Tuesday, 29 October 2013

ஆஸ்துமா – ஏற்படுவதற்கான‌ காரணங்களும் தீர்வுகளும்!


உலகத்தில் மனிதன் தோன்றியது முதல் ஆஸ்துமாவும் உள்ளது. ஒருவருக்கு தொடர்ந்து சளிப் பிடித்தால் அவர்களுக்கு 50% முதல் 70% வரை ஆஸ்துமா வர வாய்ப்புள்ளது. தொடர்ந்து சளி, அதனை தொடர்ந்து தும்மலும், இருமலும் இருப்பவர்களுக்கு சிறிது சிறிதாக சளி, இருமல் தாக்கி, நுரையீரலில் உள்ள மூச்சுக் குழாயை கிருமிகள் தாக்குகிறது.
இதனால் மூச்சுக் குழாயின் உட்சுவர்களில் சேதம் உண்டாகி பாதிப்பு அடைகிறது.அந்த இடத்தில் வீக்கமும் உண்டாகிறது.இதன் காரணமாக அசுத்த நீர் கசிந்து கிருமிகள் தாக்குவதால் மூச்சுக் குழாய் கள் சுருங்கி விரியும் தன்மை குறைகிறது.
இதன் காரணமாக சுத்த காற்று உள்ளே செல்லவும், அசுத்த காற்று வெளியே வரவும் முடியாமல் தடங்கல் ஏற்படுகிறது.காற்று, மூச்சுகுழாயின் உட்புறத்தில் நீரை கிழித்துக் கொ ண்டு போவதும், கிழித்துக் கொண்டு வெளி யே வரும்போதுதான் ‘வீசிங்’ என்கிற மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.
முறையான சிகிச்சை எடுத்துக் கொண்டா ல் ஆஸ்துமாவிலிருந்து தப்பலாம். உடலு க்கு ஒத்துக் கொள்ளாத பொருட்களை தவிர்ப்பது மூலம் ஆஸ்துமாவை தவிர்க்க லாம்.
உதாரணமாக குளிர்ச்சி அளிக்கும் பழங் கள், தயிர் போன்ற உணவு பொருட்களையு ம், செல்ல பிராணிகளை வளர்ப்பதை அல் லது கொஞ்சுவதை ஆஸ்துமா நோயாளி கள் தவிர்க்க வேண்டும். தூசு பறக்கும் ஆலைகளில் வேலை பார்ப்பவர் களுக்கும், தூசி மற்றும் வாகனப் புகை பறக்கும் சாலைகளில் இரு சக்கர வாகனங்களில் மூக்கை மூடாமல் அதிகமாக பயணம் செய் பவர்களை ஆஸ்துமா தாக்கும் அபாயம் உள்ளது.
ஆரம்ப நிலையிலே ஆஸ்துமாவை கட்டுப்படுத்துவது அவசியம். ஆஸ்துமா முற்றிவிட்டால், பிராண வாயு சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும். உயி ருக்கே கூட ஆபத்தாக முடியும். எனவே, ஆஸ்துமாவை ஆரம்பத்திலே யே கட்டுப்படுத்தினால் ஆபத்தான விளைவுகளை தடுக்கலாம்.
சிகரெட் பிடிப்பதால் ஆஸ்துமா வர அதிக வாய்ப்புள்ளது.புகை பிடிப்ப தால் மட்டும் உலகம் முழுவதும் ஓராண்டுக்கு 5 கோடி பேர் இறக்கின்ற னர்.
உலகம் முழுக்க 23.5 கோடி பேர் ஆஸ்து மாவால் பாதிக்கப்பட்டிருக் கிறார்கள். இந்தியாவில் சுமார் 2 கோடி பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். (இந்தியாவில் 5 லட்சம் பேர் இறக்கிறார்கள்.) ஆஸ்துமாவினால் இறப்ப வர்களில் சுமார் 80% பேர், குறைந்த மற்றும் நடுத்தர வருமானப்பிரிவினராக இருக்கிறார்கள்.
இது சிறுவர்களிடம் அதிகம் காணபடுகிற து.மற்றவர்கள் விடும் புகையை சுவாசிப்ப வர்களுக்கும் இந்த நோய் வருகிறது. இந்தி யாவில் 10 சதவிகிதம் பேருக்கு ஆஸ்துமா பாதிப்பு இருக்கிறது.இதன் அறிகுறிகள் வெளிப்படையாக தெரிவதில்லை. எனவே, ஆண்டுக்கு ஒரு முறையா வது நுரையீரல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. 
ஆஸ்துமா நோய் வராமல் இருக்க, குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தி ல் இருந்து 6 மாதம் வரை கண்டிப்பாக தாய்ப்பால் கொ டுக்க வேண்டும் .தொடர்ச்சியாக 2 ஆண்டு வரைகூட தாய்ப்பால் கொடுக்கலாம்; தப்பி ல்லை.இதனால் ஆஸ்துமா போன்ற கொடிய நோய்கள் தாக்காது.அரசு மருத்துவமனைகளில் ஆஸ் துமா நோயை குணப்படுத்த நவீன வசதி கள் உள்ளன.
ஆஸ்துமா & சிகிச்சை
தியானம் (Meditations) ஆஸ்து மாவை குறைக்க உதவியாக இருக்கிறது. 
ஆஸ்துமாவை மூச்சுப் பயிற்சி மூலம் சுலபமாக விரட்டி விடலாம். மூச்சுப் பயிற்சி என்பது மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடுவது தான். மூச்சை ஒரு நிமிடம் உள்ளே இழுத்தால்,வெளியே விடும் போது இரண்டு நிமிடம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
காலைக் கடன்களை முடித்து விட்டு மூச்சுப் பயிற்சியில் ஈடுபட்டால் ஆஸ்துமாவை விரட்டி விடலாம்.
பதற்றம் இல்லா எளிய வாழ்வுமுறை மூலமும், சுகாதார வாழ்க்கை முறை மூலமும் ஆஸ்துமா பாதிப்பை குறைக்கலாம்!

No comments:

Post a Comment