றும் கருவுறும் திறனைக் கட்டுப்படுத்தும் ஈஸ்டிரோஜென் ஆகியவற்றின் அளவை அதிகரிக்க வைட்டமின் டி உதவுகிறது என்று ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.
குறிப்பாக வைட்டமின் டி-யானது, ஆண்களின் விந்தணுவின் எண்ணி க்கையை அதிகரிக்கிறது. பதட்ட மும், மன அழுத்தமும், பெண்களின் கருவுறும் தன்மையை வெகுவாகப் பாதிப்பதோடு, ஆண்களின் உயிர ணு உற்பத்தி வீதத்தையும் மட்டுப்படுத்துகின்றன. மேலும், பாலி யல் இச்சையையும் குறைக்கின்றன.
முழுக் கொழுப்புள்ள பாலை, பெண்கள் தினமும் பருகி வந்தால், மலட்டுத்தன்மை யானது 25% க்கு மேல் குறை ந்ததாக ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலு ம் பெண்களின் கருமுட்டை ப்பைகள் நன்கு வேலை செ ய்ய, இந்த பால் கொழுப்புக்கள் உதவுகின்றன.
கருவுறுதலுக்குத் தேவையான ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி12 மற்றும் செலினியம் ஆகியவை அடங்கிய மல்டி வைட்டமின் மருந்து மாத்தி ரைகளை தினமும் உட்கொ ள்வதால், கருவுறும் திறன் இ ரண்டு மடங்கு அதிகமாகின் றன என்று ஆய்வுகள் தெரி விக்கின்றன. புகைப்பிடிக்கு ம் பெண்கள் புகைப்பிடிக்கா த பெண்களை விட 30% குறைவாகவே கருத்தரிக்கும் விகிதத்தைப் பெறுகின்றனர்.
ஏனெனில் புகைப்பது, கருப் பையில் சிசு தங்குவதைத் தடுக்கிறது. குழந்தை பெற்று க் கொள்ள விரும்பினால், அருந்தும் மதுவின் அளவை க் குறைத்துக் கொள்வது ந ல்லது. அதிக அளவு மது அ ருந்துவது கருமுட்டை உற்ப த்தியையும், விந்தணு உற்ப த்தியையும் வெகுவாகப் பாதிக்கின்றது எனக் கண்ட றியப்பட்டுள்ளது.
தற்போது நிறைய மென்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில், மாதவிலக்கு நா ட்காட்டி, கருத்தரிக்க வழி காட்டி, (Period Diary, Fertility Friend, Menstrual Calendar) போன்றவை உடல் வெப்பம், பருவ சுழற்சி ஆகியவற்றைக் கொண்டு கணக்கிட்டு, எந்தத் தேதி யில், தாம்பத்திய உறவு வை த்துக் கொண்டால், கருத்தரி க்கும் வாய்ப்பு அதிகம் என்று தெரிவிக்கும். ஆகவே இதுபோன்ற மென்பொருட்களைப் பய ன்படுத்தி, உறவில் ஈடுபடுவது நல்லது.

Monday, 1 September 2014

பருவ பெண்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள்


பருவ பெண்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் – ஒரு மருத்துவ ஆய்வு
ஓர் ஆணின் உடலை விட பெண்களின் உட லில்தான் முதலில் மாற்ற‍ங்கள் நிகழ்வது ஏன்?
ஏனெனில் பெண்கள் ஆண்களுக்கு சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பருவ மாகி விடுகின்றனர்.
எப்பொழுது பருவ வளர்ச்சியடைதல் (Growth) ஆரம்பமாகிறது?
ஒன்பது அல்லது பத்து வயதிலேயே இம் மாற்றங்களைக் காணக் கூடியதாய் இருக் கும். இது சற்று முன்பாகவோ பின்பாகவோ
நிகழலாம். இம் மாற்றம் ஏற்படும் சராசரி வயது பத்து ஆகும்.
பருவமாவதற்கு எது காரணமாகிறது?
இதெல்லாம் ஏற்படக் காரணமாய் இருப்பது மூளையின் ஒரு பகுதியான உப தலமஸ் ஆகு ம். இந்த உபதலமஸ் ஓமோன்கள் என்கின்ற இரசாயனப் பதார்த்தங் களைச் சுரக்கின்றது. இவை பருவமாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய வேறு ஓமோன்களைத் தட்டி எழுப்புகி றது. இவை உங்களை வளர்ந்த பெண் ஆக்குகின்றன.
நீங்கள் ஏழுவயதாய் இருக்கும் போதே இந்த ஓமோன்கள் முதன் முதலாகச் சுரக்கத் தொடங்குகின்றன.
ஓமோன்கள் பெண்களுக்கும் ஆண்க ளுக்கும் உரியவை. பெண்களின் உடல் கூடுதலான பெண் ஓமோன்களையும் சிறிதளவு ஆண் ஓமோன்களையும் சுரக்கின்றன.
சில பெண்கள் பருவமாவதற்கு முன் பொருமிக் காணப்படுவதேன்?
பருவமாவதற்கு சற்று முன்பாக ஏற்படும் திடீர் வளர்ச்சியின் போதுசற்று பருமனாகிறார்கள். இதனை இளமைக் கொழுப்பு என்பார்கள். கூடுதலான இளமைக் கொழுப்பு பெண் பருவ மாகப்போகிறாள் என்பதை மூளைக்கு அறிவுறுத்தும் அறிகுறியாகும். மெல்லிய பெண்கள் இந்த அறிவுறுத்தலைச் செய்யாதபடியால் காலம் தாழ்த்தியே பருவமாகின்றனர். வளர்ச்சி முகிழ்ந்ததும் இளமைக் கொழுப்பு மறைகிறது. 15,16 வயதைப் பெண் அடையும் போது சாதாரணமாக இது போய்விடுகிறது. அதற்குப் பிறகு ஏற்படும் பருமனை இளமைக் கொழுப்பு என்பதில்லை.
முதலில் தோன்றும் மாற்றம் என்ன?
வளர்ச்சி, நீங்கள் உயர்ந்து இருப்பீ ர்கள். இது நாடகம் போன்று நடை பெறுகிறது. ஏனெனில் முன்னிரு ஆண்டுகளாக வளர்ச்சி குன்றியிரு க்கும். இது ஆகாய விமானம் இற ங்கு பாதையில் ஓடி மேலே எழுவ தற்குமுன் உள்ள நிலையை ஒத்திருக்கிறது. வளர்ச்சி ஆரம்பிக்கு முன் அநேக பெண்கள் எவ்வளவு உணவை உட்கொண்ட போதிலும் மெலிந்தும் கால்கள் நீண்டும் காணப்படுவர்.
த்தகைய வளர்ச்சியின் போது சற்று கூடுதலாக நித்திரை கொள்ள விரும்புவர். கிழமை முடிவு நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் சற்று நேரங் கழித்தே நித்திரை விட்டு எழ விரும்புவர். பிற்பகல் நேரமும் சற்று நேரம் நித்திரை கொள்ள விருப்பம் கொள்வர். ஏனெனில் வளர்ச்சிக்குரிய ஓமோன் நித்திரை கொள்ளும் போதுதான் சற்று அதிகமாகச் செயல்படுகி றது.
இந்த வளர்ச்சி ஓமோனால் கட்டுப்படுத்தப்படுகிறது. இது உண்மையில் அன்றோஜன் என்கிற ஆண் ஓமோன் ஆகும். இதில் ஆச்சரி யமானது என்னவென்றால் எந்த ஓமோன் வளர்ச்சியைத் தூண்ட க் காரணமாயுள்ளதோ அதே ஓமோன் வளர்ச்சியை முடிவுக்கு க் கொண்டுவருகிறது. அதன் காரணமாகத்தான் சிலர் முன் னரே வளரத்தொடங்கி விரைவி லேயே அவர்களது வளர்ச்சி முடிவுக்கு வருகிறது. அதனால்தான் நன்றாக உயருவதில்லை. அதன் காரணமாகவே காலம் தாழ்ந்து வளர ஆரம்பித்தால் காலம் கடந்தே வளர்ச்சி முடிவுறுகிறது. அத னாலேயே அவர்கள் உயர்ந்து வளர்கின்ற னர்.
அதோடு அதிகமாகப் பசிதோன்றி பல முறை பசி எடுக்கிறது. அதனால் கூடுதலான உணவு உண்கின்றனர். குழந்தைப் பருவம் மாறுவதையும் புதியவகை உணவில் விருப்பமும் ஏற்படுவதைக் கண்டு தயார் பூரிப்படைகிறார். இதனால் இப்பெண்ணிற் கு உணவு தயாரிப்பதில் பெரு மகிழ்ச்சிய டைகிறாள். ஏனெனில் பெண் பருவமாகி விட்டாள். காய் கறிகளிலுள்ள நச்சுத் தன் மையை நடுநிலையாக்கும் ஆற்றலைப் பெற்றுவிட்டாள். அதன் நிமித்தமே சிறு பராயத்தில் வெறுப்பு ஏற்பட்டது. காய்கறி களும் உயிர் உள்ளவையே. அதனால் அவ ற்றை நீங்கள் உண்ண வேண்டும் என்பதில் அவற்றிற்கு ஆர்வமி ல்லை. அதனால் அவை அவற்றை நச்சுப் பொருள்களாக்கி வெறுக்கச் செய்கின்றன. அவற்றை உண்டால் வயிற்றுவலியோ தலைவலி யோ ஏற்படுகிறது. அவர்கள் வளர்ச்சியுறும் போது இந்த நச்சுப் பொருள்களைச் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுகின்றனர். சிறுபிள் ளைகள் சில காய்கறிகளை விரும்பாதற் குக் காரணம் அதில் காணப்படும் நச்சுத் தன்மையே. கர்ப்பிணிகள் சிலருக்கு சிலவற்றை உட்கொண்டபின் சுகவீனம் ஏற்படுவதற்குக் காரணம் கருவிலுள்ள வை அவற்றைத் தவிர்க்க விரும்புவதே. அந்தக் கருவிலுள்ள அவனோ அவளோ கர்ப்பிணிகள் அவற்றை உண்டால் தமக் குத் தீங்கு விளையும் என்று கருதுகிறது.
இந்தத் திடீர் வளர்ச்சி அவளுக்கு மாத விடாய் ஏற்படும் போது குன்ற ஆரம்பிக் கிறது. அவளுக்கு 16 முதல் 18 வயது ஏற்பட அவளுடைய வளர்ச்சி முற்றாக நின்றுவிடுகிறது.
இந்தத் திடீர் வளர்ச்சி உயரமாக்குவது மட்டுந்தான் செய்கிறதா?
உண்மையில் இல்லை. திடீர் வளர்ச்சி தோன்று முன்பிருந்தே பெண் ஓமோன் செயல்படத் தொடங்குகி ன்றன. அது உடலில் வேலை செய்ய ஆரம்பித்து பருவமான பெண் ணாக மாற்றுகிறது.
நீங்கள் அவதானிக்கும் முதல் மாறு தல் என்ன?
நீங்கள் உயரமாக வளரும் போது உங்கள் இடுப்புகள் அகன்று இடுப்பு என்புகள் மாற்றமடைகின்றன. உங்கள் இடுப்பு வெறும் என்பாக மட்டுமாக இராது. பெண் ஓமோன் கொழுப்பு இடுப்பில் படியத் தொட ங்கி அதற்கு வட்ட வடிவத் தோற்றத்தைத் தருகிறது. முலைக் காம்புகள் வளர்வதையோ அரும்புவதையோ அவதானிக்கலாம்.
அடுத்த மாற்றம் என்ன?
யோனிப் பிரதேசத்தில் உரோமங்கள் தோன்றத் தொடங்கும். இதனை பூப்பு உரோமம் என்பர். குழந்தையா ய் இருந்தபோது இருந்த உரோமம் சற்று கருமையடைந்து அதன் பிறகு மேலும் தடிப்பமாகி முரட்டுத்தன் மை அடைந்து தலைமயிரைக் காட் டிலும் கூடிய சுருளாக மாறுகிறது.
இதற்கு அடுத்த மாற்றம் என்ன?
அடுத்தபடியாக ஒரு நாள் முலைக்காம்பிற்குக் கீழே காயப்பட்டத னால் ஏற்படுவது போன்ற நோவு தென்படுகிறது. ஏதேனும் அடிபட்டு விட்டதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் முகம் பார்க் கும் கண்ணாடி ஒன்றில் பக் கவாட்டாகப் பார்க்கும்போது ஒரு மாற்றம் தென்படுகிறது. முலைக்காம்பின் கீழ்ப் பகுதி வளர்ந்துள்ளது. உங்களுக்கு மார்பகங்கள் வந்துவிட்டன.
இதே காலக்கட்டத்தில் உங்க ள் உள்ளாடையில் தெளிவா ன வழுவழுப்பான திரவம் படி கிறது. உங்கள் யோனிப் பகுதியில் ஈரமும் வழுவழுப்புத் தன்மை யையும் உணர முடிகிறது. இந்தக் கசிவு யோனி மடலிலிருந்து வெ ளிவருகிறது. குதப் பகுதிக்கு அருகிலுள்ள யோனிப் பிரதேச த்தின் பெரிய இடைவெளி ஊடாக வெளிப் படுகிறது.
கண்ணிற்குப்புலப்படாத மாற்றமு ம் உண்டா?
ஆம்.உடலினுள் பெரியமாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த வேளையில் தான் கருப்பை, சூலகங்கள், யோனி ஆகியவை உருவாகத் தொ டங்குகி ன்றன.
கருப்பை என்றால் என்ன?
இது பெண்ணின் வயிற்றிலிருக்கும் தலைகுப்புறப் பிடித்தகாய் போ ன்ற ஒரு பைஆகும். இது மிருதுவான தசையால் ஆனது. இதில் தான்பிறப்பதற்கு முன்பு குழந்தை வளருகிறது. குழந்தை பிறப்பதற்குத் தயார் ஆனதும் தசை மெல்ல மெல்லச் சுருங்கி குழந்தையை கருப் பையிலிருந்து கழுத்துப்போ ன்ற பகுதியினூடாகத் தள் ளுகிறது. இக்கழுத்துப் போன்ற பகுதியை யோனிவழியாக சுத்தமா ன விரலை விட்டுத் தடவி அறியலாம். அது கூம்பு வடிவத்தில் கடினமாகவும், தசைப்பிடிப்பாகவும் இருக்கும்.
யோனி என்றால் என்ன?
யோனி என்பது கழுத்துப் போன்ற கருப்பையின் கீழ்ப்பகுதிக்கும் புறத்தேயுள்ள பிறப்புறுப்புக்கு ம் இடைப்பட்ட பாதையாகும். யோனியில் நுழைவிடம் பிறப்புறுப்பின் பின்புறம் குதத்திற்கு முன்பாக உள்ளது. குழந்தை பிறக்கும் போது யோனி ஊடாகத்தான் வெளிவருகிறது. இதன் வழியாகத்தான் மாதவிடாய் வெளிவருகிறது. இதன் வழியாகத்தான் பெண் ஆணுடன் பாலுற வு கொள்கிறாள்.
சூலகங்கள் என்றால் என்ன?
கருப்பைக்கு சற்று மேலாக அதற்கு இரு புறங்களிலும் பக்கத்திற்கு ஒன்று வீதம் இரு சூலகங்கள் உள்ளன. இச்சூலகங்கள்தான் சூலகமுட்டைகளை உருவாக்குகின்றன. இம்முட்டை ஆணின் விந்துடன் சேர்கையில் கருக்கட்டிக் குழந்தை ஏற்படுகிறது. இதனால்தான் குழந் தை தாயையும் தந்தையையும் ஒத்திருக்கிறது. பருவமானபின்பு சூலக ங்கள் மாதம் ஒரு முட்டையை வெ ளிவிடுகிறது. சிலவேளைகளில் ஒன்றிற்கு மேற்பட்ட முட்டையையும் வெளிவிடும். இம்முட்டை கருப்பையை அடைந்து ஆணின் விந்துடன் சேர்ந்து கருக்கட்டி குழந் தை உருவாகிறது.
கருமுட்டை என்றால் என்ன?
கருமுட்டை என்பது பெண்ணிட மிருந்து வெளிவரும் நுண்ணிய கலம். இது ஆணின் விந்தோடு சேர்ந்து குழந்தையை உருவாக்குகின்றது. அது அந்தப் பெண்ணிற் குரிய சகல அம்சங்களையும் கொ ண்டுள்ளது. அதனால்தான் அந்தப் பெண்ணின் பிரதி அவளின் குழ ந்தையில் காணப்படுகிறது.
பிறப்புறுப்புகளும் வளர்ச்சி அடைகின்றனவா?
ஆம். வெளிப்படையான வளர்ச்சியாக தோல் மடிப்புகள் நீள்கின்ற ன. இது ஒவ்வொரு பெண்ணிற்கும் ஏற்படுகின்றது. தோல் மடிப்பு கள் சிறு பெண்பிள்ளையாக இருந்த போது இருந்தது போல் இராது. இத னால் அழகு அற்றோ வேறு வித மாகவோ போவதில்லை. தே வையற்ற போதிலும் புற பிறப்புறுப்புகள் வளர்ச்சி அடைவதேன்? ஆண்களின் பிறப்புறுப்புகள் வளர்ச்சி அடைகின்றன. இயற்கை, ஆணையும் பெண் ணையும் ஒரே அடிப்படையில்தான் அமைத்துள்ளது. ஆனால் சற்று மாறுபட்டுள்ளது. அவசியம் அற்ற போதிலும் பிறப்புறுப்புகள் வளர்ச்சி அடைகின்றன. அதே போல் தான் ஆணுக்கும் முலைக் காம்புகள் தேவையற்ற போதிலும் சற்று வளர்ச்சி அடைகின்றன.
அடுத்து நடப்பதென்ன?
எல்லாம் பெரிய மாறுதல்கள். பூப்பு உரோமம் தடிப்பாகி கூடுதலான பரப்புக்கு வியா பிக்கின்றது. நீளமாகவும் கறுப்பாகவும் மாற்றம் அடை கிறது. கைக்குளச்ச வளைவு (அக்கிள் ) பகுதியிலும் மயிர் முளைக்கிறது. அநேக பெண்களுக்கு முகப் பரு ஏற்படுகிறது. மாதவிடாய் வரத்தொடங்குகிறது.