Friday, 16 March 2012

தினமும் ஒரு டீஸ்பூன் “பீர்” அருந்தினால் எலும்புகள் உறுதியாகும்


Posted on  by muthukumar

வயதான காலத்தில் ஏற்படும் ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பில்இருந்து பெண்களுக்கு பீர் பாதுகாப்பு அளிப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ள து.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஊட்டச் சத்து மற்றும் ஆரோக்கியம் குறித்த ஆய்வு பிரிவினர் ஜொனாத்தன் போ வெல் தலைமையில் மேற்கொண்ட ஆய்வில் இந்த உண்மை கண்டறியப் பட்டுள்ளது.
எலும்பின் வலுவுக்கு பீரின் பங்களிப்பு குறித்து ஆராயப்பட்டது. பீரில் உள்ள எத் தனால் எலும்புக்கு ஆரோக்கியமளிப்ப தும், அதில் உள்ள சிலிகான் புதிய எலும் புகளின் ஆரோக்கிய மான வளர்ச்சிக்கு உதவுவதும் தெரியவந்து ள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள தகவல் வருமாறு: மதுபானத் தை மருந்தாக எடுத்துக் கொண்டால் உடல் ஆரோக்கியமாக இருக் கும் என்பதை பல தொடர் ஆய்வுகள் வலியுறுத்தி வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வில், பீரில்உள்ள சத்துகள் எலும்புக்கு வலு சேர் ப்பது உறுதியாகி உள்ளது. குறிப்பாக வயதான காலத்தில் பெண்களை தாக்கும் ஆஸ்டி யோ போரோசிஸ் பாதிப்பில் இருந்து பீர் பாதுகாக்கி றதாம்.
பீரில் உள்ள எத்தனால் மற்றும் சிலி கான் பெரும்பாலான தாவர பயிர்க ளிலும் காணப்படுவதாகு ம். குறிப்பாக அவரை, மொச்சை உள்ளிட்ட தானியங்களில் அதிக அளவில் இந்த சத்து உள்ளது. இது எலும்பு தேய்மானத்தை தடுப்பதுடன் புதிய எலு ம்புகள் ஆரோ க்கியமாக வளரவும் உதவும். பெண்களின் ஈஸ்ட் ரோஜன் சுரப்பி யில் சிலிகான் கலப்பு இருக்கும்.
ஈஸ்ட்ரோஜன் அளவு மாதவிடாய் காலங்களில் பாதிப்படையும். அந்த நேரத்தில் மாத்திரை, மருந்துகள் வாயிலாக இந்த சுரப்பியி ன் குறைபாட்டை ஈடுசெய்வ து மிகமிக அவசியம். கவனி க்காமல் விடும் பட்ச த்தில் எலும்புகள் நலிவடைந்து ஆஸ்டி யோபோ ரோசிஸ் உள்ளிட்ட பல்வேறு பாதிப்பு களை ஏற்படுத்தும்.
இத்தகைய சமயங்களில் பீரை தினமும் சிறிதளவு மருந்தாக எடுத்துக் கொள்ள லாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. உணவுகளில் இருந்து கிடைக்கும் சிலி கான் அளவைவிட பன் மடங்கு அதிக மாக பீரில் இருந்து கிடைப்பதே இதற்கு முக்கிய காரண மாக கூறப்படு கிறது.
பெண்களுக்கு தினமும் 8 மில்லிகிராம் அளவு சிலிகான் அவசிய மாகிறது. இந்த தேவை குறைந்த அளவு பீரில் இருந்து எளிதாக கிடைக்கும். மாத விடாய் நிற்கும் பெண் களுக்கு இது ஒரு வரப் பிரசாதம் என்றே கூறலாம். அவர்கள் தின மும் ஒரு டீஸ்பூன் என்ற அளவில் பீர் அருந்துவது எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு வலு சேர்க்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பத்தியம்- இனிமைக்கும் இளமைக்கும் உற்ற‍த் தோழன்!

Posted on  by muthukumar

திருமண பந்தத்தில் இணையும் ஆணும் பெண்ணும் உறவு கொள் வது அவசியமானது. தாம்பத்யம் என்பது புனிதமடைவதும் இங்கு தான். இது அவசியம் என்பதோடு உடலுக்கும் உள்ளத்திற்கும் புத்து ணர்ச்சியளிக்கக் கூடியது என்கின் றன ஆய்வுகள்.
உடலை இளமையாக்கி இதய நோய் பாதிப்பில் இருந்து பாதுகா க்கிறதாம் தாம்பத்ய உறவு மகிழ் ச்சிகரமான இந்த தகவலை வெளியிட்டு தம்பதியர்களை குதூகல த்தில் ஆழ்த்தியிருக்கின்றனர் மருத்துவர்கள்
இனிமை, இளமை
உறவின் உச்சத்தில் வெளிப்படும் எண்டோர்பின் செரிமானத்திற்கும், உடலில் உள்ள சுருக்கங்களை நீக்கி தோல் இளமையடையவும் உதவுகிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களையும், அதிக கலோரிகளையும் கரைக்கிறது என்று ஆய்வு முடிவு தெரிவி க்கிறது.
புற்றுநோய் அண்டாது
உறவு கொள்வதன் மூலம் உடலில் உள்ள அனைத்து நரம்புகளும் அணுக்களும் புத்து ணர்ச்சி பெறுகின்றன. இதனால் புற்றுநோய் வரும் வாய்ப்பு கூட குறைவுதான் என்று மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.
உறவின் மூலம் உடலில் ஏற்படும் சிறு சிறு பலவீனங்களும் குறை கின்றனவாம். ஜலதோசம், உடல்வலி, போன்றவைகூட எளிதில்குணமடைகிறது என்று மருத்துவ அறிக்கை கூறுகிறது. எலும்பு களுக்கும், தசைகளுக்கும் கூட வலிமை ஏற்படுகிறதாம்.
உற்சாகமான உடற்பயிற்சி
தினசரி உறவு தீமையை ஏற்படுத்தும் என்ற நமது பழங்கால பஞ்சா ங்கங்கள் சொல்வதற்கு நேர் மாறாக இருக்கிறது இந்த அறிக்கை. எது எப்படியோ வீட்டை விட்டு வெளியே செல்லாமல் உற்சாக மாக செய்யும் உடற்பயிற்சியை தம்பதியர்கள் வரவேற்பார்கள் என்பதில் எள் அளவும் சந்தேகம் இல்லை .


உலகின் பணக்கார கிராமத்தில் ஒரு `விசிட்’!


Posted On March 16,2012,By Muthukumar
* நட்சத்திர ஓட்டல்கள்
* 60 மாடிக் கட்டிடங்கள்
* பிரமாண்ட ஷாப்பிங் மால்கள்
* வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலைகள்
* பளபள சாலையில் சறுக்கிச் செல்லும் ஆடம்பர கார்கள்...
இவை எல்லாம் எங்கு பார்த்தாலும் நிறைந்திருக்கிறது,
உலகிலேயே பணக்கார கிராமமான சீனாவின் `ஹுவாக்ஸி'யில்! ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கும் குறைவான ஹுவாக்ஸி, இன்று உலகையே வியந்து பார்க்க வைத்துக் கொண்டிருக்கிறது.

ஏழை விவசாய சமூகம்தான் அங்கு இன்று பெரும் பணக்காரக் குழுமமாக வளர்ந் திருக்கிறது. தற்போது `மாதிரி சோசலிஷ கிராமம்' என்று அழைக்கப்பட்டும் இக்கிராமத்தின் முன்னேற்றத்துக்கு வித்திட்டவர், உள்ளூர் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளரான வு ரென்பா. அவர் தனது முயற்சியை 1961-ம் ஆண்டு தொடங்கினார்.
ரென்பாவின் தொலைநோக்கு அடிப்படையிலான வழிகாட்டலும், புத்திசாலித்தனமான கடின உழைப்பும் ஹுவாக்ஸிக்கு அசுர பணக்கார அந்தஸ்தைப் பெற்றுத் தந்திருக்கின்றன.
சில உதாரணங்களைப் பார்த்தால் புரியும். இங்குள்ள 328 அடி 60 மாடிக் கட்டிடம், சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் உள்ள அதிகபட்ச உயரக் கட்டிடத்துக்கு இணையா னது. லண்டன் மாநகரத்தில் உள்ள கட்டிடங்களைவிட உயரமானது. இந்தக் கட்டிடத்தின் 60-வது மாடியில் உள்ள பசு சிற்பம், ஆயிரம் கிலோ தங்கத்தாலானது.
சரி, ஹுவாக்ஸியின் செழுமையான வளர்ச்சியின் ரகசியம் என்ன?
பாரம்பரிய விவசாயத்தை நவீனம் சார்ந்த விவசாயத் தொழிலாக மாற்றினார்கள். அதில் ஏகப்பட்ட வருவாய் குவிந்ததும் அதை ஜவுளி, உருக்கு தொழிலில் திருப்பிவிட்டனர். எல்லாவற்றிலும் மிக முக்கியமாக இருந்தது கடுமையான உழைப்பு. அதுவும் ஒன்றுபட்ட உழைப்பு.
``ஆயிரம் கிலோ தங்கப் பசு சிற்பத்துக்கு 300 மில்லியன் யுவான் (ரூ. 235 கோடி) ஆனது. ஆனால் தற்போது இதன் மதிப்பு 500 மில்லியன் யுவான்'' என்கிறார், 60 மாடிக் கட்டிடத்தில் வழிகாட்டியாகப் பணிபுரியும் இளம்பெண் டினா யாவோ. அந்த கட்டிடம், புதுக் கிராம கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. மூன்று பிரிவுகளாக உயர்ந்து நிற்கிறது. உச்சியில், ஒரு பெரி...ய்ய தங்கப் பந்து வடிவமும் இடம்பெற்றிருக்கிறது.
இந்தக் கட்டிடத்தின் உச்சித் தளத்தில் தங்க சிற்பங்கள் என்றால், இதர தளங்களில் வெள்ளியால் ஆன பெரிய பெரிய விலங்குகளின் சிற்பங்கள் உள்ளன. தங்க இழைகள் அங்குள்ள மார்பிள் தரையில் ஜொலிக்கிறது.
60 மாடிக் கட்டிடத்தை ஒட்டி நீளும் நூல் பிடித்த மாதிரியான தெருக்களில் மகா மாளிகைகள் உயர்ந்து நிற்கின்றன. அவற்றின் முன்பு பி.எம்.டபிள்யூ கார்கள் அணிவகுத்து நிற்கின்றன.
1998-ம் ஆண்டில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட ஹுவாக்ஸி, தற்போது தனிப்பெரும் நிறுவனமாக வளர்ந்திருக்கிறது. இங்கு உற்பத்தியாகும் பொருட்கள், உலகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.
இந்த முன்னேற்றங்களுக்கு ஆரம்பத்தில் விதை போட்டவை ஆயிரத்து 600 குடும்பங்கள். `பங்குதாரர்கள்' என்று அழைக்கப்படும் இவர்கள் ஒவ்வொரு குடும்பத்துக்கும் பங்குத் தொகை, சம்பளங்கள், போனஸ்கள் என்று பணம் குவிகிறது. ஒரு குடும்பத்தின் சராசரி வருட வருவாய் சுமார் ஒரு கோடி ரூபாய்.

ஆயிரம் கிலோ தங்கத்தில் உருவான பசு.
மேலும், ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு பங்களா, ஒரு கார், இலவச மருத்துவச் சேவை, சமையல் எண்ணை ஆகியவை இலவசம்.
சீனாவின் பிற பகுதிகள் உள்பட உலகமெங்கும் தாக்கிய பொருளாதார நெருக்கடி ஹுவாக்ஸியை தாக்கவில்லை. தனது தனி வழியில் கம்பீரமாக இயங்கிக் கொண்டே இருக்கிறது. பிற பெருநகரங்களைப் போல இங்கும் வெளியிடங்களில் இருந்து தொழிலா ளர்கள் வரவழைக்கப்படுகிறார்கள்.
இவை எல்லாவற்றுக்கும் காரணமான ரென்பாவு, ``நாங்கள் எப்போதும் எங்கள் மக்களுக்கு எது நன்மை புரியுமோ அதைத்தான் செய்வோம்'' என்கிறார். 86 வயதாகும் அவர், தற் போறு ஓய்வு பெற்றுவிட்டார். தந்தையின் வழிகாட்டலோடு இவரது மகன் கட்சிச் செயலாளராகப் பொறுப்பேற்றுச் செயல்படுகிறார்.
ஹுவாக்ஸியின் வெற்றிக் கதை, உலக மக்களை இக்கிராமத்தை வியப்போடு திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது. அவர்களில் பலர், அந்த `சூத்திரத்தை' அறிந்துகொள்வதற்காக நேரடியாக இங்கு வந்து இறங்கிவிடுகிறார்கள். `பணச்செழுமை சுற்றுலா' என்ற பெயரில் இங்கு ஓராண்டுக்கு வருவோர் எண்ணிக்கை 2 லட்சம். அந்த வகையிலும் ஹுவாக் ஸிக்கு பணம் கொட்டுகிறது. 2 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் தங்கும் அளவிற்கு, லோங்ஸி என்ற சர்வதேச ஓட்டலும் இங்குள்ளது.

இல்லறத்தில் முக்கியமானது உடல்களின் உறவை விட உள்ளங்களின் நெருங்கிய உறவுதான்


Posted on  by muthukumar

காலையில் எழும்போது வெளியில் சூரியனின் வருகை, ஜன்னலைதிறக்கும் போது நம்மை வரு டும் இதமான காற்று, ஜன்னல் வழி யாக ஊடுறுவி வரும் மென்மையான வெளிச்சம், உங்கள் துணை படுக்கை அறையில் பரவசமூட்டும் நிலையில் கண்களை மூடி, இதழ்களை லேசாக திறந்து கலைந்து போயிருக்கும் உ டைகள் அந்த கோலம், அதற் குப் பின்னால் மறைந்திருக்கும் அழகு, யாராக இருந்தாலும் சத்த மின்றி ரசிக்க வைக்கும்.
இப்படிப்பட்ட அழகைப் பார்க்கும் பெரும்பாலானோருக்கு ஆழமாகஅவர்களை ரசிக்கத் தூண்டு ம். அதில் பலருக்கும் தோன் றும் உணர்வு -இப்போது உற வு வைத்துக் கொண்டால் என்ன என்பதுதான். ஆண்க ளில் பெரும்பாலானோருக் கும் காலை நேர செக்ஸ் உணர் வு  எழுவது சகஜம். ஆனால், பெரும்பாலான பெண்களுக்கு காலை உற வில்  நாட்டம் ஏற்படுவதில்லை.
செக்ஸ் விஷயத்தில், ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி உற வு கொள்வது என்பதில் தனி த் தனிகருத்துக்கள் இருக்கி ன்றன. பெரும்பாலான பெண் களைப் பொறுத்தவரை இர வு நேரம்தான் உறவுக்கு உகந்ததாக கருதுகிறார்கள் -. ஆண்களோ இரவையும் விரும்புகிறார்கள், காலை நேர உறவையும் விரும்புகி றார்கள்.
ஆண்களைப் பொறுத்தவரை செக்ஸ் என்பது உணர்வுப்பூர்வமான து என்பதை விட உடல் ரீதியான ஒரு தேவையாகவே பெரும் பாலும் உள்ளது. எப்போதெல் லாம் ஆண்களின் உடலும், மனமும் நிதானமாக, ரிலா க்ஸ்டாக இருக்கிறதோ அப் போதெல்லாம் செக்ஸ் உணர் வுகள் தூண்டப்படுகிறது. அதி லும் துணை வெகு அருகே இருக்கும்போது செக்ஸ் உண ர்வுகள் வேகமாகவே தூண்ட ப்படும். இதுதான் காலையில் எழுந்திருத்ததும் அவர்களுக்குப் செக்ஸ் உணர்வு தோன்ற முக்கியக் காரணம்.
ஆனால், பெண்களைப் பொறுத்தவரை, செக்ஸ் என்பது உணர்வுப்பூர்வமாகவே தூண்டப்படுகி றது. தனது துணையைப் பார் த்ததும் பெண்கள் செக்ஸ் ரீதியாக தூண்டப்படுவதில் லை. மாறாக (துணை வருடும் போதும், கூந்தலில் விளையா டும் போதும், கட்டி தழுவதன் மூலம்,) உணர்வுகள் தூண்டப் பட்டால் மட்டுமே அவர்கள் சாப்பிடத் தயாராவார்கள். இதுதான் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே உள்ள ஒரு வித்தி யாசம்.
சரி, இரவில் மட்டும் பெண்கள் உறவுக்கு விரும்புவதும், காலையி ல் விரும்பாததற்கும் என்ன காரணம்
இந்தியாவைப் பொறுத்தவரை, தற் போது ஆண்களுக்கு நிகராக பெண்க ளும் வேலை பார்க்கிறார்கள், பிசி யாக இருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால், ஆண்களை விட பெண்களுக்குத் தான் இன்று சுமைகள் அதிகரித்து கொண்டு இரு க்கிறது. குடும்பத் தைக் கவனிப்பது, வேலைகளைச் செய்வது, குழந்தைப் பராமரிப்பு என ஏகப்பட்ட பணிகளை அவர்களது மென் மையான தோள்களில் சுமத்தி விட்டது சமுதாயம்.
எனவே பெண்களுக்கு வழக்கத்தை விட வேலைப்பளு, மன ரீதியா ன டென்ஷன் அதிகமாகி விட்டது. எப் போதும் ஏதாவது ஒரு வேலை குறி த்த சிந்தனையில் பெண்களின் மனம் உழன்று கொண்டி ருக்கிறது. இதனால் பிரஷர் அதிகமாகவே உள்ளது. இப்ப டிப்பட்ட நிலையில் இரவு உறவுக்கே அவர்கள் பெரும் மெனக்கெட வேண் டியுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் காலையில் உறவு கொள்வது என்ப தை அவர்கள் கிட்டத்தட்ட வெறுக்க வே செய்கி றார்கள்.
இன்னொரு விஷயம், ஆண்களைப் பொறுத்தவரை காலையில் உறவு கொண்டு மனதையும், உடலை யும் புதுப்பித்துக் கொள்ள விரும்புகிறார்கள். இப்படிச் செய்வதன் மூலம் பகல் முழுவதும் தாங்கள் சந்திக்கப் போகும் வேலைகளையும், சவால்களையும் சிறப் பாக எதிர்கொள்ள முடியும் என்பது அவர்களின் நம்பிக் கை.
ஆண்களை பொருத்த வரை வேலை என்பது காலையில் எழுந்திருத்து, குளித்து, சாப் பிட்டு விட்டு அலுவலகம் செல்வது, பகல் நேரத்தை வேலையில் கழிப்பது, மாலையில் மீண்டும் திரும்பி விடுவது என்ற அளவில்தான் அவர்களது வட்டம் உள்ளது. பெரிய பொறுப்பு என்று எதையும் அவர்கள் சுமப்பதில்லை. எனவே நினைக்கும் போது உறவு வைத்துக் கொள்வ தில் என்ன தப்பு என்று அவர்கள் கேட்கக் கூடும்.
ஆனால் பெண்கள் அப்படி நினைப்பதில்லை. பகல் நேர சவால்க ளையும், வேலைகளையும் எப்போதும்போ லவே அவர்கள் எதிர் கொள்ள நினைக்கிறார்கள். இதை சரியாகச் செய்ய செக்ஸ் தேவை என்று அவ ர்கள் நினைப்பதில்லை. சவால்கள் எப்போதுமே ஒன்று தான் அதை எதிர்கொள்ள மனரீதியான, புத்தி ரீதியான பலம்தான் அவசியம், செக்ஸ் என்ற மருந்து தேவையி ல்லை என்பது அவர் களது சிந்தனை.

இன்றைய சமுதாயத்தில் மனைவியருக்கு உதவும் கண வர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். கர்ச்சீப்பை எடுத்துக் கொடுக்கக் கூட மனைவியைத் தேடுவோர் நிறையப் பேர் உண் டு. இப்படிப்பட்ட பிசியான ஷெ ட்யூலில் காலையில் எங்கே போய் உறவு கொள்வது. இதுதான் பெண்கள் காலை நேர விளை யாட்டை விரும்பாததற்கு முக்கியக் காரணம்.
இருப்பினும் காலை நேர செக்ஸ் நல்ல ஐடியாதான் என்கிறார்கள்மன நல மருத்துவர்கள். நல்லதொரு இரவுத் தூக்கத்தை மேற் கொள்பவர்களு க்கு காலையில் உடலும், மனமும் பிரஷ் ஷாக இருக்கும். உடலில் வளர்ச்சி ஹார் மோன்கள் தூண்டப்படும். உட லும் நல்ல வலுவுடன் இருக்கும். இதனால் காலை நேரத்தில் செக்ஸ் வைத்துக் கொள்ளும் போது அது நிச்சயம் சிறப்பாகவே இருக் கும். அதேசமயம், பெண்களும் நல்ல மூடில் இருக்கும்போது மட்டுமே ஆண் கள் காலை நேர உறவுக்கு முயற்சிக்க லாம். மாறாக வற்புறுத்துவது தவிர்க்கப் பட வேண்டும் என்கிறார்கள்.
எந்த நேரமாக இருந்தால் என்ன, உறவுக் கு மிக மிக முக்கியம் மென்மையான அணுகுமுறைதான். காலை யாக இருந்தாலும் சரி, இரவாக இருந்தாலும் சரி அந்த உறவை, அன்புப் பரிமாற்றமாக, அணு சரணையான நிகழ்வாக, காத லுடன் கூடியதாக மாற்றிக் கொள்வதே சாலச் சிறந்தது, காலத்திற்கும் நிலைத்திருக் கக் கூடிய உறவுக்கு வழி வகுக்கக் கூடியது என்பதை இருவருமே மறக்கக் கூடாது.
காலையில் எழுந்ததும் கண் களில் ஒரு முத்தம், நெற்றிப் பொட்டி ல் ஒரு சின்ன இச், காது மடல் களில் உதடுகளால் ஒரு வருடல், உதடுகளில் தென்றல் பூவைத் தீண்டுவது போல வலிக்காமல் ஒரு முத்தமிட்டு, குட்மார்னிங் சொல்லி உங்களது மனைவி யை எழுப்பிப் பாருங்கள், செக் ஸ் உறவைவிட அது ஆழமாக அவரது மன தைத் தொடும்.
உடல்களின் உறவை விட உள் ளங்களின் நெருங்கிய உறவு தான் இல்லறத்தில் மிக மிக முக்கியமானது, இல்லையா… 

சிறுநீரகப் பிரச்னை வராமல் காத்துக்கொள்ள . . .


Posted on  by muthukumar

ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மாதம் இரண்டாவது வியாழக்கிழமைஉலக சிறுநீரக தினம் கடைப்பிடிக்கப்ப டுகிறது. சிறுநீரக நோய்கள் பற்றிய விழி ப்பு உணர்வை உலக மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதே சிறுநீரக தினத்தின் நோ க்கம். இந்த ஆண்டு மார்ச் 8-ம் தேதி சிறுநீரக தினம். 
சிறுநீரகத்தால் ஏற்படும் பிரச்னைகள் மற்றும் பாதுகாப்பு முறைகள் .
”மனிதனுடைய தண்டுவடத்தின் இருபுற மும் பக்கவாட்டில் பீன்ஸ் விதை வடிவி ல் அமைந்திருக்கும் உறுப்பு சிறுநீரகம். பொதுவாக பெரியவர்களின் சிறுநீரகம் 11 முதல் 14 செ.மீ. நீளமும், 6 செ.மீ. அகலமும் இருக்கும். ஆண்களின் சிறுநீரகம் ஒவ்வொன்றும் 125 முதல் 170 கிராம் எடை கொண்டது.பெண்களுக்கு 115  முதல் 155 கிராம் எடை இருக்கும்.  இதயத்தில் இருந்து வெளியாகும் ரத்தத்தில்20 முதல் 25 சதவிகிதத்தை சிறு நீர கம் பெறுகிறது. தினமும் நமது உட லில் உள்ள தேவையற்ற உப்பு மற் றும் தண்ணீரை சுத்திகரித்து, வெளி யேற்றி ரத்த அழுத்தத்தை கட்டுக்கு ள் வைத்திருக்கும் பணியை சிறு நீரகம் செய்கிறது. ஒரு சிறுநீரகத் தில் 10 லட்சம் நெஃப்ரான்கள் உள்ள ன. இவைதான் ரத்தத்தில் இருந்து கழிவுகளைப் பிரித்து சிறுநீர் மூலம் வெளியேற்றுகின்றன. இது தவிர, மேலும் பல பணி களை சிறுநீரகம் செய்துவருகிறது.
சிறுநீரகப் பிரச்னை ஆரம்பத்திலேயே தெரியாது. பிரச்னை முற்றிய நிலையில்தான் அதன் அறிகுறிகள் தெரியவரும். சிறுநீரகம் பாதிக்கப்பட்டுவிட்டால், அது சம்பந்தப்பட் டவரின் வாழ்க்கையையே மாற்றி விடும். அதனால் இதை ‘சைலன்ட் கில்லர்’ என்றுகூட சிலர் வர்ணிப்பா ர்கள். சிறுநீரகத்தைப் பாதுகாப்பாக வும் ஆரோக்கியமாகவும் வைத்திரு ந்தால் எந்தப் பிரச்னையும் இல்லை. சிறுநீரகத்தைப் பாதுகாக்க எளிய 7 பொன் விதிகள் உள்ளன. அவற்றைக் கடைப் பிடித்தாலே போதும்.
1. ரத்த அழுத்தத்தைக் கண்காணித் தல்
உயர் ரத்த அழுத்தம்தான் சிறுநீரகத்தின் முதல் எதிரி. எனவே, உங் கள் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் சிறு நீரகப் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பை பெருமளவு குறைக்கலாம். மாரடைப்பு மற்றும் பக்க வாதம் ஏற்படுவதற்கும் உயர் ரத்த அழுத்தமே முக்கியக் காரணம். சராசரி ரத்த அழுத்தம் என்பது 120/80 மில்லி மீட்டர் மெர்க்குரி (mmHg) என்று இருக்க வேண்டும். உங்கள் ரத்த அழுத்த அளவு 129/89 என்ற அளவில் இருந்தால், உயர் ரத்த அழுத்தத்துக்கு முந்தைய நிலையில் உள்ளீர்கள் என்று அர்த் தம். வாழ்க்கைமுறை மற்றும் உணவுக் கட்டுப்பாடு மூலம் இதை த் தவிர்க்கலாம். உங்கள் ரத்த அழுத்தம் 140/90 அல்லது அதற்கு மேலே இருந்தால், டாக்டரிடம் சென்று ரத்த அழுத்தத்தைக் குறைக்க ஆலோசனை பெற வேண்டும்.
2. ரத்தத்தில் சர்க்கரை அளவு
சர்க்கரை நோய் பாதிப்புக்கு ஆளானவர்களில் பாதிப்பேருக்கு சிறுநீரகப் பாதிப்பும் ஏற்படுகிறது. அதில் 30 சதவி கிதத்தினருக்கு முழுமையாக செயலிழப்பு ஏற்படுகிறது. எனவே, சர்க்கரை நோயாளிகள் மற்றும் மரபியல் ரீதியாக சர்க்கரை நோய் பாதிப்புக்கு ஆளாகக்கூடிய வாய்ப்பு உள்ள வர்கள் தொடர்ந்து சிறுநீரகச் செயல்பாடு குறித்தப் பரிசோதனைகளைச் செய்துகொள் வது நல்லது. ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பது நல்லது.
3. ஆரோக்கிய உணவு மற்றும் உடல் எடைக் கட்டுப்பாடு
சத்தான சமச்சீரான உணவைச் சாப்பிட்டு, உடலைக் கட்டுக்குள் வை த்திருப்பது சிறுநீரகப் பாதிப் புடன் தொடர்புடைய சர்க்கரை நோய் மற்றும் மாரடைப்பையும் தவிர்க்கும். உடல் எடை அதிகரி ப்பது சர்க்கரை நோய்க்கு வழி வகுத்துவிடும் என்பதால், உடல் எடையைக் கட்டுக்குள் வைத்தி ருக்க வேண்டும்.
ரத்த அழுத்தத்தை உப்புச் சத்து தூண்டுகிறது. எனவே, உணவில் உப்பைக் குறைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் ஒருவருக்குத் தேவையான உப்பின் அளவு ஐந்தில் இருந்து ஆறு கிராம் மட்டுமே.இதைவிடவும் குறைவான அளவு உப்பு எடுத்துக்கொள் வதும் நல்லதுதான். பதப்படு த்தப்பட்ட மற்றும் உணவக ங்களில் தயாரிக்கப்படும் உணவுகளைச் சாப்பிடுவ தையும் தவிர்க்க வேண்டு ம். சிப்ஸ், ஊறுகாய் போன்ற உப்புச் சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களைத் தவிர்த்து, காய்கறி மற்றும் பழ வகைகளைச் சாப்பிட வேண்டும். இது உடம்பில் ஏற்கெனவே அதிகப்படியா கச் சேர்ந்திருக்கும் உப்பின் அளவைக் குறைப்பதற்கும் பெரிய அளவில் உதவும். ‘ரெட் மீட்’ என்று சொல்லக் கூடிய ஆட்டிறைச்சி, மாட்டி றைச்சி போன்ற உணவுக ளும் தவிர்க்கப்பட வேண்டி யவையே.
வாழைத்தண்டு சாப்பிடுவது சிறுநீரகக் கற்களை வெளி யேற்றும் என்று மாற்று மரு த்துவத்தில் கூறப்படுகிறது. வாழைத் தண்டில் உள்ள டை யூரிடிக்ஸ் (Diuretics) என்கி ற பொருள் அதிக சிறுநீர் கழி த்தலைத் தூண்டி, சின்னச் சின்னக் கற்களை வெளியே ற்றி விடுகிறது.  
4. குடிநீர் அளவு
வெப்பப் பிரதேசமான நம்முடைய நாட்டில் குறைந்தது ஒரு நாளைக்கு இரண்டரை முதல் மூன்று லிட் டர் வரை தண்ணீர் குடிக்க வேண் டும். (சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர் களுக்கு இந்த அளவு முறை பொரு ந்தாது. எனவே அவர்கள் மருத்து வர் பரிந்துரைக்கும் அளவிலேயே தண்ணீர் குடிக்க வேண்டும்). அதற் காக ஒரே மூச்சில் லிட்டர் கணக் கில் தண்ணீர் அருந்துவதும் தவறு. ஒரு நாளில் அவ்வப்போது அளவா ன முறையில் தண்ணீர் அருந்து வதுதான் சரியான முறை.
இன்றைய சூழலில் நிறைய பேர் ஏ.சி. அறையில் உட்கார்ந்து வேலை பார்ப்பதால், அவர்களு க்கு தாகம் எடுப்பது இல்லை. ஏ.சி. அறையில் இருந்தாலும் சரி, தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இப்படித் தண்ணீர் குடிக்கும்போ து சிறுநீரகத்தில் சோடியம், யூரியா உள்ளிட்ட நச்சுப் பொரு ட்கள் வெளியேற்றம் சீராக நட க்கும். சிறுநீரகப் பாதிப்பு வரு வதற்கான வாய்ப்பும் பெருமள வில் குறையும். சிறுநீரகக் கற்கள் ஏற்படுவதையும் தவிர்க்கலாம்.
5. புகை பிடிக்காதீர்கள்!
புகை பிடிக்கும்போது சிறுநீரகத்துக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு குறையும். குறைந்த அளவிலான ரத்தம் சிறுநீரக த்துக்குச் செல்லும் போது, அது சிறுநீர கத்தின் செயல்பாட்டைப் பாதிக்கும். சிறுநீரகப் புற்றுநோய் மற்றும் நீர்ப்பை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை யும் அதிகரிக்கும்.
6. சுய மருத்துவம் வேண்டாம்
மூட்டு வலி, முதுகு வலிக்கு எடுத்துக் கொள்ளும் வலி நிவாரணிகள் மற்றும் ஆன்டிபயாடிக் மருந்துகள் சிறுநீரகத்தை அதிகம் பாதிக்கும். சாதாரணமாக சிறு நீரகம் ஆரோக்கியமாக இருக்கும்போதும் அல் லது அவசரக் காலத் தின்போதும், உரிய ஆலோசனையுடன் இந்த மாத்திரைகளைச் சாப்பிடுவதில் தவறு இல்லை. ஆனால், அடிக்கடி சாப்பிட்டால் பாதி ப்பு ஏற்படும். எனவே, நீண்ட நாட்களாக முதுகு வலி அல்லது மூட்டு வலி என்று தவிப்பவர்கள் மருத்துவரின் ஆலோ சனைப் பெற்று வலி நிவாரணிகளைச் சாப்பிட வேண்டும். மாற்று மரு த்துவம் என்ற பெயரில் தகுதி இல்லாத ஒரு சிலர் தயாரிக்கும் லேகியங்களில் அதிக அளவில் உலோகங்கள் கலக்கப்படுகின் றன. இந்த உலோகங்கள் சிறுநீர கத்தைப் பாதிக்கக்கூடியவை. எனவே, கவனம் தேவை.
7. உங்கள் சிறுநீரகத்தின் செயல்பாட்டை அறிய…
சிறுநீரக நோய் வரும் என்பதை முன்கூட்டியே கண்டறிய எந்தத்தொழில் நுட்பமும் இல்லை. எனவே, 40 வயதைக் கடந்தவர் கள், சர்க்கரை நோயால் அவதி ப்படுகிறவர்கள், உயர் ரத்த அழு த்தம் உள்ளவர்கள், பருமனாக இருப்பவர்கள், மரபுரீதியான சிறுநீரகப் பிரச்னை உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் , சிறுநீரகத்தில் ரத்தம் கலந்து வரும் பிரச்னை உடையவர்கள் மற்றும் ஒரு முறை க்கு மேல் சிறுநீரகத் தொற்று ஏற்பட்டவர்கள் – சீரான கால இடை வெளியில், சிறுநீரகப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.
ரத்தம் – சிறுநீர் பரிசோதனை மற்றும் ரத்த அழுத்தப் பரிசோதனையு டன் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்தும் சிறுநீரகச் செயல்பாட்டினைத் தெரிந்துகொள்ளலாம்.
இதயம், கல்லீரல் பாதிப்பு, அதிக ரத்த சோகை போன்றவையும்கூட சிறுநீரகத்தைப் பாதிக்கும். 50 வய து கடந்த ஆண்களுக்கு விந்துச் சுரப்பியில் (ப்ராஸ்டேட்) ஏற்படும் வீக்கத்தால் சிறுநீரகப் பிரச்னை வர லாம். எனவே, இவர்கள் மருத்து வரின் ஆலோசனையை முன் கூட்டி யே பெறுவது நல்லது. சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டால், வாரத்து க்கு மூன்று நாட்கள் டயாலிசிஸ் செய்துகொள்ள வேண்டிய நிலை ஏற்படும். சில சமயம் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை அளவுக் குக்கூட இது கொண்டுபோய் விட்டுவிடும். எனவே, ஏழு பொன் விதி களையும் தவறாமல் கடைப்பிடித்தால் சிறுநீரகப் பிரச் னை வராமல் காத்துக்கொள்ள முடியும்.

-.-

நலம்தரும் நத்தைச்சூரி

Posted On March 16,2012,By Muthukumar
இயற்கையின் கொடையான புல் பூண்டு, செடி, கொடி, மரம், அனைத்தும் மனித இனத்திற்கு ஏதோ ஒரு வகையில் பயன்படுகிறது.  இவற்றில் பல நோய் தீர்க்கும் குணம் கொண்டவை.  சித்தர்கள் இவற்றை மூலிகைகளாகக் கொண்டு பல விதமான நோய்களை குணப்படுத்தி வந்துள்ளனர்.  மேலும் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும், வலுவையும் கொடுக்கக்கூடிய கற்ப மூலிகைகளைப் பற்றிக் கூறியுள்ளனர்.  கற்பம் என்றால் உடலை நோயின்றி ஆரோக்கியமாக வைக்கும் முறை.  இந்த வகையில் கற்ப மூலிகைகள் பற்றி ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம்.  இந்த இதழில் நத்தைச் சூரி என்னும் மூலிகை பற்றி அறிந்துகொள்வோம்.
இவை இந்தியா முழுவதும் காணப்படும் மூலிகையாகும்.  குறிப்பாக தமிழகத்தில் மணற்பாங்கான இடங்களில் அதிகம் வளர்கின்றது.  இது பூண்டு வகையைச் சார்ந்தது.
நான்கு பட்டையான தண்டுகளையும் எதிரடுக்கில் அமைந்த காம்பற்ற இலைகளையும், மிகச் சிறிய பூக்களையும் கொண்டதுதான் நத்தைச்சூரி.
இதனை குழி மீட்டான், தாருணி, கடுகம், நத்தைச்சுண்டி, தொலியாகரம்பை என பல பெயர்களில் அழைக்கின்றனர்.
கூச்ட்டிடூ    - Natthai Choori
Tamil    - Natthai Choori
English    - Shaggy button weed
Malayalam    - Thartuvel
Telugu    - Madana Ghettu
Sanskrit    - Madanghanta
Botanical Name - Spermacoce hispida
இதன் வேர் மற்றும் விதை மருத்துவப் பயன் கொண்டவை.
வேர் நோய் நீக்கும் தன்மை கொண்டது
விதை, உடல் சூட்டைப் போக்கி உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும்.  சீதபேதி, பெருங் கழிச்சலைப் போக்கும்.
உடல் தேற
நோயின் பாதிப்பிலிருந்து விடுபட்டு உடல் தேற நத்தைச்சூரியின் விதையைப் பொடித்து தினமும் 1 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டு வரவேண்டும்.  இதனால் நோயின் தாக்கம் குறைவதுடன் உடலும் வலுப்பெறும்.
நத்தைச்சூரியின் விதையை லேசாக வறுத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு 1 ஸ்பூன் அளவு எடுத்து பாலில் கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை இருவேளையும் அருந்தி வந்தால் உடல் சூடு தணிவதுடன் உடலில் உள்ள தேவையற்ற இரசாயன வேதிப் பொருட்கள் வெளியேற்றி, சிறுநீரகக் கல்லலைப்பு ஏற்படாமல் தடுக்கும்.  மேலும் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.
பெண்களுக்கு மாதவிலக்குக் காலங்களில் உண்டாகும் அதிக உதிரப் போக்கைத் தடுக்கும்.  வெள்ளைப் படுதலைக் குணமாக்கும்.
நத்தைச் சூரியின் விதையைப்பொடியாக்கி சம அளவு கற்கண்டுப்பொடி கலந்து காலையும், மாலையும் 1ஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் வெப்பத்தினால் உண்டான வயிற்றுக்கடுப்பு, கழிச்சல் நீங்கும்.
10 கிராம் நத்தைச் சூரி வேரை காயவைத்து பொடியாக்கி பசும்பாலில் கலந்து கொதிக்க வைத்து அருந்தி வந்தால் தாய்ப்பால் பெருகும்.
நத்தைச்சூரி வேரை இடித்து 200 மி.லி. தண்ணீரில் கொதிக்க வைத்து 2 மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி தினமும் 50 மி.லியாக  நாள் ஒன்றுக்கு மூன்று வேளை குடித்து வர காய்ச்சல் மற்றும் நோயின் தாக்கம் குறையும்.
நத்தச்சூரி தைலம்
நத்தைச்சூரி வேர், நாயுருவி வேர், வன்னிவேர், உத்தாமணி வேர், தூதுவளை வேர், விளாவேர், பாகல் வேர், வேப்பம்பட்டை, கடுக்காய், மிளகு, வெள்ளுள்ளி, வசம்பு, திப்பிலி, குப்பைமேனி, துத்திவேர் இவற்றை சம அளவு எடுத்து இடித்து 1 லிட்டர் நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி வைத்துக்கொண்டு அடிக்கடி உடலில் தேய்த்து வந்தால் சரும பாதிப்பு நீங்குவதுடன் உடல் சூடு தணியும்.  தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது குறையும்.

உங்கள் பொன்னான பாதம் புண்ணாகலாமா?


Posted On March 16,2012,By Muthukumar

சிலருக்கு, என்னதான் சிகிச்சை பெற்றாலும் பாத வெடிப்பு சட்டென்று குணமாகாது. அப்படிப்பட்டவர்களுக்கு சில டிப்ஸ்...
* பப்பாளி பழத்தை நன்கு நைசாக அரைத்து, அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதிகளில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும், பாதத்தை தண்ணீரில் நனைத்து மறுபடியும் தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், பித்த வெடிப்பு குணமாகும்.
*மருதாணி இலைகளை நன்றாக அரைத்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட வேண்டும். பின், தண்ணீரால் கழுவி வர நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.
* கால் தாங்கும் அளவுக்கு தண்ணீரை சூடுபடுத்தி, அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். அந்த தண்ணீரில் பாதத்தை சிறிது நேரம் வைத்திருந்து, பின், பாதத்தை ஸ்கிரப்பர் போன்ற சொரசொரப்பானவற்றால் தேய்த்து கழுவினால் பாதத்தில் காணப்படும் கெட்ட செல்கள் உதிர்ந்து விடும். இதனால் பித்த வெடிப்பு ஏற்படுவதும் தவிர்க்கப் படுவதோடு, பாதம் மென்மையாகவும் இருக்கும்.
* வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைக்க வேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் பூசினால், பித்த வெடிப்பு நீங்கும்.
* தரம் குறைவான காலணிகளைப் பயன்படுத்துவதாலும், சிலருக்கு பித்த வெடிப்பு ஏற்படும். எனவே காலணிகளை வாங்கும் போது, அது தரமானது தானா என்பதை கவனித்து வாங்குவது நல்லது.
* விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சமஅளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, அதை பாதத்தில் வெடிப்பு உள்ள இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவி வர, பித்த வெடிப்பு சரியாகும்.
* வேப்ப எண்ணெயில், சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவினாலும் பித்த வெடிப்புகள் சரியாகும்.
* இரவு நேரத்தில் படுக்கைக்குச் செல்வதற்கு முன், காலை நன்றாக தேய்த்து கழுவி, சிறிது தேங்காய் எண்ணெய் தடவி தூங்கச் செல்வது நல்லது. இப்படி செய்தால் பித்த வெடிப்பு வராமல் தடுக்கலாம்.
* தினமும் குளித்து முடித்ததும், பாதங்களை ஈரமில்லாதவாறு துணியால் துடைக்க வேண்டும். பின், பாதத்தில் சிறிது விளக்கெண்ணெய் தேய்த்து வந்தாலும் வெடிப்பு வராமல் தடுக்கலாம்.

புகை நமக்கு பகை


Posted On March 16,2012,By Muthukumar
புகை நமக்கு பகை, புகை பிடிக்காதீர் என்ற வாசகங்களை நாம் பார்த்தும், கேட்டும் இருப்போம்.  இவைகள் இன்று விளம்பரபப் பலகைகளில்தான் உள்ளது.  அரசும், புகைப்பிடிப்பதால் உண்டாகும் பாதிப்புகள் பற்றி பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தியும், இந்தியாவில் புகைப்பதால் ஆண்டுக்கு 14 இலட்சம் பேர் இறக்கின்றனர்.  60 இலட்சம் பேர் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி தவிக்கின்றனர்.
இதில் வேடிக்கை என்னவென்றால், புகை பிடிப்பவர்களை விட, புகை பிடிப்பவர்களின் அருகில் இருப்பவர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் மே 31ம் தேதியை புகை பிடிப்பு எதிர்ப்பு தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்து விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.  ஆனாலும், புகைப் பிடிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது.  குறிப்பாக டீன் ஏஜ் வயது ஆண்களையும், பெண்களையும்  புகைப்பழக்கம் அதிகம் ஈர்ப்பதாக அண்மைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு சிகரெட், பீடி, புகையிலை வழங்கக்கூடாது என அரசு எச்சரித்தும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக் கிடையே இப்பழக்கம் விரைவாக பரவி வருவது கவலை அளிக்கும் விசயமாக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தெரிந்தோ தெரியாமலோ சில தீய பழக்கங்களுக்கு அடிமையாகி உடலைக் கெடுத்து நோயின் பிடியில் சிக்கி இறுதியில் வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றனர்.
ஒருசிகரெட்டைப் புகைத்தால் அவருக்கு மரணம் 5.5 நிமிடம் முன்னோக்கி வருகிறது, அதைவிட அருகில் உள்ளவர்களுக்கு 7 நிமிடம் முன்னோக்கி வருகிறது என யூனிசெப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இத்தகைய கொடூரம் வாய்ந்த மெல்லக் கொல்லும் புகைப்பழக்கதால் உடலில் என்ன என்ன பாதிப்புகள் உண்டாகும் என்பதை சற்று கவனியுங்கள்.
முதலில் புகையிலையில் உள்ள நச்சுப் பொருட்களைப் பார்ப்போம்.
நிகோடின் , கார்பன்-டை-ஆக்ஸைடு, பிரிடின் பைரின், கார்பன் மோனாக்ஸைடு,  அமோனியா ஆர்செனிக், மீத்தேன், பிரஸ்லிக் அமிலம், பார்மிக் அமிலம், கிரிஸால், பைரால், ரூபிடின், மெதிலின் பர்பரோல், பைக்கோலின், பார்வோலின், ஒட்டிடைப், சல்புரேடட் ஹைடிரஜன், சப்பரிடேட்,  லுனைன்,  விரிடைன், மைதிலைமின்,  பார்மால் டிரையுட், பார்பிக் ஆல்டிஹைட், வெடியுப்பு, மரிஜீவானா, அக்ரோலின், மார்ங்காஸ், கொரிடீன்,
இவை அனைத்துமே கொடிய நச்சுப் பொருட்கள்.  இவையா புண்பட்ட மனதை ஆற்றும்..
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் புகைப்பிடிக்கும் அன்பர்கள்.
புகைப்பிடிப்பதால் உண்டாகும் பாதிப்புகள்
சுவாசக் குழாயில் சளி ஏற்பட்டு இருமல் தோன்றும்.  தொண்டைக்கட்டு ஏற்படும்.  மூச்சுக் குழல்களில் புண்கள் உண்டாகும். நுரையீரல் சளி கோர்த்துக்கொள்ளும்.
குடற்புண் (அல்சர்) உண்டாகும்.  வாய்ப்புண் ஏற்படும்.  தொண்டை எரிச்சல் ஏற்படும்.  நாக்கு சுவையின்மை உண்டாகும்.  பற்கள் பலமிழக்கும்.  பல் ஈறு சம்பந்தமான நோய்கள் ஏற்படும்.
தொடர்ந்து இருமல், களைப்பு உண்டாகும்.  மூக்கடைப்பு அதனைத் தொடர்ந்து ஈளை, ஆஸ்துமா போன்றவை ஏற்படும்.
நுரையீரலில் சளி கட்டி இறுதியில் புற்றுநோயின் பாதிப்பை உண்டாக்கும்.
காச நோயை உண்டாக்கும்.  கண் பார்வை மங்கும்.  கண் புகைச்சல், கண் எரிச்சல், கண் காசம் போன்றவை உண்டாகும்.  கண் நரம்புகளில் சளி கோர்த்து வறட்சி உண்டாகும்.
இரத்தத்தில் ஆக்ஸிஜன் (பிராணவாயு) அளவைக் குறைப்பதால் இரத்தத்தில் பித்தம் அதிகரித்து இரும்புச்சத்து குறைந்து போய்விடுகிறது.  இதனால் இரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்பு இரத்த நாளங்களில் உட்புறத்தில் இரத்தத்தை கடினப்படுத்தி அதாவது பசைத் தன்மையடையச் செய்து இரத்த நாளங்களில் ஒட்டிக்கொண்டு இரத்த ஓட்டத்தைப் பாதிக்கிறது.  இதனால் அதிக இரத்த அழுத்த நோய் ஏற்பட்டு பின் இதய நோய் உண்டாகி மாரடைப்பு உண்டாகிறது.
கல்லீரல் பாதிக்கப்பட்டு அதனால் காமாலைநோய் உண்டாக்கவும் செய்யும் தன்மை சிகரெட்டிற்கு உண்டு.
ஞாபக சக்தியைக் குறைக்கும்.  மூளை  பாதிப்பை உண்டாக்கும்.  ஆண்மையிழப்பு, மலட்டுத்தன்மை, தோல் சுருக்கம், கை, கால் நடுக்கம் ஏன்றவற்றை ஏற்படுத்தும்.
பணம் விரையத்துடன் இப்படி உடலைக் கெடுக்கும்புகையிலை புகைக்க வேண்டுமா.  சற்று சிந்தியுங்கள்.
புகைபிடிப்பதைத் தடுக்க சில யோசனைகள்
உங்கள் பொருளாதாரத்தையும், நீங்கள் புகை பிடிப்பதால் உங்களுக்கும் உங்களைச் சுற்றியிருக்கும் உங்கள் உறவுகளுக்கும் எத்தகைய பாதிப்புகளை நீங்கள் உருவாக்குகிறீர்கள் என்பதை உணருங்கள்.
முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை என்ற பழமொழியை நினைத்து சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை தள்ளிப்போடுங்கள்.  புகைப்பிடிக்கும் நண்பர்களைக் கொஞ்சம் தவிருங்கள்.
புகைப்பிடிக்கும் எண்ணம் தோன்றினால் காய்கறி சாலட் சாப்பிடுங்கள்.  காரட், வெள்ளரி, வெங்காயம் சாப்பிடலாம்.  பழங்களைச் சாப்பிடுங்கள்.  சாப்பிட முடியாதவர்கள் நன்கு தண்ணீர் அருந்துங்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக என்னால் எல்லாவற்றையும் சாதிக்க முடியும் என எண்ணிவிட்டால் சிகரெட்டையா விட முடியாது.



பெண் – பூ வாசம் வீசும் வாடா மலரவள்!!



“பூக்களுக்கு நீயே வாசமடி’ என்றும், “மங்கை அவள் வாய் திறந்தால்

மல்லிகை பூ வாசம்’ என்றும், பெண் வாசம் பற்றி பெருமை பேசும் பாடல்கள் நிறைய. நிஜத்திலும் அது சாத்தியமாக
இதோ சில வாசனை டிப்ஸ்…:
பெண்ணின் உடலமைப்பு, செயல்பாடு கார ணமாக பலருக்கும் உடல் துர்நாற்றம் என் பது தவிர்க்க முடியாமல் போகிறது. நாற்ற த்துக்கு காரணங்கள் பல. முதலில் வியர் வை. இது ஆண், பெண் எல்லாருக்கும் பொது. வியர்வைக்குத் தனியே எந்த வாச னையும் கிடையாது. அது, பாக்டீரியாவுடன் சேரும் போதுதான், ஒரு வித துர்நாற்றம் வெளிப்படுகிறது. வியர்வையை அசுத்தமா க நினைப்பவர்கள் பலர்; ஆனால், அது ஆரோக்கியத்தின் வெளிப்பா டு. வியர்வையின் மூலம் உடலில் தேவையற்ற கொழுப்பும் வெளி யேறும். சருமத்தில் ரோம வளர்ச்சி அதிகமுள்ள இடங்களில், வியர்வை அதிகம் சுரக்கும். தினம் இருவேளை கள் குளிப்பது, டியோடரன்ட் உபயோகிப்ப து, காட்டன் உடைகளை அணிவது போன் றவை இப்பிரச்னைக்கு தீர்வளிக்கும்.
மாதவிலக்கு, வெள்ளைப்படுதல் போன்ற வற்றின் காரணமாகவும், பெண்களின் உடலில் துர்நாற்றம் வரும். மாதவிலக்கு நாட்களில் தரமான சானிட்டரி நாப்கின்க ளை உபயோகிப்பது, அடிக்கடி அவற்றை மாற்றுவது போன்றவை இம்மாதிரி துர் நாற்றங்களை தவிர்க்கும். தினம் இரண்டு வேளை பல் தேய்த்தாலும், சிலருக்கு வா ய்நாறும்; இவர்கள், மவுத் வாஷ் உபயோ கிக்கலாம். கிராம்பை ஊற வைத்த தண்ணீரால் அடிக்கடி வாய் கொ ப்பளித்து வந்தாலும் நாற்றம் அகலும். அதே மாதிரி ஏலக் காயையும் மெல்லலாம்.
உடலை நாள் முழுதும் நறு மணத்துடன் வைத்திருக்க …: குளிக்கும் தண்ணீரில் வேப்பிலை, கற்பூரம் அல்ல து எலுமிச்சை பழத்தின் தோல் ஆகியவற்றில் ஏதே னும் ஒன்றை போட்டுக் குளிக்கவும்; உடல் மணக் கும். ரொம்பவும் வாசனை யான சோப்புகள் சருமத்து க்கு நல்லவையல்ல. சோப்புக்கு பதிலாக பச்சைப்பயறு மாவு அல் லது கடலை மாவுடன், கஸ்தூரி மஞ்சள், சந்தனம், வெட்டி வேர், பூலாங் கிழங்கு, ரோஜா இதழ் போன்றவ ற்றை காய வைத்து, அரைத்து, உடம்புக்கு தேய்த்து குளிக்கலாம். இது, சரும அழ கையும் அதிகரிக்கும்; உடலையும் இயற் கை நறுமணத்துடன் வைக்கும்.

கவர்ச்சிப் பதுமைகளாக வலம் வரும் பெண்களால் ஆண்களின் ஆண்மை பாதிக்கும் அபாயம்


Posted on  by muthukumar

பெண்கள் கவர்ச்சிகரமான ஆடைகள் அணிவதாலும் கவர்ச்சிப் பதுமைகளாக வலம் வருவதாலும் ஆண்களி ன் ஆண்மை பாதிக்கப்படு வதாய் ஒரு புதி ய ஆராய்ச்சி தனது முடிவை வெளியிட்டி ருக்கிறது.
அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் இந்த ஆராய்ச்சி நீண்ட நெடிய முப்பது வருடங் கள் நடத்தப்பட்ட ஆய்வு என்பது குறிப்பிடத் தக்கது. அறுபது வயதுக்கு மேலான ஆண் களில் 60 விழுக்காடு பேர் புரோஸ்ட்ரேட் புற்று நோயால் தாக்கப்படுவதும்இ முப்பது வயதுக்கு மேற்பட்ட 35 விழுக்காடு ஆண் களிடம் இந்த புற்றுநோய் அறிகுறி மற்றும் ஆண்மைக்குறைவு இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவின் லீனாய்ட் எனும் மருத்துவர் இது குறித்து கூறுகையில்  நவீனப் பெண்களின் இத்தகைய ஆடைக் கலாச்சாரமும்இ வசீகரிக்கும் வனப்பை வெளிக்காட்டும் மோகமும் ஆண்களின் மனதில் பல்வேறு கிளர்ச்சிகளை ஏற்படுத் துவதாகவும் அவர்களுடைய ஏக் கங்களை அதிகரிப்பதாகவும் தாம் பத்திய வாழ்வின் திருப்தியைத் திருடிக் கொள்வதாகவும் பல்வே று காரணங்களை அடுக்குகிறார்.
இப்படி பாலியல் ரீதியான கிளர்ச்சிக்கு ஆண்களை இட்டுச்செல்லும் பெண்களின் ஆடைப் பழக்கம் ஆண்களிடம் கனவுகளை வளர்த்தும்நிஜத்தை ஏற்றுக் கொள்ள முடியாத மனநிலைக்குத் தள்ளியும் அவர்க ளை மனம் மற்றும் உடல் சார்ந்த பல் வேறு நோய்களுக்கு இட்டுச் செல்கி றதாம்.
அரேபிய நாடுகளில் இத்தகைய சிக் கல்கள் மிகவும் குறைவு. முத லில் இதற்கு கால நிலையும் உணவுப் பழக்கவழக்கங்களே கார ணம் என கரு தப்பட்டது. ஆனால் அதே காலநிலை உணவுப் பழக்கத்தில் மேலை நாட்டி னரால் அரேபிய ஆண்களைப் போல இருக்க முடிய வில்லை.
இது ஆராய்ச்சியாளர்களை வெகுவாகக் குழப்பியிருக்கிறது. அந்தகுழப்பம் அவர்களுடைய கவ னத்தை பிற காரணிகளின் மேல் திரும்பியிருக்கிறது. உட லை முழுதும் மறைக்கும் ஆ டை அணியும் கலாச்சாரத்தை க் கொண்டுள்ள பெண்கள் வா ழும் அரேபிய நாடுகளில் இத்த கைய சிக்கல்கள் பெரும்பாலு ம் இல்லை என்பதனால் இதற் கும் ஆடைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா எனும் யோச னை முளைத்திருக்கிறது.
அதன் பின்பே பெண்களின் ஆடைக்கும் ஆண்களின் ஆரோக்கியத்துக்கும் இடையேயான இந்த தொடர்பு தெரியவந்திருக்கி றது. தெருவிலும் பணித்தள ங்களிலும் பொது இடங்களி லும் சந்திக்கும் பெண்களி ன் வசீகரிக்கும் தோற்றமும் உடைகள் மறைக்காத உட லின் பாகங்கள் தூண்டிவி டும் பாலியல் சிந்தனைகளு ம் ஆண்களின் மனதில் பதி ந்து அவர்களுடைய ஏக்கங்களை விரிவடைய வைத்து ஏமாற்றத் தை அதிகரிப்பதே இந்த ஆண்மைக்குறைவு மற்றும் புரோஸ்ட்ரேட் புற்று நோய் இவற்றின் மூல காரணம் என்று இந்த ஆராய்ச்சி தனது முடிவை ஆதாரங்க ளுடன் வரையறை செய்திருக்கிறது.
முக்கால்வாசி ஆண்மைக்குறைபாடுகளும் இத்தகையதே என்பது இந்த ஆராய்ச்சியின் தீர்க்கமான முடிவாகும்.
பெண்களின் கவர்ச்சிகரமான நடைபாதைக ளில் ஆண்களின் ஆரோக்கியத்தைப் புதைக் கும் கல்லறைகள் மு ளைத்துக் கொண்டே இருக்கின்றன என்பது அதிர்ச்சியூட்டும் செய்தியாக இருக்கும் அதே வேளையில் தேவையற்ற பாலியல் கனவு களை வளர்க்காமல் நட்புணர் வுடன் அடுத்த பாலினரை நோக் கும் மனநிலையை ஆண்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆராய்ச்சி எச்சரி க்கை செய்கிறது.