Monday, 19 March 2012

இல்லறம் இனிக்கவில்லையா?

Posted on March 19,2012,By Muthukumar
"ஆணோ, பெண்ணோ திருமணம் முடிக்காமல் வாழும் வாழ்க்கை பாதி வாழ்க்கை தான்'' - ரிச்டர்.
முழுமையான இன்பம் பெற ஒவ்வொருவரும் அவசியம் திருமணம் செய்து கொள்ள வேண் டும் என்பதை ரிச்டர் போலவே, சான்றோர் பலரும் வலியுறுத்தி உள்ளார்கள்.
ஆனால் திருமணம் முடிக்காதவர்கள் இன்பத் திற்கு ஏங்குவதுபோலவே, திருமணம் செய்தவர் களும் `இல்லற வாழ்வு இன்பம் தராதா?' என்று ஏங்கும் நிலையில் குடும்பம் நடத்துகிறார்கள். `திருமணத்திற்குப் பிறகு என் நிம்மதியே போச்சு` என்று புலம்பும் ஆண்களும், "என்னை உன் தலையில கட்டி வச்சுட்டாங்களே?'' என்று முணுமுணுக்கும் பெண்களும் ஏராளம். இவர்க ளுக்கு வாழ்க்கையே, "ஓட ஓட தூரம் கொறை யல... போகப் போக ஒண்ணும் புரியல'' என்கிற கதைதான்.
இல்லற வாழ்க்கையை சிறப்பாக நடத்து கிறோமா? இல்வாழ்க்கை இனிக்காததற்கு என்ன காரணம்? என்பதை அறிய ஒரு சிறிய பரிசோதனை...
உங்களுக்குள் கருத்து வேறுபாடோ, அல்லது துணைவர் தன்னை ஏமாற்றுவதாக சந்தேகமோ எழுகிறதா?
அ). இல்லை, ஆ). ஆம்.
வாக்குவாதத்தில் ஈடுபடுகிறீர்களா?
அ). சில நேரங்களில், ஆ). நாங்கள் பேசிக் கொள்ள ஆரம்பித்தாலே வாக்குவாதம் பிறந்து விடுகிறது
துணைவருக்கு காயம் ஏற்படுகிறது, அப்போது உங்கள் மனதில் என்ன தோன்றும்?
அ). ஓ மை காட், சீக்கிரம் சரியாகி விட வேண்டும். ஆ). சின்னக் காயம் தானே, அதுக்குப்போய் உயிர் போனமாதிரி பதறுகிறீர்களே? என்பேன்.
தம்பதியரில் ஒருவர் காதலை வெளிப்படுத்தும்போது..
அ. இவர் (இவள்) நம்மீது எவ்வளவு அன்பைப் பொழிகிறார் என்று கவனிப்பேன், ஆ). யோசனையுடன் பக்கத்திலிருப்பவரை பார்த்துக் கொண்டிருப்பேன்.
விவாகரத்து எண்ணம் உங்கள் மூளையில் உதித்திருக்கிறதா?
அ). ஆமாம், எப்போதாவது தோன்றும். ஆ). ஆமாம், அவரை விவாகரத்து செய்யலாம் என்று நினைப்பேன். ஏனென்றால் இதைவிட சிறந்த வாழ்க்கை எனக்கு கிடைக்கும் என்ற எண்ணம் இருக்கிறது.
உங்கள் விடைகளில் `அ' பதில் மிகுந்திருந்தால்...
உங்கள் இல்லற வாழ்வில் சிக்கல் இல்லை. ஆனால் இல்லறத்தை இன்னும் இனிதாக நடத்திச் செல்ல முடியும்.
செல்லச் சண்டையிடுவது உறவுகளுக்குள் பலத்தை ஏற்படுத்தும். இல்லற வாழ்க்கையில் இதை ஊடல் என்பார்கள். சின்னச்சின்ன சண்டைகளும், அதைத் தொடர்ந்து பிணக்கை மறந்து செலுத்தும் அன்புப் பொழிவும் தான் குடும்ப வாழ்க்கையை இனிக்கச் செய்கிறது. உறவாடும் பண்பு தான் ஒருவரை மற்றவர்களை விட அன்பில் உயர்த்திக்காட்டும். அதை உணர்ந்து கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் இனிமையாக உறவாட வேண்டும். பிரிவை வளர்க்கும் நெருப்பு விவாதங்களை தவிர்க்க வேண்டும். அப்படி இருந்தால் நீங்கள் நிச்சயம் இனிய இல்லறம் நடத்துவீர்கள்.
விடை `ஆ'வை அதிகமாக தேர்வு செய்த தம்பதியர்...
உங்கள் இல்லற வாழ்க்கை குழப்பம் நிறைந்ததாக இருக்கிறது. இருவருமே இல்லறத்தில் வெறுப்புணர்வுடன் காணப்படுகிறீர்கள். உங்கள் துணை கண்ணில் படுவதையே விரும்பா தவராக இருக்கிறீர்கள். அந்த உணர்வே உங்களை வெகு தொலைவுக்கு பிரித்து வைத்திருக்கிறது.
துணைவர் மீதான உங்கள் வெறுப்புக்கு என்ன காரணம் என்பது உங்களுக்கு மட்டுமே தெரியும். அதுகுறித்து அவரிடம் விவாதிப்பதன் மூலம் உங்கள் பிரச்சினைக்கு நீங்களே தீர்வு காண முடியும். அது முடியாத பட்சத்தில் இருவரும் குடும்பநல ஆலோசகரை அணுகுங்கள்.
`ஆணும் பெண்ணும் உடலால் இணைவது திருமணமல்ல. உணர்ச்சிகளாலும், சிந்தனை களாலும் இணைவதே திருமணம்' என்று' காண்டேகர் சொல்லியதை இம்மாதிரி தம்பதிகள் நினைவில் வைத்துக் கொள்வது நல்லது!

No comments:

Post a Comment