Tuesday, 10 April 2012

கண்ணுக்கு கண்ணாக…

Posted On April 10,2012,By Muthukumar
பார்வையற்றவர்கள் மற்றும் விபத்தினால் கண் இழந்தவர்களின் முகத்தோற்றத்தை, அழகாக மாற்றவும், அவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும், செயற்கை கண்களை உருவாக்கும் உன்னத பணியில், காது கேளாத, வாய் பேச இயலாத, மூன்று மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஆர்.பி.தினேஷ், சி.கார்த்திக், வி.லோகேஷ் இவர்கள் மூவரும், காது கேளாத, வாய் பேச இயலாத சென்னை மாணவர்கள். நன்றாக படிக்கும் இவர்களுக்கு, படிப்பைத் தாண்டி, அருமையாக ஓவியங்கள் வரையும் திறமை உண்டு.
இவர்களைப் போன்ற மாற்றுத் திறனாளிகளில், திறமையான மாணவர்களைக் கண்டுபிடித்து, அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வரும் புனிதமான பணியில், டாக்டர் சுந்தர் தலைமையிலான பிரீடம் டிரஸ்ட் ஈடுபட்டுள்ளது. தங்களது பணியின் ஒரு கட்டமாக, இந்த மாணவர்களது ஓவியங்களை தொகுத்து, ஓவியக் கண்காட்சி நடத்தியது.
இவர்களது அற்புதமான ஓவியங்களைப் பார்த்த டாக்டர் சுந்தருக்கு திடீரென, மனதிற்குள் ஒரு யோசனை தோன்றியது.
பிறவியிலேயே பார்வைத் திறனற்றவர்கள், விபத்தினால் கண் பார்வை இழந்தவர்கள், கண் சுருக்கம் மற்றும் கண்புரை உள்ளிட்ட குறைபாடுகள் உடையவர்களின் முகத்தோற்றம், பார்ப்பதற்கு பொலிவற்று காணப்படும். இவர்களது அழகான தோற்றத்தையும், தன்னம்பிக்கையையும் மீட்டுத் தருவது செயற்கை கண்கள்தான்.
இந்த செயற்கை கண் பொருத்துவதன் மூலம், இழந்த பார்வையை திரும்ப பெற முடியாது. ஆனால், இழந்த கண்ணை திரும்ப பெற்றது @பான்ற திருப்தியிருக்கும், தன்னம்பிக்கை ஏற்படும், தாழ்வு மனப்பான்மை நீங்கும்.
"பாலி மீத்தைல் மெத்தாக்கிரை லேட்' என்ற மருந்து வகை பிளாஸ்டிக்கை கொண்டு உருவாக்கப்படும் இந்த செயற்கை கண் பொருத்துபவர்களின் கண்கள், ஒவ்வொருவருக்கும் ஒருவிதமாக இருக்கும்.ஏற்கன@வ இருக்கும் கண்ணை போலவே பிளாஸ்டிக்கின் மூலம் தத்ரூபமாக செயற்கை கண்ணை வரையும் பணியை, ஏன் இந்த காது கேளாத, வாய் பேச இயலாத மாணவர்களிடம் ஒப்படைக்கக் கூடாது என்று எண்ணியதன் விளைவு, இப்பொழுது இந்தியாவிலேயே, இது போல தத்ரூபமாக செயற்கை கண் உருவாக்கி பொருத்துபவர்கள், நாங்களாகத்தான் இருக்க முடியும் என்கிறார் செயற்கை கண் நிபுணர் திவாகர்.
இந்த மாணவர்கள் வரைந்த செயற்கை கண்கள் பொருத்தபட்ட வழக்கறிஞர் சிவகுமார், குடும்பத் தலைவியர் தனலட்சுமி, முனீஸ்வரி ஆகியோரைப் பார்த்தபோது அதை உணர முடிந்தது. அவர்களாக சொன்னபோதுதான், எது செயற்கை கண் என்றே கண்டுபிடிக்க முடிந்தது. அந்த அளவிற்கு மாணவர்களின் திறமை தென்பட்டது.
தங்களது ஓவிய திறமை, இப்படி பயன் படுவதில் பெரிதும் மகிழும் இவர்களை ஒருங் கிணைத்து, ஏழை, எளியவர்களுக்கு செயற்கை கண் பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள, ஜெயஸ்ரீ(9003262021) ஹேமா(9382705849) ஆகியோரை, செயற்கை கண் தேவை உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment