Tuesday, 11 November 2014

பெண்களே! உங்க‌ பிறப்புறுப்பு, சிவந்து, தடித்து காணப்படுகிறதா? – எச்சரிக்கை


 பெண்கள், கருத்தடை மாத்திரைக ளையோ அல்லது சாதனங்களையோ அடிக்கடி பயன் படுத்தக் கூடாது. ஏன்?
சிறுநீர் தொடர்பான பிரச்சனைகள் தற் போது அதிகமாக ஏற்படுகின்றன. அதிலும் குறிப்பாக பெண்கள் இம் மாதிரியான நோய்களால் அதிகம் பாதிக்க ப்படுகிறார்கள். சுத்தமில்லாத தண் ணீர், அதிக வேலைபளு, டென்ஷன், நீண்ட
நேரம் சிறுநீரை அடக்கிவைத்திருத்தல் போன் றவை இதற்கு காரணமாக சொல்லப்பட்டாலு ம், உடலமைப்பில் உள்ள வேறுபாடுகளே பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதற்கான காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
பெண்களுக்கு மலக்குடல் துவாரமும், பிறப்புறுப்பு துவாரமும் அருகருகே அமைந்துள்ளன. இதனால் ஒரு துவாரத்தில் இருந்து வெளிவரும் நுண்ணுயிரிகள், மற்றொரு துவாரத்திற்கு விரைவாகவும், எளிதாகவும் பரவுகின்றன. அதுமட்டுமல்ல, ஆணின் சிறு நீர்த்தாரை சுமார் 20 செ.மீ. நீள முடையது.
எனவே, வெளியில் இருக்கும் நோய்க்கிருமிகள் உள்ளே சென்று பாதிப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆனால், பெண்களுடைய சிறு நீர்த்தாரையின் நீளம் 5 செ.மீ. மட்டுமே. இதனால் வெளியில் இருக்கும் நோய்க் கிருமிகள் மிக எளிதாக சிறு நீர்பையை அடைந்து நோய்த் தொற்றை உண்டாக்குகின்றன. இதை சரியான நேரத்தில் கண்டறிந்து, உரியசிகிச்சை அளிப்பது அவசியம்.
அறிகுறிகள்தெளிவாக இல்லாமல் கலங்கலாகவெளிவரும் சிறுநீர். வழக்கம்போல் இல்லாது சிறுநீர் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறுதல். பிறப்புறுப்பு சிவந்து, தடித்து காணப்படுதல். சிறுநீர் கழிக்கு ம்போது எரிச்சல் உண்டாகுதல். பிறப்பு உறுப்பி ல் அரிப்பு ஏற்படுதல்.
எப்படித் தவிரப்பது? ஒருநாளைக்கு குறைந்த பட்சம் 3 லிட்டர் நீர் பருக வேண்டும். காய்ச்சி, ஆற வைத்து, வடிகட்டிய நீரையே பருக வேண்டும். சிறுநீரை அடக்கி வைக்காமல் வெளியேற்ற வேண்டும்.
ஒவ்வொருமுறை சிறுநீர் கழிக்கும் போதும் முழுமையாக சிறுநீரை வெளியேற்றிவிட வேண்டும். மருத்துவ குணம் நிறைந்த சோப்பையும், சுத்த மான தண்ணீரையும் கொண்டு தின மும் பிறப்பு உறுப்பைச் சுத்தம் செய்ய வேண்டும். மிகவும் இறுக்கமாக இல் லாமல் தளர்வான உள்ளாடைகளை யே அணிவது அவசியம். ஈரமான உள்ளாடைகளை பயன்படுத்துவ தைத் தவிர்க்க வேண்டும். கருத்தடை மாத்திரை களையோ அல்லது சாதனங்களையோ அடிக்க டி பயன்படுத்தக் கூடாது. அடிக்கடி பயன்படுத்தி னால் சிறுநீர்த்தாரையில் அழுத்தம் ஏற்பட்டுபெரிய அளவில் பாதிப்பு உண்டாகும்.
காபியில்உள்ள `காபின்’ என்றவேதிபொருள் சிறுநீர்பையை எளிதில் பாதிக்கும். எனவே, காபியை குறைவாக பருகுங்கள். குளிர் பானங்களை அதிகமாக பருகவேண் டாம். எப்போதும் டென்ஷனாக இருக்காமல் மனதை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ளுங்கள். நோய் எதிரப்பு சக்தியை அதிகரிக்கும் காய்கறி மற்றும் பழங்களை அதிகமாக சாப்பிடுங்கள்.