Friday, 16 March 2012

உலகின் பணக்கார கிராமத்தில் ஒரு `விசிட்’!


Posted On March 16,2012,By Muthukumar
* நட்சத்திர ஓட்டல்கள்
* 60 மாடிக் கட்டிடங்கள்
* பிரமாண்ட ஷாப்பிங் மால்கள்
* வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலைகள்
* பளபள சாலையில் சறுக்கிச் செல்லும் ஆடம்பர கார்கள்...
இவை எல்லாம் எங்கு பார்த்தாலும் நிறைந்திருக்கிறது,
உலகிலேயே பணக்கார கிராமமான சீனாவின் `ஹுவாக்ஸி'யில்! ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கும் குறைவான ஹுவாக்ஸி, இன்று உலகையே வியந்து பார்க்க வைத்துக் கொண்டிருக்கிறது.

ஏழை விவசாய சமூகம்தான் அங்கு இன்று பெரும் பணக்காரக் குழுமமாக வளர்ந் திருக்கிறது. தற்போது `மாதிரி சோசலிஷ கிராமம்' என்று அழைக்கப்பட்டும் இக்கிராமத்தின் முன்னேற்றத்துக்கு வித்திட்டவர், உள்ளூர் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளரான வு ரென்பா. அவர் தனது முயற்சியை 1961-ம் ஆண்டு தொடங்கினார்.
ரென்பாவின் தொலைநோக்கு அடிப்படையிலான வழிகாட்டலும், புத்திசாலித்தனமான கடின உழைப்பும் ஹுவாக்ஸிக்கு அசுர பணக்கார அந்தஸ்தைப் பெற்றுத் தந்திருக்கின்றன.
சில உதாரணங்களைப் பார்த்தால் புரியும். இங்குள்ள 328 அடி 60 மாடிக் கட்டிடம், சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் உள்ள அதிகபட்ச உயரக் கட்டிடத்துக்கு இணையா னது. லண்டன் மாநகரத்தில் உள்ள கட்டிடங்களைவிட உயரமானது. இந்தக் கட்டிடத்தின் 60-வது மாடியில் உள்ள பசு சிற்பம், ஆயிரம் கிலோ தங்கத்தாலானது.
சரி, ஹுவாக்ஸியின் செழுமையான வளர்ச்சியின் ரகசியம் என்ன?
பாரம்பரிய விவசாயத்தை நவீனம் சார்ந்த விவசாயத் தொழிலாக மாற்றினார்கள். அதில் ஏகப்பட்ட வருவாய் குவிந்ததும் அதை ஜவுளி, உருக்கு தொழிலில் திருப்பிவிட்டனர். எல்லாவற்றிலும் மிக முக்கியமாக இருந்தது கடுமையான உழைப்பு. அதுவும் ஒன்றுபட்ட உழைப்பு.
``ஆயிரம் கிலோ தங்கப் பசு சிற்பத்துக்கு 300 மில்லியன் யுவான் (ரூ. 235 கோடி) ஆனது. ஆனால் தற்போது இதன் மதிப்பு 500 மில்லியன் யுவான்'' என்கிறார், 60 மாடிக் கட்டிடத்தில் வழிகாட்டியாகப் பணிபுரியும் இளம்பெண் டினா யாவோ. அந்த கட்டிடம், புதுக் கிராம கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. மூன்று பிரிவுகளாக உயர்ந்து நிற்கிறது. உச்சியில், ஒரு பெரி...ய்ய தங்கப் பந்து வடிவமும் இடம்பெற்றிருக்கிறது.
இந்தக் கட்டிடத்தின் உச்சித் தளத்தில் தங்க சிற்பங்கள் என்றால், இதர தளங்களில் வெள்ளியால் ஆன பெரிய பெரிய விலங்குகளின் சிற்பங்கள் உள்ளன. தங்க இழைகள் அங்குள்ள மார்பிள் தரையில் ஜொலிக்கிறது.
60 மாடிக் கட்டிடத்தை ஒட்டி நீளும் நூல் பிடித்த மாதிரியான தெருக்களில் மகா மாளிகைகள் உயர்ந்து நிற்கின்றன. அவற்றின் முன்பு பி.எம்.டபிள்யூ கார்கள் அணிவகுத்து நிற்கின்றன.
1998-ம் ஆண்டில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட ஹுவாக்ஸி, தற்போது தனிப்பெரும் நிறுவனமாக வளர்ந்திருக்கிறது. இங்கு உற்பத்தியாகும் பொருட்கள், உலகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.
இந்த முன்னேற்றங்களுக்கு ஆரம்பத்தில் விதை போட்டவை ஆயிரத்து 600 குடும்பங்கள். `பங்குதாரர்கள்' என்று அழைக்கப்படும் இவர்கள் ஒவ்வொரு குடும்பத்துக்கும் பங்குத் தொகை, சம்பளங்கள், போனஸ்கள் என்று பணம் குவிகிறது. ஒரு குடும்பத்தின் சராசரி வருட வருவாய் சுமார் ஒரு கோடி ரூபாய்.

ஆயிரம் கிலோ தங்கத்தில் உருவான பசு.
மேலும், ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு பங்களா, ஒரு கார், இலவச மருத்துவச் சேவை, சமையல் எண்ணை ஆகியவை இலவசம்.
சீனாவின் பிற பகுதிகள் உள்பட உலகமெங்கும் தாக்கிய பொருளாதார நெருக்கடி ஹுவாக்ஸியை தாக்கவில்லை. தனது தனி வழியில் கம்பீரமாக இயங்கிக் கொண்டே இருக்கிறது. பிற பெருநகரங்களைப் போல இங்கும் வெளியிடங்களில் இருந்து தொழிலா ளர்கள் வரவழைக்கப்படுகிறார்கள்.
இவை எல்லாவற்றுக்கும் காரணமான ரென்பாவு, ``நாங்கள் எப்போதும் எங்கள் மக்களுக்கு எது நன்மை புரியுமோ அதைத்தான் செய்வோம்'' என்கிறார். 86 வயதாகும் அவர், தற் போறு ஓய்வு பெற்றுவிட்டார். தந்தையின் வழிகாட்டலோடு இவரது மகன் கட்சிச் செயலாளராகப் பொறுப்பேற்றுச் செயல்படுகிறார்.
ஹுவாக்ஸியின் வெற்றிக் கதை, உலக மக்களை இக்கிராமத்தை வியப்போடு திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது. அவர்களில் பலர், அந்த `சூத்திரத்தை' அறிந்துகொள்வதற்காக நேரடியாக இங்கு வந்து இறங்கிவிடுகிறார்கள். `பணச்செழுமை சுற்றுலா' என்ற பெயரில் இங்கு ஓராண்டுக்கு வருவோர் எண்ணிக்கை 2 லட்சம். அந்த வகையிலும் ஹுவாக் ஸிக்கு பணம் கொட்டுகிறது. 2 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் தங்கும் அளவிற்கு, லோங்ஸி என்ற சர்வதேச ஓட்டலும் இங்குள்ளது.

No comments:

Post a Comment