Monday, 2 April 2012

மெனோபாஸுடன் உடலுறவு முடிந்ததா?

Posted On April 02,2012,By Muthukumar


உடலுறவு. இதன் ஆரம்பமும், முடிவும் யாருக்கும் தெரியாது. போகும் வரை போகும், நீளும் வரை நீளும், இதற்கு இதுதான் முடிவு என்று எதுவும் இல்லை. இதை உணர்ந்தால் செக்ஸை சுதந்திரமாக, சவுகரியமாக, மகிழ்ச்சிகரமாக அனுபவிக்க முடியும், ரசிக்க முடியும்-எந்த வயதிலும்.

சில பெண்களுகளுக்கு, ஆண்களும் கூடத்தான், மெனோபாஸ் காலகட்டத்தை எட்டியதும் செக்ஸ் இனி அவ்வளவுதான், எல்லாம் முடிந்து விட்டது என்று எண்ணிக் கொள்கிறார்கள். ஆனால் உண்மை அப்படி இல்லை. மெனோபாஸ் வந்தாலும் கூட செக்ஸை முன்பு போலவே மகிழ்ச்சிகரமாக, ரம்யமாக அனுபவிக்க முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். இன்னும் சொல்லப் போனால், முன்பை விட சுதந்திரமாக, எந்தவித தடையும், சங்கடமும் இல்லாமல் அனுபவிக்க முடியும் என்பது டாக்டர்களின் கருத்து.


மெனோபாஸ் கட்டத்தை எட்டும் பெண்களுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சோர்வு ஏற்படுவது இயற்கை. அந்த சோர்வை விரட்ட செக்ஸ் அருமருந்தாக பயன்படுகிறது என்பதே உண்மை. புத்துணர்ச்சியுடன் தொடர்ந்து நல்லபடியாக நாம் செயல்பட, நல்ல எழுச்சியுடன் மனம் திகழ செக்ஸ் அவசியம் தேவை என்பது மருத்துவர்கள் மற்றும் உளவியல் நிபுணர்களின் கருத்து. மேலும் நம்மை என்றும் போல இளமையுடன் திகழவும் மெனோபாஸுக்குப் பிந்தைய செக்ஸ் உதவுகிறதாம்.

மெனோபாஸ் வந்தால் செக்ஸ் உணர்வுகள் வற்றிப் போய் விடும், முன்பு போல ஒத்துழைக்க முடியாது என்று பல பெண்கள் தவறாக கருதுகின்றனர். ஆனால் இது மூடநம்பிக்கையே என்று கூறும் டாக்டர்கள், உணர்ச்சிகள் எங்கும் ஓடிப் போகாது, உங்களுக்குள்ளேயேதான் அது இருக்கும். அதை முன்பு போலவே நீங்கள் வெளிப்படுத்தி அதற்கு சிறந்த வடிகால் தருவது அவசியம் என்கிறார்கள்.

அதை விட முக்கியமாக இந்த சமயத்தில் டெஸ்டோஸ்டிரான் சுரப்பு அதிகமாகவே இருக்குமாம். இது செக்ஸ் உணர்வுகளை அதிகப்படுத்த உதவுவது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பெரும்பாலான பெண்கள் மன ரீதியாக துவண்டு போவதால் இதை சரிவர கவனிப்பதில்லை.

மெனோபாஸ் வந்த பெண்களுக்கு இனி எதற்கு செக்ஸ் என்ற மன ரீதியான முடிவுக்கு வந்து விடுவதால், தங்களது கணவர்கள் அருகில் வந்தாலே இறுக்கமான நிலையுடன் ஒத்துழைக்கிறார்கள். அப்போதுதான் பிரச்சினை வரும். வலியுடன் கூடிய செக்ஸ் அனுபவமாக அது மாறி இருவருக்குமே மன வருத்தத்தையும், அதிருப்தியையும், எரிச்சலையும் கொடுக்கும் கசப்பான அனுபவமாக மாறிப் போய் விடுகிறது.

மெனோபாஸ் வந்த பெண்கள், அதற்குப் பின்பு எப்படிப்பட்ட செக்ஸ் உறவில் ஈடுபடுவது என்பது குறித்து மகப்பேறு மருத்துவர்களை அணுகி ஆலோசனைகளைப் பெற்று செக்ஸ் வாழ்க்கையை இனிமையாக தொடருவது நல்லது.

ஊட்டச்சத்து நிறைந்த உணவு, போதிய உடற்பயிற்சி, தியானம், தேவையான மருந்துகள் என திட்டமிட்டுக் கொண்டால் 40 வயதைத் தாண்டிய பிறகும் கூட நார்மலான செக்ஸ் வாழ்க்கையைத் தொடர முடியும். தேவைப்பட்டால் மன நல நிபுணர்களின் ஆலோசனைகளையும் கூட பெறலாம்.

அதேசமயம், மெனோபாஸ் வந்த பெண்களுக்கு ஒரு பிரச்சினை ஏற்படுவது தவிர்க்க முடியாதது. அதாவது இந்த சமயத்தில் ஈஸ்ட்ரோஜன் சுரப்பு இல்லாமல் போய் விடும். இதனால் பெண்ணுறுப்பில் வறட்சித் தன்மை காணப்படும். இதனால் ஆர்கஸம் ஏற்படுவதில் தாமதமோ அல்லது சிரமமோ இருக்கலாம். இதனால் உறவின்போது வலி ஏற்படுவது இயற்கை.

ஆனால் இதற்கும் கூட நிவாரணங்கள் உள்ளது. டாக்டர்கள் பரிந்துரைக்கும் ஜெல் அல்லது லூப்ரிகன்ட்களைப் பயன்படுத்தினால் உறவு எளிதாகும், இனிமையாகும்.

மேலும் நீண்ட இடைவெளி விட்டு விடாமல் தொடர்ந்து செக்ஸ் உறவை மேற்கொண்டு வ்நதால் வலி ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.

எனவே மெனோபாஸ் வந்த பெண்களே, 'ஆன்ட்டி' ஆகி விட்டோமே என்று வருத்தப்படாதீர்கள், 'கிளைமேக்ஸ்' என்றும் மாறாத இளமையுடன், இனிமையுடன் நீடிக்கும் என்பதை மனதில் கொண்டு சந்தோஷத்துடன் 2வது இன்னிங்ஸையும் சிறப்பாக தொடருங்கள்.

No comments:

Post a Comment