Posted On March 22,2012,By Muthukumar
திருமணமான
புதிதில் தம்பதியர் இடையே காற்று கூட புக முடியாத அளவு நெருக்கம்
ஏற்படுவது இயல்பு. தம்பதியர் இடையேயான காதல் உணர்வுகள் ஒரு கட்டத்திற்குப்
பின் காணமல் போய்விடுகிறது. இதற்கு பல்வேறு காரணங்களை தெரிவிக்கின்றனர்
உளவியல் வல்லுநர்கள்.
மன அழுத்தம்
தம்பதியரை
முதலில் தாக்குவது மன அழுத்தம். அது பணிச்சூழல் பற்றியதாகவும் இருக்கலாம்,
பணம் தொடர்புடையதாகவும் இருக்கலாம். இந்த மன அழுத்தமே தம்பதியரிடையேயான
நெருக்கத்தை பிரிக்கும் முக்கிய எதிரியாக உள்ளது. எனவே மன அழுத்தத்தின்
அளவை தெரிந்து கொண்டு அது குடும்பத்தை பாதிக்காத அளவு மருத்துவர்களிடமோ,
உளவியலாளர்களிடமோ ஆலோசனை பெற வேண்டும். மன உளைச்சல் காரணமாகவும்
தம்பதியரிடையே இடைவெளி ஏற்பட காரணமாகிறது.
குடும்ப பிரச்சினை
உறவுகளிடையே
ஏற்படும் சிக்கல்கள் தம்பதியரிடையேயான உறவுக்கு வேட்டு வைக்கும். தகவல்
பரிமாற்றத்தில் புரிந்து கொள்ள இயலாத நிலை, தேவையற்ற விவாதங்களும் குடும்ப
உறவுகளை பாதிக்கும்.
போதை ஆபத்து
மது
குடித்துவிட்டு போதையில் மிதப்பது, கண்ட போதை வஸ்துக்களை உபயோகித்துவிட்டு
உறங்கிப் போவது தம்பதியரிடையே நெருக்கத்தை குறைக்கிறது.
உறக்கக் குறைபாடு
பணிச்
சூழல், அதிகாலையில் எழுந்து அலுவலகம் சென்றுவிட்டு இரவு வீடு திரும்புவது,
உடலில் சோர்வை அதிகப்படுத்திவிடுகிறது. நேரங்கெட்ட நேரத்தில் தூங்கி
எழுவது அசதியை ஏற்படுத்துவதால் தம்பதியரிடையே இடைவெளி ஏற்படுகிறது. எனவே
சரியான அளவில் பணி நேரத்தையும், ரொமான்ஸ்க்கான நேரத்தையும்
திட்டமிடவேண்டும் என்கின்றனர் உளவியலாளர்கள்.
குழந்தை பிறந்திருக்கா?
சிறு
குழந்தைகள் பிறந்த சமயமாக இருந்தால் அது தம்பதியரிடையே இடைவெளி ஏற்படும்
காலமாகும். எனவே குழந்தைக்கு அதிக நேரம் ஒதுக்குவதோடு, ரொமான்ஸ்சுக்கும்
கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள்.
ரொம்ப குண்டாயிட்டோமோ?
திருமணத்தில்
பார்த்ததை விட இப்ப ரொம்ப குண்டாயிட்டோமோ என்ற எண்ணம் உளரீதியான பாதிப்பை
ஏற்படுத்தும். எனவே இதுவும் கூட இடைவெளிக்கு காரணமாகிறது. உடல் பருமன்
காரணமாக ஆண்களுக்கு டெஸ்டோஸ்ட்டிரான் சுரப்பு குறைவதும் தம்பதியரின்
இடைவெளிக்கு காரணமாகிறது.
மெனோபாஸ்
பெண்களுக்கு
மெனோபாஸ் காலம் வந்தாலே வசந்த காலமே முடிந்துவிட்டதைப் போல உணர்வர். வலி,
வறட்சி போன்றவைகளினால் உறவில் ஆர்வமின்மை ஏற்படுகிறது. இதுவும்
தம்பதியரிடையே வில்லனாக புகுந்து இடைவெளியை ஏற்படுத்துகிறது.
எனவே
தம்பதியர் இருவரும் கலந்து ஆலோசித்து பிரச்சினையின் உண்மை தன்மையை
புரிந்து கொண்டு இடைவெளியை குறைக்க முயல வேண்டும். அப்பொழுதுதான் வாழ்க்கை
என்னும் பூந்தோட்டத்தில் மகிழ்ச்சிப் பூக்கள் பூக்கும்
No comments:
Post a Comment