Posted on March 19, 2012 by muthukumar
வந்தது காதல் தலைக்கு ஏறிடும் போதை
லட்சம்
பூக்கள் பூத்ததைப்போல உணர்வுகள் தோன்றுகிறாதா? வயிற்றுக்குள்
வண்ணத்துப்பூச்சி சிறகடிக்கிறதா? அப்படீன்னா, வடி வேலு சொல்றதைப் போல, உங்க
ளுக்கும் லவ் மூடு ஸ்டார்ட் ஆயி டுச்சி என்கின்றனர் விஞ்ஞானிக ள்.
காதல்
என்பது காதலர்களுக்கு பலதரப்பட்ட உணர்வுகளை ஏற்ப டுத்தினாலும் காதல்
உணர்வுக ளை வலி நிவாரணியைப் போல வேலை செய்யும் என்றும், போ தைப் பொருளுக்கு
சமமானது என்றும் விஞ்ஞானிகள் ஆய்வு மூலம் கண்டறிந் துள்ளனர்.
காதல் நிவாரணி
காதல் உணர்வுகள் மனத்திற்கான மகிழ்ச்சியைத் தருவதோடு உட
ல் வலிகளை நீக்கும் என்றும் ஆய்வாளர் கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில்
காதல் வயப்பட்ட 15 இளம் ஜோடிகளை வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அவர்கள்
ஒவ்வொருவருக்கும் தனித்த னியாக அவர்கள் விரும்பு ம் நபர்களின்
புகைப்படத்தை கொடுத்து அவர்களின் உணர்வுகளை கணினியில் அளவெடுத் தனர்.
அப்பொழுது அவர்களின் கைகளில் சிறிதளவு வலிநிவாரணி உட்கொண்ட உணர்வுகள்
வெளிப் பட்டது.
அதே
நேரத்தில் அவர்களின் மூளையை யும் ஸ்கேன் செய்யப்பட்டது. அப்பொழு து காதல்
உணர்வுகள் முழுவதும் மூளை யில் நிரம்பியிருந்தன. எனவே காதலிக்கும் நபரின்
போட்டோ வை பார்த்தாலே வலி நி வாரணி உட்கொண்ட உணர்வு ஏற்பட்ட து
கண்டறியப்பட்டது. அந் த அளவிற்கு காதல் சக்தி வாய்ந்தது என்று ஆய்வாளர்கள்
தெரி வித்தனர்.
“கொக்கேய்ன்” போதை
காதலில் விழுந்தவன் போதையில்
மிதப்பவனைப் போல உலக விசயங் கள் எதைப்பற்றியும் கவலைப்படாம ல் இருப்பான்
என்பார்கள் கவிஞர்கள். அதே கருத்தை இப்பொழுது விஞ்ஞா னிகளும்
ஒத்துக்கொண்டுள்ளனர்.
காதல்
வயப்பட்டவர்களின் மூளையி ல் ஏற்படும் மாற்றங்களை ஆராய்ந்த அமெரிக்க
விஞ்ஞானிகள், “கொக்கே ய்ன்” என்ற போதைப் பொருளை உட் கொண்டால் ஏற்படும்
பாதிப்பிற்கு சமமான தாக்கத்தை ஏற்படுத்துவதா க கண்டறிந்தனர்.
நியூயார்க் சிராகஸ் பல்கலைக்கழக பேராசிரியரும் தலைமை ஆய்வாளருமான பேராசிரியர் ஆர்டிக்கும் அவரின் குழுவினரும், மேற்கு
வெர்ஜீனியா பல்கலைக் கழகம், மற்றும் சுவிட்ஸர்லாந் திலுள்ள பல்கலைக்கழக
மருத்து வமனை ஆகியவற்றைச் சேர்ந்த ஆய்வாளர்களுடன் இணைந்து இந்த ஆய்வை
மேற்கொண்டனர்.
பார்த்த முதல் நாளில் . . .
கண்டதும்
காதல் என்பது சாத்திய ம் என்று இந்த ஆய்வை மேற்கொ ண்ட விஞ்ஞானிகள்
தெரிவித் துள்ளனர். முதன் முதலாக ஒருவ ரை கண்டவுடன் இவர் நமக்குரியவர்தான்
என்பதை உணர்த்தும் வகையில் மூளையின் 12 இடங்களில் தூண்டல் நடைபெறுகிற தாம்.
அப்பொழுது
‘திடீரென சிறப்பாக உணரச்செய்யும்’ டோபைன், ஆக் ஸிடோஸின், அட்ரனலின் போன்ற
இரசாயனங்கள் உடலி ல் சுரகின்றன என்றும் விஞ்ஞா னிகள் தெரிவித்துள்ளனர். கொ
கேயின் போதைப் பொருளை உட்கொண்டாலும் இந்த இரசாய னங்கள் தூண்டப்படுவதாக கண்
டறியப்பட்டுள்ளது.
இந்த
ஆய்வு முடிவுகள் மூலம் காதலுக்கு விஞ்ஞான அடிப்படை உள்ளது என்பது
உறுதிப்படுத்து கின்றன என்கிறார் ஸ்டெபானி ஆர்டிக். இக்கண்டுபிடிப்புகளின்
மூலம் நரம்பியல் விஞ்ஞானத்திலும் உளவியல் மருத்துவத்தி லும் மிகப்பெரிய
மாற்றங்கள் ஏற் படலாம் என ஸ்டெபானி ஆர்டிக் கூறியுள்ளார்.
இதயமா மூளையா?
காதலில் விழுவது இதயமா அல்லது மூளையா என்ற பெரிய கேள்விக்கு பதி லளித்த விஞ்ஞானிகள், காதல் உணர்வு ஏற்படுவது மூளையில்தான் என்கின்றன ர். இருப்பினும் இதயத்திற்கும் தொடர்பு ள்ளது. உதாரணமாக, மூளையின் சில பகுதிகள் செயற்படும் போது இதயத்தில் தூண்டுதல்கள் ஏற்பட
காதலில் விழுவது இதயமா அல்லது மூளையா என்ற பெரிய கேள்விக்கு பதி லளித்த விஞ்ஞானிகள், காதல் உணர்வு ஏற்படுவது மூளையில்தான் என்கின்றன ர். இருப்பினும் இதயத்திற்கும் தொடர்பு ள்ளது. உதாரணமாக, மூளையின் சில பகுதிகள் செயற்படும் போது இதயத்தில் தூண்டுதல்கள் ஏற்பட
முடியும். வயிற்றில் வண்ணத்துப்பூச்சி பறக்கும் என்கிறார் பேராசிரியர் ஆர்டிக்.
என்ன உங்களுக்குள் பட்டர்பிளைஸ் பற க்க ஆரம்பிச்சிடுச்சா…??
No comments:
Post a Comment