Posted on February 22, 2012 by Muthukumar
தோல் சீவிய உருளைக் கிழங்கை சிறிய துண்டுகளாக நறுக்கி
வெயிலில்
நன்றாக உலர்த்தி காய்ந்த உடன் நன்றாக அரைத்து வைத்துக் கொள் ளவும். இந்தப்
பவுடரை தண்ணீரில் குழை த்து தின மும் முகத்தில் பூசி வர முகத்தில் உள்ள
கருமை, திட்டுக்கள், புள்ளிகள் மறையும் முகம் பளிங்குபோல மாற்றி விடும்.
பச்சைக் காய்கறிகள்
உடம்பில் சூடு அதிகமாகும்போது, தோலின் கருமையும் அதிக
மாகிவிடும்.
அதனால் கீரை, பச் சைகாய்கறிகளை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
மோர், இளநீர், பழச்சா று இவற்றை அருந்தி உடம்பை எப்போதும் குளுமையாக வை
த்துக் கொண்டால், சிகப் பழகு ஓடிவந்து ஒட்டிக் கொள் ளும்.
இரவில்
படுக்கப் போகும் முன் தரமான மாய்ஸ்ட்டுரைஸிங் க்ரீம், கோல்டு க்ரீம்
ஆகியவற்றை முகத்தில் தடவவேண்டும். காலையில் வெளியே செல்லும் முன் சூரிய
வெப்பம் தாக்கா திருக்க சன் டேன்லோஷன் தடவிக் கொள்ள வேண்டும்.
இயற்கை சிகைக்காய் பவுடர்
தலையில்
அழுக்கும், பிசுக்கும் சேர்ந்து இருந் தால் முகம் கருப் பாகிவிடும். தலை
சுத்தமாக இருந்தால் தான் சருமத்தில் கருமை படராது. அதோடு, சருமத்தில் ஓரளவு
எண்ணெய்ப் பசை இருப்பது போல பார்த்துக் கொள்வதும் அவசியம். இதற்கு
சிகைக்காய், பாசிப்பயறு, வெந்தயம், பூலாங்கிழங்கு, புங்கங்கொட்டை ஆகிய
வற்றை சேர்த்து அரைத்து தலைக்கு தேய்த்து குளிக்கலாம். வாரம் இருமுறை உச்சி
முதல் உள்ளங்கால் வரை எண்ணெய் தேய்த்து, இந்த ஸ்பெஷல் பொடியை போட்டு
அலசுங்கள். தலை சூப்பர் சுத்தமாகிவிடும். தோலின் எண்ணெய்ப் பசை தக்கவைப்ப
தோடு, கருமையும் மறைய தொடங்கும்.
வாரம் ஒரு முறை தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்
டும்.
புருவங்களை சீர்படுத்தி, மினி பேஷியல் செய்து முடியை சீராக வெ ட்டி
வைத்துக் கொள்ள அதிகம் செல வாகாது. மாத மொருமுறை இவற்றை ச் செய்து கொள்வது
முகத்தின் அழ கைப் பாதுகாக்க விரும்பும் வசதி படை த்தவர்கள் கோல்ட் பேஷியல்
கினாட் பேஸியல் செய்து கொள்ளலாம்.
மேக் அப் கவனம்
வெயிலும்,
நெரிசலும் அதிகமாக இரு ப்பதால் கிரீம் மேக்-அப்பை கூடுமான வரை தவிர்ப்பது
நல்லது. மேக்-அப் செய்வதற்கு முன் வியர்வை அதிகமாக உள்ளவர்கள் ஐஸ் கியூப்
-ஐ
முகத்தில் தேய் த்து அல்லது செய்த பிறகே மேக்-அப் செய்ய ஆரம்பிக்க
வேண்டும். அப்படி ஐஸ் கியூப் கொடுக்காமல் மேக்கப் செய்து விட்டால் அவை
சிறிது நேரத்துக்குப் பிறகு வியர்த்து விட்டால் சிவப்பு நிற புள்ளி களாக
மாறிவிட வாய்ப்புகள் அதிகம். இதை தவிர்க்க பவுடர் மேக்- அப் அதிகமாக உபயோகி
க்க வேண்டும். அவரவர் நிறத்துக்கேற் றா ற்போல் பவுடரை தேர்ந்து எடுக்க
வேண்டும். இது மிக முக்கியமானதா கும். இதில் லிப்ஸ்டிக்கும் அடங் கும்.
No comments:
Post a Comment