Posted on March 22, 2012 by muthukumar
மருத்துவ
ஆராய்ச்சிகளின்படி, நினைவாற் றலுக்கும் சிந்திக்கும் திற னுக்கும் உரிய
இடம் இது. யோகக் கலை இதனை ஆக்ஞா சக்கரம் என்கிறது. எலக்ட்ரோ மேக்னடிக் என்ற
மின்காந்த அலைகளாக மனித உடல் சக்தியை வெளிப்படுத்தும். அதிலும் முன்நெற்றி
மற்றும் நெற்றிப் பொட்டு இர ண்டும் மின்காந்த அலைகளை வெளியி டுவதில்
முக்கியமானவை. அதனால்தான், நம் மனம் கவலையால் வாடும் போது, தலைவலி
அதிகமாவதை உணரலாம்.
நெற்றியில் இடும் திலகம், அந்தப் பகுதியைக் குளிர்விக்கிறது. நம்
உடலின் சக்தி வெளியேறி விரயமாவதை த் தடுக்கிறது. எனவே வெறும் நெற்றியாக இருக்கக் கூடாது என்கின்றனர் முன்னோ ர்கள்.
இன்றைக்கு
ஸ்டிக்கர் பொட்டுக்களின் வருகைக்குப் பின்னர் பல வித டிசைன்களி ல்
பொட்டுக்கள் மங்கையரின் முகத்தை அலங்க ரிக்கின்றன. நாம் வைக்கும் பொட் டு
நம்முகத்திற்கு ஏற்றதாக இருந்தால் அது அழகினை அதிகரித்துக் காட்டும். என வே
முக அமைப்பிற்கு ஏற்ற பொட்டுகளை கூறியுள்ளனர் அழகியல் நிபுணர்கள்.
நீளமான பொட்டு
இதய வடிவ முகம்
இதய
வடிவ முகம் கொண்டவர்கள் சற்றே வித்தியாசமானவர்கள். இவர்கள் குங்குமத்தினால்
பொட்டு இட்டுக்கொள்வது முகத்தை அழகாக்கும். ஸ்டிக்கர் பொட்டுக்களில் சிறிய
அளவில் நீளமான
பொட்டுகள் முக வசீகரத்தை அதிகரித்துக் காட்டும்.
ஓவல் வடிவ முகம்
ஓவல்
வடிவ முகம் கொண்டவர்கள் புருவ த்திற்கு சற்று மேலே நெற்றியில் வட்டப்
பொட்டு வைப்பது அழகை அதிகரிக்கும். நீளமான ஸ்டிக்கர் பொட்டு வைத்தாலும்
வசீகரமாக இருக்கும்.
முக்கோணப் பொட்டுக்கள்
முக்கோண
வடிவ முகம் உள்ளவர்களு க்கு அனேகமாக எல்லா வகைப் பொட்டு களும் பொருந்தும்.
நெற்றி அகலமாக இருந்தால், நீளமான பொட்டுகளை பயன்படுத்த வேண்டும். முக் கோண
வடிவிலான பொட்டுகளும் இவர்களுக்கு நன்றாக இருக்
கும். அகலமான நெற்றியாக இருந்தா ல், புருவத்தில் இருந்து ஒரு சென்டி மீட்டருக்கு மேல் பொட்டுவைக்க வே ண்டும்.
முகத்தின்
வடிவம் மட்டுமின்றி உடை, சரும நிறம் போன்றவைகளும் பொட் டுடன்
சம்பந்தப்பட்டதுதான். அதனால் அவைகளுக்கும் பொருத்தம் ஏற்படும் விதத்தில்
பொட்டு வைக்கவேண்டும். கோது மை நிற சரும பெண்களுக்கு எல்லா நிற பொட்டுகளும்
பொருத்த மாக இருக்கும்.
No comments:
Post a Comment