Friday, 13 July 2012

முடியாது… ஆனால் முடியும்!

Posted On July 13,2012,By Muthukumar
தினமும் சாப்பிட வேண்டிய நேரத்தைத் தாண்டி, உணவு உட்கொள்ளும்போது, படபடப்பை அதிகரிக்கும், "கார்ட்டிசோல்' ஹார்மோனின் சுரப்பு, உடலில் அதிகரிக்கிறது. இதனால் உடல், சீரான நிலையிலிருந்து மாறுபடுகிறது.
காலை எழுந்ததும், நாம் செய்ய வேண்டிய பணிகள் என்னென்ன எனத் திட்டமிடுதல், உண்ணும் உணவு, உடலைப் பராமரிப்பது, உடை ஆகிய விஷயங்களில், நாம் நிறைய, "கோட்டை' விடுகிறோம் என்கின்றனர், மன நல மருத்துவர்கள். அவை என்னென்ன எனப் பார்ப்போம்:
சரியான நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்
நமக்கு அதிகம் படபடப்பை வரவழைக்கும் விஷயம் எது தெரியுமா? பணப் பிரச்னையோ, திருமண உறவுப் பிரச்னையோ அல்ல... சரியான நேரத்தில் உணவு உண்ணாமையே! தினமும் சாப்பிட வேண்டிய நேரத்தைத் தாண்டி, உணவு உட்கொள்ளும்போது, படபடப்பை அதிகரிக்கும், "கார்ட்டிசோல்' ஹார்மோனின் சுரப்பு, உடலில் அதிகரிக்கிறது. இதனால் உடல், சீரான நிலையிலிருந்து மாறுபடுகிறது. எனவே, குறிப்பிட்ட நேரத்திற்குச் சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்வது, தூங்குவதைப் பின்பற்றுங்கள்.
உண்ணும் உணவில் அக்கறை வேண்டும்
"யார் நடையாய் நடந்து கடைக்குச் செல்வது...' என, அலுப்புத் தட்டி, பக்கத்தில் உள்ள கடையில் காய்கறி, பழம் வாங்கும், பழக்கம் நிறைய பேரிடம் உள்ளது. காசு குறைவு என்ற யோசனையும், பக்கத்துக் கடையிலேயே கால் பதிய வைக்கும். ஒரு காய்கறியை, காய்த்த இடத்திலிருந்து விற்பனைக்குக் கொண்டு வரும் வரை, அது வாடாமல் இருக்க, அதன் மீது ரசாயன மருந்துகள் தெளிக்கப்படுகின்றன. இந்த மருந்து, உடலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியது. எனவே, எந்தக் கடையில், மருந்து தெளிக்கப்படாத காய்கறி, பழங்கள் கிடைக்கின்றன என்பதைக் கண்டறிந்து, அங்கிருந்து அவற்றை வாங்கிச் சமைப்பதே நல்லது.
உடற்பயிற்சி தேவை தான்; மற்ற நேரங்களில்?
"அவளைப் பாரேன்... பீப்பாய் மாதிரி கெடக்கா...' என, யாராவது கிண்டல் செய்து, அதை மாற்றிக் கொள்ள, வீராப்புடன் உடற்பயிற்சி செய்கிறீர்கள்... வாழ்த்துக்கள்! தினமும், அரை மணி நேரம், உடற்பயிற்சி செய்வீர்களா? அதன் பின்...? "டிவி' முன் ஐக்கியம்... கண்டதையும் கொறித்து, கொழுப்புச் சத்துள்ள உணவைச் சாப்பிட்டு, சாப்பிடும்போதே, "அதான்... "எக்சர்சைஸ்' செய்கிறோமே...' என, மனதைச் சமாதானப்படுத்திக் கொண்டு... - இதெல்லாம் சரிப்படாது. சரியான உணவும், உடற்பயிற்சியும் தான், உங்கள் உடலைச் சீராக வைக்கும்.
இறுக்கமான உடை, "ஹை ஹீல்ஸ்' வேண்டாம்
சிலர், மிகவும் இறுக்கமான உடை அணிகின்றனர். "பிளவுஸ்' மற்றும் உள்ளாடையை, மிகவும் இறுக்கமாகப் போட்டால், நாளடைவில், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். புடவை கட்டுபவர்கள், உள் பாவாடையை, மிகவும் இறுக்கமாகக் கட்டினால், இடுப்புத் தோலில் புண் ஏற்பட்டு, விபரீதங்களை விளைவிக்கும். குதிகால் உயரச் செருப்பு அணிந்தால், இதய பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என, சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. வேண்டாமே இந்தச் செருப்பு... மனதை உயரமாக வைத்துக் கொள்ளுங்கள்... செருப்பு ஒரு பொருட்டல்ல!

Tuesday, 10 July 2012

எந்த‌ மாதிரி நோய்களுக்கு எந்த மாதிரியான அறிகுறிகள்

Posted on by muthukumar

கண்கள் : 
கண்கள் உப்பியிருந்தால்…
என்ன வியாதி: சிறுநீரகங்கள் மோச மாக இருப்பதைக் குறிக்கிறது. சிறு நீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாம ல் போகு ம். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.
டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறை த்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்து வது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும்.
கண் இமைகளில் வலி
என்ன வியாதி : அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வர லாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடை ந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது.
டிப்ஸ்: போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். அ தோடு உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அள வில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம்
என்ன வியாதி : அதிகமாக வேலை செய் து கொண்டே இருப்பது. இந்த ஸ்டிரெஸ் ஸினால் உங்கள் மூளை குழப்பமடைந்து கண்களுக்கு தவறான தகவல்களை அனுப்பிவிடுகிறது. அந்த நேரத்தில் நமக் கு சட்டென அதிகப்படியான வெளிச்சங் களும், புள்ளிகளும் பார்வைக்குத் தெரி கிறது.
டிப்ஸ்: எப்பொழுதும் நிமிர்ந்து நிற்க வே ண்டும். அதிகமாக காபி குடிக்கும் பழக்க த்தையும் தவிர்க்க வேண்டும்.
கண்கள் உலர்ந்து போவது.
என்ன வியாதி: நாம் ஏ.சி. நிறைந்த இடங்களில் அதிக நேரத்தைச் செலவிடும் போதும், கண்கள் அதி க வேலையினால் களைப்படையு ம் போதும் நம் கண்கள் உலர்ந்து மிகுந்த பாதிப்புக்குள்ளாகி றது.
டிப்ஸ்: குறைந்தது எட்டுமணி நேர இரவுத் தூக்கம் மிகவும் அவ சியம். தினமும் கண்களை மேலும்  கீழு மாகவும், பக்கவாட்டின் இருபுறமு ம் அசைத்தல் போன்ற எளிய உடற் பயிற்சிகளை ஒரு நாளில் இரண்டு முறை செய்யவேண்டும்.
சருமம்
தோலில் தடிப்புகள் ஏற்படுதல்
என்ன வியாதி : இருதய நோய் இருக்கலாம். குறிப்பாக இது காதுக ளுக்குப் பக்கத்திலிருக்கும் தோலில் ஏற்படுமானால் உங்களுக்கு இருதய கோளாறு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால், இப்படி அந்த இடத்தில் ஏன் தோல் தடிக்கிறது என்று டாக்டர்களுக்கே இன்னும் சரிவர புரிய வில்லை என்கிறார்கள்.
டிப்ஸ்: அதிகப்படியான மன அழுத்தம் ‘ஹார்ட்_அட்டாக்’ வருவதற் கான வாய்ப்பை உருவாக்கும். மனதை பாரமில்லாமல் லேசாக வை த்துக் கொள்ள முயற்சிப்பதும், பிரச்சினைகளை நல்ல முறையில் அணுகுவதும் இதைத் தவிர்க்கும்.
முகம் வீக்கமாக இருப்பது
என்ன வியாதி: உடலில் தண்ணீர் இழ ப்பு அதிகமாக இருப்பது. இப்படி ஏற்படு ம்போது உடலுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப் படுகிறது. உடலுக்குப் போது மான தண்ணீர் கிடைக்காமல் போனா ல், ரத்த செல்கள் விரிவடைந்து முகம் வீக்கமாகத் தெரியும்.
டிப்ஸ்: ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் தண்ணீராவது அருந்துவது அவசியம். எப்போதும் தண்ணீர் பாட்டிலை உடன் வைத்துக் கொண் டால் தண்ணீர் அருந்த வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட்டு அருந்து வீர்கள்.
தோல் இளம் மஞ்சளாக மாறு வது
என்ன வியாதி: கல்லீரல் நோய். கல்லீரல் பாதிப்படையும்போது உடலிலிருக்கும் பித்த நீர் போன் ற மஞ்சள் நிற திரவங்களை வெ ளியேற்ற முடிவதில்லை. இதனா ல் தோல் மஞ்சள் நிறத்திற்கு மா றுகிறது.
டிப்ஸ்: அதிகப்படியான ஆல்கஹாலின் அளவால் இப்படி கல்லீரல் பிரச்சினை ஏற்படுகிறது. குடிப்பழக்கம் இருந்தால், உடனடியாக நிறுத்தி விடுவதே நல்லது.
பாதம்
கை கால்களில் சில நேரங்க ளில் சுறுசுறுவென உள்ளே ஏதோ ஓடுவது போலிருத்தல்
என்ன வியாதி: சீரான ரத்த ஓட் டமின்மை. ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தால் உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. இந்த அறிகுறி உங்கள் ரத்த மானது பாதம் வரை சீராக ஓடச் செய்யும் முயற்சியே ஆகும்.
டிப்ஸ்: வைட்டமின் ணி நிறைந்த உணவுகளும் கீரைகளும் சாப்பிட வேண்டும்.
பாதம் மட்டும் மரத்துப் போதல்
என்ன வியாதி: நீரிழிவு நோயின் பாதி ப்பு. டயபடீஸ், ரத்தத்திலிருக்கும் செல் களைப் பாதிப்பதோடு, நரம்புகள் செய் யும் வேலைகளையும் தடுத்து விடுகிற து. இதன் விளைவாக சில நேரங்களில் கால் களில் செருப்புக்கள் உராய்ந்து ஏற்படுத்தும் எரிச்சலையோ வலியை யோகூட உணர்ந்து கொள்ள முடியாது.
டிப்ஸ்: பிளாக் டீ அல்லது கிரீன் டீ உங் கள் இரத்தத்திலிருக்கும் குளுக்கோஸி ன் அளவைக் குறைத்து நீரிழிவு நோ யைக் கொஞ்சம் கட்டுப்படுத்தும். உடல் பருமனும்கூட டயபடீஸ் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். அதனால் உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
பாதங்களில் உலர்ந்த வெடிப்புகள்
என்ன வியாதி : தைராய்டு பிரச்சினையாக இருக்கலாம். இந்த தை ராய்டு சுரப்பிதான் நம் தோலுக்குத் தேவை யான ஹார்மோன்களை ஒழுங்கு செய்கி றது. இந்த தைராய்டு சுரப்பி சரியாக வே லை செய்யாதபோது, நம் பாதங்களின் தோல் உலர்ந்துபோகும். பாதங்களை சரி வர பாராமரிக்காமல் இருந்தால் அதிக அள வில் பாதிப்படைந்து விடும்.
டிப்ஸ்: தைராய்டு பிரச்சினையின் வேறு சில அறிகுறிகள், அதிக சோர்வும் உடல் எடை அதிகமாதலும் இதில் எந்த அறிகுறிகள் இரு ந்தாலும் மருத்து வரைச் சந்திப்பது அவசியம்.
கைகள்
சிவந்த உள்ளங்கை
ன்ன வியாதி: கல்லீரல் பிரச்சி னையாக இருக்கலாம். நோய் வாய்ப் பட்ட கல்லீரலால், நம் இரத்தத்திலுள்ள ஹார்மோன் களைக் கட்டு ப்படுத்த முடியா மல் போகும். அதனால் உங்கள் ரத்தத்தின் நிறம் அதிக சிகப்பா கிவிடும். கல்லீரல் சரியாக வே லை செய்யவில்லை என்பதை, அதிக சிவப்பான உள்ளங் கை கள்தான் சட்டென காட்டிக் கொ டுக்கும். காரணம் உடலின் மற்ற பாகங்களைவிட உள்ளங்கை யின் தோல் மிகவும் மிருதுவாக இருப்பதுதான்.
டிப்ஸ்: கீழாநெல்லியை வாரத்தில் ஒருதரம் சாப்பிடுவது கல்லீர லைச் சரிப்படுத்தும். உடம்பின் விஷ த்தன்மையை மாதம் ஒரு முறை யாவது போக்க, ஒரு நாள் பழம் மட் டும் சாப்பிடுங்கள்.
வெளுத்த நகங்கள்
என்ன வியாதி: இரத்த சோகை இரு க்கிறது. இரத்தத்திலுள்ள சிகப் பணு க்கள் அளவில் குறையும்போது சின் னச் சின்னவேலையைச் செய்வதற்கு ம் உடல் பலமின்றிப்போகும்! ரத்தத் தின் சிவப்பணுக்கள் குறைவதால், இயல்பாக நகம் இருக்க வேண்டிய பிங்க் நிறம் போய், வெளு த்து விடுகின்றன.
டிப்ஸ்: இரும்புச்சத்து இரத்தத்திலுள்ள சிகப்பணுக்களின் எண்ணிக் கையை அதிகரிக்கச் செய்யும். ஈரல், கீரைவகைகள், மற்றும் இறை ச்சியை உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். அல்லது டாக்டரி ன் ஆலோசனையின்படி குறிப்பிட்ட நாட் களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளோ டு பி_12 மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வது நல்லது.
விரல் முட்டிகளில் வலி
என்ன வியாதி: ஆர்த்தரடீஸ் என்னும் மூட்டு வலி இருக்கிறது. இத னால் விரல் முட்டிகளில் வீக்கமும் வலியும் ஏற்படும். இந்த வலி அதிகமாக விரல் முட்டிகளில் தான் காணப்படும். அவை வடிவத்தில் சிறியதாக இருப்பதால், இந்த வலி உட னே வர வாய்ப்புண்டு. வயதானவர்களுக் கு மட்டுமே இந்த மூட்டுவலி வருவதில் லை. எந்த வயதுக்காரர்களுக்கும் வரலாம்.
டிப்ஸ்: உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின் ஙி சரியான அளவில் எடுத்துக் கொண்டால் மூட்டு வலி வருவதைக் குறைக்கலாம். ஒழுங்கான உடற்பயிற்சிகள் மற்றும் உடல் பரு மனைக் குறைத்தல் இரண்டும் மூட்டு வலி வராமல் தடுக்கு ம்.
நகங்களில் குழி விழுதல்
என்ன வியாதி: சோரியாஸி ஸ் இருக்கிறது. இது ஒரு மோசமான தோல் வியாதி. இதன் மூலம் தோலும் நகங்க ளும் மிகவும் மென் மையாகி விடும். இந்த வியாதி வந்தால் மென்மையான நகங்களில் குழிகள் வரக்கூடும்.
டிப்ஸ்: உடனடியாக சரும வியாதி நிபுணரைக் கலந்தாலோசிக்கவு ம். ஸ்டிரெஸ்ஸைக் குறைத்துக் கொண்டாலே வியாதி அதிகமாவ தைத் தடுக்கலாம்.
வாய்
ஈறுகளில் இரத்தம் வடிதல்.
என்ன வியாதி: பல் ஈறு சம்பந் தப்பட்ட நோய் இருக்கிறது. ஈறுகளிலும் அவற்றின் அடியி லிருக்கும் எலும்புகளிலும் தொற்று நோய்க் கிருமிகளின் தாக்குதல் இருந்தால், பற்கள் உறுதி இழந்து விழுந்து விடும். பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் வருவது இந்த நோயின் முதல் அறிகுறி.
டிப்ஸ்: தினமும் பற்களைச் சுத்தமாக துலக்குவதும், பற்காரைகள் வராமல் பாதுகாப்பதும் அவசியம். ஆன்ட்டி பாக்டீரியல் கொண்ட மவுத் வாஷ் கொண்டு வாய் கொப்பளிப்பது நல்லது.
சாப்பிடும்போது வாய் முழுக்க வலி ஏற்படுதல்
என்ன வியாதி: வாய்ப்புண் இருக்கிறது. அதிக மாக ஸ்டி ரெஸ் செய்து கொள்வதாலும் வாய்ப்புண் வரலாம். உட லில் ஃபோலிக் ஆசிடின் குறைவு மற்றும், இரும்புச்சத்து அல்லது வைட் டமின் பி-12ன் குறைவினா லும் இப்படி ஏற்படுகிறது.
டிப்ஸ்: ‘மல்டி_விட்டமின்’ மாத்திரைகளைத் தினமும் எடுத்துக் கொ ள்ளவேண்டும். மேலும் தியானம் மற்றும் யோகா செய்வதால் ஸ்டி ரெஸ்ஸைக் குறைக்கலாம். ஹைட்ரஜன் பெராக்ஸைடு கொண்டு வாய் கொப்பளித்து வருவதால் இன்பெக்ஷன் குறைந்து வாய்ப்புண் ஆறும்.
வாய் ஈரப்பசையின்றி உலர்ந்து போவது.
என்ன வியாதி: உடலின் போதுமான நீர்ச்சத்து குறைந்து போயிருக் கிறது. உடலில் அதிகப்படியான நீர் வெளியேறுவதால் இந்த டீ ஹை டிரேஷன் ஏற்படுகிறது. மேலும் அதிகப்படியாக வியர்ப்பது மற்றும் நீரிழிவு நோயும்கூட வாய் உலர்ந்து போவதற்கு காரண மாகும்.
டிப்ஸ்: நிறைய திரவ ஆகாரம் எடுத்துக்கொள்ளவேண்டும். தினமு ம் குறைந்தது ஒன்றரைலிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். அத ன் கூடவே பழங்களையோ பழச்சாறோ அருந்துதலும் நல்ல பலன் தரும்.

இடுப்பு வலியிலிருந்து தப்பிக்க

மனித உடலின் பின்புறத்தில், கழுத்துப் பகுதியில் ஆரம்பித்து, அடிப் பகுதியிலுள்ள `பிருஷ்டம்’ வரை உள்ள தண்டுவடத்தில், அடுக்கடுக்காக, ஒன்ற ன் கீழ் ஒன்றாக, வரிசையாக, கருத்தெலு ம்புகள் அமைந் துள்ளன. இதற்கு `வெர்டி ப்ரே’ என்று பெயர். மனிதன் முதற்கொண் டு, பாலூட்டி விலங்குகள் அனைத்திற்கு ம் இந்த குருத்தெலும்புகள் உண்டு.
 
ஒவ்வொரு குருத்தெலும்புக்கும் இடை யில், `இன்டர் வெர்டிப்ரல் டிஸ்க்’ என்று சொல்லக்கூடிய அதிக எடையைத் தாங் கக்கூடிய, அதி ர்ச்சியைத் தாங்கக்கூடிய, `ஷாக் அப்ஸார்பர்’ என்று சொல்வார்க ளே, அதைப் போன்ற ஒரு `அதிர்ச்சி தடுப் பான் டிஸ்க்’ இருக்கிறது. சைக்கிள், கார், ஸ்கூட்டர், பைக், மோட்டா ர் பம்ப் போன்றவற்றில் `வாஷர்’ என்ற ஒன்று இருக்குமே, அதைப் போலத்தான், இதுவும் ஒவ்வொரு குருத்தெலும்புக்கும் இடையில் இயற்கையாக அமையப் பெற்றிருக்கிறது.
புரோட்டியோ கிளைகான் (புரோ ட்டீன் + கார்போஹைட்ரேட்) கொல்லாஜன், தண்ணீர் மற்றும் குறைந்த அளவில் கொஞ்சம் எலாஸ்டிக் பைபர் சேர்ந்த கூட்டு ப்பொருளால் ஆனது தான், இந்த `அதிர்ச்சி தடுப்பான் டிஸ்க்’ ஆகு ம். ஒரு பட்டர் பிஸ்கெட் எப்படி இருக்குமோ, அநேகமாக, அதே வடிவில், அதே சைஸில் தான், இந்த `அதிர்ச்சி தடுப்பான் டிஸ்க்’ இருக்கும். தண்டுவடம், மொத்தமாக முன்னே, பின்னே, குனிய, நிமி ர, வளைய, இந்த அதிர்ச்சி தடுப்பான் டிஸ்க் பெரிதும் உபயோகப் படுகிறது.
மேலும் தண்டு வடத்திலுள்ள எல்லா குருத்தெலும்புகளும் தனித் தனியாக ஒன்றோடொன்று சேர்ந்திருக் கவும் இந்த டிஸ்க் பயன்படுகிறது. மனி தனின் தண்டுவடத்தில், மொத்தம் 23 டிஸ்க் இருக்கிறது. கழுத்துப்பகுதியில் ஆறும், முதுகின் நடுப்பகுதியில் பன்னி ரெண்டும், இடுப்பின் பின்பகுதியில் ஐந் தும் இருக்கின்றன. இந்த டிஸ்க்கின் வெளிப்பகுதி `ஆன்னுலஸ் பைபர்’ என்கி ற அடுக்கினாலும் உருவாக்கபட்டிருக்கி றது.
உடம்பில், குறிப்பாக முதுகுப்புறத்தில் ஏற்படும் அழுத்தத்தை, ஒரே சீராக பிரித் தனுப்பும் வேலையை, வெளிப்புற `ஆன் னுலஸ் பைபர்’ செய்கிறது. உள் புறமுள்ள `நியூக்ளியஸ் பைபர்’ ஒரு டூத் பேஸ்ட் போன்று, ஒரு ஜெல்லி போன்று வழவழவென்று இருக்கு ம். இதுதான் `ஷாக் அப்ஸார்பர்’ வேலையைச் செய்கிறது. அதாவது தண்டு வடத்துக்கு வரும் பிரஷர் முழுவ தையும் தாங்கிக் கொள்ளும் வேலை யை, இந்த நியூக்ளியஸ் பைபர் தான் செய்கிறது.
உயரத்திலிருந்து நாம் குதிக்கும்போது, ஓடு ம்போது, தாவும்போது, தாண்டும்போது, அதிக எடையுள்ள பொருளை தலைச் சுமை யாக தூக்கும்போது, குனியும்போது, நிமிரு ம்போது, வளையும்போது, நெளியும் போது ம் ஏற்படும் எல்லாவிதமான அழுத்தத்தை யும், இந்த `டிஸ்க்’ தான், தாங்கிக் கொண்டு குருத்தெலும்புகள் பாதிப்படையாமல், உடை ந்து விடாமல், பாதுகாத்து வருகிறது.
அதற்காக, இந்த அதிர்ச்சி தடுப்பான் டிஸ்க் இருக்கிறது என்பதற்காக, இஷ்டம் போல் இருநூறு கிலோ எடை யைத் தூக்கி தலையில் வைத்தால், இந்த `டிஸ்க்’ தாங்காது. ஒரு குறிப்பிட்ட அளவு எடை, ஒரு குறிப்பிட்ட உய ரத்திலிருந்து குதித்தல், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு வளைதல், இப்படி எல்லா செயல்களிலுமே, ஒரு குறிப் பிட்ட அளவுக்குத்தான் இந்த `டிஸ்க்’ கால் கண்ட் ரோல் பண்ணி, உடம் பை பாதுகா க்க முடியும்.
அளவுக்கு மீறினால் இந்த `டிஸ்க்’ கால் ஒன்றும் செய்ய முடியாது. மனி த உடம்பு ரப்பரினால் செய்யப்பட்டத ல்ல. இந்த டிஸ்க்கிலுள்ள ஆன்னு லஸ் பைபரில், சுமார் 65 சத வீதம் நீரும், நிïக்ளியஸ் பைபரில், சுமார் 80 சதவீதம் நீரும் இருக்கும். ரத்த சப் ளை இந்த டிஸ்க்குகளுக்குக் கிடை யாது. வயது ஆக, ஆக நியூக்ளியஸ் பைபர் அடுக் கிலுள்ள நீர்ச்சத்து குறைந்து கொண்டே வரும்.
இதனால், அதனுடைய பலமும் குறைந்து கொண்டே வரும். அதனா ல்தான் வயதான காலத்தில், சின்னப்பிள்ளை மா திரி, ஓடியாடி வி ளையாடாதீர்கள் என்று பயமு றுத்துவதுண்டு. வயதான காலத்தில் முதுகெலு ம்பில் அடிபட்டாலோ, கீழே விழுந் தாலோ, அந்த ஷாக், அந்த அதிர்ச்சியைத் தாங்கக்கூடிய சக்தி குறைந்து விடும். எனவே வயதான கால த்தில் அதிக ஓட்டம் ஓடாதீர்கள்.
விபத்தின் போதோ அல்லது தாறுமாறாக மேலே யிலிருந்து கீழே குதிக்கும்போதோ, பைக், ஸ்கூ ட்டரில் போகும்போது, பள்ளத்தில் தூக்கிப்போ டும்போதோ, இந்த அதிர்ச்சி தடுப்பான் டிஸ்க்கு க்கு உள்ளேயிருக்கும் ஜெல்லி போன்ற பொருள், பிய்த்துக் கொண் டு, பிதுங் கிக் கொண்டு கொஞ்சம் வெளியே வர ஆரம்பிக்கும்.
இப்படி பிதுங்கிக்கொண்டு வெளியே வரும் `ஜெல்லி’தான், அருகிலு ள்ள நரம்பை அழுத்தும். சிலபேருக்கு இந்த நரம்பு அழுத்தப்படுவ தால் தான், தொடையில் ஆரம்பித்து, காலின் கீழ் பகுதி வரை, தாங்க முடியாத வலி ஏற்படுகிறது. இடுப்பின் பின்பகுதியில் இருக்கும் ஐந்து டிஸ்க்குகளுக்கு `லம் பார் டிஸ்க்’ என்று பெயர்.
உடலில் ஏறும் எடையையும், உடல் எடையையும், அதிகமாக தாங் கக்கூடியது, இந்த `லம்பார் டிஸ்க்’தான். அதே மாதிரி இடுப்பு வளை ய, குனிய, நிமிர, இடுப்பைச் சுற்ற இந்த `லம்பார் டிஸ்க்’ நிறைய வே பயன்படுகிறது. அதே மாதிரி இந்த `லம்பார் டிஸ்க்கில் ஏற்படு ம் பாதிப்பு தான், இடுப்பு வலியாக நமக்கு காட்டுகிறது.
கல்யாணம், கச்சேரி போன்ற விழாக்களுக்கோ, மற்ற காரிய ங்களுக்கோ, வெளிïருக்கு குடும் பத்துடன் செல்லும் போது, கூட்ட ம் அதிகமாக இருப்பதால், படுக்க இடம் கிடைக்காது. இம்மாதிரி நேரங்களில், படுக்க இடம் கிடைத்தால் போதும் என்பதை விட, தூ ங்க இடம் கிடைத்தால் போதும் என்று நினைக்கும் அளவிற்கு இடநெருக்கடி ஏற்பட்டு விடும்.
இப்படி இடைஞ்சலில் இட நெருக்கடியில் தூங்கும்போது, நம் இஷ்டத்துக்கு கையை, காலை நீட்டியெல்லாம் தூங்க முடியாது. இப்படித் தூங்கினா ல், மறுநாள் காலையில் இடுப் பு வலி கண்டிப்பாக வரத்தான் செய்யும். டிரெயினில் பயணம் செய்யும்போது கூட, பெர்த்தில் நன்றாக நீட்டி, மடக்கி, உருண்டு, புரண்டு எல்லாம் தூங்க முடியாது.
கார், பஸ்சில் பயணம் செய்பவர்களுக்கும் இதே நிலைதான். மறு நாள் காலையில் இடுப்பு வலி ஏற் படத்தான் செய்யும். சிலபேர் ஆட் டோவில் போகும்போது, அந்த ஆட் டோவையே சொந்தமாக விலைக் கு வாங்கி விட்டதாக நினைத்துக் கொண்டு இரண்டு கைகளையும் விரித்து, கால்களையும் விரித்து, ஒரு சோபாவில் ஜமீன்தார் சாய்ந்து உட்கார்ந்திருக்கிற மாதிரி, உட்கார் ந்து கொண்டு வருவார்கள்.
ஆட்டோ திடீரென்று ஒரு பள்ளத்தில் விழுந்து எழுந்திருக்கும் போது , `அய்யோ, இடுப்பு போயிடுச்சே’ என்று கத்துவார்கள். இது தேவை யா? ஆட்டோவில் மட்டுமல்ல, கார், பஸ் முதலிய எதில் பய ணம் செய்யும்போது, பின்பக்கம் அதிகம் உடல் சாய்ந்தபடி உட்கா ராமல், முன்பக்கம் அதிகம் உடல் சாய்ந்தபடி உட்கார்ந்து கொண்டு, முன் னாலிருக்கும் கம்பியைப் பிடித்துக்கொண்டு பயணம் செய்ய வேண் டும்.
இப்படி உட்கார்ந்திருந்தால் வ ண்டி தூக்கிப் போடும் போது, நமது தண்டு வடத்துக்கு அதிக பாதிப்பு ஏற்படாது. இடுப்பு வலியும் வராது. அமெரிக்காவுக்கு, விமானத்தில் சுமார் 15 மணி நேரம் ஒரே இடத் தில் உட்கார்ந்து பயணம் செய்தால் கூட, இடுப்பு வலி ஏற்படும். எனவே ஒரு மணி அல்லது இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை எழுந்து, விமானத்துக்குள்ளேயே, ஒரு ரவுண் ட் அடித்து விட்டு, மறுபடியும் வந்து உட்காருங்கள்.
சாதாரணமாக வீட்டில் உட்கார்ந்திரு க்கும்போது கூட, கூன் போடாமல், தோள்பட்டை யெல்லாம் நேராக இல்லாமல், ஒரு பக்கமாக உடலை சாய்த்து, மிகவும் சோர்வாக இருப்ப து போல், எப்பொழுதும் உட்காராம ல், முன்பக்கம் குனிந்து உட்காராமல், முதுகை நேராக நிமிர்த்தி வைத்து உட்கார கற்றுக் கொள்ளுங்கள். ஆபீஸில் வேலை பார்ப்ப வர்கள், நாற்காலியில் சுமார் பத்து மணி நேரமாவது உட்கார வேண் டி வரும்.
இவர்கள் எல்லோருமே, குனியாமல், கூன் போ டாமல் நிமிர்ந்து உட்கா ர பழகுங்கள். உட்கார்ந் து கொண்டே போன் பேசுவதைத் தவிர்த்து, நின்றுகொண்டு அல்ல து நடந்து கொண்டு பே சுங்கள். முடிந்த வரை நின்று கொண்டு செய்கிற வேலைகளை, உட்கார்ந்து கொண்டு செய் யாதீர்கள். இடுப்பு வலி வராமல் தடுக்கலாம்.
அதிக எடையுள்ள பொருளைத் தூக்காதீர்கள். தூக்க முயற்சி செய் யாதீர்கள். எவ்வளவு எடை நீங்கள் தூக்குகிறீர்கள் என்பது முக்கிய மல்ல. அதை எப்படித் தூக்குகிறீர்கள் என்பதுதான் முக்கியம். இடுப்பு வலி வராமல் இருக்க, மேற்கண்ட விஷயங்களை கையாண்டு பாரு ங்கள். இடுப்பு வலியிலிருந்து தப்பிக்கலாம்.


திகைக்க வைக்கும் செக்ஸ் கொடுமைகள்

Posted On July 10,2012, By Muthukumar






அதிர்ச்சியானது.. கவலைக்குரியது.. அனைவரும் அறிந்துகொண்டு விழிப்புணர்வு அடைய வேண்டியது.. என்ன விஷயம் தெரியுமா?
- குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை என்ற கொடுமை!
* 53 சதவீத குழந்தைகள் ஏதாவது ஒரு வகையில் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.
* பாதிக்கப்படுபவைகளில் பெண் குழந்தைகளைவிட, ஆண் குழந்தைகளின் சதவீதம் அதிகம்.
* பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்ப குழந்தைகளைவிட மேல்தட்டு மற்றும் நடுத்தர வருவாய் குழந்தைகள் பாதிக்கப்படுவது அதிகம்.
* ஒன்று முதல் 18 வயது வரை உள்ளவர்கள் இந்த பாதிப்பு பட்டியலில் இடம்பிடிக்கிறார்கள்.
* 5 முதல் 12 வயது வரை பாதிப்பின் உச்சம். பாதிக்கப்பட்டவைகளில் 40 சதவீதம் இந்த வயதுதான். 30 சதவீதம் பேர் 13-14 வயதினர்.
குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்கிற வர்கள், பீடோபீலியா (Peadophilea) என்ற வக்கிர புத்தி கொண்டவர்கள். இது ஒரு மனநோயாகவும் கருதப்படுகிறது. சிறுவர்- சிறுமியர்கள் மூலம் இன்பமடையும் வக்கிரவாதிகள் மேலைநாடுகளில் அதிகம். `சைல்டு செக்ஸ் டூரிசம்' என்ற பெயரில் அவர்களை சில சமூக விரோத அமைப்புகள் ஆசிய நாடுகளுக்கு அழைத்து வருகின்றன. முன்பு தாய்லாந்து போன்ற நாடுகளில் கால்பாதித்த இந்த பாதகர்கள் இப்போது இந்தியாவில் ஒடிசா, கோவா, மகாபலிபுரம் போன்ற இடங்களுக்கு ரகசி யமாக வந்து `ஆசைகளை' தீர்த்துவிட்டு போகி றார்கள்.
இது தொடர்பான சமீபத்திய கணக்கெடுப்பு ஒன்று நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. பாலியல் தொழிலில் ஈடுபடுகிறவர்களில் 15 சதவீதத்தினர் 15 வயதிற்கும் குறைவானவர்களாக இருக்கி றார்கள். 25 சதவீதத்தினர் 16 முதல் 18 வயதிற்கு உள்பட்டவர்கள். 2005-ம் ஆண்டு இந்தியாவில் 44,476 குழந்தைகள் காணாமல் போயிருக்கிறார் கள். அவைகளில் 11,008 குழந்தைகள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. இவர்கள் பாலியலுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.
- குழந்தைகளை எளிதாக ஏமாற்ற முடியும்.
- குழந்தைகள் காட்டிக்கொடுக்காது.
- குழந்தைகளுக்கு விளைவுகளை புரியத்தெரியாது. எதிர்ப்பு தெரிவிக்காது.
- தனக்கு ஏற்பட்ட பாதிப்பை குழந்தைகளுக்கு விளக்கத் தெரியாது. விளக்கினாலும் பெற்றோர் அதை நம்பமாட்டார்கள்.
- வயதானவர்கள் குழந்தைகளிடம் கொஞ்சும் பாவனையில் வக்கிர செயலில் ஈடுபடும் போது, பெற்றோருக்கு சந்தேகம் வராது.
- ஆண்மை அதிகரிக்கும், ஆயுள் நீடிக்கும் போன்ற மூட நம்பிக்கைகள்.
இப்படிப்பட்ட பல காரணங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித் துக்கொண்டே போகிறது. கற்பனைக்கு எட்டாதவிதத்தில்கூட குழந்தைகள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.
குழந்தைகளுக்கு நன்கு தெரிந்த உறவினர்கள் அல்லது வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்கிறவர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், வேலைக்காரர்கள், அம்மாவின்- அப்பாவின் நண்பர்களாக வந்து போகிறவர்கள்.... போன்றவர்களால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம். புதிய நபர்களால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவு.
பயணங்கள், திருவிழா, திருமணவிழாக்களில் உருவாகும் மக்கள் நெருக்கடியை பயன் படுத்தி குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு தருபவர்கள் உண்டு. குழந்தை தொழி லாளர்கள், தெருவோரக் குழந்தைகள் இந்த பாதிப்பிற்கு உள்ளாகுவது சாதாரண விஷய மாக மாறிக்கொண்டிருக்கிறது. குழந்தை இல்லங்கள், அனாதை ஆசிரமங்கள், ஒருசில பள்ளிக்கூடங்களும் இதற்கு விதிவிலக்கல்ல.
பாலியல் பலாத்காரத்தால் குழந்தைகளுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. முதலா வதாக அவர்களுக்கு பால்வினை நோய்கள் உண்டாவதை குறிப்பிடலாம். குழந்தைகளின் `உறுப்பு' பகுதியில் புண்களோ, கட்டிகளோ, சீழ் வடிதலோ இருந்தாலும் குழந்தையின் தாய்க்கு அது பால்வினை நோயின் அடையாளம் என்ற சந்தேகம் வருவதில்லை. ஒருசில மருத்துவர்களும் அது பால்வினை நோயின் அறிகுறி என்பதை உணராமல், வேறு விதமான சிகிச்சைகள் கொடுத்துவிடுவதும் உண்டு.
நன்றாக தெரிந்தவர்களால் குழந்தைகளுக்கு பாலியல் பாதிப்பு ஏற்படும்போது, அவை களின் உடலில் காயங்களோ, சிராய்ப்புகளோ இருப்பதில்லை. அதனால் பெற்றோரோ, மருத் துவர் றகளோ குழந்தை பலாத்காரத்திற்கு உட்பட்டிருக்கிறது என்று முதலில் நினைப்ப தில்லை. அப்படியே நினைத்து விசாரித்தாலும் குழந்தையால் தனக்கு ஏற்பட்ட பாதிப்பை கூறமுடியாது.
வெளிநபர்களால் பாதிப்பு ஏற்படும்போது காயம், சிராய்ப்பு, உறுப்பு பகுதியில் ரத்தம் வடிதல் போன்றவை காணப்படும். அவசரத்திலும், பயத்துடனும் அந்த பாதகர்கள் செயல்படுவதால் குழந்தைகள் காயம் அடைந்துவிடுகின்றன.
பலாத்காரத்திற்கு உள்பட்ட குழந்தைகள் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிக்கப் படுகின்றன. பால்வினை நோய் மற்றும் காயங்களை சிகிச்சையால் குணப்படுத்திவிடலாம். ஆனால் மனநிலை பாதிப்பால் பிற்காலத்தில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். வயதுக்கு மீறிய பாலியல் மாற்றங்கள், மனச்சோர்வு, தாழ்வு மனப்பான்மை, எதைக் கண்டாலும்- யாரைக் கண்டாலும் பயம், தனிமை மீது விருப்பம், உணவில் நாட்டமின்மை, போதை மருந்துகளுக்கு அடிமையாகுதல், வீட்டை விட்டு ஓடுதல், படிப்பில் ஆர்வமின்மை, பாலியல் தொழில் ஆர்வம் போன்றவை முக்கியமான எதிர்கால பாதிப்புகளாகும்.
மக்கள் விழிப்புணர்வு கொண்டால் மட்டுமே இந்த பாதகத்தை தடுக்கவோ, குறைக்கவோ முடியும். சமூகத்தின் அடிப்படையில் இருந்து இந்த பணியை தொடங்கவேண்டும். பள்ளி கள், கல்லூரிகள், மருத்துவ துறை, தன்னார்வ அமைப்புகள், அரசு அமைப்புகள் ஆகிய அனைத்தும் இணைந்து விழிப்புணர்வு பிரசாரம் செய்யவேண்டும். தங்கள் தம்பி, தங்கை களை காத்து கண்காணிக்க மூத்த குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கவேண்டும். குழந்தைகளின் உடலில் எந்தெந்த பகுதிகளில் தொட்டால் அது நல்ல தொடுதல் என்றும்- எந்தெந்த பகுதிகளில் தொட்டால் அது தவறான அணுகுமுறை என்றும் சொல்லித்தர வேண்டும். இதை சரியாக சொல்லித்தர அம்மாக்களாலே முடியும்.
மற்றவர்களின் பிரச்சினைக்குரிய செயல்கள் பற்றியோ, பிரச்சினைக்குரிய நபர்கள் பற்றியோ குழந்தைகள் கூறினால் அதை அலட்சியப்படுத்தாமல் கண்காணிக்க வேண்டும். குழந்தைகளின் உடலில் ஏற்படும் மாற்றங்களைப் பார்த்து டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டும். யாரையும் நம்பி குழந்தைகளை விட்டுச்செல்லக்கூடாது. பொது இடங்களில் குழந்தைகளை ஜாக்கிரதையாக பார்த்துக்கொள்ளவேண்டும். இந்த பாதகத்தில் ஈடுபடு கிறவர்கள் நீதியின் முன்னே நிறுத்தப்பட்டு கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் ஒரு தனிநபர் பிரச்சினையோ, பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்து பிரச்சினையோ இல்லை. இது சமூக பிரச்சினை. அதனால் எல்லோரும் ஒன்றுபட்டு, ஒத்துழைத்து இதை தடுக்கவேண்டும்.
கட்டுரை: டாக்டர் என்.உஸ்மான் M.D., D.V., Ph.D., 
(பாலியல் நோய் நிபுணர் மற்றும்
உலக சுகாதார நிறுவன ஆலோசகர்) சென்னை.

தாம்பத்தியத்தை தவிர்க்க‍ வேண்டிய தருணங்கள்

ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது அவள் தாம்பத்திய உறவில் ஈடுபடக் கூடாது என்று சொல்லப்படு வதுண்டு. இதைத் தவிர வேறு எந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் அவள் உறவைத் தவிர்க்க வேண் டும்…?
* கர்ப்பமாக இருக்கும்போ தும் முதல் மூன்று மற்றும் கடைசி மூன்று மாதங்களைத் தவிர்த்து இடைப்பட்ட மாதங்களில் மிதமான செக்ஸ் வைத்துக் கொள்ளலாம். கர்ப்பிணி மனைவியை க் கட்டாயப்படுத்தி உறவு வைத் துக் கொண்டால், அவளது உடல் மற் றும் மனம் பாதிக்கப்படுவது மட்டு மின்றி பிறக்கும் குழந்தையின் மனநிலையும் பாதிக்கப் படக்கூடும்.
* பிரசவத்திற்குப் பிறகு சில தகவல்களைக் கருத்தில் கொண்டே தம் பதியர் உறவில் ஈடுபட வேண்டும். அதாவது பிரசவம் சிக்கலின்றி அமைந்ததா, சுகப்பிரசவமா அல் லது சிசேரியனா என்று பார்க்க வேண்டும்.
* சாதாரணமாக குழந்தைப்பேற் றுக்குப் பிறகு ஒரு பெண்ணின் கருப்பை சுருங்கி இயல்பு நிலை யை அடைய ஆறு வாரங்களாகு ம். இது தோராயக் கணக்குதான். சில பெண்களுக்கு அவரவர் உட ல் நிலையைப் பொறுத்து இந்தக் கணக்குக் கூடலாம். எனவே அப் பெண்ணின் உடல்நலம் சீராக இருப்பதாக மருத்துவர் உத்தர வாதம் கொடுத்த பிறகே உறவு கொள்ள வேண்டும்.
* குழந்தை பிறக்கும் போது பெண்ணின் உடலுறவுப் பாதையில் காய ங்கள் ஏற்பட்டிருந்தால் அவை ஆறுகிற வரை உறவைத் தவிர்க்க வேண்டும்.
* கணவனுக்குத் தொற்றும் வகையில் ஏதேனும் நோய் இருந்தால், அது முற்றிலும் குணமாகிற வரை மனைவி அவனுடன் உறவைத் தவிர்க்க வேண்டும்.
* பிரசவத்திற்குப் பிறகு பெண்ணி ன் உடல்நலம் முற்றிலும் சரியாகி விட்ட போதிலும், அவளுக்கு உற வில் விருப்ப மில்லை என்று தெரி ந்தால், அதற்குக் கட்டாயப் படுத்து வது கூடாது.
* உறவில் ஈடுபடும்போது உடலுற வுப் பாதையில் கடுமையான எரி ச்சலோ, வலியோ இருந்தால், அதை உடனடியாகத் தவிர்ப்பது நல் லது.
* கருச் சிதைவுக்குள்ளானவர்களும், குறை மாதப் பிரசவத்துக்கு ஆளானவர்களும் மருத்துவரின் ஆலோசனையின் பேரிலேயே உற வைத் தொடங்க வேண்டும்.
* மாதவிலக்கு நாட்களில் உறவு  கொ ண்டால், கருத்தரிக்காது என்று பல ரும் அந்நாளில் உறவு கொள்ள நினைப்பதுண்டு. ஆனால் அதை முழுமையாக நம்புவதற்கில்லை. அந்நாட்களில் உறவு கொள்வதன் மூலம் கணவன்-மனைவி இருவருக் குமே தொற்று நோய்கள் பரவ வாய்ப் புகள் அதிகம்.
* பெண் நோய் வாய்ப்பட்டிருந்தால் அந்நாட்களில் உறவைத் தவிர்ப் பதே நல்லது.
* கைக் குழந்தையிருக்கும் போது உறவில் ஈடுபட்டால் தாய்ப்பால் இல்லாமல் போய் விடும் என்று பல பெண்கள் அதைத்தவிர்ப்ப து ண்டு. ஆனால் இது வெறும் மூட நம்பிக்கையே. குழந்தை பிறந்து, குறுகிய காலத்திலே யே உறவு கொண்டால் கடுமை யான வலி இருக்கும் என்ற பய த்திலேயே அதைத் தவிர்க்கச் சொல்கிறார்கள்.
* பிரசவித்த பெண்கள் தாய்ப் பால் கொடுப்பதே கருத்தடை முறை என்று நினைத்துக் கொண்டு, தைரியமாக உறவு கொள்வதுண்டு. ஆனால் அதை நூறு சதவிகிதம் நம்ப வேண்டாம். ஏதாவதொரு காரணத்தால் பால் வற்றி விட்டால், அந்தப் பெண் கருத்தரிக்க வாய் ப்புகள் உண்டு

Sunday, 8 July 2012

விந்து முந்துதல்.

Posted On July 8,2012,By Muthukumar

பத்துப் பேரில் ஒருவர் (1/10) என்ற விகிதத்தில் மிகப் பரவலாக ஆண்களைப் பாதிக்கப்படும் நோய் எதுவென்றால் அது விந்து முந்துதல்தான்.


விந்து முந்துதலை ஆங்கிலத்தில் Premature Ejaculation என்பார்கள். இதுதான் ஆண்களை மிக அதிகமாகப் பாதிக்கும் பாலியல் பிரச்சினையாகும்.


உறவின் போது பெண் தனது உணர்வின் உச்ச கட்டத்தை எய்துவதற்கு முன்னரே ஆணுக்கு உணர்வின் உச்ச கட்டம் எட்டி விந்து வெளியேறிவிடுவதைத்தான் விந்து முந்துதல் என்கிறோம்.


ஆண்மைக் குறைபாடு அல்லது விறைப்படுவதில் சிக்கலுக்கு காரணங்கள் வேறு.
  •  இது ஆண்மைக் குறைபாட்டினால் ஏற்படுவதல்ல. 
  • இங்கு ஆண் உறுப்பு விறைப்படுவதில் எவ்வித பிரச்சனையும் இருப்பதில்லை. 
  • பாலுறவின் நாட்டத்திலும் குறைவிருப்பதில்லை.
யாரைப் பாதிக்கும்

  • பொதுவாக இது இளமைப் பருவத்தில் அதிகம் ஏற்படுகிறது. பாலியல் உணர்வுகள் அதிகமாகவும் தீவிரமாகவும் இருக்கும் பருவத்தில் பலரையும் பாதிக்கிறது. 
  • காலம் செல்லச் செல்ல, வயது முதிர முதிர தங்கள் உணர்வுகளைக் கட்டில் கொண்டு வர பல ஆண்களால் முடிகிறது. 
  • இருந்தபோதும் பல நடுத்தர வயதில் உள்ள ஆண்களையும் இது பாதிப்பதும் உண்மையே.

உசிதமான நேரம் எவ்வளவு? ஆய்வு முடிவுகள்

உச்ச கட்டத்தை அடைவதற்கு எந்தளவு நேரம் உசிதமானது என்பதைப் பற்றி சரியான தகவல்கள் இல்லை. இருந்தபோதும்  2006 ல் சமர்பிக்கப்பட்ட ஆய்வின் பிரகாரம் பொதுவாக

  • விந்து முந்துவதாகக் கருதும் ஆண்களுக்கு சராசரியாக 1.8 நிமிடங்களில் வெளியேறியது.
  • எவ்வித பிரச்சனையும் இல்லை, சாதாரணமாக வெளியேறுகிறது எனக் கருதும் ஆண்களுக்கு 7.3 நிமிடங்கள் தாக்குப் பிடிக்கத்தக்கதாக இருந்தது.
  •  இருந்தபோதும் 25 நிமிடங்கள் வரை விந்து வெளியேறாது உறவில் ஈடுபட முடிந்த சில ஆண்களும் கூட தமக்கு விந்து விரைவில் வெளியேறிவிடுவதாகக் கவலைப்பட்டதுண்டு.
  •  2.5 சதவிகிதமான ஆண்களுக்கு பெண் உறுப்பினுள் நுழைந்த பின்னர் 90 செகண்டுகள் கூட தாக்குப் பிடிக்க முடியாதிருந்தது.

எவ்வளவு நேரம் தாக்குப் பிடிக்க வேண்டும்?

எனவே இந்தப் பிரச்சனை பற்றி வெவ்வேறு மனிதர்களுக்கு வெவ்வேறு அளவுகோல்கள் இருக்கும் என்பது தெளிவாகிறது.

இருந்தபோதும் 20 நிமிடங்களுக்குக் குறைவான நேரம் மட்டுமே நீடிக்கும் உடலுறவைப் பெரும்பாலான தம்பதிகள் திருப்பதியற்றதாகக் கருதுகிறார்கள்.

பலவற்றையும் கருத்தில் எடுக்கும்போது 10 நிமிட நேரத்திற்குள் விந்து வெளியேறிவிடுவதை விந்து முந்துதல் எனப் பெரும்பாலான மருத்துவர்கள் கருதுகிறார்கள்.

இன்னும் சற்று பொதுப்படையாக சிந்தித்தால் நேரக் கணக்குகளைவிட திருப்தியடையும் உணர்வு முக்கியம் எனலாம். ஆண் அல்லது பெண் உச்ச கட்டம் சீக்கிரமாக எட்டி முடிந்துவிடுகிறது எனக் கருதினால் அங்கு விந்து முந்துதல் இருப்பதாகக் கருதலாம்.

காரணங்கள் என்ன?

  • இது ஏற்படுவதற்குக் காரணம. என்ன? ஒருவன் தனது பாலியல் உறவுகளின் ஆரம்ப கட்டங்களில் இதற்கு ஆற்றுப்படுத்தப்படுவதாகச் சிலர் கருதுகிறார்கள்.
மற்றவர்கள் கண்டு கொள்வார்களோ என்ற பதற்றமான சூழ்நிலைகளில் பயத்துடனும் அவசர அவசரமாகவும் உறவு கொண்டவர்களின் ஆரம்ப கால அனுபவங்களின் தொடர்ச்சியாக இது நேர்ந்திருக்கலாம். 

காலத்தை விரயமாக்காமல் அவசரமாக உறவு கொண்டு விந்நை வெளியேற்றிய நிகழ்வுகளால் பதனப்படுத்தியிருக்கலாம் என்கிறார்கள்.

ஆனால் அவ்வாறு இல்லாத பலருக்கும் விந்து முந்துதல் இருப்பதை அவதானிக்க முடிகிறது.
  • மற்றொரு காரணம் இது பரம்பரையில் வருவதாகவும் இருக்கலாம். விந்து முந்தியவரகள் பலரது தகப்பன்மாருக்கும் இது இருந்தது தெரிய வந்தது.
  • மனப்பதற்றம் முக்கிய காரணமாக இருப்பதையும் மறுக்க முடியாது. மனப் பதற்றம் பதகளிப்பு ஆகியவை விந்து விரைந்து வெளியேறக் காரணமாகின்றன. 
உடலுறவு என்பது உணர்வுகளோடு தொடர்புடையன. மனக் கிளர்ச்சி அதற்கு அவசியம். ஆனால் சஞ்சலமும், கவலையும் உறுப்புகளை சோரவும் ஈரலிப்பின்றி வரட்சியாகவும் ஆக்கும், அதே நேரம் பதகளிப்பு முந்தச் செய்துவிடலாம்.

இதனால்தான் சிலர் மது அருந்தி உறவு கொள்கிறார்கள். அதனால் தமது மனத்தடைகளை அகற்ற முடியும் என எண்ணுகிறார்கள்.
ஆற்றலை மேம்படுத்தாது
 ஆனால் மதுவானது ஆர்வத்தைத்த தூண்டுமளவு ஆற்றலை மேம்படுத்துவதில்லை. அத்துடன் வேண்டாத பல பக்க விளைவுகளையும் தீங்குகளையும் கொண்டுவரும் என்பது தெரிந்ததே.

என்ன செய்யலாம்?

மனம்

மனத்தைத் திருப்ப முயற்சியுங்கள். விந்து முந்திவிடுமா என அஞ்சிக் கொண்டிராமல் மனத்தை முற்றிலும் வேறு ஒரு விடயத்தினால் செலுத்தினால் விரைவாக வெளியேறுவதைத் தடுக்கலாம்.



களிம்பு மருந்துகள்

இவை தவிர, சில வெளிப் பூச்சு களிம்புகளும் பலன் அளிக்கும் என நம்பப்படுகிறது. இப் பிரச்சினை உள்ள ஆண்களின் உறுப்பின் முனையில் உள்ள மொட்டுப் பகுதியானது தூண்டப்படும் போது ஏனையவர்களதை விட கூடியளவு உணர் வினைத்திறனைக் கொண்டிருப்பதே முந்துவதற்குக் காரணம் என்று நம்பப்படுகிறது.

Lidocaine Gel

இதனால், அப்பகுதியை சற்று மரக்கச் செய்யும் விறைப்பு (மரக்கச் செய்யும்) மருந்துகள் (Topical anesthetic) உதவும் என்ற கருத்து நிலவுகிறது.

ஸ்பிரேயாகவும் கிடைக்கிறது

இம் மருந்துகள் உறுப்பின் மொட்டுப் பகுதியின் உணர்நிலையை (Sensitivity) சற்றுக் குறைப்பதன் மூலம் விந்து விரைவதைத் தாமதப்படுத்துகின்றன.

ஆனால் இம் மருந்தானது உணர்வை சற்று மரக்கச் செய்யக் கூடும். மருந்தை இடும் ஆணுக்கு மாத்திரமின்றி அவருடன் உறவு கொள்பவரின் உணர்வுகளையும் மந்தப்படுத்திவிடக் கூடிய பிரச்சனை இருக்கிறது. ஒரு சிலருக்கு பூசிய இடத்துத் தோலில் ஒவ்வாமை ஏற்றடவும் கூடும்.

விசேட ஆணுறை

இதற்கு மாற்றாக 'நீண்ட உறவு Long Love' எனப் பெயரிடப்பட்ட ஆணுறை மேல்நாடுகளில் அறிமுகப்பத்தப்பட்டுள்ளது. மரக்கச் செய்யும் மருந்துகளை (Benzocaine) பூச வேண்டிய தேவையில்லாமல், ஆணுறையில் உட்புறமாகக் கலந்திருக்கிறார்கள்.

 இலங்கையில் Stamina என்ற ஆணுறையை இலங்கைக் குடும்பக் கட்டுப்பாட்டுச் சங்கம் சந்தைப்படுத்தியுள்ளது.
Durex, Pasante போன்ற இன்னும் பல்வேறு பெயர்களில் வேறுநாடுகளில் கிடைக்கும்.

அழுத்திப் பிடிக்கும் முறை

அமெரிக்க மருத்துவர்களான மாஸ்டர்ஸ் ஜோன்சன் அறிமுகப்படுத்திய முறை இதுவாகும். மருந்து மாத்திரை, பூச்சு மருந்து எவையும் தேவையில்லை. மனைவியின ஒத்துழைப்பும் கணவனின் பங்களிப்பும் மட்டுமே தேவை. ஆயினும் சரியான முறையில் அதைப் பயில்வது அவசியம். விந்து வெளியேறவிருக்கும் தறுவாயில் ஆணுறுப்பை இறுக அழுத்திப் பிடிப்பதால் தடுக்கலாம்.

  • உறவின்போது பெண் தனது ஒரு கையால் விறைத்திருக்கும் ஆணின் குறியை பற்ற வேண்டும்.
  • பெருவிரல் ஒரு பக்கத்திலும், சுட்டி விரலும் நடுவிரல் மறுபக்கமாகவும் இருக்குமாறு பற்ற வேண்டும்.
  • அவ்வாறு பற்றும் போது சுட்டி விரலானது மொட்டிலுள்ள தடித்த வளையத்திற்கு முற்புறமாகவும், நடுவிரலானது மொட்டிலுள்ள தடித்த வளையத்திற்கு பின்புறமாகவும் இருக்கும்.
  • ஆண் தான் உச்ச கட்ட்டததை எட்டுவதாக உணர்ந்தவுடன் அதை பெண் பங்காளிக்கு உடனடியாகச் சொல்ல வேண்டும்.
  • உடனடியாக அவள் தனது பெருவிரலாலும், ஏனைய இரண்டு விரல்களாலும் அவனது உறுப்பை இறுக்கி அழுத்த வேண்டும். வலிக்காது. ஆனால் விந்து வெளியெறுவது தாமதப்படும்.


மருத்துகள்

இத்தகைய நடைமுறை சிகிச்சைகளால் பயன் இல்லையெனில் மருத்துவரை நாடுங்கள். உடலுறவில் முந்துவதைவிடவும் பிந்துவதை விடவும் இணைந்து ஓடுவதில்தான் இருவருக்குமே திருப்தியும் சந்தோஷமும் கிட்டும் என்பதைத் தாரக மந்திரம் போலச் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது. திருப்பதி கொள்வதற்கு மாற்று வழிகள் உள்ளன.

இறுதியாக..

இதற்கு சிகிச்சைகள் மட்டும் பயனளிப்பதில்லை. கணவன் மனைவி தம்மிடையே பிரச்சனைகளையும் விருப்பு வெறுப்புகளையும் வெளிப்படையாகப் பேசி, ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாத சகச உறவு இருக்க வேண்டும்.
  • நம்பிக்கையும்
  • புரிந்துணர்வும்
  • விட்டுக் கொடுப்புகளும்
நிலவினால் முந்துவதும் பிந்துவதும் அர்த்தம் கெட்டுப் போகும் என்பதே நிஜமாகும்.

புற்றணுக்களை கண்டறியும் நுண்ணிய வேகத்தடை கருவி!

Posted On July 8,2012,By Muthukumar
திருடர்களைப் பிடிக்கும் போலீஸ்காரர்களின் நிலைமை எப்படியோ தெரியாது. ஆனால் புற்றணுக்கள் தோன்றிய சிறிது காலத்திலேயே அவற்றை கண்டுபிடித்து தரும் மருத்துவக் கருவிகளைக் உருவாக்கும் விஞ்ஞானிகளின் பாடு திண்டாட்டம்தான். ஏனென்றால் புற்றணுக்களை தொடக்கத்திலேயே கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல!
உதாரணமாக, லட்சக்கணக்கான ஆரோக்கியமான உயிரணுக்களுக்கு மத்தியில் நல்ல பிள்ளை போல் சுற்றித்திரியும் பண்புடையவை புற்றணுக்கள். அவற்றை இனம் கண்டு அழிப்பதற்கு புத்தி சாதுர்யம் மட்டும் போதாது. ஆரோக்கியமான உயிரணுக்களை பாதிக்காத வண்ணம் புற்றணுக்களை அழிக்கும் லாவகமும் அவசியம்.
இந்த நோக்கத்தில் கண்டறியப்பட்ட பல்வேறு சோதனை கருவிகள் நம்மிடையே உண்டு என்றாலும், புற்றணுக்களை தொடக்கத்திலேயே கண்டறிந்து நோயாளிகளின் உயிரைக் காக்க மேலும் சக்திவாய்ந்த பரிசோதனைக் கருவிகள் அவசியப்படுகின்றன.
இந்த தலையாய பிரச்சினைக்கு ஒரு தீர்வு சொல்ல வந்திருக்கிறது மிகவும் சக்திவாய்ந்த, ஒரு புதிய கருவி. `நுண்ணிய வேகத்தடை கருவி' என்றழைக்கப்படும் இந்த கருவியை அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழத்தைச் சேர்ந்த இரு பொறியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
மைக்ரோ ப்ளூயிடிக் கருவி வகையைச் சேர்ந்த இந்த புதிய கருவி புவி ஈர்ப்பு விசையின் அடிப்படையில் நுண்ணிய பொருட்களை இனம் பிரித்து கொடுக்கக் கூடியது. சாலைகளில் உள்ள வேகத்தடையைப் போல, மைக்ரான் (ஒரு மீட்டரில் பத்து லட்சத்தில் ஒரு பகுதி) அளவுள்ள வேகத்தடைகளைக் கொண்ட இந்த கருவி நுண்ணிய பொருட்களை அவற்றின் எடை, அளவு அல்லது இதர பண்புகளின் அடிப்படையில் பிரித்து கொடுக்கக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வேகத்தடை கருவியை கண்டுபிடித்துள்ள ஆய்வு மாணவர் ஜோர்க் பெர்னேட்டின் நோக்கம், தினசரி மருத்துவப் பரிசோதனைகளுக்கு உதவும் வகையில் ஓர் எளிமையான கருவியை உருவாக்குவதுதானாம்.
கோடிக்கணக்கிலான ஆரோக்கியமான ரத்த உயிரணுக்களுக்கு மத்தியில் ஒளிந்து கொண்டு உயிர் வாழும் தன்மையுடையவை சுழலும் புற்றணுக்கள். இவை ரத்த ஓட்டத்தின் மூலம் பிற பகுதிகளுக்கு பரவும் முன்னரே இவற்றை இனம் கண்டுபிடிப்பதன் மூலம் எண்ணற்ற மக்களின் உயிரைக் காக்க இந்த வேகத்தடை கருவி உதவும் என்கிறார் மாணவர் பெர்னேட்!
அது சரி, இந்த வேகத்தடை கருவியை வைத்துக் கொண்டு புற்றணுக்களை எப்படி இனம் கண்டு கொள்வது?
இந்த மைக்ரோ ப்ளூயிடிக் கருவியின் உள்ளே வெவ்வேறு உயரங்கள் கொண்ட வேகத்தடை போன்ற வடிவமுள்ள பொருட்கள் கோணலாக வைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றின் மீது உயிரணுக்கள் மற்றும் இதர பொருட்கள் கலந்த திரவத்தை ஓடவிடும்போது இலகுவான பொருட்கள் போல கனமான பொருட்களால் இந்த வேகத்தடையை கடந்து செல்ல முடியாது.
வேகத்தடையை கடந்து செல்ல முடியாத அத்தகைய பொருட்கள் தங்கள் திசையை மாற்றிக்கொண்டு கோணலாக வைக்கப்பட்டுள்ள வேகத்தடையின் திசையிலேயே பயணிக்கத் தொடங்குகின்றன. இந்த நிகழ்வு தொடரத் தொடர, இறுதியில் வெவ்வேறு கனமுள்ள, அளவுள்ள பொருட்கள் வேவ்வேறு திசையில் செல்வதன் மூலம் சுலபமாக பிரிக்கப்படுகின்றன என்கிறார் பெர்னேட்.
இந்த கருவியிலுள்ள வேகத்தடையை கடந்து செல்ல முற்படும் பொருட்களின் வேகத்தை குறைக்க புவி ஈர்ப்பு விசை மட்டுமல்லாது வேறு யுக்திகளும் கையாளப்படுகின்றன. உதாரணமாக, மின்சார சக்தி அல்லது காந்த சக்தி உடைய பொருட்கள் மின்சாரம் அல்லது காந்த சக்தி செலுத்தப்பட்ட ஒரு சூழலில் வேகத்தடையை கடந்து செல்வது கடினம். இதனால், காந்த சக்தி செலுத்தப்பட்ட ஒரு கருவியில் காந்த மணிகளைக் கொண்டு புற்றணுக்களை கவர்ந்து பின்னர் அவற்றை இனம் பிரித்து விட முடியும் என்பது கவனிக்கத்தக்கது.
மைக்ரோ மற்றும் நானோ அளவுள்ள நுண்ணிய பொருட்களை இனம் கண்டு பிரிக்கும் திறன் சோலார் சக்தி முதல் உயிர் பாதுகாப்பு வரையிலான பல துறைகள் சார்ந்த தொழிற்சாலைகளுக்கு மிகவும் அவசியமானது. ஆனால், இந்த வேகத்தடை கருவியின் உடனடிப் பயன் மருத்துவ பரிசோதனைக் கருவிகள் உருவாக்கத்தில்தான் இருக்கக்கூடும் என்கிறார் ஆய்வு மாணவர் பெர்னேட்.
மொத்த ரத்தத்தையும் அதன் ஒவ்வொரு உருப்படிகளாக சுலபமாக இனம் பிரித்து கொடுத்துவிடும் இந்த வேகத்தடை கருவி காப்புரிமைக்காக காத்துக்கொண்டிருக்கிறது. ஆனால், அதே சமயம் புற்றணுக்களை இனம் கண்டு பிரித்துணரக்கூடிய இதன் திறன் காரணமாக உலக மக்களின் உயிரைக் காக்கும் கருவியாக மாறி பயன்படவும் இந்த நுண்ணிய வேகத்தடை கருவி காத்துக் கொண்டிருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

பெண்களுக்கு ஆண்களைப் பற்றி நிறைய விஷயங்கள் தெரியாது.

எப்போதும் பெண்களுக்கு எல்லாமே தெரியும் என்று நினைக்கக் கூடாது. மேலும் அவர்களுக்கு ஆண்க ளைப் பற்றி நிறைய விஷயங்கள் தெரியா து. சொல்லப்போனால் ஆண் கள் நிறைய விஷயத்தில் பெண்க ளைவிட மிகவும் திறமை யானவர்கள். அவை என்னென்ன வென்று சிறிது பார்ப்போமா!!!
1. ஆண்களுக்கு சமைப்பது என்றால் மிகவு ம் பிடிக்கும். சமைப்பதில் பெண்கள்தான் மிகவும் சிறந்தவர்கள் என்று யார் சொன் னார்கள்? சமையலறை பெண்களுக்குத் தான் என்று சொல்வது உண்மை தான். ஆனால் அப்படி சமைக்கும் பெண்களை விட, தனியாக வீடு எடுத்து தங்கி, சமைத் து உண்ணும் ஆண்களின் சமையல் உண் மையில் மிகவும் சுவையாக இருக்கும். ஆனால் அத்தகைய சமை யல், அவர்களது மனநிலையைப் பொறுத்ததே ஆகும்.
2. பெண்களை விட ஆண்களே மிகவும் உணர்ச்சி வசப்பட்டவர்கள். ஆண்கள் அனைவரும் ‘பெண்கள் உணர்ச்சிவசப்பட்டால் அழுவார் கள்’ என்று சொல்கின்றனர். உண் மையில் ஆண்களே உணர்ச்சி வய ப்பட்டவர்கள். ஆனால் அவர்கள் அதனை வெளிப்படுத்த மாட்டார் கள். பெண்கள் ஏதேனும் ஒரு கஷ் டம் என்றால் அழுது வெளிப்படு த்துவர். ஆனால் ஆண்கள் அதனை பகிர்ந்து கொள்ளமாட்டார்கள். ஏனெனில் ஆண்களிடம் இருக்கம் ஈகோ அதனை கட்டுப்படுத்தும்.
3. அடிக்கடி ஆண்கள் பெண்களை அதிகம் துன்புறுத்துவார்கள். ஆ னால் அதில் ஒரு காரணம் இருக்கும். அதிலும் அவர்கள் உடுத்தும் உடை, கூந்தல் அழகு, ஹை ஹீல்ஸ் அல்லது பேசும் விதம் போன் றவற்றை வைத்து துன்புறுத் துவதில் மிகவும் பிஸியாக இருப்பர். ஏனெனில் ஆண்கள் அவ்வாறு செய்தால் அது அவ ர்களது ஒரு வகையான அன் பை வெளிப்படுத்தும் விதம் ஆகும். ஆனால் அவ்வாறு செ ய்வது ஒரு அன்பின் காரண மாக என்று நிறைய பெண்க ளுக்கு தெரியாது.
4. நிறைய பேர் நினைக்கின்றனர், ஆண்கள் அனைவருக்கும் காம உணர்வு அதிகம், அவர்கள் எப்போதும் அந்த சிந்தனையிலேயே இரு ப்பர். ஆனால் உண்மையில் அவர்கள் எப்போதும் அவ்வாறு இருப்ப தில்லை, அவர்களது ஹார்மோன் தான் அவர்களை அவ்வாறு தூண் டுகிறது. இது நிறைய ஆராய்ச்சி யில் கூட நிரூபிக்கப்பட் டுள்ளது.
5. ஆண்களுக்கு வாயாடுவது என்ப து பிடிக்காது என்று நிறைய பெண் கள் நினைக்கின்றனர். ஆனால் ஆண்களுக்கும் பிடிக்கும். அவ்வ ளவாக வாயாடவில்லை என்றால் கூட ஓரளவாவது வாயாடுவர். அதி லும் அவர்கள் பெரும்பாலும் வாயாடுவது எதைப் பற்றி என்று கூறினால், பெண்களைப் பற்றி தான் இருக்கும்.