Tuesday, 29 October 2013

அக்குள் கருமையை இயற்கை முறையில் போக்க . . .

அக்குள் கருமையை இயற்கை முறையில் போக்க . . .

ற்கால ஃபேஷன் ஆடைகள் எல்லாம் ஸ்லீவ்லெஸ் ஆகவே வருகின்றன. அக்குள் கருமையாக இருப்பவர் களால் இத்தகைய ஆடைகளை அணிய முடிவதில்லை. இவ் வுலகில் இயற்கை வைத்தியத்திற்கு இருக் கும் சக்தி வேறு எந்த ஒரு பொருளுக்கும் கிடையாது. அந்தவகையில், அக்குள் கரு மையை இயற்கை முறையில் போக்குவத ற்கு என்ன செய்ய வேண்டுமென்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
01. எலுமிச்சை
அக்குளில் உள்ள கருமையைப் போக்குவத ற்கு எலுமிச்சை ஒரு சிறந்த பொருள். ஏனெ னில் அதில் ப்ளீச்சிங் தன்மை இருப்பதால், எலுமிச்சையைக் கொண்டு தினமும் அக்கு ளில் தேய்த்து, ஊற வைத்து கழுவினால், அக்குளில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, அக்குள் வெள்ளையாவதோடு, அக்குள் துர் நாற்றத்தில் இருந்து விடுபடலாம்.
02. மஞ்சள், தயிர்

மஞ்சள் மற்றும் தயிரில் இயற்கையாக வே ப்ளீச்சிங் தன்மை நிறைந்துள்ளது. எனவே சருமத்தில் உள்ள கருமையைப் போக்க, மஞ்சளை தயிரில் கலந்து, அக்கு ளில் தேய்த்து ஊற வைத்து கழுவினால், அக்குள் கருமையை நிச்சயம் போக்க லாம்.
03. தயிர், எலுமிச்சை

தயிர் மற்றும் எலுமிச்சை சாற்றை ஒன்றாக கலந்து, அக்குளில் தடவி 10 நிமிடம் ஸ்கரப் செய்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை தொடர்ந்து வாரத்திற்கு ஒரு முறை செய்துவந்தால், நல்ல பலன் கிடைக் கும்.
04. வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயை அரைத்து 1/2 கப் சாறு எடுத்து, அதில் சிறிது உருளைக்கிழங்கை அரைத்து கலந்து, அக்குளில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து, 10-15 நிமிடம் ஊற வை த்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டு ம். இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், நல்ல வித்தியாசம் தெரியும்.
05. சந்தனப்பவுடர், பால்

சந்தனப் பவுடரை பால் ஊற்றி பேஸ்ட் போல் செய்து, அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கல ந்து, அக்குளில் தடவி காய வைத்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இதனை வாரத்திற்கு 2-3 முறை செய்தால், அக்குள் வெள்ளையாகும்.
06. குங்குமப்பூ

குங்குமப்பூவை பாலில் ஊற வைத்து, அத னை அக்குளில் தடவி 10 நிமிடம் ஊற வை த்து, ஈரமான பஞ்சு கொண்டு துடைத்து, பின் நீரில் கழுவ வேண்டும். இந்த செயலை தின மும் செய்துவந்தால், அக்குளில் உள்ள கரும் புள்ளிகள் நீங்கி, அக்குள் வெள்ளையாகி விடும்.
07. கடலைமா, பால், மஞ்சள்

கடலைமா, பால், மஞ்சள் ஆகியவற்றை கலந்து பேஸ்ட் போல் செய்து, குளிக்கும் முன் அக்குளில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளித்தால், அக்குள் கருமை நீங்கிவிடும்.

08. உருளைக்கிழங்கு
இது மிகவும் எளிமையான ஒரு ஸ்கரப். அதற்கு உருளைக் கிழங்கை அரைத்து, அதனை தின மும் காலையில் அக்குளில் தடவி ஸ்கரப் செய் து, பின் குளித்தால், கருமையான அக்குளில் இருந்து விடுபடலாம்.

ஆஸ்துமா – ஏற்படுவதற்கான‌ காரணங்களும் தீர்வுகளும்!


உலகத்தில் மனிதன் தோன்றியது முதல் ஆஸ்துமாவும் உள்ளது. ஒருவருக்கு தொடர்ந்து சளிப் பிடித்தால் அவர்களுக்கு 50% முதல் 70% வரை ஆஸ்துமா வர வாய்ப்புள்ளது. தொடர்ந்து சளி, அதனை தொடர்ந்து தும்மலும், இருமலும் இருப்பவர்களுக்கு சிறிது சிறிதாக சளி, இருமல் தாக்கி, நுரையீரலில் உள்ள மூச்சுக் குழாயை கிருமிகள் தாக்குகிறது.
இதனால் மூச்சுக் குழாயின் உட்சுவர்களில் சேதம் உண்டாகி பாதிப்பு அடைகிறது.அந்த இடத்தில் வீக்கமும் உண்டாகிறது.இதன் காரணமாக அசுத்த நீர் கசிந்து கிருமிகள் தாக்குவதால் மூச்சுக் குழாய் கள் சுருங்கி விரியும் தன்மை குறைகிறது.
இதன் காரணமாக சுத்த காற்று உள்ளே செல்லவும், அசுத்த காற்று வெளியே வரவும் முடியாமல் தடங்கல் ஏற்படுகிறது.காற்று, மூச்சுகுழாயின் உட்புறத்தில் நீரை கிழித்துக் கொ ண்டு போவதும், கிழித்துக் கொண்டு வெளி யே வரும்போதுதான் ‘வீசிங்’ என்கிற மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.
முறையான சிகிச்சை எடுத்துக் கொண்டா ல் ஆஸ்துமாவிலிருந்து தப்பலாம். உடலு க்கு ஒத்துக் கொள்ளாத பொருட்களை தவிர்ப்பது மூலம் ஆஸ்துமாவை தவிர்க்க லாம்.
உதாரணமாக குளிர்ச்சி அளிக்கும் பழங் கள், தயிர் போன்ற உணவு பொருட்களையு ம், செல்ல பிராணிகளை வளர்ப்பதை அல் லது கொஞ்சுவதை ஆஸ்துமா நோயாளி கள் தவிர்க்க வேண்டும். தூசு பறக்கும் ஆலைகளில் வேலை பார்ப்பவர் களுக்கும், தூசி மற்றும் வாகனப் புகை பறக்கும் சாலைகளில் இரு சக்கர வாகனங்களில் மூக்கை மூடாமல் அதிகமாக பயணம் செய் பவர்களை ஆஸ்துமா தாக்கும் அபாயம் உள்ளது.
ஆரம்ப நிலையிலே ஆஸ்துமாவை கட்டுப்படுத்துவது அவசியம். ஆஸ்துமா முற்றிவிட்டால், பிராண வாயு சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும். உயி ருக்கே கூட ஆபத்தாக முடியும். எனவே, ஆஸ்துமாவை ஆரம்பத்திலே யே கட்டுப்படுத்தினால் ஆபத்தான விளைவுகளை தடுக்கலாம்.
சிகரெட் பிடிப்பதால் ஆஸ்துமா வர அதிக வாய்ப்புள்ளது.புகை பிடிப்ப தால் மட்டும் உலகம் முழுவதும் ஓராண்டுக்கு 5 கோடி பேர் இறக்கின்ற னர்.
உலகம் முழுக்க 23.5 கோடி பேர் ஆஸ்து மாவால் பாதிக்கப்பட்டிருக் கிறார்கள். இந்தியாவில் சுமார் 2 கோடி பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். (இந்தியாவில் 5 லட்சம் பேர் இறக்கிறார்கள்.) ஆஸ்துமாவினால் இறப்ப வர்களில் சுமார் 80% பேர், குறைந்த மற்றும் நடுத்தர வருமானப்பிரிவினராக இருக்கிறார்கள்.
இது சிறுவர்களிடம் அதிகம் காணபடுகிற து.மற்றவர்கள் விடும் புகையை சுவாசிப்ப வர்களுக்கும் இந்த நோய் வருகிறது. இந்தி யாவில் 10 சதவிகிதம் பேருக்கு ஆஸ்துமா பாதிப்பு இருக்கிறது.இதன் அறிகுறிகள் வெளிப்படையாக தெரிவதில்லை. எனவே, ஆண்டுக்கு ஒரு முறையா வது நுரையீரல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. 
ஆஸ்துமா நோய் வராமல் இருக்க, குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தி ல் இருந்து 6 மாதம் வரை கண்டிப்பாக தாய்ப்பால் கொ டுக்க வேண்டும் .தொடர்ச்சியாக 2 ஆண்டு வரைகூட தாய்ப்பால் கொடுக்கலாம்; தப்பி ல்லை.இதனால் ஆஸ்துமா போன்ற கொடிய நோய்கள் தாக்காது.அரசு மருத்துவமனைகளில் ஆஸ் துமா நோயை குணப்படுத்த நவீன வசதி கள் உள்ளன.
ஆஸ்துமா & சிகிச்சை
தியானம் (Meditations) ஆஸ்து மாவை குறைக்க உதவியாக இருக்கிறது. 
ஆஸ்துமாவை மூச்சுப் பயிற்சி மூலம் சுலபமாக விரட்டி விடலாம். மூச்சுப் பயிற்சி என்பது மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடுவது தான். மூச்சை ஒரு நிமிடம் உள்ளே இழுத்தால்,வெளியே விடும் போது இரண்டு நிமிடம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
காலைக் கடன்களை முடித்து விட்டு மூச்சுப் பயிற்சியில் ஈடுபட்டால் ஆஸ்துமாவை விரட்டி விடலாம்.
பதற்றம் இல்லா எளிய வாழ்வுமுறை மூலமும், சுகாதார வாழ்க்கை முறை மூலமும் ஆஸ்துமா பாதிப்பை குறைக்கலாம்!

மூச்சுத்திணறலை விரட்டி அடிக்கும் அபூர்வ‌ மூலிகைகள்!


ம் மூக்கை சுற்றியுள்ள காற்று அறைகளை சைனஸ் என்கிறோம். இந்த அறைகள்தான் தலை க்குப் பாதுகாப்பையும், முகத்துக்கு வடிவத்தை யும், குரலுக்குத் தனித்தன்மையையும் கொடுக்கி ன்றன. இவற்றிலிருந்து சளி உற்பத்தியாகி, மூக்கின் வழியே வெளிப்படுகிறது. இந்த பாதையி ல் அடைப்பு ஏற்படும்போது, மூச்சுத் திணறல், காற்ற றைகளில் வலியும், கிருமித் தொற்றும் ஏற்படுகிறது.
அறிகுறிகள்:
காய்ச்சல், உடல்சோர்வு, இருமல், மூக்கடைப்பு, தலைபாரம், மூக்கி ல் நீர் வடிதல்.

சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:
15 மிலி. துளசி இலைச்சாறுடன் தேன் கல ந்து உண்ணலாம்.
ஒரு கிராம் பேரரத்தைப் பொடியை, பாலில் கலந்து பருகலாம்.
ஆடாதொடை இலை, வேர் இரண்டையும் கைப் பிடியளவு எடுத்து நான்கு பங்கு தண்ணீ ர் சேர்த்து, அதை ஒரு பங்காக வற்றவைத்து, தேன் கலந்து அருந்தலாம்.
கசகசாப் பொடியில் அரைஸ்பூன் தேன் கலந்து சாப்பிடலாம்.
கைப்பிடி அளவு கண்டங்கத்திரிச் செடியில் நான்கு பங்கு தண்ணீர் சேர்த்து, அதை ஒரு பங்காக வற்ற வைத்து அருந்தலாம்.
பெருஞ்சீரகப் பொடி, மிளகுத் தூள், பனங்கற்கண்டு சம அளவு எடுத் து அதில் ஒரு ஸ்பூன் அளவு உண்ணலாம்.
தவசு முருங்கையிலைச் சாறு 15 மிலி அருந்தலாம்.
ஒரு ஸ்பூன் தும்பைப் பூச் சாறுடன் கற்கண்டு சேர்த்து அருந்தலாம்.
அரை ஸ்பூன் தூதுவளைப் பொடியில் தேன் கலந்து உண்ணலாம்.
சதகுப்பை இலைப்பொடியில் சம அளவு சர்க்கரை சேர்த்துக் கலந்து, அதில் அரை ஸ்பூன் உண்ணலாம்.
15 மிலி. கற்பூர வள்ளிச் சாறைக் கற் கண்டு சேர்த்து அருந்தலாம்.
ஆதண்டைக் காயை வற்றலாகச் செய்து சாப்பிடலாம்.
ஊமத்தையும் சுக்கையும் சமஅளவு எடுத்துப் பொடித்து, அதை அரைஸ்பூன் தேனில் கலந்து உண்ணலாம்.
50 கிராம் மணத்தக்காளி வற்றலை, 200 மிலி வெந்நீரில் ஊற வை த்து வடித்து அருந்தலாம்.
திப்பிலிப் பொடியுடன் பனங்கற்கண்டு சம அளவு சேர்த்து, அரை ஸ்பூன் பாலில் கலந்து உண்ணலாம்.
வெற்றிலைச் சாறு 15 மிலி எடுத்து மிளகுத் தூள் கால் ஸ்பூன் அளவு சேர்த்து உண்ணலாம்.
வெளிப் பிரயோகம்:
சுக்கை களியாகச் செய்து நெற்றியில் பற்று போடலாம்.
லவங்கத்தை நீர்விட்டு மைபோல் அரைத் து நெற்றியிலும், மூக்கின் மேலும் பற்று இட லாம்.
செம்பைப் பூவை எண்ணெயில் இட்டுக் காய்ச்சித் தலையில் தேய்க் கலாம்.
அகிற்கட்டைத் தைலத்தைத் தலையில் தேய்க்கலாம்.
கண்டுபாரங்கியைக் கடுக்காய், நெல்லிக்காய் தான்றிக்காய் சேர்த் து அரைத்துப் பற்று போடலாம்.
சுக்கைத் தாய்ப்பாலில் அரைத்து, நெற்றியில் பற்றிட்டு அனல் படும் படி லேசாகக் காட்டலாம்.
சேர்க்க வேண்டியவை:
தேன், மிளகு, பூண்டு, முட்டை, கோழி.
தவிர்க்க வேண்டியவை:
குளிர்ச்சியான உணவுகள், குளிரூட்டப்பட்ட அறை, வாழைப்பழம், திராட்சைப் பழம், தர்பூசணி, ஐஸ்கிரீம்.

வ‌யதுக்கு ஏற்ப உடலுறவு இச்சையில் ஏற்படும் மாற்ற‍ங்கள்


உண்ண உணவும், சுவாசிக்க காற் றும் மனிதன் உயிர்வாழ அத்தியவ சிய தேவையாக உள்ளது போல ஆண் பெண் இடையேயான உறவு ம் அவசியமான ஒன்றுதான் என்று கூறுகின்றனர் உளவியலாளர்கள். அன்பான தாம்பத்யம் ஆயுளை நீட்டிக்கச் செய்வதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். வய தான பிறகும் முழுமையான தாம்பத்யத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஆஸ்துமா, இரத்த அழுத்தம், இதய கோளாறு கள், போன்ற நோய்கள் குணமடைவதாக ஸ் வீடன் நாட்டில் நடைபெற்ற ஆய்வில் தெரிய வந்துள்ளது. மனநோயினால் பாதிக்கப்பட்ட வர்க ள் தாம்பத்ய உறவு கொள்வதன் மூலம் உற்சா கம் அதிகரித்து நோயின் தாக்கம் குறைவ தாகவும் அந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வயதுக்கு விடை கொடுங்கள்
ஆணுக்கும் பெண்ணுக்கும் பாலுணர்வு உணர்ச்சியில் வயது வேறு பாடு எதுவும் இல்லை. ஆரோக்கியக் குறைவு, நோய், மருந்து மாத்திரைகள், மது, புகை யிலை, போதை, சிகரெட், எண்ணெய், கொழுப்பு, அதிக எடை ஆகியவை உடலுறவில் ஆர்வம் தோன்றாததற்கு காரணமா கும். மாதவிடாய் நின்றாலும் ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் சுரக்கும்வரை 50, 60 வயது வரை யிலும் கூடப் பெண்களுக்கு உடலுறவில் ஈடுபாடு இருக்கும். அதனைப் போல, செக்ஸ் ஹார் மோன் டோஸ்டேரோன் சுரக்கும் 70, 80 வயதுவரை ஆண்களுக்கு உடலுறவில் இச்சையும், ஈடுபாடு ம் இருக்கும் என்கின்றனர் மருத் துவர்கள்
மனநிறைவும் திருப்தியும்
உடல் உறவின் உச்சக்கட்டத்தின் போது எண்டோர்பின்கள் மூளைக் குச் செல்வதால் இவை சிறந்த வலி நிவாரணியாகவும், தூக்க ஊக்கியா கவும் செயல்படுகின்றன. மேலும், அந்தச் சமயத்தில் வெளிப்படும் ஒப் பிட்டுகள் என அழைக்கப்படும் தூக்கக் கலக்கம் கலந்த நிலையை யும், உடலில் களைப்பையும் அதே சமயம் முழு மன நிறைவான உணர்வையும் தருகின்றன. நிம்மதியற்ற மனிதனுக்குத் திருப்தியை யும், உடலுக்கு நல்ல ஓய்வுடன் ஆழ்ந்த தூக்கத்தையும் அளிப்பது உடலுறவு ஒன்று தான். ஒரு திருப்தியான புணர்ச்சிக்குப் பிறகு உடலும் மனமும் தளர்ந்து ஓய்ந்து தானாகவே தூக்க நிலை க்குப் போய்விடுவதாக பிரிட்டனிலுள்ள இராயல் சொசைட்டி மருத் துவக் கழகம் கண்டறிந்துள்ளது.
நோய்கள் குணமடையும்
தாம்பத்ய உறவினால் ஏற்படும் உணர்ச்சிப் பிரவாகத்தினால் ஆஸ்துமா நோயுள்ளவர்களி ன் பிடிப்புகள் உடனே தடுத்து நிறுத்தப்பட்டு விடுகின்றன. அவ்வாறே உயர் இரத்த அழுத் தம், இதய நோய் உள்ளவர்க ளின் இரத்தக்குழாய் இறுக்க மும் தளர்த்தப்பட்டு விடுகிறது. நரம்பு, தசைபிடிப்பு, முதுகுப் பிடிப்பு, வலி உள்ளவர்களுக்கும் உடலுறவு நல்ல பலனைத் தருகிறது என் றுமருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகி ன்றன. டென்ஷன், மன இறுக்கம், கவலை, படபடப்பு இவைக ளுக்கு உடலுறவு நல்ல மருந்தாகப் பயன்படுகிறது. வயதான பிறகும் தாம்பத்யத்தில் ஈடுபடுபவர்கள் நீண்ட நாள்கள் உயிர் வாழ்கிறார் கள் என்று கூறுகிறது. எனவே வயது எதுவாக இருந்தாலும் நிறை வான தாம்பத்யமும், உறவும் தொடர்ந்தால் மன நிம்மதிக்கும், உடல் நலனுக்கும் எந்தக் குறையும் இருக்காது என்பதில் சந்தேகமில் லை.