Posted on March 22, 2012 by muthukumar
கருக்கட்டல் அதாவது ஆணின் விந்தும் பெண்ணின் முட்டையும் சேர்வது கருப்பைக்கு வெளியே உள்ள பலோப்பியன் குழாய் போன்ற அமைப்பிலாகும். இவ் வாறு கருக்கட்டப்பட்ட நுகம் என ப்படும்
சிசுவின் ஆரம்ப நிலை அந்தக் குழாயின் ஊடாக கருப்பை யின் உட்பகுதியை
அடைந்து கருப்பையின் உட்புறத்தில் ஒட் டிக் கொண்டு வளர்ச்சியடையும். இதுவே
சாதாரணமாக எல்லோரி லும் நடைபெறும் செயன் முறை யாகும்.
சிலவேளைகளில் கருக்கட்டப்பட்ட சிசு கருப்பையின் உற்பகுதி க்கு வராமல் பலோப்பியன் குழாயினுள்ளே தங்கி விடலாம் அல் லது பலப்பியன் குழாய்க்கு வெளியே வயிற்றுக் குழிக்கு ள் அல்லது சூலகத்திலே செ ன்று ஒட்டிக் கொள்ளலாம்.
இதுவே கருப்பைக்கு வெளி யே கருத்தரித்தல் (Ectopic pregnancy) எனப்படுகிறது.
இந்த
நிலைமை ஏற்பட்ட பெ ண்களிலே கரு வளர வளர அதற்குரிய போதிய இடம் கிடைக்கா மல்
போவதால் அது வெடிக்கலாம். இது Ruptured ectopic pregnancy ( கருப்பைக்கு
வெளியேயான கரு வெடிப்பு ) எனப்படும்
இது சில நிமிடங்களிலேயே உயிரைப் பறித்து விடக்கூடிய பார தூரமான நிலையாகும்.
ஆகவே கரு வெடிப்புக்கு முன்ன மே இதை கண்டு பிடிப்பது அவ சிய மாகும்.
சாதாரணமாக
வெடிப்படைவத ற்கு முன் இது சிறிதளவு நோவி னை (வயிற்று வலியினை) ஏற்
படுத்தும் .இந்த நேரத்தில் உடனடி யாக வைத்தியரை நாடுவது அவ ர்களின் உயிரை
இலகுவாக காப் பாற்றி விடும்.
ஆனாலும்
சில பெண்களிலே ஆரம்ப அறிகுறிகள் எதுவும் இல்லா மலேயே இந்த வெடிப்பு
ஏற்படலாம். அவர்களும் மிகவும் விரை வாக வைத்திய சாலைக்கு செல்வதன் மூலம்
உயிரைக் காப்பாற் றிக் கொள்ள முடியும்.
எவ்வாறானா சந்தர்ப்பத்தில் நாம் கருப்பைக்கு வெளியேயான கருத்தரித்தல் ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்க வேண்டும்?
உடலுறவில்
ஈடுபட்டுக் கொண் டிருக்கும் எந்த பெண்ணும் தனக்கு அடிவயிற்று வலி ஏற்படும்
போது முதலில் கவனத்தில் கொள்ள வேண்டியது இந்த நிலைமை யைத்தான். அதுவும்
மாதவிடாய் பிற் போன பெண்கள் அல்லது கர்ப்பம் உண்டாகியுள்ளதாக சிறு நீர்
மூலம் உறுதி செய்து கொண்டாலும் இதுவரை ஸ்கேன் செய்து கொள்ளாத பெண்கள்
தங்களுக்கு வயிற்று வலி வந்தால் முதலில் கவனத்தில் கொள்ள வேண்டியது இந்த
நிலைமையைத்தான்.
யாருக்கு இந்த நிலைமை ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகம்?
- .வயிற்றிலே முன்பு ஏதாவது சத்திர சிகிச்சை செய்து கொ ண்ட பெண்கள்
- கருப்பை அலர்ச்சி அல்லது பலோப்பியன் குழாய் அலர்ச்சி ஏற்பட்ட பெண்கள்
- கர்ப்பத்தடை லூப் போட்டுக் கொண்டபின் தவறுதலாக கரு உண்டான பெண்களிலே இந்த நிலை ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகமாகும்.
மேலும் ஏற்கனவே இந்த நிலைமையால் பாதிக்கப்பட்ட பெண்களு க்கு அடுத்த முறையும் இது ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிக மாகும்.
இருந்தாலும் இவை எதுவுமே இல்லாத சாதாரண பெண்களிலே கூட இது ஏற்படலாம்.
இதன் ஆரம்ப அறிகுறிகள் எவை?
பொதுவாக இது கருத்தரித்து மூன்று மாத காலத்துக்குள்ளேயே பாதிப்பை ஏற்படுத்தும்.
ஆரம்ப அறிகுறியாக பிற்போன மாதவிடாயுடன் தொடர்ச்சியான அடி வயிற்று வலி ஏற்படும்.
சில பெண்களிலே சிறிதளவான இரத்தம் பிறப்பு வழியூடாக வெளி வரலாம்.
சற்று தீவிரமடையும் போது மயக்கமடையும் உணர்வு, மூச்செ டுக்கச் சிரமம் , தோள்ப்பட்டை வலி போன்றவை ஏற்படும்.
மேலே சொன்ன அறிகுறிகள் ஏற்படுவது கரு வெடிப்பதற்கு முன் கொஞ்சம் கொஞ்சமாக இரத்தக் கசிவு ஏற்படுவதால் ஏற்படுபவை.
கரு
வெடிக்கும் போது சடுதியாக அதிகரித் த வயிற்று வலியுடன் மயக்கமடையலாம் .
அந்த நிலையிலே சில நிமிடங்களிலே கூட உயிர் இழப்பு ஏற்படலாம்.
ஆகவே
உடலுறவில் ஈடுபடும் எந்தக் பெண்ணும் வழமைக்கு மாறாக வயிற்று வலி ஏற்படும்
போது உடனடியாக வைத்தி யரை நாடி இந்த நிலைமை இல்லை என் பதை உறுதிப்
படுத்திக் கொள்ள வேண்டும்.
தீர்வுகள் :
இந்த
நிலைமைக்கு அனேகமாக சத்திர சிகிச்சையே தீர்வாக அமையும்.இருந்தாலும்
இரத்தக் கசிவு ஏற்பட முன்னமே மிகவும் ஆரம்ப நிலையிலேயே கண்டு
பிடிக்கப்பட்டால் இரசான மருந் துகள் மூலம் கரு சிதைக்க பட லாம்.
சத்திர
சிகிச்சை வயிற்றை வெட்டுவதன்(Laparotomy) மூலம் அல்லது குழாய் போ ன்ற
அமைப்பி உட்செலுத்தும் லப்பிராஸ் கோப்பி (Laparas -copy) முறை மூலம் மேற்கொ
ள்ளப் படலாம்.
இதை நோயின் தீவிரத்தைப் பொறுத்து வைத்தியரே தீர்மானிப் பார்.
ஒருமுறை
இந்த நோயினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மீண் டும் ஏற்படுவதற்கான
சந்தர்ப்பம் அதிகம். ஆகவே அடுத்த முறை கருத்தரித்தவுடன் ஸ்கேன் செய்து கரு
கருப்பையின் உள்ளேதான் தங்கியுள்ளது என்பதை ஆரம்பத்திலேயே உறுதிப்படுத்திக்
கொள் ளவேண்டும்.
No comments:
Post a Comment