Thursday, 22 March 2012

அதுக்கு’ ஏத்த நேரம் ‘ஏழரை மணி’தானாம்!!

Posted On March 22,2012,By Muthukumar
காலைநேரத்தில் தம்பதிகள் உறவில் ஈடுபடுவது ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள். அதோடு அன்றைய தினம் முழுவதையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தும் என்று கூறியுள்ளது ஆய்வு முடிவு.
தம்பதியர்கள் உறவில் ஈடுபடுவதற்கு ஏற்ற நேரம் என்பது குறித்து இத்தாலி நாட்டில் உள்ள தம்பதியரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வு முடிவில் காலை ஏழரை மணிக்கு உறவில் ஈடுபடுவது ஆரோக்கியமானது என்று கண்டறியப்பட்டது. காலை நேரத்தில் உறவு கொண்டால் அன்றைய தினம் உற்சாகமாக இருக்குமாம்.
காலை நேரத்தில் என்னதான் பரபரப்பு இருந்தாலும், பாலுணர்வை தூண்டும் ஹார்மோன் சுறுசுறுப்பாக இருக்குமாம். எனவே காலை நேரத்தில் உறவில் ஈடுபடுவது ஆரோக்கியத்தோடு ஆர்கசத்தையும் அதிகரிக்கும் என்கின்றார் ஆய்வில் ஈடுபட்ட செக்ஸாலஜிஸ்ட் சுஸி ஹெமான். அது சரி ஆபீஸ் போற அவசரத்தில அதுக்கு எங்க நேரம் என்கிறீர்களா? ஆய்வு இத்தாலியில தான் நடந்திருக்கு நம் ஊரில் இல்லை.

தாய்மையின் கொடை, குழந்தையின் வரம்… தாய்ப்பால்! – Dr. ஆனந்தி

தாய்மையின் கொடை, குழந்தையின் வரம்… தாய்ப்பால்! ஆரோக் கியமான, அறிவான குழந்தைக் கு… இந்த நீர் ஆகாரம்தான் ஆதா ரம். இயந்திரத்தனமாக தாய்ப்பா ல் கொடுப்பதைவிட, அதன் சிற ப்பு அறிந்து, கொடுக்க வேண்டிய கால இடைவெளி அறிந்து, அமர வேண்டிய பொஸிஷன் பின்பற்றி, பாலுடன் அன்பா ன ஸ்பரி சமும் கலந்து என தாய்ப்பால் புகட்டும் போது… அதன் சிறப்பும் பலனும் பல மடங்கு கூடுகிறது!
மருத்துவராக மட்டும் இல்லை, அம்மா வாகவும் அனுபவித்துப் பேசுகிறார் சென்னையைச் சேர்ந் த குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் ஆனந்தி.  பிரஸ்ட் ஃபீடிங் பற்றி ஆனந்தி பகிர்ந்த தகவல்கள், அம்மாக்கள், அம்மாவாகப் போகிறவர்கள்… ஆகியோரின் அன்பான கவனத்துக்கு…
”தாய்மார்களுக்கு இயற்கை அளித்திருக்கும் அற்புதமான உடல் தகவமைப்புதான் தாய்ப்பால். கரு தரித்தவுடனேயே அதற்கான உடல் மாற்றங்கள் ஆரம்பிக் கும். மார்பகத்தில் இருக்கும் பால் சுரப்பிகள் மெல்ல விரிய, மார்பகமும் விரிவ டையும். குழந்தை சுலப மாக தாய்ப்பால் குடிக்க, கர்ப்ப காலத்திலேயே மார்பகக் காம் புகள் வெளிநீட்ட ஆரம்பிக் கும். இந்த இயற்கை மாற்றங் களுடன் மார்பகக் காம்புகளை ச் சுத்தம் செய்வது… ஒருவேளை, அவை உள்ளிரு ந்தால் வெளி யே எடுத்து நீவி விடுவது என தாய்ப்பால் புகட்ட, கர்ப்பிணிகள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
சுகப்பிரசவம் எனில்… குழந்தை பிறந்த அரை மணி நேரத்துக்குள் ளாகவும், சிசேரியன் எனில்… நான்கு மணி நேரத்துக்குள்ளாகவும் தாய்ப்பால் புகட்டிவிட வேண்டும். பிரச வித்த தாய்மார்களுக்கு, முதன் முதலில் சுரக்கும் சீம்பால் (Colostrum), 10 முதல் 40 மில் லியே இருக்கும். ஆனால், அதில் அடங்கியுள்ள சத்துக்களுக்கும், அது தரவ ல்ல நோய் எதிர்ப்புச் சக்திக்கும் இணை எதுவும் இல்லை. எனவே, தாயின் உடல் நிலைச் சோர்வு, குழந்தையின் அழுகை என எக்காரணம் கொண்டும் தவறவிட்டு விடாமல், சீம்பாலை கட்டாயமாகக் குழந்தைக்குப் புகட்ட வேண்டும்.
பொதுவாக, பிறந்த குழந்தைகளுக்கு இர ண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை பால் புகட்ட வேண்டும். அதற்குத் தேவையான பால் இயற்கையாகவே தாயின் உடலில் சுரக்கும். ‘எனக்குப் பால் பத்தல’ என்கிற கவலை, மூடத்தனம். ஏனெனில், இரட்டைக் குழந் தைகளாக இருந்தால்கூட தேவையான பாலை சுரக்க வைக்கும் தகவமைப்பு, இயற்கையின் ஆச்ச ர்ய வரம். அதனுடன் சத்தான ஆகா ரம், மகிழ்ச்சியான மனநிலை என இருப்பது, அந்தப் பால் சுரப்பை அடுத்தடுத்த மாதங்களிலும் அந்த த் தாய்க்குத் தொடர வைக்கும். மா றாக, ‘பால் பற்றாக்குறை’ என்று சொல்லி தாய்ப்பால் தவிர்த்து பவு டர், பசும்பால் என்று கொடுக்கும் போது… தாய்ப்பால் சுரப்பு குறைவ துடன், பாட்டிலைக் கழுவுவது, புக ட்டுவதில் சரியான  சுகாதாரம் இல் லாமல் போவது போன்ற காரணங்களால் குழந்தைக்கு வயிற்றுப் போக்கும் ஏற்படலாம் ஜாக்கிரதை” என்று எச்சரித்த ஆனந்தி, தொ டர்ந்தார் தாய்ப்பாலின் தன்மையைப் புரிய வைக்கும் தக வல்களோடு…
”சீம்பாலுக்கு அடுத்து சுரக்கும் பால், ‘ஃபோர் மில்க்’ (foremilk), எனப்படும். அதை யடுத்து வருவது ‘ஹைண்ட் மில்க்’ (hindmilk). இவை இரண்டும் வெவ்வேறு தன்மைகள் கொண்டவை. ஃபோர் மில்க் என்பது, குழந்தையின் தாகத்தைத் தணிப் பதற்காகத் தண்ணீ ராக இருக்கும். அடுத்து வரும் சற்று அடர்த்தியான கொழுப்பு, புர தம் என அனைத்துச் சத்துக்களும் அடங் கிய ஹைண்ட் மில்க், குழந்தைக்குத் தே வையான ஊட்டச்சத்து தேவையைப் பூர்த்தி செய்யும். குறிப்பிட்ட கால இடை வெளியிலோ… குழந்தை அழும் போதோ… தாய்ப்பால் கொடுக்கலாம். அதை அருந்திய பின்னரும் குழந்தை அழுகிறது என்றால், பசி தவிர வேறு ஏதோ பிரச்னை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
தாயின் ஆரோக்கியம்தான், சேய்க்குப் பால் மூலம் பகிர்ந்தளிக்கப் படும் என்பதால், தாய்ப்பால் புகட்டுவத ற்கு முன் தாய் ஒரு டம்ளர் ஜூஸ் அல் லது பால் அருந்துவது நல்லது. மேலும் பாலூட்டும் தாய்மார்கள் இயல்பாக எடுத் துக் கொள்வதைவிட, அதிகமாக 500 கிராம் கலோரிகள் மற்றும் 25 கிராம் புர தம் கிடைப்பது போல உணவு முறைக ளை அதிகப்படுத்த வேண்டும். தினமும் கீரைகள், காய்கறிகள், பருப்பு, அசைவம் சாப்பிடுபவர்கள் மீன், முட்டை என்று சாப்பிடலாம். பெரும்பாலான இந்தியத் தாய்மார்கள் ரத்தச் சோகையுடன் இருக் கிறார்கள் என்கின்றன ஆய்வு முடிவுகள். எனவே, இரும்புச்சத்து மாத்திரையையு ம் டாக்டரின் ஆலோசனையின் கீழ் எடுத் துக் கொள்ளலாம்” என்ற ஆனந்தி, ‘பால் புகட்டுவதற்கு சரியான பொஸிஷன் எது?’ என்பது பற்றியும் விளக்கினார்.
”சரியான பொஸிஷனில் குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்டா விட் டால், அதன் சுரப்பு குறைந்துவிடும். சரியான பொஸிஷனுக்கு கீழ்க் கண்ட வழிமுறைகளை கடைப்பிடிக்க லாம். அமைதியான, காற்றோட்டமான அறையில் பால் புகட்ட வேண்டும். சிசேரியன் ஆன தாய்மார்கள் ஆனாலு ம், படுத்த நிலையில் குழந்தைக்குப் பால் கொடுக்கவே கூடாது. நேராக அம ர்ந்து, குழந்தையை மடியில் வைத்து, இடது மார்பில் பால் கொடுப்பதாக இரு ந்தால், கையை ‘எல்’ வடிவத்தில் வைத் து, குழந்தையின் தலையைத் தாங்கிக் கொ ள்ள வேண்டும். வலது கையால் தலை முடியைக் கோதி விடுவது, கா தை மென்மையாக வருடுவது, உடலை வருடுவது போன்ற ‘மதர்லி டச்’ கொடு த்துக் கொண்டே இருக்க வேண்டும்.
மார்புக் காம்புகளை மட்டும் குழந்தையின் வாயில் வைத்தால் சரி வரப் பால் வராது, அந்த ஏமாற்றத்தில் குழந்தை அதைக் கடிக்கும், இதனால் ‘கிராக் நிப்பிள்’, அதாவது காம்பில் புண் ஏற்பட்டு, இன்ஃ பெக்ஷனாகி வலியும் உண்டாகு ம். இதைத் தவிர்க்க, மார்புக் காம் பைச் சுற்றியுள்ள கறுப்புப் பகுதியையும் குழந்தை சப்புமா று கொடுக்க வேண்டும். இரண்டு பக்க மார்பிலும் மாற்றி மாற்றி பால் புகட்ட வேண்டும். குழந் தை பால் குடிக்கக் குடிக்கதான் பால் ஊறும் என்கிற அறிவியல் உண்மையை தாய்மார்கள் அறிந்திருக்க வேண் டியதும் அவசியம்.
‘பிரஸ்ட் மில்க் ஃபார் பிரெய்ன் குரோத்’, ‘கவ் மில்க் ஃபார் பாடி குரோத்’ என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். ‘தாய்ப்பால் குழந்தையின் அறி வுக்கு’, ‘பசுவின் பால் ஆரோக்கியத்துக்கு’ என்ப துதான் இதற்கு அர்த் தம். குழந்தை அறிவில் சிறந்து வளர, முதல் ஆறு மாதங்களுக்கு தாய் ப்பால் மட்டும் புகட்ட வேண்டும். ஆறு மாதங்க ளுக்குப் பிறகு தாய்ப்பாலுடன் இணை உணவா க திட உணவுகளை ஆரம்பிக்கலாம். எனினு ம், இரண்டு வயது வரை மற்ற உணவுகளோடு தாய்ப்பாலும் கொடு த்து வருவது சிறந்ததே. குழந்தை பிறந்த மூன்றாவது மாதத்தில் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பெண்கள், ‘பிரெஸ்ட் பம்ப்’ கொண்டு பால் எடுத்து. ஸ்டெரிலைஸ்டு பாத்திரத் தில் ஃப்ரிட்ஜில் வைத்துவிடலாம். இது24 மணி நேரத்துக்குக் கெடாமல் இருக்கு ம். தாய், அலுவலகம் முடித்து வரும்வரை, வீட்டில் இருக்கும் குழ ந்தையின் பாதுகாப்பாளர், சங்கு மூலம் அந்தப் பாலை குழ ந்தை க்கு கொடுக்கலாம்” என்று வழிகாட்டிய ஆனந்தி, தாய்ப்பா ல் புகட்டுவதால் பெண்களு க்குக் கிடைக்கும் ‘மெட்டர்னல் பெனிஃபிட்’ பற்றியும் சொன்னார்.
”பிரசவமான பெண்களுக்கு அதிக ரத்தப்போக்கு இருக்கும். இத னை ‘போஸ்ட் பார்ட்டம் ப்ளீடிங்’ என்பார்கள். பிரசவத்தின் காரண மாக விரிந்திருக்கும் கர்ப்பப்பை, தாய்ப்பால் புகட்டும்போது சுருங் கி, பழைய நிலைக்குத் திரும்புவதால் இந்த ரத்தப்போக்கு நின்று விடும். கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட அதிகப் பருமனும் தாய்ப்பால் புகட்டும்போது தானாகக் குறைந்துவிடும். கொழுப்புச் சத்துக் குறைவதுடன், கருமுட்டை (ஓவரி) புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளும் குறையும்!” என்று முடித் தார் டாக்டர் ஆனந்தி! தாய்ப்பால் புகட்டும் அறிவியலும் கலையும் புரிந்ததா மம்மீஸ்?

அழகு குறிப்பு: மென்மையான உதடுகளின் ரகசியம்

முகத்திற்கு அழகு தருபவை உத டுகள். பனிக்காலத்தில் அவை வறண்டு வெடித்து விடும். எனவே மென்மையான, சிவந்த நிறமுடை ய உதடுகளைப் பெற அழகியல் நிபுணர்கள் தரும் ஆலோசனைக ளைக் கேளுங்கள்.
உதடுகள் உலராமல் இருக்க
உதடுகள் உலாராமல் இருக்க முத லில் மாய்ஸ்சுரைஸரைத் பூசி அதன் பிறகு மேட் லிப்ஸ்டிக் தடவ வேண்டும். உதடுகளின் வெளிப் புறத்தை லிப் பென்ஸிலால் வரை ந்துவிட்டு க்ரீம் லிப்ஸ்டிக்கைத் தடவினால் உதட்டைவிட்டு வெளியே வராது.
மென்மையான உதடுகள்

மென்மையான உதடுகளின் ரகசிய ம் ஈரப்பதம். நெய், வாசலீன் ஆகிய வற்றை தடவுவதால் உதடுக ளில் வெடிப்பு வருவதை தவிர்க்க லாம். உதடுகள் உலர்ந்துவிட்டதைப்போ ல் தோன்றினால் கன்டிஷனர் தட வலாம்.
லிப் கிளாஸ்
லிப் கிளாஸ் பளபளப்பானது, அதே நேரத்தில் மிகக் குறைந்த அள வில் நிறத்தை தரக் கூடியது. லேசான நிறம் பெற சிறந்தது. இதனை த் தடவினால் இயற்கையிலே யே ஈர உதடுகளைப்போல காட் சியளிக்கும். ஆனால் இது நீண் டநேரம் நீடிக்காது.
பீட்ரூட் சாறு
உதடுகளுக்கு இயற்கையிலே யே இளஞ்சிவப்பு நிறத்தைப்பெ ற இரவு உறங்கும் முன் முன் பீட் ரூட் சாறு தடவவும். மென்மை யான, ரோஜா நிற இதழ்களைப் பெற கொத்தமல்லிச் சாறால் உங்க ள் உதடுகளை அவ்வப்போது `மசாஜ்’ செய்யுங்கள். இவ்வாறு தொடர் ந்து செய்து வந்தால் உங்கள் உத டுகள் படிப்படியாக சிவப்பாக மாறும்.
இரவு படுக்கும் முன் இரண்டு துளிகள் ஆலிவ் ஆயில் உதட்டின் மீது தடவி வர காலையில் மென் மையான உதடுகளை காணலா ம்.
பாலாடையுடன் தேன் கலந்து அந்த கலவையில் உதட்டில் பூசி 20 நிமிடங்கள் ஊறவைத்து கழுவினால் உதடுகள் மென்மையா கும்.
தண்ணீர் அவசியம்

தினசரி 6 முதல் 8 டம்ளர் தண்ணீர் அருந் துவது உடலின் ஈரப்பதத்தை தக்க வைப் பதோடு உதடுகள் வறட்சியடையாமல் பாதுகாக்கும்.

முன்னாடி விளையாடினால் பின்னாடி நல்லா இருக்கும்!

Posted On March 22,2012,By Muthukumar

திருமணத்திற்கு பின்னர் கணவன் மனைவி இடையே தாம்பத்யத்தில் ஏற்படும் மகிழ்ச்சியானது படுக்கையறையோடு நின்றுவிடுவதில்லை. ஆங்காங்கே இலைமறை காயாக சமையலறையில் எழும் சின்ன சின்ன சங்கீதமும், கிணற்றடியில் யாருக்கும் தெரியாமல் நிகழும் சின்ன ஸ்பரிசமும் தம்பதியரை உற்சாகத்திற்கு கொண்டு செல்லும். உறவு மட்டுமல்லாது வீட்டுக்குள் தம்பதியருக்கிடையே நிகழும் முன்விளையாட்டுகளும் அவசியம் என்கின்றனர் உளவியலாளர்கள்.
புதுமண தம்பதியர்களுக்கு உறவைப் பற்றி ஒரு எதிர்பார்ப்பும், குறுகுறுப்பும் இருந்து கொண்டேதான் இருக்கும் அதனால்தான் கோவில் குளத்திற்கோ, திரைப்படங்களுக்கோ தம்பதியர்கள் தனியாக சென்றுவர வேண்டும் என்று வற்புறுத்தினர் முன்னோர்கள். திருமண தினத்தன்று நிகழும் சின்ன சின்ன வேடிக்கை, விளையாட்டுக்களும் இத்தகையதே.
தண்ணீர் குடத்திற்குள் ரொமான்ஸ்
ஒரு சின்ன குடத்திற்குள் மஞ்சள் தண்ணீரை ஊற்றி அதனுள் சிறிய மோதிரத்தைப் போட்டு புதுமணத்தம்பதியரை எடுக்கச் சொல்லி அனைவரும் வற்புறுத்த வெட்கத்தால் நெளிந்துகொண்டே இருவரும் கைகளை குடத்தினுள் விட அந்த சின்ன மோதிரத்தை தேடும்போதே இருவரின் கைகளும் உரசிக் கொள்ளுமே,அப்பொழுதே தொடங்கிவிடுகிறது காதலின் முன்விளையாட்டு.
காதல் பாடல்கள்
இது கொஞ்சம் ஒல்டு பேசன்தான் என்றாலும் அவசியமானது. காதல் பாடல்களை மெதுவாய் மனைவியின் காதுகளுக்கு மட்டுமே கேட்குமாறு பாடலாம். அதன் மூலம் உங்களின் எண்ணத்தை நீங்கள் வெளிப்படுத்தியத போலவும் ஆச்சு. உங்கள் மனைவியின் உற்சாகத்தை தூண்டிவிட்டது போலவும் ஆச்சு. என்ன பாட ரெடியாகிட்டீங்களா?
சமையலறை சங்கீதம்
உண்மையிலேயே ரொமான்ஸ் செய்ய ஏற்ற இடம் எதுவென்றால் அது சமையலறைதான். ஏனென்றால் அதில்தான் மையல் ஒளிந்திருக்கிறதே. அவ்வப்போது சமையலில் உதவுவது போல சென்று சின்ன சின்ன ஸ்பரிசங்களின் மூலம் உங்களின் எண்ணத்தை மெதுவாக வெளிப்படுத்தலாம்.
அசத்தலான ஆல்பம்
போராடிக்கும் தருணங்களில் திருமண ஆல்பம், ஹனிமூன் போட்டோக்களை எடுத்து பார்த்து அந்த இன்பத்தருணங்களை மறுபடியும் கண்முன் கொண்டுவரலாம். நெருக்கமாக அமர்ந்து திருமண நாளில் நடந்த விளையாட்டுக்களை வீடியோவில் கண்டு ரசிக்கலாம்.
சின்னதாய் ஒரு ஷாப்பிங்
வீட்டிற்கு அருகில் உள்ள ஷாப்பிங் மால்களுக்கு சென்று உங்கள் வாழ்க்கைத்துணைக்கு ஏற்ற பொருட்களை சர்ப்ரைசாக வாங்கித்தருவது காதல் உணர்வுகளை அதிகரிக்கும்.
விடுமுறை கொண்டாட்டம்
எத்தனைநாளைக்குதான் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடைப்பது என மனைவிக்கு நினைப்பு வரும். அதேபோல் அலுவலகம், வீடு என ஒரே மாதிரியாக இருப்பதும் போராடிக்கும். எனவே தனியாக நேரம் ஒதுக்கி குளிர் பிரதேசங்களுக்கு ஜாலியாய் ஒரு டிரிப் போய் வரலாம்.
சின்ன சின்ன காமெடி
இரவு உணவுக்குப்பின்னர் மனதிற்கு பிடித்த புத்தகத்தை படித்தவாறு அதில் உள்ள நகைச்சுவை துணுக்குகளை பரிமாறலாம். தொலைக்காட்சியின் நகைச்சுவை காட்சிகளை ஓடவில்லை மனதை நெருக்கும் அழுத்தங்களில் இருந்து விடுதலை பெறலாம்.
வேடிக்கையான தோல்வி
செஸ், கேரம்போர்டு, கார்ட்ஸ் போன்ற விளையாட்டுகளை ரொமான்ஸ்சாக தொடங்கலாம். ஜெயிக்கும் தருணத்திலும் தோல்வியை தழுவி விட்டுக்கொடுப்பது வேடிக்கையோடு உங்கள் மீதான காதலை அதிகப்படுத்தும்.

திருமணம் செய்துகொள்வது ஆண்களுக்கு அவசியமான ஒன்று

திருமணம் செய்து கொள்வ து ஆண்களுக்கு அவசியமா ன ஒன்று அதனால் இதய நோய் வருவது கூட தடுக்கப் படுவதாக சமீபத்திய ஆய் வில் தெரிய வந்துள்ளது. மணமாகாத ஆண்கள் எல்லாம் சந்தோசமாக பேச்சிலர் வாழ்க்கை யை கைவிட்டு விட்டு குடும்பத்த ஸ்தர் ஆகலாம் என்று சந்தோச முழக்கமிட்டுள்ளனர் ஆய்வாளர் கள்.
திருமணம் குறித்தும் குறிப்பாக திருமணத்தினால் ஆண்களுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும் புதிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்பொ ழுது தனியாக வாழும் ஆண்களை விட திருமணம் செய்து கொள்ளும் ஆண்க ளுக்கு இதயநோய் பாதிப்பு ஏற்படுவது குறைந்துள்ளது தெரிய வந்தது.
பேச்சிலர்ஸ், விவாகரத்து ஆனவர்க ள், மனைவியை இழந்தவர்கள் ஆகி யோர்களைவிட மனைவியோடு வாழ் பவர்களுக்கு இதய நோய் ஏற்படுவதி ல்லையாம். ( மனைவியோடு சண்டை போட்டு இதயநோய் வருதே என்ன செய்ய? என்று கேட்பவர்கள் விதிவி லக் கானவர்கள் )
கனடாவைச் சேர்ந்த 4403 இதய நோயாளிகள் ஆய்வுக்கு உட்படுத் தப்பட்டனர். இவர்களில் 33 சத விகிதம் பேர் பெண்கள். இவர்க ளில் திருமணம் முடித்தவர்க ளைவிட விவாகரத்தானவர் கள், மனைவியை இழந்தவர் கள், தனியாக வசிப்பவர்களு க்கு இதய வலி தொடர்பான நோய்கள் அதிகம் ஏற் பட்டது கண்டறியப்பட்டது. இதிலிருந்து வாழ்க்கைத் துணைவியின் மூலம் கணவரி ன் நலன் பாதுகாப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கணவரின் உடல் நலனில் அக்கறையோடு செயல்பட்டு அவருக்கு தேவையானதை பார்த்து பார்த் து செய்து கொடுப்பதினாலே யே ஆண்களுக்கு இதய நோய் ஏற்படுவதில்லையாம்.
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று சும்மாவா சொன்னார்க ள். எனவே ஆண்களே திரும ணம் என்றாலே அலற வேண் டாம். உங்களை கவனிக்க அக் கறையான ஒருவர் வரப்போகிறார் என்று உற்சாகத்துடன் திரு மணத்திற்கு தலையாட்டுங்கள்.

கோடையில் உங்கள் சருமத்தை பாதுகாக்க அழகியல் நிபுணர்கள் தரும் ஆலோசனைகள்

கோடை காலம் தொடங்கும் முன்பே வெயில் கொளுத்த தொடங்கி விட்டது. வெயிலு க்கு பயந்து கொண்டு வெளி யில் செல்லாமல் இருக்க முடி யாது. சிறிது தூரம் சென்று வந்தாலே முகம் வாடிப் போய் விடும் எனவே கருமையை மாற்றவும், சருமத்தை பாது காக்கவும் அழகியல் நிபுணர்கள் தரும் ஆலோசனைகள் உங்களு க்காக.
தயிர் கலவை
வெளியில் கிளம்பும் முன்பாக சிறிதளவு தயிரை முகம், கைகளில் தேய்த்து மித மான சுடுநீரில் அலம்புங்கள். பிறகு, துடைத்துவிட்டு, டால்கம் பவுடரை போ ட்டுக் கொள்ளுங்கள். இதனால் வெயிலி ன் உக்கிரம் சருமத்தை பாதிக்காது.
கருமை மறையும்
வெயிலில் அலைந்துவிட்டு வந்தவுடன், சோப்பு போட்டு அலம்பு வதால், அந்த சில விநாடிகள் மட்டுமே முகம் பளபளப்பாக இருக்கும். ஆனா ல் நிறம் அப்படியேதான் இருக்கும். சோப்புக்கு பதிலாக பாசிப் பருப்பு, கடலைப்பருப்பு, பூலான்கிழங்கு, கஸ்தூரி மஞ்ச ள், வெள்ளரி விதை, வெட்டி வேர் ஆகியவற்றை கலந்து அரைத்த பொடியை பூசி முகம் கழுவலாம். வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும், இந்த குளியல் பவுடருடன் ஒரு சிட்டிகை முல் தானி மட்டி, எலுமிச்சைசாறு , தேங்காய்ப் பால் சேர்த்து குளித்து வந்தால், சருமத்தில் உள்ள கருமை மறைந்து நிறம் கூடும்.
உருளைக் கிழங்கு பவுடர்
தோல் சீவிய உருளைக் கிழங்கை சிறிய துண்டுகளாக நறுக்கி வெயிலில் நன்றாக உலர்த்தி காய்ந்த உடன் நன்றாக அரைத்து வைத்துக் கொள் ளவும். இந்தப் பவுடரை தண்ணீரில் குழை த்து தின மும் முகத்தில் பூசி வர முகத்தில் உள்ள கருமை, திட்டுக்கள், புள்ளிகள் மறையும் முகம் பளிங்குபோல மாற்றி விடும்.
பச்சைக் காய்கறிகள்
உடம்பில் சூடு அதிகமாகும்போது, தோலின் கருமையும் அதிக மாகிவிடும். அதனால் கீரை, பச் சைகாய்கறிகளை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. மோர், இளநீர், பழச்சா று இவற்றை அருந்தி உடம்பை எப்போதும் குளுமையாக வை த்துக் கொண்டால், சிகப் பழகு ஓடிவந்து ஒட்டிக் கொள் ளும்.
இரவில் படுக்கப் போகும் முன் தரமான மாய்ஸ்ட்டுரைஸிங் க்ரீம், கோல்டு க்ரீம் ஆகியவற்றை முகத்தில் தடவவேண்டும். காலையில் வெளியே செல்லும் முன் சூரிய வெப்பம் தாக்கா திருக்க சன் டேன்லோஷன் தடவிக் கொள்ள வேண்டும்.
இயற்கை சிகைக்காய் பவுடர்
தலையில் அழுக்கும், பிசுக்கும் சேர்ந்து இருந் தால் முகம் கருப் பாகிவிடும். தலை சுத்தமாக இருந்தால் தான் சருமத்தில் கருமை படராது. அதோடு, சருமத்தில் ஓரளவு எண்ணெய்ப் பசை இருப்பது போல பார்த்துக் கொள்வதும் அவசியம். இதற்கு சிகைக்காய், பாசிப்பயறு, வெந்தயம், பூலாங்கிழங்கு, புங்கங்கொட்டை ஆகிய வற்றை சேர்த்து அரைத்து தலைக்கு தேய்த்து குளிக்கலாம். வாரம் இருமுறை உச்சி முதல் உள்ளங்கால் வரை எண்ணெய் தேய்த்து, இந்த ஸ்பெஷல் பொடியை போட்டு அலசுங்கள். தலை சூப்பர் சுத்தமாகிவிடும். தோலின் எண்ணெய்ப் பசை தக்கவைப்ப தோடு, கருமையும் மறைய தொடங்கும்.
வாரம் ஒரு முறை தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண் டும். புருவங்களை சீர்படுத்தி, மினி பேஷியல் செய்து முடியை சீராக வெ ட்டி வைத்துக் கொள்ள அதிகம் செல வாகாது. மாத மொருமுறை இவற்றை ச் செய்து கொள்வது முகத்தின் அழ கைப் பாதுகாக்க விரும்பும் வசதி படை த்தவர்கள் கோல்ட் பேஷியல் கினாட் பேஸியல் செய்து கொள்ளலாம்.
மேக் அப் கவனம்
வெயிலும், நெரிசலும் அதிகமாக இரு ப்பதால் கிரீம் மேக்-அப்பை கூடுமான வரை தவிர்ப்பது நல்லது. மேக்-அப் செய்வதற்கு முன் வியர்வை அதிகமாக உள்ளவர்கள் ஐஸ் கியூப் -ஐ முகத்தில் தேய் த்து அல்லது செய்த பிறகே மேக்-அப் செய்ய ஆரம்பிக்க வேண்டும். அப்படி ஐஸ் கியூப் கொடுக்காமல் மேக்கப் செய்து விட்டால் அவை சிறிது நேரத்துக்குப் பிறகு வியர்த்து விட்டால் சிவப்பு நிற புள்ளி களாக மாறிவிட வாய்ப்புகள் அதிகம். இதை தவிர்க்க பவுடர் மேக்- அப் அதிகமாக உபயோகி க்க வேண்டும். அவரவர் நிறத்துக்கேற் றா ற்போல் பவுடரை தேர்ந்து எடுக்க வேண்டும். இது மிக முக்கியமானதா கும். இதில் லிப்ஸ்டிக்கும் அடங் கும்.

வந்துடுச்சு `செயற்கை இறைச்சி’!

Posted On March 22,2012,By Muthukumar
எதை எதையோ புதிது புதிதாக உருவாக்கும் விஞ்ஞான உலகம், இப்போது `செயற்கை இறைச்சி'யையும் தயாரித்து வியக்க வைத்திருக்கிறது.
ஆலந்தின் மாஸ்டிரிக்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மார்க் போஸ்ட், கால்நடை ஸ்டெம் செல்களில் இருந்து இந்த செயற்கை இறைச்சியை உருவாக்கியிருக்கிறார். இந்த ஆண்டு இறுதியில், அதாவது அக்டோபர் மாதத்தில் இவர் உருவாக்கிய இறைச்சியால் ஆன `ஹாம்பர்கர்' தயாராகப் போகிறது.
செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட 3 ஆயிரம் இறைச்சிப் புரதப் பட்டைகளால் ஆன அந்த இறைச்சி பர்கர்தான் இதுவரை தயாரிக்கப்பட்ட பர்கர்களிலேயே மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும்.
ஹெஸ்டன் புளூமென்தான் என்ற புகழ்பெற்ற சமையல்காரரால் தயாரிக்கப்படப் போகும் அந்த இறைச்சியை உண்ணவிருக்கும் அதிர்ஷ்டசாலி (?) யார் என்று தெரியவில்லை.
இந்தச் செயற்கை இறைச்சியை உருவாக்குவது தொடர்பான சவால்களை கடந்த ஆறாண்டுகளாக விஞ்ஞானிகள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். கால்நடைத் தசைகளில் இருந்து ஸ்டெம்செல்களை பிரித்தெடுப்பது, அவற்றை ஆய்வகத்தில் வளர்ப்பது, தசை இழைப் பட்டைகளாக உருவாக்கி, செயற்கைக் கொழுப்புச் செல்களுடன் சேர்த்து உண்ணத்தக்கதாக மாற்றுவது எல்லாமே கடினமான பணிகள்.
மேலும், இதற்கு நிஜமான இறைச்சியைப் போல இளஞ்சிவப்பு நிறம் கொடுப்பது, சமைப்பதற்கும், சாப்பிடுவதற்கும் ஏற்ற தன்மையில் கொண்டுவருவது, இறைச்சியைப் போல உணரவும், சுவைக்கவும் வைப்பது எல்லாம் பிற சவால்கள்.
உலகின் எதிர்கால உணவுத் தேவைக்கு இச்செயற்கை இறைச்சி சரியான தீர்வாக அமையும் என்று விஞ்ஞானிகள் கூறும் அதேநேரம், மக்கள் இதை எந்த அளவு ஏற்றுக்கொள்வார்கள், இது என்னென்ன பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது.

ம‌ரணத்தை வரவழைக்கும் மாட்டிறைச்சி

ரெட்மீட் எனப்படும் மாட்டிறைச்சியை சாப்பிட்டால் இளவயதில் மரணத்தை தழுவ நேரிடும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
மேலை நாடுகளில் பன்றியின் இறை ச்சி பொதுவாக வெள்ளைக் கறியாகக் கருதப்படுகிறது. மாறாக மாட்டிறைச் சி சிவப்புக் கறியாகக் கருதப்படுகிற து. மையோக்ளோபின் என்ற இந்த புரோட்டீனே இதற்கு சிவப்பு வண்ண த்தை அளிக்கிறது.
பன்றியில் கோழியின் இறைச்சியை விட மையோக்ளோபின் (Myoglobin) அதிகமாக இருந்தாலும் மாட்டிறைச் சியைவிட மிகவும் குறைவு. இறைச்சி நன்றாக சமைக்கப்படும் போது இந்தச் சிவப்பு வண்ணம் மறைந்து பழுப்பு வண்ணத்தை அடைகிறது.
இதன் காரணம் மையோக்ளோபின் வேதி மாற்றம் அடைவதே. எந்த அளவுக்கு மையோக்ளோபின் இருக்கிறதோ அந்த அளவுக்கு கறி உடலுக்குத் தீங்கு விளைவிக்கிறது.
மனிதர்களின் உணவுப்பழக்கம் மற்றும் அவர்களின் ஆயுள் காலம் குறித்தும் ஹார்வார்டு பல்கலைக் கழக ஆய்வாளர்கள் ஆய்வு மேற் கொண்டனர். அதில் மாட்டிறைச்சி அதில் சாப்பிடுபவர்களில் 20 சத விகிதம் பேர் இளம் வயதில் மரண மடைவது கண்டறியப்பட்டது. 1,20,000 பேரிடம் ஆய்வு மேற் கொண்டதில் இது தெரிய வந்துள் ளது.
மாட்டிறைச்சி சாப்பிடுவதன் மூலம் இதயநோய்கள், புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறதாம். அதேசமயம் கோழிக்கறி, மீன் போன்ற வை இளம் வயது மரணத்தை தடுப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரி வித்துள்ளனர்.
தினசரி மாட்டிறைச்சி சாப்பிடும் இளைஞர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்விற்கு 22 வயதுடைய 37,698 ஆண்களும், 28 வயதுடைய 89,644 பெண் களும் இந்த ஆய்விற்கு எ டுத்துக் கொள்ளப்பட்டனர்.
நான்கு ஆண்டுகளாக அவ ர்களின் உணவுப்பழக்கம் குறித்து ஆய்வு மேற்கொ ள்ளப்பட்டது. இதில் தினசரி மாட்டிறைச்சி சாப்பிட்டவர் கள் 13 சதவிகிதம் பேர் இளமையிலேயே இதயபாதிப்பு, பல்வேறு உடல் உபாதை போன்ற நோய்களுக்கு ஆளானது தெரியவந்தது.
இதற்குக் காரணம் மாட்டிறைச்சியில் உள்ள கொழுப்பு, சோடியம், நைட்ரேட்ஸ், கார்சினோஜென்ஸ், குரோனிக் போன்றவை ஆகும். இதுவே இதயநோய், புற்று நோய் பாதிப்பு ஏற்பட காரண மாகின்றன என்றும் ஆய்வாள ர்கள் கூறியுள்ளனர்.
அதேபோல ஹாட் டாக் எனப் படும் துரித உணவுகளை சாப் பிடும் 20 சதவிதம் பேர் இளம் வயதில் மரணமடைவடைது ம் கண்டறியப்பட்டது. அதே சமயம் மாட்டிறைச்சிக்கு பதி லாக உலர் பருப்பு, மீன் போன்றவைகளை உட்கொண்டவர்கள் நீண் ட நாட்கள் ஆரோ க்யத்துடன் இருந்தது தெரியவந்தது.
எனவே மாட்டிறைச்சியை குறைவாக சாப்பிட்டு உடல் ஆரோக்கி யத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று ஆய்வாளர்கள் அறி வுறுத்தியுள்ளனர்.

கான்டக்ட் லென்ஸ் அணியப் போறீங்களா?

பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் மட்டுமே கண்ணுக்கு லென்ஸ் அணிந்து வந்த நிலை மாறி, இன்றைய நவீன உலகில் ‘கான்டக்ட் லென்ஸ்’ ஓர் அழகுச் சாதனமாக மாறிவிட்டது!   
சினிமா நட்சத்திரங்கள், பிரப லங்கள், கல்லூரிப் பெண்கள் என கான்டக்ட் லென்ஸ் மோகம் கொ டி கட்டிப் பறக்கிறது. அழகுக்கு அழகு சேர்க்கும் இந்த கான்டக்ட் லென்ஸ்களை பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவது நல் லது.
ராஜன் ஐ கேர்’ மருத்துவமனையின் கண் மருத்துவச் சிகிச்சை நிபு ணர் டாக்டர் சுஜாதா மோகனிடம் பேசினோம்… ”மிக மெல்லிய பிளாஸ்டிக் பாலிமரால் செய்யப்பட்ட கான்டக்ட் லென்ஸ், கண் விழிகளுக்குள் பொருத்தக்கூடியது. கான் டக்ட் லென்ஸில் மிக நுண்ணிய துளை கள் இருக்கும். இவற்றின் வழியாக கரு விழிக்கு ஆக்சிஜன் போகும்.
கான்டக்ட் லென்ஸ்களில் இப்போது புதி ய வரவாக ‘காஸ்மெட்டிக் லென்ஸ்’, ‘மல் ட்டி கலர் லென்ஸ்’ என்று பல்வேறு வகையான லென்ஸ்கள் கிடைக்கின்றன. பல வண்ணங்களில் கிடைக்கும் காஸ் மெட்டிக் லென்ஸ்களில், நிறமிகள் சேர்க் கப்படும். இந்த நிறமிகள் கண்ணின் கரு விழிக்குச் செல்லும் ஆக்சிஜன் அளவைக் குறைக்கின்றன. இதனால், கருவிழியில் ரத்தநாளம் வளர்ந்து கண் களில் நோய்த் தொற்று, அலர்ஜி போன்ற பிரச்னைகள் ஏற்படும். ஒரே லென்ஸை சரிவரப் பராமரிக்காமல் அதிக காலம் பயன்படுத் தும்போதும் மேற் கண்ட பிரச்னைகள் வரும் வாய்ப்பு உள்ளது.
பொதுவாக, நீண்ட நாள் பயன் படுத்தக்கூடிய லென்ஸ் வகை களைத் தவிர்த்துவிட்டு, தின மும் மாற்றிக்கொள்ளத்தக்க வகையிலான ‘டிஸ்போஸபிள் கான்டக்ட் லென்ஸ்’களைப் பய ன்படுத்துவதே நல்லது. குறை ந்தபட்சம் மாதம் ஒரு முறை மாற்றிப் போடக்கூடிய கலர் லென்ஸைப் போட்டுக் கொண் டால்கூட போதும். வருடக் கண க்கில் தொடர்ந்து அணிந்துகொள்ளும் லென்ஸ் வகைகளைப் பயன் படுத்தாமல் தவிர்ப்பது நல்லது. தினமும் மாற்றிக்கொள்ளும் லென்ஸ் வகைகளால், கருவிழிகளுக்கு நல்ல ஆக்சிஜன் கிடைப்ப தோடு, பாக்டீரியா போன்ற நுண் கிருமிகள் தங்கியிருந்து நோய்த் தொற்றை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளும் மிக மிகக் குறைவு; சுத்தம் செய்ய வேண்டும் என்ற அவசியமும் இல்லை.
மல்ட்டி கலர் லென்ஸ்களில் லைட் ஃபில்டரிங், ஸ்பெஷல் எஃ பெக்ட் தொழில்நுட்பங்கள் உள்ள தால், நல்ல வெளிச்ச ஊடுருவ லுடன் தெளிவான பார்வை கிடை க்கும். ‘சாஃப்ட் லென்ஸ்’ என்று ஒரு வகை கான்டக்ட் லென்ஸ் உள்ளது. இதைப் பொருத்திக் கொ ண்டால், கண்ணுக்குள் எந்தவித உறுத்தலும் இருக்காது. ஆனால், இந்த சாஃப்ட் லென்ஸில் உள்ள குறைபாடு என்னவென்றால், பார்வைத் திறன் குறைவாக இருந் தால் தெளிவானப் பார்வை கிடைக்காது. நுணுக்கமான விஷயங்களைப் பார்ப்பதும்கஷ்டம். மேலும், வெளிச்சத்தை ப் பார்க் கும்போது, கண்கள் அதி கப்படியாகக் கூசும்; குறைவான வெளிச்சத்திலோ, பார்வை மிகவும் மங்கலாகத் தெரி யும்.
மங்கலான பார் வைக் குறைபா டு உடையவர்க ளுக்காகவே ‘ஹைடெஃபெ னிஷன் லென்ஸ்’ என்ற அதிநவீன லென்ஸ் இப்போது வந்திருக் கிறது. நுணுக்கமான பார்வைத் திறன், கருவிழிக்குத் தங்குதடை இல்லாமல் ஆக்சிஜன் கிடைத்தல் போன்றவை இந்த லென்ஸின் ப்ளஸ்.
இவை தவிர, சாஃப்ட் டோரிக் லென்ஸ், எக்ஸ்டெண்ட் வேர் லென்ஸ், ஸ்பெஷல் லென்ஸ் என்று விதவிதமான லென்ஸ் வகைகளும் கிடைக்கின்றன. கால்பந்து, சிலந்தி வலை, பேய் விழி, டைகர் ஐ என புதுப்புது டிசைன்களிலும் கான்டக்ட் லென்ஸ்கள் விற்கப்படுகின்றன.
லென்ஸ் பராமரிப்பும், அதைப் பயன்படுத் தும் காலகட்டமும்தான் மிகவும் முக்கி யம். லென்ஸைக் கண்ணுக்குள் பொருத் தும் போதும், கழற்றி எடுக்கும்போதும் கைகளைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பிரத்யேகமாகத் தயாரிக்கப் படும் ஸ்பெஷல் சொல்யூ ஷனைக் கொ ண்டே லென்ஸை சுத்தம் செய்ய வேண் டும். அதிக பட்சமாக கான்டக்ட் லென்ஸ்க ளை நாள் ஒன்றுக்கு 10 மணி நேரத்துக்கு மேல் பயன்படுத்தக் கூடாது. பார்வைக் குறைபாடுகளுக்காக கான் டக்ட் லென்ஸ் போடுபவர்களுக்கு, எந்தப் பக்க விளைவுகளும் இல்லாத 12  லென்ஸ்கள் 1,200 ரூபாய்க்குக் கிடைக் கின்றன.
கான்டக்ட் லென்ஸ் வாங்குவதற்கு முன்பு, கண் மருத்துவரை அணுகி ஈர விழிக் குறைபாடு, அலர்ஜி போன்ற பரிசோதனைகளை செய்து கொண்டு, அதற்கேற்ப லென்ஸைத் தேர்ந்தெடுத்து அணி வது அவசியம்!

மலரும் மருத்துவமும் குங்குமப்பூ…

Posted On March 22,2012,By Muthukumar
பூக்கள் வாசனைக்காகவும், பூஜைக்காகவும் மட்டுமே உகந்தது என்று பலர் நினைக்கின்றனர்.  அது தவறான எண்ணம்.  இந்தப் பூக்களில் மருத்துவமும் நிறைந்துள்ளது.
இத்தகைய மருத்துவத் தன்மை கொண்ட பூக்களை நுகரும்போது உடலுக்கு நன்மையளிக்கிறது.  இதனால்தான் நம் முன்னோர்கள் நறுமணம் மிக்க மலர்களை பூஜைக்கு பயன்படுத்தினர்.
மலர்களைப் பயன்படுத்தி நோய்களை நீக்கும் முறைதான் மலர் மருத்துவம்.  இந்த மலர் மருத்துவம் தற்போது பிரசித்திப் பெற்றாலும், ஆதி காலத்திலிருந்தே இருந்து வந்துள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த மலர்களில் குங்குமப் பூவும் ஒன்று.
குங்குமப்பூவைப் பற்றி அறியாத பெண்கள் இருக்க மாட்டார்கள்.  கருவுற்ற தாய்க்கு குங்குமப் பூ கொடுத்து வந்தால் குழந்தை சிவப்பாகப் பிறக்கும் என்று குங்குமப்பூவை பாலில் கலந்து கொடுப்பார்கள்.  குழந்தை சிகப்பாகப் பிறக்கிறதோ இல்லையோ, ஆனால் ஆரோக்கியமான சுகப்பிரசவமாக குழந்தையைப் பெற்றெடுக்க முடியும் என்பது விஞ்ஞான பூர்வமான உண்மை.
குங்குமப் பூ இணூணிதண் இனத்தைச் சேர்ந்தது.  இதன் பூக்களில் உள்ள இதழ்களும் மகரந்தமுமே மருத்துவத் தன்மை கொண்டவை.  இதனை நீரிலிட்டால் சிறிது நேரத்தில் நீர் முழுவதும் செம்மஞ்சள் நிறமாக மாறும்.  இது மேற்காசிய நாடுகளிலும் இந்தியாவில் காஷ்மீர் மாநிலத்திலும் பயிராகிறது.
இதற்கு ஞாழல் பூ, காஸ்மீரகம் என்ற பெயர்களும் உண்டு.

Tamil    - Kungumapoo
English    - Saffron
Sanskrit    - Kumkuma
Malayalam    - Kugamapoo
Telugu    - Kumkumapoova
Hindi    - Kesar
குங்குமப்பூ வைக்கண்டால் கூறுகொண்டை பீனசநோய்
தங்குசெவித் தோடஞ் சலதோடம்-பொங்கு
மதுரதோ டந்தொலையும் மாதர் கருப்ப
உதிரதோ டங்களறும் ஒது
- அகத்தியர் குணவாகடம்
பொருள் - நீர் வேட்கை, மேகநீர், தலைவலி, கண்ணில் விழுகின்ற பூ, கண்ணோய், வாந்தி, மூக்கில் நீர் வடிதல், நீரேற்றம், கருப்பை அழுக்கு போன்றவற்றைப் போக்கும்.
மருத்துவப் பயன்கள்
காய்ந்த குங்குமப்பூவை பாலில் கலந்து கொதிக்க வைத்து கருவுற்ற மூன்றாம் மாதத்திலிருந்து கர்ப்பிணிப் பெண்களுக்கு கொடுத்து வந்தால் குழந்தை ஆரோக்கியமாக வளரும்.  தாய்க்கும் சிசுவிற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும். சுகப்பிரசவம் ஆக அதிக வாய்ப்புண்டு.
கர்ப்பிணிகளுக்கு இரத்தத்தில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி அதிகளவு இரும்புச்சத்தை உட்கிரகிக்கச் செய்து உடலுக்கு பலம் கொடுக்கும்.  சிசுவிற்கு சருமம் சம்பந்தப்பட்ட நோய்கள் அணுகாதவாறு காக்கும்.
ஆண், பெண் இருபாலரும் குங்குமப்பூவை பாலில் கலந்து அருந்தலாம். ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். பெண்களுக்கு கருப்பையில் உள்ள தேவையற்ற அழுக்குகளைப் போக்கி கருப்பையை வலுவாக்கும்.  மாதவிலக்கு சுழற்சியை சீராக்கும்.
கண் பார்வையை தெளிவாக்கும்.  40 வயதைத் தாண்டியவர்களுக்கு உண்டாகும் வெள்ளெழுத்தைப் போக்கும்.  கண்களில் பூ, புரை போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.
தலையில் நீரேற்றம், தலைவலி, மூக்கில் நீர் வடிதல் போன்றவற்றைப் போக்கும். நுரையீரல் சளியை நீக்கும்.
அஜீரணத்தைப் போக்கி நன்கு பசி உண்டாக்கும்.

பெண்களின் உயிரை பறிக்கும் கருத்தரிப்பு!

கருக்கட்டல் அதாவது ஆணின் விந்தும் பெண்ணின் முட்டையும் சேர்வது கருப்பைக்கு வெளியே உள்ள பலோப்பியன் குழாய் போன்ற அமைப்பிலாகும். இவ் வாறு  கருக்கட்டப்பட்ட நுகம் என ப்படும் சிசுவின் ஆரம்ப நிலை அந்தக் குழாயின் ஊடாக கருப்பை யின் உட்பகுதியை அடைந்து கருப்பையின் உட்புறத்தில் ஒட் டிக் கொண்டு வளர்ச்சியடையும். இதுவே சாதாரணமாக எல்லோரி லும் நடைபெறும் செயன் முறை யாகும்.
 
சிலவேளைகளில் கருக்கட்டப்பட்ட சிசு கருப்பையின் உற்பகுதி க்கு வராமல் பலோப்பியன் குழாயினுள்ளே தங்கி விடலாம் அல் லது பலப்பியன் குழாய்க்கு வெளியே வயிற்றுக் குழிக்கு ள் அல்லது சூலகத்திலே செ ன்று ஒட்டிக் கொள்ளலாம்.
 
இதுவே கருப்பைக்கு வெளி யே கருத்தரித்தல் (Ectopic pregnancy) எனப்படுகிறது.
 
இந்த நிலைமை ஏற்பட்ட பெ ண்களிலே கரு வளர வளர அதற்குரிய போதிய இடம் கிடைக்கா மல் போவதால் அது வெடிக்கலாம். இது Ruptured ectopic pregnancy ( கருப்பைக்கு வெளியேயான கரு வெடிப்பு ) எனப்படும்
இது சில நிமிடங்களிலேயே உயிரைப் பறித்து விடக்கூடிய பார தூரமான நிலையாகும்.
 
ஆகவே கரு வெடிப்புக்கு முன்ன மே இதை கண்டு பிடிப்பது அவ சிய மாகும்.
 
சாதாரணமாக வெடிப்படைவத ற்கு முன் இது சிறிதளவு நோவி னை (வயிற்று வலியினை) ஏற் படுத்தும் .இந்த நேரத்தில் உடனடி யாக வைத்தியரை நாடுவது அவ ர்களின் உயிரை இலகுவாக காப் பாற்றி விடும்.
 
ஆனாலும் சில பெண்களிலே ஆரம்ப அறிகுறிகள் எதுவும் இல்லா மலேயே இந்த வெடிப்பு ஏற்படலாம். அவர்களும் மிகவும் விரை வாக வைத்திய சாலைக்கு செல்வதன் மூலம் உயிரைக் காப்பாற் றிக் கொள்ள முடியும்.
 
எவ்வாறானா சந்தர்ப்பத்தில் நாம் கருப்பைக்கு வெளியேயான கருத்தரித்தல் ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்க வேண்டும்?
 
உடலுறவில் ஈடுபட்டுக் கொண் டிருக்கும் எந்த பெண்ணும் தனக்கு அடிவயிற்று வலி ஏற்படும் போது முதலில் கவனத்தில் கொள்ள வேண்டியது இந்த நிலைமை யைத்தான். அதுவும் மாதவிடாய் பிற் போன பெண்கள் அல்லது கர்ப்பம் உண்டாகியுள்ளதாக சிறு நீர் மூலம் உறுதி செய்து கொண்டாலும் இதுவரை ஸ்கேன் செய்து கொள்ளாத பெண்கள் தங்களுக்கு வயிற்று வலி வந்தால் முதலில் கவனத்தில் கொள்ள வேண்டியது இந்த நிலைமையைத்தான்.
 
யாருக்கு இந்த நிலைமை ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகம்?
  1. .வயிற்றிலே முன்பு ஏதாவது சத்திர சிகிச்சை செய்து கொ ண்ட பெண்கள்
  2. கருப்பை அலர்ச்சி அல்லது பலோப்பியன் குழாய் அலர்ச்சி ஏற்பட்ட பெண்கள்
  3. கர்ப்பத்தடை லூப் போட்டுக் கொண்டபின் தவறுதலாக கரு உண்டான பெண்களிலே இந்த நிலை ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகமாகும்.
மேலும் ஏற்கனவே இந்த நிலைமையால் பாதிக்கப்பட்ட பெண்களு க்கு அடுத்த முறையும் இது ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிக மாகும்.
 
இருந்தாலும் இவை எதுவுமே இல்லாத சாதாரண பெண்களிலே கூட இது ஏற்படலாம்.
 
இதன் ஆரம்ப அறிகுறிகள் எவை?
 
பொதுவாக இது கருத்தரித்து மூன்று மாத காலத்துக்குள்ளேயே பாதிப்பை ஏற்படுத்தும்.
 
ஆரம்ப அறிகுறியாக பிற்போன மாதவிடாயுடன் தொடர்ச்சியான அடி வயிற்று வலி ஏற்படும்.
 
சில பெண்களிலே சிறிதளவான இரத்தம் பிறப்பு வழியூடாக வெளி வரலாம்.
 
சற்று தீவிரமடையும் போது மயக்கமடையும் உணர்வு, மூச்செ டுக்கச் சிரமம் , தோள்ப்பட்டை வலி போன்றவை ஏற்படும்.
 
மேலே சொன்ன அறிகுறிகள் ஏற்படுவது கரு வெடிப்பதற்கு முன் கொஞ்சம் கொஞ்சமாக இரத்தக் கசிவு ஏற்படுவதால் ஏற்படுபவை.
 
கரு வெடிக்கும் போது சடுதியாக அதிகரித் த வயிற்று வலியுடன் மயக்கமடையலாம் . அந்த நிலையிலே சில நிமிடங்களிலே கூட உயிர் இழப்பு ஏற்படலாம்.
 
ஆகவே உடலுறவில் ஈடுபடும் எந்தக் பெண்ணும் வழமைக்கு மாறாக வயிற்று வலி ஏற்படும் போது உடனடியாக வைத்தி யரை நாடி இந்த நிலைமை இல்லை என் பதை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்.
 
தீர்வுகள் :
 
இந்த நிலைமைக்கு அனேகமாக சத்திர சிகிச்சையே தீர்வாக அமையும்.இருந்தாலும் இரத்தக் கசிவு ஏற்பட முன்னமே மிகவும் ஆரம்ப நிலையிலேயே கண்டு பிடிக்கப்பட்டால் இரசான மருந் துகள் மூலம் கரு சிதைக்க பட லாம்.
 
சத்திர சிகிச்சை வயிற்றை வெட்டுவதன்(Laparotomy) மூலம் அல்லது குழாய் போ ன்ற அமைப்பி உட்செலுத்தும் லப்பிராஸ் கோப்பி (Laparas -copy) முறை மூலம் மேற்கொ ள்ளப் படலாம்.
 
இதை நோயின் தீவிரத்தைப் பொறுத்து வைத்தியரே தீர்மானிப் பார்.
 
ஒருமுறை இந்த நோயினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மீண் டும் ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகம். ஆகவே அடுத்த முறை கருத்தரித்தவுடன் ஸ்கேன் செய்து கரு கருப்பையின் உள்ளேதான் தங்கியுள்ளது என்பதை ஆரம்பத்திலேயே உறுதிப்படுத்திக் கொள் ளவேண்டும்.

தூக்க‍மின்மையும், அதற்கான தீர்வுகளும்

தூக்கமின்மை எனப்படும் நோய் ஆங்கிலத்திலே insomnia எனப் படுகிறது. இது வயதானவர்களி னிடையே காணப்படும் ஒரு பொதுவான பிரச்சி னையாகும்.
நான்கு வெவ்வேறு விதமான முறைகளிலே இந்நோய் வெளி க் காட்டப்படலாம்…
  • படுக்கையில் கிடந்தாலும் நித்திரைக்கு செல்ல முடியாமை
  • அடிக்கடி நித்திரை குழம்புதல்
  • சரியான அளவு தூங்காமல் அதிகாலையிலேயே எழுந்து விடல்
  • நித்திரை கொண்டாலும் திருப்தியான நித்திரையின்மை
இந்தப் பிரச்சினை வேறு விதமான நோய்களோடு கலந்து காண ப்படலாம். உதாரணமாக் மன நோய்கள் , நோவினை ஏற்படுத்தும் மருத்துவ நோய்கள் போன்றவை.
இவ்வாறு வேறு விதமான நோய்களோடு இறுபவர்க ளுக்கு இந்த நித்திரையின் மை பிரச்சினை ஏற்படுமா னால் இது வெறுமனே அந்த மன நோயாலோ அல்லது மற்றைய நோயினால் ஏற்ப டும் நித்திரையின்மை என்று விட்டு விடாமல், நித்திரை யின்மை தீர்க்கப்பட வேண் டிய பிரச்சினையாகும்.
 
இந்த நோயினால் அதிகம் பாதிக்கப்படக் கூடியவர்கள்…
  • வயது முதிந்தவர்கள்
  • பெண்கள்
  • விவாகரத்துப் பெற்றவர்கள்
  • துணை இழந்து தனிமையில் இருப்பவர்கள்
  • புகைப் பிடிப்பவர்கள்
  • அதிகம் கோப்பி குடிப்பவர்கள்
  • அதிகம் மது அருந்துபவர்கள்
  • சில குறிப்பிட்ட மருந்துகளை உட்கொள்ளுபவர்கள்
இதற்கான தீர்வு :
 
முதலாவதாக இந்தப் பிரச்சினை வேறு நோய்களோடு சேர்ந்து அல்லது வேறு நோய்களினா ல் (மன நோய் உட்பட) ஏற் படுமானால் அந்தக் குறிப்பி ட்ட நோய்க்கு சரியான மருந் தளிக்கப்பட வேண்டும்.
 
அடுத்ததாக இந்தப் பிரச்சி னையால் பாதிக்கப்பட்டவர் கள் சரியான தூக்கப் பழக்கத் தை மேற்கொள்ள வேண்டும்
 
சரியான தூக்கப் பழக்கத்தை மேற்கொள்ளுவது எப்படி!?
 
ஒவ்வொரு நாளும் தூங்கச் செல்லுவதற்கும் எழும்புவதற்குமான நேரத் தை ஒழுங்காக வரையறுத்துக் கொள்ளுங்கள்
ஒழுங்கான உடற்பயிற்சி(இரவை அண்டிய நேரத்தில் தவிர்க்க வும்)
பகல் நேரத்தில் பிரகாசமான வெளிச்ச த்திலே இருக்கப் பழகுங்கள்( சூரிய ஒளி)
இரவிலே பிரகாசமான வெளிச்சத்தை தவிருங்கள்
நித்திரைக்குச் செல்லுவதற்கு முந்திய .. மணி நேரத்தில் அதிகம் கனமான சாப்பாடு களை தவிருங்கள்
தூங்கும் அறையை இருளாகவும், அமைதியாகவும், சுத்தமாகவும் வைத் திருங்கள்
புகை மற்றும் குடியை தவீர்த்து விடுங்கள்
நித்திரைக்கு முன் மனதை சாந்தப் படுத்தும் விடயங்களில் ஈடு படுங்கள்
 
மேற்சொன்ன வழிமுறைகளுக்கு அடுத்ததாக உங்கள் நித்திரை பழக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும்.
 
மாற்றப்படவேண்டிய நித்திரைப் பழக்க பயிற்சி முறை :
 
படுக்கைக்கு சென்று சில நிமிடங்க ளில் தூங்கமுடியவில்லை என் றால் உடனேயே அறை விட்டு வெ ளியேறி, நித்திரை எண்ணத்தை விட்டு உங்களுக்கு பிடித்த வேறு ஏதாவது ஒன்றை செய்யுங்கள் (வாசித்தல் போன்ற வை)
இவ்வாறு உங்களுக்கு பிடித்த வேலையை செய்யும் போது மீண் டும் படுக்கைக்குச் செல்லுங்கள்.
அவ்வாறு படுக்கைக்குச் சென்று மீண்டும் தூங்க முடியாவிட்டால் சில நிமிடங்களில் படுக்கையை விட்டு எழுந்து உங்களுக்கு பிடித்த வேறு வேலையில் கவனம் செலுத்துங்கள். படுக்கைக்கு சென்று சில நிமிடங்க ளிலே தூக்கம் வரும் வரை இதை திரும்பத் திரும்ப செய்யுங்கள்.
 
முக்கியமாக பகல் நேரத்தில் தூங்குவதை தவிருங்கள்.
 
இப்படியும் உங்களால இந்தப் பிரச்சி னைக்குத் தீர்வு காண முடியாவிட்டால் வைத்தியரை நாடி மருந்துகளை உட்கொ ள்ள வேண்டு ம்.