Tuesday, 29 October 2013

வ‌யதுக்கு ஏற்ப உடலுறவு இச்சையில் ஏற்படும் மாற்ற‍ங்கள்


உண்ண உணவும், சுவாசிக்க காற் றும் மனிதன் உயிர்வாழ அத்தியவ சிய தேவையாக உள்ளது போல ஆண் பெண் இடையேயான உறவு ம் அவசியமான ஒன்றுதான் என்று கூறுகின்றனர் உளவியலாளர்கள். அன்பான தாம்பத்யம் ஆயுளை நீட்டிக்கச் செய்வதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். வய தான பிறகும் முழுமையான தாம்பத்யத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஆஸ்துமா, இரத்த அழுத்தம், இதய கோளாறு கள், போன்ற நோய்கள் குணமடைவதாக ஸ் வீடன் நாட்டில் நடைபெற்ற ஆய்வில் தெரிய வந்துள்ளது. மனநோயினால் பாதிக்கப்பட்ட வர்க ள் தாம்பத்ய உறவு கொள்வதன் மூலம் உற்சா கம் அதிகரித்து நோயின் தாக்கம் குறைவ தாகவும் அந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வயதுக்கு விடை கொடுங்கள்
ஆணுக்கும் பெண்ணுக்கும் பாலுணர்வு உணர்ச்சியில் வயது வேறு பாடு எதுவும் இல்லை. ஆரோக்கியக் குறைவு, நோய், மருந்து மாத்திரைகள், மது, புகை யிலை, போதை, சிகரெட், எண்ணெய், கொழுப்பு, அதிக எடை ஆகியவை உடலுறவில் ஆர்வம் தோன்றாததற்கு காரணமா கும். மாதவிடாய் நின்றாலும் ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் சுரக்கும்வரை 50, 60 வயது வரை யிலும் கூடப் பெண்களுக்கு உடலுறவில் ஈடுபாடு இருக்கும். அதனைப் போல, செக்ஸ் ஹார் மோன் டோஸ்டேரோன் சுரக்கும் 70, 80 வயதுவரை ஆண்களுக்கு உடலுறவில் இச்சையும், ஈடுபாடு ம் இருக்கும் என்கின்றனர் மருத் துவர்கள்
மனநிறைவும் திருப்தியும்
உடல் உறவின் உச்சக்கட்டத்தின் போது எண்டோர்பின்கள் மூளைக் குச் செல்வதால் இவை சிறந்த வலி நிவாரணியாகவும், தூக்க ஊக்கியா கவும் செயல்படுகின்றன. மேலும், அந்தச் சமயத்தில் வெளிப்படும் ஒப் பிட்டுகள் என அழைக்கப்படும் தூக்கக் கலக்கம் கலந்த நிலையை யும், உடலில் களைப்பையும் அதே சமயம் முழு மன நிறைவான உணர்வையும் தருகின்றன. நிம்மதியற்ற மனிதனுக்குத் திருப்தியை யும், உடலுக்கு நல்ல ஓய்வுடன் ஆழ்ந்த தூக்கத்தையும் அளிப்பது உடலுறவு ஒன்று தான். ஒரு திருப்தியான புணர்ச்சிக்குப் பிறகு உடலும் மனமும் தளர்ந்து ஓய்ந்து தானாகவே தூக்க நிலை க்குப் போய்விடுவதாக பிரிட்டனிலுள்ள இராயல் சொசைட்டி மருத் துவக் கழகம் கண்டறிந்துள்ளது.
நோய்கள் குணமடையும்
தாம்பத்ய உறவினால் ஏற்படும் உணர்ச்சிப் பிரவாகத்தினால் ஆஸ்துமா நோயுள்ளவர்களி ன் பிடிப்புகள் உடனே தடுத்து நிறுத்தப்பட்டு விடுகின்றன. அவ்வாறே உயர் இரத்த அழுத் தம், இதய நோய் உள்ளவர்க ளின் இரத்தக்குழாய் இறுக்க மும் தளர்த்தப்பட்டு விடுகிறது. நரம்பு, தசைபிடிப்பு, முதுகுப் பிடிப்பு, வலி உள்ளவர்களுக்கும் உடலுறவு நல்ல பலனைத் தருகிறது என் றுமருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகி ன்றன. டென்ஷன், மன இறுக்கம், கவலை, படபடப்பு இவைக ளுக்கு உடலுறவு நல்ல மருந்தாகப் பயன்படுகிறது. வயதான பிறகும் தாம்பத்யத்தில் ஈடுபடுபவர்கள் நீண்ட நாள்கள் உயிர் வாழ்கிறார் கள் என்று கூறுகிறது. எனவே வயது எதுவாக இருந்தாலும் நிறை வான தாம்பத்யமும், உறவும் தொடர்ந்தால் மன நிம்மதிக்கும், உடல் நலனுக்கும் எந்தக் குறையும் இருக்காது என்பதில் சந்தேகமில் லை.

No comments:

Post a Comment