Posted On July 8,2012,By Muthukumar
பத்துப் பேரில் ஒருவர் (1/10) என்ற விகிதத்தில் மிகப் பரவலாக ஆண்களைப் பாதிக்கப்படும் நோய் எதுவென்றால் அது விந்து முந்துதல்தான்.
விந்து முந்துதலை ஆங்கிலத்தில் Premature Ejaculation என்பார்கள். இதுதான் ஆண்களை மிக அதிகமாகப் பாதிக்கும் பாலியல் பிரச்சினையாகும்.
உறவின் போது பெண் தனது உணர்வின் உச்ச கட்டத்தை எய்துவதற்கு முன்னரே ஆணுக்கு உணர்வின் உச்ச கட்டம் எட்டி விந்து வெளியேறிவிடுவதைத்தான் விந்து முந்துதல் என்கிறோம்.
உச்ச கட்டத்தை அடைவதற்கு எந்தளவு நேரம் உசிதமானது என்பதைப் பற்றி சரியான தகவல்கள் இல்லை. இருந்தபோதும் 2006 ல் சமர்பிக்கப்பட்ட ஆய்வின் பிரகாரம் பொதுவாக
எவ்வளவு நேரம் தாக்குப் பிடிக்க வேண்டும்?
எனவே இந்தப் பிரச்சனை பற்றி வெவ்வேறு மனிதர்களுக்கு வெவ்வேறு அளவுகோல்கள் இருக்கும் என்பது தெளிவாகிறது.
இருந்தபோதும் 20 நிமிடங்களுக்குக் குறைவான நேரம் மட்டுமே நீடிக்கும் உடலுறவைப் பெரும்பாலான தம்பதிகள் திருப்பதியற்றதாகக் கருதுகிறார்கள்.
பலவற்றையும் கருத்தில் எடுக்கும்போது 10 நிமிட நேரத்திற்குள் விந்து வெளியேறிவிடுவதை விந்து முந்துதல் எனப் பெரும்பாலான மருத்துவர்கள் கருதுகிறார்கள்.
இன்னும் சற்று பொதுப்படையாக சிந்தித்தால் நேரக் கணக்குகளைவிட திருப்தியடையும் உணர்வு முக்கியம் எனலாம். ஆண் அல்லது பெண் உச்ச கட்டம் சீக்கிரமாக எட்டி முடிந்துவிடுகிறது எனக் கருதினால் அங்கு விந்து முந்துதல் இருப்பதாகக் கருதலாம்.
காலத்தை விரயமாக்காமல் அவசரமாக உறவு கொண்டு விந்நை வெளியேற்றிய நிகழ்வுகளால் பதனப்படுத்தியிருக்கலாம் என்கிறார்கள்.
ஆனால் அவ்வாறு இல்லாத பலருக்கும் விந்து முந்துதல் இருப்பதை அவதானிக்க முடிகிறது.
இதனால்தான் சிலர் மது அருந்தி உறவு கொள்கிறார்கள். அதனால் தமது மனத்தடைகளை அகற்ற முடியும் என எண்ணுகிறார்கள்.
ஆனால் மதுவானது ஆர்வத்தைத்த தூண்டுமளவு ஆற்றலை மேம்படுத்துவதில்லை.
அத்துடன் வேண்டாத பல பக்க விளைவுகளையும் தீங்குகளையும் கொண்டுவரும் என்பது
தெரிந்ததே.
மனத்தைத் திருப்ப முயற்சியுங்கள். விந்து முந்திவிடுமா என அஞ்சிக் கொண்டிராமல் மனத்தை முற்றிலும் வேறு ஒரு விடயத்தினால் செலுத்தினால் விரைவாக வெளியேறுவதைத் தடுக்கலாம்.
இவை தவிர, சில வெளிப் பூச்சு களிம்புகளும் பலன் அளிக்கும் என நம்பப்படுகிறது. இப் பிரச்சினை உள்ள ஆண்களின் உறுப்பின் முனையில் உள்ள மொட்டுப் பகுதியானது தூண்டப்படும் போது ஏனையவர்களதை விட கூடியளவு உணர் வினைத்திறனைக் கொண்டிருப்பதே முந்துவதற்குக் காரணம் என்று நம்பப்படுகிறது.
இதனால், அப்பகுதியை சற்று மரக்கச் செய்யும் விறைப்பு (மரக்கச் செய்யும்) மருந்துகள் (Topical anesthetic) உதவும் என்ற கருத்து நிலவுகிறது.
இம் மருந்துகள் உறுப்பின் மொட்டுப் பகுதியின் உணர்நிலையை (Sensitivity) சற்றுக் குறைப்பதன் மூலம் விந்து விரைவதைத் தாமதப்படுத்துகின்றன.
ஆனால் இம் மருந்தானது உணர்வை சற்று மரக்கச் செய்யக் கூடும். மருந்தை இடும் ஆணுக்கு மாத்திரமின்றி அவருடன் உறவு கொள்பவரின் உணர்வுகளையும் மந்தப்படுத்திவிடக் கூடிய பிரச்சனை இருக்கிறது. ஒரு சிலருக்கு பூசிய இடத்துத் தோலில் ஒவ்வாமை ஏற்றடவும் கூடும்.
இதற்கு மாற்றாக 'நீண்ட உறவு Long Love' எனப் பெயரிடப்பட்ட ஆணுறை மேல்நாடுகளில் அறிமுகப்பத்தப்பட்டுள்ளது. மரக்கச் செய்யும் மருந்துகளை (Benzocaine) பூச வேண்டிய தேவையில்லாமல், ஆணுறையில் உட்புறமாகக் கலந்திருக்கிறார்கள்.
இலங்கையில் Stamina என்ற ஆணுறையை இலங்கைக் குடும்பக் கட்டுப்பாட்டுச் சங்கம் சந்தைப்படுத்தியுள்ளது.
Durex, Pasante போன்ற இன்னும் பல்வேறு பெயர்களில் வேறுநாடுகளில் கிடைக்கும்.
அமெரிக்க மருத்துவர்களான மாஸ்டர்ஸ் ஜோன்சன் அறிமுகப்படுத்திய முறை இதுவாகும். மருந்து மாத்திரை, பூச்சு மருந்து எவையும் தேவையில்லை. மனைவியின ஒத்துழைப்பும் கணவனின் பங்களிப்பும் மட்டுமே தேவை. ஆயினும் சரியான முறையில் அதைப் பயில்வது அவசியம். விந்து வெளியேறவிருக்கும் தறுவாயில் ஆணுறுப்பை இறுக அழுத்திப் பிடிப்பதால் தடுக்கலாம்.
மருத்துகள்
இத்தகைய நடைமுறை சிகிச்சைகளால் பயன் இல்லையெனில் மருத்துவரை நாடுங்கள். உடலுறவில் முந்துவதைவிடவும் பிந்துவதை விடவும் இணைந்து ஓடுவதில்தான் இருவருக்குமே திருப்தியும் சந்தோஷமும் கிட்டும் என்பதைத் தாரக மந்திரம் போலச் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது. திருப்பதி கொள்வதற்கு மாற்று வழிகள் உள்ளன.
இதற்கு சிகிச்சைகள் மட்டும் பயனளிப்பதில்லை. கணவன் மனைவி தம்மிடையே பிரச்சனைகளையும் விருப்பு வெறுப்புகளையும் வெளிப்படையாகப் பேசி, ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாத சகச உறவு இருக்க வேண்டும்.
விந்து முந்துதலை ஆங்கிலத்தில் Premature Ejaculation என்பார்கள். இதுதான் ஆண்களை மிக அதிகமாகப் பாதிக்கும் பாலியல் பிரச்சினையாகும்.
உறவின் போது பெண் தனது உணர்வின் உச்ச கட்டத்தை எய்துவதற்கு முன்னரே ஆணுக்கு உணர்வின் உச்ச கட்டம் எட்டி விந்து வெளியேறிவிடுவதைத்தான் விந்து முந்துதல் என்கிறோம்.
ஆண்மைக் குறைபாடு அல்லது விறைப்படுவதில் சிக்கலுக்கு காரணங்கள் வேறு. |
- இது ஆண்மைக் குறைபாட்டினால் ஏற்படுவதல்ல.
- இங்கு ஆண் உறுப்பு விறைப்படுவதில் எவ்வித பிரச்சனையும் இருப்பதில்லை.
- பாலுறவின் நாட்டத்திலும் குறைவிருப்பதில்லை.
யாரைப் பாதிக்கும்
- பொதுவாக இது இளமைப் பருவத்தில் அதிகம் ஏற்படுகிறது. பாலியல் உணர்வுகள் அதிகமாகவும் தீவிரமாகவும் இருக்கும் பருவத்தில் பலரையும் பாதிக்கிறது.
- காலம் செல்லச் செல்ல, வயது முதிர முதிர தங்கள் உணர்வுகளைக் கட்டில் கொண்டு வர பல ஆண்களால் முடிகிறது.
- இருந்தபோதும் பல நடுத்தர வயதில் உள்ள ஆண்களையும் இது பாதிப்பதும் உண்மையே.
உசிதமான நேரம் எவ்வளவு? ஆய்வு முடிவுகள்
உச்ச கட்டத்தை அடைவதற்கு எந்தளவு நேரம் உசிதமானது என்பதைப் பற்றி சரியான தகவல்கள் இல்லை. இருந்தபோதும் 2006 ல் சமர்பிக்கப்பட்ட ஆய்வின் பிரகாரம் பொதுவாக
- விந்து முந்துவதாகக் கருதும் ஆண்களுக்கு சராசரியாக 1.8 நிமிடங்களில் வெளியேறியது.
- எவ்வித பிரச்சனையும் இல்லை, சாதாரணமாக வெளியேறுகிறது எனக் கருதும் ஆண்களுக்கு 7.3 நிமிடங்கள் தாக்குப் பிடிக்கத்தக்கதாக இருந்தது.
- இருந்தபோதும் 25 நிமிடங்கள் வரை விந்து வெளியேறாது உறவில் ஈடுபட முடிந்த சில ஆண்களும் கூட தமக்கு விந்து விரைவில் வெளியேறிவிடுவதாகக் கவலைப்பட்டதுண்டு.
- 2.5 சதவிகிதமான ஆண்களுக்கு பெண் உறுப்பினுள் நுழைந்த பின்னர் 90 செகண்டுகள் கூட தாக்குப் பிடிக்க முடியாதிருந்தது.
எவ்வளவு நேரம் தாக்குப் பிடிக்க வேண்டும்?
எனவே இந்தப் பிரச்சனை பற்றி வெவ்வேறு மனிதர்களுக்கு வெவ்வேறு அளவுகோல்கள் இருக்கும் என்பது தெளிவாகிறது.
இருந்தபோதும் 20 நிமிடங்களுக்குக் குறைவான நேரம் மட்டுமே நீடிக்கும் உடலுறவைப் பெரும்பாலான தம்பதிகள் திருப்பதியற்றதாகக் கருதுகிறார்கள்.
பலவற்றையும் கருத்தில் எடுக்கும்போது 10 நிமிட நேரத்திற்குள் விந்து வெளியேறிவிடுவதை விந்து முந்துதல் எனப் பெரும்பாலான மருத்துவர்கள் கருதுகிறார்கள்.
இன்னும் சற்று பொதுப்படையாக சிந்தித்தால் நேரக் கணக்குகளைவிட திருப்தியடையும் உணர்வு முக்கியம் எனலாம். ஆண் அல்லது பெண் உச்ச கட்டம் சீக்கிரமாக எட்டி முடிந்துவிடுகிறது எனக் கருதினால் அங்கு விந்து முந்துதல் இருப்பதாகக் கருதலாம்.
காரணங்கள் என்ன?
- இது ஏற்படுவதற்குக் காரணம. என்ன? ஒருவன் தனது பாலியல் உறவுகளின் ஆரம்ப கட்டங்களில் இதற்கு ஆற்றுப்படுத்தப்படுவதாகச் சிலர் கருதுகிறார்கள்.
காலத்தை விரயமாக்காமல் அவசரமாக உறவு கொண்டு விந்நை வெளியேற்றிய நிகழ்வுகளால் பதனப்படுத்தியிருக்கலாம் என்கிறார்கள்.
ஆனால் அவ்வாறு இல்லாத பலருக்கும் விந்து முந்துதல் இருப்பதை அவதானிக்க முடிகிறது.
- மற்றொரு காரணம் இது பரம்பரையில் வருவதாகவும் இருக்கலாம். விந்து முந்தியவரகள் பலரது தகப்பன்மாருக்கும் இது இருந்தது தெரிய வந்தது.
- மனப்பதற்றம் முக்கிய காரணமாக இருப்பதையும் மறுக்க முடியாது. மனப் பதற்றம் பதகளிப்பு ஆகியவை விந்து விரைந்து வெளியேறக் காரணமாகின்றன.
இதனால்தான் சிலர் மது அருந்தி உறவு கொள்கிறார்கள். அதனால் தமது மனத்தடைகளை அகற்ற முடியும் என எண்ணுகிறார்கள்.
ஆற்றலை மேம்படுத்தாது |
என்ன செய்யலாம்?
மனம்
மனத்தைத் திருப்ப முயற்சியுங்கள். விந்து முந்திவிடுமா என அஞ்சிக் கொண்டிராமல் மனத்தை முற்றிலும் வேறு ஒரு விடயத்தினால் செலுத்தினால் விரைவாக வெளியேறுவதைத் தடுக்கலாம்.
களிம்பு மருந்துகள்
இவை தவிர, சில வெளிப் பூச்சு களிம்புகளும் பலன் அளிக்கும் என நம்பப்படுகிறது. இப் பிரச்சினை உள்ள ஆண்களின் உறுப்பின் முனையில் உள்ள மொட்டுப் பகுதியானது தூண்டப்படும் போது ஏனையவர்களதை விட கூடியளவு உணர் வினைத்திறனைக் கொண்டிருப்பதே முந்துவதற்குக் காரணம் என்று நம்பப்படுகிறது.
Lidocaine Gel |
இதனால், அப்பகுதியை சற்று மரக்கச் செய்யும் விறைப்பு (மரக்கச் செய்யும்) மருந்துகள் (Topical anesthetic) உதவும் என்ற கருத்து நிலவுகிறது.
ஸ்பிரேயாகவும் கிடைக்கிறது |
இம் மருந்துகள் உறுப்பின் மொட்டுப் பகுதியின் உணர்நிலையை (Sensitivity) சற்றுக் குறைப்பதன் மூலம் விந்து விரைவதைத் தாமதப்படுத்துகின்றன.
ஆனால் இம் மருந்தானது உணர்வை சற்று மரக்கச் செய்யக் கூடும். மருந்தை இடும் ஆணுக்கு மாத்திரமின்றி அவருடன் உறவு கொள்பவரின் உணர்வுகளையும் மந்தப்படுத்திவிடக் கூடிய பிரச்சனை இருக்கிறது. ஒரு சிலருக்கு பூசிய இடத்துத் தோலில் ஒவ்வாமை ஏற்றடவும் கூடும்.
விசேட ஆணுறை
இதற்கு மாற்றாக 'நீண்ட உறவு Long Love' எனப் பெயரிடப்பட்ட ஆணுறை மேல்நாடுகளில் அறிமுகப்பத்தப்பட்டுள்ளது. மரக்கச் செய்யும் மருந்துகளை (Benzocaine) பூச வேண்டிய தேவையில்லாமல், ஆணுறையில் உட்புறமாகக் கலந்திருக்கிறார்கள்.
இலங்கையில் Stamina என்ற ஆணுறையை இலங்கைக் குடும்பக் கட்டுப்பாட்டுச் சங்கம் சந்தைப்படுத்தியுள்ளது.
Durex, Pasante போன்ற இன்னும் பல்வேறு பெயர்களில் வேறுநாடுகளில் கிடைக்கும்.
அழுத்திப் பிடிக்கும் முறை
அமெரிக்க மருத்துவர்களான மாஸ்டர்ஸ் ஜோன்சன் அறிமுகப்படுத்திய முறை இதுவாகும். மருந்து மாத்திரை, பூச்சு மருந்து எவையும் தேவையில்லை. மனைவியின ஒத்துழைப்பும் கணவனின் பங்களிப்பும் மட்டுமே தேவை. ஆயினும் சரியான முறையில் அதைப் பயில்வது அவசியம். விந்து வெளியேறவிருக்கும் தறுவாயில் ஆணுறுப்பை இறுக அழுத்திப் பிடிப்பதால் தடுக்கலாம்.
- உறவின்போது பெண் தனது ஒரு கையால் விறைத்திருக்கும் ஆணின் குறியை பற்ற வேண்டும்.
- பெருவிரல் ஒரு பக்கத்திலும், சுட்டி விரலும் நடுவிரல் மறுபக்கமாகவும் இருக்குமாறு பற்ற வேண்டும்.
- அவ்வாறு பற்றும் போது சுட்டி விரலானது மொட்டிலுள்ள தடித்த வளையத்திற்கு முற்புறமாகவும், நடுவிரலானது மொட்டிலுள்ள தடித்த வளையத்திற்கு பின்புறமாகவும் இருக்கும்.
- ஆண் தான் உச்ச கட்ட்டததை எட்டுவதாக உணர்ந்தவுடன் அதை பெண் பங்காளிக்கு உடனடியாகச் சொல்ல வேண்டும்.
- உடனடியாக அவள் தனது பெருவிரலாலும், ஏனைய இரண்டு விரல்களாலும் அவனது உறுப்பை இறுக்கி அழுத்த வேண்டும். வலிக்காது. ஆனால் விந்து வெளியெறுவது தாமதப்படும்.
மருத்துகள்
இத்தகைய நடைமுறை சிகிச்சைகளால் பயன் இல்லையெனில் மருத்துவரை நாடுங்கள். உடலுறவில் முந்துவதைவிடவும் பிந்துவதை விடவும் இணைந்து ஓடுவதில்தான் இருவருக்குமே திருப்தியும் சந்தோஷமும் கிட்டும் என்பதைத் தாரக மந்திரம் போலச் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது. திருப்பதி கொள்வதற்கு மாற்று வழிகள் உள்ளன.
இறுதியாக..
இதற்கு சிகிச்சைகள் மட்டும் பயனளிப்பதில்லை. கணவன் மனைவி தம்மிடையே பிரச்சனைகளையும் விருப்பு வெறுப்புகளையும் வெளிப்படையாகப் பேசி, ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாத சகச உறவு இருக்க வேண்டும்.
- நம்பிக்கையும்
- புரிந்துணர்வும்
- விட்டுக் கொடுப்புகளும்
No comments:
Post a Comment