Posted on March 16,2012 by muthukumar
திருமண பந்தத்தில் இணையும் ஆணும் பெண்ணும் உறவு கொள் வது அவசியமானது. தாம்பத்யம் என்பது புனிதமடைவதும் இங்கு தான். இது அவசியம் என்பதோடு உடலுக்கும் உள்ளத்திற்கும் புத்து ணர்ச்சியளிக்கக் கூடியது என்கின் றன ஆய்வுகள்.
உடலை இளமையாக்கி இதய நோய் பாதிப்பில் இருந்து பாதுகா க்கிறதாம் தாம்பத்ய உறவு மகிழ் ச்சிகரமான இந்த தகவலை வெளியிட்டு தம்பதியர்களை குதூகல த்தில் ஆழ்த்தியிருக்கின்றனர் மருத்துவர்கள்
இனிமை, இளமை
உறவின் உச்சத்தில் வெளிப்படும் எண்டோர்பின் செரிமானத்திற்கும், உடலில் உள்ள சுருக்கங்களை நீக்கி தோல் இளமையடையவும் உதவுகிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களையும், அதிக கலோரிகளையும் கரைக்கிறது என்று ஆய்வு முடிவு தெரிவி க்கிறது.
புற்றுநோய் அண்டாது
உறவு கொள்வதன் மூலம் உடலில் உள்ள அனைத்து நரம்புகளும் அணுக்களும் புத்து ணர்ச்சி பெறுகின்றன. இதனால் புற்றுநோய் வரும் வாய்ப்பு கூட குறைவுதான் என்று மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.
உறவின் மூலம் உடலில் ஏற்படும் சிறு சிறு பலவீனங்களும் குறை கின்றனவாம். ஜலதோசம், உடல்வலி, போன்றவைகூட எளிதில்குணமடைகிறது என்று மருத்துவ அறிக்கை கூறுகிறது. எலும்பு களுக்கும், தசைகளுக்கும் கூட வலிமை ஏற்படுகிறதாம்.
உற்சாகமான உடற்பயிற்சி
தினசரி உறவு தீமையை ஏற்படுத்தும் என்ற நமது பழங்கால பஞ்சா ங்கங்கள் சொல்வதற்கு நேர் மாறாக இருக்கிறது இந்த அறிக்கை. எது எப்படியோ வீட்டை விட்டு வெளியே செல்லாமல் உற்சாக மாக செய்யும் உடற்பயிற்சியை தம்பதியர்கள் வரவேற்பார்கள் என்பதில் எள் அளவும் சந்தேகம் இல்லை .
No comments:
Post a Comment