Friday, 13 April 2012

கப்பல் கடலில் மிதக்கிறதே! அது எப்ப‍டி?

ஒரு ஊரே நகர்ந்து செல்வது போன்ற கப்பல், தண்ணீரில் மிதப்பது எப்படி என்ற வியப்பு நமக் கு உண்டு. கடலில் கப்பல் கள் எவ்வாறு மிதக்கின்றன என்று பார்ப்போம்.
சிறிய கப்பல்கள், பெரிய கப்பல்கள் என்ற வித்தியாச மின்றி எல்லா கப்பல்களு க்கும் அதிக எடை கொண்ட வை. ஆகவே ஒரு கப்பல் தண்ணீரில் இருக்கும்போது அதன் உடற்பகுதி ஓரளவு வரை தண் ணீரில் அமிழ்ந்திருக்கும். அதாவது, கப்பலின் எடைக்குச் சமமான தண்ணீர் இடம்பெயரும் வரை அதன் உடற்பகுதி தண்ணீரில் அமி ழும்.
10 ஆயிரம் டன் எடையுள்ள ஒரு கப்பலின் உடற்பகுதி, அதே எடை யுள்ள தண்ணீரை இடம் பெய ரச் செய்யும். எனவே ஒரு கப்ப லின் எடையைக் கூறுவதற்குப் பதிலாக, அது இடம்பெயரச் செய்யும் தண்ணீரின் எடையை க் கூறுகிறார்கள். அதாவது ஒரு கப்பலின் `டிஸ்பிளேஸ்மென்ட் ’ 10 ஆயிரம் டன் என்று கூறு வார்கள்.
அமிழ்ந்துள்ள கப்பலின் ஒவ் வொரு பகுதியையும் தண்ணீர் அழுத் துகிறது. தண்ணீரில் கிடப்பு நிலையில் இருந்து ஏற்படும் அழுத்தங் கள் கப்பலின் உடற்பகுதி யை நசுக்குகின்றன. ஆனால் அவை இந்த நடைமுறையில் ஒன் றையொன்று அமிழ்த்துச் சமநிலையை ஏற்படுத்துகின்றன. செங்கு த்தான போக்கில் உள்ள அழுத்தங்களின் சக்தியே கப்பலின் எடை யை ஒரு சமநிலைக்குக் கொண்டு வருவதாக ஆக்கி மிடிஸ் கருதி னார்.
காற்றில் அமிழ்ந்துள்ள பொ ருட்களுக்கும் இந்தக் கொ ள்கை பொரு ந்தும். கியாஸ் உள்ளிட்ட எல்லா திரவங்க ளுக்கும் ஆக்கிமிடிஸின் கொள்கை பொதுவானதே. உதாரணமாக, பலூனை எடுத்துக்கொள்வோம். அது தனது பருமனு க்குச் சமமான எடையை விட லேசாக இருந்தால் பறக்கும்.
மேலே செல்லச் செல்ல காற்றின் அடர்த்தி குறைவாகின்றது. அத னால் மேலே சென்ற பலூனின் உள்ளே இரு க்கும் வாயுவின் அடர்த்திக்கு சமனான காற் று வெளியே இருக்கும் வரை பலூன் மேலே செல்லும்.
நாம் வாயால் ஊதும் பலூன் மேலே செல்வ தில்லை. காரணம். பலூலினுள் இருப்பது சாதாரண காற்று. அதனால் அதன் எடையும் அது ஏற்படுத்தும் இடத்தின் காற்றின் எட் டையும் சமமாகிறது. இதன் காராணமாக வே பறக்க விடப்படும் பலூன்களில் காற் றைவிட அடர்த்தி (எடை) குறைவான ஈலியம் வாயுவால் நிரப்பப் படுகின்றது.
நீரில் மூழ்கிய ஒரு கப்பலை அல்லது, வாகனத்தை வெளியே கொ ண்டுவர அந்த கப்பலில் அல்லது வாகனத்தின் உள் பகுதியில் இப் பரால் ஆன பெரிய பலூன்களை வை த்து அதற்குள் (ஈலியம்) வாயு வை நிரப்புகின்றார்கள். அப்போது நீரினா ல் நிரம்பிய கப்பலின் அல்லது வாக னத்தின் உள்பகுதி பலூன் விரியும் போது நீரினால் நிரம்பிய பகுதி காற் றினால் நிரப்பப்ப்டுகின்றது.  நீரிலும் பார்க்க காற்று அல்லது ஈலியம் வாயு அடர்த்தி குறைவாக இருப்பத னால் மூழ்கிய கப்பலை அல்லது வாகனத்தை மிதக்கச் செய்கி றது.
கப்பல் கடலில் செல்லும் போது கடல் மட்ட நீர் இருக்க வேண்டிய இடத்தை கப்பலின் வெளிப் பக்கத்தில் கோடு இட்டு காட்ட ப்பட்டிருக்கும். இந்த நீர் மட்ட த்திற்கு மேல் கடல்நீர் மட்டம் கூடினால் கப் பல் மூழ்கும் ஆபத்து உள்ளது. அதுபோல் இவ் நீர் மட்டத்திற்கு கீழ் கடல் நீர் இருந்தாலும் கப்பல் சரியக்கூடிய ஆபத்து உள்ள து.
உப்பு குறைவான கடலில் (அடர்த்தி குறைந்த) சென்று கொண்டிரு க்கும் கப்பல் அடர்த்தி கூடிய உப்புக் கடலில் செல்லும் போது கூட மிதக்கின்றது. அதன்போது கப்பலின் கடல்நீர்மட்டத்தினை சரி செய்வதற்காக. அடித்தளத்தில் நீர் நிரப்பி நீர் மட்டத்தினை சரி செய்கின்றார்கள்.

No comments:

Post a Comment