Saturday, 14 April 2012

தாய்ப்பால் பற்றி பெண்கள் தெரிந்து கொள்ளவேண்டிய அவசிய குறிப்புக்கள் :

Posted On April 14,2012,By Muthukumar

குழந்தைகளுக்கு தாய்ப்பால்தான் தரவேண்டும் என்று, குழந்தை பெற்ற பெண்களுக்கு அவர்களது தாய்மார்கள் எடுத்துசொல்வதுண்டு. தாய்ப்பாலில் அப்படி என்னதான் சத்துக்கள் உள்ளன என்று குழந்தை பெற்ற எல்லா பெண்களுக்கும் தெரிந்து வைத்துள்ளீர்களா என்ற கேள்விக்கு ஒரு சிலர் இல்லை என பதில் கூறலாம்.
          தாய்ப்பால் குழந்தைக்குத் தேவையான சத்துக்களை எப்படி ஈடு செய்கிறது? ஒரு குழந்தைக்கு தாய்ப்பால் பற்றாக்குறை கூட ஏற்படுமா? என்கிற கேள்விகளுக்கு சென்னை இசபெல்லா மருத்துவமனையில் பணிபுரியும் நியோ நேட்டாலஜிஸ்ட் வைத்தியர் சுப்பிரமணியன் இவ்வாறு பதில் அளிக்கிறார்.

       தாய்ப்பாலில் மட்டும்தான் பச்சிளம் குழந்தைக்குத் தேவையான கால்சியமும், பாஸ்பரசும் 2 : 1 என்கிற விகிதத்தில் உள்ளது. இதுதான் குழந்தைக்கு சரியான அளவுகோல். பசும்பாலில் பாஸ்பரஸ் அதிகமாக இருக்கும். ஆனால் அது கால்சியத்துடன் இணைந்து சால்டாக மாறிவிடும். எனவே பசும்பாலில் உள்ள கால்சியம் பச்சிளம் குழந்தைகளுக்குப் பயன்படாத கால்சியமாகவே இருக்கிறது.

     அது போலத்தான் பசும்பாலில் caesin-whey புரோட்டீன்தான் இருக்கிறது. பச்சிளம் குழந்தைக்குத் தேவையானதோ whey புரோட்டீன். இந்த whey புரோட்டீன் தாய்ப்பாலில் மட்டும்தான் உள்ளது. இந்த புரோட்டீன்தான் பச்சிளம் குழந்தைகளுக்கு பொருத்தமான வகை புரோட்டீன். பசும்பாலில் இப்படி பச்சிளம் குழந்தைகளுக்கு தேவையான சத்துக்கள் எதுவும் சரிவிகிதத்தில் இல்லாததனால் பச்சிளம் குழந்தையின் மெத்தென்ற குடலில் அலர்ஜி உண்டாகும். இதனால் டயரியா ஆகும். மோஷனில் கண்ணுக்குத் தெரியாமல் பிளீடிங் கூட ஆகும்.

        தாய்ப்பாலால் குழந்தைக்கு மேற்சொன்ன பிரச்சனைகள் எதுவும் வராது. தாய்ப்பாலில் உள்ள மைக்ரோ நியுட்ரிஷியன்ஸ் குழந்தைக்குத் தேவையான இன்பெக்ஷன் எதிர்ப்புச் சக்தியைத் தரும். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு வயிற்றுவலி வருவதற்கான வாய்ப்புக்கள் மிகமிக குறைவு. பசும்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு வயிற்றுவலி வருவதற்கான வாய்ப்புகள் மிகமிக அதிகம்.

வேலைக்குப் போகும் தாய்மார்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது எப்படி?

        குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் வரை தாய்க்கு அலுவலகத்திலிருந்து கட்டாய ஓய்வு தேவை. தவிர இந்த மூன்று மாத கால அவகாசம் குழந்தைக்கு தாய்ப்பால் முழுமையாக கொடுக்கவும் பயன்படுகிறது. அதன் பின் தாய் ஒருவாரம், பத்து நாளில் வேலைக்குப் போகவேண்டும் என்றால், தாய்ப்பாலை முன்கூட்டியே எடுத்து வைத்து விட்டால் நான்கு மணி நேரம் வரை அந்த பாலை குழந்தைக்கு கொடுக்கலாம். குளிர்சாதன பெட்டியில் பத்திரமாக வைத்தால் 7 முதல் 10 நாள்வரை தரலாம்.
 
தாய்ப்பாலை குளிர்சாதனபெட்டியிலிருந்து வெளியில் எடுத்துவைத்து, அது அறையின் சீதோஷன நிலைக்கு சரியாக வந்தவுடன் கரண்டி அல்லது பாலாடையில், குழந்தைக்குப் புகட்டலாம். கண்டிப்பாக பாட்டில் பழக்கப் படுத்தாதீர்கள். அப்படி பாட்டிலில் கொடுத்தால் காதுவலி, அல்லது டயரியா வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகம்.

        குளிர்சாதன பெட்டியில் அல்லது பிரீஷரில் வைத்திருக்கும் பாலை எடுப்பதற்குள் குழந்தை அழுகிறதென்றால் எப்படி உடனடியாக பால் ஊட்டுவது?

கவலை வேண்டாம், ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்கவைத்து அடுப்பை அணைத்துவிடுங்கள். ஒரு சின்ன கிண்ணத்தில் தாய்ப்பாலை விட்டு, அதை கொதிக்கும் தண்ணீர் உள்ள பாத்திரத்தின் உள்ளே வைத்துவிடுங்கள். பால் வெதுவெதுப்பான நிலைக்கு வந்தவுடன் பாலை குழந்தைக்குப் புகட்டுங்கள். எச்சரிக்கை : தாய்ப்பாலை நேரடியாக சூடு செய்யக்கூடாது.

        அலுவலக நேரங்களில் கூட, தாய்மார்கள் மார்பகத்தில் ஊறியிருக்கும் தாய்ப்பாலை பம்ப் செய்து எடுத்து அலுவலக பிரிட்ஜில் வைத்து பின் வீட்டில் எடுத்து வந்து வைக்கலாம்.
 
தாய்ப்பால் இல்லை என்கிற குற்றச்சாட்டு சரியானதா?
 
      ஒரு பெண்ணிடம் தாய்ப்பால் போதுமான அளவு சுரப்பு இல்லை என குற்றம் சுமத்த முடியாது. குழந்தைக்கு தவறான நிலையிலிருந்து  பாலூட்டினாலோ, நிப்புள் வலிக்கும்படியாக வெறும் நிப்புளை மட்டும் குழந்தையின் வாயில் வைத்து பாலூட்டினாலோ, தாய்க்கு தாய்ப்பால் ஊறாது. இதற்கு சரியான ஆலோசனை பெற்று, தாய்ப்பால் புகட்டினால் கண்டிப்பாக தாய்ப்பால் ஊறும்.
    
 தாய்ப்பால் போதுமானதாக இல்லை என்றால் மருத்துவர்கள் அவ்வளவு சீக்கிரம் ஒரு பெண்ணுக்கு தாய்ப்பால் ஊற மருந்துகள் பரிந்துரைப்பதில்லை. உணவின் மூலமே இயற்கையாக தாய்ப்பால் ஊறுவதே சரி. உண்மையில் தேவைப்பட்டால், நம் உணவையே மையமாகக் கொண்ட சித்த ஆயுர்வேத மருந்துகளை பரிந்துரைப்பார்கள்.
 
தாய்ப்பாலில் இல்லாத சத்துக்கள் ஏதேனும் உண்டா?

 ஆம். ஒரு குறை உண்டு. தாய்ப்பாலில் வைட்டமின் D இல்லை என்பது இரண்டு வருடத்திற்கு முன் நிரூபிக்கப் பட்ட ஆராய்ச்சி உண்மை. எனவே குழந்தை பிறந்த உடனே வெறும் வைட்டமின் D சொட்டுமருந்தும் தரவேண்டும். குழந்தை பெற்ற பெண்களும் இதை கேட்டு வாங்க வேண்டும். இதற்காக நாங்கள் பல விழிப்புணர்வு முகாம்கள் நடத்திவருகிறோம்.

     நமது நாட்டு சீதோஷண நிலையில்தான் வெயில் அதிகமாயிற்றே. நமக்கு இயற்கையாகவே வைட்டமின் D கிடைக்குமே. என நீங்கள் நினைத்தால் அது தவறு. நமது கருந்தோல் அவ்வளவு விரைவில் வைட்டமின் D யை உள்வாங்கும் தன்மை வாய்ந்ததாக இல்லை என்பதுதான் உண்மை.
   
ஒரு தாய்க்கு வைட்டமின் D பற்றாக்குறையாக இருந்தால், குழந்தைக்கும் வைட்டமின் D பற்றாக்குறையாகத்தான் இருக்கும். எனவே குழந்தை பிறந்த உடனே வைட்டமின் D சொட்டுமருந்தும் கொடுத்துப் பழக்கவேண்டும்.  

பட்டுப்புடவை – பாதுகாப்பு

பண்டிகை காலங்களில். பட்டுப் புடவை கட்டுவதற்கு அதிக வாய்ப் புகள் இருக்கும். கட்டியபின்பின் அவற் றை பாதுகாப்பது அவசி யம். இதோ சில ஐடியாக்கள்…
* பட்டுத் துணிகளை சோப்புப் போட்டு நீண்ட நேரம் ஊற வைப்ப தையும், அல சும்போது முறுக்கிப் பிழிவதையும் தவிர் க்க வேண் டும் . அடித்துத் துவைப்பதும் கூடாது.
* துவைத்து உலர்த்தும் போது, வெயிலி ல் உலர்த்தாமல், நிழலில், காற்றில் படும் படி போடுவது நல்லது.
* பட்டுப் புடவையை இஸ்திரி செய்யும் போது, அதன் மீது சுத்த மான வெள்ளைத் துணியைப் போட்டோ அல்லது புடவையைத் திருப்பி வைத்தோ, மிதமான சூட்டில் இஸ் திரி செய்ய வேண்டும்.
* புதிதாக வாங்கும் பட்டுப் புடவைகளை, ஒரு ஆண்டுக்குள் துவை க்க வேண்டியது அவசியம். முதலில் து வைக்கும்போது, சோப்பு போடாமல், நல்ல தண்ணீரில், உடல் பகுதியைத் தனியாகவும், பார்டர் பகுதியைத் தனியா கவும் அலச வேண்டும்.
* பட்டுப் புடவைகளை வாஷிங் மிஷினில் போட்டுத் துவைப்பதை விட, கையால் துவைப்பதே மேல்.
* பட்டுப் புடவைகளை, காற்று புகாத பாலி தின் கவர்களில் வைப் பது நல்லதல்ல; துணிப் பையில் போட்டு வைப்பது தான் நல்லது.
* பூச்சிகளை விரட்டும் நாப்தலின் உருண் டைகளை, பட்டுப் புடவை களின் மேல் போட்டு வைக்கக் கூடாது. பட்டுப் புடவைகள் கெட்டுப் போக, அது ஒரு காரணமாக அமைகி றது.

* ஒவ்வொரு முறை உடுத்திய பின்பும், பட்டுப் புடவையைத் துவைக்க வேண்டு ம் என்பதில்லை. உடுத்திய பின் காற்று படும் இடத்தில் புடவையை வைத்து, பின் இஸ்திரி செய்தால் போதும்.
* ஒரு படி தண்ணீரில், ஒரு தேக்கரண்டி கிளிசரினை கலந்து, பட்டுத் துணிகளை அலசி உலர்த்தினால், சுருங்காமல், இழை கள் விலகா மல் இருக்கும்.
* பட்டுப் புடவையில் எண்ணெய் கறை இருந்தால், சந்தனத்தை கறையின்மீது தடவி, சிறிது நேரம் கழித்து, அந்த இடத் தை மட் டும் நீரில் கழுவவும்

ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்ப்பது புத்திசாலித்தனத்தைத்தான்! அழகை அல்ல‍

பெண்களுக்கு பிடித்த அம்சங்கள் இன்னதுதான் என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது. முக்கிய மாக ஆண்களிடம் எந்த அம்சம் பிடிக்கும். எதுமாதிரி பெண்கள் எதிர்பார்ப்பார்கள் என்று எவராலு ம் எளிதில் தெரிந்துகொள்ள முடி யாது. ஆண்களின் எந்த அம்சம் கவர்ச்சிகரமானதாக இருக்கும் என்று பெண்களைக் கேட்டால் ஒ வ்வொருவரும் வெவ்வேறு வித மாக பதிலளிப்பார்கள். எது மாதி ரியான அம்சங்கள் பெண்களை கவர்கின்றன என்று சராசரியாக பெண்களுக்கு பிடித்த அம்சங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.
 
ஒரு பெண்ணின் கவர்ச்சி என்ன என்பதற்கு பல ஆண்களின் பதில் ஒரே வரியில், ஒரே மாதிரியா ன பதிலாகயிருந்தாலும், ஆண் களின் கவர்ச்சி என்ன என்பதை ஒரே வரியில் பதிலளிக்க இய லாது, ஏனென்றால் ஆண்களின் கவர்ச்சியில் பல வகைகள் உள்ளன. நிறம் ஒரு பொருட்டல்ல
ஒரு ஆண் சிவந்த மேனியாக இருக்க வேண்டும் என பெரும்பாலான பெண்கள் எதிர்பார்ப்பதில் லை. ஒரு ஆணின் வசீகரம் அவனின் நிறத்தில் அல்ல என்பதே பெண்களின் கருத்து. அதனால்தான் அநேகம் பெண்கள் கருப்புதா ன் எனக்குப் பிடிச்ச கலரு என்று பாட ஆரம் பித்துள்ளனர். எனவே கலராய் இருந்தால் மட்டுமே பெண்களை கவர்ந்து விடலாம் என்று நினைத்திருக்கும் ஆண்களே கவனம் தேவை.
பொருத்தமான ஆடை

பொதுவாக பெண்கள் தங்கள் உடை அலங்காரத்திற்கு அதிக அக்கறை எடுத்துக் கொள்வார்கள், அதனால் அதே மாதிரி அம்சம் ஆணிடமும் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க் கிறார்கள். பேண்ட்டின் நிறத்திற்கு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத கலரில் ஷர்ட் அணிவது, சரியான அளவில் ஷர்ட் போடாமல், தொழ தொழ என நீளமான ஷர்ட் அணிவது, போன்றவை பெண்களுக்கு பிடிப்பதி ல்லை. இடத்திற்கு தகுந்தார்போல் உடை அணிய வேண்டும். சுத்தமான, நல்ல கலர் சென்ஸுடன், ஸ்மார்ட்டாக உடை அணிந் தால் பெண்களின் மனதில் சீக்கிரமாக இடம் பிடித்து விடலாம்.
கண்களைப் பார்க்கும் ஆண்கள்
முதன் முறையாக ஒரு பெண்ணிட ம் பேசும்போது, லொடலொடவென சொந்த கதை, சோக கதை எல்லாம் பேசக்கூடாது. அதே சமயம் அந்த பெண்ணிடமும் அவளை பற்றின சொந்த விஷயங்களை தேவையில் லாமல் கேட்க கூடாது. அவளுக்கும் பேச சந்தர்ப்பம் கொடுத்து, அவள் பேசும்போது அவளது கண்களை கூர்ந்து கவனிக்க வேண்டும். முகத் தைப் பார்த்துப் பேசும் ஆண்களையே அநேக பெண்கள் விரும்புகி ன்றனராம்.
நம்பிக்கை, நேர்மை
எடுத்தவுடனே பொய் சொல்லு ம் ஆண்களை எந்த பெண்ணுக் கும் பிடிக்காதாம். நேர்மையுட னும், நம்பிக்கையூட்டும் வகை யிலும் பேசும் ஆண்களையே அதிகம் விரும்புகின்றனர்.
நகைச்சுவை உணர்வு
உர் என்ற முகத்துடன். நான் இப்படித்தான் என்று இறுக்கம் காட்டும் ஆண்களை எந்த பெண்ணும் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. நகைச் சுவை உணர்வும், அறிவுப்பூர்வமான பேச்சும் உள்ள ஆண்களையே பெண்கள் விரும்புகின்றனர்.
ஆண்மைக்கு மீசை அழகு

ஆணின் நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காத பெண்கள் கூட, அவர்களி ன் மீசைக்கு முக்கியத்துவம் கொடுக்கி றார்கள். மீசை ஒரு ஆணுக்கு அழகு, கம்பீரம் என்பது அவர்கள் கருத்து. மீசையை பிடிக்கும் பல பெண்களுக்கு ஏனோ தாடி பிடிப்பதில்லை. காரணம் நம்மூர் ஆண்களுக்கு தாடி வளர்த்தால் அதை ஒழுங்காக பராமரிக்கத் தெரிவ தில்லை என்பதுதான்.
நட்பாய் இருங்க காதல் கனியும்
எந்த பெண்ணுமே நட்புரீதியான பழக்கத்தையே விரும்புகின்றன ராம். ஏனெனில் எந்த ஒரு பிரச்சினை என்றாலும் நட்பு என்றால் எளிதில் பகிர்ந்து கொள்ளலாம் என்பது அவர்களின் கருத்து. என வே பெண்களிடம் முதலில் நல்ல நட்பை ஏற்படுத்திக் கொண் டால் அவர்களின் மனதில் உங்கள்மீது தா னாய் காதல் கனியும்
இவை அனைத்தும் பல பெண்களின் சில சில எதிர்பார்ப்புகளே, இந்த எதிர்பார்ப்புக ளும், ஆசைகளும் பெண்ணுக்கு பெண் வேறுபடும்.

ஒவ்வொரு வயதினருக்கும் ஒவ்வொரு வகையான செக்ஸ் ஃபீலிங்ஸ்

வயதுக்கேற்றார் போல சாப்பிடுகிறோம் அல்லவா. அது போலவே ஒவ்வொரு வயதினருக்கும் ஒரு வகை யான செக்ஸ் உணர்வுகள், வெளிப் பாடுகள் இருக்கும் என்கிறார் செக்ஸ் குரு டிரேஸி காக்ஸ்.
செக்ஸ்டஸி என்ற பெயரில் ஒரு புத் தகத்தை எழுதியுள்ளார் டிரேஸி. அதில் ஒவ்வொரு வயதுக்கேற்ற செக்ஸ் உணர்வுகள், அதற்குரிய வடிகால்கள் உள்ளிட்டவை குறித்து விலாவாரியாக விளக்கியுள்ளார் டிரேஸி.

அதிலிருந்து சில பகுதிகள்..
20 + வயது…
இந்த வயதில் இருக்கும் ஆண்களும் சரி, பெண்களும் சரி செக்ஸ் குறித்த கற்பனைகள், நினைவுகளில் அதிகம் மூழ்கியிருப்பராம். குறிப்பாக ஆண்களை விட பெண்களுக்கே கற்பனை உணர் வுகள் அதிகம் இருக்குமாம். நிறைய கற்பனை செய்து பார்ப்பார்களாம்.
பெண்களில் பலருக்கு செக் ஸை அனுபவித்துப் பார்த்தால் என்ன என்ற யோசனையும் அடி க்கடி வருமாம். 2006ல் எடுக்கப் பட்ட ஒரு ஆய்வின்படி, 20 வயதைக் கடந்த பெண்களுக்கு, சக பெண்களுடன் படுத்திருக் கும் போது ஆர்கசம் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 76 சதவீதம் பெண்களுக்கு இப்படி ஆர்கசம் வருமாம்.
இதுவே இந்த வயதில் ஆண்களுடன் படுக்கும் பெண்களில் 50 சதவீதம் பேருக்குத்தான் ஆர்கசம் வருமாம். அதாவது நிஜத்தை விட நிழலில் தான் இந்த வயதுப்பெண்களுக்கு செக்ஸ் ஆசை அதிகம் இருக்குமாம்.
20 வயதுகளில் உள்ள ஆண்க ளுக்கும், பெண்களுக்கும் உட லுறவுப் பொசிசன்கள் குறித்து நிறைய ஆர்வம் இருக்குமாம். அதைப் பரீட்சித்துப் பார்க்கும் ஆர்வமும் இருக்குமாம். பத்தில் ஒருவர், தங்களது 20 வயதுகளில் மூன்று பேருடனாவது உறவு வைத்திருப்பார்கள் என்கிறார் டிரேஸி.
30 + வயது…
30 வயதில் வித்தியாசமான சோதனைகளை செய்து பார்க் க விரும்புவார்களாம் ஆண் களும், பெண்களும். வீட்டுக் குள் வைத்திருந்த செக்ஸை வெளியிலும் கொண்டு போ கத் துடிப்பார்களாம்.
பூங்காக்கள், கடற்கரைகள், தோட்டம், இருளான பகுதிகள் என பல்வேறு புகலிடங்களைத் தேடி இவர்களின் செக்ஸ் மனது ஓடுமாம்.
இதுபோன்ற இடங்களில் செக்ஸ் வைத்துக் கொள்ளவே அதிகம் விரும்புவார்களாம். அதேபோ ல ஷவரில் செக்ஸ் வைத்துக் கொள்வது, பாத் டப்பில் வை த்துக் கொள்வது என்று வித்தி யாசமாகவும் திங் பண்ணுவா ர்களாம்.
அதேபோல வார இறுதி நாட் களில் ஜோடியாக சுற்றுவது, கையைப் பிடித்தபடி உலா வருவது, நெருக்கமாக இருப்பது போன்றவற்றிலும் இந்த வயதுக் காரர்களுக்கு ஆர்வம் அதிகம் இருக்குமாம்.
இந்த வயதில் பெரும்பாலானோருக்கு குழந்தைகள் வந்து விடும். எனவே அவர்களின் செக்ஸ் ஆசைகள் முன்பு இருந்ததைப் போல இல்லாமல் சற்று சுருங்கிப் போயி ருக்குமாம். ஆனால், கர்ப்ப மாக இருக்கும்போது கணவனும், மனைவியும் மாதத்திற்கு நான்கு முதல் ஐந்து முறை கூட செக்ஸ் வைத்துக் கொள்ளப் பிரியப் படுவார் களாம்.
பல பெண்கள் குழந்தை பெற்ற பின்னர் 7 வாரம் வரை லீவு விட்டு விடுவது வழக்கமாக உள்ளது. அதன் பின்னர் மாதாந்திர செக்ஸ் உறவு எண்ணிக்கை 3 அல்லது 4 முறை என்று குறைந்து விடுமாம்.
அதேசமயம், ஒருவரை ஒருவர் வருடிக் கொடுப்பது, முத்தமிடுவது, உள்ளிட்டவற் றை அதிகம் நாடுவார்களாம். குழந்தைச் செல்வங்கள் நடுவில் வந்து விட்டதால் சிலர் வாய்ப்பு கிடைக்கும்போது, பாஸ்ட் புட் ரேஞ்சுக்கு அவசர கதியில் செயல்படுவதும் உண்டாம்.
30 வயதைத் தாண்டிய பெண்களில் 90 சத வீதம் பேருக்கு ஆர்கசம் அடிக்கடி வருகிறதாம். அதே சமயம், 20 வயதுகளில் உள்ள பெண்களுக்கு இது 23 சதவீதமாகவே உள்ள தாம்.
40 + வயது…
40 வயதைத் தாண்டிய பெரும் பாலான ஆண்களுக்கு எரக்ஷன் பிரச்சினை வந்து விடுகிறதாம். மேலும், இந்த வயதில் நேரடி செக்ஸ் உறவை விட படம் பார்ப்பது, செக்ஸ் சாட்டிங் செய்வது என்று வெளி வேலைகளில் அதிக ஆர்வம் காட்டுவார்க ளாம் ஆண்கள்.
பெண்களுக்கோ இந்த வயதில் செக்ஸ் ஆசை அதிகரிக்குமாம். தங்களது கணவர் அல்லது பார்ட்னரை விட இளம் வயதினரைப் பார்க்கும்போது மோகம் பிறக்கிறதாம்.
மாதாந்திர உறவு எண்ணிக்கை இந்தவயதினர் மத்தியில் குறைவா க இருந்தாலும் மனசுக்குள் செக்ஸ் ஆசை நிறையவே இருக்குமாம். ஒரு தடவையாக இருந்தாலும் அதை நிறைவாக, நிதானமாக செய்ய வேண்டும் என்று நினை ப்பார்களாம்.
டிரேஸி கூறியுள்ளதெல்லாம் அவ ரது மேற்கத்திய கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு தெரிவி த்துள்ள கருத்துக்களாகும். ஆனால் இது நம்மூருக்கு பொருந்தாது என்றே தோன்றுகிறது.

நெஞ்சுவலி ( மாரடைப்பு ) நேரத்தில் உங்கள் உயிரை நொடியில் காப்பாற்றிக் கொள்ள வழிமுறை.

Posted On April 14,2012,By Muthukumar
தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது எப்படி என்பது பற்றி இமெயில் மூலம் நண்பர் செந்தில் குமார் அனுப்பிய கட்டுரையை அப்படியே இங்கு பகிர்ந்து கொள்கிறோம்.
 தனியாக இருக்கும் போது நெஞ்சுவலி ( மாரடைப்பு ) வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ?
படம் 1
மாலை மணி 6:30,வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கிறீர்கள் . அலுவலகத்தில் வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது, நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள் , திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக வலி ஏற்படுவதை உணர்கிறீர்கள். அந்த வலியானது மேல் கை முதல் தோள்பட்டை வரை பரவுவதை உணருகிறீர்கள் , உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம், ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம் ??
துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர் ! உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது.
இப்போது நீங்கள் செய்ய வேண்டியது. தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும்ப வேண்டும், ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும் , இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும். இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்முக்கொண்டே இருக்க வேண்டும். மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும், இதனால் ரத்தஓட்டம் சீரடையும்.
இருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்.
படம் 2
பின்னர் இருதயம் சீரடைந்ததும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம். உயிரை காக்கும் இது போன்ற விசயங்களை குறைந்தது உங்களின் பத்து நண்பர்களிடமாவது பகிர்ந்து கொள்ளூங்கள்.

Friday, 13 April 2012

கப்பல் கடலில் மிதக்கிறதே! அது எப்ப‍டி?

ஒரு ஊரே நகர்ந்து செல்வது போன்ற கப்பல், தண்ணீரில் மிதப்பது எப்படி என்ற வியப்பு நமக் கு உண்டு. கடலில் கப்பல் கள் எவ்வாறு மிதக்கின்றன என்று பார்ப்போம்.
சிறிய கப்பல்கள், பெரிய கப்பல்கள் என்ற வித்தியாச மின்றி எல்லா கப்பல்களு க்கும் அதிக எடை கொண்ட வை. ஆகவே ஒரு கப்பல் தண்ணீரில் இருக்கும்போது அதன் உடற்பகுதி ஓரளவு வரை தண் ணீரில் அமிழ்ந்திருக்கும். அதாவது, கப்பலின் எடைக்குச் சமமான தண்ணீர் இடம்பெயரும் வரை அதன் உடற்பகுதி தண்ணீரில் அமி ழும்.
10 ஆயிரம் டன் எடையுள்ள ஒரு கப்பலின் உடற்பகுதி, அதே எடை யுள்ள தண்ணீரை இடம் பெய ரச் செய்யும். எனவே ஒரு கப்ப லின் எடையைக் கூறுவதற்குப் பதிலாக, அது இடம்பெயரச் செய்யும் தண்ணீரின் எடையை க் கூறுகிறார்கள். அதாவது ஒரு கப்பலின் `டிஸ்பிளேஸ்மென்ட் ’ 10 ஆயிரம் டன் என்று கூறு வார்கள்.
அமிழ்ந்துள்ள கப்பலின் ஒவ் வொரு பகுதியையும் தண்ணீர் அழுத் துகிறது. தண்ணீரில் கிடப்பு நிலையில் இருந்து ஏற்படும் அழுத்தங் கள் கப்பலின் உடற்பகுதி யை நசுக்குகின்றன. ஆனால் அவை இந்த நடைமுறையில் ஒன் றையொன்று அமிழ்த்துச் சமநிலையை ஏற்படுத்துகின்றன. செங்கு த்தான போக்கில் உள்ள அழுத்தங்களின் சக்தியே கப்பலின் எடை யை ஒரு சமநிலைக்குக் கொண்டு வருவதாக ஆக்கி மிடிஸ் கருதி னார்.
காற்றில் அமிழ்ந்துள்ள பொ ருட்களுக்கும் இந்தக் கொ ள்கை பொரு ந்தும். கியாஸ் உள்ளிட்ட எல்லா திரவங்க ளுக்கும் ஆக்கிமிடிஸின் கொள்கை பொதுவானதே. உதாரணமாக, பலூனை எடுத்துக்கொள்வோம். அது தனது பருமனு க்குச் சமமான எடையை விட லேசாக இருந்தால் பறக்கும்.
மேலே செல்லச் செல்ல காற்றின் அடர்த்தி குறைவாகின்றது. அத னால் மேலே சென்ற பலூனின் உள்ளே இரு க்கும் வாயுவின் அடர்த்திக்கு சமனான காற் று வெளியே இருக்கும் வரை பலூன் மேலே செல்லும்.
நாம் வாயால் ஊதும் பலூன் மேலே செல்வ தில்லை. காரணம். பலூலினுள் இருப்பது சாதாரண காற்று. அதனால் அதன் எடையும் அது ஏற்படுத்தும் இடத்தின் காற்றின் எட் டையும் சமமாகிறது. இதன் காராணமாக வே பறக்க விடப்படும் பலூன்களில் காற் றைவிட அடர்த்தி (எடை) குறைவான ஈலியம் வாயுவால் நிரப்பப் படுகின்றது.
நீரில் மூழ்கிய ஒரு கப்பலை அல்லது, வாகனத்தை வெளியே கொ ண்டுவர அந்த கப்பலில் அல்லது வாகனத்தின் உள் பகுதியில் இப் பரால் ஆன பெரிய பலூன்களை வை த்து அதற்குள் (ஈலியம்) வாயு வை நிரப்புகின்றார்கள். அப்போது நீரினா ல் நிரம்பிய கப்பலின் அல்லது வாக னத்தின் உள்பகுதி பலூன் விரியும் போது நீரினால் நிரம்பிய பகுதி காற் றினால் நிரப்பப்ப்டுகின்றது.  நீரிலும் பார்க்க காற்று அல்லது ஈலியம் வாயு அடர்த்தி குறைவாக இருப்பத னால் மூழ்கிய கப்பலை அல்லது வாகனத்தை மிதக்கச் செய்கி றது.
கப்பல் கடலில் செல்லும் போது கடல் மட்ட நீர் இருக்க வேண்டிய இடத்தை கப்பலின் வெளிப் பக்கத்தில் கோடு இட்டு காட்ட ப்பட்டிருக்கும். இந்த நீர் மட்ட த்திற்கு மேல் கடல்நீர் மட்டம் கூடினால் கப் பல் மூழ்கும் ஆபத்து உள்ளது. அதுபோல் இவ் நீர் மட்டத்திற்கு கீழ் கடல் நீர் இருந்தாலும் கப்பல் சரியக்கூடிய ஆபத்து உள்ள து.
உப்பு குறைவான கடலில் (அடர்த்தி குறைந்த) சென்று கொண்டிரு க்கும் கப்பல் அடர்த்தி கூடிய உப்புக் கடலில் செல்லும் போது கூட மிதக்கின்றது. அதன்போது கப்பலின் கடல்நீர்மட்டத்தினை சரி செய்வதற்காக. அடித்தளத்தில் நீர் நிரப்பி நீர் மட்டத்தினை சரி செய்கின்றார்கள்.

கோலங்கள் வரையும் செயலி- உதயம்

Posted On April 13,2012,By Muthukumar
பாரதத்தின் எண்ணெற்ற கலாச்சாரக் கண்டுபிடிப்புகளுள் ஒன்று கோலம். முக்கியமாக தென்னிந்தியாவில் பிரசித்திப் பெற்ற கலாச்சாரமாகும். கோலங்கள் வாசலுக்கு மட்டும் விருந்தாளியல்ல, கூரை ஓவியமாக கோவில்களிலும் மண்டபங்களிலும் விருந்தாளியாகக் காணலாம். வாசல் கோலங்கள் இடுவதென்பது ஒரு கலையே அதுவும் பண்டிகைக் காலங்களில் நம்மூர் பெண்கள் பட்டையைக் கிளப்புவார்கள். ஓவியம் என்பது தனியொரு கலையாகயில்லாமல் அன்றாட வாழ்வில் கலந்தவொன்றாவிட்டது. அம்மாதிரி கலை மரபு வழியே வந்ததாலோ என்னவோ திராவிடக் கட்டிடக் கலையில் தனி முத்திரை கொண்டுள்ளோம்.

கோலசுரபி 


இத்தகைய கோலங்கள் இணைய வெளிகளில் பரவலாக படங்கள் வடிவில் பகிரப்படுகிறது. கோலம் சம்மந்தமான மென்பொருட்கள் எதிர்காலத்தில் அதிகம் வரலாம். தற்போதைக்கு கோலம் வடிவமைக்கும் மென்பொருட்கள் அதிகமில்லை ஆனால் இதுவரை இணையத்திலிருந்து செயல்படும் ஒரே ஒரு செயலி இங்கேவுள்ளது. அந்தவரிசையில் கோலசுரபி என்ற ஒரு புதிய செயலி தற்போது அறிமுகப்படுத்தப்படுகிறது. தமிழ்ப்புள்ளியின் மூன்றாமாண்டு பிறந்த நாளன்று அறிமுகமாகும் இச்செயலியின் மூலம் தான்தோன்றித்தனமாக பல கோலங்கள் உருவாக்கி பயன்படுத்திக் கொள்ளமுடியும். 3X3 முதல் 20X20 புள்ளிகள் வரை இதில் உருவாக்கிக் கொள்ளலாம். இதன்மூலம் வளை கோடுகள் மற்றும் கம்பிக் கோடுகள் கொண்ட கோலங்களை வேண்டிய அளவுகளில் பெற்றுக் கொள்ளலாம். சதுரம் அல்லது சாய்சதுர வடிவிலும் உருவாக்கிக் கொள்ளலாம். தான்தோன்றித்தனமான கோலங்கள் என்பதால் ஒருமுறை வந்த கோலங்கள் மறுமுறை வருவதறிது அதனால் ரசனையுள்ள கோலங்களை Screenshot மூலம் படங்களாகவும் சேமித்துக் கொள்ளலாம்.

கோலம் அறியாத "பேதை"களுக்கும் , கோலம் பழகும் "பெதும்பை"களுக்கும், கோலம் தேடும் "மங்கை"களுக்கும், கோலம் வரையும் "மடந்தை"களுக்கும், கோலமிட்டுக் கலக்கும் "அரிவை"களுக்கும் இச்செயலி மேலும் உதவும்.


அனைவருக்கும் நந்தன தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்

கோடையை குளுமையாக்க “ஜில்’ டிப்ஸ்!

Posted On April 13,2012,By Muthukumar
உஷ்... உஷ் என்ற வெப்ப பெருமூச்சுகளின் ஒலி கேட்கத் துவங்கி விட்டது. இந்தக் கோடையை எப்படி சமாளிப்பது என்பதே, இப்போது எல்லாருக்கும் அனலாய் வீசும் கேள்வி... இதோ, கோடையை ஜில்லிடச் செய்யும் சில டிப்ஸ்...
* கோடைகாலத்தில், அதிகாலை, 5.00 மணிக்கு எழும் பழக்கத்தை மேற்கொள்வது நல்லது. வெயில் வரும் முன், சமையல், வீட்டு வேலைகளை முடித்து விடுங்கள்.
* முதலில், உடலை இறுக்காத பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். அந்த ஆடைகளின் வண்ணங்கள், மென்மை கலந்ததாக இருப்பது நல்லது. கறுப்பு, சிவப்பு மற்றும், "பளிச்' வண்ணங்கள், சூரிய ஒளியை உள் வாங்கும். இதனால், உடலின் நீர்ச்சத்து குறைந்து விடும். நீர் எரிச்சல், நீர்த்தாரை, நீர்க் கடுப்பு போன்ற நோய்கள் ஏற்படும்.
* அதிக நீர் அருந்த வேண்டும். இடைவெளி விட்டு நீர் அருந்தலாம்.
*வெயிலில் அலைந்து வந்தவுடன் நீர் அருந்தக் கூடாது. எவ்வளவு தாகம் இருந்தாலும், பத்து நிமிடம் கழித்து அருந்துவது நல்லது. அந்த நீர், குளிர்சாதனப் பெட்டியில் வைத்து எடுத்த நீராக இருக்கக் கூடாது. இந்த நீர் ஜலதோஷம், தலைவலி, உடல் வலியை ஏற்படுத்தும். மண் பானையில் வைத்த நீரை அருந்துவது நல்லது.
* குடிநீரில், சீரகம் கலந்து கொதிக்க வைத்து, ஆறியபின், அருந்தலாம்.
* கோடையின் வெப்பத்தை குறைக்க, மோரே அருமருந்தாகும். மதிய வேளையில், மோரில் நீர் கலந்து, அதனுடன் சீரகம், கொத்தமல்லி சேர்த்து குடிக்கலாம்.
* கோடை காலத்தில், டிபன் அதாவது தோசை, பூரி, பரோட்டா இவற்றை தவிர்ப்பது நல்லது. காலையில் இட்லியும், கேழ்வரகு, கம்பு இவற்றை கஞ்சியாக செய்தும் சாப்பிடலாம். இதனால், உண்ட உணவு எளிதில் ஜீரணமாகும்.
* மதிய உணவில் அதிகக் காரம், புளி சேர்க்காமல், நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.
* பறங்கிக்காய், பூசணிக்காய், சுரைக்காய், வெள்ளரிக்காய் அதிகம் சேர்த்துக் கொள்ளவும்.
* தினமும் இருமுறை குளிப்பது நல்லது. அதிக வியர்வை இருக்கும் போதும், வெயிலில் இருந்து திரும்பிய உடனும் குளிக்கக் கூடாது.
* மதிய வெயிலில் அலைவதை தவிர்க்கவும். முடிந்தவரை, பகலில் நீண்ட தூரப் பயணத்தைத் தவிர்ப்பது நல்லது.
* வெயில் தாக்காமலிருக்க, தலையில் தொப்பி அணிந்து செல்லலாம். வெளியில் செல்லும் போது, முகம், கை, கால்களில் லேசாக எண்ணெய் தேய்த்து கொண்டால், சருமம் வறட்சியடையாமல் இருக்கும்.
* வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம்.
* கோடை வெப்பத்தில், அதிக நேரம் குளிரூட்டப் பட்ட,"ஏசி' அறையில் இருப்பது நல்லதல்ல. அதுபோல், அலைந்து திரிந்து வியர்வையுடன் குளிரூட்டப்பட்ட அறைக்குள் செல்வதும் நல்லதல்ல.
* சர்க்கரை நோயாளிகள், கோடை காலத்தில், அதிகம் வெயிலில் அலைவதைத் தவிர்க்க வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
* படுக்கையறை நன்கு காற்றோட்டமாக இருக்க வேண்டும். பருத்தியினால் தயாரிக்கப்பட்ட விரிப்புகளை பயன்படுத்தலாம்.
* வெளியே செல்லும் போது, கறுப்பு வண்ண குடைகளை பயன்படுத்துவது நல்லது.

How To Avoid Sagging Breasts?

Posted On April 13,2012,By Muthukumar
Avoid Sagging Breasts


Liposuction Surgery Costs  obesitysurgeryindia.net
By Top Weight Loss Surgeons in India, Request A Free
Beautiful breasts can enhance beauty of a woman and can make her look even more gorgeous. As an asset, you would love to maintain those curves. For an attractive look and appeal, many women wear varieties of bras to enhance their breast size. Be it an underwire or padded bra, each has a special affect on the breast size and shape. At any time or age, a woman can face problems with the shape of her breasts. Breasts are made with fatty tissues and these tissues have a tendency to sag over the years.

There are many reasons behind having sagging breasts. Wearing lose or ill-fitting bra, breastfeeding and aging can lax your beautiful shape of the breasts. Proper care to maintain the breasts shape can prevent them from sagging and can make them look youthful!

Ways to avoid sagging breasts:

Wear a fitted bra:
Fitted bra enhances the breast size and also keeps it in shape. Check your size and buy a supportive brassiere. Do not wear a bra that is too tight as it can block blood flow to the breast tissues. Make sure that your breasts are not lose or bouncy even after wearing a bra. Always check the cup and strap. If your bra straps becoming lose or the rubber expands, tighten the strap or buy a new one.

Sports bra: When you workout, wear a sports bra. Bouncing can affect the shape of your bosom. To avoid your breasts from sagging, always wear tight fitting sports bra while exercising and protect them from falling out of shape.

Massage: This can help you enhance your breasts size and also prevent them from sagging. Apply moisturizer or breast creams to keep your curvy bosoms in shape. In a circular motion, massage your breasts from upside down and then revert the process.

Underwire bra: Sometimes you can wear an underwire bra to lift the breasts and prevent them from sagging. The wire on the bottom of the bra cups help lift the breasts and keep them in shape. However, do not wear an underwire bra while sleeping. Always open your undergarments before you crash in your bed!

Exercise: Push ups, chest fly and dumbbell exercises can boost your breast size. Enhance your breasts by doing these exercises and avoid them from sagging down. These exercises also build the pectoral muscles.

Try these ways to avoid having sagging breasts. As a woman, be concerned about your bosom as they compliment your figure to a greater extent.

காதலிக்க நேரமில்லாத தம்பதியரா? இதப் படிங்க !

Posted On April 13,2012,By Muthukumar
ஐந்து இலக்க சம்பளம், மல்ட்டிநேசனல் கம்பெனி வேலை என இன்றைய இளையதலைமுறை நிறையவே மாற்றங்களை சந்தித்து வருகிறது. தம்பதியர் இருவரும் வேலைக்கு செல்வதால் இருவரும் தங்களின் காதலை சரியாக பகிர்ந்து கொள்ளக்கூட நேரமிருப்பதில்லை.
காலை நேரத்தில் அவசரமாக கிளம்பவும், மாலையில் அயர்ச்சியாக திரும்பி வந்து உறங்கவும்தான் முடிகிறது. இதனால் இல்லற வாழ்க்கை ஒருவித வெறுமை நிரம்பியதாக மாறிவிடுகிறது. நாளடைவில் விரிசலையும் ஏற்படுத்திவிடுகிறது. இதனை தவிர்க்கவும், இல்லறத்தை உற்சாகம் மிக்கதாக மாற்றவும் ஆலோசனை கூறியுள்ளனர் உளவியல் நிபுணர்கள். படித்து பாருங்களேன்.
குடும்பத்திற்கான நாள்
இப்பொழுதெல்லாம் 5 நாள் வேலை 2 நாள் விடுமுறை என்றாகிவிட்டது. எனவே விடுமுறை நாட்களை குடும்பத்திற்கென ரிசர்வ் செய்யுங்கள். அதில் எந்த கமிட்மென்ட்டும் வேண்டாம். துணையுடன் அமர்ந்து பேசவும், காதலை வெளிப்படுத்தவும் அந்த நாட்களை பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஜாலியாக வெளியில் சென்று ஐஸ்கிரீம் சாப்பிடலாம், திரைப்படத்திற்கு செல்லலாம். இது உங்களின் காதல் வாழ்க்கையை உற்சாகப்படுத்தும்.
நோ மிஸ்டு கால்
என்னதான் தலை போகிற வேலையாக இருந்தாலும் மனைவி அழைத்தால் அந்த போனை எடுத்து பேசுங்கள். அதை எடுக்காமல் மிஸ்டு காலாகும் பட்சத்தில் உங்கள் வாழ்க்கையும் மிஸ் ஆகும் சூழல் உருவாகும். இப்பொழுது இருக்கும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஆயிரம் முறை ஐ லவ் யூ எஸ்எம் எஸ் அனுப்பலாம். மெயில், சாட்டிங், என ஏதாவது ஒரு விதத்தில் பணிச்சூழலுக்கு இடையே துணையுடன் உரையாடுங்கள். அது பணிச்சுமையை குறைக்க உதவும்.
இன்ப அதிர்ச்சி
வேலைக்காக உங்கள் துணைவி பேருந்தில் சென்று வருகிறார் என்றால் அவருக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் அலுவலகத்தில் இருந்து அவரை அழைத்து வரலாம். அவ்வப்போது வரும் வழியில் உள்ள உணவகங்களிலேயே அமர்ந்து டிபன், ஐஸ்கிரீம் என சாப்பிடுவது இருவருக்குமே உற்சாகத்தை அதிகரிக்கும். அதேபோல் கணவருக்கு பிடித்தமான ஆடைகளை அயர்ன் செய்து வைப்பது ஒருவருக்கொருவர் செய்து கொள்ளும் சின்ன உதவிகள்தான் உள்ளத்தில் காதல் உணர்வுகளை உற்சாகப்படுத்தும்.
அன்பார்ந்த பரிசுப்பொருள்
தங்கம், வைரம் என விலை உயர்ந்த பரிசுப்பொருட்களை வாங்கி குவித்தால்தான் துணைவிக்கு பிடிக்கும் என்றில்லை. உங்களின் உணர்வுகளை, ரசனைகளை துணையுடன் பகிர்ந்து கொண்டாலே போதும் அதுவே அவருக்கு நீங்கள் தரும் மிகப்பெரிய பரிசுப்பொருள். உங்களுக்கு வரும் நல்ல நகைச்சுவை துணுக்குகள், பேஸ்புக், டுவிட்டரில் உங்களுக்கு கிடைத்த நல்ல படங்கள் என துணையின் மெயிலுக்கு அனுப்புங்கள். உங்களுக்கு இடையேயான காதல் பற்றிப் படரும்.
சின்ன சின்ன உதவிகள்
வீட்டு வேலைகளில் செய்யும் சின்ன சின்ன உதவிகள் துணைவியின் இதயத்தை வெல்லும் எளிய வழி. சமையலில் உதவி செய்யும் போது நடக்கும் சின்ன சின்ன ரொமான்ஸ்கள் அன்றைய நாள் முழுவதும் நீடிக்கும் அலுவலகப் பணியை உற்சாகத்துடன் செய்யலாம். பணிக்கு செல்லும் இளம் தம்பதியரே இதை பின்பற்றிப் பாருங்களேன். மன அழுத்தம் எதுவும் இன்றி வாழ்க்கையை உற்சாகமுடன் தொடரலாம்.

நகைகளும் நகை அணியும் முறைகளும்

நகைகள் அணிய ஆசைப்படாத பெண் களே இல்லை. அதே போல் எந்த நகை யை தேர்ந்தெடுத்து அணிவது என்று குழம்பாத பெண்களும் கிடையாது. இது பெண்கள் மிகவும் பிரியப்படுகின்ற பொருள் மட்டுமல்ல; அவசரத்திற்கு உதவுகின்ற ஒரு பொருளாகவும் பயன் படுகிறது. நகைகளை அணியும் பொழு தும், தேர்ந்தெடுக்கும் பொழுதும் கீழ்க் கண்ட விவரங்களை ஞாபகத்தில் வை த்துக் கொள்வது நல்லது.
1. அதிகமாக நகைகளை அணிய வேண்டாம். திருமணம் அல்லது நிச்சயதார்த்தம் போன்ற நிகழ்ச்சிகளின் போது மட்டும் நகைகளை அதிகமாக அணியவும்.
2. முத்தினால் ஆன ஆபரணங்கள் பார்ப்பதற்கு அழகாகக் காட்சியளிப் பதுடன் அணிபவரை எடுப்பாகக் காண்பிக்கம். இதனால், அலுவலகத் திற்குச் செல்லும் போதோ, சின்ன சின்ன விருந்துகளில் கலந்து கொள் ளும் பொழுதோ முத்து பதித்த நகை களை அணிய வும்.
3. உயரமான பெண்கள் சின்னச் சின்ன நகைகளை அணிந்தால் எடுப்பாக தெரியாது.
4. இரு வேறு விதமான நகைகளை ( வெள்ளி மற்றும் தங்க நகை களை ஒன்றாக அணிவது) ஒன்றாய்ச் சேர்த்து எப்பொழுதும் அணி வதைத் தவிர்க்கவும்).
5. நெற்றிச் சட்டி உங்களை அழ காய் காட்டக்கூடிய ஒன்றாகும்.
6. காலை நேரங்களில் நகைக ளைக் குறைவாக அணிய வே ண்டும். இரவில் அதிகமான நகைகளை அணியலாம்.
7. வெளிர் சிவப்பு மற்றும் நீல நிற ஆடைகளுக்கு வெள்ளி நகைகளும், சிவப்பு, மஞ்சள் நிற ஆடைகளுக்கு தங்க நகைகளும் கச்சித மாகப் பொருந்தும.
8. நீங்கள் அயல்நாட்டுத் துணி வகைகளை அணிபவராக இருந்தா ல் அதிகமான நகைகளை அணிய வேண்டாம். அவற்றுடன் மெல் லிய செயின், சின்ன சின்ன ஜிமிக்கிகளை அணியலாம்.
9. பாரம்பரிய உடைகளுடன் பாரம் பரிய நகைகளை அணிந்தால் அது உங்களுக்கு வித்தியாசமான தோற் றத்தை அளிக்கும். அவற்றுடன் அணி யவும்.
10. தற்பொழுது எங்கு பார்த்தாலும், கவரிங் நகை அதிகரித்து விட்டது. இவை மலிவாகக் கிடைப்பதோடு, ஈர்க்கக் கூடியவையாகவும், தொலைந்து போனால் பெரிதாக எதையும் இழந்து விடவில் லை என்று மனதை தேற்றிக் கொள்ளும் படியாகவும் உள்ளன.
11. நகைகளைத் தேர்வு செய்யும் பொழுது உங்கள் வயதைக் கவன த்தில் கொள்வது அவசியம். வயதானவர்கள் அளவில் பெரிய நகை களை அணிவதை தவிர்ப்ப து நல்லது. வயதில் சிறியவர்கள் சின்ன நகைகளை அணிவதைக் காட்டிலும், நடுத்தர அளவு நகை களை அணியலாம்.

பாரம்பரிய மூலிகை புத்தகம் -ஆரம்ப நிலை நோய்களுக்கு -WHO- E -BOOK

Posted On April 13,2012,By Muthukumar
உலக சுகாதார மையம் அதாவது வேர்ல்ட் ஹெல்த் அர்கனைசேசன் வெளிவிட்டுள்ள அருமையான புத்தகம் இது

இந்த புத்தகத்தில்


  1. வயிறு புண் மற்றும் அல்சருக்கு -நெல்லிகாய் சூர்ணம்
  2. சளி இருமலுக்கு -திரிகடு சூர்ணம்
  3. கண் அலர்ஜிக்கு -சென்னை ஐ க்கு -மரமஞ்சள் கஷாயம்
  4. மலசிக்கலுக்கு -கடுக்காய் சூர்ணம்
  5. இருமலுக்கு -திப்பிலி சூர்ணம்
  6. வயிற்றுபோக்குக்கு -குடஜபாலை சூர்ணம்
  7. காது வலிக்கு பூண்டு தைலம்
  8. தோல் நோய் படைக்கு -வாகை சூர்ணம்
  9. கண் நோய்க்கு -கண் ஊளைக்கு -திரிபலா கஷாயம்
  10. காய்ச்சலுக்கு -நிலவேம்பு சூர்ணம்
  11. புஞ்சை தோல் நோய்க்கு -புங்கை சூரணம்
  12. பசியினமைக்கு -சதுர்பத்ரம் கஷாயம்
  13. தலைவலிக்கு -திப்பலி மூல சூரணம்
  14. மஞ்சள் காமாலைக்கு -கடுகு ரோகினி சூர்ணம்
  15. மூட்டு வலிக்கு -ஓம சூரணம்
  16. பெண்களின் வெள்ளை படுதலுக்கு -பாச்சோத்தி பட்டை சூர்ணம்
  17. பேனுக்கு -ஊமத்தை லேபம்
  18. பலஹீனத்திற்கு -அமுக்ரா சூர்ணம்
  19. மாதவிடாய் வயிறு வலிக்கு-சதகுப்பை சூரணம்
  20. கிருமிக்கு -புரசு சூர்ணம்
  21. மூலத்திற்கு -கருணை சூர்ணம்
  22. படைக்கு -கந்தக களிம்பு
  23. ஆண்மை குறைவுக்கு -பூனைகாலி விதை சூர்ணம்
  24. சுளுக்குக்கு -மஞ்சள் களிம்பு
  25. பல் வலிக்கு -கிராம்பு தைலம்
  26. மூத்திர தொந்தரவுக்கு -நெருஞ்சில் முள் சூர்ணம்
  27. வாந்திக்கு -ஏலக்காய் சூரணம்
  28. புண்ணுக்கு -மஞ்சள் சூர்ணம்
என்று ஒவ்வொன்றையும் ஆதாரத்துடன் ,பட விளக்கதுடன் -ஆராய்ச்சி கண்ணோட்டத்துடன் சொல்லும் அருமையான புத்தகம் இது

 இங்கே இலவச தகவிறக்கம் செய்ய இங்கே கிளிக்   செய்யவும்
இலவசமாக தகவிறக்கம் செய்ய







Tuesday, 10 April 2012

‘மார்னிங் ஷோ’ மனதிற்கும், உடலுக்கும் நல்லது – ஆய்வில் தகவல்

Posted On April 10,2012,By Muthukumar
அதிகாலை நேரத்தில் தாம்பத்ய உறவு கொள்வது மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படுவதை தடுக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். காலை நேரத்திய உறவு உணர்வு ரீதியாக மட்டுமல்ல உடல்ரீதியாகவும் நல்லது என்றும் மருத்துவர்கள் சான்றிதழ் அளித்துள்ளனர்.
அதிகாலை நேரம் ஜன்னல் வழியே ஊடுருவும் தென்றல், அருகில் கண்மூடி படுத்திருக்கும் துணையின் நிலை இதனை கண்டால் காலைநேரத்தில் காதல் உணர்வுகள் கிளர்ந்தெழும். காலையில வேற வேலையில்லையா என்று செல்லமாய் உங்கள் துணை கோபித்துக் கொண்டாலும் அதையே சம்மதமாக எடுத்து சந்தோசமாக காரியத்தை முடித்துவிடுவார்கள்.
ஆண்களில் பெரும்பாலானோருக்கும் காலை நேர உணர்வு எழுவது சகஜம். ஆனால், பெரும்பாலான பெண்களுக்கு காலை உறவில் நாட்டம் ஏற்படுவதில்லை. ஆனால் காலை நேர உறவு என்பது அன்றைய பொழுதின் மகிழ்ச்சியான தொடக்கம் மட்டுமல்ல ஆரோக்கியமானதும் கூட என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தி
காலை நேரத்தில் உறவில் ஈடுபடும் போது ஆக்ஸிடோசின் எனப்படும் நல்ல ரசாயனம் வெளிப்படுகிறதாம். இது நாள் முழுவதும் தம்பதியரை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கிறதாம்.
தொடர்ந்து காலை நேர உறவில் ஈடுபடுவது மனதிற்கு அமைதியை ஏற்படுத்துவதோடு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறதாம்.
நம்பினால் நம்புங்கள் காலை நேரத்தில் உறவு கொள்வதன் மூலம் சளி, காய்ச்சல் போன்ற நோய்கள் இருந்தாலும் உடனே குணமாகிறதாம். அதுபோன்ற நோய்கள் வரவே வராதாம். மேலும் கூந்தல், சருமம், நகம் போன்றவை ஆரோக்கிய வளர்ச்சி அடைகிறதாம்.
வாரத்திற்கு மூன்று முறை காலை நேரத்தில் உறவில் ஈடுபடும் தம்பதியருக்கு மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்பே இல்லை அடித்து சொல்கின்றனர் மருத்துவர்கள்.
வற்புறுத்துவது கூடாது
காலை நேர உறவு என்பது நல்ல ஐடியாதான் என்கிறார்கள் மன நல மருத்துவர்கள். நல்லதொரு இரவுத் தூக்கத்தை மேற் கொள்பவர்களுக்கு காலையில் உடலும், மனமும் புத்துணர்ச்சியோடு இருக்கும். உடலில் வளர்ச்சி ஹார்மோன்கள் தூண்டப்படும். உடலும் நல்ல வலுவுடன் இருக்கும். இதனால் காலை நேரத்தில் உறவில் ஈடுபடும்போது அது நிச்சயம் சிறப்பாகவே இருக்கும். அதேசமயம், பெண்களும் நல்ல மூடில் இருக்கும்போது மட்டுமே ஆண்கள் காலை நேர உறவுக்கு முயற்சிக்கலாம். மாறாக வற்புறுத்துவது தவிர்க்கப் பட வேண்டும் என்கிறார்கள் அவர்கள்.
மென்மையை கையாளுங்கள்
எந்த நேரமாக இருந்தால் என்ன, உறவுக்கு மிக முக்கியம் மென்மையான அணுகுமுறைதான். காலையாக இருந்தாலும் சரி, இரவாக இருந்தாலும் சரி அந்த உறவை, அன்புப் பரிமாற்றமாக, அணுசரணையான நிகழ்வாக, காதலுடன் கூடியதாக மாற்றிக் கொள்வதே சிறந்தது என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.
காலையில் எழுந்ததும் கண்களில் ஒரு முத்தம், காது மடல்களில் உதடுகளால் ஒரு வருடல், உதடுகளில் தென்றல் பூவைத் தீண்டுவது போல வலிக்காமல் ஒரு முத்தமிட்டு, குட்மார்னிங் சொல்லி உங்களது மனைவியை எழுப்பிப் பாருங்கள், உறவைவிட அது ஆழமாக அவரது மனதைத் தொடும் என்கின்றனர் மனநல நிபுணர்கள்.

சருமத்தில் அலர்ஜியால் ஏற்படும் நோய்



Posted On April 10,2012,By Muthukumar
மணிக்கட்டில் இப் பெண்ணுக்கு அரிப்பெடுத்தது. அவ்விடத்தில் சருமம் சற்றுக் கருமை படர்ந்து சொர சொரப்பாகவும் இருந்தது. இதுவும் ஒரு சரும நோய்தான்.

Holy Thread
நூல் கட்டியவரைக் கடவுளும் காப்பாற்றவில்லை

கையில் நூல் கட்டியிருப்பதால் இப் பெண்ணுக்கு ஏற்பட்டிருப்பது (Allergic Contact Dermatitis) தொடர்பு ஒவ்வாமை தோலழட்சி என விஞ்ஞானத் தமிழில் சொல்லலாம். ஒட்டுக் கிரந்தி எனச் சொல்லலாமா தெரியவில்லை.

இது ஏன் ஏற்பட்டது?
  • நூலில் உள்ள இரசாயனங்கள் காரணமாக இருக்கலாம். 
  • அல்லது வீட்டு வேலைகள் செய்யும் போது கைகளை அடிக்கடி நனைப்பதால் நூலில் ஊறியிருக்கும் ஈரலிப்பு, 
  • அல்லது அதில் ஒட்டியிருக்கக் கூடிய சோப் காரணமாக இருக்கலாம். 
காரணம் எதுவானாலும் முதற் செய்ய வேண்டியது அந் நூலைக் கழற்ற வேண்டியதுதான்.

For Key Tags
பொக்கற்றிற்குள் திறப்புக் கோர்வை கொண்டு திரிந்தவருக்கு

தோடு, மூக்குத்தி, காப்பு, மாலை, அரைஞாண் போன்ற ஆபரணங்களுக்கும் அணிகலங்களுக்கும் இவ்வாறு நேரலாம்.

மங்கலச் சின்னமான பொட்டு அலர்ஜி


சிமெந்து, தோற் பொருட்கள், ரப்பர் காலணிகள், ரப்பர் கையுறைகள், மருத்துவத்திலும், அழகு சாதனங்களாகவும் பயன்படுத்தும் கிறீம் வகைகள் போன்றவையும் தொடர்பு ஒவ்வாமை தோலழட்சிக்குக் காரணமாவதை அவதானிக்க முடிகிறது.

தோலழற்சி, ஒவ்வாமைத் தோலழற்சி

ஊறு விளைவிக்கக் கூடிய எந்த பொருளுக்கும் எதிரான சருமத்தின் பிரதிபலிப்பாக அழற்சி ஏற்படுகிறது. பெரும்பாலும் அப்பொருள் சருமத்துடன் தொடர்புறும் அந்த இடத்திலேயே ஏற்படும்.


உதாரணமாக உள்ளாடையின் இலாஸ்டிக் தொடர்புறும் வயிறு மற்றும் பின்புறத்தில் சுற்றிவர ஏற்படலாம். கைக்கடிகாரத்தின் உலோகப் பகுதிகள் தொடர்புறும் மணிக்கட்டுப் பகுதியில் ஏற்படுகிறது.

சருமத்தில் ஏற்படும் அழற்சியை Irritant Dermatitis அந்நியப் பொருற் தொடர்பு தோல் அழற்சி என்பார்கள்.

Hair Dye Allergy
ஹெயர் டை பூசிய பெண்ணுக்கு நெற்றியிலும் ஏற்பட்டது

அதுவே சருமத்திற்கு ஒவ்வாத பொருளால் ஏற்படுவதாக இருந்தால் அதனை தொடர்பு ஒவ்வாமை தோலழற்சி Allergic contact Dermatitis என்பார்கள்.

Hair Dye Allergy

ஒவ்வாத பொருள் சருமத்தில் பட்டவுடன் இது ஏற்படுவதில்லை. பலதடவைகள் தொடர்பு ஏற்படும்போது படிப்படியாக ஒவ்வாமை தோலழற்சி ஏற்படுகிறது.

ஆனால் இவ்வாறு எல்லாமே தொடர்புறும் அந்த இடத்திலேயே ஏற்பட வேண்டும் என்பது நியதியல்ல. உதாரணமாக முகத்திற்கு ஒரு லோசனைப் பூசும் போது அல்லது தலை முடிக்கு முடிச்சாயம் (Hair Dye) பூசும்போது முகம் முழுவதும் அல்லது தலை முழுவதும் அவ்வாறு பாதிக்கப்படுவதில்லை. சில இடங்களில் மட்டும் திட்டுத் திட்டாக தோல் அழற்சி ஏற்படுவதையே காண்கிறோம்.

ஒரு முறை இவ்வாறு அழற்சி ஏற்பட்டிருந்து அது குணமாகிவிட்டது என வைத்துக் கொள்வோம். இவ்வாறு தொடர்பினால் நோயை ஏற்படுத்திய பொருள் மீண்டும் தொடர்பு கொள்ளப்பட்டால் அல்லது அதே பொருள் வாயினால் உட்கொள்ளப்பட்டிருந்தால்
  • மீண்டும் அதே இடத்தில் சரும அழற்சி ஏற்படலாம். 
  • அல்லது இன்னும் அதிகமாகவும் பெரிதாகவும் ஏற்படவும் வாய்ப்புண்டு.

அறிகுறிகள்

சருமத்தில் பல விதமான மாற்றங்கள் அவ்விடத்தில் ஏற்படும்
  • செந்நிறமான சருமத் தடிப்புகள்
  • சருமத்தில் வீக்கங்கள்
  • அவ்விடத்தில் அரிப்பு கடுமையாக இருக்கும்
  • சருமம் வரண்டு, வெடிப்புகள் ஏற்பட்டு, சிவந்து தீக் காயங்கள் போலவும் தோற்றமளிக்கலாம்.
  • கொப்பளங்கள் எற்பட்டு அதிலிருந்து நீராகக் கசியக் கூடும், அது உலரந்து அயறு போலப் படையாக படியவும் கூடும்.
  • பெரும்பாலும் ஒவ்வாத பொருள் தொர்புற்ற அதே அடத்தில் தோன்றுவதால் நோயை நிர்ணயிக்க சுலபமாக இருக்கும். இல்லையேல் வேறு எக்ஸிமா போல மயங்க வைக்கும்.
  • சில தருணங்களில் வலியும் ஏற்படும்.

யாருக்கு எப்பொழுது
  • தொழில் உதாரணமாக சலவைத் தொழிலாளர், பெயின்ட் அடிப்பவர்கள்
  • பொழுதுபோக்குகள்
  • பயணங்கள்
  • அழகுசாதனப் பொருட்கள்
  • ஆபரணங்கள்
 போன்றவையே முக்கிய காரணங்களாகின்றன.


செயற்கை ஆபரணங்கள், மார்புக் கச்சை போன்றவற்றில் உள்ள கொழுக்கிகள், கைக்கடிகாரச் சங்கிலி, இடுப்பு பெல்ட்டில் உள்ள பக்கிள் போன்ற பலவற்றிற்கும் ஏற்படுவதற்குக் காரணம் அவற்றில் உள்ள உலோகமான ஆன நிக்கல் (Niclel) ஆகும்.


சப்பாத்துத் தோலைப் பதனிடப் பயன்படுத்தும் இரசாயனமான Potassium dichromate பலருக்கு இத்தகைய ஒவ்வாமை தோலழற்சி நோயை ஏற்படுத்துகிறது.

முடிச்சாயத்தில் உள்ள இரசாயனமான Paraphenylenediamine தோலழற்சி நோயை ஏற்படுத்துகிறது.

சப்பாத்து பொலிஸ், அழுக்கு அகற்றும் பொருட்கள் ஆகியவற்றில் கலந்திருக்கும் Turpentine பலருக்கு தோலழற்சி நோயை ஏற்படுத்துகிறது.
சோப்பில் உள்ள இரசாயனப் பொருட்களும் தோலழற்சி நோயை ஏற்படுத்துகிறது.

தோலில் பூசும் சில களிம்பு மருந்துகள்.

தோலில் ஏற்படும் கிருமித் தொற்றுகளுக்கு எதிராக உபயோகிக்கப்படும் Neomycin என்ற மருந்து பலருக்கு அவ்விடத்தில் தோல் அழற்சியை ஏற்படுத்தலாம்.

சிகிச்சை
  1. ஓவ்வாத பொருள் என்ன என்பதை இனங் கண்டு அதை தொடர்பு படாமல் ஒதுக்குவதே முறையான சிகிச்சையாகும். உதாரணமாக ஒட்டுப் பொட்டுக் காரணம் என நீங்கள் கண்டறிந்து அதை அணியாது விட்டாலும் தோல்அழற்சி குணமாகி சருமம் தனது வழமையான நிறத்தையும் குணத்தையும் அடைய 2-4 வாரங்கள் எடுக்கலாம். ஆனால் சுகம்தானே என மீண்டும் அணிந்தால் பழையபடி தோலழற்சி ஆரம்பித்துவிடும்.
  2. சிலவகை மருந்திட்ட கிறீம் வகைகளை மருத்துவ ஆலோசனையுடன் பூசிவரக் குணமாகும். பெரும்பாலும் ஸ்டிரோயிட் வகை மருந்துகளே (Steroid) உபயோகிக்கப்படுகின்றன.
  3. கடுமையான நோயெனில் அலஜியைத் தணிக்கும் மருந்துகளை உட்கொள்ள கொடுக்கக் கூடும்.
  4. எவ்வாறாயினும் நோயை ஏற்படுத்தும் கள்ளனைக் கண்டறிந்து தவிர்ப்பதே நிரந்தரத் தீர்வாகும்.

பருவத்திற்கேற்ற உடைகள்

கந்தையானாலும் கசக்கி கட்டு என்பார்கள். சாதாரண காட்டன் உடை என்றாலும் அதை நன்றாக அணிந்தாலேபோ தும் அசத்தலாய் இருக்கும் . ஆனால் சில பெண் கள் அணிந்துள்ள ஆடைகளைப் பார்க்கும்போ து எந்த வித தொடர்பும் இல்லாமல் இருக்கும். அது புடைவையாக இருந்தாலும் அல்லது சுடி தார், ஜீன்ஸ் போன்ற மாடர்ன் உடைகளாக இருந்தாலும் உடலமைப்பு சரியாக இல்லாத போது அது பொருத்தமாக இருக்காது. அவரவ ருக்குப் பொருத்தமான ஆடைகளை பொருத்த மான முறையில் அணிந்தால் கண்டிப்பாக எல்லோரையும் கவரலாம்.
ஆடை அலங்கார நிபுணர்கள் கூறும் ஆலோச னைகளை பின்பற்றுங்க ளேன் நீங்களும் அழகு ராணிதான்.
ஃபேஷன் டிசைனர்கள் ஆடைகளைப் பொறுத்த வரை இரண்டு சீசன்க ளாக பிரிக்கிறார்கள். வெயில் காலம் ஆரம்பித்து வசந்த காலம் வரை ஒரு சீசனாகவும், இலையுதிர் காலம் ஆரம்பித்து குளிர்காலம் வரை இன் னொரு சீசனாகவும் பிரித்திருக்கிறார்கள். வெயில் காலத்திற்குத் தயாரிக்கப்படும் ஆடைகள் வசந்த காலம் வரை யிலும், இலையுதிர் காலத்தில் தயாரிக்கப்படும் ஆடைகள் குளிர்காலம் வரைக்கும் பொருந் துமாறும் ஆடைகளைத் தயாரிக்கிறார்கள்.
கோடைக்கேற்ற ஆடை
கோடை சீசனுக்கு, காட்டன் உடைதான் உடலுக்கு இதமாக இருக்கும். குர்தா, சல்வார், சேலை, பைஜாமா, வேட்டி சட்டை எல்லாமே காட்ட னில் கிடைக்கும் போது கவலையே படாமல் விதவிதமாகத் தேர்ந்தெடுத்து அணியலாம். பிரைட் கலர்க ளில் பெரிய பிரின்ட் போட்ட டிசை ன்களில் மிருதுவான துணிகளைத் தேர்ந்தெடுக்க வே ண்டும்.
காஞ்சி காட்டன் சேலைகள், சுங்கிடி காட்டன் சேலைகள், ஜெய்புரி, ராஜஸ்தானி, சில்க் காட்டன் என்று விதவிதமாக கிடைக்கிறது. காட்டன் மெட்டீரியல் வாங்கி சுடிதார், சல் வார், ஷார்ட் டாப் என தைத்துக் கொள்ள லாம்.
வியர்க்காத ஆடைகள்
ஓப்பன் நெக், ஸ்லீவ்லெஸ் ஆடைகள் வியர்க்காமல் ஃப்ரீயாக இருக் கும்.
வெயில் காலங்களில் கல்யாண வீடுகளு க்கு, பார்ட்டிகளுக்கு போகும் போது பட்டுச் சேலைதான் உடுத்திச் செல்லவேண்டும் என்றில்லை. ரிச்சான புடவைகள், காக்ரா சோளி போன்ற உடைகள் காட்டனிலேயே கிடைக்கிறது. பட்டுப் புடவையை விட அழ கான தோற்றத்தைக் கொடு க்கும்.
உடல் பருமனானவர்கள்
பெரிய உடம்பும், பெரிய மார்பகங்களும் இருந்தால் மெல்லிய ஆடைகளே வேண்டா ம். உருவமும் உடல்பாகங்களும் மேலும் பெரிதாகத் தோ ற்றம் தரும்.
பட்டு, கஞ்சி போட்ட காட்டன், ஆர்கன்டி, ஆர்கன்ஸா, டஸ்ஸர் சில்க் போன்றவை ஒல்லியாக இருப்பவர்களை ஓரளவு பூசினாற்போல காட் டும். நீளத் தலைப்பு வைத்துக் கொள்ளுங்கள். ஒல்லி என்பதால் நிச்சயமாக 6 முதல் 8 ப்ளீட்ஸ் வரும். குஜராத்தி ஸ்டைலில் கல க்கலாம். உயரத்தைக் குறைத்து, அகலமாகக் காட்டும். அகலமான பார்டர், நல்ல கான்ட்ராஸ்ட் கலர் புடவையை செலக்ட் செய்யுங்க ள். பிரின்டட் புட வைகளை அணி யும்போது அதற்கு கான்ட்ராஸ் டான பிளவுஸ் போடுங்கள். அகல பார்டர் புடவை நல்லது. உயரத்துக்கு அழகான தோற்றம் தரும்.
உயரமாக ஒல்லியாக உள்ளவர்கள்
ஒல்லியும் உயரமுமாக இருக்கும் பெண்கள் கோடு அல்லது கட்டம் போ ட்ட உடைகளை அணியக்கூடாது. சிறிய பார்டர் புடைவை அல்லது நீள வாக்கில் பூவேலை செய் த சுடிதார் அணிய வேண்டாம். சற்று பெரிய பூக் கள் போட்ட பளிச் சென்ற புடைவைகள் அல்லது சுடிதாரும் பாட்டமும், பூப்போட்ட சுடிதாரும் அணியலாம். நீளமான அகலமான டிசைன் எது வும் இல்லாத பிளைன் துப்பட்டாவை பொருத் தமான கலரில் அல்லது வெள்ளை, கறுப்பு நிறங் களில் அணியலாம்.
கறுப்பு அல்லது மாநிறப் பெண்கள்
கடும் நிறங்களில் ஆடைகள் தேர்ந் தெடுக்கக் கூ டாது. அடர்த்தி மற்றும் வெளிர் நிறங்கள் மாறி மாறி வருவது போல் இருந்தால் நன்றாக இருக் கும். அதில் ஏதாவது ஒரு நிறத்தில் முடிந்தால் ஆடையில் உள்ள லைட் நிறப் ப்ளவுசோ அல் லது துப்பட்டாவோ அணியவேண்டும்.
கறுப்பாக இருப்பவர்கள் கடும் நிறத்தில் உள்ள சேலைகளை அணிய வே ண்டாம் கருப்பாக, குள்ளமாக இருப்பவர்கள் மெல்லிய ஜரிகை பார்டர் வைத்தோ அல்லது மெல்லிய பார்டருடனோ சேலை அணிய லாம். பெரும்பாலும் பார்டரும், சேலையின் தலைப்பும் உள்ள புடைவைகளை தவிர்த்திட வேண்டும். அப்படி அணியும்போது அதில் சிறிய வெளிர் நிறத்தில் பூக்கள் அல்லது புள்ளிகள் இருந்தால் நன்றாக இருக்கும்.
சிவப்பு நிறப் பெண்ணா
சிவந்த நிறம் உடையவர்கள் பிளேனாக டிசைன் இல்லாத நிறத்தில் ஆடை அணிய வேண்டாம். அப்படி புடைவை அணியும்போது ஜாக்கெட் அட ர்த்தியான நிறத்தில் டிசைன்களுடன் இருக்கலாம்.
பருவக்காலத்திற்கு ஏற்ற உடைகள்
பெண்கள் துணிகளை வாங்கச் செல்லும்போது அது சீசனுக்கு ஏற்ற உடையா என்பதையும் பார்க்க வேண்டும். கம்பெனிகள் தள்ளுபடி என்ற பெயரில் ஆடைகளை விற்கும் போது சீசனுக்கு பொருத்த மில்லாத ஆடைகளை வாங்கி அணிந்து தேவையில்லாமல் கஷ்டப்படு கிறோம். எனவே ஆடை அலங்கார நிபுணர்கள் கூறியுள்ள இந்த ஆலோ சனைகளை பின்பற்று ங்களேன். நிறத்திற்கும், தோற்றத்திற்கும், உயரத் திற்கும் பருமனுக்கும் மற்றும் பருவத்திற் கும் தகுந்தபடி ஆடைகளை அணிந்தால் கண்டிப்பாக நாம் அழகாகத் தெரிவோம்.
இணை