தேவையானமருந்துகளும் செய்முறையும்:
1. ரஸகற்பூரம் (பூரம்) – ரஸகற்பூர 10 கிராம்
2. வங்க ஸிந்தூரம் – கிரிஸிந்தூர 20 “
3. மிருதார் சிங்கி – ம்ருத்தார ஸ்ருங்க 20 “
இவைகளைத்தனித்தனியே கல்வத்திலிட்டுப் பொடித்து ஒன்று சேர்த்தரைத்து அதை
1. தேங்காய் எண்ணெய் – நாரிகேள தைல 400 கிராம்
2. தேன் மெழுகு – மதுச்சிஷ்ட 100 “
இவைகளைக் கொண்டுமுறைப்படி தயாரித்து ஆறிய களிம்புடன் கலந்து பத்திரப்படுத்தவும்.
பயன்படுத்தும்முறை:
மேற்பூச்சாக (அப்யங்க) வெளிஉபயோகத்திற்கு மட்டும். நல்லெண்ணெய்யுடன் கலந்து பூசலாம்.
தீரும் நோய்கள்:
பரங்கிப்புண் (உபதம்ஷஜவ்ரண, பிரங்கஜவ்ரண), ஆறாத புண்கள் (துஷ்டவ்ரண), காயங்கள், படை (விஸர்ச்சிகா), நமைச்சல் (கண்டு), பாதிக்கப்பட்ட பகுதியை நன்கு சுத்தம்செய்துவிட்டு இதனைப் போடவும்.
தெரிந்து கொள்ள வேண்டியவை
- ஆறாத புண்ணை ஆற்றிடும்
- நாள்பட்ட காயங்களுக்கு இந்த மருந்தை பயன்படுத்தலாம்
No comments:
Post a Comment