Posted On April 01,2012,By Muthukumar
கருத்துக்களும் மூட நம்பிக்கைகளும் உலகெங்கும் காணப்படுகின்றன. எனினும் இந்தியாவைப் பொறுத்த வரை இது அளவிட முடியாத அளவிற்கு வளர்ந்து இருக்கிறது. இந்த நாட்டில் காணப்படும் பலவிதமான பாலியல் கோளாறுகளுக்கு இந்த அறியாமையும் மூட நம்பிக்கையுமே காரணம்
- டாக்டர். பிராகாஷ் கோத்தாரி.
மாயைகள் என்பன விஞ்ஞான அடிப்படை ஏதுமின்றி கர்ண பரம்பரையாக சொல்லப்பட்டு, மக்களால் நம்பப்பட்டு வரும் வெறும் கற்பனைகளே. இவை மக்களின் பாலியல் வாழ்வில் குறிக்கிடும் போது அதனால் பெருந் தீங்கு ஏற்படுகிறது. இனிக்க வேண்டிய இல்லறம் கசந்து விடுகிறது. இந்த மூட நம்பிக்கைகள் தான் இன்று பெருகிப் போன பாலியல் குறைபாடுகளுக்கு ஒரு முக்கிய காரணம். அப்படிப்பட்ட மாயைகளின் சில என்னவென்று பார்ப்போம் வாருங்கள்.
விந்து – உயிர் நிலைக்கு ஆதாரமான திரவம்
இந்திய வாழ்க்கை முறையில் ஷிமீனீமீஸீ எனப்படும் விந்து உயிர் நிலைக்கு ஆதாரமான ஒர் உயரிய நீர்மமாகக் கருதப்பட்டு வந்துள்ளது. இது வெளிப்படுகின்ற போது தங்களது சக்தி முழுதும் வெளிச் செல்வதாக நினைக்கிறார்கள். பல ஆண்கள் மலம் கழிக்கும் போது தங்களது சிறுநீருடன் விந்து வெளியேறுவதாகவும் அதனால் தாங்கள் ஆண்மை இழந்து போகக்கூடும் என நினைத்து அஞ்சுகின்றனர்.
உடலியக்கம் பற்றிய அறியாமையால் ஏற்படுகின்ற ஐயம் தான் இது. முதன் முதலில் விந்தும், சிறுநீரும் ஒரே நேரத்தில் வெளி வர முடியாது என்ற அடிப்படை உண்மையை அறிந்து கொள்ள வேண்டும். உடலுறவின் போதோ அல்லது பிற பொழுதிலோ விந்து வெளியேறும் போது சிறுநீர்ப்பையின் கழுத்து எனப்படும் சிறுநீர்ப் பாதை, தானே மூடிக் கொள்கிறது. விந்து முழுதும் வெளியேறிய பிறகே இது திறக்கிறது.
சிற்சில வேளைகளில் சிறுநீருடன் சேர்ந்து பசை போன்ற ஒரு வெள்ளைத் திரவம் வரக்கூடும். இது விந்து அல்ல. புராஸ்டேட் சுரப்பி மற்றும் நீர்த்தாரையிலுள்ள சுரப்பி களின் சுரப்பே ஆகும்.
சுய இன்பம் தீமையானதா?
தொன்றுதொட்டு இந்திய முறை மருத்துவங்கள் அனைத்தும் விந்து ஒரு உயிர்நிலைத் திரவம். இதை வீணாக்குவது உடலுக்கு மிகுந்த கேடு விளைவிக்கும் என்று கருத்தையே பரப்பி வந்துள்ளன. கிராப்ட் எப்பிங் போன்ற சில மேலைநாட்டுப் பாலியலார் கூட சுய இன்ப விந்து இழப்பு மனநோய் கோளாறுகளை ஏற்படுத்தக் கூடும் என நம்பினர். நாட்டு மருத்துவர்கள் தாது நஷ்டத்தால் நரம்புத் தளர்ச்சி, பலவீனம், கண்களைச் சுற்றிக் கருவளையம் போன்ற குறைபாடுகள் ஏற்படலாம் என்றும் கூறி வந்துள்ளனர்.
ஒவ்வொரு துளி விந்தும், 40 துளி இரத்தத்தைக் கொண்டு உருவாக்கப்படுகிறது என்னும் ஒரு தவறான கருத்து காலம் காலமாக நம்மிடையே பரப்பப்பட்டு வந்துள்ளது. இதனால் உடலுறவின் மூலமாகவோ, சொப்பனத்திலோ, சுய முயற்சியாலோ விந்து வெளியேறுகின்ற போது உடல் தன் சக்தியை இழக்கிறது என்று ஒவ்வொரு ஆணும் நம்புவதால் விந்து இழப்பு பெரும் தீங்கு என்ற கருத்து இங்கு நிலவி வருகிறது.
மேற்கண்ட கூற்றுகளில் உண்மை எதுவும் இல்லை என்றும் அறிவுக்குப் புறம்பான கற்பனைக் கதைகள் என்றும் நவீன மருத்துவ முறைகளின் மூலம் நிரூப்பிக்கப்பட்டுள்ளது.
ஆண்களின் பிறப்பு உறுப்புக்களான விரை, புராஸ்டேட், செமினல் வெசிகிள் எனப்படும் விந்துச் சிமிழ் போன்றவைகள் விந்து உற்பத்தியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளன. எனவே கட்டாயமாகப் பிரமச்சரியம் அனுஷ்டிப்பதைவிட, சுய இன்பம் மூலம் விந்து வெளிப்படுவதில் தவறில்லை.
எடுத்துக்காட்டாக ஒரு பாத்திரம் தண்ணீரால் நிரப்பப்பட்டிருக்கும் போது மேலும் தண்ணீரை அதில் சேர்த்தால் அளவின் மிகுந்த நீர் வடியத் தொடங்குகிறது. இதே போல் நீண்ட நாட்களுக்கு விந்து வெளியேற்றப்படாமல் இருக்கின்ற போது மேலும் விந்து அதில் சேர்ந்தால் மிகுதியாக உள்ள விந்து தானாகவே கனவில் வெளியேறிவிடுகிறது. இது ஒரு இயல்பான செயல். இதில் எந்தத் தவறும் கிடையாது. எந்தத் தீங்கும் நேராது.
விந்தணுக்களின் அடர்த்தி
ஒருவரது விந்தில் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாகவோ அல்லது இல்லாமலோ போனால் அவருக்கு ஆண் தன்மை குறைவாக இருக்கும் என்கிற கருத்தும் தவறானது. மலட்டுத்தன்மை வேறு. ஆண்மை உணர்வும், வீரியமும் வேறு. ஒருவன் மலடாக இருக்கலாம். அதற்காக அவன் வீரியம் குன்றியவன் என்று பொருளில்லை. அதே போன்று போதிய விந்தணுக்கள் உள்ளவன் ஆண்மை உணர்வற்று இருக்கவும் கூடும். இது பெரும்பாலும் விரையினுள் இருக்கும் சில செல்களைப் பொறுத்தே அமைகிறது.
சுய இன்பம் ஆணுறுப்பைப் பாதிக்குமா?
மிகப் பெரும்பாலான இளைஞர்களிடையே சுய இன்பம் ஆணுறுப்பின் அளவையும் உருவையும் பாதிக்கும் என்கின்ற அச்சம் காணப்படுகிறது. இதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. அத்துடன் ஆணுறுப்பின் அளவு அவரவர் குடும்ப பாரம்பரியத்தைப் பொறுத்தே அமைகிறது. மேலும் மணவாழ்வில் மனநிறைவு என்பதும் மனைவியைத் திருப்திப்படுத்துவதென்பதும் உறுப்பின் அளவைப் பொறுத்து அமைவதில்லை. பெண்ணுறுப்பின் முக்கிய உணர்வு நரம்புகள் அனைத்தும் புணர்புழையின் முதல் ஒன்றரை அங்குலத்திற்குள்ளேயே அமைந்துள்ளன. எனவே அளவு முக்கியமில்லை. பழகுகின்ற முறை தான் முக்கியம்.
பெண்களில் பரவச நிலை
புணர்ச்சிப் பரவச நிலையை அடைகின்ற போது ஆண்களைப் போல் பெண்களுக்கும் ஒருவகை திரவம் தெறித்து வெளிப்படுகிறது (மீழீணீநீuறீணீtவீஷீஸீ) என்று பலர் எண்ணுகின்றார்கள். விஞ்ஞான அடிப்படையில் இதற்கு ஆதாரம் எதுவுமில்லை. பெண்களில் பரவச நிலை என்பது எளிதாக விளக்க முடியாத ஒரு பரவலான உணர்வு. இது பெண்ணுக்குப் பெண் மாறுபடுகிறது. தன் மனைவி பரவச நிலையை அடையவில்லை என்றாலோ அல்லது தாமதமாகிறது என்றாலோ அது தன்னுடைய குற்றம் எனக் கணவன் கருதுவது கூடாது. மாறாகத் தம்பதியர் இருவரும் தங்களது அணுகுமுறைகளில் மாற்றம் செய்து கொள்ள வேண்டும்.
இது போன்ற பாலியல் பற்றிய பல மாயைகள் படிக்காதவர்கள் இடையில் மட்டுமன்றிப் படித்தவர்களிடையேயும் பரவிக் கிடக்கின்றன. மனச் சான்றில்லாத போலி மருத்துவர்கள் பலர் மக்களின் அறியாமையை மூலதனமாகக் கொண்டு பெரும் பொருள் சேர்த்து வருகிறார்கள். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தரமான பாலியல் கல்வியைப் பாடமாக்கிக் கற்றுத் தந்தால் இது போன்ற பாலியல் மாயைகளைத் தகர்த்தெறியலாம்.

No comments:
Post a Comment